Friday, March 1, 2024

கொல்வதெழுதுதல் 90- முழுக்கதை

 

 

கொல்வதெழுதுதல் 90

கொல்வதெழுதுதல் 90

 

தீரன். ஆர்.எம். நௌஸாத் (1960)

 

கொல்வதெழுதுதல்  90

காலச்சுவடு  பதிப்பகம்

கொல்வதெழுதுதல் 90  நாவல்  ஆசிரியர் : தீரன். ஆர்.எம். நௌஸாத் ©ஆர். மொஹமத் நௌஸாத்   முதல்  பதிப்பு :  டிசம்பர்  2013 வெளியீடு: காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., 669 கே. பி. சாலை,நாகர்கோவில் 629 001 .

காலச்சுவடு பதிப்பக வெளியீடு: 468

 

 

1

 

“ . . . போராளிகளே புறப்படுங்கள் . .! ஓரத்தில் நின்றுகொண்டு ஓய்வெடுக்க நேரமில்லை . . .

ஆலமரமாய் நம் சமூகம் வாழவேண்டும் . . .அதை வாழ்விக்கப் புறப்படுங்கள் . . .” என்று உணர்ச்சிகரமாகப் பாடிக்கொண்டிருக்கும் பள்ளிமுனைக் கிராமத்தில் இன்று நடைபெறவுள்ள வரலாற்று முக்கியத்துவமிக்க அரசியல் கூட்டத்திற்கு அவசியம் நாம் போக வேண்டுமானால், கிழக்கிலங்கையின் பிரதான நகராகிய மட்டக்களப்பிலிருந்து பஸ் ஏறி, தெற்காகச் சுமார் முப்பது கிலோமீற்றர் தொலைவு பஸ்ஸில் பிரயாணித்து காரைதீவு முச்சந்திக்குவந்து, மறுபடி வடக்கு நோக்கி வயல்வெளிகளுடே செல்லும் செம்மஞ்சள் ரோட்டால் கன்னிவெடி மற்றும் ஜொனிவெடிகளுக்குத் தப்பி, விசேட அதிரடிப்படையினரின் மினிக் காவலரணையும் வெற்றிகரமாகக் கடந்தால் திடீரெனப் பூமரத்துச் சந்திவந்துவிடும். அங்கு நமக்கென்றே காத்துக் கிடக்கும் மூன்றே மூன்று முச்சக்கர வண்டிகளில் ஒன்றில் ஏறி இருபது ரூபா கொடுத்துச் சில்லென்ற குளிர்காற்றுத் தொடர இரும்புப்பாலம் கடந்து மூன்று கிலோ மீற்றர் கிறவல் பாதையில் மினிவெடி மற்றும்மிதிவெடிகளில் அகப்பட்டுவிடாதபடி எச்சரிக்கையுடன் சென்றால் பள்ளிமுனைக் கிராமம் பாதுகாப்பாக வந்துவிடும்.

இதைவிட்டு இலங்கைத் தேசப் படத்தில் பள்ளிமுனைக் கிராமத்தைத் தேடினால், நாம்             £ணமாட்டோம். இந்தப் போர்க்காலத்தில்கூட, அடர்த்தியான மரத்தோப்புகளைப் போர்த்திக் கொண்டு இனம் புரியாத ஒரு அமைதியாகப் பசுமைக்குள் ஒளிந்திருந்தது பள்ளிமுனைக் கிராமம்.

பூமரச்சந்தியின் தொடக்கத்திலேயே எங்கு பார்த்தாலும் “இலங்கை இஸ்லாமியக் கட்சி . .! எழுச்சிப் பெருவிழா. .!

1.2.1990.” என்று மாபெரிய தோரணம் தன் உறுதியான ஆதரவைத் தெரிவித்தாடியது . . . எங்கும் பரபரப்பு பூசியிருந்தது. முச்சக்கர வண்டி மூன்றிலும், சந்தியிலிருந்த டீக்கடைநெய்னாரின் ‘சதாம் ஹோட்ட’லிலும் சுவர்களிலும் பூமரத்திலும் இஸ்லாமியக்கட்சித் தலைவர் ஒட்டப்பட்டு

வசீகரமான புன்முறுவலுடன் மக்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

ஒரே அமைப்பின் கீழ் ஒன்றுபடுவோம்”

ஓரணி திரள்வோம்! பேரணி ஆவோம்”

பூமரத்தின் பாரிய கிளைகளில், “தேசியத் தலைவரே வருக!” என்று தங்க நிறப்பதாகை மினுமினுத்தது. தலைவரின் விழிகளில் தரிசனம் தரக் காத்திருந்தது. தேசியத் தலைவர் இன்னும் வரவில்லை. மாலை ஐந்து மணியாகிவிட்டிருந்தது.

பள்ளிமுனைக்கு நுழையும் பாதை முகப்பில் பிரமாண்ட பள்ளிவாயில் உபய தோரணம், மினாரா வடிவில் உயரே குவிந்திருந்தது. உச்சியில் தலைவர் பத்தடி உயரத்தில் கைகாட்டினார். கீழே “ஒரே மதம்! ஒரே கட்சி!! ஒரே தலைமை!!!” அடுத்த வரியில், “தனித்துவத் தலைவரே வருக!”.

மினாராவின் இருபுறமும் “பள்ளிமுனை ஜூம்ஆப்பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை” யைக் காவல் காத்துக்கொண்டு பள்ளி அதிகாரி நின்றுகொண்டிருந்தார். சந்தியிலிருந்து உள்ளே செல்லும் கிறவல் பாதை நெடுகவும் பச்சையும் மஞ்சளுமாகப் பொலித்தீன் கொடிகள் காற்றில் உற்சாகமாய் ஆடின. வாலிபர்கள் கட்சித் தொப்பிகளுடன் சைக்கிள் பேரணிக்காகத் தயாராய் இருந்தனர். பெண்கள்

தங்கள் வேலைகளைப் புறந்தள்ளித் தலைவருக்காகக் காத்திருந்தனர். ஆரத்தி எடுத்துக் குரவை எழுப்ப மாதர் அணியினர் ஏற்பாடு செய்திருந்தனர். பள்ளிமுனை முஸ்லிம் மகாவித்தியாலய மாணவர்கள் வெள்ளைத் தொப்பிகளுடன், கட்சிச் சிறுகொடிகள் அசைத்து அணிஅணியாய் அநியாயமாய் நிற்க வைக்கப்பட்டிருந்தனர்.

பக்கத்திலிருந்த மகாவித்தியாலய மைதானத்தில் ஊரே கூடி நின்றது. பொதுமக்களுக்குப் பாதுகாப்புத் தரமுடியாதென்று பொலிஸ் சொல்லிவிட்டது. மைதானத்தின் சுற்று மதிலில் ஏற்கனவே ஒட்டப்பட்டிருந்த தமிழீழப் போராட்ட வீர அஞ்சலிகள் மற்றும் இயக்க எச்சரிக்கைச் சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டு, இஸ்லாமியக்கட்சியின் தேசியத்தலைவர் படங்களால் வர்ணமடிக்கப்பட்டிருந்தது.

மூன்று இழுவைப்பெட்டிகள் நிறுத்தப்பட்டு அலங்கார மேடை. மேலே மஞ்சள், பச்சை வர்ணக்கூரை. உள்ளே ஜிகினா பளபளப்புக்கள், சோடனைகள் . . . மின்விளக்குகள், தலைவரின் பெரிய படம், “அஞ்சியும் வாழோம், கெஞ்சியும் வாழோம்” “தேசியத் தலைவரே வருக! ப. நோ. கூ. சங்கம் பள்ளிமுனை . . .” மேடையில் பல நாற்காலிகள் . . .

தலைவருக்கு மட்டும் பள்ளித்தலைவர் செய்லான் ஹாஜியார் வீட்டுச் சொகுசு சோபா . . . ஒலிபெருக்கிகள் தென்னை மரங்களிலிருந்து கட்சிக் கீதம் (ஆயிரமாயிரம் கைகள் கோர்ப்போம் . . . அகிலத்தை அதனால் வெல்வோம் . . . அல்லாஹ§ அக்பர் . .!”), இடையிடையே “பஸில் . . . பஸில் . . .பஸில்.. எலக்டோனிக் . .!” அது ஓயும்போதெல்லாம் நாகூர் ஹனிபா, “வாளுக்காகவும், வலிமைக்காகவும் வணங்கிடாத சரித்திரம் . . . வரைந்து போன நம்முன்னோரின் வாரிசாக நில்லுங்கள், நிமிர்ந்து நில்லுங்கள்” என்றார். நின்று கேட்க ஆளில்லை. அனைவர் கவனமும் தலைவர் வருகை மீதிருந்தது.

 

ஐஸ்பழ வண்டிகள் அத்தனை இரைச்சல்களுக்குமிடையே ‘பூப் . . . பூவ்க் . . .’ கென்றன . . .

 

பாபு ஜீஸ் ஐஸ்கிறீம் வாகனத்தைச் சுற்றி ஏராளம் சிறுவர்கள்.. பெண்கள் தனிப்பகுதி அமைத்துக் காத்திருந்தனர். மைதானத்தில் ஆங்காங்கே கச்சான், கடலை, கிழங்குப் பொரியல்களுடன் திடீர் கடைகள் . . . கூட்டத்தில் குண்டுவெடிப்புக்குப் பயந்த புத்திசாலிகள் பலர் தூரத்து வீடுகளின் கூரைகளில் ஏறிக் குந்தியிருந்தார்கள் . . .

பூமரச்சந்தியில் முக்கியப் பிரமுகர்கள் நெய்னாரின் கடையில் சோடா குடித்துத் தேசியத்தலைவரை எதிர்பார்த்திருந்தனர். பள்ளிமுனை பெரியபள்ளித் தலைவர்

செய்லான் ஹாஜியார் பூமரச்சந்திக்கும் மைதானத்திற்குமிடையே தன் நவீன ‘கொரலா கே.ஈ 20’ காரில் ஓடுபட்டுத் திரிந்தார். தலைவர் வந்ததும் சந்தியிலிருந்து ஊர்வலமாக இம்மேடைக்கு அழைத்துவர ஏற்பாடு . .!

மேடையில் ஒரே ஒரு ஆளாக முத்துமுகம்மது நின்று கொண்டிருந்தான். தலையில் கட்சித் தொப்பி . . . மஞ்சள் பச்சைச் சேட்டுடன் கட்சிச்சாறன், கையில் புதிதாகக்கடிகாரம் . . . மார்பில் தலைவரின் சிறிய படம் . . . மலேசியா வாசுதேவன் புகழ் முத்துமுகம்மது ஒலிவாங்கியின் அருகே சென்றான். அதைப் பிடித்தான். “ஊ . . . வ்ப் . . . ஊவ்ப் . . .” என்று ஊதி, தன் குரலையும் ‘மைக்’கையும் சரிபண்ணினான். சனங்கள் முத்துமுகம்மதைப் பார்க்க முத்துமுகம்மது, தனக்கே உரிய மலேசியா வாசுதேவன் குரலில் மறுபடி அறிவித்தான்.

“ . . . ங்ஙங்ஙஙீய்க் . . . பேரினவாத விலங்கை உடைக்க வந்த உத்தமத் தலைவரும் முஸ்லிம்களின் இதய விளக்கும் தனித்துவம் காத்த தானைத் தளபதியும் இஸ்லாமியக்கட்சியின் தேசியத் தலைவருமான அல்ஹாஜ் எம்.எச்.எம். இஸ்ஹாக் எம்.பி. சட்டத்தரணி அவர்கள் இன்னும் சற்று நேரத்தில் இங்கு வருகை தரவுள்ளார் . . .அதுவரை பொறுமையுடன் இருக்க வேண்டுகிறோம். வஸ்ஸலாம்! இப்படிக்கு இலங்கை இஸ்லாமியக் கட்சி, பள்ளிமுனை இளைஞர் அணி...ஙீ...ய்ய்...க்...”

முத்துமுகம்மது மேற்படி வசனத்தை ஐம்பத்து மூன்றாவது தடவையாகவும் அறிவித்துவிட்டுப் பெண்கள் பகுதியை நோட்டமிட்டான். திட்டுத்திட்டாக முக்காட்டுப் பெண்கள் கூட்டம் . . . பிள்ளைகள் . . . மைமுனாவும் வந்திருப்பாள். அ..அதோ . . . வெற்றிலைக்கிழவி சபூரா உம்மா . . . குருட்டு மனிசி . . . தாடி மாஸ்டர் பெண்சாதி.. ரைஹானா டீச்சர் . . . நிசா மாமி . . . கல்லூட்டுக்காரி . . .கமறுன் குட்டி . . . ஆலிமுட பெண்டி . . . எங்கே மைமுனா . .? சட்டெனப் பீடா வியாபாரிக்கு இடப்புறமாக மைமுனா தென்பட்டாள். . .

அட, மைமுனா, சொன்னாற் போலவே வந்திருக்கிறாள் . . . மைக்கில் பேசியதைக் கண்டிருப்பாள் . . . முத்துமுகம்மது பொங்கிய பெருமையுடன் மறுபடி ஒலிவாங்கியைப் பிடித்து,மறுபடியும்

ஊவ்ப் . . . ஊவ்ப் . . . பேரினவாத விலங்கை . . .” ஐம்பத்திநாலாவது தடவையும் உடைக்க ஆரம்பிக்க, மைமுனாவும் அவளது தம்பி யாசீனும் மேடைக்கு அருகிலேயே வந்து நின்று முத்துமுகம்மதை அதிசயமும் ஆர்வமுமாக பார்த்தனர்.

முத்துமுகம்மது பத்தாம் வகுப்புவரை படித்திருக்கிறான் . . . ஒரு தேர்ந்த பாடகனுக்குரிய கம்பீரமான குரல்வளம் அவனுக்கு இயற்கையாகவே இருந்தது . . . அரசியல் மேடைகளிலும், வைபவங்களிலும் மலேசியா வாசுதேவனின் குரலிசையில் பாடுவதும் அறிவிப்பதும் அவனது சிறப்பம்சம் . . . பொழுதுபோக்கு . . . தொழில் எல்லாமே . . .

லாத்தா லாத்தோவ், முத்தும்மது மச்சானப் பார்ஹோ, இஸ்பீக்கருல பேசுராருஹோ . . . மச்சான் . . . முத்துமச்சான் ஒரு பாட்டுப்படி மச்சோ . . . வ் . .! . . . பொம்மானத் தே . . . டி

         £ன் பூவோட வந்தே . . . ன் . . .” என்று யாசீன் பெருங்குரலெடுக்க “சும்மார்ரா!” என்ற மைமுனா முத்துமுகம்மதை விசேஷமாகப் பார்த்தாள். நாணப்பட்டுச் சிரித்துக் கண்களால் வியந்தாள். முத்துமுகம்மதுக்குள் பரவசம் வெள்ளமாய்ப் பாய்ந்தது.

திடீரெனச் சனக்கூட்டம் பரபரத்தது. கிறவல் பாதையில் தூரத்தே ஊர்வலம் தெரிந்தது. மொத்த ஜனமும் அல்லோல கல்லோலமாய் ஓடினர். ஒரு அதிரடிப்படை ஜீப் முன்னால் ஊர்ந்து வந்தது.. பின்னால் திறந்த டபிள் கப் வாகனத்தில் . . .

அட . .! தலைவர்! சிவப்பு ரீ சேட்டும் கறுப்பு லோங்க்ஸ¨ம் அணிந்து வெகுகம்பீரமாக இருந்தார். எழுந்து நின்றபடி கையசைத்து வசீகரமாய்ப் புன்னகைத்தபடி வந்தார். மாலைகள் அணிந்திருந்தார் . . . மேலும் மாலைகள் வாங்கிப் பக்கத்திலிருந்த இணைப்பதிகாரியிடம் கொடுத்தார்.

ஜனங்கள் நெஞ்சமெலாம் பூரிக்க, வாகனத்துடன் ஒட்டி ஓடி வந்தனர். ஒஸ்தாதுமார்கள் கற்பனை எதிரியுடன் சுருள் வாள் சீனடி சிலம்படிப் போரிட்டு வந்தனர். “வருக வருக எங்கள் தலைவர் வருக வருகவே . . .” அண்ணாவியாரின் புராதன துள்ளிசைக்கேற்ப மல்லர்கள் பொல்லடித்தபடி வந்தனர். தொடர்ந்து மெதுவான சைக்கிள் பேரணி . . .

ஊர்வலம் மைதானத்தை அண்மித்ததும், பத்து நிமிட நேரத்திற்கு சீன வெடிகள் பிளந்து கட்டின . . . வெடிமருந்து வாசனை மூக்கைத் துளைக்க, உடனடி உச்சஸ்தாயியில் பெண்களின் குரவை ஒலி எழுந்தது. மாதர் அணி ஆராத்தியுடன் எதிரே வர, வாகனத்தை நிறுத்தச் சொன்ன தலைவர் ஒரு துள்ளலுடன் இறங்கினார். மெய்ப்பாதுகாவலர் தடுத்தும் . . . கேளாமல் பெண்கள் கூட்டத்தை நோக்கிச் சென்றார் . . . உடனே, ஜிகினாத் துகள்கள், பல்லிமுட்டாய், மலர்கள் சொரிய மத்தாப்பு வர்ணத் தீப் பொரிய . . .குரவைக் கூக்குரலுடன் பெண்கள் தலைவரைச் சூழ்ந்து ஆரத்தி எடுத்தனர்.

சனக் கூட்டத்தின் நெரிசலில் . . . வாள் வீசிய ஒஸ்தாதுகள் ஒதுக்கப்பட்டனர். பொல்லடி மல்லர்கள் தள்ளுப்பட்டனர் . . . ஜனங்களின் உணர்ச்சிப் பிரவாகத்தில் தலைவரால் நடக்க முடியவில்லை. நான்கு அதிரடிப்படையினர் கூட்டத்துள் பலவந்தமாய்ப் புகுந்து கேடயமாய்ச் சூழ்ந்து பாதை அமைக்க . . . தலைவர்மக்களிடம் கையசைத்து . . . கூட வந்தோரிடம் பேசியபடியே நடந்து வந்தார் . . . மேடை அண்மித்ததும் விரைவாக ஏணிகளில் ஏறி வந்தார். இதோ . . . கண்ணெதிரே தலைவர்!.

முத்துமுகம்மது, மைமுனாவை மறந்து, தலைவரால் உடனடிப் பரபரப்பாகி ஒலிவாங்கியில் - “இதோ எங்கள் அடிமை விலங்கொடித்த தானைத்தளபதி . . . எங்கள் இதயக்கனி . . . பாராள வந்த போராளிகளின் தலைவர். . .

இலங்கை இஸ்லாமியக் கட்சியின் தேசியத் தலைவர் அவர்கள் வந்துவிட்டார்கள் . . . நாரே தக்பீர் . . . நாரே தக்பீர் . . .” என்று கத்த அனைத்து ஜனங்களும் உணர்ச்சி மாத்திரை உட்கொண்டு “அல்லாஹ¨ அக்பர்” என்றுபெருங்குரலெழுப்பி, விண்ணதிர வைத்து மயிர்க்கூச்செரிந்தனர் . . .

மேடையில் ஏறிய தலைவர், முத்துமுகம்மதைக் கூர்மையாகப் பார்த்தார். அவனது உணர்வையும் அவனது £ர்பிலிருந்த தன்னையும் பார்த்துப் புன்னகைத்தார். அவனது தோளில் தட்டி “ஙா . . . தம்பி! எப்படி?” என்றார். முத்துமுகம்மதுக்குள் ஆயிரம் மின்னல்கள் வெடிக்க, ஆனந்தப் பரவசமாகி உடன் தலைவரின் கைகளைப் பிடித்துக் கொஞ்சி முத்தமிட்டான். மேலும் மார்புறத் தழுவுவதற்கிடையில் ஒரு அதிரடிப்படைவீரன் இடையில் புகுந்து முத்துமுகம்மதுவைப் பிரித்துத் தள்ளிவிட்டான். முத்துமுகம்மது மேடையிலிருந்து மல்லாக்கக் கீழே விழுந்தான். மேடையில் நிறைந்த ஊர்ப்பிரமுகர்கள் மத்தியில், முத்துமுகம்மது செல்லாக்காசாகி மேடையிலிருந்து தள்ளிவிடப்பட்டாலும் சட்டென எழுந்து மேடையை ஒட்டியபடியே நின்றுகொண்டு தலைவரையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

தலைவர் கூடியிருந்த மக்கள் வெள்ளத்தை நோக்கி, எழுந்து நின்று கையசைத்தார். அத்தனை ஜனங்களும் “அல்லாஹ¨ அக்பர்” என்று முழங்கினர். பின், முன்னணியிலிருந்த விஷேடக் கதிரையில் அமர்ந்தார். உடன் பள்ளித்தலைவர் செய்லான் ஹாஜியார், பெருமை பொங்க ஒலிவாங்கியின் முன்னால் வந்தார்.

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்! அன்பார்ந்த பொதுமக்களே . . . இலங்கை இஸ்லாமியக்கட்சியின் தேசியத்தலைவரும், நமது கண்ணின் மணியுமாகிய ஆலி ஜனாப் எம்.எச்.எம். இஸ்ஹாக் எம். பி. அவர்களே மற்றும் இங்கு வீற்றிருக்கும் . . .

வீற்றிருந்த 15 பேரையும் அவர்களே . . . அவர்களே . . .என்று 16 தடவைகள் விளித்து முடித்தபின் வரவேற்புரையைச் சாவகாசமாக ஆரம்பிக்க - தலைவர் அவரை விரல் சொடுக்கி அருகிலழைத்துக் காதினுள் ஏதோ சொன்னார் . . . உடன், செய்லான் ஹாஜியார் பரபரப்பாகி - “தேசியத் தலைவர் அவர்கள், கல்முனைக்கும் ஒரு கூட்டத்திற்குச் செல்ல இருப்பதால் உடனடியாக இப்போதே தலைவர் அவர்களைப் பேச அழைக்கின்றேன்” என்று மிகுந்த ஏமாற்றத்துடன் அறிவித்துவிட்டு அமர்ந்தார். தலைவர் எழுந்து முன்னால் வந்தார். ஒலிபெருக்கியருகே வந்ததும், ஜனங்கள் மறுபடி உத்வேகம் கொண்டு-

நாரே தக்பீர்!”

அல்லாஹ¨ அக்பர்!”

என்று கத்தினர். முண்டியடித்து முன்னால் வந்தனர். முத்துமுகம்மது மேடையிலிருந்து தள்ளி விட்ட அவமானத்தை ஒரு பொருட்டாகக் கருதாது, இளைஞர் அணிக்குத் தலைமை தாங்கி, மேடையைக் கும்பல் நெருங்காது கவசம்போல் திடமாக நின்று தடுத்தான் . . . தலைவர் மக்களைப் பார்த்து தனது வசீகரப் புன்னகையுடன் கையசைத்து அமைதியாக்கி அமரவைத்தார். கூட்டம் அமைதியாயிற்று. தலைவரின் கம்பீரமான காந்தக்குரல் ஒலிக்க ஆரம்பித்தது. ஜனக்கூட்டம் மந்திரம் போட்டாற்போல் கட்டுண்டு கிடக்க, தலைவர் கணீரென்று ஆரம்பித்தார். தேர்ந்தெடுத்த சொற்களை அடுக்கி அடுக்கி ஆறுதலாகவும் ஆனால் உறுதியுடனும் பேசினார். பள்ளிமுனைக் கிராமச் சொல் வழக்கினை இடையிடையே அற்புதமாகக் கையாண்டு பேசினார். சனங்கள் ஒட்டுமொத்தமாக வாய் பிளந்திருந்தனர்.

“. . . வேகக் காற்றின் விசையில் அசைகின்ற வெண்முகில் கூட்டங்களே . . . உயரத்தில் உலவுவதால் நீங்கள் உயர்ந்து விடுவதில்லை . . . நாங்களோ மரங்கள் . . . மண்ணின் சுவாச வேர்கள் . . . பேய்க்காற்றுவீசும் வேளையிலும் புயல் இரைகின்ற போதிலும் மின்னல் இடி முழக்கம் அச்சுறுத்தும் சமயங்களிலும் போராடி மடிவதற்கும் அப்புனித பாதையிலே புன்முறுவல் பூத்த முகத்தோடு சிந்தும் சிவப்பு இரத்தத்தில் தோய்ந்து வீழ்வதற்கும் . . . எழுவதற்கும் ஆயிரமாயிரம் போராளிகளைத் தந்த பள்ளிமுனைத்தாயகத்தின் போராளிகளே . . . புறப்படுங்கள் . .! நம் கட்சியைக் காப்பாற்ற . . . இது நமது உரிமை . . . இது நமது கடமை . . .

இது நமது ஒற்றுமை . . . ஒன்றை மட்டும் உறுதியாகத் தெரிந்து கொள்ளுங்கள் . . . சிங்களக் கட்சிகளின் கால் தூசியாக ஒட்டிக்கிடக்கும் முதுகெலும்பற்ற ‘முக்கியத் தேசியக்

கட்சி’ப்          பாராளுமன்ற        உறுப்பினர்களே . . .இந்தப்பள்ளிமுனைக் கர்பலாக் களத்திலிருந்து, உங்களுக்கு இந்த இஸ்லாமியக் கட்சித் தலைமைத்துவம் பகிரங்கச் சவால் விடுக்கிறது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிரதேச சபைத் தேர்தலில் இம்மாவட்டத்தில் ஆளும் ஐ.என்.பி. கட்சியால் ஒரு சபையைக் கூடவெல்ல முடியாது . . .”

நாரே தக்பீர் . . .” செய்லான் ஹாஜியார் எடுத்துக் கொடுக்க -

அல்லாஹ¨ அக்பர்!” கூட்டம் அதிர்ந்தது. தலைவர் தொடர்ந்தார்.-

“. . . அது மட்டுமல்ல நமது மாவட்டத்தின் ஆறு சபைகளையும் வென்றெடுத்து சிங்களவரின் இனத் துவேசத்திற்கும் புலிகளின் இனச் சுத்திகரிப்புக்கும் இந்திய அமைதிப் படையின் அட்டகாசத்திற்கும் அவர்களின் ஒட்டுண்ணிகளான தமிழ்த்தேசிய இராணுவத்தினருக்கும் எதிராக நமது ஒன்று திரண்ட பலத்தைக் காட்டுவதற்கும், ஏன் ஒரு சிறந்த ஆடசிமாற்றத்தை அதிரடியாக ஏற்படுத்துவதற்கும் எமது தனித்துவக்கட்சிப் போராளிகள் புறப்பட்டு விட்டனர் . . .” மைதானம் அதிர கரகோஷமும், விண்ணதிர தக்பீர் முழக்கமும் பிளந்து கட்டின.

“ . . . இந்த வயற்சேனைப் பிரதேச சபையை நமது கட்சி கைப்பற்றும் பட்சத்தில் . . . இன்ஸா அல்லாஹ் . . .இன்னும் சில மாதங்களில் எனது இரண்டாவது தாயகமான இந்தப் பள்ளிமுனை மக்களுக்கு, ஒரு பள்ளிமுனை மகனே, தவிசாளராக ‘சேர்மனா’க அமர்ந்திருப்பார். தலைமைத்துவம் இதில் உறுதியாக இருக்கிறது . . .” - தலைவரின் வாக்குறுதியால் மெய்ச்சிலிர்த்த முத்துமுகம்மது உணர்ச்சிப் பிழம்பாகி கைகள் உயர்த்தி “நாரே தக்பீ . . .ர். .?’ அல்லாஹ¨ அக்பர்” என்று முழங்கினான். சனங்களும் மறுபடி மறுபடி தக்பீர் முழங்கினர்.

இடையில், ஆசுகவி அன்புடீன்; அவசரமாக மேடையேறி தலைவருக்கு மாலை அணிவிக்கும் சாக்கில் தலைவரின் காதுகளில் ஏதோ கூறிவிட்டு இறங்க - தலைவர் சிறிது அதிர்ச்சியுடன் சற்று மௌனித்தார் . . . கூட்டம் இதயத்தைப் பொத்தியபடி காத்துக் கொண்டிருக்க தலைவர் சோகம் பிழியும் தழுதழுத்த குரலில் அமைதியாகக் கூறினார் . . .

“ . . . மக்க்கம் . . . இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் . . . இப்போது நாமிங்கு கூடியிருக்கும் போது . . .நமது கட்சியின் சம்மாந்துறைக் கிளைத் தலைவரும்

         £காணசபை உறுப்பினரும் இளைய போராளியுமான சகோதரரர் பரக்கத்துல்லாஹ் அவர்கள் சற்று நேரத்திற்கு முன் தன் வீட்டில் வைத்து இனம்புரியாத யாரோ சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்தி வந்துள்ளது . . .”

சற்றே நிறுத்தினார் தலைவர் . . . கூட்டமே அதிர்ச்சியில் உறைந்துவிட்டது . . . இப்படுகொலையை மையமாகக்கொண்டு தலைவர் மேலும் சரியாக இரண்டு மணிநேரம் பேசினார். ஒரு சின்னச் சத்தமுமின்றி கூட்டம் தலைவரின் உரைக்குக் கட்டுப்பட்டுக் கிடந்தது . . . கடைசியாக . . . “ . . . ஆகவே இந்த எழுச்சிப் பெரு விழாவிலே தலைமைத்துவதற்கு நீங்கள் கட்டுப்பட்டு ஒரே பிறைச் சின்னத்தின் கீழ் அணி திரள்வீர்களா . . .” என்று கேட்டார். “அல்லாஹ¨ அக்பர்” என்று தெளிவாக ஒரே குரலில் பதிலளித்தது கூட்டம்.

தலைவர் மகா திருப்தியுடன் அமர்ந்ததும், உடன் பள்ளித்தலைவர் செய்லான் ஹாஜியார் ஒலிவாங்கியிடம் ஓடிக் கைப்பற்றி-

“. . . அடுத்ததாக, முக்கியமாக தமது தலைவரைப் பற்றிய கீதம் ஒன்று இசைக்கப்படும் . . . இசைப்பவர் ‘பள்ளிக்குயில் பளீல்’ அவர்கள் . . . அவரை இங்குப் பாட வருமாறு அழைக்க . . .” முன்பே, மேடையில் திடீரென உற்பத்தியான கவிஞர் பள்ளிக்குயில் பளீல், ‘போவோமா ஊர்கோலம்’ என்ற சினிமாப் பாடலின், மெட்டை இலவசமாகத் திருடி ‘போடுவோமா வோட்டெல்லாம் . . .’ என்று கானமழைப் பொழிய ஆரம்பித்தார். மேடையில் தலைவரின் காதுகளில், மாறி மாறி செய்லான் ஹாஜியாரும், தாடி மாஸ்டரும்,ப.           நோ. கூ. ச. தலைவரும் ஊர் வம்புகள் பொழிந்தனர்.

பள்ளிக் குயிலின் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்த முத்துமுகம்மது ஒரு தற்செயலான உந்துதலில் பெண்கள் பக்கம் பார்த்தான். மைமுனாவுக்கும் அவளது தம்பி £சினுக்கும் பக்கத்து வீதியில் வசிக்கும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரான ‘சப்புச் சுல்தான்’ என்பவன், ஐஸ்பழம் வாங்கிக் கொடுப்பதையும் மைமுனா அதை மறுப்பதையும் கண்டான். திடீரென ஆத்திரம் பொங்கி, சப்புச் சுல்தானை அறையும் ஆவேசமாகக் கூட்டத்துள் புகுந்து விரைவாகப் பெண்கள் பகுதிக்கு வந்து மைமுனாவை ஆத்திரமாக நெருங்கினான்.

 

2

 மைமுனாவும் தம்பி யாசீனும் மாமியும் நின்றிருந்தனர். சப்புச் சுல்தானைக் காணவில்லை. மைமுனாவிடம் நெருங்கினான். பள்ளிக்குயில் உச்சஸ்தாயியில் கூவிக்கொண்டிருந்தது. மைமுனா முத்துமுகம்மதுவை அன்புடனும் வியப்புடனும் பார்த்து முறுவலித்தாள். ஆனால் தன் உம்மாவைப் பார்த்துப் புன்னகையை நிறுத்திவிட்டாள். மாமி முத்துமுகம்மதின் வருகையை சற்றும் விரும்பாமல் வேறெங்கோ பார்த்து வெற்றிலைச் சாற்றினை உமிழ்ந்தாள்.

முத்து மச்சான் மைக்கில பேசினயே . .!” என்று வியந்தான் தம்பி யாசின்.

முத்துமுகம்மது பதில் பேசாமல், கோபமாக, நேராக மைமுனாவிடம் -

ஐஸ்பளம் வாங்கித்தந்த ஆரு? சப்பன் எங்க?”

அவன் சுல்தான்! நெக்கில்ல.. தம்பிக்கு    £ங்கிக் கொடுத்த!” என்றாள் மைமுனா பயத்துடன்..

மைமுனா! அந்த நாய்க்கிட்ட ஒன்டும்     £ங்காதண்டு செல்லிரிக்கன் . . . ல்லா . .? ஞ்சப்பாரு நான் வாங்கித்தாரன் . . .”

காசைக் காட்டிய முத்துமுகம்மது யாசீனை உறுக்கிப்பார்த்து அவனது வியைத்திருகினான்.

வாங்கித் திம்பியாடா . . . நாயே . .? ஊரானுட்ட ஐஸ்பளம் வாங்கி அக்கச்சாக்குச் சூப்பக் குடுப்பியாடா . .?”

என்டம்மோவ் . . . சொவிய உடு மச்சான் . . . நோகுது லாத்தோவ் . .?”

அவன் சின்னப்புள்ள! திங்கட்டும் உடுங்க” என்ற மைமுனா, தன் கையிலிருந்ததைக் கீழே போட்டுவிட்டாள். இதனால் மனம் குளிர்ந்த முத்துமுகம்மது பைக்கட்டுக்குள்ளிருந்து இருபது ரூபா எடுத்து மைமுனாவிடம் திணித்து - “இதுக்கு நீ வாங்கு! வாவுசீஸ் அய்ஸ்கிறிம் வாங்கித் திண்ணு . . .” என்றான். இதெல்லாம் மாமி பார்த்துக் கொண்டு வெறுப்புடன் பேசாதிருந்தாள்.

திடீரென ஜனக்கூட்டம் “அல்லாஹ¨ அக்பர்” என்று முழங்கவே முத்துமுகம்மது மறுபடி திரும்பி விரைவாக மேடைக்கு ஓடினான். தலைவர் உள்ளூர் பிரமுகர்களின் கைலாகு மற்றும் தோளோடு தழுவுதல்களைத் தவிர்த்து அவசரமாக மக்களுக்கு கையசைத்தவாறு மேடையைவிட்டு இறங்கிக்கொண்டிருந்தார். அவரை ஒரு தடவையாவது தொட்டுப்பார்த்துவிடும் ஆர்வத்தில் முண்டியடித்த இளைஞர் அணியை அதிரடிப்படை தடுத்தது. தலைவர் அதிரடிப்படையைப் புறக்கணித்துச் சடுதியாகப் பெண்கள் பகுதியை நோக்கி நடந்தார். உடனே அத்தனை பெண்களும் சிரிப்பும் மகிழ்வுமாய் வெட்கப்பட்டு முக்காட்டையும் முந்தானைகளையும் சரிசெய்து கும்பலாக எழுந்தனர். பின்னணியில் கோரசாகக் குரவை ஒலித்தது. தலைவர் பெண்களை நெருங்கி, “ஞா . . . ராத்தா . .! எப்பிடி . .? தங்கச்சி . . . மாமி சுகமா?” என்று எழுமாறாக உறவு சொல்லி அழைத்து விசாரித்ததுடன் மேடை உச்சியிலிருந்த பெரிய பிறைச்சின்னத்தைக் காட்டி -

உம்மா, லாத்தா . . . இதப்பாருங்க! நம்மட பெத்த புள்ளயள புலி சுடுரான் . . . ஆமி சுடுரான் . . . இந்தியப் படை கடத்துறான் . . . கேக்கப் பாக்க ஆள் ல்லியா என்னஹா லாத்தா . .? நாம ஒத்துமப் பட்டாத்தான் எல்லாத்தையும் வெல்லலாம் . . . என்ன பெரியம்மா . .? செரிதானே . . .

இதப் பாருங்க . . . பிறை! நம்மட “தலப்பொற!! இதுக்கு வோட்டுப் போடுவீங்களா . .?” என்றார். பெண்கள் நாணத்தை விட்டுப், “போடுவம் கட்டாயம் போடுவம்” என்றனர். “நீ என்ட புள்ள இரிக்கி மட்டும் எங்களுக்கு ஒரு கொறையும் வெரா . . .” என்றனர். தலைவர் மிகத் திருப்தியுடன் திரும்பிப்பிரமுகர்கள் புடை சூழ தனது வாகனத்தை நோக்கிச் சென்றார். மக்களின் தக்பீர் முழக்கம் ஒலிக்க, மூன்றே மணி நேரத்தில் பள்ளிமுனைக்கிராமத்தின் சுமார் ஐயாயிரம் வாக்குகளையும் கவர்ந்துகொண்டு தலைவர் “டபிள் கப்”பில் ஏறி அதிரடிப்படையுடன் வேகமாகப் பறந்தார்.

உடன் மேடையில் தாவிய முத்துமுகம்மது -

அதோ நமது தேசியத்தலைவர், முஸ்லிம் மக்களின் இதய தீபம், திகாமடுல்லப் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாப் எம்.எம்.எம். இஸ்ஹாக் எம்.பி. சட்டத்தரணி அவர்கள் விடைபெற்றுச் செல்கிறார்கள். “நாரே தக்பீர்” என்று கேட்கப் . . . பதில் கிடைக்கவில்லை. சனங்கள், தலைவர் போவதையே கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்தனர். சட்டென்று தாடி மாஸ்டர் ஒலிவாங்கியைப்பிடுங்கி,

அஸ்ஸலாமு அலைக்கும். பொதுமக்களே, வாக்காளப் பெருமக்களே கூட்டம் தொடர்ந்து நடைபெறும். நமது கட்சியின் பள்ளிமுனைக்கிளையின் கொள்கைப் பரப்புச் செயலாளரான நான் . . .” என்று ஆரம்பித்ததும் - பெண்கள் கூட்டம் கசமுசாவென்று கலைய ஆரம்பித்தது. ஐஸ்பழ வாகனம் போக ஆயத்தமானது. ஆண்களும் கணிசமான அளவில் கரைந்தனர். எனினும் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

கலைந்து சென்ற பெண்கள் கூட்டத்தில் முத்துமுகம்மது மைமுனாவைத் தேடி நுழைந்தான். ஆட்களைக் காணவில்லை. ஆனால், மைதானத்தின் வலப்புறப்பாதையால், சப்புச் சுல்தான் தலையில் கட்சித் தொப்பியுடன் மாமியுடன் பேசியபடி நடந்து செல்வதையும் மைமுனா, தம்பியின் தோளில் கைவைத்தபடி ஓரமாக ஒதுங்கி நடப்பதையும் கண்டான். சப்புச் சுல்தான் ஐ. என். பீக் கட்சிக்காரன். ஆனால், இஸ்லாமியக் கட்சித் தொப்பியுடனா?

முத்துமுகம்மது ஆத்திரம் பொங்கச் சற்றே ஓடி அவர்களை அடைந்தான்.

மைமுனா . .?”

முத்து மச்சான் வந்திட்டிங்களா?”

ந்தா புடி!” முத்துமுகம்மது கடலைப் பொரியலை மைமுனாவிடம் கொடுத்தான். சப்புச் சுல்தானின் ஏளனப் பார்வையை அலட்சியம் செய்தான்.

முத்து மச்சான் மேடையில பேசினயே . . . ப்ப ஒங்குட பாட்டுக் கச்சரி இரிக்கா மச்சான் . .?” என்றான் யாசீன்.

யாசினோவ் . .! தலைவரு மேடையில ஏறிவரக்க முத்து மச்சானோட சிரிச்ச. கையப்புடிச்ச . . .ல்லோடா . .!” என்று மறைமுகவியப்புக் காட்டினாள் மைமுனா. உடனே, முத்துமுகம்மது கோபம் தணிந்தான். பெருமையுடன் சப்புச் சுல்தானைப் பார்த்தான். மறுபடி வேண்டுமென்றே.

மைமுனா! கூட்டம் முடிய என்ட பாட்டு இரிக்கி . . . பீக்கர்ல கேளு . . . செரியா . . . கவனமா ஊட்ட போ. ஒரு நாயோடயும் கதைக்காமப் போ” என்று குத்தலாகச் சொல்லிவிட்டு மைமுனாவின் காதுகளில் குனிந்து -

ஞ்சப்பாரு, மைம்னா . .! ந்த நாய், சப்புச் சுல்தானோடக் கதைக்கப்போடா, சிரிக்கவும்போடா, இவந்தான் நம்மட முட உதுமான் மாமாட வெண்டிய, கொளும்புக்குக் கூட்டிப் போயி . . . தெரியிந்தானே . . .’

நெக்கி எல்லாந் தெரியும் மச்சான். நீங்க ஒண்டும் சக்குப்படத் தேவல்ல . . .” என்று கிசுகிசுத்தாள் மைமுனா. உடன் முத்துமுகம்மது திருப்தியோடு,

வாறங்கோ மாமி, வாரேன் மைம்னா . . .” என்று திரும்பி மறுபடி மைதானம் நோக்கி நடக்கும்போது சப்புச் சுல்தான், மைமுனாவின் தாயிடம்,

லெக்கா மாமி, வேன் கொறுக்காப்புளி முத்துமம்மதோட ஒன்ட மகள தொடுசல் வைக்க உடாத, கெடுத்துருவான், பேசாம நாஞ் சொல்றாப்பொல மைமுனாவ வெளிநாட்டுக்கு அனுப்பி ஒளைக்கிற வழியப்பாரு . . .” என்று சொல்வது காதில் கேட்டது. உடன் முத்துமுகம்மது, திரும்பிச் சத்தமாக -

டேய், சப்பு! ரோசமத்தவன! வெக்கமில்லாம எங்கட கட்சித் தொப்பியப் போட்டிருக்கியே . . . கழட்றா டேய்!” என்று கத்தினான். சப்புச் சுல்தான் புன்னகைத்தபடியே இஸ்லாமியக் கட்சித் தொப்பியக் களற்றி மைமுனாவின் தம்பி யாசீனின் தலைக்கு அணிவித்துவிட்டுத் தொப்பியிலிருந்த பிறைச் சின்னத்தைப் பிய்த்துக் கசக்கியெறிந்ததும், கோபமாக மாமியிடம் ஏதோ சொல்லிவிட்டு அவர்களை விட்டும் பிரிந்து சைக்கிளில் ஏறிச் செல்வதும் தெரிந்தது.

ந்தா  வாரான்        முத்தும்மது, டேய்   மளசியாவ   £ஸ்தேவனோவ் . . . எங்கடா போன, தாடி மாஸ்டர் வெரட்டாம்” என்று இளைஞர் அணியின் உறுப்பினர்கள் ஜாபிரும் நகிபும் துரிதப்படுத்தவே முத்துமுகம்மது அவர்களுடன் மைதானம் நோக்கித் திரும்பி விரைந்தான். “ . . . தோ . . . நமது பிறைக்கட்சிப் பாடலை இசைக்க உங்கள்மத்தியில் மலேசியா வாசுதேவன் முத்துமுகம்மதுர் . . . வ்வ்வ . . .” அறிவிப்பு காற்றில் அறைந்து அழைத்தது.

சப்புச் சல்தான் நாய்க்கி இருட்டடி குடுக்கனும்டா . . .நகிப்போவ் . . . வசதியா . . . ஒரு நாளைக்கி . . .”

குடுப்பம் . . . குடுப்பம் . . . ப்ப்போய் ஒண்ட கொரலக் குடு...”

எலக்சனுக்குள்ள அடிக்கணும் . . . நாய்க்கி . . .” வஞ்சினம் மனதில் கருக் கொண்டது.

 

\அடுத்தநாள் மாலை முத்துமுகம்மது மைமுனாவின் வீட்டுக்கு வந்தபோது, சப்புச் சுல்தானும் மாமியும் பேசிக்கொண்டிருந்தனர். மைமுனா கதவருகில் பாதி மறைந்திருந்தாள். அவளது கையில் சப்புச் சுல்தான் கொணர்ந்திருந்த கடவுச் சீட்டு இருந்தது. அவளது மூன்று தங்கைகளும் முற்றத்தில் ஓடிப்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கிருந்த ஒரே ஒரு நாற்காலியில் சப்புச் சுல்தான் மிகப் பந்தாவாக உட்கார்ந்திருந்தான். தம்பி யாசீன், அவனது இலக்ரோனிக் கைக்கடிகாரத்தைப் பார்த்து வாய் பிளந்திருந்தான். மாமி சொல்லிக் கொண்டிருந்தாள்.

நாம என்னய்ற? நாலு கொம்புளப்புள்ளயள் . . . நாலு ஊடு வளவு வேணும். புரிசன் ல்ல, ரெண்டு புள்ள கொமரு, என்னய்யச் செல்றாய்? மைம்னா வெளிய போய் ஒரு ரெண்டு வரிசம் இருந்தாத்தான் ஒரு வளவாச்சிம் வாங்கி ஊட்டக் கீட்டக் கட்டிரலாம் . . .” என்ற மாமி திடீரெனக் கருத்தை மாற்றி, “ . . .ஙா, வா! முத்துவம்மது! இப்பிடி இரி! ண்டாலும் கொமர வெளிநாட்டுக்கு அனுப்பினா . . .சனம் என்ன கதைக்கும்? ண்டு . . . கொஞ்சம் யோசனையா ரிக்கி...”

         £மியின் இரட்டை வேடம் புரிந்தது. மைமுனா முத்துமுகம்மதுக்குக் கதிரையைத் தூக்கிவந்து போட்டாள். பொங்கிவந்த கோபத்துடன் அமர்ந்த முத்துமுகம்மது.

சனம் என்ன கதைக்கிற? ஊர்ல காறித் துப்பும்” என்றான்.

சப்புச் சுல்தான் பலமாகச் சிரித்தபடியே, குறுக்கிட்டு -

லெக்கா மாமி! எந்தப் பேயன் சென்ன வெளிநாட்டுக்குப் போனா மானம் போறண்டு? நீயும் ஒருக்கா சவ்திக்குப் போய் வந்தான. என்னயும் நடந்திச்சா? - நல்ல கௌரவமான ஊடுகள்ள “அவுஸ்மைட்டா” போனா நெல்ல காசி! நெல்ல வாசி!! நாணூறு றியால் சம்பளந் தெருவான். சாப்பாடு, தங்குமிடம் “பிரீ”. எலங்கக் காசி £ப்பதாயிரம் மட்டுக்கு வெரும்” சப்புச் சுல்தானின் வர்ணணையில் மாமி சபலப்பட்டுவிட்டாள் என்பது முத்துமுகம்மதுக்குப் புரிந்ததால் எரிச்சலாக இருந்தது. உடனே -

மாமி! காசிக்கி சோட்டப்பட்டுப் பாள்கெணத்துல உழுந்துராத” என்றான் மைமுனாவுக்கும் சேர்த்து.

சட்டெனச் சப்புச் சுல்தான் மிகுந்த ஆத்திரமுற்று,-

லெக்கா மைமுனாடம்மோவ் . .! செல மாளிர மக்களுக்கு ஒரு மைரும் தெரியா. கதைக்கிற நாயள் ஒரு ஊடு கட்டித் தெருவாஹளா? ல்ல, ஒரு வளவுத் துண்டாச்சும் வாங்கித் தெருவாஹளா? பள்ளிமுனய உட்டா வேற ஒரு எடமும் தெரியாத கெணத்துத்தவளட மக்கள்ள கதய உடு!

        £ . . . முத்தும்மது! மறுகா . . . என்றாப்பா ஒங்குட இசிலாங்கட்சி வெல்லுமா? பெரிசா நிண்டியே மேடையில . . .நாரைய தக்பீர் செய்யச் சென்னியே . . . தக்பீர் பண்ணிட்டீங்களா . . . பாட்டுக் கீட்டெல்லாம் படிச்சியாமே. .?”

சிங்களக் கட்சில ஊம்புர நாய்களுக்கு தனித்துவம் தெரிய்ஜீமா?. . அத உடு! மாமி, மைமுனாவ அனுப்பிராத! கரச்சல்! ந்தச் சப்புமார நம்பாதஹா! ஏமாத்துவானுகள். நொக்குத் தெரியா, நம்முட முட உதுமான்ட வெண்டி சல்மாவையும் வெளிய அனுப்புறன் ண்டு கொழும்புக்குக் கூட்டிட்டுப் போய் . . .”

போடா கொறுக்காப்புளி! கொளும்பு தெரியாத பேயா! ஒனக்குப் பாட்டுப் படிக்கத்தான் தெரியிம் . . . அவனும் வேனும் கதக்கிறத்தக் கேட்டுட்டு நொக்கு மூள கொளம்புற . . .

செரி, மைமுனாடம்மமோவ் . . . நான் போறன். செரியா! எல்லாம் “ரெடி” பண்ணு. எல்லாஞ் செரிண்டா வாற கௌம 'பிளய்ட்டு”! உஷ் . . . ஸ் . . . ஸ் . . .” சப்புச் சுல்தான் கையால் காற்றில் விமானம் பறந்து காட்டினான்.

செர்ராப்பா! நீ போ! இன்னம் கொஞ்சம் ஓசிப்பம்”

சப்புச் சுல்தான் போய்விட்டான். சிறிது நேரம் எவரும் பேசவில்லை. திடீரென மாமி -

முத்தும்மது! அவன் சப்புச் சுலுத்தானோட எந்நரமும் கொளுவாத. அவன் ஆள் பொறுப்பு. “எக்குல” தோக்கும் வச்சிருக்கான், டியே மைமுனா மச்சானுக்குத் தேயில ஊத்திக் குடு . . .” என்றாள்.

முத்துமுகம்மது பேயறைந்தாற் போலிருந்து விட்டு - “மா . . . மி! மெய்யாமெய்யா மைமுனாவ வெளியில அனுப்பப் போறியா?” என்று கேட்டான்.

அனுப்பாட்டி . .? எப்பிடி ஊடுகட்ற? வாள்ற? காசி? ஒண்டா ரெண்டா? நாலு கொமருக்கு என்ன இரிக்கி?”

மாமியின் தொடர்கேள்விகளில் நிலை குலைந்தான் முத்துமுகம்மது. பதிலளிக்க இயலாமையால் ஏற்பட்ட ஆத்திரத்தில், “மாமி! மைமுனா வெளில போனா நான் அவளப் பாரமெடுக்க மாட்டன்” என்றான்.

அப்ப அவளோட சேத்து இந்த மூணு கொமரையும் £ரமெடுப்பியா . . . ஒழப்பியா . . . ஊடு கட்டுவியா . . .செல்லன்”

என்ன மாமி இது?”

அப்ப என்னய்யச் செல்றாய் என்ன . . . ரெண்டு வரிசம் போனா எப்பிடியும் கொஞ்சக் காசோட வெருவாள் . . . ஒரு ஊட்டக் கீட்டக் கட்டலாந்தான . . .”

முத்துமுகம்மதால் பேச முடியவில்லை. மைமுனாவா வெளிநாட்டுக்கா . .? அதுவும் சப்புச் சுல்தானுடனா . .? அவனுக்குள் ஒரு நரகம் கொதித்தது. மைமுனா இதுக்கு என்ன சொல்கிறாள்.

மைமுனா, வெளிய போக ஓம்பட்டுட்டாளா மாமி?”

அவள் என்னத்த ஓம்பர்ர? பாசிப் பொட்டும் எடுத்தாச்சி . . . நீயான் செல்லு, நீ சொன்னாக் கேப்பா!”

நானா . . . நானா அவள வெளில போகச் செல்ற . . . கடசி மட்டும் செல்ல மாட்டன்” துடித்துப் போனான் முத்துமுகம்மது.

அப்ப எல்லாத்தையும் பாரமெடு” மாமி நிர்த்தாட்சியமாகச் சொல்லிவிட்டு, மேற்கொண்டு பேசாமல்கடைக்குப் போய்விட்டாள். மைமுனா செத்தைக் குடிலுக்குள் நெருப்பு மூட்டினாள். முத்துமுகம்மது பரிதாபமாக அவளைப் பார்த்தான். மைமுனா அடுப்பை ஊதிக்கொண்டிருந்தாள் . . .முதுகு குலுங்கியது. அழுகிறாளா என்ன? யாசின் மைமுனாவின் கடவுச் சீட்டை வியப்புடன் பார்த்து -

லாத்தாட போட்டோவு என்ன வடிவாரிக்கி மச்சான் பாருங்க . . .” என்றான்.

டேய் சில்லித்தலையா. தூக்கெறிரா அந்த மைர! மைமுன . . . மெய்யாமெய்யா நீ வெளியில போவியா கிளி?”

“...”

போக விருப்பமா நொக்கு?” விடாமல் கேட்டான்.

ம்மா செல்லிட்டா நான் என்னய்ற . . . மச் . . . சான் . .?” குரல் விம்மியது.

அப்ப நான்? என்ன உட்டுட்டுப் போய்ருவியா . .?”

“...”

மைமுனா நான் சாகுவன் நீ போனா . . . அதுவும் ந்தச் சப்புச் சுலுத்தான் நாயோட நீ போனா நான் வெசம் குடிப்பன். ல்லாட்டி புலிப்படையிலான் சேருவன் . . . ஓம்!”

பேக்கத கதயாதங்க மச்சான் . . . ந்தாங்க தேத்தண்ணி . . .”

ஒரு மைரும் வேணா!”

முத்துமுகம்மது கோபித்துத் திடீரென எழுந்தான்.

விடுவிடுவென்று வெளியேறினான். மைமுனா, “மச்சான் . . . மச்சான் . . .” என்று படலைவரை ஓடி வந்ததையும் புறக்கணித்து, ஆத்திரமாக வேலியில் சாத்தியிருந்த சைக்கிளுக்கு ஒரு உதை கொடுத்தான்.

3

 

மகா கோபத்துடன் சைக்கிளைத் தாறுமாறாக மிதித்து வேகமாகப் பூமரச்சந்திக்கு வந்தான். டீக்கடை நெய்னாரிடம் சொன்னால்தான் கோபம் ஆறும். சந்தியில் நேற்றைய தோரணங்கள் பிரிக்கப்பட்டிருந்தன. சுவரொட்டிகள் இருந்தன. டீக்கடைநெய்னாரின் “சதாம்ஹோட்டலில்” ஒரு பிளேன்டி குடித்தான். ஆத்திரம் அடங்கவில்லை. கடைக்குள் பனிஸ் பெட்டியில் தலைவர் படம். கடிகாரத்தில் தலைவர், கல்லாப் பெட்டியில் தலைவர். தலைவர்மீது நாட்டம் செல்லவில்லை. நெய்னார் நகீபுடனும் இன்னும் சிலருடனும் பசபசவென்று அரசியல் பேசிக்கொண்டிருந்தான். ஆசுகவி ஓசிப் பேப்பர் படித்துக்கொண்டிருந்தார்.

சுடுபட்ட சம்மாந்துற பறக்கத்துல்லாக்கு அங்க கடும் செல்வாக்காம் . . . புலிப்பட சுட்ட எண்ட சாட்டுல அய்ப்பிக்கேதான் சுட்டயாம் . . .”

ல்லயில்ல . . . ந்தியப் பட ல்ல . . . கூடத் திரியிற தமுள் ராணுவமாம் . . . ண்டு பேபர்ல கெடக்க . . .”

நம்மளத் தவிர எல்லார்ட்டயிம் ஆய்தம் இரிக்கி . . .”

