Friday, November 23, 2018

எம்.ஏ ஷகி




டீச்சர் எனக்கு கோல் பண்ணி
"ஷஃபா புத்தகம் கொண்டு வந்து வாசிக்கிறா 'கொல்வதெழுதலாம் ...என்ன புத்தகம் அது, நீங்களா கொடுத்துவிட்டிங்க ? என்று டீச்சர் கேட்கிறா நான் தடுமாறிட்டேன் .
"எக்ஸாம் முடிஞ்சுதானே இன்டக்கி சும்மாதானே உக்காந்திருக்க போறன் நேத்து அரைவாசிய வாசிச்சிட்டன் டீச்சர் நல்ல இன்ட்ரஸ்டான கத டீச்சர் அதுதான் கொண்டு வந்தேன் என்றாளாம் "

உண்மையா எனக்கிது தெரியாது .
இரவு வாசிச்சிட்டிருந்தத கண்டேன் ஸ்கூலுக்கு எடுத்துப்போவாள் என்று நான் நினைக்கல இத டீச்சர்ட சொல்ல முடியுமா
சொரி டீச்சர் நான் அத கவனிக்கல. எதையாவது வாசித்துக்கொண்டிருப்பா, லைப்ரரிலயும் மெம்பரா சேர்ந்திருக்காள் .
இது நான் வாசிப்பதற்காக வாங்கிய புத்தகம்தான் டீச்சர் ஆர்வத்துல ஸ்கூல்கு எடுத்து வந்திருக்காள் போல.. என்று சமாளிச்சிட்டன் .
இந்த வாரம் திங்கற்கிழமைR.M. Nowsaath இன் "கொல்வதெழுதல் 90" புத்தகத்தை சப்றி அனுப்பி வைத்திருந்தார். 'பனி' வாசிப்பிலிருந்ததால் கொல்வதெழுதலை உடனே வாசிக்க முடியல .
குரவை என்றால் என்ன ,
லாத்தா என்று யார சொல்ற
குர்தா உடுப்பு எது ?' 'குளறத் தொடங்க ' என்டு இருக்கேமா அப்படி என்டா?'
என்று இன்னும் சில சொற்களுக்கும் விளக்கம் கேட்டுக்கொண்டிருந்தாள் .
காலையில் ஸ்கூல்கு ரெடியாகும் போது ஒரு பெயரைக்குறிப்பிட்டு அவர் இப்பயும் எம்பியாக இருக்காரா ? என்றொரு கேள்வி கேட்டாள் யாருமா அவர் என்றேன் அவர்தான் 'இஸ்லாமிய தேசியக்கட்சி தலைவர் 'இந்த புத்தகத்துல எழுதி இருக்கே அவர்..?' என்றாள்
நான் இன்னும் வாசிக்கலயே இன்டக்கி வாசிச்சிட்டு சொல்றன் என்று அனுப்பி வைத்தேன்
ஆனால் புத்தகப்பைக்குள் கொல்வதெழுதல் புத்தகத்தையும் சேர்த்து அடுக்கி வைத்துவிட்டுத்தான் இவ்வளவும் கேட்டிருக்கிறாள் என்பது இப்பதான் புரிந்தது...

00

சிராஜ் மஷூர்


கொல்வதெழுதுதல் என்னைக் கட்டிப் போட்ட நாவல். முன்பு துண்டு துண்டாகப் படித்தாலும், நூலாக வந்தபோதுதான் ஒரே மூச்சில் ஆர்வத்துடன் வாசித்தேன். தீரனிடம் நான் தோற்றுப் போனேன். நமது கிழக்கு முஸ்லிம் வாழ்வியலை - அதன் உள்ளார்ந்த சமூக அரசியலை - பலங்களயும் பலவீனங்களையும் - தீரனைப் போல் அழகாகக் கொண்டு வந்தவர்கள் வெகு சிலர்தான்.