நாம முசிலிம் ஆக்கள் அரசியல் அநாதைகள் . . . அதான் நம்மட தலவரு . . . ந்தக் கச்சிய . . .”

ஓ . . . ஓ . . . நீ வேணும்டாப் பாரு . . . வெத்தி சுவர்!

ஆறு எடமும் நம்முட கச்சிதான் வெல்லும் சுவர்”

நெய்னார் முத்துமுகம்மதைக் கண்டதும் “ஙாலீ . . .

இன்னா எங்கட எளஞர் அணி உறுப்பினரு வந்துட்டாரு . . .

        £டா முத்தும்மதோவ் . .! நம்மட கச்சிக்கு . . .” என்று கட்சிக்கதை ஆரம்பித்தான். முத்துமுகம்மது பேசவில்லை. மைமுனா . .? வெளிநாட்டுக்கா . .? அப்ப . . . நான் . .? சப்புச் சுல்தான் கொழும்புக்கு ஒன்றுமறியாத மைமுனாவைக் கூட்டிப்போய் . .? ச்சிக்! சட்டென்று முத்துமுகம்மது தேனீர் கிளாசை தரையில் எறிந்தான் . .! கிளாஸ் உடைந்து சிதற . . . டீக்கடை நெய்னார் திடுக்கிட்டு -

என்னடாது . . . முத்தும்மது . . . கௌ£ஸ ஒடச்சிட்டாய்?”

கௌ£§ம் மண்டையும்! எவ்வளவ்வு டா கெல்லாசிக்கு . . . பெரிய தங்கக் கெல்லாசி . . . பே நாயே . . .”

என்னடா கொறக்காப்புளி . .? ‘பொய்ல’ரப் பாக்கச்சூடாரிக்காய் . . . முத்தும்மது நொக்கென்ன பைத்தியமாடா . . .”

பொத்துரா வாய, பொட்ட நெய்னாரு புட்ரா காச . . .நாய...”

என்ன காக்கா . .? என்ன நடந்த . .?” நகீபு பதறினான்.

வெறியாடா           நொக்கு . . .   டேய் . .!

கொறுக்காப்புளியோவ் . . . டேய் . .! நில்றா . . . நில்றா. . .”

ஆனால் பத்து ரூபாய்த் தாளை எறிந்த முத்துமுகம்மது சடாரெனச் சைக்கிளில் தாவி இரும்புப் பாலத்தை நோக்கி வேகமாகச் சென்றான்.

என்ன செய்வதென்றே விளங்கவில்லை. இரும்புப் பாலத்தில் ஆள் நடமாட்டமில்லை. குளிர் காற்று வீசியது. சைக்கிளைச் சாத்திவிட்டு முத்துமுகம்மது பாலத்தின் கைப்பிடியில் சாய்ந்து உட்கார்ந்தான். யோசனையில் ஆழ்ந்தான். மைமுனா எட்டு வயதிலிருந்து இன்றுவரை தனக்கேயுரியவளென அனைவராலும் நிச்சயிக்கப்பட்ட சொந்த சொர்க்கம். வெளிநாட்டுக்கா . .? மைமுனா இல்லாத வாழ்வு . .? அதுவும் சப்புச் சுல்தானோடு கொழும்பு போய் அங்கு ‘லொட்ஜி’ல் . .? இருள் கவிழ்ந்து வந்தது. பாலத்தின் நிழல் தண்ணீரில் ஆடி பயமுறுத்தியது. தண்ணீரின் சளக் சளக் சத்தம் கேட்டது. வயல் வெளிகளிலிருந்து மட்டற்ற பூச்சிகள் நியோன் ஒளி தேடி வந்தன. விநோத இராஜந்துகள் வெளியேற ஆரம்பித்தன. புலியோ, இராணுவமோ £ரும் இப்பக்கம் வரக் கூடும். முக்கால் மணி நேரம் கடந்திருக்கும்.

 

பாலத்தின் மறுபக்கமிருந்து சைக்கிளில் இருவர் வருவது புலனாகியது. முத்துமுகம்மதின் அருகே வந்ததும் சைக்கிள் நின்றது. ஒருத்தன் மக்கத்து வலைத் தொப்பி அணிந்திருந்தான். மற்றவன் இஸ்லாமியக் கட்சித் தொப்பி அணிந்திருந்தான். இரு வாலிபர்களும் முத்துமுகம்மதை நெருங்கினர்.

 

நீ பள்ளிமுனதானே . .? ” - ஒருத்தன் கேட்டான்.

முத்துமுகம்மது கடுக்கென ஆத்திரப்பட்டு, “அதக் கேட்க நீ ஆர்ரா . . . எந்த ஊர்ரா . .?” என்று கேட்டான்.

நாங்கள் அக்கரப்பத்து . . . உந்த சப்பு வேல பாக்கற சுல்தானத் தெரியும்தானே உனக்கு . .? அவரின்ர வீட்ட ஒருக்காக் காட்ட ஏலுமே காக்கா . .? அவர அவசரமா சந்திக்கணும் . . .”

சப்புச் சுல்தானா . .?”

முத்துமுகம்மது அவர்கள் இருவரையும் மங்கலான வெளிச்சத்தினூடே உற்றுப் பார்த்தான். அவர்களது பேச்சில் வடக்குத்தமிழ் வாடை. சிலவேளை . .? முத்துமுகம்மதுக்குச் சந்தேகம் எட்டிப் பார்த்தது.

நெக்கி சப்புச் சுல்தாண்ட ஊடு தெரியாதே . . .” என்றான் பயத்துடன்.

இருவரில் ஒருவன் திடீரென முத்துமுகம்மதின் சேர்ட்டைப் பிடித்து இழுத்தான். முத்துமுகம்மது   £லத்திலிருந்து நழுவி வீதியில் விழுந்து ஆத்திரமாய் எழுந்தான். மற்றவன் சட்டென்று தனது சேர்ட்டை விலக்கிக் காட்ட - இடுப்பினுள் ஒரு பிஸ்டல் துப்பாக்கி மினுமினுத்தது.

இதப்பாரு! ஆரெண்டு விளங்குதே . .? இந்தா இந்தக் கடிதத்த அவன் சப்பு ஏஜென்சி சுல்தானுட்டக் கொடுத்துவிடும். ஆட்கள் தேடி வந்திச்சினம் ண்டு சொல்லிரு சரியே . .?”

மற்றவன் ஒரு கடிதத்தை முத்துமுகம்மதின் சேர்ட் பைக்குள் வைத்தான். முத்துமுகம்மது பயந்துபோய் -

செரி அண்ணேய்! ப்ப, போய்க் குடுப்பன் ணேய்!” என்றான்

சரி . . . இதாலை ராணுவம் வர இரிக்கு . . . ‘அற்றக்’ பண்ணப் போறம் . . . நீ ஓடு!” என்றவனின் முகத்தில் பெரிய தையலிட்ட காயத்தழும்பு இருந்தது. அவர்கள் சைக்கிளில் ஏறி திருவில் பக்கமாக மெதுவாகச் சென்றனர். முத்துமுகம்மது பதட்டமாகத் தன் சைக்கிளை எடுத்து விரைவாக மிதித்து மீண்டும் டீக்கடைநெய்னாரின் சதாம் ஹோட்டலுக்கு வந்தான். ஆட்கள் இல்லை.

டேய் நெய்னாரு! ஒரு கடிதம் படிக்கனும். வெளி லைட்டப்போடு”

முத்தும்மதா . . . டேய், வெளில ‘லைட்டை’யும் ஒடச்சிடாத . . . வெறியில . . . என்ன கோவம்டாப்பா கொறுக்காப் புளியருக்கு . . . ஓவ் . . .”

வெளிவிறாந்தையின் சோக வெளிச்சத்தில் முத்துமுகம்மது அந்தக் கடிதத்தைப் பிரித்துப் பார்த்தான். துணுக்குற்றான். கடிதத்தின் தலைப்பில் ஒரு புலித்தலை. குறுக்கே இரு துப்பாக்கிகள். கீழே, “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.” அதன் கீழே எழுதப்பட்டிருந்த வரிகள்,

மு.ம. சுல்தான் (சப் - ஏஜென்ட்) அவர்கட்கு,

உமக்கு எதிராகப் பள்ளிமுனை உதுமான் என்பவரால் செய்யப்பட்டுள்ள சில முறைப்பாடுகள் காரணமாக எதிர்வரும் 1990- 03 - 01 புதன்கிழமை மீனோடைக்கட்டு அலுவலகத்திற்கு விசாரணைக்கு வருமாறு வேண்டுகிறோம். தவறும் பட்சத்தில் கடும்நடவடிக்கை எடுக்கப்படும்.”

பொறுப்பாளர்

மட்டு! அம்பாறை மாவட்டம்

தமிழீழம்.

என்டேய், என்னடா முத்தும்மது” புலிப்படம் இரிக்கே . . . “எல்ட்டிட்டியீ” நோட்டீசாடா . . . ஏதுரா . .? ஆருக்குடா . .?”

முத்துமுகம்மது சட்டெனக் கடிதத்தை மடித்துச் சேர்ட்டுக்குள் வைத்துவிட்டான்.

ல்ல நெய்னாரு! இது வேற கடிதம்”

ல்லல்ல! புலிர கடிதம்!! புலித்தலப்படம் இரிக்கி, கண்ணால கண்ட நான் ! தமிளன்ட தாவம் தனிநாடு ண்டு. எளுதிரிக்கி . . .”

ஒன்ட பொட்டக் கண்ணால மைரத்தான் கண்ட!”

முத்துமுகம்மது விரைந்து சைக்கிளில் ஏறி வீடு வந்து சேர்ந்தான். கண்பார்வை மங்கிய தாய்க்கிழவி காத்திருந்தாள்.

ந்நரம் எங்கடா கெடந்து வாறாய்? கொறுக்காப்புளியா . .! எலக்சன் டைமுல ராவையில வெளியில திரியாதடா . . . கொளப்பம், இசிலாங் கட்சிக்காரணுகள புலி சுர்ரானாம் . . . டேய், நீயிம் இசிலாங் கட்சியாடா . . . செல்லண்டா!”

கத்தாதஹா எக்கோவ்! அன்னா ஒண்ட அண்ணன்ட மகள் மைம்னாவ வெளிநாட்டுக்கு அனுப்பப் போறாளாங்கா அந்த மண்டபெருத்தாள் மாமி.. அதச் செரிபண்ணித் தெருமட்டுக்கும் நெக்கிச் சோறு வேணாடி குருட்டுக் கௌவியோவ் . .!”

மைதின் ஆண்டவரே . .! வேனுக்கு நல்ல புத்தியக் குடு வாப்பா!”

படுஹா . . . படுஹா . . .”

நித்திரை வராமல் புரண்டான் முத்துமுகம்மது. மைமுனாவைச் சப்புச் சுல்தான் கொழும்புக்குக் கூட்டிப் போகிறான். அறைக்குள் சுற்றிச் சுற்றி மைமுனா ஓட ஓட சுல்தான் துரத்துகிறான். மைமுனா கத்துகிறாள். போடா . . . போடா . . . என்கிறாள். “முத்து மச்சான் சப்பு நாயப் புடிங்க மச்சோ . . . ன் . . .” என்கிறாள். திடீரெனத் தலைவர் வந்து மைமுனாவுடன் சிரிக்கிறார். உடனே முகத்தில் தையலிட்ட தழும்புக்காரன் ‘பிஸ்டலை’ உருவி தலைவரை . . .

கனவு பாதி நினைவு பாதியாய் முத்துமுகம்மது நித்திரையில் அலைக்கழிந்து எப்போது தூங்கினானோ . . .

         £ய்க்கிழவி அதிரடிச் செய்தி ஒன்றுடன் பரபரப்பாக அவனை அரட்டியபோது விடிந்திருந்தது.

எழும்புடா டேய்! முத்தும்மதோவ்!! சலுமாச் சாச்சி மௌத்தாப் போய்த்தாள்ளோ”

ஆருஹா . . . என்னஹா?”

மொட உதுமான் மாமாட பொஞ்சாதி சல்மா நஞ்சி குடிச்சி மௌத்தானயாம்டா . . . எழும்புடா கொறுக்கா!”

அதிர்ச்சியுடன் எழுந்து முட உதுமானின் வீடு நோக்கி ஓடினான் முத்துமுகம்மது.

0

வயல் விதைக்கப்போய் வெளிக்குள் புதைக்கப்பட்டிருந்த மிதிவெடியில் சிக்கி இடதுகாலை இழந்திருந்த முடஉதுமானின் வீடு உடனடி மரணக்கோலத்தில் அமிழ்ந்திருந்தது. தரம் கெட்ட சந்தனக்குச்சி நெடி மூக்கைத் துளைத்தது. வாசலில் ‘கன்வஸ்’ சீலை இழுத்து ஒரு அவசரப்பந்தல். ஐந்தாறு கதிரைகள். ஒரு மர வாங்கு! சனங்கள் கொத்துக் கொத்தாகக் கூடியிருந்தனர்.

முத்துமுகம்மது பந்தலைக் கடந்து வீட்டினுள் நுழைந்தான். முடஉதுமான் பாதி உணர்வுடன் ஒற்றைக் காலுடன் விழுந்து கிடந்தார். பக்கத்தே ஊன்று(«)காலும் கிடந்தது. பெண்கள் பக்கமிருந்து சில ஒப்பாரிக் குரல்கள் ஒலிப்பதும் சடுதியில் நிற்பதுமாக இருந்தது. உதுமானின் பத்து வயது ஒரே மகன் அன்வர், தாயின் உடலைக்கட்டிப் பிடித்தபடி சத்தமாக ஓயாமல் கத்திக்கொண்டிருந்தான். சுற்றிலும் சனங்களின் சளசள பேச்சுக்கள்; தேறுதல்கள்.

முத்துமுகம்மது படுத்துக்கிடந்த உதுமானின் அருகில் உட்கார்ந்தான். சுற்றிலும் தாடி மாஸ்டர், பெரியபள்ளித்தலைவர் செய்லான் ஹாஜியார், லெப்பை, சர்பத் கிழவன், போஸ்ட் மாஸ்டர், ஆசுகவி அன்புடீன், பள்ளிக் குயில் பளீல், புழைல் மவ்லவி, மம்மாக்கான் தண்டயல், மீச மேசிலான், அல்அயல் சனங்கள், இன்னும் பலர் ஆள்ஆளுக்குத் தொடர்பற்றுப் பேசிக்கொண்டிருந்தனர்.

சும்மா இருந்தவள் நஞ்சி குடிச்சி மௌத்தாகிறண்டா என்னத்துக்கோ . .?”

வெள்ளாமைக்கி அடிக்கிர ‘ரொன்ஸாப்பி’ குடிச்சிருக்கா. நடுச்சாமம் குடிச்சிருக்கா . . . ஒருத்தருக்கும் தெரியா . . . ஒடன சீவன் போயிரிக்கி . . . உதுமானுக்கே தெரியா . . . சுவஹ்க்கு ‘வாங்கு’ பறிஞ்ச ஒடன உதுமான் காக்கா பொண்டாட்டிய அரட்டி இருக்காரு . . . பேச்சி மூச்சில்லாமக் கெடந்தாவாம் . . . இருட்டுக்க ஒண்டும் வெளங்கயும் ல்லியாம். செரி படுக்கட்டும் ண்டு மனிசன் ஏலாத காலோட குடிலுக்கப் போய் தேத்தண்ணியும் வெச்சிருக்காரு . . .”

பொண்டாட்டி புருசனுக்க என்னயும் ‘கசிலியா’?”

ல்ல! வெச்ச தேத்தண்ணிய வந்து எடுஹா . . . எடுஹாண்டு கூப்பிடக் கூப்புட ஆள் வெரல்ல . . . வேரு தவண்டுப் போய் மனிசிய உசுப்பி உசுப்பி எழுப்பியிருக்காரு . . . என்னடா ‘டம்’ முண்டு கெடக்கா ண்டு சக்குத் தட்டிட்டு. மறுகா மனிசன் வெளக்குத் தேடிஎடுத்துக் கொளுத்தி . . . அங்க பாத்தா . . . வாயில நொர . . .கையில போத்தல் . . .”

அப்ப வேல முடிஞ்சி.. அந்நரமே ‘ரோஹ§” போய்த்து...”

மனிசன் உட்டாரு சத்தமொண்டு . . . மாக்கோவ்!

எங்குட ஊட்ட கேட்டிச்சி. நானும் பயந்து புலிப்பட பூந்துட்டானாக்கும் ண்டு!

ண்டைக்கிக் காலத்தால சவளக்கடைக்கி மாடுகட்டப் போன முஸிலிமாக்கள் ரெண்டு பேர வெட்டி நாணப்பத்தைக்க போட்ரிக்காம் . . .’

அக்கரப்பத்துலயும் ஒளவு மிசினக் கடத்தினயாம்...

காரதீவுல ண்டைக்கிக் கர்த்தாலாம் . . .’

மையத்து அடக்கிற எப்பயோ . .?’

எப்பிடி அடக்குற? குறுணல் ஒடயாரு வெரனும் . . .

பொலிசி வெரணும் . . . ‘போஸிமோட்டம்’ வைக்கணும் . . .

ஒர்த்தரும் வெர ஏலா . . . கர்த்தால் . .!’

கூட்டி வெர வெதான போயிருக்காரு’

உதுமான் . . . உதுமான் . . . எழும்பு . . . எல்லாரும் மௌத்தாஹ்றான் . . . கொளறாத . . . கவ்று வெட்ட ஆக்கள் . . . மம்பட்டி . . . ரெடியா? ‘சந்தக்கு’ தூக்கியருவியா முத்தும்மது?

         ங்கடா ஒன்ட எளஞ்ஞர் அணி? எங்கடா அவன் ஜாபிரும் . . . நகிபும் . . . நெய்னாரும் . . . கூப்பிடண்டா . . .வேலய முடிப்பம் . .!’

முத்தும்மது! மையத்துக் குளிப்பாட்ற வக்குக் கிழவியக் கூட்டியாறியா. .? உதுமான் மாமாவ எழுப்புடா முத்தும்மவதோ!’

கால் கை கட்டாம மையத்து வெறச்சிப் பெய்த்து’ என்று பெண்கள் பக்கமிருந்து குசுகுசுப்புக்களும் ‘நீ கட்டு . . .நான் கட்டு . . . மையத்துர கண்ணக் கசக்கு . . . கால மடக்கு . . .’ என்ற பிரதி வாதங்கள் பசபசவென ஒலித்தன. மையித்தக் குளிப்பாட்டும் மனிசி வந்தாள்.

இப்பானாஹா வாறாய் வக்குக் கௌவி . . . மய்யத்து வெறச்சிப் பீத்து . . .’

ஙா . .? எங்காலஹா வெரச் செல்றாய் . . . கர்த்தால் போட்டயாம் . . . ரோட்டுல டயரு பத்துது . . . பொலிசி ஆமி நிக்கி . . . வாயப் பொத்துஹா லூலி!’

முத்துமுகம்மது எல்லாச் சோகத்தையும் விழுங்கிவிட்டு உதுமானைத் தட்டி விழிக்க வைத்தான். உதுமான் அதிர்ச்சியுடன் அரண்டுபோய் எழுந்தார். உடன் தொடர் சோகத்துடன் திடீரென அழுதார்.

எ . . . என்ட தங்கமே . . . நா என்ன கறுமங்கா செஞ்ச நொக்கு? எனக்கி இனி ஆருறா . . . ஆருறா இரிக்கி . . . ல்லோவ்!”

உடன் அன்வரும் தந்தையுடன் சேர்ந்து “எண்டம்மோவ் . . . ‘எண்டம்மோவ் . .!” என்று ஒப்பாரி வைத்தான்.

உதுமான் கத்தாத! டெ . . . அம்பரு . . . கொளறாதடாம்பி . . . கொஞ்சம் ‘சவ்று’ பண்ணு!’ என்றார் செய்லான் ஹாஜியார்.

ஆக்கள் கூடிட்டு, கொளறுவய உட்டுட்டு நடக்கிற வேலையப் பாருங்க!’ என்றார் தாடி மாஸ்டர்.

என்டல்லோ . . . என்ட கிளியே . . .’

உதுமான் தன் இயலாமையில் அழுதார். தன் பத்து வயது மகன் அன்வரைப் பார்த்து அழுதார். மிதிவெடிபட்ட தன் காலைப் பார்த்து அழுதார். திடீரென -

எல்லாத்துக்கும் காரணம் அந்த நாய்தாண்டா . . .’ என்று கரகரத்துக் கத்தி ஒரு அவசர ஆவேசத்தில் தன் £லை மறந்து துள்ளி எழுந்து தடாலென விழுந்தார். மறுபடி வீறு கொண்டெழ முற்பட்டார்.

புடிரா . . . புடிரா முத்தும்மது!’

வெலகு! வெலகு!! உடு . . . உடு . . . என்ன உடு’

மொடவனுக்கு உரு ஏறிற்ரோ . . . வ் . . .’

உதுமான் திமிறி ஒன்றும் விளங்காமல் முத்துமுகம்மதின் மார்பில் பளாரென அறைந்தார். முத்துமுகம்மது அவரைக் கட்டி இறுக்கிப் பிடித்து உட்காரவைத்தான். மூச்சிரைத்த உதுமான் கோபாவேசமாக - ‘டேய் முத்தும்மது, . . . என்ட மருமகனே . . . ஒண்ட சாச்சிய இஸிராயிலுட்ட குடுத்தட்டன்  £த்தியாடா . . . அவன்தாண்டா . . . அவன்தாண்டா . . .என்ட பொண்டா . . . ட்டிய . . . றர்ர்க்”.

பேசாத . . . பேசாத மாமா! வாயப் பொத்து . . . சபையில கதையாத!’

முத்துமுகம்மது உதுமானோடு மல்லுகட்டி அமைதிப்படுத்தினான். உதுமானின் ஆவேசம் அடங்கவில்லை. பொங்கி வந்த அழுகையை அடக்கிய முத்துமுகம்மது உதுமானைப் படுக்கச் செய்து அவரது சேர்ட்டைக் கழற்றிவிட்டான். குடிக்கத் தண்ணீர் கொடுத்தான். விசிறியால் வீசினான். உதுமான் முணுமுணுப்பை விடவில்லை.

பாத்தியாட முத்தும்மது . . . சப்புச் . . . மகன் செஞ்ச அநியானத்த . . . இடி உளுந்துருவான் . . . கண்ணவிஞ்சி புளுத்துருவான் . . . என்ட தங்கத்த . . . சௌதிக்குக் கூட்டிப் போ . . . றண்டு சொல்லி . . . கொ . . . கொ . . . கொளும்புல வெச்சி . . . ஏமாத்தி . . . என்டல்லோ . . . வ்!’

உதுமானின் உளறலால் சபை ஆடிப்போய்விட்டது. மகன் அன்வர் கோபாவேசத்துடன் “ஆரவன் . . . அவனா £ப்பா . .? அவனா . . . அந்த நாயா . .?” என்று கத்திக்கொண்டே ஓட முற்பட்டான். அவனைக் கட்டுக்குள் கொண்டு வருதல் கடினமாயிற்று. பெண்கள் உதுமானின்

£க்கு மூலத்தில் இலயித்துப்போய் மையித்தை மறந்து கண்களால் தந்திச் செய்தியடித்தனர்.

எல்லாம் பொறகு பாப்பம்! மாமா வாயப் பொத்து! அம்பரு ப்பிடி இர்ரா . .!’ என்ற முத்துமுகம்மது, எதிர்பாராத விதமாகத் திமிறிக் கொண்டிருந்த அன்வரின் கன்னத்தில் பளாரென அறைந்தான். அத்துடன் யாரும் பேசவில்லை. முத்துமுகம்மதுக்குத் திடீரெனப் புலிகளின் கடிதம் ஞாபகம் வந்தது. இதுதான் பொருத்தமான இடம். சப்புச் சுல்தானைப் பழிவாங்க . . . இதைவிட . . . ஊரே கூடி நிற்கிறது. பெரியபள்ளித் தலைவர் இருக்கிறார். முத்துமுகம்மது பக்கெட்டினுள் கைவிட்டு மடித்தாற்போலிருந்த அந்தக் கடிதத்தை வெளியே எடுத்த அதே கணத்தில், புழுதி கிளப்பியபடி வாசலில் வந்து கிறீச்சிட்டு நின்றது ஒரு அதிரடிப்படை ஜீப். தொடர்ந்து இன்னொரு ‘டபிள்ப்’ வாகனம் ஒரு அலாதி திருப்பலுடன் சீறி நின்றது. சடாரெனக் கதவு திறக்க - தலைவர்!

4

 

அத்தனை சனமும் அதிகாலையிலேயே வாய் பிளக்க, தலைவர் இறங்கி வேகமாக நடந்து வந்தார்.

மையத்து வீட்டுச்சூழல் உடன் மாறியது. சனங்கள் தலைவரைச் சூழ தலைவர் இறுக்கமான முகபாவத்துடன் கைகளால் சனங்களை அமைதிப்படுத்தி உள்ளே உதுமானை நோக்கி வந்தார்.

உதுமானைத் தாங்கிப் பிடித்திருந்த முத்துமுகம்மது தலைவரின் வருகையில் சந்தோஷத் திகிலடைந்தது. முடஉதுமானைக்கைநழுவிவிட்டான். உதுமான் அதிர்ந்துபோனார். ‘மௌத்’வீயும் தனக்குக் கால் இல்லாததையும் மறந்து திடீரென எழ முற்பட்டார். உள்ளே வந்த தலைவர் அமைதியுடன் ஆனால் உறுதியாக -

உதுமான் காக்கா! எழும்பாதீங்க! அப்படியே இருங்க!’ என்றார்.

காக்கா’ என்ற ‘சொந்தக்கார’ அழைப்பில் சகலதும் மறந்து மகிழ்ந்த உதுமான் செயலற்று அமர்ந்தார். தலைவரும் மிகப் பக்கத்தில் அமர முயல, சடுதியில் பெண்கள் பக்கமிருந்து ஒரு வெள்ளை விரிப்புத் தலைவர் அமர்விடத்தில் விரிக்கப்பட்டுவிட்டது. அதில் அமர்ந்தார். மையித்து வீட்டில் ஒர திடீர் அமைதி பிறந்தது. தலைவர் உதுமானின் கைகளை ஆறுதலாகப் பற்றிப் பிடித்தார்.

அழாதீங்க! பொறுமையா இருங்க காக்கா!’

‘. . .’ உதுமான் தலைவரின் தேறுதலிலேயே அழுதார்.

எல்லாம் அந்தச் சப்புச் சுலுத்தான்ங்கிற அறாமி . . . ஐஎன்பிக் கட்சிக்காரன் . . . அவன் செஞ்ச வேல . . .’ என்று பெரியபள்ளித் தலைவர் செய்லான் ஹாஜியார் உடனே அரசியலை ஆரம்பிக்க - தலைவர் கண்டிப்பான குரலில் -

ஹாஜியார்! மச்சான் . .! மையத்து வீட்டில் அரசியல் பேச வேண்டாம். சரி, உதுமான் காக்கா! உங்கட கவலையில எனக்கும் பங்கு இருக்கு . . .’ என்றார்.

இதை விரும்பாத செய்லான் ஹாஜியார் உள்ளூரக் கோபப்பட்டு, -

மெய்தான் . . . பங்கிருக்கு. உதுமான்ட மூத்தப்பாட சகலனும், தலவர்ர வாப்பாட சாச்சிர மகண்ட ம   £மியாரும் . . . சொந்த கூடப் பொறந்த அண்ணன்தங்கச்சியாக்கும் . . .’ என்று புறுபுறுத்தார். தலைவரின் உஷ்ணப் பார்வையில் மறுபடி வாயை மூடினார். முத்துமுகம்மது தன் பக்கத்திலிருந்த தலைவரை நெஞ்சாரப் பார்த்துக் கொண்டிருந்தான். புலிக்கடிதத்தைத் தலைவரிடம் கொடுக்கலாமா . .? தலைவருக்கு விரைவில் ‘சோடா’ வந்தது. முத்துமுகம்மது அதனைப் பக்குவமாகப் பாக்குவெட்டியால் திறந்து குழாய் போட்டுத் தலைவரிடம் நீட்டினான்.

ஷோ... ரி... தம்பி... நான் ண்டைக்கு நோன்பு...’ என்ற தலைவர், ‘இவருக்குக் கொடுங்க..’ என்று முத்துமுகம்மதிடம் கூறிய தலைவர், முத்துமுகம்மதுவின் மார்பினை நோக்கி கண்சிமிட்டி புன்முறுவல் செய்தார். முத்துமுகம்மது அகமகிழ்ந்து தன் மார்பைப் பார்த்தான். அதில் இன்னமும் தலைவரின் சிறிய படமும் பிறைச் சின்னமும் இருந்தது. முத்துமுகம்மது வெட்கத்துடன் அமர்ந்தான். தலைவர் நேராகவே முத்துமுகம்மதைப் பார்த்து -

தம்பி! உங்கட பேரென்ன . .?’

‘. . . . . .’ தலைவரின் நேரடிப் பேச்சில் விதிர்விதிர்த்துப் போன முத்துமுகம்மது பதில் சொல்லத் தாமதித்துத் தடுமாறினான். உடனே பற்பல குரல்கள் -

மம்மது! முத்துவம்மது . . . முத்தம்மது, . . . முத்து . . .’ என்றன. பெரியபள்ளித் தலைவர் கொஞ்சம் உரக்க - ‘அவனா . . . சேர்? முத்தும்மதூ! காலஞ்செண்ட

கொறுக்காபுளியண்ட பேரன் . . . ப்ப, நம்மட கட்ச்சில ‘எளஞர் அணி’ல இரிக்கான் . . . நெல்லாப் பாட்டுப்படிப்பான் சேர் . . . மளசியா வாஷ்தேவன் மாயிரி . . .’

முத்துமுஹம்மத்!’ தலைவர் முதற்தடவையாக அவனது பெயரை அழகாக உச்சரித்து அழைத்து -

முத்துமுகம்மது, நல்ல பெயர்! இனி உதுமான் காக்காவுக்கு முத்துமுகம்மது எப்போதும் உதவியாக இருக்க வேணும் சரியா? . . .’

சே . . . ர் செரி சேர் . . . இருப்பன் சேர்’ தடுமாறி உளறினான்.

சரி நடந்தது நடந்திட்டுது . . . இனிச் செய்ய ஏதுமில்லை. நீங்க கொஞ்சம் பொறுமையாக இருக்கணும். முதல்ல மையித்து அடக்கிற வேலைகள முடிப்பம். காக்காவுக்கு எத்தின பிள்ளைகள்’ உதுமான் அழுதபடி -

நெக்கி ஒரு மகன்தான் . . . சேர், அந்த சப்பு நாய்தான் சேர் என்ட கிளிய சாஹவெச்சு . . . அவன் . . . தான் சேர் . . . கொளும்புக்கு . . . கூட்டிப் போ . . . ய் . . . ண்டல்லோ . . .அல்லோ . . .’

தலைவர் வியப்பாகக் கேள்விக்குறியுடன் பெரியபள்ளித் தலைவர் செய்லான் ஹாஜியாரைப் பார்க்க - அவர், உடனடியாகத் தலைவரை நெருங்கி காதுக்குள் கிணுகிணுத்தார்.

‘. . . அதுமட்டுமில்ல சேர். . ., ன்னா அடுத்த மொற ஐஎன்பியில ‘எலக்சன்’ கேக்கிறதுக்கு இரிக்கானாம். கேட்டா,            £ன் கொளும்புல ‘பெரமராஸாட’ கையாளு ண்டு, செல்றான் . . .’

சட்டென முத்துமுகம்மதுக்கு மறுபடி புலிகளின் கடிதம் ஞாபகம் வந்தது. ஓ . . . ஹ், தலைவரிடம் கொடுக்கலாமா . .?

 

தலைவர் உதுமானின் கைகளைப் பற்றிக் கொண்டு - ‘சரி, உதுமான் காக்கா! . . . குல்லு நப்ஸின் தாயிகதுல் மௌத் . . . ண்டு அல்லாஹ்ட பேச்சு இருக்கு . . . அதுக்குக் கட்டுப்படணும். பொறுதியா இருங்க . . . சரி நான் மறுபடி வாறன் . . .’ இருந்தபடியே உதுமானுக்குக் கைலாகு கொடுத்து ‘ஸலாம்’ கூறிய தலைவரின் தழுவலில் உதுமான் தனை மறந்தார்.  மகா  பொறுமை  அடைந்தார்.  தலைவர் பக்கத்திலிருந்ததால் ஆயிரம் சப்புச் சுல்தான்களையும்சமாளிக்க ஏலும். ‘சட்’டெனத் தலைவர் எழுந்தார். சுற்றியிருந்த அனைவரும் எழுந்தனர். உதுமான் எழ முத்துமுகம்மது கைத்தாங்கலாகப் பிடித்தான்.

நீங்க எழாதீங்க காக்கா! தம்பி முத்துமுகம்மது, அவரை விடுங்க!’ என்ற தலைவர், செய்லான் ஹாஜியாரைப் பார்த்து அதிரடியாக - “ஹாஜியார் மச்சான் . .! முத்துமுஹம்மதை நமது கட்சியின் இளைஞர் அணி தலைவராக ஆக்குங்க . . .

உடனடியாக . . . சரியா . . . ஓக்கே . . . நான் வாறன்! எல்லோருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.”

திடீரெனப் பெண்கள் பக்கம் பார்த்து, - ‘லாத்தா..

ஙா . . . மாமி . . . புள்ள . . . மய்யித்துக்காக அழாதிங்க . . . ப்ப நம்மட சமுகம் இருக்கிற பயங்கரமான நெலையை எண்ணி அழுங்க . . . சரி வாறன்’ என்றதும் அத்தனை பெண்களும் மையித்தை மறந்து தலைவரின் முகத் தரிசனத்தில் மகிழ்ந்து தலையாட்டினர். தலைவர் வெளியே நடந்தார். பிரம்மித்துப் போயிருந்த முத்துமுகம்மது ஒரு செக்கன் தாமதித்துத் தலைவரின் பின்னால் ஓடினான். தலைவர்

        £கனத்தில் ஏறிவிட்டார். அதிரடிப்படை ஜீப் அரைவட்டத்தில் சர்ரெனத் திரும்பத் திடீரென முத்துமுகம்மது வேகமாய் ஓடித் தலைவரின் வாகனத்தை நெருங்கிவிட்டான். அவனைக் கண்டதும் தலைவர் தன்பக்கத்துக் கண்ணாடியைக் கீழே இறக்க - ஒரே வீச்சில் முத்துமுகம்மது புலிகளின் கடிதத்தைத் தலைவரின் மடியில் போட்டுவிட்டான். வாகனங்கள் புழுதி கிளப்பிப் பறந்தன.

மையித் வீடு தலைவரின் வருகையால் மிகப் பரபரப்படைந்து விட்டது. சனம் நிறைந்து வழிந்தது. முத்துமுகம்மதின் ஓட்டமும் தலைவரின் இளைஞர் அணித்தலைவர் நியமனமும் அவனை அக்கூட்டத்தின் கதாநாயகனாக்கிவிட்டது.

ஜாபிர், “முத்தும்மது . . . இனி எங்கட எளஞர் அணிக்கித் தலவரு . . . தலவரே செல்லிட்டாங்க . .!” என்று பெருமிதப்பட, நகீபு, “எளஞர் அணித் தலவரு முத்தும்மதுக்கு . .? ஐயவே . . .

வா . .! நாரே தக்பீர். .?” என்று கத்த, “பொத்துரா வாய . .! மய்யத்து ஊட்டுல . .?” என்று அடக்கினான் முத்துமுகம்மது.

பல விடலைப் பையன்கள் “முத்தும்மதுக் காக்கா எளஞர் அணித் தலவர்ரோ . . . வ் . . . நாரே தக்பீர் . . . அல்லாஹ¨ அக்குப்பர்ர்ர்ர்ர்” என்று கோசமிட்டுப் பறந்தனர்.

முத்துமுகம்மதின் நியமனத்தை ஊரில் பரப்பப் பறந்தனர்.

0

ஒரு வழியாக மாலை அசர் தொழுகையின் பின் மையித்து அடக்கிவிட்டு வந்தாயிற்று. மரண வீடு வெறிச்சோடியிருந்தது. உதுமான் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். முத்துமுகம்மதுவும் மிகவும் களைத்துப்போய் உதுமானுக்குப் பக்கத்திலேயே சற்றுக் கண்ணயர்ந்துவிட்டான். மைமுனாவின் தம்பி யாசின் வந்து உலுக்கியதும்தான் எழுந்தான் முத்துமுகம்மது. கருக்கலாகிவிட்டிருந்தது.

என்னடா?’

முத்துமச்சான், ஒன்ன மைம்னாலாத்தா ஒடன வரச்சென்ன!’

ஊட்ட ஆர்ரா இரிக்கிற?’

சுல்தான் மாமாவும், ம்மாவும் இரிக்காஹ! மெய்யானா மச்சான் . . . சாஞ்சமருதுப் பள்ளிக்க இந்தியப் பட பூந்து சுட்டயாம் . . . பள்ளிய ஒடச்சயாம் . . . சாஞ்சமருதுல கொளப்பம் நடக்குதாம் . . . சனம் கதைக்குது மச்சான் . .?’

தெரியாடா . .!’

நீங்க எளஞ்ஞர் அணிக்கித் தலைவராம் . . . மெய்யா மச்சான் . .?”

ஓம்டா . . . சும்மா கிம்மா ல்ல . . . தலவரே நியமிச்சாங்க . . .” என்ற முத்துமுகம்மது யாசீனையும் தன் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பறந்து வந்தான்

வா, முத்தும்மது!” என்றாள் மாமி வெறுப்பாக. வறாந்தாவின் திண்ணையில் குந்தியிருந்தாள். பக்கத்தே ஒரே ஒரு கதிரையில் சப்புச் சுல்தான் அமர்ந்திருந்தான். மைமுனா தாய்க்குப் பக்கத்தில் குனிந்தபடி இருந்தாள். சுற்றிலும் தங்கைகள். யாசீன் சப்புச் சுல்தானுக்குச் சிகெரட் வாங்கப் போனான். முத்துமுகம்மதுக்குச் சப்புச் சுல்தானைக் கண்டதுமே ஆத்திரம் பொங்கியது. அதனைக் கவனிக்காத சப்புச் சுல்தான் -

முத்தும்மது . . . ஙா . . . வாடாப்பா! மையத்தூட்டுக்கு ஒங்கட தலவரு வந்தாப்ல . . . ம்?’

ஏ . . . வெரப்பொடாதா? செல மாளிர மக்களுக்கு வகுத்துல புளி கரைக்குமே . . . லேசான மௌத்தா அது? கொல! பச்சக்கொல . . . கறுமம் புடிச்சவன் புழுத்துச் சாவான் . . .’ எடுத்த உடனேயே ஆத்திரப்பட்டான்.

மவத்துக்கு என்னன்டான ஒரு காரணம் வேணுந்தான் . . . அத உடு . .! தலவரு பத்தாயிரம் ரூவாக் காசி தந்தயாமே நொக்கு . . . இளஞர் அணிக்கும் தலவராமே நீ . .? க்கிஹ்க்கி . . .’

பல்லக்காட்டாத சப்பு! உதுமான் மாமாவெண்டிய கொளும்புக்குக் கூட்டிட்டுப்போய் நீ செஞ்ச வேலையத் தலவருட்ட உதுமான் காக்கா செல்லிட்டாரு . . .’ படபடத்தான் முத்துமுகம்மது.

கதய நிப்பாட்டு! நொக்குத் தல பழுது, கொளும்புல என்னய்ற? ‘பிளைட்டு’ல ஏத்தி உட்ட. மொடவனும் கூடத்தான் இரிந்தான். அவள் சௌதியில பொஸ்ஸிர மகள்ள முப்பது பவ்ண் தங்கமாலயக் களவெடுத்த ண்டு செல்லி . . . பொஸ்ஸி சூட்டுக் கோல் வெச்சி அடிச்சித் தெரத்தி உட்டுட்டான். அதுக்கு நானா ஆள்? நானா களவெடுக்கச் சென்ன? போற எடத்துல, மைமுனா . . ., நீ ஒழுங்கா பொய், களவு ல்லாம இரிக்கணும் செரியா?’

மைமுனா மையமாகத் தலையாட்டினாள். மாமி - ‘முத்தும்மது! நீ ஒண்டும் கோவியாத! அவரவர்ர ‘தல முசிவத்’தப் படியான் நடக்கும். சுலுத்தான் தம்பியில குத்தமில்ல. அந்தக் கதய உடு! ப்ப முத்தும்மதோவ், மைம்னா கொவைத்துக்குப் போப்றாள். எல்லாம் ரெடி! வாற கெழம மட்டுல போற . . .’ என்று முடிவை அறிவித்தாள்.

என்ன . . . வாற கௌமையா . . . மெய்யானா இது?’

‘. . .’ மைமுனாவின் மௌனம் உறுதிப்படுத்தியது. சப்புச் சுல்தான் தேவையில்லாமல் தலையிட்டு,

வேறென்னய்ற எளஞரணித் தலைவரு? ஊடு வளவு ல்லாம ஏளக் கொமரு நாலையும் நீயா பாரமெடுக்கிற? . . .

மச்சான் மொற எண்டத்தக்காக நாலைப் பண்ணலாமாஹா லூயிப் பெத்தா..? ஞ்... ஞி... ஞி... ஞீ... ஞஞஹிக்...ய    . . .’ என்று நக்கலாகக் கேட்டு ‘ஹிங்ய்ய்ய்க்’ கென்று சிரித்தான். வெற்றிச் சிரிப்பு. முத்துமுகம்மதின் சொந்தச் சொர்க்கத்தை ஆக்கிரமித்துக் கொண்ட வெறிச் சிரிப்பு.

வாயப்பொத்துரா சப்பா!’ திடீரென முத்துமுகம்மது ஆவேசமுற்று, சப்புச் சுல்தான்மீது பாய்ந்தான். ஆனால், மாமி பதட்டத்துடன் கூக்குரலிட்டு, இடை நடுவில் புகுந்தாள். சிறிது இழுபறிகளுக்குப் பின்னர் முத்துமுகம்மது பல்லைக் கடித்தபடி குடிசையின் பின்புறமாகச் சென்று நின்றான். அங்கிருந்தே ஆத்திரமாகக் கத்தினான்.

நா நஞ்சி குடிப்பன் . . . நா நஞ்சி குடிப்பன் . . .”

மைமுனா பதைபதைப்புடன் குளறத் தொடங்க, மாமி பதட்டமின்றி ஆனால் கோபமாக ‘முத்தும்மது கோவியாத! மின்ன நானும் ஒருக்கா கொவைத்துப் போய் வந்தனான். ஒரு கரச்சலும் ல்ல. வேள் மைம்னாவும் போய் ஒரு வரிசம் இருந்திட்டு வெரட்டும். கொஞ்சக் காசி ஒழச்சிட்டு வெரட்டும். அது மட்டுக்கும் நீயும் ஒரு வெள்ளாமய கிள்ளாமயச் செஞ்சி ஒள . .! ஊட்டக்கீட்டக் கட்டு . . . வேள் வந்தவுடன ஒனக்குத்தான் அவளப் பண்ணி வைக்கிற. சுவர்! நம்பு! செரியா . .? ஆரோடயும் கோவிச்சி என்னய்ற . .?

நம்முட ஏள்ம அப்பிடியிரிக்கி...’ மாமி புலம்பிக்கொண்டிருந்தாள் . . . முத்துமுகம்மதால் ஏதும் பேச முடியவில்லை. சப்புச் சுல்தான் ஏதும் நடக்காதது போலச் சிகரெட்டை இரஸித்துப் புகைத்துக்கொண்டிருந்தான். இவனுடான மைமுனா கொழும்புக்கு . .?

சப்புச் சுல்தானின் விழிகளில் இருந்த விஷ(ம)ம் பயமுறுத்தியதாலோ என்னவோ மைமுனா தலைநிமிராது மண்ணைப் பார்த்தபடி இருந்தாள். அவளது கண்ணீர் ஓடிய தடங்கள் வெள்ளைக் கன்னத்தில் ஊத்தைக் கோடுகளாகியிருந்தன.

மறுகா . . . வெளிய அனுப்பாம என்னய்ற . . . போஹ விரும்பாம என்னய்ற? தடுக்கிற சனம் அவளச் சுத்தியிரிக்கிற இதுகளப் பாக்கல்லியாக்கும் . . . நாலும் கொம்புள . . . நாளக்கி இதுகளும் கொமரானா . . . என்ட கெதி என்ன? அதுவும் ஒரு ‘கண் பொண்டாட்டி! . . . நாலு கொமருகள் . . . மண்ணத் திண்டு நஞ்சி குடிக்காம என்னய்ற . .?’

முத்துமுகம்மது ஊமையாகிப்போய், மண்ணில் சரிந்து உட்கார்ந்தான். சப்புச் சுல்தான் போவதற்கு எழுந்தான். புலிக்கடிதம் பற்றி இவனிடம் சொல்லிப் பயமுறுத்திப்ப£ர்க்கலாமா? இவனிடம் கடிதத்தை கொடுக்காமல் விட்டதற்காக புலி ஏதும் . .?

நான் போய் வாறன் மைமுனாடம்மா!’

போப்றியாம்பி? செரி, மிச்ச வெஷயத்தை . .?’

பெரச்சினல்லஹா! மாமி . . . கொஞ்சம் செலவுக்கு ஒரு ஆய்ரம் மட்டுக்குத் தேவப்படும். ரெடி பண்ணுங்க . . . ஆறுதலா! மைம்னா வெரட்டா? தலவரு . .? எங்கக      £ணல்ல . . . பொளக்கடைக்க போய் என்னய்றாரு . . .

வெரட்டா?’

சப்புச் சுல்தான் வீதியில் இறங்கித் தனது மோட்டார் சைக்கிளில் ஏறினான். ஒரே உதையில் ‘ஸ்டார்ட்’ செய்து,£சின் வாய்பிளக்க உறுமி உறுமி காட்டிவிட்டுப் புறப்பட்டபோது -

 

டேய் . . . சப்போவ் . .! கொஞ்சம் பொர்றோவ் . .!’ - சட்டென்று முத்துமுகம்மது சுல்தானை நோக்கி வந்தான். சுல்தான் இன்ஜினை நிறுத்தாமல் ஆனால், தாக்குதல் சமாளிப்பில் நின்றான்.

என்ன தலவரு? என்னயும் ‘டவுட்’டா?’

சப்பு! ஒனக்குச் சாக்குருவி கத்திற்று. கவனமா யிரி! ஒன்னப்பத்தி புலிப்படைக்கிட்ட மொற்பாடு போயிரிக்கி. ஒன்ட ‘எரப்புணி’ப் புத்திய காட்டினத்தாலதான் உதுமான்ட வெண்டியும் நஞ்சி குடிச்ச. பொலிஸிலையும் ‘இன்டி’ போட்ரிக்கி. பொலிஸிட்ட நீ தப்பினாலும் புலிக்கிட்டயிருந்து தப்பேலா . . . புலிக்கிட்டத் தப்பினாலும் நீ எனக்கிட்டத் தப்பேலா . . . செல்லிட்டன். நேத்து ராவும் புலி ஒன்னத் தேடி வந்தயாம் ண்டு கேள்வி . . .’

நிப்பாட்றா கொறுக்காப்புளி! பேக்கத கதையாம! புலி - என்ன மையிரப் புடுங்குற . . . நா என்ன கொல செஞ்சயா கொள்ளடியச்சயா . . . ல்ல புலிய காட்டிக் குடுத்தயா . .?’

நீ காசிக்கிப் பீயயும் தும்பாய் . . . மோனிக்கார நாய . .!’

ஏ . . . நீ? தெறமா? ரெண்டுசதத்துக்கு வளில்லாம கொறுக்காப்புளியக் களவெடுத்த வங்கிசம் ல்லா . .?”

பொத்துரா வாய நாய! இடிப்பன் பல்லுப் பறக்கச் செல்லி . . . உன்ன நாந்தான் புலிட்ட காட்டிக் குடுப்பன் . . . பாரு!’

கி . . . க்ஹ்ஹ§முக்கீ . . . டேய் பீக்கொறுக்கா . .! அந்தப் புலிக்கும் பயமில்ல . . . ந்தக் கொறுக்காப்புளிக்கும் பயமில்ல . . .

ந்த சப்புச் சுல்தான் இதுக்கெல்லாம் பயப்புட்டா வேலயில்ல . . . இதப்பாரு!’

திடீரெனச் சப்புச் சுல்தான் தன் பக்கட்டுக்குள்ளிருந்த கடிதத்தை உருவி விரித்து முத்துமுகம்மதின் கண்ணெதிரே பிடித்தான். அதிர்ந்து போனான் முத்துமுகம்மது. அது . .? புலிகளின் அதே . . . கடிதம் . .! எப்படி . .? இவனிடம் . .?

இது என்ட ‘மோபைக்’கில செருகியிருந்திச்சி. இதுக்கெல்லாம் பயப்புட்டு ஓர்றவன் இந்தச் சப்புச் சுல்தான்

ல்லடா . . . கொளும்புல ‘அண்டகிரவுண்ட்டு’ல யிரிந்து பெரமதாசாட ‘கொளக்கொட்டி’ வரைக்கும் இந்தச் சப்புச் சுல்தானட கய்யில இரிக்கி . . . இதயும் பாருடா கள்ளக்கொறுக்காப் புளியா . . . என்னயும் ஒரமா நொட்டினயெண்டால் . .? . .!’

சட்டெனச் சப்புல்சுல்தான் தன் இடுப்புப் பக்கத்துச் சேர்ட்டை விலக்கிக் காட்ட உலோக மினுமினுப்பாகப் பிஸ்டல் துப்பாக்கி ஒன்று இடுப்புப்பட்டிக்குள்ளாக அங்கு சொருகப்பட்டிருந்தது. முத்துமுகம்மது முதற்தடவையாக அச்சத்துடன் சுல்தானைப் பார்த்தான். சப்புச் சுல்தான் சிரித்தபடியே -

வெரட்டா இளஞர் அணித் தலவர்ர்ர்...? நாரைய தக்பீர் . .? க்ஹிக்கீ . . . ய்!’

‘...’

அநாவசியமாய் மூன்றுதரம் உறுமி உறுமிப் பறந்தது மோபைக்.

 

 

 

 

5

 

முத்தும்மதோவ்! அவன் நொக்கிட்ட என்ன காட்டின?’

வேலியோரம் மாமியின் குரல் கேட்டது. உள்ளே வந்தான். மைமுனா இப்போது வாசலைப் பெருக்கிக் கொண்டிருந்தாள்.

சப்பன் . . . பொல்லதவன் மாமி! ஒனக்கு வெசயம் தெரியா . . . ஆய்தமெல்லாம் வெச்சிரிக்கான் . . .’

ஏன் தெரியாம? செல நேரம் ஒதவியும் செய்வான்தான்’

அவண்ட ஒதவி ஆவத்துலான் கொண்டுடும். அவன நம்பிக் கெட்ட ஆக்கள் பலபேரு! ஆராரு மாமி கொளும்புக்குப்போற?’

ல்லல்ல” நீ, நான், மைம்னா எல்லாருந்தான் போற . . . ஒன்டாத்தான் லொச்சில நிக்கிற. “பௌட்” டுல ஏத்த மட்டும் கூட இரிக்கிற நாம . . . வெரப் போறியா நீயிம் . .?!”

அப்ப அவன் . .?”

அவன் வேறயா நேரத்தோடப் போய்ருவான். நாம பிந்திப்போற . .! பெரச்சினல்ல . . . நீ கொழும்பு போயிரிக்காயா மின்னப் பின்ன . .?”

‘. . .’ ஒருநாளும் கொழும்பு போயிராமையினால் மௌனித்தான்.

ஆரு நெனச்ச இத . .? எல்லாந் தல நசீவு. என்னப்பண்ணின ஒங்க மாமாக்காரன் கொம்புளப்பிள்ளயாந£லத் தந்திட்டுப் போனவன் போனவன்தான். ஆள் எங்கண்டும் தெரியா. டியே . . . மைம்னா! முத்துமச்சானுக்குத் தேயில போட்டுக் குடு. ஈனக்கிப் போய் வாரன்!”

மாமி கடைக்குப் புறப்பட்டுப் போனாள். முத்துமுகம்மது மைமுனாவை நேராகப் பார்த்தான். அந்திக் கருக்கலில் முகம் செவ்வரி படர்ந்திருந்தது. சாயம்போட்ட பன் குருத்துப்போலிருந்தாள். வட்டமாகப் படபடக்கும் விழிகளும் கூர் மூக்கும் நம்மையே நம்பி நமக்காகவே வாழ்கிற பதினேழு வயது கிராமத்து இரகசியம்! இவளா . . . வெளிநாட்டுக்கா . . . முத்துமுகம்மது நெஞ்சு வெம்பி கீழே உட்கார்ந்தான்.

கண்களில் நீர் முட்டியது.

ன்னாங்க மச்சான்! தேத்தன்னி!!”

மைமுனா தேனீர் கிளாசை நீட்டினாள்.

மைம்னா! நீ சம்மதிச்சிட்டியா இதுக்கெல்லாம்?”

நான் என்ன மச்சான் செய்ற, எல்லாம் ம்மாக் கௌவி படுத்தற பாடு, என்ட கைல ஒண்டும் ல்ல . . . நான் போகச் சம்மதிக்காட்டி நஞ்சி குடிப்பாளாம். எல்லாத்தையும் என்னப்ப£ரமெடுக்கட்டாம் . . .” கண்ணீர் வடியப் புன்னகை செய்தாள் மைமுனா.

அப்ப என்ட கெதி என்ன . . . நா . . . ஒன்னத்தானே வேளவு நாளும் . . .”

முத்துமுகம்மது வார்த்தை முட்டித் திடீரெனக் கண்கள் கலங்கி நீர்துளி எட்டிப்பார்த்தது. பேச முடியவில்லை.

“... ம்... மை... ம்... னா..!”

மைமுனா சற்றும் எதிர்பாராத ஒரு காரியம் செய்தாள். திடீரென முத்துமுகம்மதை நெருங்கி ஒரு செக்கன் அவனைக் கட்டிப்பிடித்தாள். அவனது மற மற கன்னத்தில் பற்கள் பதியும் வண்ணம் இறுக்கமாக ஒரு சத்த முத்தம் கொடுத்துச் சட்டென்று விலகி, அவனது கையில் தனது (கடவுச் சீட்டுக்காக எடுத்திருந்த) ஒரு மார்பளவுப் புகைப்படத்தைத் திணித்தாள்.

நான் ‘கொவைத்’ துலயிரிந்து வெரு மட்டும் என்ட நெனப்பாத்தான் மச்சான் இரிக்கனும் நீங்க! அதுக்குத்தான் இது!”

மைமுனா விரைந்து குடிலுக்குள் நுழைந்துவிட்டாள். விறைத்து வெலவெலத்துப்போன முத்துமுகம்மது நெடுநேரமாக அசையவில்லை. ஆனால், சடுதியாகத் தாடி மாஸ்டரின் குரல் பலமாகக் கூப்பிட்டது கேட்டது.

டேய் முத்தம்மதோவ் . . . முத்துவம்மதோவ்!”

திடுக்கிட்ட முத்துமுகம்மது தாடி மாஸ்டரிடம் ஓடினான்.