இந்த நாவல் ஒரு சின்னப் பிள்ளையின் மனசைக் கொள்ளை கொள்ளும் ஆற்றல் வாய்ந்ததாய் இருப்பதில்
 நான் பெருமிதம் கொள்கிறேன்.

இதைப்பற்றி தனியொரு மதிப்புரை எழுத வேண்டும் என்றும் எண்ணியிருந்தேன். இதுவரை சாத்தியப்படவில்லை.
ஷஃபாவின் அந்தக் கேள்விகள் மிக முக்கியமானவை. 
கதையோட்டத்துக்குள் சரியாக உள்நுழைந்திருப்தன் அடையாளங்கள் அவை.

 நெஞ்சார்ந்த
வாழ்த்துக்கள் தீரன் R.M. Nowsaath. ஒரு படைப்பாளனுக்கு இதைவிட சந்தோஷம் எது?

Sunday, November 4, 2018

மூன்றாம் பதிப்பு

நாவலின் மூன்றாம் பதிப்பு

தமிழ்நாடு காலச்சுவடு வெளியீடான எனது ‘’கொல்வதெழுதுதல் 90’’ நாவலின் மூன்றாம் பதிப்பின் ஒரு தொகைப் பிரதிகள் நமது ‘’இலக்கியத் தளபதி’’ ஏறாவூர் சப்ரியின் உதவியால் கிடைக்கப் பெற்றன... ஒரு இமயமலை நன்றிகள் அவருக்கு...பிரதிகள் தேவையானோர் சப்ரியை தொடர்புகொண்டு பெறலாம்..விலை 600/-.....0770807787- Mohamed Sabry








Vimal Kulanthaivelu விலை??? பார்த்து குறைச்சி போடேலாதா தீரர்?🤣🤣

R.M. Nowsaath உங்களுக்கென்றால் 1200/-

Mohamed Sajeeb R.M. Nowsaath
3 புத்தகத்துக்காம்

Sheik Jailani வாழ்த்துக்கள் சார்
போஸ்ட் ஆபீஸ் எப்படி போய்க்கிட்டு இருக்கு

R.M. Nowsaath போயே போய் விட்டது சேர்

Sheik Jailani R.M. Nowsaath ஸ்டாம்ப் கவர் என்ன பண்ணினீங்க ?

R.M. Nowsaath ஸ்டாம்பை கவர் பண்ண முடியல்லைங்க

Nawfeer Atham Lebbe சிறந்த வரலாற்று கதை. மு. கா. வோடு தொடர்பானவர்களுக்கு சிறந்த ஞாபகமாக இருக்கும்.

Jeyaruban Mike Philip விற்பனைக்கு வைத்த நாவலை இணையத்தில் ஏன் அனுமதித்தீர்கள்? நான் அங்கிருந்துதான் தரவிறக்கிப் படித்தேன். (அதன் அற்புதம் பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் எழுதுவேன் ).

R.M. Nowsaath அட்டையை மட்டும்தான் போடுவார்களாக்கும் என்று நானாக நினைத்துக் கொண்டு தவறு செய்து விட்டேன் ஐயா --- மிக்க நன்றிகள்

Jeyaruban Mike Philip R.M. Nowsaath இணைப்பை அழித்து விட்டேன். உரியவர்களோடு தொடர்புகொண்டு ஆவன செய்யுங்கள்

R.M. Nowsaath அப்படியே eசெய்கிறேன் ..மிக்க நன்றிகளும் அன்பும்

Thilipkumaar Ganeshan நீண்ட நாட்களாக தேடினேன்.
மகிழ்ச்சி சப்ரி கிட்ட வாங்கி எடுக்கிறேன்

Mohamed Riyas அருமை ‘கிளியாரே’

Sheik Jailani திருகோணமலைப் பக்கம் வந்தா வாங்க .

R.M. Nowsaath இன்ஷாஅல்லாஹ்

Rahmath Rajakumaran வாழ்த்துக்கள் தீரா

எம்.ஏ ஷகி Mohamed Sabry எனக்கும் ஒரு புத்தகம் தேவை எப்படி பெற்றுக்கொள்வது

R.M. Nowsaath இரவுதான் ''நிறங்கள் உதிர்க்கும் இரவு'' வாசித்து முடித்தேன்...