டேய் முத்தும்மது உன்னத் தேடி ஊட்ட போனன்.நீ          ஞ்சரிக்காய் . .! என்ன ‘லவ்’ வா? டேய், தலைவர் உன்ன டெலிபோன்ல கதைக்கட்டாலீம் . . . செய்லான் ஹாஜியார் ஊட்ட! வாடா கெதியா. பேயா . . . கெதியா வாடா! ஏறு... ஏர்றா... இதுல... ”

தாடி மாஸ்டரின் மோட்டர் சைக்கிளில் முத்துமுகம்மது முதல் தடவையாகப் பின்னால் அமர்ந்து சாறனும் சேர்ட்டும் காற்றில் பறக்க தாடி மாஸ்டரின் தோள்பட்டை நாற்றத்துடன் செய்லான் ஹாஜியார் வீடு வந்தான்.

செய்லான் ஹாஜியார் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்.

 

“. . . ஆக்கள் கூட்டிவெர மினி வஸி ‘புக்’ பண்ணிருக்குச் சேர், நோட்டிசு போஸ்டரு எல்லாம் அடிக்கக் குடுத்துட்டன். என்ன... ஓ... ஓம்... சேர்... செய்றன்... செரி சேர்...

ஆரு... எளஞர் அணித் தலவரா..? ம்... ஙாக்...வந்துட்டான் சேர் . . . செரி செரி கதைக்கச் செல்றன் . . .

டேய், முத்தூ, இன்னாடா தலைவரு கதைக்கட்டாம் . . .

புடி கத... மத்தப்பக்கம் புடிரா... ஙாக்... ப்பிடி...

செரி . . . ப்ப கத . . . கதயண்டா . . . அலோ ண்டு செல்றா பேயா!”

முத்துமுகம்மது     தாங்கொணா        வியப்புடன் தொலைபேசியைக்  காதில்  வைத்ததுமே  தலைவரின்கம்பீரமான குரல் கேட்டது.

தம்பி, முத்துமுஹம்மத்! நீங்க தந்த லெட்டர பார்த்தன். நான் உங்களோட கதைக்கணும். அடுத்த கெழம கொழும்புல நடக்க இருக்கிற கட்சிப் பொதுக்கூட்டத்துக்குக் கட்டாயம் வ            £ங்க . . . செய்லான் ஹாஜியாருடன் வரலாம் . . . சரி போனை ஹாஜியாரிடம் கொடுங்க!’

சரியென்று  சொல்லக்கூடத்     தோன்றாதவனாக

முத்துமுகம்மது தொலைபேசியைச் செய்லான் ஹாஜியாரிடம் கொடுத்தான். அவர் அதனை வாங்கித் தன் சால்வையினால் ஆசூயையுடன் ஒரு தரம் துடைத்துவிட்டு -

ஙா . . . அலோவ்! செரி சேர்! ஓம் சேர்! செரி சேர்!’ என்றார். வைத்துவிட்டார். முத்துமுகம்மதிடம் திரும்பினார்.

டே கொறுக்கா! என்னடா சென்ன தலவரு? ஒன்னோடயெல்லாம் கதைக்கிறளவுக்கு என்ன கதடா அது? செல்லண்டா!’

ஒண்டுமில்ல ஹாக்கா! கூட்டத்துக்குக் கொளும்புக்கு வெரச்சென்னாஹ!’

அட! அவ்வளவு பெரியாளா நீ? தலைவரு டெலிபோனுல கூப்பிர்ரளவுக்கு . . . வேறென்டா சென்ன? நீ ஒண்டும் கதைக்கல்ல . . . வாயில முட்டடப்பனா?”

வேறொண்டும் செல்லல்ல ஹாக்கா! கூட்டத்துக்குத்தான் ஒங்களோட வெரச்சென்ன . . .’

தாடி மாஸ்டர் இடையில் புகுந்து -

மையத்து ஊட்டுல வெச்சி இவன் என்னயோ ஓடிப் போய் தலவருட்ட குடுத்தல்லோ ? என்னடா பிச்சச் சம்பளக் காசி கேட்டுக் கடிதமா . .? அதுக்குத்தானா? . . . ல்ல பள்ளிமுனை இளைஞர் அணி தலைவர் ண்டு . .?’

ல்ல மாஸ்டர் . .! கூட்டத்துக்குத்தான் . . .’

ம் செரி, தலைவருக்கும் செல நேரம் . . . தலை வேல செய்றல்ல. எங்கயோ கெடக்குற கொறுக்காப் புளியன்ட பேரனையெல்லாம் டெலிபோனுல கூப்பிர்ரதும் . . .எளஞருக்குத் தலைவராக்குறதும் . . . வேன்லாம் பெரியாளா? வேனுக்கு என்ன தெரியிம்? டேய், கொறுக்கா! நொக்கு என்னயும் தெரியுமாடா? எலக்கிசன் நடத்தத் தெரியிமாடா . .? நொம்ஜீநேசன், பெலப்பாளி, அர்த்தால், இதெல்லாம் என்னண்டு தெரியுமாடா . . . அவள் அப்பக்காரிர மகள ‘லைன்’ அடிக்க மட்டுந்தான் தெரியும் . . . க்ஹி . . . ஹி . . .’ சிரித்தார் செய்லான் ஹாஜியார்.

‘. . . . . .’ முத்துமுகம்மதுக்கு அவமானமாயிருந்தது.

இன்னமும் ன்னா காலுக்க இரிக்கிற கல்லுமுனைக்கிப் போகத் தெரியா பேக்கயன் கொளும்புக்குப் பொதுக்கூட்டத்துக்கு எப்பிடிப் போற . . . டேய், எப்பிர்றா கொளும்பு போற . . . கொளும்பு ஞ்சாலயா? ல்ல அங்காலயா?

கொளும்பு என்ன கலர் ண்டு செல்றா பாப்பம் முத்தும்மது?’

‘... ..!’

செய்லான் ஹாஜியாரும் தாடி மாஸ்டரும் சிரித்தனர்.

அப்ப . .? தெரியாட்டி எப்பிர்றா போவாய் கொளும்புக்கு?’

ஒங்களோடத்தான் வெரச் சென்னாஹ ஹாக்கா!’

என்னோடயா? நீயா? செரி . . . பாப்பம்!”

கொளும்புக்குப் போற வளியில இடையில “தாட்ட பங்குல” எறக்கி உட்டாச் செரி!’

க்ங்க்கிகிகங் . . . ’ இருவரும் சிரித்தனர்..

‘. . .’ முத்துமுகம்மதுக்குள் அவமானம் பிடுங்கியது.

செரி நீ வெத்துலக்காரன் தோட்டத்தக்குப் போய் எம்பது தேங்கா ஆஞ்சிப் போட்ரிக்கி . . . ஒரு கரத்தயப் புடிச்சிற்றுப் போய் ஏத்திட்டு வா . . . செரியா . . . ?’ போ முத்தும்மது.’

செய்லான் ஹாஜியார் கட்டளையிட்டதும் முத்துமுகம்மது அவரது தோட்டத்துக்குப் போய் அந்த வேலையெல்லாம் முடித்துவிட்டு, நடந்து வீடு வந்து சேர்ந்தான். வெறுந்தரையில் விழுந்து படுத்தான். சுல்தானின் பிஸ்டலும் மைமுனாவின் முத்தமும் தலைவரின் டெலிபோன் உரையாடலும் ஹாஜியாரின் நக்கலும் நினைவுகளில் அழுந்தி நிம்மதி இழக்க வைத்தன.

 

அடுத்த வாரமே கொழும்பு ‘வேலை வாய்ப்பு ஏஜென்ஸி’ யிடமிருந்து மைமுனாவுக்குத் தந்தி வந்து விட்டது.

திலிமிநிபிஜி சிளிழிதிமிஸிவிணிஞி ளிழி 10ஜிபி  சிளிவிணி மிவிவிணிஞிமிகிஜிலிசீ’

 

கொழும்பிலிருந்து சப்புச் சுல்தானும் இங்கே பள்ளிமுனைப் போஸ்ட்மாஸ்டருக்கு மைமுனாவைப் புறப்பட்டு வரும்படி பேசியிருந்தான்.

அடுத்தநாளே கொழும்பு போக ஏற்பாடாகி, (வேறு வழியின்றி) முத்துமுகம்மது, மைமுனா, மாமி, யாசின்ஆகியோர் ‘மையோன் மினி பஸ்’ ஸில் ஏறினர். வாழ்க்கையில் ஒரு நாளும் கண்டேயிராத சொர்க்கமான கொழும்புக  £ணும் பேராவலும் செய்லான் ஹாஜியாரின் தயவு தேவைப்படாத பயண ஏற்பாடும் முத்துமுகம்மதை மகிழ்வித்தாலும் மைமுனாவைப் பிரியும் மகாகவலை போட்டுக் குடைந்து கொண்டிருந்தது.

ஒரு நாளுமில்லாத பதினெட்டு மணி நேர வாகனப் பயணம்! வழியெங்கும் பயத்துடன் தொல்லை தரும் இராணுவ, பொலிஸ் காவலரண்கள் . . . முகாம்கள் . . .ஏறி இறங்கல்கள் . . . பொதிக் குடைதல்கள். எவ்விடத்தில் குண்டு வெடிக்குமோ? கன்னிவெடியில் பஸ் உயரக்கிளம்பி வெடிக்குமோ . .? பிரமாண்ட புத்தர் சிலைகள், தனிச்சிங்கள எழுத்துக்கள், விஷேட அதிரடிப் படைப்பெண்கள் மைமுனாவுடன் புன்னகைத்தனர். “நம மொகத்த . . . கம கொஹேத . .? கொஹாட்டத யன்ன . .? (என்ன பேரு . . .எங்க ஊரு . .? எங்கு போக?) புரியாத சிங்களம். தமிழில் கொன்னிக்கொன்னிப் பதில்கள் . . . ஆளடையாள அட்டைகள் . . . பதிவுகள் . . . கெடுபிடிகள்.

பஸ்ஸினுள் எந்நேரமும் நாகூர் ஹனிபா ‘பெரியார் பிலாலின் தியாக வாழ்வைக் கூறுவேனிதோ . . .’ என்று அடிக்கடிக் கூறினார். இடையிடையே ‘அரச்ச சந்தனம் . . . மணக்கும் குங்குமம் . . .’ தொடர்ந்து நண்பகல் செய்திகள்.

“ . . . ஙீ . . . ய்ய்யக்க்க . . . இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் . . . வர்த்தக சேவை . . . மீண்டும் தலைப்புச் செய்திகள் . . . இன்று கொழும்பு புஞ்சிபொரல்லைச் சந்தியில் நிகழ்ந்த புலிப்பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் கொலன்னாவ பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி வெளிவிவகார அமைச்சருமான கௌரவ தினேரா எக்கநாயக்க கொல்லப்பட்டார். இவருடன் பாதுகாப்பு அதிகாரிகள் இருவரும் . . . மற்றும் . . .”

வாகன ஓட்டத்தில் திகிலான மணித் துளிகள் கழிய . . . மஹ ஓயாவில் யாசினுக்கும் மைமுனாவுக்கும் உப்புத் தண்ணீர் தெளித்த உடனவித்த சோளகம் . . . நவமெதகமவின் பதினெட்டு மலை வளைவுகள். இருநூறடி நீண்டுயர்ந்திருக்கும் பெனர, மலைமூங்கில் . . . பாலை . . .

மரங்கள் அடுத்த அரை மைல் வளைவில் இரண்டடிப் புற்களாகக் காட்சியளிக்கும் அபாய அதிசயம். அதற்குத் துணையாகும் அதல பாதாளம். குளோரீன் தேநீர், மலைவாழைப்பழம், ¨ன்னஸ்கிரிய நீர் வீழ்ச்சி . . . (பாருஹாலாத்தோவ்! ம்மா££டீ . . . பாருங்க முத்து மச்சானோவ்!!) அதல கீழே பாதாள மரவட்டை ரயில் . . . இலங்கையின் அதியுயர் மலைஉச்சியின் பக்கலில் பயணிக்கையில் காதுகளில் ‘டப் ப்ப்ப்ப் . . .’

மாமிக்குக் கடுகண்ணாவையில் மலைவெற்றிலை, கத்தி விரையும் அதிரடி அம்பியுலன்ஜ் வண்டிகள் . . . இரண்டாவது தலை நகரத்தையும் விட்டுவைக்காத போர், இலங்கையின் கேரளாவான கஜூகம . . . முந்திரிக் கொட்டைகளுடன் சலுசல சீத்தைப் பாவாடை சட்டைகளுடன் மார்புக் கத்திட்ட சிங்களக் குமரிகள், அழகிய புன்னகைகள், அடிக்கடி

£தலும் கண்ணீருமான மைமுனாவின் பார்வைகள், அருகிலேயே கொஞ்சதூரம் கூடவே ஓடிவந்த புகைவண்டி, உயரக் கட்டிடங்கள், மனிதர்கள், வாகனங்கள், நெரிசல்கள், கட்சிக் கொடிகள், மகா அலுப்பாக 320 கிலோ மீற்றர்கள் . . .

எங்கும் வர்ணவிளக்குகள் பளீரிட்டு மினுமினுங்க கொழும்பின் ஆரம்பங்கள் பிரமிப்புடன் தென்பட . . .

இலங்கைத் தலைநகரம் - கொழும்பு தங்களை வரவேற்கிறது!’

6

கொழும்பு தங்களை வரவே . . .’ற்பதற்கிடையில் கடந்து புகுந்து வாகன நெரிசலில் மூச்சுத்திணறி மருதானை ‘யூக்கே லொட்ஜ்’ வாசலில் பஸ் நின்றதுமே - அதிரடிப் படையினரின் வாகனத்தைத் தாண்டி வாயிற் கதவருகிலேயே . . . அட, சப்புச் சுல்தான்!

அடிடாஸ்’ காற்சட்டையும் ‘ரீ சேர்ட்டு’ம், தொப்பியுமணிந்து கொழும்புவாசி போல நின்றிருந்தான். சிரித்தான்!

வாங்க . . . மாமி! மைமுனா . . . வந்துட்டிங்களா . . .

எப்பிடி ‘ரவல்? . . . வளில பெரச்சினயா . .?’

“. . . ம்மா . . . டீய் . . . இடுப்புர பாடு பெய்த்துரா மனே . . . வார வளில ஒண்டுமில்ல.. ஞ்ச எங்கயாம் குண்டு வெடிச்ச . .? ‘லேடியவுல’ சென்ன . .?”

குண்டு வெடிக்கல்ல . . . ‘பொரின் டிப்டி மினிஷ்ட’ர சுட்டஹா மாமி . . . அட! வா . . . தலைவரு . .? நீயும் வந்துட்டியா . . . எக்கா மாமி, வேன் முத்தும்மத ஏங்கா கூட்டிட்டு வந்த . . . சும்மா தேவல்லாம . . .”

அவன் கொழும்பும் யாப்போட்டும் பாக்கணுமாம்”

ல்லல்ல . . . நான் தலைவரச் சந்திக்கத்தான் வந்த!”

தலவரச் சந்திக்கிற . .? எடம் தெரியிமா ஒனக்கு . .? செரி . . . செரி வாங்க . . . மொதல்ல ஒரு டீ அடிச்சிட்டு ‘லொச்சி’க்கி போவம் . . . இவனக் கூட்டிவந்திரிக்கத் தேவல்ல . . .’

பிரமிப்புடன் பின்தொடர்ந்தனர். சப்புச் சுல்தான் மைமுனாவின் பெரிய பெட்டியை வாங்கிக் கொண்டான். முத்துமுகம்மது வெறுப்புடன் அதை அனுமதித்துச் சப்புச் சுல்தானின் ஆடைக்கோலத்தைப் பொறாமையுடன் கண்காணித்தான். தன் பழைய ஒரேயரு லோங்ஸையும், பச்சைச் சேர்ட்டையும் கிராமிய எண்ணெய்த் தலையையும் எண்ணிப் பார்த்துப் பச்சதாபமாய் நடந்தான்.

கமகமவென்ற சாம்பிராணிப் புகையினூடே இட்லியும் சாம்பாரும் ‘விநாயகர் கபே’யில் மலிவாக முடித்துவிட்டு ‘லொட்ஜூ’க்குத் திரும்பினர். சப்புச் சுல்தான் மாமியிடமும் மைமுனாவிடமும் கொழும்புத் தமிழில் உரையாடி வந்தான். முத்துமுகம்மது வாய்திறக்கவில்லை. ஒன்றும் பிடிக்கவுமில்லை. மைமுனாவைச் சப்புச் சுல்தான் நடக்கும்போதே உரசுவதாகவும்பட்டது.

யூக்கே லொட்ஜின் மேல்மாடியில் சப்புச் சுல்தான் அறை எடுத்திருந்தான். 8ம் 9ம் எண் அறைகள். எட்டில் மைமுனாவும், மாமியும் யாசினும் ஒன்பதில் சப்புச் சுல்தானுடன் முத்துமுகம்மதும் தங்குவதாகத் தீர்மானமாயிற்று.

குளோரின் நீரில் குளித்து உடைமாற்றி பார்சல் எடுத்துத் சாப்பிட்டனர். எல்லாம் சப்புச் சுல்தானின் செலவுதான். சிங்களக் கூலிப் பையன்கள் அவனை ‘மஹத்தயா, மஹத்தயா’ என்று அழைத்த போதெல்லாம் முத்துமுகம்மதுக்குக் கோபமாயிருந்தது. பின் பொக்கட்டிலிருந்து சுல்தான் அவ்வப்போது ‘மணி போர்சை’ எடுத்து ‘விர் . . . விர்ஷ்ர்’ரென்று ரூபாய் நோட்டுக்களாகப் புழங்கியது பொறாமையாக இருந்தது.

மாமி, மைமுனா, கவனமாகக் கேளுங்க! நாளைக்குப் பத்து மணிக்குப் ‘பெட்டா’க்குப் போய் மைமுனாக்கு ‘மெடிக்கல்’ முடிக்கணும். ஒடன ‘ஏஜென்ஸி’ய சந்திக்கணும். ‘இன்சுரன்ஸி’க்கிக் காசி கட்டணும். ‘பேங்கு’ல ‘எக்கௌண்டு’ தொறக்கணும். வேல தலக்கி மேல இரிக்கி. அங்க ஞ்ச வஸ்ஸில ஓடித்திரியயேலா . . . நெனச்ச எடத்துல குண்டு வெடிக்குது . . . ஒரு ‘ஆட்டா’வ வாடகைக்கி எடுப்பம். காசி கொண்டாந்தையா மாமி?”

ரெண்டாயிரம் ரூவா இரிக்கியாப்பா!” என்றாள் மாமி. “செரி, ஆயிரத்தக் கொண்டா! அங்க ஞ்ச ‘டக்குடக்குண்டு’ செலவு வெரும். செரி பாப்பம். மறுகா, இது கொளும்பு . . .

        . .! ‘ஆட்டா’வுல மூணு பேருக்கு மேல ஏத்தமாட்டான். நானும் மாமியும் மைம்னாவும் போவம். வேஹ முத்தும்மது வெரத்தேவயில்ல. யாசினுக்குக் காவலா ஞ்ச ரூமுல இரிக்கட்டும்.”

ல்ல, முத்து மச்சானும் வெரட்டும்’ உடன் குறுக்கிட்டாள் மைமுனா.

அப்படியெண்டா ரெண்டு ‘ஆட்டா’ வேணும். செலவு கூட!’

ஒரு ஆட்டா காணும். சும்மார்ரி மைம்னா! முத்தும்மதும் யாசினும் ஞ்ச இருக்கட்டும். நான் பெத்த தாய் இருக்கன்தானே ஒன்னோட! மறுஹா என்னடி . . . சும்மார்ரி!

செரி படுங்க எல்லாம் நாளக்கிப் பாப்பம்! தலவரு, வா!” என்று கூப்பிட்டுச் சப்புச் சுல்தான் எழுந்தான்.

மைமுனாவையும் யாசீனையும் உள்ளிட்டு மாமி கதவை மூடினாள். சப்புச் சுல்தான் முத்துமுகம்மதுடன் ஒன்பதாம் இலக்க அறைக்குள் வந்தான். ‘லைற்’றை எரிய விட்டான். இரண்டே கட்டில்கள், தாறுமாறாய் ஆடைகள், மரத் தடுப்புப் பலகை, அதில் பெண்களின் சேலைகளும், உள்ளாடைகளும். சுல்தானின் நிரந்தர வாடகை அறை! கொழும்பு வாசஸ்தலம். மரத்தடுப்பு அலுமாரியின் முதுகில். அதிசயமாக, இஸ்லாமியக்கட்சித் தலைவரின் மார்பளவு பெரிய படம் மேலே ழுருசு ளிஹிஸி லிணிகிஞிணிஸி. கீழே, ‘அஞ்சியும் வாழோம் . . . கெஞ்சியும் வாழோம் . . .’

தலவரு! நீ அந்தக்கட்டில்ல படு! நீ வந்திரிக்கவே தேவல்ல . . .” சுல்தான் உடை மாற்றினான்.

ஏன் தலவர்ர படம் ஒட்டிரிக்காய்! ஆர ஏமாத்த இது?” கொழும்புக்கு வந்ததிலிருந்து இப்போதுதான் முத்துமுகம்மது வாய் திறந்தான். சப்புச் சுல்தான் சிரித்தான்.

“‘ததவரு! ஒதக்கு ஒங்கத பத்திமொதய உத்தா வேத ஒதகமும் தெரியா. கொளும்பானயும் பத்தி தெரியா. கவனமா இரிந்துக்க . . . நீ என்னத்துக்குத்தான் வந்தியோ . .! இதா? இது ஒங்கட தலவர்ர படம். சும்மா ஒட்டியிருக்கன். கொளும்புல நான் இஸிலாங்கட்சிதான்! படத்த கௌப்பி மத்தப்பக்கம் பாரு . . . பெரமதாஸாட படம் . . . ஒனக்கு அரசியல் வெளங்காடி லூலி . . .”

“‘ரோசமத்த ஒனக்கு . . . எல்லாச் சூனாவும் . . . ஒண்டுதான் . . .’ என்றதும், திடீரென்று ஆத்திரமுற்ற சப்புச் சுல்தான் சட்டென்று முத்துமுகம்மதின் சட்டையைப் பிடித்து இழுத்து நெஞ்சில் இடித்துக் கட்டிலில் தள்ளிவிட்டான். அடுத்த கணம், தன் உள்ளாடைக்குள்ளிருந்து சட்டென்று பிஸ்டலை உருவி எடுத்து, முத்துமுகம்மதை நோக்கி நீட்டினான். முத்துமுகம்மது வெலவெலத்துப் போனான். சப்புச் சுல்தானின் முகம் கோரமாக இருந்தது.

கொறுக்காப் பேயா! என்ட ‘பேசனல்’ வெசயங்கள்ள தலையிடாத, செல்லிட்டன்! வெளங்குதா? கொளும்புக் காடயன் முளுக்க என்ட பொக்கட்டுக்குள்ள . . . லெக்குத் தெரியாம வாலாட்டினா பள்ளிமனைக்கி ஒண்ட மய்யத்துத்தான் போகும் . . . ஒளுக்கமாகப் படு!’

முத்துமுகம்மது பயந்து வாயடைத்துப் போனான். சிறிது நேரம் மிக மௌனமாகக் கடந்தது. சப்புச் சுல்தான் அமைதியாகத் திரும்பி, பிஸ்டலை இரும்பு அலமாரிக்குள் வைத்துப் பூட்டினான். பின்னர், ஒன்றுமே நடக்கவில்லை என்பதுபோல், திரும்பி நின்று உடை மாற்றிக்கொண்டே, புன்னகைத்தான். பின் -

முத்துமுகம்மது . .! ந்தா ஒரு ‘சிகரட்’டுப் பிடி!” என்று ஒரு சிகரெட்டை எறிந்தான்.

வேணா!”

புடிஹா சிக்கிலட்டக் குடிஹா . . . தலவரு! என்ன கோவிச்சிட்டியா? இதப்பாரு! கொளும்புல இருக்குமட்டும் பெரச்சினப்படாத! வாய மூடிட்டு இரிந்தி எண்டால், ஒன்ன ஒங்கட தலவர்ர ஊட்ட கொண்டுபோய் விடுவன் . . .’

முத்துமுகம்மது ஒருகணம் சகலமும் மறந்து பிரகாசமானான்.

சத்தியமாக் கூட்டிட்டுப்போவியா? ‘பாளிமந்து’லதான் தலவரு இரிப்பாக! என்னை வந்து சந்திக்கச் செல்லியிரிக்காக!’

பாலிமந்தும் காட்டுவன் . . . தலவரு எங்க இருந்தாலும் கூட்டிப்போவன். அதுக்கு வாய் ஒளுக்கம் . .! எடையில கொளப்பினா . . .’

கொளப்பமாட்டன்! ஆனா மைம்னாட்ட என்ன ண்டான சேட்ட உட்டியண்டால் . . . கொளும்புண்டும் பாக்க மாட்டன் . . . உன்ட களுத்த முறிப்பன்’

முடவண்ட கதயக் கேட்டுட்டு ஒளறாம படு!’

சப்புச் சுல்தான் விளக்கை அணைத்துக் கட்டிலில் விழுந்தான். சிகரெட் புகைத்தான். அறையின் இருளில் சப்புச் சுல்தானின் சிகரெட் நெருப்பு வாய்க்குப் போவதும் வருவதுமாகச் சின்னச் சிவப்பு விளக்காக ஒளிர்ந்தது. அறையின் அலங்கோலமும் குளியலறை நெடியும் . . . நுளம்புகளுமாக வெகுநேரம் முத்துமுகம்மதுக்கு நித்திரைஇல்லை. பக்கத்தறையில் மைமுனாவின் பிளாஸ்டிக் வளையல் கிணுகிணுத்த ஒலி கேட்டது. யாசினின் குறட்டைக் கேட்டது. வெளியே சிங்களம் கேட்டது. வீதியில் நீளமாக ஒலியிட்டு அம்பியுலன்ஸ் வண்டி விரைந்தது. மறுபக்கத்து அறையில் பெண் ஒருத்தியின் சிணுங்கல் கேட்டது. சிங்களச் சிரிப்புக் கேட்டது. கொழும்புத் தமிழ் கேட்டது. என்னென்ன பாவங்களோ, யார் யாரோ, வெளிநாட்டுக்குப் போகிறவர்கள், போய் வந்தவர்கள், விமானத்தில், திடீர் நண்பர்கள் ஆனவர்கள், பக்கத்தறையில் மைமுனா. பக்கத்துக் கட்டிலில் சப்புச் சுல்தான். எப்படி நித்திரை வர . .?

£லையில் மெத்தைக்கட்டிலின் உறுத்தலில், ‘இது கொழும்பு’ என்ற திடீர் நினைப்பில் எழுந்தான் முத்துமுகம்மது. அறைக் கதவு திறந்திருந்தது. உள்ளே சூரிய ஒளி. சப்புச் சுல்தானைக் காணவில்லை. ஆனால் மைமுனாவின் அறையில் அவனது குரல் கேட்டது. வாரிக் கொண்டெழுந்த முத்துமுகம்மது விரைவாகப் பக்கத்து அறைக்குள் நுழைந்தான். மைமுனாவும் மாமியும் கட்டிலில் இருந்தனர். மற்றக் கட்டிலில் சுல்தான் இருந்தான். பக்கத்த ய£சின் உறங்கிக்கொண்டிருந்தான்.

வா, எழும்பிட்டியா முத்துமுகம்மது . . . ந்தா தேயில . . . குடி! ஒரு சாதியா மணக்குது ‘கொளறின்’ தேயில. டே யாசின் எழும்பண்டா!’

மாமி ‘சொப்பிங்பேக்’ கிலிருந்து தகரக் குவளையில் நீட்டினாள்.

அப்ப செரி மாமி, மைமுனா, ரெண்டு பேரும் குளிச்சிட்டு ரெடியாகுங்க! நான் ‘ஏசென்ஸி’க்குக் ‘கோள்’அடிச்சிட்டு வாறன்’ என்ற சப்புச் சுல்தான் முத்துமுகம்மதைப் பார்த்து ஏளனமாகச் சிரித்துவிட்டு வெளியே நடந்தான். மைமுனா இனம்புரியாத பயத்துடன் மூக்கை உறுஞ்சினாள். மாமியின் வயோதிப முகத்திலும் கவலையின் ரேகைகள் தெரிந்தன. முத்துமுகம்மது மனது கனத்துப்போய் தரையில் சப்பாணியிட்டு உட்கார்ந்தான். மைமுனாவைப் பார்த்தான். பொத்தி வைத்த திரவியம் பறக்கப் போகிறது. பிரிவு நெருங்குகிறது. தொண்டை அடைத்தது.

மைம்னா, பொறப்புடுஹா . . . புள்ளே! போகனும்’ மாமி கட்டளையிட்டதும் மைமுனா ஒன்றும் பேசாமல்மாற்றுச் சேலையுடன் குளியலறைக்குள் நடந்தாள். மாமியும் மௌனமாக இருந்தாள். அதிகாலையிலேயே எல்லோர்மீதும் கோபம் வந்தது. குழாய் நீர்ச்சத்தம் நின்றவுடன் மைமுனா உடைமாற்றி வெளியே வந்ததும் மாமி உள்ளே போனாள். வெளியே வந்த மைமுனா முத்துமுகம்மதின் கோபம் கனன்றிருந்த கண்களைப் பார்த்தாள். பயமும், பச்சதாபமும் பொங்கி எழுந்தன. முத்துமுகம்மதின் கண்களைச் சந்திக்க தைரியமில்லாமல் மைமுனா யாசினைப் பார்த்தாள். ஆச்சரியப்படுமாறு, தன்னை வெகுவாகச் சுதாகரித்துக் கொண்ட மைமுனா மெதுவாகக் கேட்டாள்.

முத்துமச்சான் ன்னம் தேத்தண்ணிய குடிக்கல்லியா?’

திடீரென மைமுனாவின் குரல் கேட்டதும் திடுக்கிட்ட முத்துமுகம்மது குளிர் தேநீரை விழுங்கினான். அவளை நேராகப் பார்த்தான். குளித்து முடித்த ஈரக் கூந்தல். புதுச் சேலை. மைமுனாக் கிளியாரே . .! பிரியப் போகிறாள். ஆயிரக்கணக்கான மைல்களுக்கப்பால், இனம் புரியா, மொழி புரியா மனிதர்களிடையே தொலைந்து போகப் போகிறாள். “காஆற்று பட்டாலே கரையாதோ கற்பூர . . . ம் . . .” மனதுக்குள் மலேசியா சோகம் பாடினார் . . .

‘...ம்... ம்மைம்னா...’

முத்துமுகம்மது     சிரமப்பட்டு            வாய்திறந்தான்.நடுங்கியபடியே எழுந்தான். மைமுனாவை நெருங்கினான்.

ம் . .?’

மைமுனா திடீரெனத் தலை திருப்பியதும் அவளது ஈரஞ்சொட்டிய கூந்தல் நீர்த்துளிகள் சிலீரென முத்துமுகம்மதின் மார்பில் சிலீரிட்டுக் குளிர்ந்தன. அந்த விநோதமான சூழ்நிலை மாறுவதற்கிடையில், கதவைத் தட்டாமலேயே, திடீரென அறைவாசலில் உற்பத்தியானான் சப்புச் சுல்தான்.

அட . . . என்ன தலவரு லவ் பண்ணத் தொடங்கிட்டாரா . .? ஹிக்கிக்கீ . . . ய் . . .” மைமுனா சட்டென்று உள்ளறைக்குள் ஓடிவிட்டாள். முத்துமுகம்மது கோபத்துடன் பார்த்தான். சப்புச் சுல்தான் ‘ரீசேர்ட்டும், டெனிம் லோங்கிஸ¨’மாக உயரமாகத் தெரிந்தான். கையில் இடியப்ப பார்சல்கள்.

மாமி எங்க? ந்தாங்க இடியப்பம்! சாப்பிட்டுப் பொறப்படுங்க ‘மெடிக்கலு’க்குப் போவம் . . . முத்தும்மது . . .

ஞ்சரா . . . கருவாட்டப் பூன பாக்கிற மாதிரி . . . மைம்னாவப் பாக்காய் . .? செரி . . . செரி . . . ந்தா . . . திண்டுட்டு அப்பிடி

£சினுக்குப் பக்கத்துல படுத்துக்க. நாங்க பகல் சாப்பாட்டுக்குத் திரும்பிருவம். செரியா . .? மைமுனா . . .

அட புதுப்புடவையா . . . ம் . .? செரி செரி! வடிவாரிக்கி . . .’

முத்துமுகம்மது தீப்பார்வையுடன் சுல்தானை எரித்தான். எச்சரிக்கையான சுல்தான் -

ஙா . . . செரி செரி . . . பின்னேரம் முத்தும்மத தலைவர்ர எடத்துக்குக் கூட்டிப் போவம்’

‘...’

கொளும்புல ‘முஸ்பாத்தியா’ சுத்திப்பார்க்க ஆயிரம் எடம் இரிக்கி. எல்லாம் காட்டுவன் மைம்னாக்கும் மாமிக்கும் . . . ஆனா நேரமிப்ப செரில்ல . . . திடிர்திடிருண்டு சூட்டிங்கேசும் . . . குண்டு வெடிப்புமாரிக்கி . . . ‘மெடிக்கல்’ முடிஞ்சா பாப்பம்! ‘கோள்ப்பீஸி’க்குக் கூட்டிப்போறன் எல்லாரையும் . .?’

அதெல்லாம் வேணா! கொளப்பத்துக்க அங்கஞ்ச போகேலா . . . வந்த வேலயப் பாப்பம்’ என்றாள் மாமி.

செரி, வெளிக்கிடுங்க! ‘பாஸ்போட்டு’, ‘அய்ட்டிங்காட்டு’, ‘ஏஜென்ஸி’ர கடிதம் . . . காசி . . . எல்லாத்தையும் எடுங்க . . .

பிக்பொக்கட்டு’ அடிப்பான் கவனம் . . . எனக்கிட்டக் கொண்டாங்க . . . செரி . . . என்னது . . . மைம்னா? சிரிக்கனும், ஏன் சொத்தய ஒரு சாதியா நீட்டி வெச்சிருக்காய் . . . பயப்புடாத . . . செரி . . . வாங்க!’

மூவரும் புறப்பட்டு வெளியே செல்ல முத்துமுகம்மது உணர்வற்றுக் கூடவே வந்தான். மாடியிலிருந்து இறங்கி வந்தனர். முச்சக்கர வண்டி வாசலிலேயே கிடைத்தது.

கொள்பிற்றி யமுத இளந்தாரியோ? கீயக் . . .’

சுல்தான் சிங்களத்தில் வாதிட்டு, ஏறினான். இவர்களை ஏறச்செய்தான். தற்செயல் நிகழ்வுப்போல பாவித்து மைமுனாவுக்குப் பக்கத்தில் அமர்ந்தான். முத்துமுகம்மதை விஷமமாகப் பார்த்தான். முத்துமுகம்மதின் வயிற்றில் தீ எரிந்தது.

முத்தும்மது! வெறும் மேலோட ரோட்டுல நிக்காத. இது பள்ளிமுன ல்ல கொளும்பு . . . கொளும்பு . . . உள்ள

போ . . . டாட்டா . . . ஹரிஹரி . . . ரைற் . . .. கண்டக்கோ டக்காலா ட்ரைவர் . . .’

ஓட்டோ சீறிப்பறந்தது. வாகனங்களுள் புகுந்து மறைந்தது. முத்துமுகம்மதின் இதயம் பச்சாதாபத்தில் படபடத்தது. மைமுனாவின் அருகிலமர்ந்து போகிறான். நினைப்பே வயிற்றைப் புரட்டியது. காறித் துப்பினான். கண்களில் கண்ணீர் உற்பவிக்கவே ‘சட்’டென அடக்கினான். செய்வதறியாது நின்றான். அவ்விடத்திலேயே குந்திவிட்டான். விம்மல் வெடிக்குமாப் போலிருந்தது.

“...ப்ப... என்ன செய்ற... ஏது செய்ற..?”

ஏய்! கவ்தமெ ஒயா? டேய் உள்ள வாடா! அங்கினிக்குக் குந்திக் கொண்டிருக்காதே . . . ஈது உங்கட ஊருபோல இல்ல தானே . . . ஆமி ரவுண்டப் பன்றான் . . . வாடா . . .’

லொட்ஜ்’ அதிபதியின் கடூரக்குரலில் பயந்துபோய் உள்ளே வந்தான். அறைக்குள் வந்து விழுந்தான். யாசின் இன்னமும் தூங்கிக் கொண்டிருந்தான். இடியப்ப பார்சல்கள் கிடந்தன. கட்டிலில் மைமுனாவின் களையப்பட்ட கறுப்புத்த£வணியும் புள்ளிப் பாவாடையும் கிடந்தன. கொடியேற்றப்பள்ளியில் முத்துமுகம்மது வாங்கிக் கொடுத்தது. மெதுவாக அள்ளினான். முகத்தில் வைத்து அழுத்தினான். மைமுனா கமகமத்தாள். அதுவரை அடக்கி வைத்திருந்த விம்மல் பாரிய அழுகையாய் வெடித்தது. கண்ணீர் திடீரென வழிந்தது.

‘...என்ட... கிளியே... என்டல்லோ...’

அப்படியே சாய்ந்து படுத்தான். வெகுநேரம் அழுதான்.

எப்போது தூக்கம் ஆனான் . .?

0

 

7

 

இது எந்த இடம் . .? திடீரெனச் சப்புச் சுல்தான் மைமுனாவைக் கட்டிப் பிடிக்கின்றான் . . . விடு . . . விடு . . .என்று மைமுனா திமிற . . . யாரோ “குண்டு வெடிச்ச . .! குண்டு வெடிச்ச . . .” என்று கத்திக் கொண்டே ஓடி வர . . .

‘ . . . த்துச்சான் . . . முத்துமச்சான் . . . எழும்புங்க . . .எழும்புங்க . . .’ ‘...’

ம்மாவும் லாத்தாவும் வாறாஹ . . . எழும்புங்க . . .மச்சோவ்!’

என்னடா . .?’

திடுக்கிட்டெழுந்தான் முத்துமுகம்மது. சுயநிலைக்கு மீண்டான். மாடிப்படிகள் தடதடத்தன. மூவரும் வந்துவிட்டார்கள். பகல் இரண்டு மணி இருக்குமா . .?

நெல்லாச்    சொணங்கிட்டு.     மகன் யாசின் . . .எழும்பிட்டியா?’

மூவரும் உள்ளே வந்தனர். சப்புச் சுல்தான் முகம் மலர்ந்திருந்தான். மைமுனாவின் முகம் தெளிவாக இருந்ததில் ஓரளவு நிம்மதி ஏற்பட்டது. கைகளில் சாப்பாட்டுப் பார்சல்கள்.

வாப்பாடீ! கொளும்புல என்ன வெயிலாப்பா . . . கொளும்புல ஒரு ‘லெக்கு’ம் தெரியுது ல்ல. எங்கால போனாலும் ரோட்டும் கடயும்தான் . .! கட்டுமானந்தான்!ம £ளிகான் . .!   எங்க   பாத்தாலும்   ஆமியும் . . .பொலிசிம்தான் . . . ச்ச்சனமா . .? ம்மாடீ . . . சுலுத்தான் தம்பிக்கிக் கொளும்புல தெரியாத எடமில்ல சிங்குளம் தளதண்ணி . . .’

         £மி கொழும்புக் கனவுலகில் தனைமறந்து இலயித்திருந்தாள். மைமுனாவின் விழிகளிலும் நிச்சயம் பாதிக்கனவு இருந்தது. மாமியின் புகழுரையை ஏற்றுப் புன்னகைத்தான் சப்புச் சுல்தான். பொறாமையாகவிருந்தது.

யாசின் சாப்பிடு மகன். முத்தும்மது சாப்பிடு . . . நாங்க ஓட்டல்ல சாப்புட்டம் . . . ம்மாடி . . . சோத்துக்கட மாதிரியா அது?’

சப்புச் சுல்தான் பெருமித அலட்சியமாக -

செரி மாமி! ‘மெடிக்கல்’ ‘கிளியர்.’ எல்லாஞ் செரி!

£ளக்கி ராவைக்குப் ‘பிளைட்டு’ மைமுனாவ நாளக்கி மத்தியானம் ‘யாப்போட்டு’க்குக் கூட்டிப் போகனும். அதோட வேல செரி!’

அங்க கப்பல் வந்து எறங்குமா சுல்தான் மாமா . .?’

ஓண்டாம்பி . . . நீயும் வாற! கப்பல் பாக்கிற . . .’

நாளைக்கு ராவைக்கா ‘பிளைட்டு’ . .?’ - முத்துமுகம்மது வாய் பிளந்தான். இவ்வளவு விரைவிலா . .?

ஓம் . .! முத்தும்மது நீ ‘யாப்போட்டு’க்கு வெரத்தேவல்ல.

£மி . . ., முத்தும்மத அவன்ட தலைவர்ர ஊட்ட கூட்டிப்போய் உட்டுட்டு நாம போகலாம் . . . செரியா

£மி? மறுகா, யாசினுக்கு ‘சூ’ காட்டனும். மாமிக்கி ‘கோள்ப்பீஸி’ காட்டனும் மைமுனாக்கு . . .’

ஞ்சப்பாரு, சுலுத்தான்! நான் தலைவரச் சந்திக்கிற ல்ல!’ - திடீரெனச் சொன்னான் முத்துமுகம்மது.

என்ன . .? சந்திக்கிறல்லியா . . . ஏன் . .?’ - சுல்தான் எச்சரிக்கையானான்.

நான் ஒரு எடமும் வெரமாட்டன்!’

ஏன் . . . என்னயும் கோவமா ஒனக்கு?’

அதெல்லாமில்ல . . . எனக்கிப் புடிக்கல்ல . . . உட்று!’

செரி அப்ப ‘றூம்’புல கெட! பாட்டுப் படிச்சிற்றுக் கெட... வெத்துல... வெத்துல வெத்துல... யோ... வ...’

மாமி சிரிப்புடன் முத்துமுகம்மதைப் பார்த்தாள்.

சூவுல சிங்கம் இரிக்கா மாமா? புலி இரிக்கா?’

என்ன முத்தும்மது? ஒரு சாதியா இரிக்காய்? டியே மைம்னா! முத்துமச்சானுட்ட கேளன்டி . . . சாப்பாட்டுப் பார்சலப் பிரிச்சிக் குடன்டி!’

மச்சான் சாப்புடுங்க!’

ல்ல மாமி! பசிக்கல்ல! கோவம் ஒண்டுமில்ல. நான் அங்க ஞ்ச ஒலாத்த ல்ல . . . ஒங்களோடான் இரிப்பன்!’

அப்ப செரி! பார்சலப் பிரி! சாப்புடு . . . முதல்ல . .!’ மாமி முடிவாகக் கூறிவிட்டதால் சம்பாஷனை முடிந்தது. சுல்தான் சற்றே ஏமாற்றமடைந்தது போலிருந்தது.

0

அன்று மாலை, சப்புச் சுல்தான் தலைமையில் மாமி, மைமுனா, முத்துமுகம்மது, யாசின் ஆகியோர் புறக்கோட்டை வந்தனர். வாகன அடர்த்தி, திடீர் ஜன நெரிசல், சிங்களக் குரல்கள், சதா ஆயுதங்களோடு படையினர், கவச வாகனங்கள், எல்லாம் அச்சமூட்டின. சூரியன் கடலில் உதித்த பக்கமே மறுபடி மறைவதுபோல ஆச்சரியத் திகிலாக இருந்தது. திசைதப்பி இழுபட்டு நடந்தான். மைமுனாவை ஒட்டியே தொடர்ந்தான்.

நடைபாதை ஆக்கிரமிப்பு வியாபாரிகளில் மோதி மோதி இடறி நடந்தனர். அதற்கிடையிலும் மாமியின் அவசரக் கொள்முதல்கள். “லா... பா... ய்... லாபாய்... கண்ட...ல£பாய் . . . தோராகண்ண . . .” அவற்றைச் சுல்தான் சிங்களமொழிப் பேரத்தால் இலகுவாக்கினான். மைமுனா ஒரே ஒரு ‘பர்ர்ர்ர்ரெ’ன்று பிரிக்கிற ‘பேர்ஸ்’ வாங்கினாள். சன இடிபாடுகளிடையே அதனை முத்துமுகம்மதின் கைகளில் வைத்து அழுத்தினாள்.

மச்சான் . .! இத ஒங்களுக்காத்தான் வாங்கின!’

முத்துமுகம்மதுக்குள் காதலும் பச்சாதாபமும் பெருக்கெடுத்துப் பரவின. மைமுனாவை மிக அன்புடன் ஆழமாகப் பார்த்தான். நாளை இரவு போய்விடுவாள். ஆயிரம் மைல்கள் தாண்டி . . . யாருடனோ . . .யாருயாருடனோ . . . வாழப் போய் விடுவாள். தூரந் தொல போறவளே . . . சீமை நாடிப் போறவளே . . . தார மனம் இரிக்கிமெண்டா . . . சட்டுன வந்து சேந்திடுவாய் . . .

பேமலாக்கு பாக்காம கெதியா நட முத்தும்மது!’

சப்புச் சுல்தானின் அதட்டல் கோபமாக இருந்தது. கொழும்பின் தலைவனான அவனைப் பின் தொடர்வதைத் தவிர முத்துமுகம்மதுக்கு வேறு வழியிருக்கவில்லை. வானொலியில் மட்டுமே கேட்டிருந்த நகைகளின் அரங்கம் செட்டியார் தெருவுக்குச் சப்புச் சுல்தான் அழைத்துச் சென்றபோது மூவரும் பிரமித்து நடந்தனர். எந்த வீதியால்வந்து எங்கே போகிறோம்? ஒன்றும் புரியவில்லை. நடை.. ஜனம் . . . நடை . . . வாகனம் . . . நடை . . . தள்ளுவண்டிகள், ஜவுளி மாளிகைகள், அவசர வியாபாரிகள், உதட்டுச் சாயப் பெண்கள், அவர்களின் முன்தள்ளிக் குதிக்கும் மார்பகங்கள்.

மாமியோ . . . வ் . . . கொறுக்கா சிங்களக் கொம்புளயள்ள பாலப் பாக்கான்கோவ் . . . கிக்கிக்கிக்கி . . .’

பொத்துரா நாய வாய . . . ஒன்னப் போலப் பொம்புடியன் ல்ல நானு . .!”

ஙா . . . கோவிக்காம வாடாப்பா . . . மலசியா வாசுதேவரு . . .”

சிங்களப் பாடல்கள், அரசமரத்தடிப் புத்தர், மாலையிலும் பள்ளிச் சிறுமிகள், ‘டைட்டஸ்’ அங்காடியின் பிரமாண்டம், சம்மாங்கோட்டுப் பள்ளிவாயில், கறுப்பு பர்தாவில் ஆஜானுபாகுவான மேமன் பெண்கள், கடைகள், ‘லாபாய் . . . லாபாய் . . . அரங்யண்ட . . .’ மேம்பாலம், கால்களில் கீழே வாகனங்கள் தடதடப்புடன் விரைகிற புகையிரதம், ‘மஹஜன சம்பத... அத... அத... அத...லட்சயக் . . . கண்ட . . . மஹஜன . . .’, சுரண்டல் லொத்தர்கள், பென்னம்பெரிய மேம்பாலம், உலகச் சந்தை, அம்பாரமாகக்குவிந்து கிடக்கும் ஆடைகள், இலக்ட்ரோனிக் பொருட்கள், சிங்களப்பாடல்கள், அம்ம்மாடீ . . . இடுப்பு நொந்தது. மினி பஸ்சுகள், இளம் காதலர்கள், யானைக்கால் நோயாளி, “இவண்ட காலப் பாரு மச்சானோவ் . . . வ்வ்வூப் . . . என்ன பெரிசி . . .” உத்தியோகத்தர்கள் . . . “தள்ளு . . . தள் . . .தள் . . . தள் . . .” எனக் குரலெழுப்பி வேகமாக ஓடிவரும் கூலிகள், அரச உயர் அதிகாரிகள், அதிரடிப்படை வீரர்கள், பொலிஸ், ஊளையிடும் ரயில்களின் கிடுகிடுப்புகள், பயங்கரம் போர்த்திய நரகநகரம்.

இதுதான் கொழும்புல குண்டு வெடிச்ச எடம்!’

உடன் பயமாக இருந்தது. மூன்று மணிநேர நடையில் கொழும்பு அலுத்துவிட்டது. இனியும் தாங்கமுடியாமல்,

£மியின் கைத்தூக்குகள் பொருட்களுடன் ஒரு முச்சக்கரவண்டியில் ‘யூக்கே லொட்ஜ்’ திரும்பி அறைக்குள் வந்ததும் அப்பாடா! என்றிருந்தது.

தேட்டர்ல’ ரச்னிகாந் படம் போட்டிரிக்கி. போவமா மாமி?’

ம்மா . . . என்டல்லோ எனக்கேலா! முத்தும்மதக் கூட்டிப் போ!’

போமா தலவரு? மலசிய வாசிதவண்ட பாட்டிரிக்கி . . .அடி ஆடு பூங்கிளியே . . . விளையா . . . டு பூங்கிளியே’

ல்ல . . . கால் நோகுது. நான் படுக்கப் போறன்’

நாளைக்கிப் போவம்’

ல்ல . . . போறல்ல . . .’

இரவுக் கொத்துரொட்டியின் பின் சப்புச் சுல்தான் மறுபடி வெளியே போய்விட்டான். யாசின் தூங்கிவிட்டான். மாமியும் மைமுனாவும் முத்துமுகம்மதும் தனித்திருந்தனர்.

மாமி! இவன் சப்பன ஒரமா நம்பாதிங்க. ஏமாத்திப் போட்ருவான். இப்பிடித்தான் மொடஉதுமான் மாமாட பொஞ்சாதிய கொழும்புக்குக் கூட்டி வந்து பெலவந்தமா பழுதாக்கிப் ழிபுலீட்டான் . . .’

எனக்குத் தெரியும் முத்தும்மது!’

மைம்னா! இவன் கூப்பிட்டா ம்மா ல்லாம தனியப் போயிராத. கவனமா இருந்துக்க . . . கடும் வளிசல் அவன்’

ம்மா ல்லாம நான் போகமாட்டன் மச்சான்’

செரி செரி! நாளைக்கிப் ‘பெளைட்டுக்’ கெதியா படுடி மைம்னா!’

மாமி இருந்த இடத்திலேயே சரிந்தாள். முத்துமுகம்மது எழுந்து பக்கத்து அறைக்கு வந்துவிட்டான். மைமுனா கதவைப் பூட்டுவது கேட்டது. சுல்தான் இன்னும் வரவில்லை. அவனது ‘இரவுச் சஞ்சாரம்’ பற்றி அதிசயமாக இருந்தது. அவனது கொழும்பு ‘ஹீரோயிஸத்’தின் மீது பொறாமையாக இருந்தது. மேசையில் சுல்தானின் ‘கோல்ட் லீப்’ பக்கட்டும் சில்லறைகளும் கிடந்தன. முத்துமுகம்மது ஒரு சிகரெட்டை கொழுத்திப் புகைத்தான். கட்டிலில் படுத்தான். மைமுனா தந்த ‘பேர்ஸை’ பிர்ர்ரித்துப் பிர்ரித்து மூடி . . . யோசித்து . . . யோசித்து தலை வலித்தது . . . நாளை . . . இந்நேரம் . . .மைமுனா . .?

எழும்புங்க தலைவரு! தலைவரு!’

சப்புச் சுல்தானின் நக்கல் குரலில் கண் விழித்தான் முத்துமுகம்மது. விடிந்திருந்தது. சுல்தான் எப்போது வந்தானோ . . . தூங்கினானோ . . . குளியலறைத் துவாயுடன் இருந்தான்.

தலவரு! டீ இரிக்கி குடிங்க! குளிச்சிட்டு வாறன்’

முத்துமுகம்மது எழுந்து டீயைக் குடிக்காமல் மைமுனாவின் அறைக்கு வந்தான். மைமுனா மட்டும் ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள்

“... பூ...ங் காத்து திரும்புமா... எம் பா... ட்ட விரும்புமா . . .”

மாமியக் காணல்ல. எங்க மைம்னா?’

ம்மா ‘வாத்துரூமுக்க’ குளிக்கா!’

குளியல் சத்தம் கேட்டது. யாசின் தூங்கிக் கொண்டிருந்தான். முத்துமுகம்மது மைமுனாவைப்ப £ர்த்தான். விழிகளின் இரப்பைகள் வீங்கியிருந்தன. இரவெல்லாம் அழுதிருக்கிறாள். பாவம்! மைமுனாவை நெருங்கினான். சட்டென அவளது கைகளைப் பிடித்தான். மைமுனா திடீர்க் கண்ணீருடன் சிரித்தபடி பார்த்தாள். ஒரேகணத்தில் அவனை இறுகக் கட்டிப் பிடித்தாள். முத்துமுகம்மதும் அவளது முதுகை இறுக்கமாகக் கட்டிக் கொண்டான். சில நொடிகள், மைமுனா முத்துமுகம்மதின் கன்னத்தில் மாறிமாறி சில ஆவேச முத்தங்கள் பொழிந்து - மூச்சுத் திணறி - சட்டென்று விலகிவிட்டாள்.

‘... ம... ம்... மைம்னா...’

ஒங்கள உட்டுட்டுப் போறன் . . . ம . . . மச்சான்’

என்ட கிளியாரே போவியா?”

என்ட நெனப்பு இரிக்கிமா மச்சான் . .?’

கடசிமட்டும் மறக்கமாட்டன் மைம்னா . . . அல்லாறிய!’

போன உடன கடிதம் காசி செக்கெல்லாம் ஒங்களுக்குத்தான் அனுப்புவன் மச்சான். ம்மாக் கௌவிக்கு அனுப்பமாட்டன்’

போறஎடத்துலகவனமா            இரி    மைம்னா . . .காட்டவ்லியா வாப்பாவ நெனச்சிக்க . . .’

நான் திரும்பி வந்தா என்ன நீங்க ஏத்துக்குவீங்களா . .?’

நான் இப்பவே ஏத்துக்க ‘ரெடி’ கிளி! கொளறாத!

கொளறாத’

குளியலறைக் கதவு படீரெனத் திறக்கவே, இருவரும் திடுக்குற்று விலகினர்.

டியே, மைம்னா ஒடன குளிச்சிட்டு ‘ரெடி’யாகு! ‘யாப்போட்’டுக்குப் போகனும், டே ஆசீனோவ் . . . எழும்புடோ . . . முத்தும்மது இன்னம் பொறப்படல்லியா . . .

டேய் யாசின் எழும்புடா சில்லித்தலயா!

£சின் திடுக்கிட்டு எழுந்துவிட்டான். உடன் உடைமாற்றிப் புறப்பட்டான். மைமுனா மாற்றுச் சீலைகளுடன் குளியலறைக்குள் செல்ல முத்துமுகம்மது பக்கத்து அறைக்குள் வந்து குளித்தான். குளோரின் தண்ணீர்ந£ற்றமடித்தது. உடைமாற்றும்போது மைமுனாவின் அறையில் சப்புச் சுல்தானின் பதட்டமான குரல் கேட்டது. உரத்துச் சொல்லிக் கொண்டிருந்தான்.

ப் . . . ஸ் . . . ஏலாண்டு செல்லிட்டான். என்னய்ற இப்ப? எம்பிர ‘சைன்’ இருந்தா உடனே எல்லாஞ் செரியாகும்’

முத்துமுகம்மது அவசரமாய் அறைக்குள் புகுந்தான்.

ஙா! முத்தும்மது நீதான் ஒரு சின்ன ‘எல்ப்’ பண்ணனும்!’

எல்ப்பா? என்னது?’

ஒரு சின்ன உதவி! செல்லங்கா மாமி!’

ஓண்டாப்பா முத்தும்மது! நீதான் செஞ்சி தரனும்’

என்ன மாமி என்ன செய்யனும்’

கடசி நேரத்துல மைம்னாட ‘பாஸிப்போட்டு’ல ஒரு சின்ன சிக்கல்’ எலங்கய உட்டுவெளிய போற வெஷயந்தானே . . . அதுல . . . ஆனா . . . அதுக்கு ‘ஏஜென்ஸி’ல ‘எம்பி’ர கடிதம் ஒண்டு அவிசரமாக் கேக்கானாம் . . .

ல்லாட்டி மைம்னா ண்டைக்கிப்போக ஏலா! முத்துமுகம்மது! நீதான் ‘எம்பி’ட்ட ஒரு ‘சைன்’ வாங்கித் தெரனும் . . .’

நானா . .? ‘எம்பி’ட்டயா? எந்த எம்பி . .?’

ஒங்குட தலைவருட்டதான்! அவருதான் இசாக்கு ‘எம்பி’ட்ட ஒரு ‘சைன்!’

தலைவருட்டயா? நானெப்பிடிப்போற?’ - சப்புச் சுல்தான் தன் வஞ்சக வலையை விரிக்கிறானோ . .? பயமாகவிருந்தது.

நான் கூட்டிப்போறன். இதக்குடுத்து ஒரு ‘சைன்’ கீள ஒரு ‘சிவில்! அம்பட்டுந்தான். ஒன்னக் கண்டா . . . உடன செய்வாரு! லா!’ என்று சொல்லிப் புன்னகைத்தான் சுல்தான்.

‘. . .’ முத்துமுகம்மதால் ஏதும் பேச முடியவில்லை.

போடாப்பா முத்தும்மது . .! போகிளி ‘டக்’குன . . .

நீ         தலவர்ர ஆளு ல்லவா? என்ன . . . து . .? ஞா . . . எளந்தாரி அணித் தலவருல்லோ . . . நீ . .?’

‘...’

வா! முத்தும்மது! நேரமில்ல. வஸ்ஸில போக நேரமில்ல. ஒரு ‘ஆட்டா’ புடிப்பம்! ‘வன் அவர்’ல போய் வந்துரலாம்!’

போ வாப்பா! முத்தும்மது ‘டக்’ கெண்டு.’ - மாமி அவசரப்படுத்தினாள். சப்பனின் வலையில் பூரணமாக விழுந்துவிட்டாள்.

நானும் கூடப்போய் வாறங்கா ம்மோவ்!’

சும்மார்ரா சில்லித் தலயா?’

ல்ல மாமி! யாசினும் வெரட்டும். சும்மா போற ‘ஆட்டா’தானே!’

வாடா!’

போடா!’

ஆழமான யோசனையுடன் மனமின்றிப் புறப்பட்டான் முத்துமுகம்மது.

8

 

சப்புச் சுல்தான் ஒரு பயங்கரத் திட்டத்துடனும் யாசின்குசாலுடனும் முத்துமுகம்மது ஏகப்பட்ட யோசனைகளுடனும் ‘யூக்கே லொட்ஜி’லிருந்து புறப்பட்டு மருதானை ‘எல்பின்ஸ்டன்’ சந்திக்கு நடையில் வந்தனர். சப்புச் சுல்தான் விரல் சொடுக்கியதும் ஒரு முச்சக்கரவண்டி சீறி வந்து நின்றது. மூவரும் ஏறினர்.

கொஹெத மஹத்தயா?’

குண்டு . . . கிண்டு வெடிக்கிமா மாமா . .?”

களுபோவில யண்ட’

தமுள்ள கதைக்கலாமா மாமா . .?”

சீயக் . . . ருப்பியல் சீயக் . . .’

கண்டக்கோ இக்மண்ட்ட’

மூவரையும் சுமந்து கொண்ட முச்சக்கரவண்டி, சீறிப்புறப்பட்டது. வாகன அணியில் சேர்ந்தது. நுழைந்தது; புகுந்தது; ஊர்ந்தது; மேம்பாலங்கள், சுற்றுவட்டப்பாதைகள், சமிக்ஞை விளக்குகள், ‘நியூ ஒலிம்பியா . . .’ பரபரப்புடன் ஓடித்திரியும் இராணுவ வாகனங்கள், நடையில் அதிரடிப்படையினர், வான்படைச் சீருடையில் அழகான சிங்களக் குட்டி வீராங்கணைகள், எலிபண்ட் சந்தியில் குதிரையில் பொலிஸ்காரன், சுதந்திர வீரரின் சிலை, உயரக் கட்டிடங்கள். வழி நெடுகவும் சப்புச்சுல்தான் முச்சக்கரச் சாரதியிடம் ஏதோ ஒரு விலாசத்தைக் காட்டிச் சிங்களத்தில் சளசளத்தபடி வந்தான்.

“ ‘சூ’ வுக்கு எப்ப மாமா கூட்டிப்போற?”

தமுள் கதயாதடா பேயா! சிங்களவன் கொடல உருவுவான்’

ஏதோ கேட்க நினைத்த முத்துமுகம்மதும் வாயை மூடிக்கொண்டான்.

நவத்தண்ட நவத்தண்ட!’

முச்சக்கரம் சீறி நின்றதும் சப்புச் சுல்தான் முத்துமுகம்மதைப் பார்த்தான். பரபரப்பாக ஏதோ தேடினான். பதட்டமானான். ‘எங்க . . . எங்க . .?’ என்றான். மேலும், பரபரப்புடன், ‘அட! முத்தும்மதோவ்! என்ட மடத்தனத்தப் பாத்தியா?’ என்று பதட்டப்பட்டான்.

என்ன செல்றாய் நீ . .?’ முத்துமுகம்மது யோசனையுடன் உசாரானான்.

எம்பி’ட்ட ‘சைன்’ வாங்கிற கடிதத்த ‘லொட்ஜி’ல உட்டுட்டு வந்துட்டன்டோ . . . முத்தும்மதோவ்!’

டேய்! சப்பா! என்னடாது?’ முத்துமுகம்மது சப்புச் சுல்தானை எச்சரிக்கையுடன் ஆத்திரமாக நோக்கினான்.

சத்தியமாடா முத்துமுகம்மது! கடிதத்தத் தவறி உட்டுட்டு வந்திட்டன்’

நீ பச்ச மடயனண்டு எனக்குத் தெரியும். திருப்பச் செல்லு ‘ஆட்டோ’வ . . . போய் எடுத்துட்டு வருவம்.’

ல்ல்ல . . . ‘ஆட்டா’க்காரன் ஏலாது ங்கான்! ன்னொருக்கா மருதான போய்வெர ஏலா! பொறு . . . யோஸிப்பம் . . . ஙா செரி ஒரு வேல செய்வம்!’

என்னடாது? சப்பா! என்னயும் கணக்கு கிணக்கு உட்டியண்டால் . . . கொளும்பு கிளும்பு ண்டு பாக்கமாட்டன் . . . கண்ணுல குத்திருவன் . . .’

போடா கொறுக்கா! பொறு! ஒரு ‘கோள்’ எடுத்து ‘லொட்ஜி’ மொதலாளிட்ட பேசிட்டு வாறன். இரி!’

“‘ல்ல . . . ல்ல . . . பொறு டேய்!’

பொறுக்கவில்லை சப்புச் சுல்தான். மிக வேகமாக முச்சக்கரச் சாரதியிடம் சிங்களத்தில் பேசினான். அவன் தலையாட்டினான். முச்சக்கரவண்டி சற்றே வேகம் குறைந்து பாதையோரத்திற்கு வர, திடீரென ஒரேதாவலில் வண்டியை விட்டும் கீழே குதித்த சப்புச் சுல்தான் வீதியின் குறுக்கே விரைந்தோடும் அத்தனை வாகனங்களையும் அவசரமாக ஓடிக் கடந்தான்.

டேய்... டேய்... சப்பா... சப்பா... டேய்...” முத்துமுகம்மது பயத்தில் கத்த, எதிரே வந்த மினி பஸ்ஸில் அபாயமாகப் பாய்ந்து ஏறிய சப்புச் சுல்தான், முத்துமுகம்மதுக்குக் கைகளைக் காட்டினான். ஏதோ சைகை செய்தான். பஸ் பறந்துவிட்டது.

சப்பு ஓடியேவிட்டான். எங்கே போகிறான்? வருவானா? முத்துமுகம்மது செயலற்றுப்போய் விறைத்துவிட்டான். ஒன்றும் விளங்காமல் யாசீனுடன் திகைத்துப் போய், ‘ஆட்டோ’வினுள் செய்வகையற்றுப் போய் இருந்தான். சப்புச் சுல்தான் ஏமாற்றிவிட்டான் என்பது பயங்கரமாகப் புரிந்தது முத்துமுகம்மதுக்கு. “இத்திங் . . . யமுத மஹத்யோ . . . வ் . . .” என்று கேட்டச£ரதி பதிலேதும் வராதிருக்கவே முச்சக்கரவண்டியை மறுபடி வேகம் பிடித்து ஓட்டினான்.

டேய் . . . டேய் . . . நிப்பாட்டு . . . நிப்பாட்டறா டேய் . . .” முத்துமுகம்மது பயத்துடன் கத்தினான். சாரதி விசித்திரமாகத் திரும்பிப் பார்த்தான்.

மஹத்தயாட்ட டிக்கக் பிஸ்ஸ¨த . .? நிக்கங் கட்ட வகலா எனவாத . .!?’ (ஐயாக்கு பைத்தியமா . . . சும்மா வாய மூடிட்டு வர்ரியா) என்று கடிந்து சொன்னான்.

நிப்பாட்றா சிங்கிள மாத்தியோ . . . ஆட்டாவ நிப்பாட்டு . . .’

மொக்கத்த மஹத்தயா? நவத்தண்டத . .? கியண்ட!” (என்ன நிறுத்தவா சொல்கிறாய் . . .)

“ . . . . . .’ முத்துமுகம்மதுக்கு ஆத்திரத்தில் அழுகை வரப் பார்த்தது. முத்துமுகம்மதிடமிருந்து ஏதும் பதில் வராதிருக்கவே சிங்களச்சாரதி திரும்பிப் பார்த்தான்.

மொகத்த கல்பனாவ? களுபோவில யணவாத? நெத்தங் ஆப்பஹ¨ . .?’ (என்ன யோசனை.. களுபோவில போறதா . . . ல்ல திரும்பவா?)

எ . . . வந்து . . . எனக்கிச் சிங்களம் தெரியா மாத்தையா?’

சுல்தான் மாமா எங்க மச்சான் போறாரு . .?”

மொகத்தபாங் . . . கதாகறண்ணே . . . முகுத் தேருண்நே . . .” (என்னதான் கதைக்கிறாய் . . . ஒன்றும் விளங்கவில்லை)

ஒண்டும் வெளங்குதில்ல . . . சிங்குள மாத்தயோ . . . திரும்பி யூக்கேட லொச்சிக்கிப் போ . . . கெதியா . . . சுல்தான் போறதுக்கிடையில . .!”

மொக்கோ? அநே! ஹரிஹரி . . . ஏ மஹத்தயா கியப்பு விதியக் மங் கரண்ணங்’ (என்னது . . . ஐயோ . . . அந்த ஐயா சொன்னபடி செய்கிறேன்.)

“...”

திடீரென முச்சக்கரம் உறுமிச் சீறிச் சுற்று வட்டம் எடுத்து ஓடியது.

எங்க . . . எங்க . . . முத்துமச்சான் . .? இன்னொருக்கா யூக்கேட லொச்சிக்கா போறம்?’

அப்பிடித்தான் சென்னன் . . . கெதியா . . . கெதியா உடு மாத்தியோ . . . வளிசல் நாயப் புடிச்சி சொத்தயில இடிக்கன் பாரு . . . செரியா மாத்தியா . .?”

ஒவ்! ஒவ்!’

“...”

மாமா எங்க போறாரு? முத்துமச்சான்! நாம எங்க போறம்?”

யூக்கேட லொச்சி வழியா இது மாத்தயா? செரிதானே . . .

கெதியா உடுங்க . . .’

ஒவ்! ஒவ்!!’

பெரிய மேம்பாலம் கீழாக ஓடியது. வர வர கட்டிடங்கள் குறைந்தன. மறுபடி ஒரு பெரிய சுற்றுவட்டம்! வலப்பக்கம்

£ரிய இராணுவ முகாம். முத்துமுகம்மது ஒன்றும் விளங்காமல் பயத்துடன் சும்மா இருந்தான். இதுவா வழி? தலைவரின் வீடு . .? இதுவா . . . அதுவா . .? இந்தப் பெரிய புத்தர் சிலையைக் கடந்து வரவில்லையே . . . திடீர் திருப்பங்களில் ஓடி ஒரு ரயில் பாதையை ஊடறுத்து, டப்ளியு.டப்ளியு. தஹநாயக்காவின் சிலையைக் கடந்து ஓடி ஒருவழியாக நின்றது. வீதியில் சனநடமாட்டம் குறைவாக இருந்தது. கல்குளி புத்த விகாரை பிரமாண்டமாகத் தெரிந்தது. என்ன இடம் இது? பக்கத்தில் வீதியில் ஒரே ஒரு பெட்டிக் கடை இருந்தது.

ஹரி! பன்ஸல ஹந்திய! நொம்பர் எக்கசீய ஹத்தர! மேக்காய்! வஹிண்ட . . . டக்கெலா . . . சல்லி கண்ட . . .’ (சரி அதுதான் விகாரைச் சந்தி . . . இலக்கம் 104. இறங்கு . . . கெதியா காசை எடு.)

“. . . க்... இது யூக்கேட லொச் . . .’

அடோ வஹிண்ட பாங்!” (அடே இறங்குடா)

“......”

£ரதி கோபமாக இறங்கிவந்து முத்துமுகம்மதின் தோள்களைப் பிடித்து வெளியே இழுத்தான். யாசினும் இழுபட்டு இறங்கினான்.

 ஏய்! மகே சல்லி? கண்ட சல்லி . . . தெஸீயய்’ (காசை எடு . . . 200 ரூபாய்)

இ... இ... இது யூக்கேட லொச்ஜா...’

கேட்கவும் பயமாக இருந்தது. ‘சல்லி’ என்பது மட்டுமே விளங்கியது. எவ்வளவு என்றுகேட்கவும் தெரியவில்லை. முத்துமுகம்மது பயத்துடன் ‘சேர்ட் பக்கட்டு’க்குள் கைவிட்டு மைமுனாவின் ‘பேர்ஸை’ எடுத்தான். உள்ளே ஐம்பது ரூபா இருந்தது. அதனைக் கொடுத்தான். சாரதி உக்கிரமாகப் பார்த்தான்.

தெஸீய... தெஸீய..’ என்றான் (இருநூறு . . . இருநூறு . . .)

இம்பட்டுந்தான் இரிக்கி’ - முத்துமுகம்மது பைகளைக்க£ட்டினான்.ச£ரதி திடீரென முத்துமுகம்மதின் சேர்ட்டைப் பிடித்துக் குலுக்கிப் பைகளைச் சோதித்து ஏமாற்றமடைந்தான். கோபத்தில் பளீரென அறைந்தான். யாசின் வீறிட்டான். உடனே சாரதி அவனுக்கும் பளாரென அறைந்தான். முத்துமுகம்மதின் கையைப்பிடித்து முறுக்கினபோது கைக்கடிகாரம் இடறவே, அதைப் பலவந்தமாய்ப் பறித்தான். மணி 10:34 என்றது. கையில் கீறி இரத்தம்.

என்டம்மோவ்! அடிக்காண்டோ . . . ஓடியாங்கடோ!’

ஓடியாங்கடோவ்... மணிக்கூட்டப் பறிக்காண்டோவ்..’

¨த்திகே புத்தோவ்! சல்லி நெத்துவ வாகனவளின் நகிண்டத . . . வள்ளோ!” (. . . மக்களே . . . காசில்லாம வாகனத்தில ஏறுவியா . . . நாய்களே . . .) சாரதி, மீண்டும் இருவருக்கும் ஆளுக்கு ஒரு அறை கொடுத்துவிட்டுச் சட்டென ஓட்டோவில் ஏறிச் சீறிப் பறந்துவிட்டான்.

முத்துமுகம்மது விதிர்விதிர்த்துப் போனான். சப்புச் சுல்தானின் புதிய முறையிலான நயவஞ்சகம் உறுத்தியது. அடிபட்ட கன்னம் வலித்தது . . . இந்நேரம் . . . மைமுனா . .? மாமி . .? இனம்புரியா இடம். குண்டுகிண்டு வெடிக்குமா . .? என்ன செய்ய . . . ஏது செய்ய . .? கையில் ஒரு சதமும் இல்லை. அந்நிய இடம் . . . அந்நிய மொழி . . . மனிதர்கள்.

முத்தும . . . ச் . . . சான் . . . என்டம்மோவ்!’

கத்தாதடா சில்லித் தலப் பண்டீய் . . .’ யாசீனை ஓங்கிக் குட்டினான். நின்ற இடத்தைச் சுற்றிலும் பார்த்தான். சற்றுத்தள்ளி ஒரு பெட்டிக்கடை தெரிந்தது. அதில் இரண்டு சிங்களப் பெண்கள். அவர்களிடம் போனான். இருவரும் புன்னகைத்தனர்.

வளி தப்பி வந்துட்டம் அக்கா! யூக்கேட லொச்சி.. எந்தப்பக்கம்?”

உக்கட . .? பக்கட . .?’ - பெண்கள் கிக்கிக்கிலீரெனச் சிரித்தனர். ஆத்திரம் வந்தது.

இஸிலாங்கட்சித் தலவரு . . . இஷாக் எம்பிர ஊடு எது?’

தெமளத? தெர்ர்ரியம் . . . ல்லா . .!’

எம்.பி . . . எம்.பி.     எம்பிட கெத்தற?

எம்பி? எம்பித? கவ்தஹொத் தண்நே. பளயாங்!’

“......”

வாங்க முத்துமச்சான் போவம்!”

எங்கடா . . . போக சில்லித்தலையா . .?”

சிங்களப் பெண் கடையில் தொங்கிய பையினுள்ளிருந்து ஒரு ‘ரோஸ்பாணை’ எடுத்து இரண்டாக உடைத்து ஒரு துண்டை நாய்க்குப் போட்டுவிட்டு மறுதுண்டை யாசினிடம் கொடுத்தாள். இனி நிற்பதில் பிரயோசனமில்லை. தாம் வந்த வழியே திரும்பி நடக்க ஆரம்பித்தனர். யாசின் அழுதபடியே வந்தான். எந்தப் பக்கம் இது . .? என்ன இடம் . .? எப்படி . .? யார் . . . யார் . .? நடந்த பாதை நாற்சந்தி ஒன்றில் வந்து முடிந்தது. எந்தப் பக்கம் போக . .? திக்குத் திசை விளங்கவில்லை. சிங்கள மொழியில் அறிவித்தல் பலகைகள் தமிழ் தார் பூசி அழிக்கப்பட்டிருந்தது. கிட்டப்போய் ஊன்றிப் பார்த்த போது ‘சரணங்கர குறுக்கு இடம்’ என வாசிக்க முடிந்தது. புரியவில்லை.

சப்புநாயே . .! அடுக்குமாடா இது? அல்லாஹ்க்கு பொறுக்குமாடா இது? லொட்ஜில மைமுனா . .! மாமியைஎங்க கொண்டுபோய்விட்டானோ . . . அல்லாவே . .!” உயரமான கட்டிடங்கள், திமுதிமுவென்று வாகனங்கள், பல மனிதர்கள், அங்கொருவர், இங்கொருவராகப் பொலிஸ்வீரர்கள், சிங்கள ஒலிகள் . . . யாரிடம் கேட்பது. உத்தேசமான பாதையால் நடை தொடர்ந்தது. திடீரென ஒரு தபாற்காரன் சைக்கிளில் வந்தான். முத்துமுகம்மது நம்பிக்கையாய் அவனை நோக்கி ஓடினான்.

 பியோன்! பியோன்! அண்ணேய்!” என்று கூப்பிட்டான். தபாற்காரன் சைக்கிளை நிறுத்தினான்.

அண்ணேய், வழி தப்பிட்டம்! ‘யூக்கேட லொச்சி’ எங்காலப்பக்கம்?”

மொகத்த? தெமளத?’(என்ன . . . தமிழா?)

இஸாக் ‘எம்பி’ர ஊட்டு ‘அட்றஸ்?’

அட்றஸ்? ஏக் கியன்னே . . . அநே . .! முக்குத் தேருண்நே மட்ட. மெ, அத்தன டிக்கக் துரட்ட தெமள கோவிலெக்க எத்தி . . . யண்டகோ . . .” (ஐயோ . . . ஒன்றும் விளங்கவில்லை . .கொஞ்சத் தூரத்தில ஒரு தமிழ்க் கோயில் இருக்கு அங்கே போ)

தபாற்சேவகனும் போய்விட்டான். என்ன மசிருக் கொழும்பு? பியோனுக்கே ‘அட்றஸ்’ தெரியாத ஊரு. தாகமெடுத்தது. தேத்தண்ணி குடிக்கவும் காசில்லை. பயமாக இருந்தது. கையில் ரோஸ்பாணுடன் யாசீன் அழுகையை நிறுத்தி, சவமாய் நடந்து வந்தான்.

“. . . சுலுத்தான் செஞ்ச கறுமம் . .! ஆள் ஆளா திக்குக் கொண்டாப் பிரிச்சிட்டான். நாம ஞ்ச கண்காணா தேசத்துல . . . மாமிய எங்க கொண்டு போய் விட்டானோ . . .

லொட்ஜில மைமுனா மட்டும் . . . என்ன செய்ய . . . என்ன செய்ய . .? சுல்தான் முட உதுமாண்ட பொஞ்சாதிக்குச் செஞ்ச கறுமத்தப் போல . . . இந்நேரம் . .?”

பயத்தில் நெஞ்சு காய்ந்தது. மூத்திரம் பொத்துக் கொண்டு முடுக்கியது. உயரமான பத்தடிச் சுவர்கள். விளையாட்டு மைதானம். ஒரு திடீர்ச் சிறுகாடு. எங்கோ போகும் பஸ்கள். பஸ்ஸில் ஏறுவமா? எங்கே போறண்டு கேட்டா . . . எடம் . .? காசி . .? ஒரு மகா அதிசயம் நிகழ்ந்து தலைவர் இவ்வழியே வரமாட்டாரா? அடேய் சப்பா . . . எல்லாத்தையும் மன்னிக்கன் . . . வாடா . . . வாடா . . . வந்து கூட்டிப் போடா . . .

தண்ணி ஒடாய்க்குது மச்சான்! மூத்திரம் முடுக்குது மச்சான்!”

வாடா!”

ஒரு பெட்டித் தேனீர்க்கடையருகே வந்து சேர்ந்தனர். காலை மணி 11:20 என்றது. “பகள் சப்பாடு தா£யர் . . .” என்று தமிழ்க் கொரலை அறிவித்தது. வெயில் சுள்ளெரித்தது. சிங்களப் பாடல் கர்ணகரேமாயிருந்தது. முதலாளி,

ரீசேர்ட்டு’க்குள் காற்பந்தொன்றை வைத்தது போன்ற தொப்பையுடனும் ‘ஹெல்மட்டு’ மொட்டையுடனும் சிரித்தான். சும்மா சும்மா கமுக்கட்டைச் சொரிந்தான்.

முதலாளி! தண்ணி! குடிக்க தண்ணி’

முதலாளி கிளாஸ் நிறைய நீர் கொடுத்தான். ஆவலாய்ப் பருகி மரணதாகம் தீர்ந்தபின் -

தங்க மொதலாளி, நாங்க இஸாக் ‘எம்பி’ர ஆக்கள்.கொளும்புல வழி தப்பிட்டம். ‘யூக்கேட லொஜ்ச்சி’ல நிக்கிறம்.அங்க போகனும், காலப்புடிச்சன் . . . ஒளுப்பம் வளி காட்டுங்க . . .” முத்துமுகம்மது சடாரெனக் குனிந்து முதலாளியின் கால்களைப் பிடித்தான்.

அடோ . . . அடோ . . . கக்குள . . . கக்குள . . . பளயாங் வள்ளோ?” (அடே . . . அடே . . . கால் . . . கால் . . . ஓடுடா நாயே . . .)

முதலாளி அலறியபடி ஐந்து ரூபாய் நாணயத்தை விட்டெறிந்தான். ‘பளயாங் . . . பளயாங் . . .’

முத்துமச்சான்! லாத்தாவும் ம்மாவும் தேடுவாஹ . . .வாங்க போவம்’

எப்பிர்ரா போற பே மொக்கா! வழி தப்பிற்றா!”

தெரிஞ்ச ஆக்களுட்ட கேளன் மச்சான்”

சிங்களம் தெரியுமாடா எனக்குச் சில்லித்தல மண்டயா?”

“...ம்மா... லா... த்தா... ம்”

“பொத்துரா வாய! நட்றா . .!”

நடக்க ஆரம்பித்துச் சிறிது தூரத்தில் மறுபடி ஒரு முச்சந்தி. மறுபடி ஒரு தபாற் கா ரனில்லை . . . பொலிஸ் . . . ஓ . . . பொலிஸ் . .!

9

பொலிஸ் . .! பொலிசிக்காரன் . . . ரைற்! அல்லா! அல்லாவழி காட்டிட்டான்! பொலிஸ் . . . காட்டவ்லியா அப்பா! புதிய வீதரியத்தினால் உற்சாகமடைந்து நெருங்கினான். ஒரு பெரிய மோட்டர்சைக்கிள் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்தது. அதில் வெள்ளைக் கையுறையுடன் ‘மோபைக் சீற்றி’ல் சாய்ந்து உட்கார்ந்திருந்தான். மற்ற பொலிஸ்காரன் வாகனச் சமிக்ஞையில் குறியாயிருந்தான்.

சேர்... சேர்... சேர்... மாத்தயா... சேர்!”

“...”

சேர் . . . சேர் . .!”

கவ்தபாங் ஓகொல்லோ . .?” (யார்ரா நீங்கள்லாம் . . .) பொலிஸ் மிக விநோதமாகப் பலத்த சந்தேகத்துடன் இருவரையும் பார்த்தான்.

என் சீதேவிப் பொலிஸி ராளஆமி . . . சிங்களம் தெரியா சேர். நாங்க பள்ளிமுன. வழிதப்பி உட்டுட்டு ஓடிட்டான் சேர். யூக்கேட லொச்சில என்ட மாமியும் . . . மைம்னாவும் . . .” முத்துமுகம்மதின் கண்களில் கண்ணீர்.

அநே! தெமளத? ஐடென்டி எக்க கண்ட பலமு!” (ஐயோ தமிளா . . . ஆளடையாள அட்டையை எடு பார்ப்பம்.)

ஐட்டிங்காட்டு லொச்சில சேர்!”

நெத்த? உம்ப கொட்டிஹொத் தன்நே!” (இல்லையா . . .

நீ         புலியோ தெரியாது) என்ற பொலிஸ்காரன் தன் கழுத்தில் தொங்கிய விசிலை மெலிதாக “உய்க்” கென்றான். மற்ற வெள்ளைக் கையுறை திரும்பிப் பார்த்தான். இவன் வரச் சொல்லி சைகை செய்ய அவன் வந்தான்.

மச்சாங்! மேகொல்லாட்ட டிக்கக் கதாகரண்ட! மொகத்த பிரஸ்ன கியலா . . . தெமள, தெமள . .!” (இவர்களிடம் கொஞ்சம் தமிழில் பேசு . . . என்ன பிரச்சினை என்று)

வெள்ளைக் கையுறை முத்துமுகம்மதை உறுக்கிப் பார்த்தான். திடீரென முத்துமுகம்மதின் கைகளைப் பிடித்துமுறுக்கி உயர்த்தி இடுப்பை சோதித்தான். நெஞ்சிலும் கால்களுக்கிடையிலும் தடவி பின், முத்துமுகம்மதின் சேர்ட் பைக்குள் கைவிட்டு மைமுனாவின் ‘பேர்ஸை’ எடுத்தான். திறந்து பார்த்தான். ஒன்றுமில்லை. பின், யாசீனைப் பார்த்தான் திடீரென அதிசயமாக -

நீங்க எவடம்? உன்ட பேரென்ன?” என்றான் பழக்கமான தமிழில் முத்துமுகம்மதின் காதுகளில் தமிழ் இன்பத் தேனள்ளிப் பாய்ந்தது. ஒரு கணம் பள்ளிமுனையே காலடியில் தெரிந்து மறைந்தது.

சேர் . . . என்டல்லோ . . . சேர், ஏமாத்திக் கூட்டிட்டுவந்து வழி தப்ப உட்டுட்டு ஓடிட்டான் சேர். சப்புட அறாமி! மைம்னாவ லொச்சில வெச்சிருக்கான் சேர். யூக்கேட லொச்சி சேர். கைல ஒரு சதமும் ல்ல சேர் . . . அல்லா . .?’ முத்துமுகம்தின் ஒப்பாரியும் பதட்டமான கத்தலும் பரிதாபமாகவிருந்தன.

டேய்! பொறு! மெதுவாச் சொல்லு! உன்ட பேரென்ன?”

மூனா, ஈனா. முத்துமுகம்மது சேர். இவன் என்ட மச்சினன். ஆனா, மூனா. யாசின் சேர்”

சரி இப்படி வா!” பக்கத்திலிருந்த ஒரு தள்ளுவண்டிக்கடையில் இரண்டு ‘கோலா படி’ எடுத்து முத்துமுகம்மதிடம் நீட்டினான்.

ந்தா முதல்ல இதக் குடி!”

“‘குடிரா யாசின்! குடிரா . . .”

நீயும் குடி! சரி இப்ப சொல்லு. என்ன நடந்தது?”

முத்துமுகம்மது முடிந்தவரை சொன்னான். யூக்கே லொட்ஜ் எங்கேயென்ற சொல்லத்தெரியவில்லை. ‘கொழும்பு யூக்கே லொச்சி’ என்பது தவிர மருதானை என்று தெரியவில்லை.

ஏய், மொட்டையாக லொச்சி லொச்சி என்டால்.. எந்த இடம் என்டாச்சும் தெரியாதா? மரதான? கொள்பிட்டி?”

“...ல்ல சேர்...” “வெள்ளவத்த?”

ஹ... ஓம் சேர்...”

தெஹிவளயா?”

ஓ . . . ம் . . . ல்ல சேர். செரியாத் தெரியாது சேர். வெளிநாடு போற ஆக்கள் தங்குறது. யூக்கேட லொச்சி!”

அப்படிக் கண்டுபிடிக்க ஏலாது. நீ இப்ப எங்க போகனும்?”

லொச்சிக்கு! மைம்னா . . .”

அதான் இடம் தெரியாதே . . . அத விடு! பொலிஸ் ஸ்டேசனுக்குப் போறியா?”

ல்ல சேர்! ஒடன லொச்சிக்கித்தான் போகனும் . . .”

பேக்கண்ட மகனே! லொச்சி எடம் தெரியாம எப்பிடிப் போறடா?”

“. . . என் . . . டல்லோவ் . . . வ்! ம்மோவ்!’ முத்துமுகம்மது மறுபடி ஒப்பாரியிட்டான்.

இப்பிடியே கத்தி அழுது இஞ்ச சுணங்கினா, அங்க அவன் . . . ஆரு . . . சுலைமான் ஓண்ட மச்சிக்கு இந்நேரம் புள்ள குடுத் . .?”

ல்ல . . . ல்ல . . . சேர் . . . அப்பிடி ல்லாட்டி, என்னத் தலவர்ர ஊட்ட உடுங்கசேர்!”

தலைவரா . .? அப்படீண்டால் . . . யாரு?”

இஸிலாங்கட்சித் தலைவரு. இஸாக் எம்.பி.!”

அவரா? அவருக்கு எப்பிடி உன்னத் தெரியும்?”

என்ன வெரச் சென்ன! கொளும்புக்கு!”

உன்னையா . .? ஏன் . . . கொத்துரொட்டி அடிக்கவா?”

ல்ல கூட்டம்! கச்சிக் கூட்டம்!”

கட்சிக் கூட்டமா . . . அவ்வளவு பெரிய ஆளா நீ . .? பாத்தா வேக்கயனப் ழிபுலீல . . . ரிக்காய் . .

சேர் . . . சேர் . . . காலப்புடிச்சன் சேர்!”

விடு காலை! கொஞ்சம் பொறு வாறன்!”

வெள்ளைக் கையுறை மறுபடி வீதிக்குப் போனான்.வாகனங்களைக் கூர்ந்து பார்த்தான். பத்து நிமிடமாயிற்று.

 ஒரு வாகனத்தை நிறுத்தினான். ‘பஜரோ’ பளபள நிறத்தில் மினுங்கியது. அதன் சாரதி இவனுடன் சிநேகமாய் சிரித்தான். இருவரும் பத்து நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தனர். முத்துமுகம்மதுக்கு ஆத்திரமாக இருந்தது. அவசரமாக இருந்தது. திடீரென வெள்ளைக் கையுறை முத்துமுகம்மதைக் கூப்பிட்டான்.

இதுல ஏறுங்க! எம்பிர வீட்டுல கொண்டு விடுவாரு! செரியா?”

காட்டவ்லியா அப்பா! சேர். அல்லாதான் ஒங்கள கொண்டு உட்ட. ந்த ஒதவிய என்ட சீவியத்திலயும் மறக்கமாட்டன் சேர்!”

செரி செரி ஏறு! ஜீப்புல!”

வாழ்க்கையிலேயே முதற்தடவையாக, குளிரூட்டப்பட்ட பஜரோவில் ஏறினர்.

“ . . . ஜீப்பு என்ன மச்சான் கூளாயிரிக்கி!” யாசீன் சகலமும் மறந்து அனுபவித்தான். சாரதி முத்துமுகம்மதைப்ப       £ர்த்து பரிதாபமாய்ச் சிரித்துவிட்டு அசுர வேகத்தில் கிளப்பிப் பறந்தான். இருபது நிமிடம் அங்கும் இங்கும் சந்தும் பொந்துகளும் விசாலப் பாதையும் . . . மைம்னா பாடு என்னயோ . . . மாமிய எங்க கொண்டு உட்டானோ . . .

சப்புட வள்ளா . . . அல்லாவே பொண்டுகள நீதான் காப்பாத்தனும் . . ., திடீரெனப் பஜரோ நின்றது. சாரதி இறங்கினான்.

ஹரி . . . ஹரி பகின்னகோ! மேக்கதமா கெதர”

சாரதியே கதவைத் திறந்தான். இருவரும் இறங்கினர். ஜீப்பிலிருந்த வானொலியில் நண்பகல் செய்திப் பின்னணி ஒலித்தது. செய்தி சிங்களம் பேசியது. ‘ந்நேரம் . . . மைம்னா . . .

என்ன கெதியோ . . . அல்லா . . .’ இருவரும் இறங்கி வீதியில் நின்றனர். சாரதி விரைவாகச் சென்று ஒருவீட்டின் உயரமாகக் கதவைத் திறந்து உள்ளிருந்த ஒரு பொலிஸ்காரனுடன் பேசினான். அவன் சிரித்து இவர்களை உள்ளே அனுமதித்தான். ஜீப் போய்விட்டது. பொலிஸ்காரன் உள்ளே தகவல் சொன்னான். சிறிது நேரத்தில் வீட்டினுள்ளிருந்து ஒருவர் வெளியே வந்தார். கம்பீரமாகவும் கண்ணியமாகவும் இருந்தார். கண்களில் மட்டும் சிறிய பொறாமை தெரிந்தது. முத்துமுகம்மதுக்கு இவரைத் தெரியும். இவர் ஹ¨ஸைன் பாறுக்! தலைவரின் இணைப்பதிகாரி!

யார் வந்தது . .? ஏய் யார் நீ?”

சேர் நான் முத்துமுகம்மது. பள்ளிமுன. தலவர ஒடன பாக்கனும்”

அப்பிடி ‘ஒடன’ பாக்கேலா! டேய், யார்ரா நீ?”

சேர், நான் ஆவத்துல இரிக்கன் . . . லொச்சில மைம்னா . . . சப்புச் சுலுத்தான் ஏமாத்திப் பொட்டான் . . .ந்நரம் . . . சேர் . . . அல்லாறிய தலைவர் என்ன கோள் பண்ணி வெரச்சென்ன. பள்ளிமுன செய்லான் ஆசியாலீர் ஊட்ட...”

உன்னையா . . . அதுவும் கோள் எடுத்தா? ஏன் . . .சேர்வன்ற் வேலைக்கா . .?”

அல்லாறிய சேர்!”

பேரென்ன? மூத்தம்பியா?”

முத்துமுகம்மது சேர்!”

“‘சரி . . . பாப்பம் . . . தலைவர் இருக்காஹளோ என்னவோ . . . பாப்பம் . . . இப்பிடி இரி!”

உள்ளே போய்விட்டார். முத்துமுகம்மது மர நிழல் சீமெந்துக் கதிரையில் அமர்ந்தான். தரையெல்லாம் புல் வளர்ந்து வெட்டி பசுமையில் குளித்திருந்தது. குரோட்டன், காராமுட்டன், மல்லிகை, சின்னச் சின்ன ‘பொண்ஸாயி’, விருட்சங்கள், பத்தடி தூரத்தில் தலைவரின் கறுப்பு பஜரோ, மிக்க அமைதி . . . ‘காவ்க் . . . காவ்க்’ என்று கொழும்புக் க£கம், யாசீனின் கொட்டாவிகள் . . . நேரம் போய்க்கொண்டிருக்கிறது. முத்துமுகம்மது தவிதவித்துப்போய்வீட்டுக் கதவையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்க - ‘சட்’டென வீட்டின் உட்புறக்கதவு திறந்தது . . . அட . .! தலைவர் . .! எழுந்தோடிச் சென்று தலைவரின் கால்களில் விழுந்தான் முத்துமுகம்மது.

தலைவர் ‘பெற்றிக்’ சாரம் அணிந்து அரைக்கை பனியனுடன் மிக இளமையாகக் காட்சியளித்தார். செருப்பணியாத பாதங்கள் வெள்ளையாகப் பளீரெனத் தெரிந்தன. முகத்தில் அதே வசீகரப் புன்னகை. இவர்களை விநோதமாகப் பார்த்தார். அத்தனை நேரமும் அடக்கி வைத்திருந்த ஆற்றாமை வெடிக்க முத்துமுகம்மது பெருங்குரலில் அழுதான்.

எண்டல்லோ சேர் . . . சேர் . . .’ வார்த்தை முட்டிக் கண்ணீர் ஊற்றுப் பெருக்கித் தலைவரின் பாதங்களை நனைத்தது.

ஹே.. ஏய்! ஏய்! எழும்பு! எழுந்திரு! நீ . . . முத்து வாப்பா தானே . .?’

நான் முத்துமுகம்மது சேர் பள்ளிமுன . . .’

ஙா . . . அந்த புலிக்கடிதம்! ஓயெஸ்! நான் கோள்ள கதச்சது . . ?’

என்னோடதான் சேர். நான்தான் சேர்! கட்சி எளஞர் அணி’

முத்துமுஹம்மத் . . . பள்ளிமுனை இஸ்லாமியக்கட்சியின் இளைஞர் அணித் தலைவர் . . ? சரி! உள்ள வா! சாப்பிட்டியா?’

ல்ல சேர்! என்ட மை . . .ம்னாவ . . .’

செரி கதைப்பம்! வா! முதல்ல சாப்பிடுவம்! பசிக்குதா?!!’

சோறு திங்க நேரமில்ல ஸேர் . . . அவன் சப்புச் சுலுத்தான் . . . மைம்னாவ . . .’

இதப்பாரு, முத்துமுஹம்மத். ‘. . .போராளிகள் உணர்ச்சிவசப்படக் கூடாது . . . நிதானமாகச் சொல்லு. உன்னைச் செய்லான் ஹாஜியாரோட அல்லவா வரச் சொல்லியிருந்தேன் . . .’

க்ஹ்க்ம்ம . . . சே . . .ர் . . .மைம்னா . . .க்க்க்க’

இப்படி இரு . . . சரி சொல்’

தலைவர் உள்ளே நடந்து அசன்று அங்கிருந்த சாய்மணையில் அமர்ந்தார். முத்துமுகம்மதின் கதையைக் கேட்க ஆயத்தமானார். இணைப்பதிகாரி ஹ¨ஸைன் பாறுக் பக்கத்தே பவ்வியமாக நின்று கொண்டிருந்தார். முத்துமுகம்மது கோர்வையற்றுச் சொன்னான். விரைவாகச் சொன்னான். பதட்டமும் அழுகையுமாகச் சொன்னான். ‘மைம்னா . . . சொந்த மச்சி . . . வெளிநாடு . . . சுல்தான் . . .ப       £ஸ்போட் . . . எம்பிர சைன் . . . கூட்டி வந்து வழி தவிக்கவிட்டு . . .’ கேட்டுக்கொண்டிருந்த தலைவரே சிறிது பதட்டமானார்.

ஸ்டொப் இற் முத்துமுகம்மது! மிஸ்டர் பாறுக்! வெயர் இஸ் யூக்கே லொட்ஜ்!’

அற் த மரதான! நியர் த பொலிஸ் ஸ்டேஷன்.அக்கரைப்பற்று மௌலவிர லொட்ஜ் . . .’

டெலிபோன் . . .’

யெஸ் ஸேர்!’

கெட் இட் இம்மிடியட்லி’

10

¨ஸைன் பாறுக் உடனடியாகத் தொடர்பானார். விஸாரித்தார். முகம்மாறினார். முத்துமுகம்மது படபடக்கும் இதயத்துடன் பார்த்துக்கொண்டிருக்க தலைவரிடம் சொன்னார்.

சேர்! த லொட்ஜ் ஓணர் ஷெய்ட் தற் த . . .”

தமிழ்ள சொல்லுங்க . . .”

பள்ளிமுனைப் பெண்கள் இருவரும் ‘ஏர்போட்டுக்கு’ ‘சப்ஏஜன்ஸி’ சுல்தானுடன் காலை 10.30க்கெல்லாம் போய்ட்டாங்களாம். அந்தக் குமர்ப் பெண் அழுதபடி போனதைக் கண்டதாக ‘லொட்ஜ் ஓணர்’; சொல்கிறான்’

பத்தரைக்கா? ப்ப மணி? . . . ஐஸீ . . .’

முத்துமுகம்மதை ‘தெஹிவள’ சந்தியில் விட்டுவிட்டுச் சுல்தான் ‘டக்’கென்று மறுபடி ‘லொட்ஜூ’க்குப் போயிருக்கிறான். ‘எம்பி’ர ‘சைன்’ வேணுமென்டதெல்லாம் சும்மா பொய் . . .’

ஏன் முத்துமுகம்மதை அந்தரத்தில் விடனும்?’

சேர்! ஐ திங்க் த ஏஜென்ஸி வுட்ஹேவ் ட்ரை ட்டு ரேப் ஹெர்’

நோ . . . இம்பொஸிபிள்! பட் ஹெர் மதர் வித் தெம் ந்நோ . . ?’

என்ன சேர் . . .என்னயாம் சேர் . .?’

சப்போஸ் . . . ஹி வுட் ஹேவ் மிஸ் த மதர் ஓல்ஸோ ஸம்வெயா . . .’

நோ! ஆனா மூவரும் ஒன்றாகத்தானே ஏர்போட்டுக்குப் போயிருக்காங்க . . .’

யெஸ் . . . ஸேர் . . . பட் ஒன் த வே ட்டு; த ஏர்போர்ட்...?’

ம் . . .? இம்பொஸிபிள்... ஓக்கே! சரி முத்துமுஹம்மத்! அவங்க ‘ஏர்போட்டு’க்குப் போயிட்டாங்க. நீ நினைக்கிற மாதிரி பிரச்சினை இருக்காதுபோல. சிலநேரம் அவன்உன்னை வேதனைப் படுத்துவதற்காகவே இப்படி செய்திருக்கலாம். இனி நீ அவர்களைத் தேடமுடியாது. அவள் . . . யாரு . . . ஙா . . . மைமுனாச்சியை ‘ப்ளைற்றில ‘சென்ற் ஓப்’ பண்ணிட்டுத் திரும்பி லொட்ஜூக்கு வரட்டும். அதுவரைக்கும் நீ இங்கேயே இரு. மிஸ்டர் ஹ¨ஸைன்பாறுக்! ரிமைன்ட் மி எ பிவ் மினிட் லேற்றர் . . . ஓகே?’

ஓக்கே சேர்!’

சே...ர்... நா... நான் என்னய்ய சேர்?’

வெய்ற்! எனக்கு மீற்றிங் இருக்கு. இங்கேயே இரு! சரியா?’

அப்ப மைம்னா . .?’

அவங்கதான் எயார்போட்டுக்குப் போயிட்டாங்களே . . . இப்ப நீ லொச்சிக்குப் போய் என்ன செய்வாய் . .? ஒருத்தரும் அங்க இல்லை . . .”

செரி சேர்’ என்றான் முத்துமுகம்மது. மனம் கிடந்து அல்லாடியது. தலைவர் எழுந்துவிட்டார். தொலைபேசி ஒலிக்கவே இணைப்பதிகாரி எடுத்துச் சிறிய பரபரப்புடன்.

சேர்! ப்ரைம் மினிஸ்டர்ஸ் செக்ரட்டரி ஒன்லைன்’ என்றார். தலைவர் பேச ஆரம்பிக்க இணைப்பதிகாரி, முத்துமுகம்மதையும் யாசினையும் முன் அறைக்குச் கூட்டிச் சென்றார்.

'எப்ப மச்சான். லாத்தாட்டப் போற?”

பொறுடா! போவம். தலவரு எல்லாம் செய்வாக!’

முத்துமுகம்மதும் யாசீனும் வீட்டின் வாசலின் கொங்றீட்

        £ங்கில் அமர்ந்திருந்தனர். முத்துமுகம்மது பாதி நிம்மதியுடன் ஓரமாக ஒதுங்கி நீண்ட நேர பீடித் தாகத்தைத் தீர்த்துக்கொண்டு வாசலையே பார்த்துக்கொண்டிருந்தான். “. . .காத்து பட்டாலே கரையாதோ கற்பூரம் . . . ஒனக்கென . . .” மனசுக்குள் மலேசியா பாடிக்கொண்டிருந்தார். தலைவரைச் சந்திக்க வரும் கார்கள், சிங்களப் பிரமுகர்கள், அதிரடிப்படைகள், ஆங்கில உரையாடல்கள், சிரிப்புகள், சிங்களப் பேச்சுக்கள். மைம்னா பௌட்டுல ஏறியிருப்பாளோ . . . சுல்தான் . .? மாமி . .? சிங்கள நாகரிகப் பெண்மணிகள், சத்தமாகச் சிரித்தனர். பஜரோ ஜீப்பிலிருந்து சங்கீதம்.

திடீரெனத் தமிழ் வானொலி “. . . விசேட செய்தி ஒன்று . .! யாழ். நெல்லியடிப் பகுதியில் சற்று முன்னர் நடந்த தற்கொலைத் தாக்குதலில் நெல்லியடிப் பிரதேசத்தலைவரான திரு. சச்சிதானந்தன்     தவராசாகொல்லப்பட்டார். அவருடன் இரண்டு அதிரடிப்படையினரும் நான்கு பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். ங்ங்ங்ங்க்றிய்க்க . . . மேலதிக தகவல் கிடைத்ததும் நேயர்களுக்கு உடனுக்குடன் அறியத் தருவோம். தொடர்ந்து . . . காலத்தால் அழியாதவை நிகழ்ச்சியில் “கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ. . . காலம் இனிமேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ . .?’ எவ்வளவு நேரம் போனதோ தெரியாது. யாசீன் கொங்றீட் கட்டில் தூங்கிக்கொண்டிருந்தான். திடீரென,

ஏய். . . ஏய் . . . முத்துவாப்பா!” இணைப்பதிகாரி விரைந்து வந்தார்.

“. . . சேர் . . . சேர் . . . நான் முத்துமுகம்மது . . .” பதட்டமாக எழுந்தான்.

அவங்க லொட்ஜுக்கு வந்துட்டாங்க! போவம் ஏறு ஜீப்பில்”

யாசீன் டே... ஏர்ரா... ஏர்ரா...”

அங்கு நின்ற பொலிஸ் ஜீப்பில் இணைப்பதிகாரியும் முத்துமுகம்மதும் யாசீனும் இரண்டு பொலிசாரும் ஏற ஜீப் வேகமாய்ப் புறப்பட்டுப் பறந்தது. முத்துமுகம்மது மகா ஆனந்தம் கலந்த பதட்டத்துடன் பரபரப்பாக ஜீப் போகும் வழியெல்லாம் கறுவிக்கொண்டிருந்தான்.

டேய்! சப்புட அறாமி! நாயே . . . ஆரடா ஏமாத்தின . . .

பார்ரா முத்துமம்மத . . . கொளும்புப் பொலிசோட வாறன் . . . தலவர என்னண்டு நெனச்ச . . . கொறுக்கா ண்டா அவளவு எளப்பமா . . . மாளிர மகனே . . . பார்ரா . . . என்ன செய்றன் ண்டு பார்ரா . . .’

மனம் வஞ்சினம் கொண்டு துடிக்க எண்ணம் அடுத்த கணத்தில் மைமுனாவுடன் பறந்தது. கிளியே போய்ட்டியாடி கிளியாரே . . . மாநகரின் வர்ண வெளிச்ச சாலைகள். விர் விர்ரென்று பின்னால் பறக்கும் உயர்ந்த கட்டிடங்கள் . . . சிவப்பு . . . பச்சை . . . செம்மஞ்சள் சமிக்ஞைகள் . . .வாகனங்கள் . . . நியோன் விளம்பரங்கள் . . . தியேட்டரில் மாபெரிய நடிகர்கள் . . . சிங்கள நடிகையின் பிரமாண்ட மார்பு . . . அதில் சாணி . . . சுவரெங்கும் அதிஉத்தம சனாதிபதிஆர். பிரேமதாஸவின் யாவருக்கும் புகலிடம் . . . திடீரெனப் பாரிய சர்ர்ர்ருக்கல் ‘பிறேக்’குடன் ‘யூக்கே லொட்ஜ்’ வாசலில் நின்றது ஜீப்!

ஓ . . . இ . . . இதான் சேர் யூக்கட லொச்சி . . . யூக்கட லொச்சி . . .”

முத்துமுகம்மது முதலில் குதித்துப் பதட்டத்துடன் உள்ளே ஓடினான். மற்றவர்கள் தொடர்ந்தனர். வந்த ஒரு பொலிஸ்காரன் புயலாக ‘லொட்ஜ்’ அதிபதியின் அறைக்குள் புகுந்து அவனைப் பிடித்து இழுத்து ஒரு கேள்வியுமின்றி பளாரென அறைந்தான்.

கோ . .? கோபாங் சப்புச் சுலுத்தான்?”

அவன் ல்ல மாத்தையா?”

மொ..மொனக் காம்பரே . .?”

உடட்ட நொம்பர் நவய . . . காம்பரா சேர் . . . அடிக்க வேணா சேர்!”

ஒன்பதாம் அறை பூட்டியிருந்தது. பொலிஸின் ஒரே உதையில் பிளைவூட் பலகை கற்புக் குலைந்து விரிந்தது. உள்ளே தலைவர் ஒட்டப்பட்டுச் சிரித்துக் கொண்டிருந்தார்.

£ருமில்லை. ஆனால் எட்டாம் அறையிலிருந்து அடி உதைச் சத்தங்களால் மிரண்டு போன மாமி பயத்துடன் ஓடி வந்தாள் . . .

'டெ.. யாசின் . . . என்ட மகனே . . . வந்துட்டியா . . .ராசா . .?

மாமி! மைம்னா எங்கே . . . சுல்தான் எங்க?”

ஆரு நீயா? டெ, கொறுக்காப்புளியா! நீ ஒரு மனிசனாடா? கொளும்புக்குக் கூட்டி வந்த இதுக்குத்தானாடா . . . ஊருக்கு வா! கட்றன் மருந்து! ஓவ்!!” திடீரென மாமி தாறுமாறாக ஏசத் தொடங்கி விட்டாள் . . .

மாமி! என்னது? ஏன் ஏசுறாய், சப்புட அறாமி என்னையும் யாசீ . . .”

வாயப் பொத்துரா! நீயும் ஒரு மனிசனாடா கொறுக்காட அறாமி!”

ஏ . . . ஆச்சி? கவ்த கோ . . . கோ . . . சுல்தான்?”

ம்மா . . . மைம்னா லாத்தா எங்கஹா?” யாசீன் பெருங்குரலெடுத்து அழுதான் . . .

போய்ட்டாள்ளா ராசா . . . ஒப்பாரி வெச்சிட்டுப் போறாள்ளா . . . லாத்தா . . .”

ஏய் . . . ஆச்சி . . . கோ . . . ஜூல்தான்?”

மாமியின் ஏச்சுக்குக் காரணம் புரியாத முத்துமுகம்மது குழம்பிக்கொண்டிருந்தபோது, இக்களேபர நிலையைச் சற்றும் எதிர்பாராத சப்புச் சுல்தான் அப்போதுதான் படியேறி உல்லாசமாக வந்துகொண்டிருந்ததைக் கண்டான்.

ந்தா வாறான் சேர்! வேந் தான் சுலுத்தான்! டேய், மாளிர மஹன! நாய . . . ஆரடா ஏமாத்தின நீ . . .”

முத்துமுகம்மது ஆத்திரமாய் ஓடிச் சப்புச் சுல்தான் மீது விழுந்து நெஞ்சில் இடித்தான். சுல்தான் சுதாகரிப்பதற்குள் மறுபடி மறுபடி பளீரென அடித்தான். பொலிஸ்காரன் இடையில் புகுந்து முத்துமுகம்மதை இழுத்து எறிந்துவிட்டுச் சுல்தானின் வயிற்றில் முழங்காலால் இடித்தான். சுல்தான், “ஹ . . .ஹ்க்” கென்று காற்றடைத்துச் சுருண்டு விழுந்தான். பொலிஸ்காரன் மறுபடி முதுகில் படீரென அறைந்தான்.

என்டம்மோவ் . . . அல்லோ . . . கஹன்ட எப்பா ம   £த்தயா . . .” சுல்தானின் கதறலில் மாமி ஆவேசமாகி இடையில் புகுந்து சுல்தானை மல்லுக்கட்டி விடுவித்தாள்.

அடியாத! அடியாத! சொல்றத்தக் கேளும்பி . .!”

டேய், முத்தும்மது பொலிஸ கூட்டிக்கந்து அடிக்கியா . . .

நீ . . .”

அடொ! கோ மெயகே பொம்புள . .?”

கொறுக்கா . .! மாளிர . . .”

பொறு! பொறு! ஸ்டொப்! நவத்தண்ட ஒக்கோம!” இணைப்பதிகாரியின் பெருங்குரலில், திடீர் அமைதி ஏற்பட்டது. சப்புச் சுல்தான் ஆவேசமாக எழுந்து கிடைத்த சிறு அவகாசத்தில் சிங்களத்தில் கடகடவென்று சொன்னான். உடனே பொலிஸ்காரன் வாயிலடிக்க ‘ஊய்க்’கென்று வாய் பொத்தித் துவண்டான்.

பெரியம்மா! நீங்க சொல்லுங்க! என்ன நடந்தது?” இணைப்பதிகாரி ஹ¨ஸைன்பாறுக் அமைதியாகக் கேட்டார்.

நீ ஆருவாப்பா? சொல்றன் கேளு சுல்தான் தம்பியில ஒரு குத்தமும் ல்ல . . . வேந்தான் . . . முத்தும்மது எம்பிட்ட சைன் வாங்கித்தாறண்டு செல்லிட்டுச் சுல்தானக் கூட்டிப் போய் ஏமாத்திப் போட்டு ஓடிட்டான். வாப்பா! என்ட மகள் வெளிநாடு போற வேனுக்குப் புடிக்கல்ல . . . அதான் . . .