எம்.ஏ ஷகி மகிழ்ச்சி தீரன் உங்கள் கருத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

Mohamed Sabry எம்.ஏ ஷகி கிடைக்கச் செய்கிறேன்.

எம்.ஏ ஷகி நன்றிகள்

Maksooth Mohammed Ramzan ஒரு பிரதி வேண்டும்

Asly Kalmunai வாழ்த்துக்கள் SIR

K S Mohammed Shuaib மிக நல்ல நாவல். வாசித்திருக்கிறேன்.

இங்குள்ள அரசு பொது நூலகத்தில் உள்ளது...

Maana Mackeen எனக்கு இந்த நவீனம் அள்ளி வீசிய உணர்வலைகள் இன்னும் அகலவில்லை. எப்போதும் அகலாது. இன்ஷா அல்லாஹ் டிச. நாகர்கோவில்-கோட்டாறுவில் நான் ஏற்பாடு செய்யவுள்ள எழுத்தாளர் சந்திப்பில் தீரனார் 'அச்சபை நாயகன்!'

.M. Nowsaath மிக்க நன்றிகள் குருவே

Shafath Ahmed அருமையான கௌரவம்.

மருதூர் ஜமால்தீன் எனது நண்பா் நௌஷாத்தின் மிகச்சிறந்த நாவல் பலமுறை படிக்கலாம்

Shafath Ahmed நான் ஏற்கெனவே Sabryயுடன் கதைத்தாயிற்று.எல்லோரும் விலையைக் குறைக்கமுடியாதா..என்கிறார்களே தீரனின் அன்புக்கு விலை வைக்கத்தெரியாதவர்களாக இருக்கிறார்களே ..

Mufizal Kalmunai வாழ்த்துக்கள்....உங்களுக்கும், சப்ரிக்கும்..

Shibly Ahamed வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

Maruthanila Niyas வாழ்த்துக்கள். எனக்கும் ஒரு நாவலை வையுங்கள்

Sithy Mashoora Suhurudeen வாழ்த்துக்கள்.

Gowripal Sathiri Sri இன்னும் கிடைக்கவில்லை அடுத்த தடவை இந்தியா போகும்போதுதான் ...

Thaj Mohamed Mohamed Hafrath முத்து முகம்மத் எல்லோரையும் சென்றடைய வாழ்த்துக்கள்

Meelaud Keeran வாழ்த்துக்கள்

Meelaud Keeran எனக்கொன்றை
எடுத்து வைத்து
என் இன பொக்ஸில் வரவும் - தயவு செய்து!


Thursday, June 28, 2018

நோயல் நடேசன்


தேனீ இணையம்
Vol:17 29.06.2018 


நௌஸாத்தின் கொல்வதெழுதல் 90
நாம் கொண்டாட வேண்டிய நாவல் 

நடேசன்




கொல்வதெழுதல் 90, ஆங்கிலத்தில் பைனரி(Binary) எனப்படுவது வகையை சேர்ந்தது. எளிமையான புளட்(simple Plot). நாவல் முத்துமுகம்மது என்ற இளைஞனது பாத்திரத்தை சுற்றியே கதை செல்கிறது. அதிகம் கல்வியோ, வசதியோ அற்று ஊரில் மற்றவர்களால் ஏளனப்படுத்தப்படும் சாதாரணமான கிழக்கு மாகாணத்தில் உள்ள பள்ளிமுனைவாசி, அரசியலில் ஈடுபட்டு பாராளாமன்ற அங்கத்தவராகுவது கதையின் சுருக்கம்.

முத்துமுகம்மது என்ற கதாநாயகனுக்கு மிகவும் சவாலான, கொடுமையான, வில்லானாகச் சப்புச்சுல்தான். மாமி மகள், மைமுனா முத்துமுகமதின் காதலி. இந்த மூவரையும் பிரதானமான பாத்திரங்களாக கதை பின்னப்படுகிறது. ஒருவிதத்தில் சினிமாக்கதை போன்று முடிகிறது.