என்ட மகனயும் கடத்திப் போய் ப்பான் ன்னா கொண்டாந்திரிக்கான் ந்தக் கொறுக்காட பேயன் . . .” மாமி கடகவென்று வாக்குமூலம் ஒப்புவித்தாள்.

மாமி! பேக்கத கதையாத!”

என்னடா பேக்கத? ஆருடா கதைக்கிற? நியாண்டா தொரோகி! எம்பிர கடிதம் ல்லாம யாப்போட்டுல ஐயாயிரம் ரூவா லெஞ்சம் குடுத்து... என்ட மகள் போன . . .”

சரி! அப்ப உங்கட மகள் போய்விட்டாள்? பிரச்சினை இல்லை . .?”

ஒரு பெரச்சினையும் ல்ல வாப்பா! ந்தக் கொறுக்காதான் ‘கசிலி’ பன்றான்”

கே . . . கேட்டீங்களா . . . ஏன் எனக்கி அடிக்கறீங்க? மாத்தயோவ் . . .வ்!”

மாமி . . . வெளங்கா மணிமாலையா கதையாத! யாசினுட்டக் கேளு . . . ந்த சப்புட அறாமி செஞ்ச வேலய . . .”

பச்சப் பொய்!”

செல்லண்டா சில்லித் தலையா . .!”

“... ...”

யாசின், அவன் சின்னப் புள்ள . . . நீ வாடா மனே . . .உள்ளுக்க போடா!”

£சீன் மிரண்டு போய் தாய்க்குள் புதைய, இணைப்பதிகாரிக்கு நேரம் அவசரப்படுத்தியது.

சரி சரி, முத்துமுகம்மது! இப்ப என்ன செய்யப் போகிறாய்?”

முத்துமுகம்மது தீர்மானமேதுமின்றி திமிர்த்துப் போயிருந்தான். எல்லாம் கைமீறிப் போய்விட்டது. மைமுனாக்கு இவன் ஏதும் கறுமம் செஞ்சிரிப்பானோ . .? மைமுனாவே கைமீறிப் பறந்துவிட்டாள். இனி என்ன . . . எதுவுமில்லை. இனி இருந்தென்ன? இறந்தென்ன? இரண்டுபொலிஸ்காரனும் ஒதுங்கிப் போய் பதட்டமின்றி சிகரெட் புகைத்தனர். சப்புச் சுல்தான் தாடையைச் சரிப்படுத்தித் துடைத்துக்கொண்டிருந்தான். பார்வையில் வன்மம் அகோரமாய் தெரிந்தது.

பெரியம்மா எப்ப ஊருக்குப் போற?”

ண்டைக்கே போறன் வாப்பா!”

சரி . . . முத்துமுகம்மது . . . என்ன செய்யப் போறாய் . . .கூடப் போறியா . . . ல்ல . . . பொலிசிக்கிப் போறியா . .?”

இனி . .? ஊருக்கு . . . போய் . . . மைமுனா இல்லாத பள்ளிமுனை . .?

சேர், நான் தலைவர்ர ஊட்ட வாறன்! அவஹளுட்ட கேட்டுட்டுச் செல்றன் . . .”

சரி வா!”

சுல்தான் முரசில் இரத்தத்துடன் - புறுபுறுவென்று இராவிக் கொண்டிருந்தான்.

ஏமாத்தினவன உட்டுட்டு என்ன அடிக்கிறீங்க . . . இதானா ஒங்கட கச்சிர சனநாயகம் . .? இவன் கொறுக்காவப் புடிச்சி ‘ரிமான்ட்’ பண்ணாட்டி நான் பெரிய ஓஅய்ஷி’யிலரிந்து சனாதிபதி மட்டுக்குப் போவன் . . .”

முத்துமுகம்மது சப்புச் சுல்தானின் அறைக்குள் புகுந்து தனது உடமைகளை எடுத்தான். வெளியே வந்தான்.

கொறுக்காட அறாமி! ஊருக்கு வா . . . நீ! பாக்கன் . . .

உண்ட கணக்குப் பாக்காட்டி நான் வட்டுட மகனில்லடா . . .”

போடா வட்டுட அறாமி . . . பூனா மானா! என்ட மசிரயும் ஒன்னால அசைக்க ஏலா . . . மைம்னாட்ட இரிந்து ஒரு வெசளம் வெரட்டும் . . . உன்ன இல்லத் தாக்குவன் நானு . .!”

“...”

யமுத? றாளாமி! யா . . . யங்!” யூக்கே லொட்ஜ் வாசலில் சனம் கும்மென்று குழுமி நிற்க, முத்துமுகம்மதும் சகாக்களும் ஜீப்பில் ஏறினர். ஒரே சீறலில் பறந்தது ஜீப்.

தலைவரே . . . இனி மைமுனா இல்லை . . . எனக்கு எல்லாம் நீங்கதான் . . . ம்மா . . . வாப்பா . . . எல்லாம் தலவருதான் . . .”

இனி நான் ஒங்குட அடும! அடும! அல்லாவே . . . மைதின் ஆண்டவரே . .! எங்க இருந்தாலும் என்ட மைம்னாவ காப்பாத்துங்க . . .” நினைவுகள் கனக்க சோர்ந்திருந்த முத்துமுகம்மது ஜீப்பின் வேகத்திலேயே . . . கண் அயர்ந்து போனான்.

இறங்கு! இடம் வந்துட்டுது . . .”

தலைவரின் வீடு! முத்துமுகம்மது பரபரப்புடன் விழித்து ஜீப்பிலிருந்து குதித்தான். அதிசயமாகத் தலைவர் வீட்டினுள் ஓய்வாக உலாவிக் கொண்டிருந்தார். முத்துமுகம்மது ஓடிச் சென்று அவரது காலடியில் விழுந்தான்.

“ . . . நா . . . இனி உங்கட அடும . .!” கேவிக்கேவி அழுதான்! தலைவரின் கால்களைக் கெட்டியாகப் பற்றிப் பிடித்துக்கொண்டான். அவனது கண்ணீர் வெள்ளத்தால் தலைவரின் பாதங்கள் ஈரமாயின. அவனது வேக்காடு தீருமட்டும் சிறிது நேரம் அவன் போக்குக்கே விட்டிருந்த தலைவர், முத்துமுகம்மதை எழுப்பி அவனை நேருக்கு நேராகப் பார்த்தார் பின் திடீரென,

முத்து முஹம்மத்! சரி, போய் குளித்து உளு செய்து கொண்டு வா!” எஜமானிடமிருந்து அடிமைக்கு முதலாவது உறுதியான கட்டளை பிறந்தது.

11

 

£லப்பறவையின் நாள்இறகுகள் தினமும் ஒவ்வொன்றாக உதிர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. திகதிகள் திரும்பிப் பார்ப்பதுமில்லை. முத்துமுகம்மது தலைவரே கதியென்று அவரது வீட்டிலேயே ஒதுக்குப் புற அரையில் குடியேறி ஆறேழு மாதங்களாகிவிட்டன. முத்துமுகம்மதுக்கு இன்ன வேலை என்றில்லை. எல்லாம்செய்தான். வெளிநாட்டுக்குப் பறந்துவிட்ட மைமுனாவிடமிருந்து ஒரு தகவலும் வரவில்லை. அறியவும் விருப்பமில்லாதிருந்தது. ஆனால், மைமுனாவின் கூரான மூக்கும் அப்பாவி உருண்டை விழிகளும் சுரீர் . . . சுரீரென்று நெஞ்சில் அடிக்கடித் தைத்தது. வலித்தது. “கோயில் மணி ஓசை . . . தன்னைக் கேட்ட தாரோ . . . இங்கு வந்ததாரோ . . .” ஊருக்கே போகவில்லை. மைமுனா இல்லாத பள்ளிமுனையை அவன் விரும்பவில்லை. பள்ளிமுனையின் “வெத்திலைக்காரன் தோட்டம்” கூட நினைவில் வரவில்லை.

முத்துமுகம்மது, தலைவரின் வாகனம் கழுவினான். வீடு பெருக்கினான். தலைவரின் உடைகளைக் கழுவினான். சாரதிக்குச் சிநேகிதமாகி பஜரோ செலுத்தப் பழகினான். செடிகளுக்கு நீரூற்றினான். வாசல் பெருக்கினான். கடைகளுக்குப் போய் வந்தான். வீட்டுக் காவலுக்கிருந்த பொலிஸ்காரனுடன் சிங்களம் பேசிப் பழகினான். இக்காலப்பகுதியில் கொழும்பில் இடம்பெற்ற புறக்கோட்டை பஸ்குண்டுவெடிப்பு, முக்கிய கட்சித் தலைவர் ஒருவர் தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்ட போது ஏற்பட்ட கலவர நிலைகள், யுத்த நிறுத்த உடன்படிக்கையை அடிக்கடி மீறும் சிறுசிறு தாக்குதல்கள், வெள்ளை வேனில் கொழும்பின் கோடீஸ்வரப் பிரமுகர் கடத்தல், கப்பம், வெள்ளவத்தைச் சற்றி வளைப்புக்கள், கைதுகள், விடுவிக்கப் போராட்டம், பள்ளிச்சிறுவர்களின் பாடசாலை வாகனத்தில் குண்டு, சிதறி மரணித்த பிஞ்சுகள், தொடர்ந்த கலவரங்கள், இராணுவத் தலைமையகம் மீதான அதிரடித் தாக்குதல்கள் . . .

 

அப்பப்பா . . . முத்துமுகம்மது இப்படி எத்தனையோ அசம்பாவிதங்களுக்கு முகம் கொடுத்தும் கண்டுணர்ந்தும் படிப்படியாக          ஒரு     நகர   இளைஞனாக மாறிக்கொண்டிருந்தான். அடிக்கடிப் பக்கத்து வீதியிலுள்ளஉபதபால் கந்தோரிலிருந்து பள்ளிமுனைக்கு டீக்கடைநெய்னாருடனும் ஜாபிர் மற்றும் நகீபுடனும் மட்டும் தொலைபேசி வந்தான்.

சப்புச் சுல்தான் மாமியைத் தந்திரமாக ஏமாற்றி மைமுனாவுக்கு முட உதுமான் மாமாட பெண்சாதிக்குச் செய்த துரோகம்போல . . . ச்சே . . . மைமுனா இலேசாக ஏமாறுகிற ஆளில்லை. ஆனால் பலவந்தமாக . . . ஏதும் செய்திருப்பானோ . .? சப்புச் சுல்தான் மீதான வெஞ்சினம் ஒரு நீறு பூத்த ஒரு பூகம்பமாக உள்ளே கனிந்து கொண்டிருந்தது. சப்புச் சுல்தானின் கொழும்பு அந்தஸ்தைவிட மிஞ்ச வேண்டும். அவனைப் பழி வாங்கியே ஆக வேண்டும்.

இப்படிச் சில வேப்பங்காய் நினைவுகள் தவிர வேறு ஒரு சிறிய தொல்லைகூட முத்துமுகம்மதுக்கு இருக்கவில்லை. கொஞ்ச நாட்களின் பின் முத்துமுகம்மதுக்கு வேலை உயர்வும் ஆடை உயர்வும் கிடைத்தன. டெனிம் லோங்ஸ¨ம் புல்ஸ்லிப் சேர்ட்டும் அணிந்துகொண்டு காணப்பட்டான். இணைப்பதிகாரி ஹ§ஸைன் பாறுக் கட்டளையிடும்  £ரியங்களை மட்டுமே செய்து வந்தான். அதாவது, தலைவரின் படிப்பறையைச் சீராக வைத்திருத்தல், காகிதாதிகள் பத்திரிகைகள் அடுக்கி வைத்தல், தலைவரைச் சந்திக்க வருகை தருவோருக்குக் குர்தா ஆடை அணிந்து குளிர்பானம் தந்துபசரித்தல், இத்தியாதிகள்.அதன் பின், இன்னும் ஒருபடி 'வேலை உயர்வு” கிடைத்தது. அது, தலைவரின் வாகனத்தில் தலை வருடனேயே போக்குவரத்துச் செய்தல். தலைவரின் தேவைகள் அடங்கிய பெட்டி ஒன்றைப் பத்திரமாக வைத்துக்கொள்ளல், வாகனத்தின் ஒரு மூலையில் இருத்தல், தலைவரை உணர்வு பூர்வமாக பாதுகாத்தல், தலைவரின் ஒவ்வொரு உரையையும், அவரது பேச்சுக்களையும் உன்னிப்பாக அவதானித்துக் கிரகித்தல், அதனூடாக அரசியல் கற்றல்.

தலைவர் அவன்மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். கட்சி உயர்பீட உறுப்பினர்களில் முத்துமுகம்மதின் பெயரும் தலைவரின் அதிகாரத்தின் பேரில் சேர்க்கப்பட்டிருந்தது. அவனும் அவர்மீது உயிரையே வைத்திருந்தான். இப்படி முத்துமுகம்மது தலைவருக்குத் தெரிந்தவர்களுக்கெல்லாம் தெரிந்தவனாகியிருந்தான். தெரியாத பேர்களுக்கு நிழல்முகமாயிருந்தான். தலைவரை ஏதும் தேவைக்காக அணுகுபவர்கள் முத்துமுககம்மதின் தயவு பெற்றுப் பயனடைந்தனர்.

கட்சி உயர்பீடத்தினரிடையே இப்போதெல்லாம், முத்துமுகம்மதைப் “பெட்டி தூக்கி” என்றால் இலேசாக விளங்கும். கட்சியின் மூத்த துணைவர், கொள்கை பரப்புச் செயலாளர், தேசிய அமைப்பாளர், எல்லோரும் முத்துமுகம்மதைத் தனிமையில் கண்டால், வெகு நக்கலாகச் “செலாமலைக்கோம் மச்சான் பொட்டிதூக்கி!” என்பார்கள்.

£வட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் சந்திக்க நேர்ந்தால், “கொறுக்காப்புளி என்ன வெல . .?” என்று விசாரித்தார்கள். இவைபற்றி ஒருபோதும் அவன் அலட்டிக்கொண்டதில்லை. என்றாலும் அந்தப் “பொட்டிதூக்கியை” அவர்கள் மரியாதையாக விழிகள் உயர்த்தி ஆச்சரியமாகப் பார்க்க வைத்த அந்த ஒரு சம்பவம் மட்டும் நடந்திராவிட்டால் முத்துமுகம்மதின் வாழ்க்கையே திசைமாறியிருக்கும்.

அந்த அதிரடிச் சம்பவத்தை அன்றைய செய்தி ஊடகங்கள் அலறிப் புடைத்துக்கொண்டு ஒலி ஒளிபரப்பின. தொலைபேசிகள் அலறின. வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் உலகெங்கும் வையக விரிவு வலையை விரித்தனர். தென்கிழக்கிலங்கையின் ஊர்கள் ஒருகணம் அதிர்ந்து போய் தெருவெல்லாம் வெறிச்சிட்டன. பள்ளிமுனைக் கிராமம் பதட்டத்தின் உச்சத்தில் பரிதவித்தது. பெரும் அமளிதுளிப்பட்டது. அரசியல் வட்டாரங்கள் அலறி ஓடித் திரிந்தன.

இஸ்லாமியக் கட்சித் தலைவரின் வாகனம் மீதுகிரனைட் வீச்சு!

தலைவர் மயிரிழையில் உயிர்தப்பினார்!

பிரத்தியேகச் செயலாளர் முத்துமுகம்மது படுகாயம்!!

சாரதியும் பாதுகாப்பு உத்தியோகத்தரும் பலி!!!

(கொழும்பு வலய, மத்தி, மருதான நிருபர்கள்)

இலங்கை இஸ்லாமியக் கட்சித் தலைவரும் திகாமடுல்லப£ராளுமன்ற உறுப்பினருமான எம்.எச்.எம். இஸ்ஹாக் சட்டத்தரணி அவர்கள் சென்ற வாகனம்மீது மருதானை பஸ்வெனி ஹந்திமாவத்தையில் வைத்துப் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட ஒரு கிரைனைட் தாக்குதலில் வாகன சாரதி ஜனாப் ஏஸீயெம். அன்வர் (28), பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு. தில்ருக்ஸா டீ சில்வா (33) ஆகியோர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். வாகனத்திலிருந்த தலைவரின் பிரத்தியேகச் செயலாளரும் கட்சியின் இளைஞர் அணித் தலைவருமான ஜனாப். எம். முத்துமுகம்மது (24) தலைவரைக் காப்பாற்றும் முயற்சியில் படுகாயமடைந்து உயிராபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெய்வாதீனமாகத் தலைவருக்கு எதுவிதக் காயங்களுமின்றி உயிர் தப்பினார். இதுபற்றி மேலும் தெரிய வருவதாவது . . .

மேலும் தெரிய வேண்டிய அவசியமே இருக்ககவில்லை. உண்மைகளும் வதந்திகளும் கலந்து பரவிய வேகத்தில் மாவட்டமே ஆடிப்போய்விட்டது. பள்ளிமுனைக் கிராமமேச£ப்பிடவும் தோன்றாமல் பரபரப்பில் பரிதவித்தது. முத்துமுகம்மதே தனி ஒரு உப செய்தியாயிருந்தான்.

தக்கொலப்பட பாஞ்சயாம். தலவருதப்பின ஒருதப்பு!”

புலி தலவர கனநாளா குறிவெச்சிருக்கான். மைதின் ஆண்டவரே . .!”

மத்தப் பாட்டிர வேலயாம் ண்டு லண்டன் ‘வீவிஸி’ ல செல்றான்”

கிரினிட்டு எறிஞ்சயாம். எறிஞ்சவன் ‘சயனட்’டுச் சப்பிச் செத்துட்டானாம்;”

வேம் முத்தும்மது எங்கடா அங்க போய்ப்பட்டான்”

தலவர்ர நெஞ்சிக்கி வந்த குண்ட நம்முட முத்தும்மது பாஞ்சி புடிச்சயாம்”

முத்தும்மது . . . நம்முட கொறுக்கா . .?”

பொத்துரா வாய! அவரு எங்கட எளஞர் அணி தலவரு”

முத்தும்மதுட ம்மாக் கெழவிட்ட ஆரோ போய் முத்தும்மதுக்கு சீரியஸ்’ண்டு சென்னயாம். மனிசி உழுந்துட்டா . . .”

ஆஸ்வத்திக்கி ஏத்திரிக்கி”

நெய்னாரும், ஜாபிரும் கடையப் பூட்டிட்டுப் போயிருக்காகக் கொளும்புக்கு!”

ஊர் வம்புகளுக்கு உச்சவரம்பு இருப்பதில்லை. எனினும் வதந்திகளுக்குள் உறையும் உணர்வலைகளின் பிரதிபலிப்புகள் ஆபத்தானவை. அந்த வாரம் முழுக்க ஊடகங்களும் தம்பாட்டுக்கு விதவிதமான ‘ஹேஸ்யங்களை’ கேள்விக்குறி(?)          உபயங்களுடனும் நம்பப்படுகிறது, கூறப்படுகிறது என்ற செயற்பாட்டு வினைகளுடனும் மிகவும் அலட்டலாகவும் ‘அலேர்ட்’ டாகவும் இயங்கின. பத்திரிகைகள் பக்கங்களைச் சூடேற்றிப் பரபரப்பாய் விற்பனையாயின.

தினகரன் -

இஷாக் மீதான கொலை முயற்சி! ஜனாதிபதி கண்டனம். பிரதமர் அதிர்ச்சி! கவலை!!

நவமணி -

இலங்கையில் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பில்லை என்பதற்கு இதைவிட என்ன அத்தாட்சி தேவை?

இஷாக் எம்.பி. பாராளுமன்றத்தில் ஆவேசம்! இரண்டு மணி நேரம் விசேட உரை.

பிரத்தியேகச் செயலாளர் முத்துமுகம்மது ஆபத்தான கட்டத்தைத் தாண்டினார்.

தினமுரசு -

காத்திருந்த கரும்புலி! குறியாருக்கு?

திவயின -

மேலும் பல அரசியல்வாதிகளைக் கொல்லும் புலிகளின் திட்டம் அம்பலம் . .! கைது செய்யப்பட்ட புலிப் பயங்கரவாதி தகவல். புலிகளுக்குக் கட்சித் தலைவரையோ முத்துமுகம்மதையோ கொல்லும் இலக்கு இல்லையாம்.

வீரகேசரி -

இஷாக் கொலை முயற்சி! புலிகளின் பெயரால் தாக்குதல் . .? அரச தரப்பின் மீது சந்தேகம் என்கிறது தமிழர் தாயகக் கட்சி.

அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பாதுகாப்பில்லை!!

அல்ஹ¨தா -

நாளைத் தென்கிழக்கு எங்கும் பூரண ஹர்த்தால்.

முஸ்லிம்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும்!

தினமணி -

முத்துமுகம்மது தேறி வருகிறார்! கொல்லப்பட்டோருக்கு நிவாரணம்.

“ . . . படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தலைவரின் பிரத்தியேகச் செயலாளர் ஜனாப் முத்துமுகம்மது ஆபத்தான கட்டத்தை தாண்டி தேறி வருகிறார்! என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. சத்திரச் சிகிச்சையின் பின் முத்துமுகம்மதுவின் இடது கையிலுள்ள நடு மூன்று விரல்களும் மோசமாகப் பா £திக்கப்பட்டிருந்ததால் அவை அகற்றப்பட்டுள்ளன. முத்துமுகம்மதைத் தலைவர் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். உயர்பீட உறுப்பினர்களும் தினமும் சென்று பார்வையிட்டு வருகின்றனர். இன்று அவர் மருதானை பொலிஸாருக்கு அளித்த வாக்கு மூலத்தில் . . .”

இத்தனை தலைப்புச் செய்திக் குவியல்களுக்கும் மத்தியில் - “படுகாயமடைந்த முத்துமுகம்மது தலைவரின் பிரத்தியேகச் செயலாளர் அல்லர்!” என்ற மூத்த துணைவரின் மறுப்பறிக்கையும், “எமது இயக்கத்திற்கும் இச்சம்பவத்திற்கும் தொடர்பில்லை. புலிகள் நிராகரிப்பு” என்ற செய்தியும் இரண்டாம் பக்கத்தில் தள்ளப்பட்டுக் கிடந்தன. ஞாயிறு வெளியான ‘களம்’ வாராந்தரியில் - “விரல்களை மட்டுமல்ல தலைவருக்காக உயிரையும் இழக்கத் தயார்!” இளைஞர் அணித் தலைவரும் கட்சியின் தீவிர போராளியுமான முத்துமுகம்மதின் பரபரப்பான பேட்டி உள்ளே . .! வெளியே, முத்துமுகம்மதின் கலர் புகைப்படம்.

விதி எழுதிய வாழ்க்கை நவீனத்தில் ஒரு வருடத்துக்கு முதல் யாரென்றே தெரிந்திராத முத்துமுகம்மது நாடு முழுக்க தெரிந்தவனாகவும் பள்ளிமுனையின் இளைஞர்களின் ஆதர்ஷ கதாநாயகனாகவும் ஆகிவிட்டிருந்தான். அடுத்தவ£ரமே முத்துமுகம்மது ஆஸ்பத்திரியிலிருந்து விடுவிக்கப்பட்டுப் பழையபடி தலைவரின் வீடு வந்து விட்டான்.தாடிமாஸ்டரின் உபயத்தில் டீக்கடை நெய்னாருடன் தாய்க் கிழவி ஒருதடவை கொழும்பு வந்து இவனதுஊனக்கையைப் பிடித்து ஒரு பாட்டம் அழுது அரற்றி ஒப்பாரித்து தலைவரின் மனைவி கொடுத்த பத்தாயிரம் ரூபாவுடன் மிக்க நிம்மதியுடன் ஊர் போய்ச் சேர்ந்தாள். இரண்டு வாரங்கள் ஆஸ்பத்திரியிலும் இங்கும் கூடவே இருந்து கவனித்துவந்த ஜாபிரும் ஊர் போய்விட்டான். வேறு எவரும் பள்ளிமுனையிலிருந்து வந்து சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. இச்சம்பவத்தின் பின் ஊனக் கையானபோதும் முத்துமுகம்மது முன்னரை விடவும் தலைவருக்கு விசுவாசமான டை கட்டிய காவல் நாயாகவே ம£றியிருந்தான். தலைவரிடமிருந்து எத்தனையோ விஷயங்களை அவதானித்து, கிரகித்துப் பழகிக்கொண்டான். அழகான மெல்லிய தாடிகூட வைத்திருந்தான்.

இப்போதெல்லாம் சிங்களம் இயல்பாகவே விளங்கியது. ஆங்கிலம்கூடக் கொஞ்சமாய் பேசவும் முடிந்தது. தலைநகரின் வீதிகளும் சந்து பொந்துகளும்கூடப் பரிச்சியமாகின. கட்சி அலுவலகம், பாராளுமன்றம், வங்கி, பொலிஸ் நிலையம், தொலைபேசி, தொலைமடல், அரச அதிகாரிகள், ஏஸி, காலிமுகத்திடல், ரூபவாஹினி, ஊனக் கைகளால் பஜரோவ      £கனம்கூட ஓட்ட எல்லாம் பழக்கமாகின. முத்துமுகம்மதின் பள்ளிமுனைக்கிராமத்தனம் பூரணமாகத் தொலைந்து விட்டிருந்தது. அவனுக்குள் ஒரு நகர இளைஞன் உருவாகியிருந்தான். இத்தனைக்குள்ளும் மைமுனாவின் கனவு மட்டும் ஒரு சிறிதும் குறையாது அமிழ்ந்தும் எழுந்தும் வேதனைப்படுத்தியது. அவளிடமிருந்து ஒரு தகவலும் வரவில்லை. இந்நேரம் மைமுனா யாரும் ஒரு சவுதி எஜமானனின் கட்டிலில் . . . ச்சீ . . . இருக்காது பாவம்!

பிரதேச சபைகளுக்கான தேர்தல் காலம் நெருங்கிக்கொண்டிருந்தது. ஒருநாள், தலைவர் அவசரமாகத் தேர்தல் ஆணையாளரைச் சந்தித்தார். திரும்பி, வாகனத்தில் தலைவருடன் வரும்போது முத்துமுகம்மதே வாகனத்தைச் செலுத்திக்கொண்டு வந்தான். கூடவேயிருந்த இணைப்பதிகாரி தலைவரிடம்,

சேர், முத்துமுகம்மது இஸ் எ குட் ரைவர்! ட்ரைவிங் தரோ . . . கமிங் பிரதேச சபை எலக்ஸன் டைம்ல நல்ல ஹெல்ப்புலலா இருப்பான் . . .” என்றார். ஆனால், தலைவர் புன்னகைத்து -

முத்துமுகம்மதுக்கு ட்ரைவிங்’ மட்டுமல்ல. அரசியலும் தெரியும்! மிஸ்டர் ஹ§ஸைன் பாறுக், முத்துமுகம்மதுதலைவருக்காக மூன்று விரல்களைத் தியாகம் செய்திருக்கிறான். அந்த ‘இன்ஸிடென்ட்’ நடந்த சமயம் . . .

முத்துமுகம்மது மட்டும் என் முகத்தருசே வந்த குண்டைப் பாய்ந்து பிடித்திராவிட்டால் . . . தடுத்திருக்காவிட்டால . . . அல்லாஹ்வே . . . என் முகமே பிய்ந்து போயிருக்கும் . . .அதற்குப் பதிலாக முத்துமுகம்மதின் மூன்று விரல்கள் . . .இரண்டு உயிர்கள் . .!”

என்ட            உசிரு            போளாலும் நான்  உங்களக்க  £ப்பாத்துவன் சேர் . . .”

 “... ...”

யெஸ், மிஸ்டர் ஹ§ஸைன் பாருக்! முத்துமுகம்மது எனக்காக இழந்த மூன்று விரல்களுக்கும் நான் மூன்று பரிசு கொடுக்க இருக்கிறேன்.” இணைப்பதிகாரிக்குப் பொறாமையாக இருந்தது. முத்துமுகம்மதுக்கு வெட்கமாக இருந்தது. பேசாமல், வாகனம் செலுத்துவதில் குறியாயிருந்தான். தலைவர் விடவில்லை.

என்ன பரிசுகள் தெரியுமா? யெஸ், மிஸ்டர் ஹ§ஸைன் பாறுக்! முதலாவது . . . ஐம் கோயிங் டு மேக் ஹிம் அஸ்த சேர்மன் ஒப் த வயற்சேனை ப்ராதேஸ்ய சபா . . .”

சர்ர்ர்ர்ர்க்க்க்”கென்று கிறிச்சிட்டு நின்றது வாகனம்.

இணைப்பும் முத்துமுகம்மதும் திடுக்கிட்டுப் போயினர்.

இற் இஸ் த குட் ஜோக் சேர்!” இணைப்பதிகாரி திடீர் என்று உச்சப் பொறாமையுடன், கோபமுற்றுச் சிரித்துச் சிரித்துக் குலுங்கினார். முத்துமுகம்மதுக்குச் சட்டென விளங்கிவிட்டது. தலைவரின் மர்மமான புன்னகையும் இணைப்பதிகாரியின் கண்களில் பளிச்சிட்டு மறைந்த பொறாமை சுடரும் அவனைத் திகிலடையச் செய்தன.

இட் இஸ் நொட் எ ஜோக்! பிரதேசச் சபைத் தேர்தலில் முத்துமுகம்மதைத் தலைமை வேட்பாளராக ஆக்கப் போகிறேன் . . .”

தலைவரின் குரலில் தெரிந்த உறுதி, இணைப்பதிகாரியைச் சட்டென வாய் மூடவைத்தது. முத்துமுகம்மது நிமிர்ந்து உட்கார்ந்தான்.

12

 

திடீரென்று தேனீர்க்கடை நெய்னார் முத்துமுகம்மதைச் சந்திக்கவும் தலைவரிடம் பற்பல உளவு சொல்லவுமாகக் கொழும்பு வந்திருந்தான். பிரதேச சபைத் தேர்தல் வேட்பாளர் தெரிவுக்காகப் பள்ளிமுனை இஸ்லாமியக் கட்சிக் கிளையினர் கொழும்பு வரவிருப்பதாகத் தெரிவித்தான். சொன்னபடியே பள்ளிமுனை இஸ்லாமியக் கட்சிக் கிளையினர், தலைவரைச் சந்திக்கவும், வேட்பாளர் தெரிவுக்குமாக கொழும்பு வந்து சேர்ந்தனர். செய்லான் ஹாஜியார் இரண்டு மினிபஸ் நிறைய ஆதரவாளர்களோடு வந்திருந்தார். அடுத்த பிரதேச சபைத் தவிசாளர் (சேர்மன்) பதவிக்காகத் தயார் நிலையில் வந்திருந்தார். ஆதரவாளர்கள் ஓசிப் பிரயாணச் சுகத்திலும் ‘கொழும்பில் தலைவரைச் சந்தித்து மீண்ட செம்மல்கள்’ பட்டியலில் சேர்ந்துகொள்ளும் திமிரிலும் இலயித்திருந்தனர். தலைவரைக் காத்த தம் ஊர் தீராதிதீரன் முத்துமுகம்மதைப் பார்க்கும் ஆவல் மீக்குற்றிருந்தனர்.

எல்லோரையும் தலைவர் தனியறையில் சந்தித்தார். தலைமை தாங்கி வந்திருந்த பள்ளித்தலைவர் செய்லான் ஹ£ஜியார் ஏகப்பட்ட வஸ்திரங்கள் அணிந்திருந்தார். நிரந்தரப் புன்னகையுடனும் இரகசியமாய் மாலையுடனும் அமர்ந்திருந்தார். தலைவரால் தான் தலைமை வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் தனக்குப் போர்த்தும்படி தாடிமாஸ்டரிடம் வாங்கிக் கொடுத்த பொன்னாடையைத் தாடி மறந்துவிடுவானோ என்று அடிக்கடி நோட்டமிட்டும் கொண்டார். தாடிமாஸ்டர் அதிசயமாக முழுக்கை சேர்ட்டை முழுக்க விரித்து மணிக்கட்டில் தெறி பூட்டி, போதாதற்குக் கழுத்து ‘டை’யும் தலைமயிர் ‘டை’யுமாக இளமையாய் இருந்தார். சர்பத் கடை கிழவர், சர்பத் நிறக் கொட்டடிச்சாரனும் அகலப்பட்டியும் சந்தனாதி அத்தரும் அணிந்து தலைவரைக் காதலிக்க காத்திருந்தார். அஸ்ரப் தண்டயல், வலது கையில் மணிக்கூடு கட்டி அடிக்கடித் தலைசொறிந்து மணி காண்பித்துக்கொண்டிருந்தார். ஓரத்தே போஸ்ட்மாஸ்டர் ஒதுங்கியிருந்தார். பள்ளிக்குயில் பளீல் ‘தானைத் தலைவர் ஆளும் அரசரை’ வாய்க்குள் ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தார். புரட்சி மௌலவி புழைல் புதுச் சூறாவுடனும் புன்னகையுடனும் காட்சியளித்தார். ஆசுகவி அன்புடீன் அனைவரையும் நெறிப்படுத்திக்கொண்டிருந்தார்.

பக்கத்தில் முடஉதுமான், மகன் அன்வர், ஜாபிர், நகீபு . . . ‘சரினா ரீ ரூம்’ முதலாளி சரிபுதீன், பொம்பிளடெய்லர், கறுத்தத் தண்டயல், சப்போட்டு நானா, மௌலா இஸ்லாம் மஹ்ருப் நாநா, பள்ளிமுனை கொ.ப.செ. வீரமுழக்கம் மாஹிர், மைமுனாவின் தம்பி யாசீன், மீன்பிடிச்சங்கத் தலைவர் அவர் தம் கிளைஞர் நான்கு பேர் . . . ப.நோ.கூ. சபை தலைவர், செயலாளர், பொருளாளர், ஆளும் கட்சிக்குப் பயந்து வந்திருந்த மூன்று மரைக்கார்மார்கள், இளைஞர் அணி உறுப்பினர்களான கபூர், தாஹா. ஜிப்ரி, ரஸாக், மற்றும் கட்சியின் நடுமட்ட, அடிமட்டப் பேராளிகள் . . . ப்பா . . . எண்பத்தாறு பேர்கள் . . .

தலைவருக்குப் பக்கத்தில் நின்றுகொண்டும் அங்குமிங்கும் போய்க் கொண்டுமிருந்த முத்துமுகம்மதை அத்தனை மனிதரும் உலக மஹா அதிசயமாகப் பார்த்துக்கொண்டிருந்தனர். அவனது ‘ஷம்பூத் தலையையும் குர்தா ஆடையையும் தாடியையும் மொட்டுக் கையையும் கண்டதிசயித்துச் ‘சுத்லும் கொளும்பான்’ என்றனர். பெரியபள்ளித் தலைவர் செய்லான் ஹாஜியார் முத்துமுகம்மதை விழியால் சுட்டெரித்துவிட்டுத் தாடி மாஸ்டரிடம் ‘கொறுக்காப்புளியனப் பாருங்க மாஸ்டர்! சலுவார் கொம்மீஸிம் லோங்கிஸிம்’ என்று கூறிக் கெக்கலித்துச் சிரித்ததை முத்துமுகம்மது தற்செயலாகக் கவனித்தான். கோபம் வெடித்து அடங்கியது.

புரட்சி மௌலவி புழைலின் இறைபுகழ்தலோடு மினிக்கூட்டம் ஆரம்பமாயிற்று. பிரதேச சபைத் தேர்தல் சூடு அவர்களின் வார்த்தைகளில் சுட்டது. தேர்தல் களம் கண்களில் தெரிந்தது. இருபது நிமிடங்கள் அவர்கள் கோர்வையற்றுச் சொல்லியவற்றை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்த தலைவர் தனக்கேயுரித்தான வசீகரப் புன்னகையுடன் அமைதியாக்கினார். பின், திடீரென்று கணீரென்று சொன்னார்.

அல்லாஹ்வுக்கே எல்லாப்        புகழும்!         எனது அழைப்பையேற்றுப் பள்ளிமுனையிலிருந்து, தலைமைத்துவத்தை மதித்து, அதற்குக் கட்டுப்பட்டுக் கொழும்புக்கு வந்திருக்கிற எனது இரண்டாம் தாயகமான பள்ளிமுனை உலமாக்களே . . . பெரியோர்களே . . .சகோதரர்களே . . . போராளிகளே . . . அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்..!

 வயற்சேனை பிரதேச சபைக்குள் மூன்று பிரதேசங்கள் அடங்குகின்றன. மீன்குறி, பசறிச் சேனை, பள்ளிமுனை இவற்றில் நமது கட்சி பெரும்பான்மையாகவே உள்ளது. எனினும், முக்கிய தேசியக் கட்சியினர் தமது வேட்பாளராகப் பசறிச்சேனையின் ஜூம்மாப் பள்ளியின் தலைவர் எம். எல். எச். அவர்களை நிறுத்தியுள்ளதாகச் செய்தி கிடைத்துள்ளது. எப்படியிருந்தாலும் நமது கட்சியே இன்ஷா அல்லாஹ் பிரதேச சபையைக் கைப்பற்றும். ஐ.என்.பீ. வேட்பாளரை மண் கவ்வச் செய்வதற்கு, நமது தலைமை வேட்பாளராகப் பள்ளிமுனைப் பள்ளித் தலைவரும் கட்சியின் ஸ்தாபக உறுப்பினருமான செய்னுல்ஆப்தீன் ஹாஜியார் அவர்களை . . .’ ‘சட்’டென உரையை நிறுத்தினார். சபை ‘கும்’ மென்ற அமைதியுடன் இருந்தது.

பெருமிதத்தோடு மெதுவாக எழுந்தார் செய்னுல்ஆப்தீன்ஹ£ஜியார். ஆனால், அவரை விரல் சொடுக்கினால் உட்காரவைத்த தலைவரின் தீட்சண்ய விழிகள் ஒரு கணப்பொழுதில் சபையையும் சபையின் மனோநிலையையும் அளந்தது. அடுத்த வசனம் கம்பீரமாக வெளிவந்தது.

நமது பள்ளித் தலைவர் செய்லான் ஹாஜியார் அவர்களை வேட்பாளராகப் போட்டிக்கு நிறுத்துவதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டுக்குத் தலைமைத்துவம் வந்துள்ளது!”

சபை அதிர்ந்துபோய் வாய்பிளந்து (வாய்மூடி) இருக்க - செய்லான் ஹாஜியார் துனுக்குற்று விறைத்துப் போயிருக்க - எதற்கும் இடம் தராது தலைவர் அதிரடியாகப் பேசினார்.

இதற்குப் பிரதானமாக மூன்று காரணங்கள் உள்ளன. முதற்காரணம், பள்ளிமுனைப் பள்ளித் தலைவரும் பசறிச்சேனைப் பள்ளித் தலைவரும் ஆக, இரு பள்ளித் தலைவர்கள் பதவிக்காக ஊர் பிரிந்து முட்டி மோதிக்கொள்வதை இஸ்லாமியக் கட்சித் தலைமைத்துவம் அனுமதிக்காது. நீங்கள் அனுமதிப்பீர்களா . .?’

ல் . . . லை . . . லைல்லை . . .’ என்றது சபை கமறலுடன்.

‘. . . பிரதேச ரீதியான துவேசப் பிரிவினையை ஊட்டி நம்மை பிரிக்க எத்தனிக்கும் பெரும்பான்மை இனச் சதிக்கு என்னருமைப் பள்ளிமுனை மக்கள் உடன்படுவார்களா . . .சொல்லுங்கள் . . .’

‘ . . . ல்லை . . . சேர்! உடமாட்டம் . . . ஒடன்படமாட்டம்’ பற்பல குரல்கள் சளசளத்தன.

தலைவர் மகிழ்வுடன் புன்னகைத்தார். மறுபடி அதிரடியாக

‘ . . . எனவே - பசறிச் சேனையின் ஐ. என். பித் தலைமை வேட்பாளரும் பெரும்பணபலம், பேரினப் படை பலம், அரச மேல்மட்ட அரசியற்பலம் மிக்கவருமான பெரிய மனிதரான எம்எல்எச்சைத் தோற்கடிக்க, பள்ளிமுனையின் ஒரு சாதாரண ஏழை விவசாயியான இளைஞன் ஒருவனை நமது கட்சி சார்பாக நிறுத்தி, அந்த வெற்றியை ஒரு சரித்திரமாகச் செய்ய நம்மால் முடியாதா . .? சொல்லுங்கள்!’

‘ . . . முடியும் . . . ஏலும்! சுவரு! சுவர்! ஏலும் சேர்!’ பல குரல்கள் பதிலளித்தன. சபையின் குரல்கள் அடங்கு முன்னரே தலைவர் தடாலடியாக

‘ . . . எனவே நமது இஸ்லாமியக் கட்சியின் தலைமை வேட்பாளராக இதோ நிற்கின்ற முத்துமுஹம்மத்! முத்துமுஹம்மதை நிறுத்துவதற்கும் அவரை வெற்றி பெறச் செய்வதற்கும் ஏன் முடியாது?’

ஆரு சென்ன . . . கட்டாயம் வெல்லுவம்! வெல்ல வெப்பம்’ என்றன எண்பத்தி இரண்டு குரல்கள்.

அப்படியானால் சரி! நாரே தக்பீர் . .?’

அல்... க்பர்... லாஹ§... பர்...’ சபை பற்பல குரல்களில் கலங்கத் தலைவர் மறுபடி கம்பீரமாக

நாரே தக்பீர்!’ என்றதும்

அல்லாஹ§ அக்பர்!’ - ஒரே குரலில் முழங்கியது சபை.

சரி! தம்பி, முத்துமுஹம்மத்! இப்படிக் கொஞ்சம் வாங்க!’

முத்துமுகம்மது மிகத் தெளிவுடைய முகத்தினனாய் முன்னால் வந்தான். அவனது ஊனக் கையைப் பற்றிப் பிடித்த தலைவர் -

வயற்சேனை பிரதேச சபையின் இஸ்லாமியக் கட்சித் தலைமை வேட்பாளராக நமது கட்சியின் ஆரம்பகாலப் போராளியும் இளைஞர் அணித் தலைவரும் கட்சியின் ‘இளம்பிறை’யுமான ஜனாப். எம். முத்துமுகம்மது அவர்களை நான் பிரேரிக்கிறேன் . . .’ என்றார். சபை செய்வதறியாது திகைப்பிலிருக்க, இணைப்பதிகாரி ஹ§சைன் பாறுக் குறுக்கிட்டுப் பொறாமைக்குரலில் -

சபையில் யாராவது ஒருவர் ஆமோதியுங்கள் . . .’ என்றார்.

சுயநினைவு வந்த சபை பரபரப்பானது. மெலிதான களேபரக் குரல்களில் ‘நீ ஆமோதி . . . நீயான் ஆமோதி . . .’ என்றன. செய்னுலாப்தீன் ஹாஜியாருக்குப் பயந்து முகத்தை ஒழித்து வைத்துக் கொண்டு . . . “. . . நகீபு எழும்பு . . . ஜாபிர் நீ எழும்பு . . .’ என்றன.

திடிரெனத் தாடிமாஸ்டர் முழுக்கையை உயர்த்தி - ‘அதை நான் ஆமோதிக்கிறேன்’ என்றார். செய்லான்ஹ£ஜியாரைப் பார்க்காமல் உட்கார்ந்தார். தலைவர் சபையிலிருந்து மேலும், ஜாபிருடன் சேர்த்து மேலும் மூன்று வேட்பாளர்களைத் தெரிவு செய்தார். பின் சபையினரை நோக்கி -

“ . . . சரி . . . கூட்டம் இத்துடன் முடிவடைகிறது. அனைவரும் எழுந்து ஸலவாத் சொல்லுங்கள் . . .’ என்றார். தலைவர் எழுந்துவிட்டார். சபை எழுந்தது. செய்லான்

      £ஜியார் தா . . . மதமாக எழுந்தார். பற்பல குரலில் ஸலவாத் ஆரம்பிக்க - புரட்சி மௌலவி புழைலின் உரத்த குரல் எல்லாக் குரல்களையும் கட்டுப்படுத்திப் பீறிட்டு முழங்கியது.

தலைவர் முதலில் முத்துமுகம்மதுக்கு ஸலாம் கொடுத்துத் தோளோடு தழுவி ‘முஸாபாஹ்’ செய்தார். அவனது தோளில் தட்டி ‘இது என் முதற்பரிசு’ என்று கூறிப் புன்னகைத்தபோது தொலைபேசி அலற - இணைப்பதிகாரி எடுத்துக் கேட்டு, ‘எக்ஸ்க்யூஸ்மி சேர்! ஒப்பொஸிஸன் லீடர் ஒன் லைன் ப்ளீஸ்’ என்றார். தலைவர் நிதானமாக எதிர்க்கட்சித் தலைவருடன் பேச ஆரம்பிக்க பள்ளிமுனை மனிதர்கள் கலைந்து வெளியே வந்து முற்றத்தில் துண்டு துண்டாகப் பிரிந்தனர். சளசளத்தனர். அலசினர்.

முத்துமுகம்மது நெய்னாருடன் தாடி மாஸ்டரைத் தேடி முற்றத்துக்கு வந்தான். அவனைக் கண்டதுமே ஸர்பத் கிழவர் முதலில் தோள் தழுவ, மற்ற சிலரும் முஸாபாஹ்வுக்காகத் திரண்டனர். பலரைச் சமாளித்துத் தழுவிச் சிரித்து நழுவி முத்துமுகம்மது தாடிமாஸ்டரை அடைந்த போது செய்லான் ஹாஜியார் தாடிமாஸ்டரிடம் கொதித்துக் கொண்டிருந்தது புலப்பட்டது. தாடிமாஸ்டரின் முழுக்கை சேர்ட் செய்லான் ஹாஜியாரின் இரும்புப்பிடிக்குள் கசங்கியிருந்தது.

‘. . . ஹ் . . . ங்க் . . . க.க.க.க.ரவலியி . . . கரவலயில மீன் பொறக்கின கொறுக்காப் புளியன்ட நக்குத்தின்னி எலக்கிசன் கேக்கிறயாம். நீ ஆட்டுத் தாடி மாய்ட்டன் ஆமோதிக்கிற . . .

£ளிர மக்காள்! ஒங்கள காசி செலவளிச்சி வஸ்ஸில கொழும்பு காட்ட கூட்டி வந்த என்னத்துக்கு..? கொறுக்காவ சேமன் ஆக்கிறத்துக்கா . . .’

முத்துமுகம்மதுக்குள் கனன்ற கோபம் வெளிப்பட, நெய்னாரை விலக்கித் தள்ளிவிட்டு நேராகச் செய்லான்ஹ£ஜியாரிடம் வந்தான். ‘ஞ்சப் பாருங்க! ஹாக்கா! எனக்கொண்டும் தெரியா . . . இது தலைவர்ர முடிவு . . .என்னில நீங்க கோவிக்கப்பொடா!’ என்றான் காட்டமாக. செய்லான் ஹாஜியார் திடீர் ஆவேசமுற்று -

ஓ . .! ப்ப்போடா . . . கொறுக்காட அறாங்குட்டி . . .’ என்று கறகறத்துத் திடீரென முத்துமுகம்மதின் நெஞ்சில் பளாரென அறைந்தார். விழுந்த அறையின் வலியிலும், அதிர்ச்சியிலும் தாடிமாஸ்டரின் மீது சரிந்து விழுந்தான் முத்துமுகம்மது. கூட்டம் ஏகப் பரபரப்பாகி இருவரையும் சூழ்ந்தது. அவமானத்துடனும் ஆத்திரத்துடனும் முத்துமுகம்மது எழுந்தான். டீக்கடைநெய்னார் முத்துமுகம்மதைப் பிடித்தெழுப்பி மறுபக்கமாக இழுத்தான். தாடிமாஸ்டர்,

ஹாஜியார்! என்ன மடத்தனம் இது! ஏன் அடிபுடியில . .?’

வாயப் பொத்துரா எங்க வாப்பாக்குப் பொறந்த தாடிவாலா!’ என்று செய்லான் ஹாஜியார் தாடி மாஸ்டரின் முகத்தில் பளீரென அறைந்தார்.

ச்சீ! ஆசியார்! ஆசியார்! ஆசியார்! ’ பதட்டமான குரல்கள் ஒலிக்க தாடி மாஸ்டர் - தன் முகத்தைத் துடைத்துக்கொண்டு ஒரு கோபமுமின்றி - ‘ஹாஜியார்! நாம தலவருட்ட போய்க் கதைப்பம் . . . கோவப் . . .’

தாடி வள்ளா . . . நீயான் தலவருட்ட போய் அவர்ரயச் . . . ப்ப்போடா தாடிவாலா, ஊருக்கு வா நீ.. சந்தில வெச்சி செருப்பால தாறன் . . .’

ஹாஜியார்! சத்தம் போடாதீங்க!’ என்றது சர்பத்.

கொழும்பு வெயில்ல தலவருக்கும் செரியா தல வேலய்றல்ல! ஊர்ல கச்சி வளர்க்கிற நானா . . . கொறுக்காவா . .? அப்பக்காரிர மகள வெளிநாட்டுக்கனுப்பி

அவள்ள காச நக்குற நாய் மொட்டுக்கய்யன் பள்ளிமொனக்கிச் சேமனாம்டோ . . . வ் . .?’ செய்லான் ஹாஜியார் அப்பட்டமான சொற்களில் சீறி ஆத்திரத்துடன் சிரித்தார்.

இந்த  வசைச்சொற்களைக்கேட்டதும்முத்துமுகம்மதுக்குள் அவமானம் வெடித்து அவனுக்குள்ளிருந்த நகர இளைஞன் மூர்க்கமாய்வெளிப்பட்டான். திடீரெனத் தன்னைப் பிடித்துக்கொண்டிருந்த நகீபைத் தள்ளிவிட்டுத் தாவி செய்லான் ஹாஜியாரின் சால்வையைப் பிடித்து இழுத்து அவரது முகத்தில் தன் இடதுகையால் பலமாகக் குத்தினான். மேலும் சடார் மடாரென்று நாலைந்து அறைகள் அறைந்தான். செய்லான் ஹாஜியார் அதிர்ச்சியுடன் தள்ளுப்பட, நெய்னாரும் தாடிமாஸ்டரும் முத்துமுகம்மதும் யாசினும் நகீபும் சர்பத்தும் ஆளாளுக்கு அலங்கோலமாய்; இழுபறிப்பட்டுத் தலைவரின் வாசல் போர்க்களமாக - வாசலிலிருந்த பொலிஸ்காரர் இருவரும் கூட்டத்தின் நடுவில் புகுந்து கையில் அகப்பட்டோரை நையைப் புடைத்தனர். பள்ளிமுனைப் போராளிகள் அனைவரையும் விலக்கிவிட்டனர். திடீரென இணைப்பதிகாரி ஹ§சைன்பாறுக் ஓடிவந்து,

என்னது! ஸ்டொப் இட்! ஸ்டொப் இட்! என்னது ஹாஜியார்? என்ன பிரச்சினை?’

என்ன ஒரு பெரச்சினையுமில்ல. எங்க ஊட்ட நக்குத் திண்ட கொறுக்காப்புளியன்ட மகன் எனக்கிக் கைநீட்றான் . . . சொத்திக்கையன் சேமனாகப் போறான் . .!”

§சைன் பாறுக் காதெல்லாம் குளிர்ந்துபோய் மற்றவர்களைப் பார்த்து,

உங்கட உங்கட நாட்டுப்புத்திகள உங்களோட வச்சுக் கொள்ளுங்க . . . இங்க வேணா . . . இது கொழும்பு . . .சரி! அத விடுங்க ஹாஜியார்! தலைவர் உங்கள மட்டும் வரச் சொன்னார்! வாங்க!!’

நான் என்ன மைருக்கு! கொறுக்காச் சேமன கூட்டிட்டுப் போங்க!’

வாங்க . . . வாங்களேன்!’ இணைப்பதிகாரி ஹாஜியாரை அன்புப் பலவந்தமாக அழைத்துச் சென்றார். கூட்டம் திமுதிமுவென முத்துமுகம்மதைச் சூழ்ந்தது. ஆளாளுக்கு ஏதேதோ பேசினர். தாடிமாஸ்டர் -

முத்தும்மதோவ்! இந்த ஆசிர வெரட்டுக்கெல்லாம் நீ      பயப்படாத! நாங்க எல்லாரும் ஒண்ட பக்கந்தான். இனி நாந்தான் ஒனக்கு ‘செக்ரெட்டரி’ பயப்படாதே!’ என்று சுய நியமனமானார்.

பள்ளிமுனை மனிதர்கள் முத்துமுகம்மதைச் சூழ நின்றனர். அவனது வீரதீர சாகசத்தை வியந்தனர். தாம் இதுவரை அறிந்திராத ஒரு முத்துமுகம்மதைக் கண்டனர். ஏதும் நடக்காததுபோல் முத்துமுகம்மது நிதானத்தடன் கொஞ்சம் புன்னகைத்தான். உடன் சர்பத் கிழவர் வந்து முத்துமுகம்மதைத் தழுவி ‘இனி நீயான் சேமன்’ என்று அறிவித்து மகிழ்விக்க முனைந்தார். அனைவரும் சிரித்தனர். தாடிமாஸ்டர் அருகே வந்து. ‘முத்தும்மது! மைமுனா கடிதம் கிடிதம் போட்டயா’ என்று காதினுள் கேட்டுப் பதட்டம் தணிவிக்க முயன்றார்.

நெய்னார், தீவிரமாகப் பள்ளிமுனை மனிதர்களிடம்

இதப்பாருங்க! டே தண்டயல் . . . நகீபு! ஜாபிரு!! பீஎம்! எல்லாரும் ஊர்ல போய் முத்தும்மதுக்கு வேல செய்யனும். ந்த மைருச் சண்டித்தனத்துக்குப் பயப்புடக்கூடா! எளஞர் அணி, சும்மா, ‘கிண்’ண்டு வேல செய்யனும். கொடிகட்டனும். நோட்டிஸ் ஒட்டனும். கூட்டம் வெக்கனும் ‘கன்வஸி’ செய்யனும். முத்தும்மத இனி எல்லாரும் சேமன் முத்தும்மது ண்டுதான் கூப்பிடனும். வெளங்குதா . .? நாரே தக்பீர் . .?’ என்று கேட்க -

அல்லாஹ§ அக்பர்!’ என்று மனதாரப் பதிலளித்தனர் போராளிகள்.

முத்துமும்மது சேமன் . .! நீங்க என்ன செல்றீங்க . .?’ என்றான். முத்துமுகம்மது ஒப்புக்குச் சிரித்தபடி பள்ளிமுனை மனிதர்களைப் பொதுவாகப் பார்த்துத் ‘தலைவரு சொல்றதுதான் எனக்கிக் கட்டளை. அவருதான் எனக்கி எல்லாம். தலைவரு நில்லுண்டா நிப்பன். சாகுண்டா சாகுவன். தலைவரு என்ன செல்றாரோ அப்பிடிச் செய்ங்க!’ என்றான். கூட்டம் தலையாட்டி ஒப்புக்கொண்டது. தாடி மாஸ்டர் திடீரென

ஓம்! ஓம்! தம்பி முத்தும்மது சொல்ற செரி. நாம ஒடன ஒரு கொமிட்டி ஆரம்பிச்சு . . .’ தாடிமாஸ்டர் அவர்களிடையே ‘கொமிட்டி’க்குப் பதவி நியமனங்கள் வழங்க ஆரம்பிக்க - முத்துமுகம்மதுக்கு உடனடித் தனிமைவேண்டியிருந்தது. ‘சட்’டென முத்துமுகம்மது மைமுனாவின் தம்பி யாசீனின் கைகளைப் பிடித்து -

வாடா யாசீன்’ என்று கூட்டிக்கொண்டு யாரும் பின்தொடராதபடி விரைவாக நடந்து தலைவரின் வீட்டின் பின்புறமாக வந்தான். பின்னாலிருந்த பாரிய கிணற்றுக் கைபிடியில் உட்கார்ந்தான்.