இப்படியான ஒரு எளிமையான கதை நல்ல நாவலாகியதற்கான காரணமென்ன?
கொல்வதெழுதல் 90 பெயருக்கு ஏற்ற மாதிரியே கிழக்கு மாகாணம் கொலைக்களமாக இருந்த காலத்தில் நடந்த கதை. இங்கு அரசியல் அல்லது வரலாற்றின் ஒரு துளி நாவலாக்கப்படுகிறது. நாவல்,சமூகத்தில் வாழும் சாதாரணமான மனிதர்களைத் தழுவியபடி செல்கிறது. பள்ளிமுனை என்ற முஸ்லீம் கிராமம் நாவலின் பகைப்புலமாக படைக்கப்படிட்டிருகிறது.
ஒரு இலக்கிய நாவலுக்கு ஏற்றதாகப் பாத்திரங்கள் கதையை நகர்த்துகிறார்கள்.பாத்திரங்களின் குணாதிசயம் , ஆசாபாசங்கள் மற்றும் தேவைகள் நாவலின் உந்து சக்தியாக இருக்கிறது. நாவலாசிரியர் படைப்பாளருக்கு உரிய சுதந்திரத்தை கடிவாளமாக எடுத்து கதையை நகர்த்துகிறார்.

இதுவரை இலங்கைத் தமிழ் போர்க்கால நாவல்களில் நாவலாசிரியர் தவிர்ந்தவர்கள், அதாவது விடுதலை புலித்தலைத் தலைவரோ இல்லை அவரது புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரோ, இலங்கை அரசாங்கத்தின் ஜனாதிபதியோ, இராணுவமோ கதையை நகர்த்துவதால் நாவல்களில், நாவல் எழுதியவருக்குச் வேலை குறைவு.
கதாபாத்திரங்களை வளர்த்தெடுப்பதில் நௌஸாத்தின் படைப்பாளுமை தெரிகிறது.

வரலாற்று நாவல் என்பது வரலாற்றைச் சொல்வதல்ல. வரலாற்றை சொல்வது வரலாற்றாசியர்கள் மற்றும் இதழாளர்களது வேலை. நாவலாசிரியன் வரலாற்றுச் சம்பவங்களின் மீது அதற்கு சமாந்தரமாக கற்பனையில் கதை சொல்லுவதே அவனது தொழில். இதற்கு ஆங்கில நாவலாசிரியர் சேர் வால்டர் ஸ்கொட் (Sir Walter Scot) ஸ்கொட்லாந்து கிளர்ச்சியை வைத்து எழுதிய வேவலி(Waverley) என்ற நாவலே முன்னுதாரணம். இந்த நாவலே பிற்காலத்தில் போரையும் அமைதியையும் (War and peace) எழுத டால்டாய்கு உந்துசக்தியாக இருந்தது எனச்சொல்லப்படுகிறது.

கொல்வதெழுதல் 90 கற்பனையான பாத்திரத்தை வரலாற்றில் ஏறி நடைபோட வைத்திருக்கிறது. நாவலின் உச்சக்கட்டமாக எனக்குப் பிடித்தது மைமுனா சப்பைச் சுல்தானால் லொட்ஜ்ல் வைத்து கெடுக்கப்பட்டதை ஒலி நாடாவால் அனுப்புவதும், தனக்கு நடந்ததை விபரமாக அதேவேளையில் விவரணத்தைத் தவிர்த்து சொல்லும் வேளையில் தன் மச்சானிடம் எதுவித பழி வாங்கலிலும் ஈடுபடவேண்டாமென கெஞ்சுவது நாவலை மேன்மையாகிறது.