13

 

 

 

 

சில்ல்ல்ல்ல்லூறு வண்டுகளின் ஒலி காதுகளைக் குடைந்தன. டிர்ர்ரிக் . . . டிர்ரிக் கென்று விநோத இராஜந்து, விட்டில்கள். மின்னி மின்னி கண்ணில் பட்ட மின்மினிகள், தூரத்துப் புகையிரத ஒலி, தலைவரின் படிப்பறை, ஜன்னலூடே வெளிச்சம் . . .

யாசீன் ப்பிடி ஏறி இரியண்டா!’

முத்துமச்சான்! ஒங்களுக்கு ப்ப கை சொகமா? ஆசியாருக்கு அப்பிடி அடிப்பீங்க ண்டு நான் நெனைக்கவுமில்ல நான் . .?’

“... ...”

என்ன முத்துமச்சான். பேசாம இருக்கிற?’

ஒண்டுமில்லடா யாசின். நல்லா நெடுத்திரிக்காய். மீசையும், தாடியும் வெச்சிரிக்காய் போல  . .’

இ . . . இ . . . ல்ல மச்சான் . . . சும்மா ஸ்டைல் . . . ஏன் முத்துமச்சான் ஊருக்கு வாறல்ல?’

“. . . . . .” - முத்துமுகம்மதுக்குக் கண்ணீர் குபுக்கென்று பொங்கியது. மூக்கைச் சீறிச் சமாளித்து அழுகையை இருமலாக்கினான்.

என்ன முத்துமச்சான் தடுமலா . .?’

ஓண்டாம்பி, யாசீன், அது சரி . . . மைம்னா லாத்தா . .? அடக்கமாட்டாமல் வெடித்துக் கிளம்பியது கேள்வி. ஆனால் திடீரென முத்துமுகம்மதின் காதுகளின் கோபமான குரல்கள் கேட்டன. தலைவரின் படிப்பறை ஜன்னலூடாகப் கேட்டன.

பொறுடா யாசினோவ்!’ சட்டென முத்துமுகம்மது பதுங்கித் தாவி தலைவரின் படிப்பறை யன்னலை அடைந்தான். எச்சரிக்கையாய் எட்டிப் பார்த்தான். இணைப்பதிகாரியும் தலைவரும் அமர்ந்திருக்க செய்லான் ஹாஜியார் கொதித்துக் கொண்டிருந்தார்.

‘ . . . ம்மாட ஊடு! எனக்கிச் சொந்த மச்சான் நீங்க . . .நம்மட குடும்பத்துக்க ஊட்ட வேலவாட செஞ்சி நக்குத்திண்டவன் அவன்ட வாப்பா! அவனே கொறுக்காக்குப் பொறந்த ஒரு அறாமி! அஞ்சி சதத்துக்கும் வக்கில்லாத ‘எக்கடாவுஸ்’ஸை நீங்க சேமனாக்கிற . .? நான் ஒங்கு மாமாட மகன் மச்சான் அவனுக்குக் கீள இரிக்கிற . .?’

‘. . . ஷட் . . . அப்! ராஸ்கல்!’ திடீரெனக் கதிரையைத் தள்ளிவிட்டு எழுந்த தலைவர் சற்றும் எதிர்பாராதவிதமாக. செய்லான் ஹாஜியாரைப் பளாரென அறைந்தார். ‘ஷட்அப் யுவர் டேர்ட்டி மௌத்!’

தலைவரின் ஆக்ரோஷ வெம்மைக் குரலில் சப்தநாடியும் ஒடுங்கிப் போனார் செய்லான் ஹாஜியார். தலைவரின் அப்படி ஒரு கோப முகத்தை முத்துமுகம்மது இப்போதுதான் கண்டு திகிலடைந்தான். தலைவர் ஹாஜியாரை நேராகப் பார்த்து -

மிஸ்டர் செய்னுல் ஆப்டீன்! நீ எனக்குச் சொந்த மாமியின் மகன்தான். ஆனா . . . அதற்காக நீ அதை பிழையாக உயோகிக்க முடியாது. வெளியில நீ அவன் முத்துமுகம்மதை அறைஞ்சதை நான் கண்டேன். உனக்குத் தெரியாது. அவன் என்னுடைய உயிர்க்கவசம்! அவன் ஒரு அநாதை இல்லை. அவனைக் கேட்கவும் பார்க்கவும் ஆள் உண்டு. தவிர . . .’

ம்ம்ம . . .’

ஷ்! தவிர - நீங்க வயற்சேனை மாவட்ட ஆஸ்பத்திரி விஸ்தரிப்பு என்று முப்பத்தேழு ஏக்கர் வேப்பமரத் தோப்பை விழுங்கிய விஷயமும் பள்ளிவாசல் புனரமைப்பு என்று முப்பது லட்சம் முழுங்கினதும் வழக்குக்கு வந்திருக்கு.’

அ...து... லெட்... அதுல...’

இதப்பாரு . . . செயினுல்ஆப்டீன்! இனி உனக்குக் கட்சியில் மட்டுமல்ல என் வீட்டிலும் இடம் இல்லை! போ வெளியே!’

மேலும், இக்காட்சியைப் பார்த்துக்கொண்டு நிற்க வீதரியமில்லாமல் முத்துமுகம்மது தடுமாறினான்.

உள்ளுக்கு ஆரு மச்சான்? அற உளுந்த மாய்ரி சத்தம் கேட்டிச்சி . .?’யாசீனின் சத்தத்தில் திடுக்கிட்டு அவனதுவ    £யைப் பொத்திய முத்துமுகம்மது அவனை இழுத்துக்கொண்டு அப்பால் நகர்ந்து பின்புற வழியாகவே சென்று தனது அறைக்குள் நுழைந்தான். விளக்கைப் போட்டான்.

 இப்பிடி இரிரா யாசீன்!’

ஆரு மச்சான் அறஞ்ச? ஒரே சண்டையா இரிக்கி. இதானா எலக்கிசன் சண்ட?’

என்னடா . . . ஊருல ஆக்கள் எப்படி? லாத்தாமாரு சொகமா . . . மாமி என்னய்றா? மைம்னா லாத்தா கடிதம் போட்டயா?’ - மறுபடி கேட்டான். யாசினின் பதிலில் ஆர்வப்பட்டான்.

கடிதம் ஒண்டும் வெரல்ல . . . மச்சான் . . . ‘செக்’கு மட்டும் வெருது. ‘கெஸட்’டும் ல்ல கடிதமும் ல்ல. ‘வேங்குல’ ‘எக்கவுண்டுக்குக்’ காசி வெருது. ம்மாட பேருக்கு! கடிதமே வ            £றல்ல . . . ‘டெலிவோனு’ம் எடுக்குற ல்ல லாத்தா! கோவமாக்கும்!’

நீ ஏண்டா கடிதம் போர்ர ல்ல லாத்தாக்கு?’

அட்றஸி தெரியாதே மச்சான்! கையக்காட்டுங்க பாப்பம். இந்தக் கையா மச்சான் ஒடஞ்ச ஒங்கட மூணு வெரல் பறந்தயாம் . . . ண்டு கேள்விப்பட்டு ஊட்ட கொளறின மச்சான். லாத்தாமாரு . . . ம்மாவும் மனத்தாவப்பட்ட . . .’

கை ஒடையல்லடா! வெரல் மூணும் அறுந்துட்டு’

        £சீன் முத்துமுகம்மதின் விரல்கள் இல்லாத கையைப்பிடித்துப் பார்த்தான். திடீரெனக் கண்ணீர் கொப்பளித்து முத்துமுகம்மதைப் பார்த்தான். அப்படியே . .மைமுனாவின் கண்ணீர் கண்கள் . . . மைமுனாவின் கூர்மூக்கு . . . ‘காஆஆதல் தீபம் ஒன்று . . . நெஞ்சிலே . . .ஏஏற்றி வைத்தேஏஏன் . . .’ . . . போய்விட்டாள் . . . போயே விட்டாள் . . . எங்கே . .?

நெல்ல காலம் மச்சான் . . . எடக்கை! நான் மைதின் ஆண்டவர்ர பள்ளில காணிக்க போட்ட மச்சான்! மைமுனா ல            £த்தா இதக் கேள்விப்பட்டா என்ன பாடுபடுவா மச்சான் . . .’

முத்துமுகம்மது கவலையுடன் சிரித்தான்.

சரிசரி, ந்தாடா யாசீன் கட்டிக்க!’ தனது கைமணிக்கூட்டைக் கழற்றி யாசீனின் கையில் அணிவித்தான். ஐநூறு ரூபாவும் கொடுத்தான்.

மைம்னா லாத்தா உங்களுக்கு ‘லட்டர் போர்ரல்லையா மச்சான்?’

ல்லடா! ஒரு வெசளமும் ல்ல! இருக்காளா மௌத்தாயிட்டாளா ண்டும் தெரியா?’

‘... ...’

டெ . . . யாசீன் நீ எனக்கி இனி எந்நரமும் கோள் எடுக்கனும். எலக்கிசன் டைம்! என்ட கூட்டாளிமாரு ஜாபிரு, நகிப்பு, மைய்யதீன் ஆக்களையும் ‘கோள்’ எடுக்கச் செல்லு. செரியா . . . செரி வா போவம்!’

முத்துமுகம்மதும் யாசீனும் முற்றத்திற்கு மறுபடி வந்தபோது பள்ளிமுனை மனிதர்களுக்கு விடைகொடுக்கு முகமாகத் தலைவரும் பிரமுகர்களும் முற்றத்தில் நின்றுகொண்டிருந்தனர்.

எங்கே முத்துமுஹம்மத்?’ - தலைவர் கேட்டுக் கொண்டிருந்தார். ‘அந்தா மச்சினனோடு வாறாரு எங்கட சேமன்’ என்று தலைவர் மேலும் ஒரு ஜோக் சொல்லவே பள்ளிமுனையே கலகலவென்று தேவையற்றுச் சிரித்தது. முத்துமுகம்மது விரைந்தோடி வந்தான். தலைவர் அவனை அருகிலழைத்துத் தோளில் கை வைக்க -

பளீர்பளீரெனக் கமராக்கள் பளிச்சிட்டன. ஏனைய வேட்பாளர்களும் தலைவருடன் படமெடுத்துக் கொண்டனர். தலைவர், தாடி மாஸ்டருக்கும் புரட்சி மௌலவிக்கும்

ப.        நோ. கூ. சவுக்குக்கும் சில அவசிய ஏற்பாடுகள் கூறினார். தான்தோன்றிச் செயலாளரான தாடிமாஸ்டர் அனைத்தும் குறிப்பெடுத்தார். சூழல் கலகலப்பாகிவிட்டது. சர்பத் கிழவர் சந்தனாதி அத்தர் மணத்துடன் தலைவரைத் தனியே தழுவ தருணம் பார்த்துத் திரிந்தார்.

தியாக நிலத்தில் இரத்த வித்து விதைத்து வளர்த்த விருட்சம் நமது கட்சி! இதில் சுயலாப அறுவடைக்கு வழியில்லை. வியாபாரிகளுக்கு இதில் இடமில்லை. தரகர்களுக்கு இது தளமில்லை. இது புதிய போராளிகளின் புகலிடம். ஆளுமை மிக்க அடுத்த சந்ததியின் அமைவிடம். மொத்தமாக இது முஸ்லிம்களின் பலம்! அசைக்க முடியாத பலம்!! அந்தப் பலத்தைப் பள்ளிமுனை மக்கள் தேர்தலில் காட்ட வேண்டும். தலைமைத்துவம் வாக்குறுதி அளித்தபடி முதன்மை வேட்பாளரைப் பள்ளிமுனைக்குத் தந்திருக்கிறது. அவரைத் தவிசாளராக்குவது இனி உங்களின் கைகளில்! தம்பி, முத்துமுகம்மதுக்கு நீங்கள் பாடுபடுவது தலைவருக்கு பாடுபடுவது போலச் செய்வீர்களா . .?’

நாரே தக்பீர்!’

அல்லாஹ§ அக்பர்!!’ - கூட்டம் பதிலளித்தது தெளிவாக!

0

பிரதேச சபைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டுவ £ரங்கள் இருந்தன. திகாமடுல்ல மாவட்டம் எங்கும் வேட்பாளர்களை எல்லாம் விடுதலைப் புலிகள் தேடித்தேடிச் சுட்டுக் கொல்வதாகக் கதைகள் வந்தன. தேர்தலைக் குழப்ப பெரும் திட்டங்கள் இருப்பதாகவும் வாக்களிக்கச் செல்லும் மக்களுக்கு ஆபத்துக் காத்திருப்பதாகவும் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு மிரட்டல் கடிதங்கள் அனுப்பப்படுவதாகவும் சாய்ந்தமருதில் வேட்பாளர் ஒருவரைக் கடத்திச் சென்றுவிட்டதாகவும் தினசரி பயங்கரச் செய்திகள் வந்துகொண்டிருந்தாலும் . . . வயற்சேனை பிரதேசத்திற்குட்பட்ட மூன்று ஊர்களிலும் இரண்டு குக்கிரமங்களிலும்கூட, மக்கள் தம் வேலைகளைப் புறமொதுக்கித் தேர்தல் பரபரப்பு சுகம் அனுபவித்துக்கொண்டிருந்தனர். தேநீர்க்கடைகளில் சூடான தேர்தல் மற்றும் வன்முறைச் செய்திகள் இலவசச் சிற்றுண்டிகளாகக் கிடைத்தன.

தலைவரைக் கொழும்பு சென்று கண்டு திரும்பியோர் மீன் சந்தை, அஞ்சல் அலுவலகம், கடற்கரை, மீன்வாடி, இரும்புப்பாலத்தடி, இறைச்சிக்கடை அனைத்திலும் தலைவர், செய்லான் ஹாஜியார், முத்துமுகம்மது; சண்டையை மிகைப்படுத்தல்களுடன் ஒலிபரப்புச் செய்திருந்ததால் பள்ளிமுனையில் முத்துமுகம்மதின் வருகை பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது.

பள்ளிமுனை எங்கும், கட்சிப்போராளிகளால் ஒட்டப்பட்ட இஸ்லாமியக்கட்சி வர்ணச் சுவரொட்டிகள் நிறைந்தன. தலைவரின் அழகிய பெரிய படம், அவரது இதயத்தில் முத்துமுகம்மதின் முகம். இருவரையும் சுற்றிப் பெரிய பிறைவடிவம் கீழே -

வழிகாட்டும் தலைவரின் வழியில்

ஒளி பாய்ச்சும் இளம்பிறை முத்துமுகம்மதுஅவர்களை

வயற்சேனை தவிசாளர் ஆக்குவோம்!

என்று சூளுரைத்தன. ஐஎன்பி சுவரொட்டிகள் இரவில் ஒட்டப்பட்டுக் காலையில் காணப்படவில்லை. எனினும்,

இஸ்லாத்தை விற்கும் டீலரும் மொட்டுக்கை வாலரும்’ என்ற றோணியோப் பிரசுரம் (பாகம் ஒன்று) பழைய தமிழில், வெளியாகி கட்சிப் போராளிகளைக் கொதிக்க வைத்தது. பதிலடியாக ‘வேப்பந் தோப்பை விழுங்கிய தொப்பை ஆசி’ என்ற அதிநவீன பிரசுரம் வெளியானது.

தலைவரின் கட்டளைப்படி முத்துமுகம்மது பள்ளிமுனைக்கு வந்திருந்தான். முதலில் காட்டல்லியா அப்பா சியாரம் சென்று நேர்த்தி செய்து மீண்டான். முத்துமுகம்மதைக் காண தினமும் கூட்டம் சேர்ந்தது. பெண்கள் அவனது மொட்டுக்கை பார்க்க ஆவலாயிருந்தனர். பள்ளிமுனை இளைஞர் அணியினர் தமது தலைவனின் கட்டளைக்காகக் காத்து நின்றனர். கட்சிப் போராளிகள் அவனுக்காகப் புயலாகப் புறப்படத் தயாராகியிருந்தனர்.

         £ன்தோன்றிச் செயலாளரான தாடிமாஸ்டர் பற்பல கடமைகளைத் தானாகவே பொறுப்பேற்றார்.தேர்தல் வேலைகளுக்கு முத்துமுகம்மதின் செத்தைக்குடில் ஒத்துவரவில்லை. எனவே, தாடிமாஸ்டரின் ‘இரண்டாவது வீடு’ முத்துமுகம்மது தங்கியிருக்கவும் கட்சிப் பணிமனைக்குமாகத் தயாரானது. பெரிய பெரிய அறைகள், விஸ்தாரமான முற்றம், மாமரச் சோலை என விஸ்தாரமாகவும், வசதியாகவும் இருந்தது. வீட்டின் நாற்புறத்தும் யாசினின் தலைமையில் இளைய போராளிகள்க            £ப்பரணமைத்துக் காவலிருந்தனர். தொலைபேசிகூட இருந்தது. எல்லாம் சுலபமாக இருந்தது.

தாடிமாஸ்டரின் தேர்தல் ஏற்பாடுகள், நிர்வகிப்புக்கள் கண்டு முத்துமுகம்மது அசந்துதான் போனான். சமீப காலம்வரை முத்துமுகம்மதை ‘டேய்’ என்றும் ‘கொறுக்கா’ என்றும் அழைத்துப் பழக்கப்பட்ட தாடிமாஸ்டர் ‘தம்பி முத்துமுகம்மத்’ என்றார். ஓய்வு கிடைத்த போதெல்லாம் பிரதேச சபை நடைமுறைகளை மிக எளிமையாக முத்துமுகம்மதுக்குக் கற்பித்துப் புரியவைத்தார். இளைஞர் அணியினர் முத்துமுகம்மதை மரியாதைமீக்குற்று ‘ஹாக்கா’ என்றனர். மைமுனாவின் தம்பி யாசினும், நகீபும் இருபத்திநாலு மணிநேரப் பாதுகாப்பு அதிகாரியாயிருந்தனர்.டீக்கடைநெய்னார் பனிரெண்டு மணிநேர எடுபிடியாயிருந்தான்.

         £டிமாஸ்டர் முத்துமுகம்மதைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு இளைஞர் அணியினரை மிகவும் திறமையாக வேலை வாங்கினார். ஆயிரம் ரூபாய்தாள்களாகப் புழங்கினார். முத்துமுகம்மது கேட்டதற்குக் ‘கட்சிப்பணம்! சிக்கனச் செலவு, தலைவர் உத்தரவு’ என்று தந்தி மொழியில் பதிலளித்தார்.போட்டியிடும் கட்சிகளின் பெயர்ப்பட்டியல்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. இஸ்லாமியக் கட்சித் தலைமை வேட்பாளராக முத்துமுகம்மதும் மற்றும் பதினொரு பேரும் ஐஎன்பி கட்சித்தலைமை வேட்பாளராக, பசறிச் சேனை அல்ஹாஜ் எம்.எல்.எச்சும், மேலும் பதினொரு பேரும் இடம்பெற்றிருந்தனர். ஐஎன்பிக் கட்சியில் 8ஆம் இலக்க வேட்பாளராகக் குறிப்பிடப்பட்டிருந்த சாகுல்ஹமீது முகம்மது இஸ்மாயில் என்ற பெயருக்குரியவன் ‘சப்புச் சுல்தான்’ என்று நெய்னார் கூறினான்.

எக்கட்சியிலும் இடம் கிடைக்காததால் சுயேச்சை குழு1           என்ற பெயரில் வானொலி சின்னத்துடன் தலைமை வேட்பாளராகப் பள்ளித் தலைவர் செய்லான் ஹாஜியாரும் களமிறங்கியிருந்தார். ‘நான் ஏன் கட்சியிலிருந்து வெளியேறினேன். மக்களின் சிந்தனைக்கு . . .’ என்ற நீண்ட தலைப்பின் கீழ் ஒரு நீண்ட பிரசுரம் வெளியிட்டார். தனது ‘சோரம் போகாமை’ யை ஆணித்தரமாக வலியுறுத்தி, அவரது வானொலி சின்னத்தின்பால் மக்கள் ஒன்றுதிரள வேண்டிய அவசியம் வலியுறுத்திக் கடைசிப்பந்தியில் ஓரேயடியாகக் கடைத்தரத்துக்கு இறங்கி, நான் ‘பொட்டி தூக்கி’த் திரிபவன் அல்ல புறமுதுகு சொறிய. நான் ‘பூஞ்சைக் கொறுக்கா’ அல்ல கெஞ்சி காலில் விழ. நான் ‘இடக்கைச் சொத்தி’ அல்ல இடப்பிச்சை கேட்க’ என்று வக்கிரமாகவும் உக்கிரமாகவும் தாக்கியிருந்தார்.

ஐஎன்பியின் தலைமை வேட்பாளரான, பசறிச்சேனை அல்ஹாஜ் எம்.எல்.எச். அஹமதுலெவ்வைப் பள்ளிமுனைக்கு வந்து, 8ஆம் இலக்க வேட்பாளரான சப்புச் சுல்தானின் மெய்ப்பாதுகாவல் உதவியுடன், ஊரெங்கும் சூறாவளிச் சுற்றுப் பிரயாணித்துப் பிரசுரங்களும் இரகசியமாய் ‘போத்தல்’ களும் வழங்கி வாக்குகளுக்கு விலைநிர்ணயித்து, வாக்கு வங்கியிலிருந்து வாக்குறுதி வாங்கிச்சென்றார்.

அமைதியாயிருந்த பள்ளிமுனைக் கிராமத்தில் வன்முறை மையங்கொள்ள ஆரம்பித்தது. ஒருநாள் இரவில், திடீரெனப் படுவான் கரையிலிருந்த இஸ்லாமியக் கட்சிக்கிளை இனந்தெரியாதோரால் தாக்கி உடைக்கப்பட்டது. இதற்குப் பதிலடியாகப் பட்டப்பகலில் பள்ளிவீதியில் யாரோ செய்லான் ஹாஜியாரின் கார் கண்ணாடிகளைகற்கண்டாக்கினர். சர்பத் கிழவரும் கறுத்தத்தண்டயலும் பச்சைத் தொப்பிக்காரர்களால் இருட்டடிபட்டு இரத்தம் தோய்ந்தனர். செய்லான் ஹாஜியாரின் புதுச் சுவரொட்டிகளில் கறுப்பு ஒயில் அபிஷேகமும் சாணித்திருநீறுமாக ஏக திருவிழாவாக இருந்தது. கறுப்பு வீதிகளில் கட்சிச் சின்னங்களும் வேட்பாளர் இலக்கங்களும் வ£கனச் சக்கரங்களில் அரைக்கப்பட்டன. ஊர்ப்பொதுமக்கள், வீடு வந்த வேட்பாளர் அனைவருக்கும்வ £க்களிக்க வாக்குறுதியளித்துச் சிரித்தனர். நடுநிசியில் முத்துமுகம்மது தங்கியிருந்த வீட்டின் மீது திடீரென நவீனரகத் துப்பாக்கிகள் வெடித்தன. புயலென எழுந்த கட்சிப் போராளிகளால், ஓடி ஒழிய முயன்ற பொலிஸ்வ            £கனம் உடைக்கப்பட்டது. தொடர்ந்த கலவரம் முத்துமுகம்மதின் தலையீட்டினால் சற்றுத் தணிந்தது. ஊரில் நடமாடவே அச்சமாக இருந்தது.

 

ஆளும் கட்சியின் பிரச்சாரங்கள் சலசலப்புக்கள் அலுப்புத்தட்டிய வேளையில் முத்துமுகம்மதுவின் பிரச்சாரங்கள் ஆரம்பித்தன. தாடிமாஸ்டரின் கூர்மையான பிரச்சார உத்திகள் கட்சிப் போராளிகளால் பரவலாக்கப்பட்டன ‘பெட்டிக்கூட்டம்’, முத்துமுகம்மதின் பிரச்சார உலா, அச்சமூட்டி எச்சரிக்கை, அநீதிகளை முறையிடல், நீதி கேட்டல், உணர்ச்சி கொள் பாடல்கள், தலைவரின் படம் பதித்த பதக்கங்கள், தொப்பிகள் . . . என்று புதுமையாயிருந்தன. பாமர மனங்களில் பதித்தன.பெரும்பாலும் வெற்றி நிச்சயமாகியிருந்தது.

இதற்கெல்லாம் மேலாகத் தலைவரே கலந்து கொள்ளும் இஸ்லாமியக் கட்சியின் இறுதித்தேர்தல் பிரச்சாரக் கூட்டமும் பள்ளிமுனையிலேயே ஏற்பாடாகிப் பரபரப்பாக இருந்தது. தலைவர் வருவதாக வாக்குறுதியளித்திருந்தார். சொன்னபடியே தலைவர், புலிகளின் ஹர்த்தாலையும் மீறி பல்லாயிரம் வேலைகளுக்கும் மத்தியில், வந்து பள்ளிமுனையில் இறங்கினார்.

14

மாலை 5.30க்கு வானூர்தி ஏகப்பட்ட இரைச்சல்களுடன் மகாவித்தியாலய மைதானத்தில் வந்து இறங்கியது. கூட்டம் அம்மியது. சிவப்பு நிற ரீஷேர்ட்டும் கறுப்பு லோங்ஸ§ம் கலர் கண்ணாடியுமாகத் தலைவர் இறங்கி, மிகக் கம்பீரமாகப் புன்னகைத்து வேகமாக நடந்து வந்தார். அவரது வசீகரமும் சுறுசுறுப்பும் கட்சிப் போராளிகளை மயிர்கூச்செறிய வைத்தது. உணர்ச்சி கொண்டு தக்பீர் முழங்கினார்.

தலைவரை வரவேற்பதற்காக நின்றிருந்த முத்துமுகம்மது சகலமும் மறந்து ஒடிச் சென்று தலைவரின் கால்களில் விழுந் . . . தலைவர் தடுத்ததும் அவரது கைளைப் பற்றி முத்தமிட்டான். தலைவரின் கரங்களை அவனது கண்ணீர் நனைத்தது. தலைவர் மெல்லியதாகத் திடுக்கிட்டாலும் முத்துமுகம்மதை எச்சரிக்கை விழிகளால் பார்த்து, மக்களுக்கு புன்னகைத்துக் கையசைத்தார். உடனே மக்கள் கூட்டம் திமுதிமுத்துத் தள்ளுப்பட்டுத் தலைவரைச் சூழத் தொடங்க அதிரடிப்படையும் கட்சிப் போராளிகளும் பலமான இரும்புக்கை வலயம் அமைத்துக் காத்தனர். கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த இறுதிப் பிரச்சார மேடை நோக்கி உடன் ஊர்வலம் ஆரம்பமானது.

முதலில், முச்சக்கரவண்டி ஒலிபெருக்கி கொண்டை கட்டி, தலைவர் புகழ்பாடிச் சென்றது. தொடர்ந்து ஐம்பது துவிச்சக்கர வண்டிகள் மஞ்சட்பச்சை கொடிகளுடனும் தலைவர் மற்றும் முத்துமுகம்மது ஆகியோரின் படங்களுடனும் இளைஞர்களுடன் மணிஒலித்துச் சென்றது.

“. . . இதோ உங்கள் மத்தியில் பிரதேச சபைத் தேர்தல் களம் குதித்திருக்கும் கட்சியின் இளம்பிறையும் இளைஞர் அணித் தலைவருமாகிய முத்துமுகம்மதும் மற்றும் ஏனைய வேட்பாளர்களும் உங்கள் மத்தியில் இப்போது ஊர்வலமாக வந்துகொண்டிருக்கிறார்கள். தலைவரின் இன்னுயிரைக் காத்த போராளி . . . நம்மிளைஞர்களின் நாளைய நம்பிக்கை நட்சத்திரம் . . . முத்துமுகம்மது . . .” அதன் பின்னர் முப்பத்திரண்டு இரட்டை மாட்டு வண்டிகளில் பொல்லடி மல்லர்கள் சீரான தாள அடிகளுடன் சென்றனர். அதைத் தொடர்ந்து வாடகைக்கு அமர்த்தப்பட்ட பத்துமுச்சக்கரங்கள் ரெஜிபோம் பிறைவடிவங்களை முன்னும் பின்னும் ‘பிறைசூடி’ச் சென்றன. பதினான்கு இளைஞர்கள் தொப்பி அணிந்துகொண்டு ஆடை முழுக்க மஞ்சட் பச்சை வர்ணம் குளித்துப் பூசிக்கொண்டு சீனடிப் பாவனையில் “தப்பு . . . டப்பு . . . சப்பக் . . .” கென்று கற்பனை எதிரியுடன் போரிட்டுச் சென்றனர்.

அதன் பின்னர் பொலிஸ் வாகனம் ஊர்ந்தது. அதனைத் தொடர்ந்து திறந்த டபிள்கப் வாகனத்தில் எழுந்து நின்று கையசைத்தபடி தலைவர்! பக்கத்தில் தலைமை வேட்பாளர் முத்துமுகம்மது . .!! பக்கத்தில் 7ஆம் இலக்க வேட்பாளர் ஜாபிர், 12ஆம் வேட்பாளர் ஆசுகவி அன்புடீன், பின்னால் மேலும் 9 வேட்பாளர்கள். அதன் பின்னால் அதிரடிப்படையினர். அதன் பின்னர் நடைபவனியில், கட்சி உயர் பீடங்கள், பிரமுகர்கள், பொதுமக்கள் . . . பொதுமக்கள், பொதுமக்கள் .

ஊர் எல்லையிலிருந்த கடற்கரை மைதானத்தில், இறுதிப் பொதுக்கூட்டம் ஆரம்பமானது. புரட்சி மௌலவி புழைல், தலைவரின் கவனயீர்ப்புக் கருதி நீண்ட ‘கிராஆத்’ நீட்டி முழக்கி நிறுத்த மனமின்றி நிறுத்திய பின்னும் “ஸதக்கல்லாஹ§ . . .” எனத் தொடங்கி குட்டி உப வசனத்துடன் ஓய்வானார்.

தலைமை வகித்த தாடிமாஸ்டர், “வெற்றித் திலகம், சுற்றித் திகழும் தேசியத் தலைவர் அவர்களே . . . இளைஞரின் இதயத்தின் இளம்பிறை முத்துமுகம்மது அவர்களே . .!” யுடன் மேலும் 13 அவர்களே . . . க்களை அவராகவே அழைத்து, விளித்துச் சலித்தவுடன் திடீரென்று வரவேற்புரையையும் தானே கையிலெடுத்துத் “தேசியத் தலைவர் அவர்களை வருக வருகவென்று வரவேற்கிறோம். எதிர்கால பள்ளிமுனைத் தவிசாளர் முத்துமுகம்மதை வருக வருகவென்று வரவேற்கிறோம்” என்று 13 அவர்களேக்களையும் 26 வருக வருக . . . களுடன் 46 நிமிடங்களில் சகல உரைகளையும் ஆற்றி ஊற்றி முடித்தார்.

அடுத்ததாக, சென்ற கூட்டத்தில் கவிதை பாடக்கிடையாத உள்ளூர் கவிஞர் ‘பள்ளிக்குயில் பளீல்’ தனது ‘தானைத் தலைவர் ஆளும் அரசரை’ ஒவ்வோர் அடியையும் அடிமேல் அடியடியாக அடிக்கடி மறுபடி ஒரு பிடிபிடித்துத் தானே இரஸித்து ருசித்துத் தலைவரைத் திரும்பிப் பார்த்துச் சிரித்து வாசித்து முடிக்கு முன் திடீர் இலவச இணைப்பாக ‘முத்துமுகம்மதே எங்கள் சொத்துசுகமிதே’ என்று தளைதட்டிய வெண்பாவில் பிளந்து கட்டி, டீக்கடைநெய்னாரின் கோபப்பார்வைக் கண்டு அஞ்சி முடித்தார்.

அடுத்து, கட்சியின் கானக்குயில் ‘ஹசன்ஹாக்கா’ கட்சிக்கீதம் இசைக்க, இதைத் தலைவர் காதுகொடுத்து இரஸித்தார். அந்த உற்சாகத்தில் திடீரெனத் துள்ளிசைக்கு மாறி ‘தலைவர் உண்டு தைரியம் உண்டு போடு ராஜா . . .

நம்ம கட்சிவெல்லும் காத்திருந்து பாரு ராஜா . . .’

என்று சினிமா இசைமீட்ட, தலைவரின் முகச்சுழிப்பு கண்டு ஒரே பந்தியில் ‘அவுட்’ டானார்.

பின்னர் பிறைக்கட்சியின் பீரங்கிப் பேச்சாளர் பீர்முகம்மது பிளிர ஆரம்பித்தார். யாரும் மாலை அணிவிக்க முன்வராததால் நாசூக்காய் சுருக்கமாக முடித்தார். தொடர்ந்து பத்து வேட்பாளரும் ஒருவர் பின் ஒருவராக வாக்குக் கேட்டுச் சிற்றுரையாற்றினர். அனைவரும் தப்பாமல் தலைவர் புகழ்பாடியே முடித்தனர்.

இடையில் திடீரெனச் சமய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திப் பள்ளிமுனையின் ஐஎன்பி கட்சியின் ஏழாம் இலக்க வேட்பாளரான மொட். முகம்மதுக்கனி மேடையில் ஏறி அனைவரையும் துனுக்குற வைத்தார். உடனேயே மைக்கைத் தாவிப்பிடித்து -

என்னருமை பள்ளிமுனை வாக்காளப் பெருங்குடி மக்களே . . . நான் முக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்தான். எனது தலைவர், உங்கள் தலைவர், நமது தலைவர் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் இன்றுமுதல் செயற்பட இருக்கிறேன் . . .’ என்று அதிரடியாக அறிவித்ததும் உரத்த குரலில் தக்பீர் கேட்டது.

மேலும், தலைவரின் வியப்பையும் பொருட்படுத்தாமல், பொன்னாடை ஒன்றை உரித்து அகல விரித்து, சிரித்துத் தலைவருக்குப் போர்த்தினார். அத்துடன், வாஞ்சை மீக்குற்றுத் தலைவரை மும்முறை முத்தமிட்டு ‘முஸாபாஹா’ செய்ய, தொந்தி விடாததால் ஒருமுறையோடு விட்டார். மறுபடி ஒரு பல்வர்ணப் பூமாலையை ஜரிகை ஜிகினாக்கள் ஜகஜகக்க முத்துமுகம்மதுக்கு அணிவித்து அவனுக்கும் ‘ஸலாம்’ கூறித் தழுவினார். நெய்னார் பெருங்குரலில் ‘நாரே தக்பீர்’ என்றதும் போராளிகள் ‘அல்லாஹ§ அக்பர்’ என்று பேரொலி செய்தனர்.

மொட். முகம்மதுக்கனியின் கட்சித்தாவல் சலசலப்புக்கள் அடங்கியதும் ‘அடுத்தபடியாக, எங்கள்மண்ணின் மைந்தனும் தேசியத் தலைவரின் நேசத்தம்பியும் வயற்சேனைப் பிரதேச சபை முதன்மை வேட்பாளரும்கட்சியின் இளம்பிறையுமான ஆலி ஜனாப். எம். முத்துமுகம்மது அவர்கள் உங்கள் முன் உரையாற்றுவார் . . .’

நாரே தக்பீர் . .!’

அல்லாஹ§ அக்பர்!’

முத்துமுகம்மது எழுந்தான். தலைவரிடம் ஆசி பெற்றான். மெதுவாக முன்னால் வந்தான். மகாவெள்ளமான ஜனக்கூட்டத்தைப் பார்த்தான். ஆயிரக் கணக்கில் மனிதர்கள்.ம       . . . மைமுனா மட்டும் இல்லை. ‘மைக்’கைக் கையால் பிடித்தான். பதட்டமாக இருந்தது. நெய்னார் உடனே மேடையில் ஏறி ஒலிவாங்கியைச் சரி செய்து, பொருத்திவிட்டு, முத்துமுகம்மதுவின் காதினுள் ‘கவனமாப் பேசுடா பேயா! கொன்னாமப் பேசுடா கொறுக்காப் பேயா’! என்று கிணுகிணுத்துவிட்டு மஞ்சட்பச்சை மாலை ஒன்றை அணிவித்தான் . .! மேடையின் கீழிருந்து ‘முத்தும்மது! முத்தும்மதப் பார்ரோ . . .’ என்றன பல குரல்கள். “ஒரு பாட்டுப்படி முத்தும்மதுக் காக்கோ . . . வ்!”

மாலைகளைக் கழற்றி மேசையில் வைத்த முத்துமுகம்மது, தனது உரையைத் தடுமாற்றமாகவே ஆரம்பித்தாலும் விரைவில் சகஜமானான். தாடி மாஸ்டரின் ‘இரகசிய ஆயத்த’ உரையை முதலில் வாசிக்க ஆரம்பித்தான். நடுவில் தடுமாறினாலும் தாடிமாஸ்டரின் விழிவழி காட்டலாலும் நெய்னாரின் எச்சரிக்கை இருமல்களாலும் உசாராகி ஓரளவு அமைதியாகவே பேசினான். பின்னர், மேடைக் கூச்சம் குறையவே சரளமாகப் பேச ஆரம்பித்தான். மைமுனா இல்லாத கூட்டத்தில் பேசினான். பள்ளிமுனை இளைஞர் அணிப் போராளிகளைப் பொறுத்தளவில் தலைவரால் உருவாக்கப்பட்ட ‘அரசியல்ஞானி’ பேருரை செய்து கொண்டிருக்கிறார். முத்துமுகம்மதின் உரை கச்சிதமாக முடிந்தது. உடன், இளைஞர் அணி உத்வேகம் கொண்டு தக்பீர் முழங்கினர்.

அடுத்ததாக, தலைவர் பேச எழுந்தார். கூடி நின்ற இளைஞர்கள் உணர்ச்சி மீக்குற்றுத் தக்பீர் முழங்கிக் கைகளை உயர்த்தி ஆகாயத்தில் இடிக்க, ஜனவெள்ளம் மேடையை நோக்கி முண்டித்தள்ள, இரவு 12.35க்குத் தலைவர் பேச ஆயத்தமானார். ஜனங்கள் தள்ளுப்பட்டு முன்னால் வந்தனர்.

தலைவர் மிகவும் கம்பீரமாக ஒலிவாங்கியின் முன்னால் நின்றார். நள்ளிரவு 12க்குப் பின் ஒலிபெருக்கி பாவிக்கக் கூடாதெனச் சொல்லி ஒரு அதிரடிப்படைப் பொலிஸ் அதிகாரி தலைவரிடம் விவாதித்துக்கொண்டிருந்தார். பொதுமக்கள் ஆவேசம் கொண்டு கூப்பாடு போடவே விலகிவிட்டார்.

தலைவர் மிகக் கம்பீரமாக நின்றார். முண்டியடித்த ஜனக்கூட்டம் தலைவரின் கையசைவுக்குக் கட்டுப்பட்டு அங்குமிங்கும் வசதிபார்த்துக் கடற்கரை வெண்மணலில் அமர்ந்தனர். மேடையின் பின்புறம் முழுக்க கட்சியின் மகளிர் அணி மற்றும் பள்ளிமுனைத் தாய்க்குலங்கள் குந்தி உட்கார்ந்து வெற்றிலை போட்டுக்கொண்டு தலைவரையே பார்த்துக் கொண்டிருந்தது.

பக்கத்து அலைகடல் இரைச்சலையே தாளக்கட்டாக வைத்துத் தலைவர் கணீரென ஆரம்பித்தார். படையெடுத்த மாலை அணிதல்களைத் தடுத்துத் தவிர்த்துவிட்டு உறைந்த நிசப்த இரவில் ஆழமாக ஊடுருவும் அவருக்கே உரித்தான ஆண்மைக் குரலுடன் ஆரம்பித்தார்.

“. . . வேகக் காற்றின் விசையில் அசைகின்ற வெண்முகில் கூட்டங்களே . . . உயரத்தில் உலவுவதால் நீங்கள் உயர்ந்துவிடுவதில்லை . . . நாங்களோ மரங்கள் . . . மண்ணின் சுவாச வேர்கள் . . . எங்களின் போராட்டத்தில், ஒவ்வொரு உயிராக உதிர்ந்தாலும் ஒரு நூறு புதிய மரங்கள் ஓங்கியுயர்ந்து ஓர்மையுடன் வளர்வதை உங்களால் ஒரு போதும் ஒடுக்கிட முடியாது. இந்த மண்ணும் இதன் மணமும் எங்கள் பறிக்க முடியாத பாரம்பரியம் . . . இதனுள்ளிருந்து வெளிவரும் எமது வேர்களை வெட்டிவிட யாரால் முடியும் . .? நாமோ தலைநிமிர்ந்து நின்றவர்கள் . . . தூசுக்காற்றைச் சுவாசிக்கச் செய்யும் தரகர்களைக் தவிடுபொடியாக்கி . . . அதிலிருந்து ஆக்கம் பெறுபவர்கள் நாங்கள். கேவலம் இந்தச் சில்லறை மேகங்களுக்கா அஞ்சி அடிபணிவோம் . .?

சதிகளைச் சத்திய சோதனைகளால் சந்தித்த சந்ததிகள் நாங்கள் . . . எங்களை ஆக்கிரமித்து ஆள நினைத்தால் . . .அதனால் உங்கள் மூக்கறுந்து முள்ளந் தண்டுடைந்து போவீர்கள் . . . எங்களின் இந்தப் போராட்டத்தில் ஆயிரம் இழப்புகள் வந்தாலும் ஒவ்வொரு உயிராக இழந்தாலும், ஒருநூறு புதிய மரங்கள் ஓர்மையுடன் ஒங்கி எழுவதை ஒருவராலும் தடுக்க முடியாது . . .

 எதிர்க்கட்சி வேட்பாளர்களும் ஐஎன்பி சுயேச்சைக் குழுக்களும் தென்னை மர இருளுக்குள் பதுங்கியபடி தலைவரின் உரையைக் கேட்டு இடியோசை கேள்நாகமாகினர். தொடர்ந்து, இலங்கையில், முஸ்லிம் மக்களின் இருப்பு, சிங்களப் பேரினவாதத்தால் மேற்கொள்ளப்படும் இன ஒதுக்கல்கள், விடுதலைப்புலிகளால்புரியப்படும் இனப்படுகொலை, இந்திய அமைதிப்படையினரின் அட்டகாசம், இனச்சுத்திகரிப்பு, சிறுபான்மையினர் மீதான அடக்கு முறை, தேர்தல் விபரங்கள் இப்படி வரிசையாகச் சற்றும் குழப்பமின்றித் தெளிவாக நாற்பது நிமிடங்கள் பேசினார்.

தலைவர் தனது உரையைச் சற்று நிறுத்திய சமயத்தில், ஒரு சங்கடமிக்க கேள்வி அடங்கிய துண்டுத் தாளை எழுதி,£ரோ, தலைவருக்கு அனுப்பிவிட்டு ‘வதுலு’க்காகக் காத்திருந்தனர். கேள்விச் சீட்டுத் தலைவரிடம் சென்றது. புன்முறுவலுடன் அதனை வாங்கிய தலைவர் தமக்குள் படித்தார். ஜனங்கள் ஆர்வப் பரபரப்பில் தத்தளித்தனர். மறுபடி ஜனங்களைப் பார்த்துப் புன்னகைத்த தலைவர் கேள்விச் சீட்டை உயர்த்திக் காட்டினார்.

இந்தக் கேள்விச் சீட்டை அனுப்பி வைத்த அன்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்! எனது உரையின் முடிவில் பதிலளிக்கப்படும். அதுவரை விரும்புவோர் இன்னும் கேள்விகள் இருந்தால் எழுதி அனுப்பலாம்’ என்று அறிவித்துத் தலைவர் தனதுரையை மிகச் சரியாக விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார்.

“ . . . ஒன்றை மட்டும் உறுதியாகக் கூறவேண்டும் . . .இந்த ஆறு பிரதேச சபையிலும் நமது கட்சி ஒன்றிலாவது தோற்றால் கட்சித் தலைமைத்துவம் தனது எம். பி. பதவியை ர£ஜினாமா செய்து தூக்கி எறிந்துவிட்டு, மக்களோடு மக்களாகக் களத்தில் நின்று இஸ்லாமிய வழியில் போராடத் தயாராக இருக்கிறது.”

கூட்டம் உணர்ச்சி மேலீட்டால், “¨உஉஉஉ” என்று கத்தியபடியே எழுந்து நின்றது. “அல்லாஹ¨ அக்பர் . . .

அல்லாஹ¨ அக்பர் . . .” என்ற கோஸம் ஒரே குரலில் முழங்கி அலைகடலோசையை மிகைத்தது. அனைவரையும் புன்னகையுடன் கையமர்த்திய தலைவர் இறுதியாக, மருதானையில் பயங்கரவாதிகளால் தன்மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சி பற்றிய சம்பவத்தைத் தொட்டார். இளைஞர்களின் ஆக்ரோஷமிக்க தோள்கள்தினவெடுக்க முத்துமுகம்மது தன்னைப் பாதுகாத்த விதத்தைத் தலைவர் உள்ளமுருக விபரித்தார். மக்கள் மூக்கில் விரலை மட்டுமன்றி தலையிலும் கைவைத்து மயிர்க் கூச்செறிந்தனர். தலைவரின் உரை முடியும் வரை கேள்விச் சீட்டு அவரது விரல் இடுக்கினுள் பத்திரமாய் இருந்தது. வேறு கேள்விகள் எதுவும் வரவில்லை.

சரி! இப்போது இந்தக் கேள்விச் சீட்டுக்கு வருகிறேன் . . .”

கேள்விச் சீட்டை மறுபடி மனதுள் படித்தார். மறுபடி புன்னகைத்தார் ஒலிவாங்கியில் வாசித்தார்! “தலைவரே! சோமன் ஆகுவதற்கு முத்தும்மதுக்கு என்ன தகுதி இரிக்கி?            ங்கம் குறைந்தவன இசிலாம் கட்சி தலைவனாக ஆக்கலாமா? ‘வதுல்’ தரவும்! - பள்ளி வட்டாரம் . . .” மறுபடியும் தலைவர் அக்கேள்விச் சீட்டை எழுதப்பட்டிருந்த எழுத்துப் பிழைகளுடன் படித்தார். இளைஞர் அணி மூர்க்கமானது. மக்கள் ஆர்வமாயினர். தலைவர் மிகவும் கோபத்துடன் ஆனால் சாந்தமாகப் பதில் சொன்னார்.

இது நல்ல கேள்வியா நாகரீகமான கேள்வியா என்பதல்ல பிரச்சினை. முதலில் இதற்குப் பதில் சொல்லவே தேவையில்லை. காரணங்கள் பல. முதலாவது இதில் திகதியில்லை, கையப்பமிடப்படவில்லை, இடம் குறிப்பிடப்படவில்லை. சட்டப்படி செல்லுபடியற்றது. இரண்டாவது, இதில் சேர்மன், என்பதற்குச் ‘சோமன்’ என்று எழுதியிருக்கிறது. அரவுக்குக் குற்று இல்லை. இரிக்கி . . .இருக்கிறது என்றிருக்க வேண்டும். வதுல் தரவும்! ஹஹ் . . . ஹா! பதில் தரவும்! இந்தப் பதிலுக்கே ஒரு ‘வதுல்’ தரத் தலைமைத்துவம் தயார்! மூன்றாவது, தமிழ்க் கடிதத்தில் ஆங்கிலமும் கலந்திருக்கின்றது. நான்காவது, இஸ்லாம் என்பதற்கு, இசிலாம் என்று எழுதப்பட்டுள்ளது. இதற்குப் பதில் சொல்வதே பாவம். என்றாலும், பள்ளிமுனை மக்களுக்காகவேனும் இதற்குப் பதில் சொல்லித்தானதாக வேண்டும். உண்மைதான்! சோமன் ஆவதற்குத் தம்பி முத்துமகம்மதுக்கு எவ்வித தகுதியும் இல்லைதான் . . .” என்று கூறிக் கூட்டம் முழுவதையும் ஆச்சரியக் கடலில் மூழ்கடித்தார். ஒரு மர்மப் புன்னகையுடன் ஒரு விநாடி எதுவும் பேசாமல் நின்றிருந்தார். சனங்கள், உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் வாய்பிளக்க தலைவர் அதிரடியாக மிகச் சத்தமாகச் சொன்னார்.

சோமன் ஆவதற்கு தம்பி முத்துமுகம்மதுக்கு எவ்வித தகுதியும் இல்லைதான் . . . ஆனால் சேர்மன் அதாவதுதவிசாளராக, ஆவதற்குத் தேர்தல் ஆணையாளர் கோரிய சட்டப்படியான எல்லாத் தகுதியும் முத்துமுகம்மதுக்கு உண்டு என்று தலைமைத்துவம் திட்டமாகப் பதில் தருகிறது.”

நாரே தக்பீர்!

அல்லாஹ§ அக்பர்!!’

மற்றது . . ., அங்கம் குறைந்தவனை இசிலாம் கட்சித் தலைவனாக ஆக்கலாமா . .? இப்படி ஒரு ‘ஜாஹிலியா’க் கேள்வியைக் கேட்பவர்கள் பள்ளி வட்டாரம் என்று பெயர் சூடியிருப்பது தலைமைத்துவத்துக்கு வெட்கமாயிருக்கிறது. ‘உஹத்’ போர்க்களத்திலே படைத்தலைவராகப் பல் உடைந்துஅங்கம் ஊனமான கண்மணி எங்கள் நாயகம் (ஸல்) அவர்களே இருந்து படை நடத்திய வரலாறறியாத மாமூடர்கள் பள்ளி வட்டாரமா . .? . . .யார் அது?”

தலைவரின் வெம்மையான கேள்விக்குப் பதிலளிக்க யாருமில்லை.

இன்று, புனித ‘ஹரம்ஷரீபி’லே லட்சோபலட்சம் முஸ்லிம்களுக்குத் தலைவராக இமாமாக நின்று தொழுவிப்பவர் விழிகள் இல்லாத ஒரு ஊனமுள்ளவர்தான் என்றாவது தெரியுமா இந்த அறிவு மேதைகளுக்கு. .?” கூட்டம் பற்பல குரல்களில் சிரித்தது. தலைவரின் பதிலடிகளில் சுகம் கண்டு அனுபவித்தது.

அது மட்டுமல்ல, இன்ஷா அல்லாஹ், இந்தப் பிரதேச சபைத் தேர்தலில் தம்பி முத்துமுஹம்மத் சர்வநிச்சயமாக வயற்சேனையின் பிரதேச சபைத் தவிசாளராக ஆகத்தான் போகிறார். இதனைப் பள்ளிமுனை மக்கள் தீர்மானித்துவிட்டார்கள். இதுவே தலைமைத்துவம் அவர்களுக்குக் கொடுக்கும் திட்டமான பதில்! வதுல் அல்ல பதில்!! . . .

நாரே தக்பீர் . .!

அல்லாஹ§ அக்பர்!”

0

மாவட்டத்தின் ஆறு பிரதேச சபைகளில் இஸ்லாமியக் கட்சி ஐந்து சபைகளைக் கைப்பற்றியிருந்தது. ஒரே ஒரு சபையை 93 வாக்குகள் வித்தியாசத்தில் இழந்தது. வயற்சேனை பிரதேச சபையின் விருப்புத் தெரிவு வாக்குகளில் முத்துமுகம்மதுக்குப் பெரும்பான்மையான, சுமார் பதினொராயிரத்துக்கு மேல் வாக்குகள் கிடைத்திருந்தன. 7ஆம் இலக்கத்தில் போட்டியிட்டிருந்த ஜாபிர் 7601 வாக்குகளும் 12ஆம் இலக்கத்தில் போட்டியிட்டிருந்த ஆசுகவி அன்புடீன் 5001 வாக்குகளும் பெற்று உறுப்பினராகத் தெரிவாகியிருந்தனர். எதிர்த்துப் போட்டியிட்டிருந்த ஐஎன்பி கட்சியின் எம்மெல்லலெச் ஹாஜியாருக்கு 866 வாக்குகளும் சுயேச்சையில் வானொலிச் சின்னத்தில் களமிறங்கியிருந்த பள்ளிமுனையின் பெரிய பள்ளித் தலைவர் செய்லான் ஹாஜியாருக்கு வெறும் 111 வாக்குகளும் கிடைத்திருந்தன. அன்று முழுவதும் அமர்க்களப்பட்ட பள்ளிமுனையில்,

இளம் பிறையே! வருக!!

வயற்சேனையின் தவிசாளரே வருக!!!

என்று சீலைப்பதாதைகள் வரவேற்க இளைஞர் அணியும் கட்சிப்போராளிகளும் புடைசூழ, வயற்சேனைப் பிரதேச சபைத் தவிசாளர் ‘இளம் பிறை’ முத்துமுகம்மது, பள்ளிமுனை மைதானத்தில் காரில் வந்து இறங்கினான். மாலைகள்த       £ங்கினான். நேராக ஜும்மா பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டுப் புரட்சி மௌலவி புழைலின் ‘பறக்கத்’ உத்தரவாதமளிக்கப்பட்ட ‘துஆ’ப் பிரார்த்தனை முடித்தான். அங்கிருந்து வெற்றிபெற்ற உறுப்பினர்களான ஜாபிர் மற்றும் ஆசுகவி அன்புடீன் சகிதமாகப் பள்ளிமுனையை விஸ்தாரமாக ஒரு தடவை இளைஞர் படையின் “நாரே தக்பீர்!” கோரஸ§டன் வலம் வந்தான். நன்றி தெரிவித்துக் கையசைத்தான்.

ஊர்வலம் மாமியின் வீட்டைக் கடந்தபோது, கூடவே வந்த டீக்கடைநெய்னார், முத்துமுகம்மதின் கையைச் சுரண்டினான். வேலிக்கு மேலால், பெரிதும் சிறிதுமான நான்கு மைமுனாக்கள் தெரிந்தனர். முத்துமுகம்மது அதிர்ந்து போனான். இவர்கள் மைமுனாவின் தங்கைகள். மாமியின் முகம் கறுத்திருந்தாலும் கொஞ்சம் அதிசயத்துடன் புன்னகைத்தாள். பள்ளிமுனைக்கு வந்ததிலிருந்து ஒரு தடவைகூட மாமியின் வீட்டுக்குப் போகவில்லை. வீட்டினருகே வைத்து யாசின், முத்துமுகம்மதுக்கு மாலை அணிவித்தான். மைமுனாவின் நான்கு தங்கைகளும் “முத்துமச்சான், முத்துமச்சான்” என்று கிறீச்சிட்டு ஓடித்திரிந்து எட்டிப் பார்த்துப் பார்த்து வெட்கப்பட்டனர். வீடு கல்லால் கட்டப்பட்டு ஓடு போடப்பட்டிருந்தது. மைமுனா . .! மைமுனா . .? பொன் மானத் தே . . . டி . . . நானும் பூவோ...டு... வந்தே...ன்... நான் வந்த நே...ரம்...அந்த மானங்க...ல்ழில...ய்...”

 நாரே தக்பீர் . . .

அல்லாஹ§ அக்பர் . .!”

இரவு பதினொரு மணிக்கு எல்லாம் முடிந்து வீடு வந்த முத்துமுகம்மதுவை வாழ்த்த அந்த வேளையிலும் ஊர்ப் பிரமுகர்கள் கூடியிருந்தனர். முத்துமுகம்மதுக்குத் தலை வலித்தது, மகிழ்ச்சி திகட்டி விட்டது.

மாஸ்டர்! எனக்குத் தலைக்க இடிக்குது!’ என்று கூறிவிட்டுத் தனது அறைக்குள் வந்து கட்டிலில் விழுந்தான்.

சேர்மன், ‘ரெஸ்ட்’ எடுக்கனும் தயவுசெய்து நாளைக்கு வாங்க!” தாடிமாஸ்டர் சொல்வது கேட்டது.

15

வயற்சேனை பிரதேச சபைத் தவிசாளர் பதவி என்றதும் முத்துமுகம்மது பயந்த மாதிரி அது ஒன்றும் கடினமான வேலையல்ல என்பது சில மாதங்களிலேயே புரிந்துவிட்டது.

அரசியலுக்கு வேண்டிய உள்ளார்ந்த விவரங்கள் புரிந்துகொண்டு வந்தது. தினமும் சந்திக்கின்ற மனிதர்கள், தேவைகள், பிரதேச சபைக் கூட்டங்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மக்கள் குறைபாடுகள், இனக்கலவரச் சூழல்கள், அரச அதிகாரிகள், நிவாரணங்கள், ஊர்ப் பொது விடயங்கள் என்று முத்துமுகம்மதுக்கு ஆரம்பத்தில் சற்று மருட்சியாக இருந்தாலும் சிங்கள மொழிப் பரிச்சியமும் ஓரளவுக்கு இருந்ததால் நிர்வாகம் எளிமையாகிவிட்டது. தாடிமாஸ்டரின் பலதரப்பட்ட அனுசரணையாலும் முக்கிய பிரச்சினையின்போது தலைவரின் ஆலோசனைகளாலும் தவிசாளர் வேலை மிகச் சுலபமாகவே இருந்தது.

மைமுனா இல்லாத பள்ளிமுனையில் வாழ்வது மட்டும்தான் முத்துமுகம்மதுக்குக் கஷ்டமாக இருந்தது. அது ஒரு சகிக்க முடியாத வெற்றிடமாக உறுத்தியது. கொழும்பு வாழ்க்கையை இழந்ததும் தலைவரைப் பாதுகாக்க முடியாமல் இங்கே இருப்பதும் திகிலாக இருந்தது. எனினும் என்ன செய்ய . . . இது தலைவரின் ஆணை! தலைவரின் பரிசு!! அவரது நன்றிக் கடன். அவரது பூவிலங்கு! மீறமுடியாது. ஆனால், மைமுனாவுடன் பேசித் திரிந்த ஒழுங்கைகள், பன்புல் பிடுங்கப் போன பனையடி வெளிவயல், மைமுனாவின் அந்தரங்க ரகசியம் பகிரப்பட்ட வெத்திலைக்காரன் தோட்டம், காட்டவ்லியா அப்பா சியாரம், இரும்புப் பாலத்தடி எல்லாம் மனதுக்குள் வருத்தின. மனதினுள் ஆதங்கமும் ஆவேசமும் பொங்கிப் பொங்கித் தணிவதாயிருந்தன.

மைமுனாபற்றி ஒரு தகவலும் இல்லை. மாதாமாதம் மாமியின் பெயருக்கு வங்கியில் பணம் வந்து கொண்டிருந்தது. அது ஒன்றே அவளது இருப்பை உறுதிப்படுத்தியது. இந்த வேதனை சகிக்க முடியாமல் ஒருநாள் மாமி வந்தாள்.

தம்பி, முத்தும்மது . . . சொவமாயிரிக்கியா . . . ப்பா?”

மாமியா . . . என்னது அதிசயம்! இருங்க மாமி!”

தம்பி! ஒன்னப் பார்க்க வெரல்ல நான் ண்டு கோவியாத. ஒன்னயப் பாத்தா னெக்கி மைம்னாட நெனப்புதான் வாற.! அந்த வேக்காட்டுல தான் நான் வாற ல்லம்பி . .!”

மைம்னா, கடிதம் கிடிதம் ல்லியா மாமி?”

ஒரு வரியும் அவள் எழுதுற ல்ல ம்பி! செக்கு மட்டுந்தான். அட்றஸிம் ல்ல . . . கெஸட்டும் ல்ல!”

ஏன் . . . சப்புச் சுல்தானுட்ட அட்றஸி இரிக்கிமே . . .ஏஜன்ஸியிட்ட கதச்சி அட்றஸி எடுத்துத் தெரல்லையா?”

ல்லம்பி! அவன் ஊட்ட வாறதுமில்ல! போறதுமில்ல . . . மைம்னா காசி ரெண்டு லெச்சம் மட்டுக்கு அனுப்பியிருக்காள். அதுக்கு இரிக்கிற வளவ ரெண்டாப் பிரிச்சிப் பரிதாக்கு ஒரு ஊடு கட்டிரிக்கன். ஒன்ட கூட்டாளி நெய்னார்ர தம்பி ஒருத்தன் பண்ணப் போறன்டு வெசளம் வெரக் காட்றான் வேள், ஒண்ணா ஒண்ணா ங்கிறாள். மைம்னாலாத்தா ‘வாண்டத்துக்குப்’ பொறகுதான் பண்ணுவாளாம். ண்டு மறமசறம ண்டு ஒண்ணா ண்டாள். டியே, மைம்னாக்கு முத்துமச்சான் இருக்காரு. நீ வாழு ண்டு...”

என்னது மைம்னாக்கு . . . முத்துமச்சானா? அப்பிடி ஒரு நெனப்பு ஒங்களுட்ட இருக்கா மாமி . . .”

மாமி குற்ற உணர்வுடன் திடுக்கிட்டு வேறு பக்கமாகப் பார்த்தாள். தயங்கினாள். கண்களில் திடீரெனக் கண்ணீர் தெரிந்தது.

“ . . . ல்ல . . . ம்பி! சும்மா, அவளுட்ட செல்லிப் பாத்த! அவள் எணங்கிறாப் போல ல்ல. தம்பி, நீயான் ஒளுப்பம் அவளுட்ட பக்குவமா கதச்சி இணங்க வெக்கணும். நீ சென்னாக் கேப்பா”

“...”

மறுகா வந்து, யாசின் சும்மா றோட்டுல அலஞ்சி திரியிறான். யூனியனுல ஒரு வாச்சர் வேலயக் கீலய எடுக்க ஏலாதா ம்பி?”

“...”

மைம்னா வெளிநாட்டுக்குப் போன ண்டு என்ட பிச்சச் சம்பளக் காசையிம் வெதான வெட்டிட்டான் . . .என்ன . . . ம்பி பேசாம இரிக்கிற . . . என்ட பிச்சைச் சம்பளத்தையும் வெதான வெட்டி உட்டுட்டான் . . . மூனு கொமரோடயும் ந்த சில்லித் தலயனோடயும் நா . . . நான் பர்ர பாடு... எ... என்ட... தங்கக் கொடம்... மைம்னா... மைம்னா . . . என்ட கிளியே . . . என்ட தல வெத்திலயே . . .”

£மியின் ஒப்பாரி முடியுமட்டும் முத்துமுகம்மது பேசவில்லை. முத்துமுகம்மதின் உணர்ச்சிவசப்படாத முகத்தைப் பார்த்து மாமி குழப்பமாகி ஒப்பாரியை நிறுத்திவிட்டாள்.

செரி மாமி, நீங்க போங்க! பாப்பம்!!”

பாப்பம் ண்டா . .?”

நாளைக்கு எல்லாத்துக்கும் வீட்டவாறன். ஆறுதலா கதப்பம் போங்க! யாசின வெரச் செல்லுங்க!” முத்துமுகம்மது பழைய கொறுக்காமுத்தும்மது இல்லை என்று உணர்ந்து கொண்ட மாமி சற்றே பயந்துபோய்விட்டாள்.

என்டல்லோ . . . மைதின் ஆண்டவரே . .! மைம்னா . .!” - மாமி தயங்கியபடியே எழுந்து போய்விட்டாள்.

£மி போன பின்பு நெடுநேரம் யோசனையில் ஆழ்ந்து கிடந்தான். நெய்னார் வந்து கூப்பிட்டுக் கூப்பிட்டு உசுப்பியதும் துணுக்குற்றுச் சுய நினைவுக்கு மீண்டான்.

முத்தும்மதோவ்! சம்மாந்தொறையில முசிலிமாக்கள் ரெண்டுபேரக் கடத்தினயாம் . . . அவண்ட வீரமொனக் கெராமத்துக்க பூந்து நம்மடாக்கள் சுட்டயாம் . . . நாலு தம்ளன் செத்தயாம் . . . வாகனம் ஒண்டும் ஓடல்ல . . .

ஊத்தப் பட சம்மாந்தொறய ரவுண்டப் பண்ணப் போகுதாம் . . . மத்தது ஒனக்கிட்ட முக்கியமா செல விசயங்கள் இரிக்கி. கதைக்கனும். வெத்திலக்காரன் தோட்டத்துக்குப் போவம் வாறியா? மோட்டச் சைக்கிள் இரிக்கா?”

தவிசாளரை மரியாதையின்றி பழைய பாணியிலேயே அழைப்பதும் பேசுவதும் டீக்கடைநெய்னார் மட்டும்தான். முத்துமுகம்மதுக்கு உத்தியோகபூர்வமற்ற தகவல் வழங்கியாகவும் இருந்தான். மைமுனாவின் தங்கை பற்றியும் நெய்னாரின் தம்பி விஷயமும் பேசவேண்டிய தேவையும் திடீரென ஒரு மாறுதலான, ஆறுதலான இடமும் தேவைப்படவே “சரி வா! போவம்!” என்றான். புறப்பட்டான். தாடிமாஸ்டரின் மோபைக்கில் நெய்னாரைப் பின்னால் வைத்து ஊனக்கையால் மிக இலாவகமாக மோபைக்கைஇயக்கி, கிறவல் வீதியில் இறங்கிப் பறந்தான். வழியில் “நெய்னாரேய்! ந்தக் கடையில சந்தனக்குச்சிம் வீடிக்கட்டும் வாங்கு!”

பேருதாஞ் சேமன் . . . ன்னம் வீடி அடிக்கிறத்த உடல்ல . . . முத்தும்மதோவ், பாலத்தடி ரோட்டால உடாத . . .புலி நிக்கானாம் . . . டேய், பாலடி அவ்லியா வாப்பாட சியாரம் வழியே உடு! அங்கரிந்து நடந்து வெத்திலக்காரன் தோட்டம் போவம்”

அடர்த்தியான தென்னந்தோப்புகளுடே விரைந்து சப்புத் தண்ணி வாய்க்காலில் இறங்கி மறுப்பக்கம் ஏறித் திரும்பி அடர்ந்த புன்னலைப் பற்றைகளுள் மறைந்து மறுபடி ஒற்றையடிப் பாதையில், புழுதிபறக்க நீளமாய் ஓடித் தோட்டத்தின் ஆரம்பப் புதர்கள் கடந்து, பாலடி அவ்லியா அப்பா சியாரம் வளவில் ஓய்வானது மோட்டார் சைக்கிள்.

ப்...ப்...பா... என்ன காத்து! என்ன கூள்! சில்லுண்டு குளிருது. நாம ஞ்ச வந்து ஒரு வரிசம் இரிக்குமாடா முத்தும்மது . .?”

வருசத்துக்கும் கூட இரிக்கும் . . .”

ஊதுபத்தியைக் கொழுத்தினான். சியார கொடிக் கம்பத்தருகிலும் சியார முன் விறாந்தையிலும் வைத்தான். ‘கும்’மென்று நறுமணம் பரவியது. சியாரம் மிக அமைதியாக இருந்தது.

அஸ்ஸலாமு அலைக்கும் பாலடி அவ்லியா அப்பா!”

செலாமலைக்கும் வாப்பா!”

இருவரும் ஸலாம் சொல்லி ‘துஆ’ முணுமுணுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டனர். மனம் இலேசாகி குளிர்ந்து நிம்மதியானது. இருவரும் நடந்தனர். வாய்க்கால் நீர் சிலீரிட்டுக் குளிர்ந்தது. தெறித்தது. ‘குய்க் கூய்க் . . . குய்க் கூய்க்’கென்று பறவைகள், ‘ட்டூய் . . . ட்டூய்’ என்று கருவிளான் குருவிகள், ‘டுபூக்’கென்று நீள ஊளையிடும் குழித் தேவாங்கு, அந்நிய மனிதர் வரவை வேண்டாத பிராணிகள், வெண்டி, கத்திரி, பாகற்கொடி, தென்னஞ்சோலை, ஓலைகளுடே வெயிற் கம்பிகள், ஓங்கி நீண்ட கமுகுகள், அவற்றில் பின்னிப் பிணைந்து தழுவி மேலேறிய செழிப்பான வெற்றிலைக் கொடிகள் . . .

தட்டுத்தட்டாய் பலவர்ணங்களில் கருஞ்சீரப் பூக்கள், அகலமான ஊதாப்பூ, நறுவுண்ணி மரம், நாற்று மேடை, எரிக்கிலைப் பற்றை, காட்டு மல்லிகை, கும்மென்ற கன்னிப்பூமணம், கருவட்டான் குருவி குஞ்சுகளுடன், சிக்குச் சிக்கென்று கொட்டப் பாக்கான் குருவிகள், ‘ஊங்க . . .ஊங்க’கென்று கருநாரை, சுழிக்கும் மீன் குஞ்சுகளின் எக்காளிப்புத் துள்ளல்கள், தலைமயிரைக் கோதிக் கலைக்கும் வயற் காற்று, கிராமத்தின் கன்னி கழியாத உயிர்ப்பு இரகஸியங்கள்.

அப்பா! எவ்வளவு காலமாயிற்று இந்த ஏகாந்தம் அனுபவித்து. இந்த உலகத்திற்கு ஒருமுறை மைமுனாவுடன் சைக்கிளில் வந்திருக்கிறான்.

மைம்னா எப்பிடி எடம்... நாம ரெண்டு பேருந்தான் . .! வா . . . ன் . . . மேகங்களே . . . வாழ்த்துங்கள் . .!”

நெல்ல எடம் மச்சான்! அந்தப் பாட்டு வேணா . . .

தண்ணீ . . . கறுத்திருச்சு . . .’ ண்ட பாட்டப்படிங்க மச்சான் . . .கேப்பம் . . .”

ஒனக்கில்லாத பாட்டா . .? ஏ . . . ஏஏ . . . முத்துமுத்தா மொட்டு விட்ட வாசமுல்லே . . . ய் . . . தொட்டுப் புட்டாதோசமில்லே...வா...டி           புள்ளே...ய்...த           . . . தண் . . . ணீ . . . ய் . . . கறுத்தூருச்சு . . . கண்ணு தவளச் சத்தம் கேட்டுருச்சு . . . ஊஊரும் ஒறங்கீறிச்சு . . . நாம ஒதூங்க எடம் கெடைச்சீருச்சுஊஊஊஊ . . .”

முத்துமுகம்மதின் தொண்டைக்குள்ளிருந்து பீறிட்டுக் கிளம்பிய மலேசியா வாசுதேவனின் காந்தக்குரலில் வெத்திலைக்காரன் தோட்டமெங்கும் திரிந்த பட்சிகள் வாயடைத்துப் போயின.

இந்தப் பாட்டுல முத்துமுத்தா . . . ண்டு உங்கட பேரு வெருது . . . அதான் மச்சான் இத நான் விரும்புற . .!”

அட . .!”

மச்சான் . . . தனிய நிக்கம் . . . ஆரும் கண்டா என்னத்துக்காகும்”

ஒண்டும் ஆகாது! இதப் பாத்தியா?”

அடச் சீய்ய் . . . ரோசமத்தது . . . இது ஆர்ர குடில் மச்சான் . .?”

மோதின்டகுடில்! ஒத்தருமில்ல . . . வா உள்ள போய் பாப்பம்”

ஓ . . . ஒடண வாற . .! நெல்ல சோட்ட! உள்ள போனா நீங்க . .?”

ஒண்டுஞ் செய்யமாட்டன் . . . வாவன்”

ச்... சேய்... ச்சீய்! கய்ய உடு மச்சச்ச...”

வா! வா!”

“... ...”

மைமுனாவின் நாணச்சம்மதத்தைத் தொடர்ந்து இருவரும் மோதின் குடிலுக்குள் நுழைந்து இரண்டு நிமிடம்கூடக் கடந்திருக்காது, தூரத்தே தவளச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்த மோதினின் “ட்ட்ட்டே . . . ய் ஆர்ர்ராலீது . .?” என்ற கடுரமான குரல் கேட்டதும் இருவரும் துடித்துப் பதைத்துப் பற்றைகளுக்குள் புகுந்து பறந்தோடி வந்ததும் அதை நினைக்கும் போதேல்லாம் சிரித்து உருண்டதும் . . .

இதப் புடியன்டா டேய்! முத்தும்மதோவ்!” என்ற நெய்னாரின் கர்ணக்கடூரச் சத்தத்தில் கவனம் கலைந்தான்.

குடிரா சேமன்! தெம்பிலி! நல்லாரிக்கும் குடி!”

வீடி வாங்கினயாடா நெய்னாரு?”

நீ பெரிய சேமன் . . . வீடி அடிப்பியா . . . கோலீப் தெரயா?”

வீடிய எடன்டா பொட்டயா!”

நெய்னார் சிரித்துப் பீடிக்கட்டை எடுத்தான். வெகுநாட்களின் பின் பீடிப்புகை குபுகுபுவென்று இழுத்துக் கமகமத்து நெஞ்சில் காரமாக இறங்கியது. முத்துமுகம்மது முழுதாக அனுபவித்து இரஸித்துப் புகைத்தான். வெகுநாட்களின் பின்னர் மனது சந்தோஷமாக இருந்தது.

முக்கிய ‘வெசளம்’ண்டியே என்னடா?”

ஒவ்வொண்டா செல்றன். பொறு! மொட உதுமான் மாமாட மகன் அன்பரு புலிப்படையில சேந்துட்டான் . . .”

என்னது . . . ஏண்டா . . . அவன் சின்னப் பொடியன் . . .ல்லாடா . .?”

மறுகா, கெழவனயா புலிப்படையில சேக்கிற? அன்பர ஊர்ல கொஞ்ச நாளா காணல்ல. காத்தாங்குடில மாமாட்ட இருக்காண் ண்டு மொடஉதுமான் பச்சப் பொய்யச் சென்னான். நேத்து லாவு ஊட்டுக்கு ஆய்தத்தோடு வந்து,£ப்பாட்ட, ம்மாவ கொளும்புக்குக் கூட்டிப்போய் கெடுத்தவன கொல்லப் போறண் ண்டு செல்லிட்டு இனி என்னத் தேடாத ண்டுட்டுப் போய்ட்டானாம்”

சப்புச் சுல்தானயா . .? என்ன மடத்தனமான வேலடா . . . இது! உதுமான் செல்லயும் ல்லியே . . .”

நீ சேமன்! செல்லுவானா? பொறகு, சப்புச் சுல்தான், குந்துற எடமெல்லாம் ஒன்னப் பத்தித்தான் ‘களுவித்’திரியிறான். மைம்மாவ நீ லொச்சில மூணு நாள் வெச்ரிந்து பொறகுதான் வெளியில அனுப்பினியாம் . . . அதுமட்டுமில்ல . . . செல்லயும் பயமாயிரிக்கி நீ மைம்னாவ . . .”

செல்லண்டா!”

தலைவருக்கு நீ மைம்னாவ . . .”

அடச் செருப்படிநாயே . . . எவள்ள மஹண்டா சென்ன . . . சப்பனா?”

டெ... டெ... டெ... பொறு! செல்லல்ல... மொட்ட நோட்டிஸி அடிச்சிருக்கான் அதுக்குத்தானாம் ஊருபேரு தெரியாத ஒனக்கு ‘டிக்கட்டு’த் தந்தயாம். இதுமாதிரி கொள்ளயா வெஷயங்கள் . . . இதப்பாரு நோட்டிஸ்”

“...”

“. . . வாசிக்கன் கேளு! . . . ம்ம்ம் . . . மருதானை யூக்கே லொட்ஜில் மாண்புமிகு தலைவர்களுக்குத் தனது மச்சினியைக் கொடுத்து மாமா வேலை பார்த்தவர்கள் தவிசாளர்களாக உலவுவதன் இரகஸியம் என்ன? கூமாவுக்கும் கூட்டிக் கொடுக்கத் தயங்காத கொறுக்காப் புளியர்கள் கொள்கை என்ன . . .”

ப்பிடிக் கொண்டாடா அத!”

ஆத்திரத்துடன் பிரசுரத்தைப் பறித்த முத்துமுகம்மது வேகமாக, மௌனமாக அதனைப் படித்தான். கண்கள் இறுத்தன. இதயம் படபடத்துத் துடித்தது. நாக்குக் காய்ந்துவிட்டது. ஆத்திரத்தில் உடல் நடுங்கியது.

16

நெய்னாரு . . . யார்யார்ரா ந்த நோட்டீஸி அச்சடித்த அறாமிர மக்கள்?”

சப்புச் சுல்தான்தான். வேற ஆரு. ஊர்ல பெரிய ஆக்களுக்குத் ‘தவால்’ல போட்டிருக்கான். மிச்சத்த இரவையில ரோட்டெல்லாம் போட்டிருக்கான் . . . ந்தா வீடி . . . அடி!”

நெய்னாரு . . . வேளவு நாளும் நான் சப்பனை உட்டு வெச்சது பிழை. என்னப்பத்தி என்னண்டாலும் ஏசட்டும் . . .கதைக்கட்டும் . . . ஆனா . . . தலவரப்பத்தி . . . கதைக்க ஆர்ரா இவன் . .?”

கோவிக்காத . . . நீ இப்ப சேமன்”

பொத்துரா வாய! என்ட கையாலாதான்டா அவனுக்குச் சாவு”

முத்துமுகம்மது சட்டென எழுந்து கையை விரித்துக் காற்றில் இடித்தான். ‘டிர்ர்ர்ர்ரிக்’ கென்று சீறிப் பறந்தது. மஞ்சட்கழுத்தான் குருவி அடிவயிறும் கழுத்தும் துகில் மஞ்சளில் பளிரிட்டுப் பறந்தது.

டே . . . அவிசரப்படாதடா பேயா!”

நெய்னாரு! இப்ப சப்பன் எங்கடா . . . ஊர்லயா . . .கொளும்புலயா?”

பேயா, அவிசிரப்படாதடா . . . அவன் நேத்துக் கொளும்புக்குப் போய்ட்டான். மூணு கொம்புள கூட்டிப் போறான் வெளிநாட்டுக்கு ஏத்த!”

அவன் வந்த ஒடனே எனக்கி நீ செல்லனும் செரியா . .?”

செரி . . . நீ என்ன கதைக்கக் கூப்புட்ட . . . மைம்னாட கதையா?”

ல்லடா நெய்னாரு . . . உன்ட தம்பி பாறுக்கு மைம்னாட தங்கச்சி பரிதாவ . . .”

கேட்டு வந்தாஹ! பரிதா ஏலாங்காளாம்! மைம்னா வாழாம . . .”

க்க்க்ர்ர்லீராலீலீக் . . . ராக் . . . ராக் . . .” திடீரென ஒரு விநோத ஒலி கேட்டது.

இதென்ன குருவிரா . . . பார்ரா நெய்னாரு!” - சட்டென முத்துமுகம்மது சுட்டிய திசையில் பார்த்தான் நெய்னார்.

திகிலடைய வைக்கும் கருங்கலர் விழிகளும் தாடி மயிரும், கருஞ்சிவப்புக் கொண்டையும் மஞ்சள் அலகும் இறக்கைகளில் இளஞ்சிவப்புமாக ஒற்றைக்காலால் தத்தி வந்தது. ‘கராக் . . . க்ராக் . . .’கென்று கரகரத்துக் கடூரக்குரலில் கத்தியது. இவர்களை விரோதமாகப் பார்த்தது. அடித் தொண்டையின் சிவப்பு தெரிய வாய்பிளந்தது. நெய்னார் திகிலடைந்து -

“ . . . இதா . . . டேய், முத்தும்மது . . . இது இசிராயில் குருவிடோ...வ்...”

அதுல்லடா பொட்டயா . . . செந்தல மைனாடா இது!”

ல்லடா பேயா, அது வேறடா . . . இது சாக்குருவி! இது வந்தா ஊருல அடுக்கடுக்கா ‘மௌத்’து உழும் சுவர்! சுவர்!! இது இசிறாயில் குருவியான் . . . ம்மா . . . ஆராரு மௌத்தோ இனி . .?”

ஆறுமாதங்களுக்கு ஒரு தடவை வட சைபீரியா வெளியிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்களைக் கடந்து சற்றும் திசை தப்பாது பறந்து இலங்கையின், பள்ளிமுனையின், வெத்திலைக்காரன் தோட்டத்துக்குத் தவறாது இனப்பெருக்கத்திற்கு வந்து போகும். மலபார் பீட் ஹோர்ன்பில் (விணீறீணீதீணீக்ஷீ றிவீமீபீ பிஷீக்ஷீஸீதீவீறீறீ) என்ற பெயர் தாங்கிய இந்தப் பறவைப் பற்றி நெய்னார் ‘சாக்குருவி’ என்று சொன்னது எந்தளவுக்கு உண்மையோ தெரியாது. ஆனால் தோட்டத்தின் ஒற்றையடிப் பாதையால் மிக வேகமாக ஒரு சைக்கிளில் ஆள் வருவது தெரிந்தது.

ஆருடா அது? வாற! காலைக்காரனா . .? ல்ல புலிப்படையா . . . ஙா ஒண்ட மச்சினன் யாசீன் வாறாண்டோவ்!”

அரக்கப்பரக்க வந்து சேர்ந்த யாசின் சைக்கிளைப் போட்டுவிட்டு ஓடிவந்தான்.

ஞ்ச... முத்தும...ச்சா...ன்... ச... கெ...கெதியா வாங்க! ஒங்கும்மா மௌத்தாப் போயித்தா!”

எ... என்னடா... ஆர்றா..?”

முத்துமச்சாண்ட ம்மாக்கௌவி மௌத்தாயிட்டா! சனம் கூடியிரிக்கி! வாங்க!”

சேமன்! வாடாபோவம் ம்மா . . .” முத்துமுகம்மது அதிர்ச்சியில உறைந்துபோனான். இன்றைக்குக் காலையில் உம்மாவைப் போய்ப் பார்க்கவுமில்லை. உம்மா . .! ம்மா . .?

என்ட ம்மா . . . ம்மோ . . . வ்!” வாய்விட்டுக் கத்தினான். முத்துமுகம்மது. ‘க்க்ரா . . . ர்க. கிரார்க்’கென்று சாக்குருவி கத்திப் பரபரத்துப் பறந்தது.

0

வெறிச்சிட்டுக் கிடந்தது குடிசை. தாய்க்கிழவியை நல்லடக்கம் செய்து மூன்று நாளாகிவிட்டது. தெரிந்தவர்கள், உறவினர்கள், கட்சிப் பிரமுகர்கள், சபை உறுப்பினர்கள் எல்லோரும் அனுதாபித்து ‘ஸலாம்’ கொடுத்து எல்லாம் முடிந்துவிட்டன. இன்று முத்துமுகம்மது எவரையும் சந்திப்பதில்லையென்று சொல்லிவிட்டான். ‘மையித்து’ வீட்டுக்குத் தலைவரால் வரமுடியவில்லை. மக்களிடம்

£க்குறுதியளித்தபடி தலைவர் தனது பா. உ பதவியை இராஜினாமா செய்துவிட்டதால் அந்த வெற்றிடத்தைக் கட்சியின் தானைத் தளபதி ஒருவர் கைப்பற்ற முயன்ற வழக்கு மற்றும் உயர்பீடக் கூட்டம் என்று தலைவர் மிகவேலையாக இருந்தார். ஆனால் தொலைபேசியில் முத்துமுகம்மதைத் தொடர்பு கொண்டு ஆறுதலும் ஆலோசனையும் வழங்கிக் கொண்டிருந்தார்.

குடிசைக்குள் தனியாக வெறுந்தரையில் வெறும் மேலோடு அமர்ந்திருந்தான். திடீரென ஒரு எண்ணத்தில் தாய்க்கிழவியின் முக்கிய சேகரிப்பான உடமைகளை எடுத்து ஒரு பெரிய தகரப் பெட்டியில் அடுக்க ஆரம்பித்தான். பெரிதாக ஒன்றுமில்லை. ஓலைப் பாய்கள், சீனப்பட்டுச் சால்வை, பொன்முலாம் பீங்கான் அடுக்குகள், ஒன்பது புடவைகள், கரையான் அரிக்காதிருக்க அரக்குமளா வேர்கள் . . . மூச்சுமுட்டும் அதன் வாசம், ஓலை விசிறி, தகரப்படிக்கம், ரேகாழி பலகை, பெரிய எழுத்துக் குர்ஆன், செப்புவட்டா, ஆரத்திக் குஞ்சம்

தவிர இதென்ன . . . ஒரு பழைய தோற்பெட்டி. அதற்குச் சின்னப்பூட்டு.திறப்பு இல்லை. தேவையுமில்லை . . . சும்மா முறுக்கிச் சுண்டி இழுக்க திறந்துகொண்டது. கும்மென்று உம்மாவின் பழைய மணம். உள்ளே பிச்சைச் சம்பள அட்டை. அதற்குள் அம்மாதப் பணம் நூறு ருபாய், உணவு முத்திரை, 1956ஆம்ஆண்டுப் புகைப்படம், புகைப்படத்தில் முத்துமுகம்மதின் தந்தை என்று சொல்லப்பட்டவர் போட்டோவுக்காகத் துருக்கித் தொப்பியும் சேர்ட்டும் சால்வையும் செருப்பும் அணிந்து பவுடர் அப்பிய முகத்துடன் உற்று நோக்கினார். த£ய்க் கிழவியின் ‘பாலும்பழமும்’ காலம் . . . மற்றது . . .

ஒரு பழைய உறுதி . . .

அப்புறம் இதென்ன . . . இ . . . இதென்ன . . .’ ஆச்சரியமும் அதிர்ச்சியும் குலுக்க எடுத்தான். ஒரு ‘கெஸட்பீஸ் . .!’ (ஒலிநாடா) புத்தம் புதிதாய் இருந்தது. வெளிநாட்டு முத்திரை ஒட்டப்பட்டிருந்தது. அலங்கோலமான ஆங்கிலக் கையெழுத்தில் விலாசம்... எ... அ...ட... ம...

மைமுனா . .? மைமுனா . .! திக்ஷீஷீனீ : பி.லி.விகிவீuழிணீநீலீவீ. பிஷீsணி: 234 றி.ஷீ 456. ளீலீணீsகினீவீtsu ரி.ஷி.கி. ஜிளி; :வி. விutலீu னீuலீணீனீஜிபிஹி, 332 ஙிமீமீ சிலீக்ஷீஷீபீ, றிணீறீறீவீனீu ஸீணீவீ 2, sக்ஷீவீ லிஸீணீளீகி . . .

மைமுனா . .! நீயா . .?

0

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ . . . ம்ம்ம் . . . க்ஹ்க்ம் . . . க்ம் . . . எ . . . என்ட உசிருக்குசிரான முத்துமச்சானத் தவிர வேற ஆரும் ந்தக் கெஸட்டக் கேக்கக் கூடா. அப்பிடி கேட்டா அல்லாறிய, அந்த மைதின் ஆண்டவரு அறிய சத்தியம் பண்ணிச் செல்றன், கியாமத்து நாளையில கேட்ட ஆக்கள சொவிகள்ள அல்லாகுத்தஆலா ஈயத்தக் காச்சி ஊத்துவான் . . . செரியா . .?முத்துமச்சான் . . . என்டல்லோ . . . முத்துமச்சான்! எனக்கி நடந்த கறுமத்த . . . ஆருட்ட நான் சொல்ற . . .கொளறிக் கொளறி என்ட கண்ணுல தண்ணியெல்லாம் வத்திப் போச்சி . . . நான் ஏன் மச்சான் இன்னம் உசிரோட இரிக்கன் தெரீமா . .? என்ட ஈமான் பெத்த மச்சான் ஒங்கள ஒரு தெரம் பாத்துட்டு நான் மௌத்தாகனும் மச்சான் . . . ந்த ‘ஆகுறத்துல இது ஒண்டுதான் மச்சான் என்ட ‘ஆஜத்து’! ஈறல்!!

தங்க மச்சான் . . . அவன் எனக்கிச் செஞ்ச கொடும . . . என்ட மானத்துக்கு அவன் செஞ்ச கறுமத்துக்கு அல்லாஹ்தாலா அவன்ட கண்ணுல பாம்பு கொத்திச் சாவான் . . . புழுத்துச் சாவான் . . . வெடிச்சிச் செதறுவான் . . . ஏழாம் நரகத்துல கெடந்து எரிவான் . . .

என்ட . . . முத்துமச்சான் . . . என்ன லொச்சில உட்டுட்டு எங்கயோ ஒங்களயும் யாசினையும் கூட்டிட்டுப் போய்க் கட்டி வெச்சி . . . கிறிஸால குத்தி கண்ண நோண்ட ஆள்செற் பண்ணின ண்டு சென்னான் மச்சான் . . . மெய்யா மச்சான் . . . எப்பிடி மச்சான் இரிக்கிறீங்க . . .யாசீன்...தம்...பி... ம்...மா...ம்மோ... யாசீன் எங்க மச்சான்? ஹ் . . .ம் . . .க் . . .

அண்டு அவன் எம்பிட்ட சைன் வாங்கணும் ண்டு செல்லி ஒங்களையும் தம்பி யாசினையும் கூட்டிட்டுப் போனான் ல்லோ மச்சான் . .? போய் ஒரு முக்கா மணித்தியாலத்தில திரும்பி வந்தான் . . . எனக்கிம் ம்மாக்கும் சோடா வாங்கி வந்திரிந்தான் . . . ஒடைச்சி எனக்கிம் ம்மாக்கும் குடிக்கத் தந்தான் . . . ரெண்டு பேரும் குடிச்சம் . . .

சோடாவக் குடிங்ககா . . . பஹ்டி தெரியிமா மாமியோ . . . வ் . .! எக்கா . . . மாமி . . . வேன் கொறுக்காட அறாமி முத்தும்மது வளங்காத வளிச்ல . . . எம்பிட்ட சைன் வாங்கப் போய் எம்பிர ஊட்ட போனங்கா . . . அங்க வெச்சி எம்பிர சைன் வாங்கித் தெரமாட்டன் . . . மைம்னாவ வெளில போக உடமாட்டண் . . . ண்டு . . .பெரளி பண்றாங்கா . . .யாசினையும் மறிச்சி வெச்சிட்டான் . . . எம்பிர உட்டுக்க போய் நான் வெரமாட்டன் ஓர்ரா சப்பா . . . வட்டுட சப்பா . . . ண்டு செல்லி அந்தக் கடிதத்தக் கிளிச்சி எறிஞ்சிற்றான்கோவ் . . . ப்ப நா என்னய்ற . . . இதுக்குத்தான் ந்த நாயக் கொளும்புக்குக் கூட்டி வெரப்பொடா . . . ண்டு நான் சென்ன...மனிசனாஅவன் . .?” ண்டு கொம்பினான் மச்சான் . . .

நெக்கிண்டா . . . அவண்ட கதையில நம்பிக்க ல்ல . . . “பச்சப் பொய் . . . ஒரு நாளும் முத்தும்மது மச்சான் அப்பிடிச் செய்யமாட்டாரு . . . ண்டன் . . . நீ நம்பினா நம்பு . . .ல்லாட்டிப் போ . . . யாசின் வந்தாக் கேளு . . . ண்டான் . . . ம்மர் பதறிப் போய்ட்டா . . . ‘அந்த நாய் வெரட்டும் . . . அவண்ட கணக்க நாம் பாப்பன் . . .

ம்... ப்ப நாம என்ன செய்ற..? ம்பி... ண்டு ம்மா கேட்டா . . . அவன் சென்னான் . . . பெரச்சின ல்ல மாமி . . .

அவண்ட கணக்கப் பொறகு பாப்பம் . . . ப்ப வேற அவிசரப் பாஸ்போட்டு எடுக்கனும் . . . ஒரு ஆயிரத்தைநூறுவாச் செலவாகும் . . . ஒங்கிட்ட காசில்லாட்டி நான் தாரன் . . .பொறகு தாங்க . . . செரியா . .? ன்னொரு சிங்களக் கொம்புளயும் மைம்மனாவோட குவைத்துக்குப் போற . . .

அவள்ள மெடிக்கல முடிச்சிட்டுப் புதுப் பாசிப்போட்டும் எடுத்துட்டு வாரன் . . . ப்ப பன்னண்டு மணிக்கி நாம ஞ்சயிரிந்து யாப்போட்டுக்குப் போகணும் . . . தனி வேன் புக் பண்ணிரிக்கன் . . . பின்னரம் பெளைட்டு . . . சோடாவக் . . .குடிச்சிட்டுக் கொஞ்சம் கெளிங்க . . . நான் போய் எல்லா வெசயத்தையும் முடிச்சிட்டு ஒரு அர மணியில வாரன் . . . . ண்டு செல்லிட்டு வெளியால போய்ட்டான் . . .

ம்மா, ஒங்களுக்குக் கொம்பிக்கொம்பி இரிந்தா மச்சான் . . . எக்கா . . . ம்மா முத்துமச்சானுக்கு ஏசாத . .! எனக்கி வேன் சப்பனுலதான் கொஞ்சம் சக்கா இரிக்கிகா . . . ண்டன் . . . அந்தக் கௌடி எனக்கிம் ஏசினாள் . . . போடி மோனிக்காரி . . . ஒனக்கு ஈயத்தக் காச்சி ஊத்துவன் . . .கொறுக்காயண்ட தேவப்படுதுல்லா . .? ண்டெல்லாம் புறுபுறுத்துட்டு நாய்ர வேலயால தலைக்க இடிக்குதுடி வ£ப்பாய் . . . ண்டு செல்லிட்டு அப்பிடியே கெளிஞ்சி படுத்துட்டா . . . நான் ஒங்குளயும் யாசினயும் நெனச்சிக் கொளறிற்றே இரிந்தன் . . . மச்சான் . . . என்ன நடந்திச்சோ தெரியா மச்சான் . . . கொஞ்ச நேரத்துல தல கிறுகிறுக்கிறாப் போல இரிந்திச்சி . . .

ரகுமானே . . . எண்ட அழகு மச்சானோவ்.. அவன் செஞ்ச சதி! சோடாவுக்குள்ள என்னத்தயோ கலந்து தந்தானாக்கும் . . . மச்சான் . . . ஒரு அஞ்சி நிமிசத்தில தல சுத்துற மாதிரி இரிக்கி மச்சான் . . . சாமானெல்லாம் ஆடுது . . . தலகீளா நிக்கிறாப்பல இரிக்கி . . . பய்யப் போய் . . . கட்டில்ல படுத்தன் மச்சோ . . . ன்வ் . . . எழும்ப ஏலுதில்ல . . .

வவுத்துக்க ஒரு சாதியா பரபரண்டு பரவுது . . . மசக்கமா வெருது . . . ம்மபக்க்ம்மக்க்ம் . . . ஒரு சாதி மயக்கம் மாய்ரி இரிந்திச்சி . . . கொஞ்ச நேத்தையால அறைக்க ஆரே வார மாயிரி இரிந்திச்சி . . . என்ன ஆரோ தூக்கிறாப் போல இரிந்திச்சி . . . கய்ட்டப்பட்டு முழிச்சிட்டன் . . . ம்ம்மமச்சா . . . ன் . . . வேந்தான் . . . சப்பன்தான் . . . என்னத்தொட்டுத்            தூக்குறான் . . .மச்சான் . . .

மச்சா...ன்...ம்ம்ம்ம...ஏய் . . . ஏய் . . . ண்டு கத்துறன் . . . ம்மாலீலீ . . . ம்மா . . . ண்டு கூப்புர்ரன். ஒண்டும் வெளங்குதுல்ல . . . கிறுகிறுக்குது . . .அவன் என்ன தாங்கிப் புடிச்சி நடத்தி கூட்டிப் போற மாயிரி இரிக்கி . . . எனக்கி ஒரு எசக்கமும் ல்ல . . . இழுபட்டுப் போறன் . . . அவன் என்ன சைஸாப் புடிச்சி அவன்ட அறைக்குள்ள கூட்டிப் போறான்...எ...எ...எ...ன்னக்... கீள படுக்க வெய்க்கான் . . . உட்றா டேய் . . . உடறா டேய் . . .ண்டு கத்துறன். சத்தமே வெருது ல்ல . . . சிரிக்கான் . . .

டக்கெண்டு கதவ அடைக்கான் . . . டேய் . . . டேய் . . . ண்டு எழும்புறன். எழும்புறன். ஏலுது . . . ல்ல் . . . அவன் உடாம என்ன அமத்துறான் . . . எனக்கி ஓங்கி . . . ஓங்கி . . .அறைஞ்சிட்டான் மச்சான் . . .  தலைக்குள்ள வெடிக்குது.காது கிண்ணுண்டு எரையுது ‘கொறுக்காவோட படுத்தவேச நீ . . . என்னோட படுத்தா என்னடி . . . ’ ண்டு சொல்லி...எண்ட அல்லோ         . . . என்னைக் கட்டிப்புடிக்கான் . . .எ...எ...  என்ட புடவைய      ஒசத்துறான் . . .            என்ட...ம்வோவ்!எ ...   என்ன...      ம...      ம...ம £ ன த் த . . . த் . . . க் . . . ம் ஹ் . . . ச் ச . . . ண ங் . . நீ .    ..ர்...ர்ர்ர்ர்ர்ர்...ட்ஸ் . . .ஸ் ஸ்            ...ப்.      ..ட்டு   . . . சிர்ர்ர்ர்ர்ர் . .       .டப்!...

முத்துமச்சான் . . .  எ...முத்துமச்சான்...            இ...இதக்கேட்டுட்டுஇரிக்கீங்களா      மச்சான்... ஓம்...கேப்பீங்க!என்னப்படச்ச நாயன், நான் ஓதித் தொளியி வணங்கின  ரப்புஇதக்கேக்க வெய்க்கனும் . . .    

என்ட அளகு மச்சான்! . . . நெல்ல ஒணர்த்தி வந்து முளிச்சிப் பாக்கன் . . . எங்கட அறையிலதான் கட்டில்ல படுத்திரிக்கன் . . . “மைம்னா . . . மைம்னா . . . ண்டு ம்மாட சத்தம் கேக்குது . . . ஒரு லாக்குத்தருப் பொம்புள கிட்ட நிண்டு சோதித்துப் பாக்கா . . . ஊசி போடுறா . . . சிரிச்சா . . . சிங்களத்துல கதச்சா . . . சப்பன் ம்மாட்டச் செல்றான் . . .

பெரச்சினை ஒண்டுமில்லியாம் மாமி . . . சும்மா மயக்கம்தானாம் . . . ரவல் பண்ணலாமாம் ண்டு செல்லி சிரிக்கான் . . . ம்மா என்ன எழுப்பினா . . . ப்ப எப்பிடி இரிக்கிகா மைம்னா . . . ண்டு கேட்டா . . . ஒடம்பெல்லாம் நோவுது... தண்ணி... தண்ணி... தா ண்டன். ம்மா தண்ணி எடுக்கப் போக - அந்த மாளிர மகன் டக்கென்டு என்ட காதுல குனிஞ்சி, டியே மைம்னா, நான் செஞ்சத்த ம்மாட்டச் சென்னயென்டால் ஒன்ட கொறுக்கா மச்சானையும் யாசீனையும் கொழும்புல வெச்சி கிறிசால குத்துறத்துக்கு ஆள் செற்பண்ணிரிக்கன் . . . சென்னா குத்துவன்...ரெண்டு பேர்ர கண்ணயும் நோண்டுவன் . . .ஞ்ச கொளும்புலயிரிந்து பள்ளிமொனைக்கி மச்சான்ட மையத்துத்தான் போகும் . . . தம்பியுமில்ல . . . மச்சானுமில்ல . . .செல்லன் பாப்பம் . . . பறவேச! ண்டு எனக்கி உறுக்கிச் செல்லிட்டு, சிரிச்சிட்டு ‘ந்தா . . . தண்ணியக் குடி . . . மைம்னா . . . எழும்பு’ . . .ண்டான்.

எனக்கி வந்த வெஞ்சத்துல . . . ஒடன கட்டில உட்டு எறங்கி டக்கெண்டு செருப்ப எடுத்து மாளிர மகனுக்கு ரெண்டு அடி அடிச்சன் மச்சான் . . . பாஞ்சி ஓடப் பார்த்தான் . . . நெஞ்சிலயும் சொத்தயிலயும் சடசடண்டு அடிச்சி . . . நெவத்தால கீறி உட்டன் . . . நெத்தில வெறாண்டினன் . . .

ம்மா பதறி ஓடி வந்து...டியெய்...மைம்னா... பைத்யாரி . . . பைத்யாரி . . . என்னடி து . . . என்னடிது ண்டு கத்தி என்னப் படிச்சிக் கட்டில்ல தள்ளி உட்டா . . .பைத்தியாரி . . . ஆருக்டி அடிக்காய் . . . மூளகீள பெசகிட்டுதாடி . . . லூசிக்காரி ண்டு கொம்புறாள் . . . நான் ஒண்டுஞ் செல்லல்ல . . . நா சாகப் போறன் . . . நா சாகப்போறன் . . . ண்டு  கத்திட்டுக்            கட்டில்ல குப்புறப்படுத்துட்டன் . . .     தம்பி . . .        தம்பி . . .

கோவிச்சிக்காத . . . ம்பி . . . வேளுக்கு அவன் கொறுக்காயன் ல்லாம பய்த்தியம் ஒரத்துட்டு . . . நீ ஒண்டும் கோய்ச்சிக்காத . . . ம்பி . . . ண்டு கெஞ்சுறாள் . . . அதுக்கு அந்த அறாமி . . . ஙா . . . ஒண்டும் பெரச்சின ல்ல மாமி . . .

கொறுக்காயனப் பிரிஞ்சி வெளிய போற வெஞ்சத்துல ப்பிடிச் செய்றாளாக்கும் . . . பெரச்சின . . .ல்ல மாமி . . . மைம்னாவ ஆயத்தப்படுத்துங்க . . . நான் போய் வேன் புக் பண்ணிட்டு பாஜ்போட்டும் எடுத்துட்டு வாரன் . . . ண்டு செல்லிட்டு டக்கெண்டு ஓடிட்டான் மச்சான் . . .

நா . . . நான் . . . கொளறிக் கொளறிக் கெடந்தன் . . . ம்மாக் கௌவி எனக்கி ஏசிஏசிப் பாத்த்ஜீட்டு பொறகு கொளறிக் கொளறி எனக்கி நைஸா புத்தி செல்றாள் . . .

நான் அவள்ள சொத்தயத் திரும்பியும் பாக்கல்ல . . . அவன் செஞ்ச தொரோகத்த அவள்ட்டச் செல்லயும் ல்ல . . .

முத்துமச்சானுக்கும் எங்கு தம்பி யாசினுக்கும் ஒரு ஆவத்தும் வெரப்படா . . . ண்டு அந்த வெஞ்சத்த என்ட மனசில போட்டுப் பொதச்சிட்டன் மச்சான் . . .

நா . . . நா என்ன கறுமம் ஆருக்குச் செஞ்ச மச்சான் . . . என்ட வாள்க்கயில நான் ஒரு தும்பியப் புடிச்சி அதுர வால நோண்டியிருக்கன் . . . வேற ஒரு கருமமும் ஆருக்கும் செஞ்சதில்ல . . . வளியெல்லாம் கொளறிக் கொளறி . . .வந்தன் . . . மச்சான் . . . என்ட கண்ணுல இருந்து ஊத்துண்ட தண்ணி கொஞ்சமா... மச்சான்... எ... ம்ற்க்... கடசில ஞ்ச வந்து சேந்துட்டன் . . .

         £ன் வந்த ஊட்டுல ஒரு பெரச்சினையும் ல்ல மச்சான் . . . நெல்ல ஆக்கள் . . . ஒரு கௌவரும் மூனு மகளும்தான் . . . வேலயும் கய்ட்டமில்ல . . . நான் ஒரேகொளறி அளறத்தப் பாத்து எரக்கப்படுவாங்க . . . காசி தெருவாங்க . . . என்ன ஊட்டு நெனப்பபா ண்டு அறயில கேப்பாங்க . . . கேலி பண்ணுவாங்க . . . காஞ்ச தொண்டையில ஒரு சொட்டுத் தண்ணி எறங்கினாப் போல ஒரு ஆறுதல் மச்சான் . . .

 எப்பிடியோ என்ட காலம் ஓடுது மச்சான் . . . ஒரு மனிசனுக்கும் நான் கடிதம் போடுற ல்ல . . . கெஸட்டும் அனுப்புற ல்ல . . . இதுதான் என்ட மொதலும் கடசியும் கெஸட்டு. இத முத்துமச்சான் கேக்குறத்துக்கு மட்டுந்தான்.

முத்துமச்சான், ஒங்களயும் யாசினயும் கிறிஸால குத்திரப் போறான் கறுமக்காறன் ண்டுதான் நான் அவன ம்மாட்டக் காட்டிக் குடுக்கல்ல . . . மத்தது காசிக்கிப் பீயத் திங்கிற என்ட ம்மாக்காரி, அப்பக்கௌவிக்கிக் காசிர அவால் . . .நபிசி . . . காசிதானே வேனும் . . . மைம்னா வேணா இல்லியா . .? பாரு . . . மைம்னாட மானத்த வித்தக           £சிவெருது . . . வெச்சிக்க . . . இனி மைம்னாவ அவ காணமாட்டா . . . மைம்னாட மையத்தும் பள்ளிமொனைக்கி வெரா . . . பாரு . . . என்ட பெத்த கடனத் தீத்திட்டன்.ஒரு! ஒரு நாய்க்கும் ‘அட்றஸி’ குடுக்கமாட்டன் . . . ‘டெலிவன்’ எடுக்கமாட்டன் கடிதம் போடமாட்டன் . . . கெசட்டு அனுப்பமாட்டன் . . .

முத்துமச்சானுக்கு மட்டும் டெலிவன் நம்பரச் செல்றன் . . . மச்சான் எனக்கி டெலிவன் எடுங்க . . . செரியா . . . என்ட நம்பரு இதுதான் என்ட டெலிவன் நம்பரு . . .

என்ட அளகு மச்சான் . . . அவன நம்பாத ண்டு நூறு தெரம் சென்னீங்க . . . அஞ்சி நிமிசத்துல ஏமாந்துட்டன் . . . அவன் செஞ்ச கறுமத்துக்கு அல்லா கூலி குடுப்பான் . . .

என்ட தங்க மச்சான் . . . ஒங்கட கையால அவன ஒண்டுஞ் செஞ்சி போட்டுராதீங்க . . . காலப் புடிக்கன் மச்சான் . . .மைம்னாட செல்ல நீங்க மூறக் கூடா . . . அவன நீங்க தொடவும் வேணா . . . செறியா . . . அல்லாறிய!

கடசியா ஒண்டு மச்சான் . . . உங்கட அளகு மொகத்துல முளிக்க இனி எனக்குத் தெம்பு ல்ல . . . ண்டாலும், அந்தக் காட்டவ்லியா அப்பாட கிருவையால என்னில நீங்க எரக்கப்பட்டு, ஒங்கட ‘கல்பு’ல ஈன எரக்கம் கசிஞ்சி . . .

என்ன நீங்க டெலிவனுல ‘வாமைம்னா . .! ண்டு கூப்பிட்டா என்ட தங்க மச்சான் ஒங்களக் காணப் பறந்தோடி வருவன் . . .மச்சான் . . . என்ட நம்பரு, மூணு ரண்டு ஆறு பத்து நாலு சைவரு . . . எட்டு . . . வெளங்கிச்சா . . . மூணு ரண்டு ஆறு பத்து நாலு சைவரு . . . எட்டு . . . அப்பிடி ல்லாம அவனோட படுத்தவள் நமக்கெதுக்கு ண்டு என்ன உட்டுட்டீங்க என்டால் ந்த வெளிநாட்டுக் கொவைத்து மண்ணுலதான் என்ட ஒடம்பு அடங்கும் . . . இது சத்தியம்! ம்க்...

என்ட த . . . தங்க கிளியாரு மச்சான் . . . ஒங்கட கால்ல உள்றன். கோவத்தில அவன ஒங்கட கையால . . .ஒண்டும் செஞ்சி போட்ராதீங்க . . . அப்பிடி என்னயும் செஞ்சா நா ஒங்களுக்குக் கெடைக்க மாட்டன் . . . வெளங்கிச்சா . .? நா ஒங்களுக்குக் கெடைக்க மாட்டன் . . .

அப்பிடி என்னயும் கோவத்தில செஞ்சிங்க . . . ண்டல்லஈ அங்க நீங்க மறியல்ல தூக்குல சாவீங்க . . . நான் ந்தக் கொவைத்து மண்ணுல சாஹ்வன் . . . அதான் படிச்சிப் படிச்சிச் செல்றன் . . . அவன ஒங்கட கையால . . . ஒண்டும் செஞ்சி போட்ராதீங்க . . . இனி நான் ஒண்டுக்கும் பயப்...டப்..!

டப்’ பென்று நின்றது ஒலிநாடா!

 

17

விக்கித்துப் போய் இருந்தான் முத்துமுகம்மது. வியர்த்து நனைந்திருந்தான். கண்கள் சிவப்பேறியிருந்தன. கைகள் நடுங்கின. நெஞ்சு வரண்டு காய்ந்துவிட்டது. அசைய இயலவில்லை. மைம்னா! தொண்டைக்குள் எதுவோ உருண்டு பொறுத்தது. மைமுனாவின் குரல் . .! எத்தனையோ காலங்களுக்கப்பால், எத்தனையோ மைல்களுக்கப்பாலிருந்து ஈனக்குரல். இ . . . இதைக் கேட்கவா இத்தனை நாட்கள் காத்திருந்து . . .

மெதுவாக முயற்சித்து அசைந்தான். மூலைக்குள்ளிருந்த மண்குடத்தைக் கவிழ்த்து அசுர வேகத்தில் நீர் குடித்தான் . . .பீடிக் கட்டை எடுத்தான். கொளுத்தினான். நெஞ்சு நிறைய புகை இழுத்தான் . . . பூட்டப்பட்டிருந்த கதவருகே சென்று உறுதி செய்தான். ‘கெஸட்’டை விடுவித்தான். மறுபக்கம் திருப்பி நுழைத்தான். பொத்தானை அழுத்தினான். கண்களில் கண்ணீர் குபுக் கென்றது . . . ஷ் . . . ஷ் . . . ஷ் . . . ஷ் . . . ஒலிநாடா மறுபடி சுழன்றது . . .

ஒலிநாடாவின் மறுபக்க பிரளயத்திற்காகச் செவிகளைத் தீட்டீனான். அறபு இசையும், உச்சக் கட்ட வயலினும் அலறின. கவ்வாவிப் பாடல் . . . லா . . . ஷீ . . . ய்க் . . . லப் . . . பா . . . ர்வி . . . ஸ் . . . ஸ்மாதி . . . முன்னோக்கி சுழற்றினான்.

மறுபடி பாடல்... ர்ர்...ர்... அறபுப்பாடல்... கவ்வாலி...

லா . . . ஹீ . . . ய்க் . . . மறுபடி . . . வயலின் . . . லாஷீ . . .

டப்’!

கெஸட் முடிந்துவிட்டது. ஒன்றுமேயில்லை . . . ஒரே பக்கம்தான்! தாய்க் கிழவி தர மறந்து போய்விட்ட துயரச் சரித்திரம் . .!