ஒலி நாடாவைப் பெற்ற முத்துமுகம்மதுவின் தாய் இறக்கும்வரையில் மகனுக்கு அந்த ஒலிநாடாவைக் காட்டாது இருப்பது தாய் மகனைப் பாதுகாக்க விரும்பியதைக் காட்டுகிறது. இதை ஆசிரியர் நேரடியாகச் சொல்லாது விடுவது என்பது பொருள் மயக்கம் (Ambiguity).அது அழகிய கண்ணியாக நாவலுக்கு தெரிகிறது.

அக்காலத்தில் முஸ்லீம்கள், இந்திய இராணுவம், விடுதலைப்புலிகள் என்போரால் தாக்கப்பட்டபோது இலகுவாக ஒரு தமிழ் சமூக எதிர்ப்பு நாவலாக எழுதி இருக்க முடியும். எதுவித வெறுப்போ அல்லது பழிவாங்கல் போன்ற விடயங்களை எழுதாமல், தனிமனிதரது பாதிப்புகள், ஆசைகள், பதவிப்போட்டிகள் என்பதைக் கொண்டு 
நாவலை வளர்த்திருப்பது என்னால் பார்க்க முடிந்தது.

முத்துமுகம்மதுவின் காதலி மைமுனாவை, லொட்ஜ்ல் வைத்துவிட்டு முத்துமுகம்மதையும், தம்பி யாசினையும், கொழும்பில் வேறு இடத்தில் கொண்டு வந்து விட்டு சப்புச்சுல்தான் தப்பிவிடுகிறான். அப்பொழுது முத்துமுகம்மது தனது காதலியை அவன் என்ன செய்வான் எனக் கலங்குவதும் காதலிக்கு எதுவும் நேராது இருக்கவேண்டும் அவலப்படுவதும், அங்கலாய்ப்பதும் மிகவும் பிடித்த பகுதிகள்.

அரபிய சொற்களை கலந்து எழுதுவதால் பல இஸ்லாமியர்கள் எழுதிய படைப்புகளைப் படிப்பதற்கு கஸ்டப்படும் எனக்கு நௌஸாத்தின் மொழி தொடர்ந்து படிப்பதற்கு இலகுவாக இருந்தது.
கதை நகர்ந்த விதம் புத்தகத்தை வைப்பதற்கு மனமற்ற நிலையை உருவாக்கியது என்பதும் படைப்பின் வெற்றி.
இதுவரையும் ஒரு வாசகனாக எனது வாசிப்பனுபவத்தை வைத்துவிட்டேன். ஆனால் ஒரு விமர்சகராக நான் சொல்ல விரும்புவது இங்கு முக்கியமாகிறது.

நாவலில் உச்சக்கட்டமாக மூன்று சம்பவங்கள் வருகின்றன. முதலாவது கொழும்பில் முத்துமுகம்மது தனித்து விடப்பட்டு பதறி அலையும் தருணம். இரண்டாவது ஒலி நாடாவைக் கேட்டுவிட்டு சப்புச் சுல்தானை கொலை செய்ய நினைத்து அவனது வீடு செல்வதும் – அங்கு பார்த்த விடயங்கள். மூன்றாவது தலைவரை குண்டெறிந்து கொலை செய்ய முயற்சி செய்தபோது அதைத் தடுத்து மூன்று விரலை இழத்தல் என்பனவாகும்.

இந்த மூன்று சம்பவத்தில் கொழும்பில் முத்துமுகம்மது அலைய விடுவது சப்புச் சுல்தானின் திட்டமிட்ட செயல். அதற்கான அவனது குணநலன்கள், முன்காரணங்கள் நாவலில் தெளிவாக விவரிக்கப்படுகிறது. அதேபோல் சப்புசுல்தானை கொலை செய்ய நினைப்பதற்கும் தேவையான காரணங்கள் உள்ளது .சப்புச் சுல்தானை விடுதலைப்புலிகள் கொலை செய்தது மற்றும் கொலை நடந்த விவரணம் நம்பும்படி யிருக்கிறது. மூன்றாவது சம்பவம்- தலைவர் மேல் குண்டுடெறிந்தது. அது விடுதலைப்புலிகள் செய்ததோ அல்லது மற்றவர்கள் செய்ததா என்பது விவாதமில்லை. ஆனால் அந்த குண்டெறிதலில் விரலை இழப்பதும், தலைவரைக் காப்பதும் தற்செயலான சம்பவமாக உருவாகிறது. அதாவது ஆண்டவனோ அல்லது விதி மற்றும் கர்மம் போன்ற சொற்கள் இங்கு பொருந்தும்.

நாவலாசிரியன் நாவலைப் படைக்கும்போது அவனது சம்பவங்கள் தற்செயலாக நடந்தால் அது அவனது கற்பனையின் பலத்தைக் குறைத்துவிடுகிறது. ஒவ்வொரு விடயத்திற்கும் காரணத்தை காட்டவேண்டும். தலைவரை கொல்லதற்கான ஏதாவது காரணம் அல்லது எதிரிகளது சதித்திட்டம் வாசகர்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும். இதைத்தான் பிரபல திரைப்பட டைரக்ர்(Hitchcock) ஒருவன் துப்பாக்கியால் சுடப்படும்போது அந்தத் துப்பாக்கி எப்போதாவது பார்ப்பவர்களுக்கு காட்டப்படவேண்டும் என்கிறார். கதைக்கு இது ஒரு முன்னறிவிப்பாகும்(foreshadowing) செயலாகும்

எதிர்பாராது குண்டுகள் இக்காலத்தில் வெடிப்பதும், சாதாணமானவர்கள் இறப்பது வழக்கம். ஆனால் அதை இலக்கியத்தில் கொண்டு வரமுடியாது. நமது வாழ்வின் சம்பவங்கள் ஒழுங்கற்றவை.கட்டுப்படுத்த முடியாதவை. ஆனால் இலக்கியம், சினிமாவில் அதை ஒழுங்காக்கிறோம் இதை (Create Order from Chaos) என்பார்கள்.
மேற்கூறிய இந்த ஒரு விடயம் மட்டுமே என்னை நெருடியது.

கிழக்குமாகாணத்தில் போரைப்பற்றி விமல் குழந்தைவேல் எழுதிய கசகரணம்போல் 
நாம் கொண்டாட வேண்டிய நாவல் கொல்வதெழுதல் 90.
காலச்சுவடு வெளியீடு

Monday, June 25, 2018

எம்.ஆர். ஸ்டாலின் ஞானம்




கடந்த பத்து வருடங்களுக்குள் வந்த நாவல்களில் அற்புதமானது இந்த நாவல் என்பேன்.. 
சோபா சக்தியின் "பாக்ஸ்" அதே போன்று இந்த "கொல்வதெழுதல்." போன்றன
 மீண்டும் மீண்டும் படித்து லயிக்க தோன்றுவன.

Sunday, June 17, 2018

நோயேல் நடேசன்




கொல்வதெழுதல் 90: 
நெளசாத் நாவல் என்னிடம் பலகாலமாக இருந்தது . அதை எனக்கு படிக்க கருணாகரன் சிபார்சு செய்தார். முழுமையான அரசியல் பின்னணி கொண்ட நாவல் . 
படித்தபோது மனத்திருப்தியை ஏற்படுத்தியது. கிழக்கு மாகாண சோனக மொழி எந்த தடையுமில்லாது அருவியாக ஓடுகிறது .
தேவதை கைபிடித்து எழுதியதோ எனக்கு பொறமையை அளித்தது. 
எஸ்போவின் பின்பாக என்னைக் கவர்ந்த மொழிநடை.
 பின்பு விபரமாக எழுத நினைக்கிறேன்


Rajaji Rajagopalan நௌஸாத் நாவலை இவ்வளவுக்குப் புகழ்ந்துவிட்டு பின்பு விபரமாக எழுதுகிறேன் என்று சொல்லித் தப்பவா பார்க்கிறீர்கள்? விரைவாக எழுதுங்கள், டாக்டர்.

Maana Mackeen அன்றைய "தாருல் இஸ்லாம்" வாங்கிக்கொடுத்து எழுதப்பழக்கிய அன்புத்தந்தையின் அருமைப்பெயரைச் சூட்டியிருக்கிறார் நாயகனுக்கு அறிந்தோ அறியாமலோ...!? 

Dr.Muttiah Kathiravetpillai Muruganandan கிடைக்கவில்லை.
படிக்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறது.

Vadakovy Varatha Rajan படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறீர்கள்
Jiffry Haasan நௌஸாத்தின் நட்டுமை படித்தீர்களா?
அது இதைவிட ஒரு படி மேல் என்று நினைக்கிறேன்.
கிளியுங் கிளியும் கிண்ணரம்.

Dr.Muttiah Kathiravetpillai Muruganandan நண்பர்@slm haniffa கொடுத்ததில் நட்டுமை படிக்க முடிந்தது. அருமையான படைப்பு
கிளியுங் கிளியும் கிண்ணரம் மற்றொரு நாவலா?
கொல்வதெழுதல் 90 இப்பொழுதும் விற்பனைக்கு இருக்கிறதா


கிளியும் கிளியும் கிண்ணாரம். தலைப்புகள் போகம் எனவரும் .இரடடை அர்த்தத்தில் எடுக்கலாம் . யானகிராமனின் தஞ்சாவூர் கதைகளை படித்த மன உணர்வை தந்த நாவல் பின்நோக்கிய களத்தில் அற்புதமாக பின்னப்பட்டுள்ளது. முடிவு திருப்தியாக எனக்கு படவில்லை . சற்று சினிமாதத்தனமான முடிவு

Noel Nadesan No I will

K S Mohammed Shuaib நல்ல நாவல். நானும் படித்திருக்கிறேன்...


Adam Iyoobkhan கொல்வதெழுதல்90. தேவதை கைபிடித்து எழுதியதோ,,,,,.என எழுதி ஏனய்யா பின்பு விபரமாக எழுதுகிறேன் , என விட்டுவிட்டீர்,,,,


உபைத்துல்லா மூதூர் அவருடைய வெள்ளிவிரல் சிறுகதைத்தொதியை படித்துப் பாருங்கள் 

Sunday, April 8, 2018

அஷ்ரப் சிஹாப்தீன்

 · 
பொதுவாகவே இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் வாழ்வியல் நெருக்கடிகள், ஒரு சிறுபான்மைச் சமூகமாக அதன் இருப்பியல் வரலாறு குறித்த இலக்கியப் பதிவுகள் எழுதப்படவில்லை என்றகவலை முஸ்லிம் சமூக ஆர்வலர்களுக்கும் கல்வியியலாளருக்கும் ஓர் உறுத்தலான அம்சமாகவே இருந்து வருகிறது. அந்தக் கவலையை ஒரு சிறு அளவிலேனும் குறைக்கும் பணியை தீரன் ஆர்.எம். நௌஷாத்தின் “கொல்வதெழுதல்“ நாவல் தீர்த்து வைத்திருக்கிறது என்பேன்.
“கொல்வதெழுதல் - 90” நாவலின் ஒரு மேலதிகப் பிரதி என்னிடம் உண்டு. ஒரு பிரதியை எல்லோருக்கும் கொடுக்க முடியாது. கேட்பவர்களில் நான் தீர்மானிக்கும் ஒருவருக்குக் கொடுக்கலாம் என்றிருக்கிறேன்.

மானா மக்கீன்



 நவீனத்தில் உண்மை அதிகம்.கற்பனை கொஞ்சம்!




'90களில் கிழக்கிலங்கைக் காரைத்தீவுப் பகுதியில் முஸ்லிம் கிராமங்களில் தம்பிமார் ஊடாட்டம்,இந்தியப்படை நடமாட்டம், இடையே ஒரு பிரதேச சபைத் தேர்தல். பள்ளிமுனைப் பகுதியில் மலேசிய வாசுதேவன் பாட்டுகளைப் பாடி துடிதுடிப்போடு திரிந்த முத்து முகம்மது இளைஞனை பள்ளிமுனைக்குத் தலைவனாக்குகிறார் ஒரு கட்சித்தலைவர்.அவர் தனித்வமான தலைவராகப் போற்றப்படுபவர்.
 பின் அவரே அவனை திகாமடுள்ள நாடாளுமன்றப் பிரதிநிதியாக்கி அருந்தொண்டாற்ற வைக்கிறார்!


****தீரன் ஆர்.எம்.நெளஷாத் நவீனத்தில் உண்மை அதிகம்.கற்பனை கொஞ்சம்!


***'முஸ்லிம் குரல்' தொடர் நவீனம் (2003).தமிழகக் 'காலச்சுவடு' 2013-17 இருதடவை நூலுருவம்.


*** நூல் மட்டுமல்ல, தனித்வத் தலைவரும் முத்து முகம்மது பெயரும் என் நினைவலைக ளில் சதா



00 

                                                                                                         Maana Mackeen

லைட் ரீடிங்### கிழக்கிலங்கையிலும் ஒரு 'தோப்பில் முகம்மது மீரான்'!
**************
சமீப காலத்தில் படு படு வேகமாக ஒரு நாவலைப் படித்தேன் என்றால் 'கொல்வதெழுதல்-90' ஒன்று மட்டுமே! (தமிழகக் காலச்சுவடு பதிப்பு 2013.மீள் பிரசுரம் 2017. ஆரம்பத்தில் 2003-ல் பெளஸர்-நூறுல் ஹக் ஆசிரியர்களாக வெளியிட்ட "முஸ்லிம் குர"லில்).
தன் ஆரம்பகால எழுத்துகளுக்கு ஏணிப்படி' -என என்னை வர்ணிக்கும், கிழக்கிலங்கை, சாய்ந்தமருது தீரன் R.M. Nowsaathத்திற்குள் 'ஒரு தோப்பில் முகம்மது மீரான் உள்ளார் என்பதை இந்நாவலை 15 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் நேற்று வாசித்த பிறகே உணர்ந்தேன்.
தமிழக எழுத்தாளர்கள் - குறிப்பாக முஸ்லிம் படைப்பாளிகள்- இதைப் பார்வையிடல் "காலத்தின் கட்டாயம்".(சில சமயங்களில் தோப்பிலுடன் கீரனூர் ஜாகீர் ராஜாவும் எட்டிப்பார்க்கிறார்!).

Saturday, January 20, 2018

ஜிப்ரி ஹாசன்


ஆழ்ந்த புனைவுத் தன்மையுடன் வெளிப்படுத்தும் ஈழத்தின் ஒரே கதைசொல்லி 




தமிழ் இலக்கியவெளியில் தமிழ் முஸ்லிம்களின் வாழ்வியலை ஆழ்ந்த புனைவுத் தன்மையுடன் வெளிப்படுத்தும் ஈழத்தின் ஒரே கதைசொல்லி தீரன். ஆர்.எம். நௌஷாத். தோப்பில் முகம்மது மீரான், கீரனூர் ராகிர்ராஜா போன்ற படைப்பாளிகளின் வரிசையில் இடம்பெறக்கூடியவர். 
தமிழின் பல விருதுகளும், பரிசுகளும் இவருக்கு கிடைத்துள்ளன.
அவரது படைப்புகள் குறித்து ஒரு விரிவான ஆய்வுத் தன்மையான கட்டுரை தேவை என்று நினைக்கிறேன். அவரது படைப்புலகம் சார்ந்த விரிவான மதிப்பீடுகள், விமர்சனங்கள் நமது இலக்கிய வெளியில் முன்வைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.
கொல்வதெழுதல் 90 எனும் அவரது இந்நாவல்அதிகம் பேசப்பட்டதும், தமிழக அரசின் 1000 பிரதிகளுக்கான அரச ஆணை பெற்றதுமாகும்.
0

Saturday, January 13, 2018