என்ட மைம்னா . . . கிளியாரே . . . நீ என்ன பாடு பட்ரிக்காய் கிளியே . .! ஒனக்கு நடந்த . . . மகுறம் . . .” முத்துமுகம்மது மனது உடைந்து அழ ஆரம்பித்தான். கதவருகே யாரோ ஊசாட்டம் தெரிந்தது. தூங்குவது போலிருந்து குப்புறப் படுத்து வெகு நேரம் அழுதான். தூங்கியே விட்டான்.

திடீரென மைமுனா ஓடி வருகிறாள். “பாருங்க மச்சான் . . . பாருங்க மச்சான் . . .” என்று கத்துகிறாள்.

அவனக் கிறிஸால குத்திட்டன் மச்சான் . . . கையெல்லாம் ரத்தம் . . . சப்புச் சுல்தான் வந்து . . . ‘கொறுக்கா எப்பிடி சப்பு மாமாட வேல . . . ஒரு நாயும் நொட்டேலா . . .’ என்கிறான்”. முத்துமுகம்மது கோபவேசமுற்று ஓடி அவனைப் பிடித்து ஓங்கிக் குத்த - சப்புச் சுல்தான், இரத்தம் விளாறாக யூக்கே லொட்ஜ் படிகளில் ‘தடதடவெனத் . . .’ தட்டிய போது விழிப்பு வர -

முத்துமச்சான் . .! கதவத்தொறங்க . . . தொறங்க . . .இருட்டுக்க என்ன மச்சான் . . . செய்றீங்க . .?’

£சீனின் குரல் கேட்டது. சட்டென எழுந்தான். விழிப்புணர்வோடு எழுந்தான். மணி பார்த்தான் 7:20 இருள்.

பொறுரா யாசின்’ - தீப்பெட்டி தேடிக் கொளுத்தி வெளிச்சத்தில் விளக்கேற்றினான். வெளியே வந்தான்.

என்ன மச்சான் . . . ராவானதும் தெரியாம நித்திர . .?’

டேய், போய் நெய்னாரக் கூட்டி வாடா!’

செரி, மையத்தூட்டுல தனிய இரிக்காதங்க . . . நேத்து லாவு ம்மாக் கௌவிரபே வந்தயாம் . . . சனம் கதைக்கிது மச்சான் . . . எங்குட ஊட்ட வெரட்டாம் சாப்பாட்டுக்கு . . .

மெய்ன் ரோட்டுல போன ஆமி ஜீப்புக்குக் கன்னிவெடி வெச்சயாம் . . . ரெண்டாமி செத்தயாம் . . . ரோட்டெல்லாம் ராணுவம் நிக்கி . . . உங்கள கட்சி எளஞர் அணி தேடித் திரியிறாங்க . . .’

ம் . . . செரி . . . செரி . . . நெய்னாரக் கூட்டி வாடா . .!’

மொகத்த களுவுங்க மச்சான் . . . கொலகாரன்ட சொத்த போல இரிக்கி...’

என்ன . . . டா?’

ஒண்டுமில்ல மச்சான் . . . நெய்னாருமாமாவக் கூட்டியாறன் . . .’

மெய்யா மெய்யா, இனி நான் கொலகாரன்தான்டா!’

பகிடிக்கி சென்ன மச்சான் . . . வாங்க போவம்!!’

முத்துமுகம்மது கிணற்றின் சில்லென்ற தண்ணீரில் அடித்து முகம் களுவினான். கொஞ்சம் தெளிவு பிறந்தது. உள்ளே சென்று கெஸற்றை விடுவித்து இடுப்பினுள் சொருகி மறைத்தான். வஞ்சினம் பொங்கிய மனதில் ஒரு தீர்மானம் வந்தது . . . கருக்கெண்டது.

சப்பு . . . ஒனக்குச் சாக்குருவி கத்திற்று! கத முடியப் போகுதுடா’

என்ன மச்சான் . . . குருவியா?’

ஒண்டுமில்ல . . . போ!’

நெய்னார் ஓடி வந்தான். மு த் து மு க ம் ம துநெய்னாரைத் தனது அந்தரங்க அறைக்கு அழைத்துச் செல்ல - தாடிமாஸ்டர் இடையில் புகுந்து - ‘சேமன், தம்பி! பின்னேரம் தலைவர் ‘கோள்’ எடுத்தா நீங்க கன நேரமா காணல்ல . . . வந்தா எடுக்கச் சென்ன! . . . களம்புல எலக்ஷன் மீற்றிங்க்ல குண்டு வெடிச்சி அவரு லலித் அத்துலத்து முதலி செத்தயாம் . . .’

எந்த நாய்ண்டாலும் சாகட்டும் . . . மாஸ்டர், நான் இனி சேமனில்ல . .!

ஏன்டா முத்துமுகம்மது, ‘ஆசினாமா . . . கீசினாமா’ பண்ணப் போறியா?’ நெய்னார் பதைபதைத்தான் . . .

ஓம்டா . . . ரிஷைன் பண்ணிற்றுப் பழைய முத்துமுகம்மதா ஆகப் போறன் . . . மறியலுக்குப் போகப் போறன்’

தாடிமாஸ்டர் அதிர்ந்து போனார். தன்செயலாளர் பதவியுமல்லவா செயலிழந்து விடும் . . . அப்புறம் தலைவரின் இணைப்பாளர் பதவிக்குத் தான் வைத்துள்ள குறியும் தவறி . . .

தாடிமாஸ்டரின் கூர்மையான கண்கள் முத்துமுகம்மதை உற்றுத் துளைக்க,

என்ன சேமன் தம்பி இது பஹ்டி பண்றீங்களா . .?’

டேய், பேக் கொறுக்கா! செருப்பால அடிப்பன். சேமன் வேலய உட்டா!’

         £டிமாஸ்டர் செவியெல்லாம் குளிர்ந்து டீக்கடை நெய்னாரைப் பார்த்து ஆமோதித்துப் புன்னகைத்து விழியாதரவு காட்டினார். ‘சட்’டென முத்துமுகம்மது சுதாகரித்தான் . . . உஷார் நிலையானான். லேசாகச் சிரித்து -

சேமன் வேலய உட்ரல்ல . . . ம்மா மௌத்தானதில இரிந்து மனசில ராஹத்தில்ல மாஸ்டர் . . . ஒரு சாதியா . . .வெறுப்பா இரிக்கி . . . ம்ம்ம் . . . மாஸ்டர் தலைவரக் ‘கோள்’ள பிடிங்க. நான் நெய்னாரோட கதச்சிட்டு வாறன் . . .’

 தாடிமாஸ்டர் நிம்மதியாகி டெலிபோனுக்குள் புகுந்து தலைவரைத் தேடிச் சுழியோடத் தொடங்க - முத்துமுகம்மது நெய்னாரை வீட்டின் பின் முற்றத்திற்கு அழைத்து வந்தான். நெய்னார் அடங்காத ஆர்வமாக -

என்னடா முத்துமுகம்மது? இருட்டுக்க பதுங்கிறாய்.. பளய யாவகம்கீவகம் வந்துட்டுதா . .? ஒரு நா, நீ மைம்னாவைக் கூட்டிட்டு . . . மோதின்ட குடிலுக்க . . . ஙாஹா . . . வந்திரிச்சி . . . ஆசையில் வ்வ்வோடி வந்தே . . . ன் . . .’

பொத்துரா வாய பொட்ட நெய்னாரு!’ - குரலில் பயங்கரம் இருந்தது. நெய்னார் துனுக்குற்றான் . . . பயத்துடன் முத்துமுகம்மதைப் பார்த்தான். முத்துமுகம்மது சிரிக்க முயன்று -

வீடி ஒண்டு எடண்டா பண்டி நெய்னாரு’ இறுக்கத்தைக் கலைத்தான். நெய்னாரு சிரித்துப் பீடி எடுத்துக் கொழுத்தி அதே பீடியில் மற்றதைப் புக்குப்புக்கெனக் கொளுத்தி நீட்டினான்.

அடிரா மருமவனே கொறுக்கா! மள்சியா வாஸ்தேவண்ட ஒரு சோகப்பாட்டு உடன்டா கேப்பம் . .!’

எங்கடா . . . அவன் . .? சப்பன் . .? ஊருலயா . .?”

ஊருல ல்லடா . . . சப்புட வழிசல் . . . ரெண்டு மூனு கௌமைக்கு வெர மாட்டானாம். முத்துமுகம்மது, இஞ்சப்பாரு, ஒரு சின்ன நோட்டிஸி அடிச்சத்துக்காக அவன அடிச்சிக்கிடிச்சி உடாத! நொட்டின வேல பார்க்காத! அரசியள்ள அதெல்லாஞ் சகசமப்பா . . . நொக்கு வேணுமென்டா, நாம ஒரு நோட்டிஸி பச்சபச்சயா அடிச்சு உடுவம். அடிபுடி வேணா . . . அவனப் புலி தேர்ரான் . . . அன்பரும் தேர்ரான் . . . காசி மோசடில சீஐடி தேர்ரான் . . .எடையில நீ கொண்டு உளாத!”

நோட்டிசி   அடிச்சத்துக்கு        ல்லடா . . .

         ...மைம்னாக்...க்க்ற் வ...நெ...ய்னாரு! எனக்கி மைம்னாட கெசட்டு வந்த!”

அட . . . எப்படா. .? மைம்னாக்குக் கடிதம் எழுதத் தெரியா. கெஸட்டுத்தான் . . . என்ன கதச்சிரிக்காள் . . . செல்லு!’

நெய்னாரு, நான்? நான் சப்புட வளிசலை ஒரேயடியா ‘குளோசாக்கப் போறன் . . .’

ஏன்டா . .? அவனக் கொல்லச் சொல்லி மைம்னா பேசியிரிக்காளா . .? கொறுக்காப் பேயா! வீடி நிஸான் மண்டைக்கு ஏறிற்றா . . . பேச் சேமன்டா நீ . . . அரசியள் தெரியாத பேயன் நீயி! அவன நீ குளோசாக்கத் தேவல்லடா . . . கிட்டவா, கேளு! புலிப்படயில சேந்த மொட உதுமான்ட மகன் அன்பரு . . . தெரியுந்தானே . .? அவன்ட பேரு இப்ப அன்பு! நேத்து ராவு ஆய்தத்தோட சப்புச் சுல்தானத் தேடி வந்தடா . . .”

முத்துமுகம்மது அதிர்ச்சியடைந்தான்.

நேத்து ராவு, நான் கடையில படுத்த. ஒரு மணி மட்டுல கதவத் தட்டின சத்தம். மாமா . . . மாமா . . . ண்டு கூப்பிர்ர சத்தம். பழகின கொரல்ல . . . ஆரு ண்டு கதவத் தொறந்தன் . . . ம்மாடி . . . தோள்ள பெரிய ‘கண்’ தொங்குது . . .கையில ‘கிளிப்’பு. கூட மூணு பொடியனுகள் . . . அன்வரு நிக்கான் . . . எனக்கிப் பயத்தில மூத் . . .’

‘.............’

தேத்தண்ணி இருக்கா மாமா ண்டு கேட்டான் ‘வொய்லரு’ல நெருப்பு இல்ல. போட்டுத் தெரயா ம்பி ண்டு கேட்டன் ‘அப்பவேணா’ ண்டு சொல்லிட்டு ‘விசுக்கத்’துப் பக்கட்டும் ‘சொக்கிளட்’டும் வாங்கினான் . . .

ந்நரம் எங்க மருமவன் போன? ண்டு கேட்டன் . . . அன்பரு சென்னான், ‘மாமா . . . வேள்ள மகன் சப்புச் சுலுத்தான்எங்கும்மாவ கூட்டிப்போய் கொளும்புல வெச்சி கப்பளிச்சிருக்கான் . . . ன்னமும் கொள்ளக் கொம்புளயள்ள வாக்கையில வெளாடியிரிக்கான். அவனத் தேடித்தான் ஊட்ட போய் வாறன் . . . ஆள் இல்ல . . . இரிந்தா இண்டைக்கு ‘மாடுபோட்டிருப்பம்’ ண்டான். வெளங்குதாதடா பேச் சேமா!”

என்னடாது . . . அன்பராடா சென்ன?’

அன்பருக்கு கூட நிண்ட ன்னொரு பொடியனையும் ஒனக்குத் தெரியும் . . . சொத்தையில பெரிய வெட்டுக்காயம் காச்சிப் போய் இரிப்பானே . . . கண்ணாரப் பெரியான்ட மகன் . . . அவன்!”

தெரியும் . . . ஒரிஜினல் புலி அவன். மீனொடக்கட்டுப் புலிப் பொறுப்பாளன் . .!’

அதான்! சுலுத்தாண்ட கதைய முடிக்க ஆள் இரிக்கி.நீ   தலய்யிடாத. செரியா.. மைம்னாட கெசற்றத் தாடா . . .கேப்பம் . . .’

 அ . . . அது . .? நீ கேக்கிற மாய்ரி ல்லடா . . . செரி உடு கதய! தாடி தேடி வாறாரு . . .’

தம்பி . . . சேமன் . . . தலைவர்! கோள் . . . கோள் . . .தலைவர்!’

விரைந்து ஓடி ஒலிவாங்கியை எடுத்தான் முத்துமுகம்மது, தலைவரின் ஆணையிடும் கம்பீரக் குரல் கேட்டது.

தம்பி முத்துமுகம்மத்! ‘நெக்ஸ்ற் பிரைடே’ முக்கியமான ஒரு ‘மீட்டிங்’ இருக்கு. நான் சிலநேரம் அம்பாறையில் அல்லது களம்பில நின்று உனக்குக் ‘கோல்’; எடுப்பன் . . . எங்கேயும் போயிடாதே . . . ஊர்லேயே இரு . . . முக்கியம் . . .முக்கியம் . . . சரியா . . . மத்தது . . . மீன்முறியில ஹோம்கார்ட் ரெண்டு பேர சூட் பண்ணி . . . கொஞ்சம் பிரச்சினைபோல . . . அங்க கொஞ்சம் போய்ப் பாரன் . .?’

செரிசேர் . . . பார்க்கன் . . . நீங்க கூப்பிடுமட்டும் ஊர்லயே இரிப்பன் சேர் . .!”

ஓக் . . . கே . .!”அவ்வளவுதான். தலைவர் வைத்துவிட்டார்.

என்னடா ‘டக்’ கெண்டு முடிஞ்சி?’

அடுத்த வெள்ளிக்கிழம முக்கியமான மீட்டிங் இருக்காம். ஊர்லயே இரிக்கட்டாம் . . . தலைவரு ஊருக்கு வாறாஹளோ தெரியா . . .”

அது முக்கியமான உயர்பீடக் கூட்டம். தம்பி சேமன் . .! கட்சில நம்மட தளபதியால கொஞ்சம் நெருக்கடி . . . தலைவர் ‘ரிஷைன்’ பண்ணின இடத்திற்கு யாரை எம்பியாக நியமிப்பது என்று . . . உயர் நீதி . . . மன்றத்தில் . . .” தாடிமாஸ்டரின் அரசியல் வகுப்புக் கேட்கப் பிடிக்காத முத்துமுகம்மது -

நெய்னாரோவ் . . . எனக்குக் கொஞ்சம் காய்ச்சலா இரிக்கி.. படுக்கப் போறன் . . . ‘பனடோல்’ ரெண்டும் . . .

பிளன்’சோடாவும் வாங்கிட்டு வாரியா . . .” என்று திடீரெனச் சொல்லிவிட்டுத் தனது அறைக்குள் வந்தான். சாப்பிடப் பிடிக்கவில்லை. அடுத்தடுத்து அதிர்ச்சியான செய்திகளால் மூளை களைத்து விட்டது. அறையை இருட்டாக்கினான். மின் விசிறியை உச்சத்தில் வைத்தான். ஆடைகளை அவிழ்த்தெறிந்தான் . . . எகிறிப் போய் கீழே விழுந்தது மைம்னாவின் கெசற் . . . வெறும் ஜட்டியுடன், குளிரான வெற்றுத் தரையில் விரிந்த கத்தரிக்கோல் வடிவில் மல்லாந்து படுத்தான்.

‘ . . . ஒங்கட கையால அவன ஒண்டும் செஞ்சி போட்ராதீங்க மச்சான் . . . என்டஅளகு மச்சான் . . .’

அப்பிடி இல்ல மைம்னா . . . என்ட கிளியாரே . . .நான் உன்ட பழைய முத்துமுகம்மது ல்லடிமைம்னா . . . இப்ப சேமன்! மூனு வெரல் ல்லாத சேமன்! உலகம் தெரிஞ்ச அரசியல் வாதி! தலைவரக் காப்பாற்றிய இளம்பிறை . . . இப்ப இரிக்கிற முத்துமுகம்மது வேற . .! ம்மாக் கௌவியும், மைம்னாக் குட்டியும் இல்லாத அநாதை! எதைப்பத்தியும் கவல இல்லை . . .

மைம்னா . . . நான் அவனக் கொல்லத்தான்; போறன். உனக்கு அவன் செஞ்ச கறுமத்துக்கு . . . தலைவர கேவலமா எழுதினத்துக்கு . . . என்னையும் யாசினையும் கொளும்புல வெச்சி ஏமாத்தினத்துக்கு . . . மொட உதுமான் மாமாட பொஞ்சாதிய கெடுத்ததுக்கு . . . நாயும் செய்யாத ‘டாப்புளா’ வேல பாக்கிறத்துக்கு . . . பள்ளிமுனையில ஒரு கடப்பலிக்காடையன ஒழிச்சிக் கட்டிச் சுத்தமாக்கிறத்துக்கு . . . எல்லாத்துக்கும் சேர்த்து . . .

நெய்னார் சோடா வாங்கி வந்ததும் . . . விழுந்து கிடந்த மைமுனாவின் கெசற்றை எடுத்துக்கொண்டு போனதும் . . .எதுவும் தெரியாமல் . . . ஆழந்த சிந்தனைப் பெருங்கடலில் கிடந்தான் . . .

கொல்லனும்! ஆனா தப்பனும் . . . பிடிபடக் கூடாது . . . செரியான திட்டம் வேணும் . . . நெய்னாரை நம்பி பிரயோசனம் இல்லை! ஒருவருக்கும் தெரியக் கூடாது . . .

தப்பனும் . . . தப்பி . .? என்ட மைம்னாக் கிளி . . . ‘கோள்’ எடுப்பன் . . . ‘எல்லாம் முடிஞ்சி கிளி மைம்னா . . . நீ ஸ்ரீலங்கா வா! நான் ஏத்துக்குவன் . . . ஒன் மேல பட்ட நஜீஸ இரத்தத்தால களுவிச் சுத்தமாக்கிட்டன்! வா . . . வாழுவம்!. .

என்ட புடவய ஒசத்துறான் . . . மானத்த வ . . .’

என்ட கையால அவன நான் கொல்லுவன் . . . மைம்னா! ஆனா பயப்புடாத! புடிபடமாட்டான் . . . தப்புவன் . . .

பழி தீப்பன் . . . புலிப் படைக்கு முந்தி . . . அன்வருக்கு முந்தி . . . சீஐடீக்கு முந்தி . . . என்ட மொட்டுக் கையால அவனக் கீறி எரத்தம் குடிப்பன் . . . சப்புட அறாமி . . . உனக்குச் சாக்குருவி கத்திச்சிட்டு . . . டா . . .

18

முத்துமுகம்மது தனது பயங்கரமான தீர்மானத்தை உறுதியாக்கிக்கொண்டான். ஆயினும், நெய்னாரிடம் எதையும் மூச்சுவிடவும் இல்லை. சாதாரணமாகத் தன் காரியங்களில் ஈடுபட்டான். பசறிச்சேனை இஸ்லாம் கட்சிக் கிளையைப் புனரமைத்துப் புதிய உறுப்பினர் தேர்வு நடத்தினான். ஊரில் குப்பைக் கூளங்களை அள்ளிச் சுத்தம் செய்ய பிரதேச சபைக்காக ஒருவாகனம் கொள்முதல் செய்யும் நோக்கில் அரச அதிகாரிகளை அம்பாறைக்குச் சென்று சந்தித்தான் . . . பள்ளிமுனை பிரதான வீதிக்கும் . . .

பசறிச்சேனை பள்ளிவீதிக்கும் மின்குமிழ்கள் பொருத்தும் வேலைகளைப் பகிர்ந்தளித்தான் . . . மீனோடைக்கட்டு எல்லையில் இருந்த மையித்துப் பிட்டியைக் கட்சியின் இளைய போராளிகளையும் சனசக்தி உதவி பெறுவோரையும் கொண்டு பாரிய சிரமதானம் மூலமாகத் துப்பரவு செய்வித்தான் . . . வறிய மாணவருக்கு அல்கமர் பாடசாலையில் பாடப்புத்தகங்கள் வழங்கினான் . . .

நெய்னாரும், முத்துமுகம்மது தனது வஞ்சினத்தைக் கொஞ்சமாக மறந்து வருகிறான் என்றே நினைத்தான். ஆயின், முத்துமுகம்மது. தன் திட்டத்தை அமுல்படுத்தும் முதல் வேலையாக, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி யாசினுக்குச் சப்புச் சுல்தான் வீட்டுக்குப் பக்கத்திலேயே இருந்த ‘அல்கமர்’ வித்தியாலயத்தில் வாச்சர்; வேலை போட்டுக் கொடுத்திருந்தான் . . . யாசினிடம், சப்புச் சுல்தான் ஊருக்கு வந்தால் தெரியப்படுத்தவும் அவனது நடமாட்டங்களை அறிந்து இரகசியமாகத் தனக்குச் சொல்லவும் ஏற்பாடுகள் சொல்லியிருந்தான் . . . யாசினிடம் அவனது லாத்தா மைமுனாவுக்கு சப்புச் சுல்தான் செய்த கொடுமையைப் பாதியளவு சொல்லியிருந்ததாலும் கொழும்பில் அவனையும் சேர்த்தே தவிக்கவிட்டதையும் மறக்காத யாசின் உளவு வேலையை மிக மனவிருப்புடன் மும்முரமாக மேற்கொண்டிருந்தான்.

யாசின் மூலமாக முத்துமுகம்மதுக்குச் சப்புச் சுல்தானின் வருகை, நடமாட்டம், பழக்கவழக்கம், தொடர்புகள் போன்றமிகவும் பிரயோசமான விசயங்கள் கிடைத்துக்கொண்டிருந்தன. யாசின் மைமுனாவின் தம்பிமற்றும் பக்கத்துப் பள்ளி வாச்சர் என்ற முகவிலாசம்க£ட்டிச் சப்புச் சுல்தானின் வீட்டுக்குள்ளேயே பல வேளைகளில் சந்தேகமின்றிப் புழங்கி வந்தான். சப்புச் சுல்தான், பக்மிட்டிய மவ்லவி ஒருவரிடமிருந்து அபின் வாங்கி கொழும்பு கொண்டுபோய் விற்பதையும் வெளிநாடு சென்று ஏமாற்றப்பட்டு வரும் பெண்களை வளைத்து, சில ‘பெரிய மனிதர்களுக்கு’ இரவலாக விநியோகிப்பதையும்பணம் தாராளமாகப் புழங்குவதையும் தெரிந்துகொண்டான் . . . இவ்வாரத்தில் இரண்டு தடவைகள் ஊர் வந்து கொழும்பு போயிருந்தான்.

‘. . . டியெ . . . மைம்னா . . . நான் செஞ்சத்த ம்மாட்டச் சென்னயெண்டால் ஒண்ட கொறுக்கா மச்சானையும் யாசினையும் கொளும்புல வெச்சி கிறிஸால குத்துறத்துக்கு . . .’ கிறிஸா? சப்புட அறாமி! கிறிஸ் கத்தியால நீ குத்தறதா . .? நானா . .? முத்துமுகம்மது தன் திட்டப்படி இதற்கென்ற ஒரு அழகான . . . ஆனால் வெகு கூர்மையான . . . விற்சுருள் உள்ளதான மெல்லிய கிறிஸ்கத்தி வாங்கியிருந்தான். மனதை மென்மேலும் உறுதிசெய்தான்.

கட்சி வேலைகளிலும், பிரதேச சபைப் பணிகளிலும் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும் முத்துமுகம்மதுக்குள்ளிருந்த நகர இளைஞன் வஞ்சினமும் மூர்க்கமாக மேலெழுந்துகொண்டிருந்தான். சப்புச் சுல்தானைக் கொல்லுவது மட்டுமல்ல . . . தப்புவதுதான் பிரதானம் . . . எப்படியும் தப்ப வேண்டும் . . . பழி சுமக்க அன்வர் இருக்கிறான் . . . புலிப்படை . . . இருக்கிறது . . .போதை வியாபாரி இருக்கிறான் . . . பெண்கள் தொடர்பும் பகையாளிகளும் உள்ளனர் . . . கல்முனை பொலிசில் பல வழக்கு இருக்கிறது. ஏமாற்றிய ஏஜென்சிக்காரனின் வன்மம் இருக்கிறது . . . யார் தலையாவது உருளட்டும். சப்புச் சுல்தானின் தலை உருள்வதுதான் திடமான ஒரே நோக்கம். தப்புதலே மகா முக்கியம். தப்பி . .?

“ . . . என்னக் கூப்புடாம உட்டிட்டீங்க எண்டால் இந்த வெளிநாட்டுக் கொவைத்துலதான் என்ட உடம்பு அடங்கும் . . .” இல்லடி . . . மைமுனாக் கிளியாரே . . .

கூப்பிடுவன் . . . அல்லா கைவிடமாட்டான் . . . அல்லாஹ்வே பிழையப் பொறு . .!

விதியின் சந்தர்ப்ப சக்கரம் சுழன்றுகொண்டிருந்தது.

0

கன்னிக் கிரான் குருவி

கடுமழைக்கு ஆத்தாம –

 மின்னிமின்னிப் பூச்செடுத்து

விளக்கேற்றும் கார்காலம் . . .” போல வானம் கமறத் தொடங்கியிருந்தது. எந்நேரமும் மழை பீறியடிக்கும் போலிருந்தது. மழை, பெருமழைக்கு முன்னுரையாகத் தூறல் போட்டுக்கொண்டிருந்தது. தாடிமாஸ்டர் நனைந்து வந்து சிறிது நேரம் நைந்த அரசியல் பேசிக்கொண்டிருந்துவிட்டுச் சென்றார். கட்சி இளைஞர் அணியினர் வந்து தும்புத் தொழிற்சாலையை விஸ்தரிக்கும் ஏற்பாடுகள் பற்றிப் பேசிவிட்டுச் சென்றனர். இன்று முத்துமுகம்மது மீன்முறிக் கிராமத்தில் கட்சியின் மாதர் அணி கிளை திறப்பு விழாவில் கலந்துகொள்ள வேண்டியிருந்ததை இரத்துச் செய்து, ஜாபிரை அனுப்பிவிட்டான். எங்கும் வெளியிறங்காமல் யாரையும் சந்திக்காமல் தறிகெட்டலைந்த ஆயிரம் சிந்தனைகளுடன் எதிலும் இலயிக்காமல் வானொலியைக் கேட்டுக் கொண்டு சும்மா படுத்துக்கொண்டிருந்தான். ஏனோ காரணமில்லாப் பரபரப்பு ஒன்று நெஞ்சில் ஒட்டிக்கொண்டிருந்தது. என்னவென்று புரியவில்லை. நெய்னாரும் வரவில்லை.

“. . . ஙீய்ய்ய்க் . . . ஙீய்ய்ய்க் . . . இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்ச்சேவை . . . நேரம் மாலை ஆறு மணி . . . செய்திகள் . . . வாசிப்பது முகம்மதுயூசுப் நஜிப்கான் . . .

முதலில் தலைப்புச் செய்திகள் . . . இன்று நண்பகல் நுகேகொடையிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற ‘விக்ரம குமரி தபால் புகைவண்டியின் பொதி அறையில் வைக்கப்பட்டிருந்த ஒரு குண்டு வெடித்ததில் ஆறு இராணுவ வீரர்களும் ஒன்பது பொதுமக்களும் பலியாயினர் . . . யாழ். - வவுனியா பிரதான வீதியில் சென்ற இராணுவத் தொடரணி வாகனங்கள் கண்ணிவெடியிற் சிக்கியதால் அதில் பயனம் செய்த இலங்கை இராணுவத்தின் உயர் பதவி நிலை அதிகாரியும் வடமராட்சி 22ஆம் பிரிவின் கட்டளைத் தளபதியுமான மேஜர் ரணசிங்க பண்டார சஞ்சீவ கொல்லப்பட்டார் . . . பயங்கரவாதிகளின் எத்தகைய மிரட்டல்களுக்கும் அடிபணிந்து தாய்நாட்டின் இறைமையை விட்டுக் கொடுக்க முடியாது.. என்று அதிஉத்தம ஜனாதிபதி தெரிவித்துக்கொண்டிருந்த போது - யாசின் பரபரப்புடன் சைக்கிளில் வந்தான் . . .”

வாடா யாசின் . .! என்னடா . . . சப்பு மாப்புள்ள வந்திரிக்காரா . .?”

ஓம் . . . முத்துமச்சான் . . . நேத்து ‘கொளும்பு அஞ்சிலாம்புச் சந்தியில குண்டு வெடிச்சயாம் . . . கடும்பெரச்சின நடக்குதாம் . . . கடையெல்லாம் பூட்டிக் கெடக்காம் . . . சுல்தான் வந்துட்டான் . . . ண்டைக்கு அவன்ட ஊட்டுல ஒத்தருமில்ல . . . அவண்ட தங்கச்சியும் . . . ம்மாவும் அக்கரப்பத்துக்குப் போய்ட்டாங்க . . . ரெண்டு நாளைக்கி வெரமாட்டாஹளாம் . . .”

ம்...ம்...ம்..?”

சுல்தான், கொளும்புல வஸ்ஸில்லாம மாறி மாறி வந்தயாம் . . . எடையில ‘ஜேவிப்பி’க் கொளப்பமும் நடக்கதாம் . . . ‘கேபியூ’ சட்டமும் போட்ரிக்காம் . . . இப்ப அஞ்சி மணிக்கித்தான் வந்தான்.. பார்சல் சோறு சாப்பிட்டுட்டு ப்ப ஊட்டுக்க படுக்கான் மச்சான் . . ”

படுக்காஹளா தொர . .? ம் . . . கடசிப் படுக்கதான் அது . .?”

முத்துமச்சான் . .?”

“...”

முத்துமச்சானோவ் . .!

“...”

“‘முத்துமச்சானோவ் . . . ஒங்கட சொத்த செரில்ல . . . அவனோட திடிர் . . . ண்டு அடிபிடி சண்டைக்கிப் போய்ராதீங்க மச்சான் . . . ஆய்தம் வெச்சிரிக்கான் . . .ஊட்டுக்க கெரனைட்டும் இரிக்காம் . . . நீங்க அவனோட என்னயும் கதைக்கிற எண்டால் . . . நானும் கூட இரிக்கன் . . .தனியப் போகாதிங்க மச்சான் . . . மடத்தனமா . .! நீங்க சேமன் . .!”

போடா . . . போடா லூசிக்காரா . .! நான் சும்மா கேட்ட . . . ந்தா . . . கடைக்கிப் போய்ப் பீடி வாங்கிட்டு வா...”

மச்சான் சேமனாயியும் ன்னம் வீடி குடிக்கிறத்த உடல்ல . . .” என்று யாசின், புறுபுறுத்தபடியே மழைக்குள் கடைக்குப் போய் முத்துமுகம்மதுக்குச் சோடாவும் பீடிக்கட்டும் வாங்கிவந்து கொடுத்தான் . . .

நான் ண்டு லாவைக்கி இஞ்ச ஒங்களோட படுக்க வெரயா மச்சான் . . . மளயும் ஒரமாரிக்கி..?”

தேவல்லடா . . . நெய்னாருமாமா வெருவான் . . . நகிபு வருவான் . . . ஒண்ட ‘ரெய்ன் கோட்’டையும் தொப்பியையும் வெச்சிற்றுப் போ . .!”

முத்துமுகம்மதை ஏதோ சந்தேகமாகப் பார்த்தபடியே

£சின் போய்விட்டான். மழை ஒரே சீராகப் பொழிந்துகொண்டிருந்தது. முத்துமுகம்மதுக்குள் சாக்குருவி படபடத்தது. எகிறி எகிறிப் பறந்து மனசெல்லாம் கிழித்தது. ‘. . . ஒங்கட கால்ல உளுந்து கெஞ்சுறன் . . . அவன ஒங்கட கையால ஒண்டுஞ் செஞ்சி போட்றாதீங்க . . .’ போடிப் பைத்தியக்காரி! கைகள் பரபரத்தன. பீடி குடித்துக் குடித்து யோசித்தான். இரவுத் தொழுகைக்கான பாங்கோசை கேட்டது. தனது மடத்தனமான முடிவைத் தீர்மானித்துவிட்டான். சாக்குருவி செத்து விழுந்தது. இன்று சப்புச் சுல்தானின் கடைசி வாழ்நாள் . .?

இன்னமும் மழை விடவில்லை. வீட்டில் யாருமில்லை. முத்துமுகம்மதின் விசுவாசமான தோழர்களும் போய்விட்டனர். இரவு எட்டரை மணிக்கு மிக நிதானமாகக் களிசானும் பெனியனும் அணிந்தான். மேலே மழைஅங்கியும் . . . முகத்தை முக்கால் பாகம் மறைத்துத் தொப்பியும் . .! மறக்காமல், கத்தியை எடுத்துத் திடீரென்று பிரயோகிப்பதற்கு வசதியாகச் சொருகி மறைத்தான். இறுகிய முகத்துடனும் உறுதியான மனத்துடனும் மிக நிதானமாக வெளியே வந்தான்.

வாறண்டா . . . சப்புடமாளிர மகனே கொறுக்காட பேரன் வாராண்டா . . . சாக்குருவி வெருதுடா . .!”

£லில் செருப்பணியாமல், மழைக்குள் இறங்கி அவசரப்படாமல் நடந்தான். வடக்குத் தெருவில் சனமில்லை.மழையும்         இருட்டும்     அப்பியிருந்தன.    அல்கமர்ப £டசாலைக்குச் செல்லும் குறுக்கொழுங்கையால் விறுவிறுவென நடந்தான். உடனே திடுக்கிட்டான். எதிரே புரட்சி மௌலவி புழைல் மழை சொட்டச்சொட்ட சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். சட்டெனச் சிறுநீர் கழிக்குமாப் போல் பாதையோரம் குந்திவிட்டான். புரட்சி மௌலவி புழைல் இவனை உற்றுப்பார்த்து அறிய முடியாமல் வெறுமனே கடந்தார். மிகத் திருப்தியாயிற்று! அதி குளிர் துளைத்தது. மழை சிற்சில நேரம் வீறுகொண்டடித்தது. வேகமாக நடந்து சப்புச் சுல்தானின் வீடு இருந்த ‘அவக்கர் வீதி’யில் திரும்பி நடந்தான். சன நடமாட்டமே இல்லை. அதோ . . . அந்த பழையசெங்கல் சுவர்தான் அவனது வீடு. முத்துமுகம்மது நெருங்கினான். சாக்குருவி நெருங்கிவிட்டது.

அந்தப் பழைய செங்கல் சுவரில் ஒரு சைக்கிள் சாத்தியிருந்தது. எ . . . யாரும் உள்ளேயிருக்கிறார்களோ . .? சுவரருகே சிறிது தாமதித்து மீண்டும் சிறுநீர் கழிக்குமாப் போல் மழை இருட்டுக்குள் குந்தினான். இடுப்புக்குள் சொருகியிருந்த கிறிச் கத்தி உறுத்தியது. இருட்டுக்குள் கூர்ந்து வீட்டை நோட்டமிட்டான். உள்ளே ஒரேயரு மின்குமிழ் எரிந்துகொண்டிருந்தது. வீட்டின் முன்கதவு பூட்டப்படாமல்ச£த்தியிருந்தது. எழுந்தான். சாதாரணமாகக் கேற்றைத் தள்ளி உள்நுழைந் . . . உள்ளிருந்து யாரோ பேசுவது கேட்டது போலிருந்தது . . . மழையின் இரைச்சலில் தெளிவாகக் கேட்காத போதும். சப்புச் சுல்தானுடன் வேறு யாரோ உள்ளே பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று விளங்கியது. சட்டென்று கடப்பை விட்டும் வெளியே வந்துவிட்டான். ச்சே . . . என்ன தடை இது . .? மீண்டும் வீதிக்கு வந்து எதிரேயிருந்த ஒரு செத்தைக்குடிசையின் தாழ்வாரத்தில் ஒதுங்கிக் கொண்டு ஒரு பழைய வைக்கற்போரின் மறைவில் குந்தியிருந்தான். மனம் விறைத்துவிட்டது. மைம்னா . .! மைம்னா.!!. உணர்வு உந்தியது. யாருடைய சைக்கிள் இது . .? உள்ளிருப்பது யார் . .? ச்சே . .!

மழை மேலும் பலத்து விசிறியடித்தது . . . எலும்பைஊடுரும் குளிரில் பீடியும் இல்லாமல் குந்தியிருந்தான் . . . ச்சே . . . யாரது . .? ஒரு நிமிடம் . . .இரண்டு நிமிடம் . . . பத்து நிமிடம் . .? கதவையே பார்த்தக் கொண்டிருந் . . . சட்டென உள்ளிருந்து இரண்டு பேர் வேகமாக வெளியே வந்தனர். தெளிவாக முகம் புலப்படவில்லை. இருவரும் மழையங்கி அணிந்திருந்தனர் . . .

கடும் மழையையும் பார்க்காமல் அவர்களிலொருத்தன் வேகமாகச் சுவரில் சாத்தியிருந்த சைக்கிளை எடுத்துப் பாய்ந்தேறி மிதிக்க மற்றவன் ஓடி ஏற . . . வேகமாகச் சைக்கிள் அல்கமர் ஒழுங்கையால் ஓடியது.

இனி முத்துமுகம்மது . . . சற்றும் தாமதிக்கவில்லை. வேகமாகப் படலையை நெருங்கினான். மெதுவான மெல்லிய குரலில் “சுலுத்தான் மாமா . . . சுலுத்தான் மாமா . . .” என்று குரலை மாற்றிக் கூப்பிட்டபடியே முன் கதவை நெருங்கினான். உள்ளேயிருந்து வானொலி கேட்டது. மீண்டும் கூப்பிட்டான். கதவுபூட்டாமல் சாத்தியிருந்தது.

பின்னால் திரும்பிப் பார்த்தான். யாருமில்லை. சட்டெனக் கைப்பிடியைத் திருகித்தள்ளினான். கதவு திறந்தது. உள்ளே நுழைய முன் தலையை மட்டும் நீட்டி எட்டிப்£ர்த்தான். முன்னறையில் வெளிச்சம். யாரையும் காணவில்லை. கொடியில் தாறுமாறாக ஆடைகள் தொங்கின. சேர்ட்டுக்கள் . . . மேசை அலங்கோலம் . . . பிரயாணப் பை . . . உள்ளே நுழைந்தான். சட்டென்று மேசையின் அடியில் ஓடிச் சென்று ஒழிந்துகொண்டான். படபடக்கும் மனத்துடன் இடுப்பினுள் கைவிட்டுக் கத்தியை எடுத்துத் தயார் நிலையில் இருந்தான். ஒரே குத்து. நம் கை முந்த வேண்டும். அவன் எதிர்பாரா சமயத்தில் பலம் கொண்டு ஒரே ஒரு குத்து. ஆழமாக . . . எங்கே . . . சப்பன் . .? எங்கே சப்பன் . .?

சப்பனைக் காணவில்லை. மற்ற இரண்டு அறைகளும் இருளாக இருந்தன. இருட்டுக்குள் இருக்கிறானா? என்ன செய்கிறான்? ஒரு சத்தமும் இல்லை. ஆள் புழங்கும் ஒரு சத்தமும் இல்லை. இப்ப என்ன செய்வது . .? என்ன செய்வது . .? பாப்பம் . . . பாப்பம் . . . பொறு . . . இப்படியே திகிலுடனும் எச்சரிக்கையுடனும் இருபது நிமிடமட்டுக்கும் குந்தியிருந்தான். ஆள் அரவேமேயில்லை. கண்களை அறையைச் சுற்றிலும் சுழலவிட்டான்.

இரண்டு கதிரைகள், மர அலுமாரி, குட்டி மேசை, புத்தக அடுக்குகள், அழுக்காடைகள், இரும்பலுமாரி, சுவர்ம£டம், விளக்கு, பழைய உயரமான மரக்கட்டில், கட்டிலில் . . . அலங்கோலமாக ஆடைகள், ஆடைகளிலும் கட்டிலின் மரச்சட்டத்திலும் கீழே தரையிலும் தெறித்து . . .ஊறி . . . வழியும் பச்சை . . . சிவப்பு இரத்தம் . . . இரத்தம் . . .என்ன... என்ன... கட்டிலில்..? கட்டி...லி...ல்..!

கட்டிலில் சரிந்து கிடந்தது சப்புச் சுல்தானின் உடல் .!

£ல்கள் அலங்கோலமாய் கிடந்தன . . . கை முதுகின் கீழே மடிந்திருந்தது. பனியன் சட்டையில் பச்சை இரத்தம் ஊறிப் பரவிக்கொண்டிருந்தது. சாரம் உரியப்பட்டு இடுப்பின் கீழ் இரத்த வெள்ளம் . .! தலைநிமிர்ந்து கண்கள் முண்டையாகத் தள்ளி, வாயில்... ஈ... இ...தென்ன...

வாயினுள்... எ...ன்ட... அல்லோவ்... வாயினுள்திணிக்கப்பட்டிருந்ததுஅவனதுஆண்குறி . . .

என்டம்மோவ் . .!

முத்துமுகம்மது பயத்தில் விதிர் விதிர்த்துச் சட்டென மேசையின் கீழிருந்து வெளிப்பட்டான். தலையிலும் முதுகிலும் மேசை இடித்து விண்ணென்றது. திரும்பிக் கதவுக்கு ஓடினான். திறந்து வெளியே இழுத்து அடைத்தான். வாசலில் இறங்கி வாயைக் கையால் பொத்தியபடி, கடும் வீச்சான மழைக்குள் திடுக்கிட்ட நடுக்கத்துடன் பறந்தோடினான்.

ஒன்றும் தெளிவாக இல்லை. திடீரெனக் கல்லில் மோதி சடாரென விழுந்துவிட்டான். முழங்கால் விண்ணிட்டுக் கத்தியது. எதையும் கவனியாது நொண்டியபடி ஓடினான். காட்சியின் பயங்கரம் கண்ணிலும் மனதிலும் உறைத்தது . . .

£ர் . . . யார் . .? சப்புச் சுல்தானை . .? என்னை ஒரே நிமிசத்தில் முந்திக் கொன்ற அவர்கள் . . . யார் . .? தனி இருட்டுக்குள் சில்லீரிட்ட குளிருக்குள் இன்னதென்று தெரியாத இருள் கவ்விய சந்து பொந்துகளில் கிறுகி ஓடினான். சொந்த ஊராயினும் எங்கிருக்கிறோம் என்ற இலக்கே தெரியவில்லை. ஓட முடியவில்லை. மூச்சிரைத்தது. பதட்டமாயிருந்தது.

நொண்டி நொண்டி வேகமாக நடந்தான். வழியில் இந்த அடைமழைக்குள் ஒரு சன நடமாட்டமே கிடையாது. தூரத்தில் ஒரு சைக்கிளில் இரண்டு பேர் வருவது புலப்பட்டது. சட்டென்று ஏதோ ஒரு பொந்துக்குள் நுழைந்து மறைந்தான். மேனி நடுநடுங்கியது. சற்று நேரம் காத்திருந்து சைக்கிள் சென்று மறைந்த பின் பொந்தை விட்டும் வெளிப்பட்டான். காற்றின் வேகத்தில் மழை பக்கவாட்டில் விசிறியடித்தது. குருட்டு வெளிச்சம் பரப்பிக்கொண்டிருந்த ஒரு மின்கம்பத்தை நோக்கிச் சென்றான். ஓ . . .தெளிவாகிவிட்டது. இது வடக்குத் தெரு. இப்படியே திரும்பிப் போனால் வெத்திலைக்காரன் தோட்டம். நேராகப் போனால் பிரதான வீதி. உடனடியாக ஆலையடிக்கையழுங்கையில் திரும்பிச் சில்லறைப் பாய்ச்சலும் தொங்கோட்டமுமாக விரைந்தான். பத்தே நிமிடத்தில் வீட்டை அடைந்துவிட்டான்.

கதவைத் திறந்து ஓடிஓடி எல்லா மின்குமிழ்களையும் எரியவிட்டான். கதவை இறுக்கமாகச் சாத்திவிட்டான். பயத்திலும் குளிரிலும் வெடவெடத்து நடுநடுங்கி ஆடைகளை அவிழ்த்து எறிந்தான். அப்படியே ஓடி கட்டிலில் கிடந்த கனமான போர்வைக்குள் புகுந்து சுருண்டான். நேரில் கண்ட காட்சிப் பயங்கரத்திலும் கோரத்திலும் கிடுகிடுவென உடல் நடுங்கியது. நெஞ்சு படபடப்பு அடங்கு மட்டும் அப்படியே குப்புறப் படுத்தான். “. . . அல்லாவே . . .அல்லாவே . . . மைதின் ஆண்டவரே . .!” பயத்தில் வாய் குழறி அபயம் தேடி அரற்றி . . .

சும்மா அப்படியே கிடந்தான். சற்று நேரத்தில் கொஞ்சம் நிதானப்பட்டான். காட்சிப் புலணுணர்வின் கடுமை சற்றே குறைந்தது. மெதுவாக எழுந்தான். நல்ல கனமான ஒரு சாறமும் முழுக்கை சேர்ட்டும் அணிந்தான். மணி நள்ளிரவு 11:40. மேசையின் இழுவறையிலிருந்து பீடி எடுத்தான்.கொழுத்திப் புகைத்தான். விரல்கள் நடுங்கின. தொண்டை மறமறத்தது. வரண்டு கிடந்தது. சப்புச் சுல்தானின் வெறித்த கண்கள் . . . இரத்தக் குளம்.! வாயில் ஆணுடம்பு . .? கொலை . .! “மைம்னா . . . மைம்னா . . . நானில்லடி . . .

என்ட கையால ஒண்டுஞ் செய்யல்லடா மைம்னா . .! எண்ட அல்லோ . . . ரப்பே . . . மைதின் ஆண்டவரே . .! எண்ட பிளயப் பொறுங்க . . . நானில்ல மைமுனா . . . நானில்லடி . . . யாரோ . . . யாரோ . . .”மைதின் ஆண்டவரே . .! . . . என்னக் காப்பாத்துங்க . .!!

19

கனவுபோலச் சில குரல்கள் கேட்டன. யாரது? யாரோ கதவை உடைத்துவிடுவதைப் போல் தட்டினார்கள். சில பதட்டமான குரல்கள் கேட்டன.

மச்சா...ன்... முத்துமச்...சானோ...வ்...”

தம்பி...சேமன்...தம்பே...ய்..!”

“...”

கதவத் தொறங்க . . . எழும்புங்க . . .”

எழும்புங்க! கதவத் திறங்க . . .”

என்னது . . . யாரது . . . தூங்கிவிட்டேனா . .? திடுக்கிட்டு விழித்தான். மழை நின்றிருந்தது. கிழக்கு கொஞ்சம் வெளுத்திருந்தது. பொலிஸா . .? யாசினா . .? மாஸ்டரா . .? நகிபா . .? விரைந்தெழுந்தான். மறுபடி சப்புச் சுல்தானின் காட்சி மின்வெட்டுப்போல் . . .

ஆ...ஆ...ரது..? ஆ...சினா...டா..?”

கெதியா எழும்பிட்டு வாங்க மச்சான் . . . அந்தா சுல்தான் மாமாவ கொலய்ஞ்சி ஆலமரத்துல கட்டித் தூக்கியிரிக்கி . .!”

என்...ன...டா...”

சட்டென்று எழுந்து வந்து கதவைத் திறந்தான். தாடிமாஸ்டர், ஆசுகவி அன்புடீன், யாசின், நகீபு, ஜாபீர், சர்பத் கிழவர். இப்படிச் சிலர் பரபரப்புடன் நின்றுகொண்டிருந்தனர். இவனைக் கண்டதும் ஒரே நேரத்தில் எல்லோரும் கதைத்தனர். விளங்கவில்லை. தாடிமாஸ்டர் அனைவரையும் ‘ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ . . .’ஷென்று வாயில் விரல் வைத்து அடக்கிவிட்டுச் சொன்னார் . . .

சேமன் . . . சப்ஏஜென்ஸ் சுல்தானைப் பொடியனுகள் வெட்டிக் கொலை செஞ்சி ஆலையடியில ‘பொடி’ய கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கு . . . எஸ்.ரி.எப். நிற்கிறாங்க . . . இரவு ஊருக்க பொடியனுகள் நின்றிருக்கிறாங்க . . . ஆமி ஊரச் சுத்தி ரவுண்டப் செய்திட்டாங்க . . . வாங்க ‘ஓ.ஐ.ஸ்ஜீ’யிட்டப்போய்க்கதைப்பம் . . . எனக்கி இங்ர்ஸ் தான் தெரியும் . . .அவனுக்கு அது தெரியாது . . . சிங்களம் மட்டும்தான் . . . சேமனுக்குத்தான் சிங்களம் தளதண்ணி . . . ல்லோ . .? வாங்க டக்கெண்டு வெளிக்கிட்டு வாங்க . . .”

ஊரின் நிலைவரத்தைச் சட்டென உணர்ந்து கொண்ட முத்துமுகம்மது யாசினின் ஒருசாதிப் பார்வையைப் புறமொதுக்கி விட்டுத் துரிதமாக வெளிக்கிட்டு, தாடிமாஸ்டர், நகீபு, ஜாபீருடன் பிக்அப் வாகனத்தில் ஆலையடி வீதிக்குச் சென்றான். ஆர்வப் பயத்தில் மனம் முழுக்க திகில் அப்பியது. அடிக்கடி முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டான். கைகள் சிறிது நடுங்கின. வீதி நெடுகிலும் அதிரடிப்படைமொய்த்திருந்தது. ஆலைமரத்தக்கு அரைமைல்களுக்கப்பாலிருந்து சனங்கள். கொத்துக் கொத்தாகப் பயங்கரம் பார்த்துக்கொண்டிருந்தார்கள். முத்துமுகம்மது சேமனைக் கண்டு அங்கிருந்தே சளசளத்தார்கள். கைகாட்டினார்கள். முத்துமுகம்மதைக் கண்ட அதிரடி பொறுப்பதிகாரி வந்து அவனுடன் மொட்டுக்கையைத் தவிர்த்து மற்றக் கையைப் பிடித்துக் கைகுலுக்கினார். சிரித்தார். கோபத்துடன் தமிழில் சொன்னார் -

சேமன் மஹத்தயா . . . பார்த்ததுதானே? இப்ப முஸ்லிம் ஆக்கலும் எல்ரீரிக்கு ஊர்ல இட தீலா ‘சப்போர்ட்’ பண்றாங்க போல . . . என்ன சேமன் மஹத்தயா . .?

முத்துமுகம்மதுக்குள் கோபம் பொத்தது. வெறுமனே சிரித்துவிட்டு சிங்களத்தில் சூடாகக் கொடுத்தான் . . .

ஙா . . . ரத்நாயக்க மஹத்தயாவாகே நிலதாரி ஆவுத் கொட்டித் எய் . . . ஓக்க தன்னவா நே . .?” (ஙா . . . ரத்நாயக்க ஐயா. உம்மைப் போன்ற அதிகாரிகள் வந்தால் புலியும் வருவது சகஜம்.)

முத்துமுகம்மது விறுவிறுவென்று தாடிமாஸ்டருடனும் நகீபு மற்றும் ஜாபிருடனும், இரு அதிரடிப்படை வீரருடனும் ஆலை மரத்தருகில் சென்றான். அல்லா . . . வே . . . அடுத்த அகோரத்தின் அதிர்ச்சியில் உறைந்து மயிர்க்கால்கள்குத்திட்டெழுந்தன. ஆலமரத்தோடு சேர்த்துக்கட்டப்பட்டிருந்தது சப்புச் சுல்தானின் சடலம். முத்துமுகம்மதின் கண்கள் மின்வெட்டுப் போல் முதலில் சப்பனின் வாயைத்தான் பார்த்தன. அ . . . அது . .? காணப்படவில்லை. இரத்தம் அப்பிக் காய்ந்திருந்தது. சடலம்ஒரு கோணிப்பையினுள் இடுப்பு வரை சுற்றப்பட்டிருந்தது.

ஒரு பெரிய மட்டைத் தாளில் “முஸ்லிம் தமிழ் ஓற்றுமையைக் குலைத்துச் சமுக விரோத செயல்களில் ஈடுபட்டதற்கும் . . . கற்பழிப்பு, போதைவஸ்து, ஆயுத வியாபாரம், ஒற்றன் வேலை, பணமோசடி ஆகிய குற்றங்களைச் செய்தமைக்கும் சுல்தானுக்கு இத்தண்டனை வழங்கப்பட்டது . . . LTTE,

‘. . . எண்ட . . . ரகுமான்ன்ன்னனே . . . ய் . .! என்ட அல்ல்ல்லாவே . . . ய் . .!! இரவு அவர்கள் மறுபடி திரும்பி வந்திருக்கிறார்கள் . . .  வழியில் கண்டிருந்தால் . .? வழியில் சைக்கிளில் வந்தவர்கள் . .? என்ட கருணையுள்ள அல்லாவே . . . காட்டவ்லியா அப்பாவே . . . அடி மைமுனா . .!”

ம . . . ம . . . மாஸ்டர், . . . எனக்குத் தலச் சுத்தலாயிருக்கு . . . போவம் . . .”

முத்துமுகம்மது  சட்டென்று  திரும்பி  நடந்தான்.

 

£கனத்தினருகே டீக்கடை நெய்னார் நின்றுகொண்டிருந்தான். முத்துமுகம்மதை விசித்திரமாகப் பார்த்தான். மர்மமாகச் சிரித்தான். “சேமன் . . .” என்று கூப்பிட்டபடியே முத்துமுகம்மதை நெருங்கி வந்து காதினுள் குனிந்து கிசகிசுப்பாக, “டெ . . . கொறுக்காச் சேமா . .! சப்பன ‘மாடு போட்டு’ட்டு ‘எல்டிட்டி’ர பேரால ‘நோட்டிஸி’ உட்டுட்டாய் ல்லோடா . .?” என்றான் மிகக் கோபத்தோடு.

முத்துமுகம்மதும் மகா ஆத்திரத்துடன் பல்லைக்கடித்தபடி “பேக் கத கதைக்காம ஊட்ட வாடா பொட்டயா. எல்லாஞ் செல்றன் . .!” என்று புறுபுறுத்துவிட்டு வாகனத்தில் ஏறினான். அதிரடிஅதிகாரி முத்துமுகம்மதின் மொட்டுக்கையைப் பார்த்து ஒரு கணக்கிட்டுக்கொண்டார்.

முத்துமுகம்மதுக்கு ஓயாத வேலையாயிருந்தது. சப்புச் சுல்தான் மாற்றுக்கட்சிக்காரனாகவும் பகையாளியாகவும் இருந்தபோதிலும், ஊர்ப்பொது நன்மை, அரசியல் நன்மை மற்றும் முஸ்லிம் மையித் இத்யாதி காரணங்களால் ஆஸ்பத்திரி, ‘போஸ்மோர்ட்டம்’ போலிஸ், அதிரடிப்படை அலுவலகம், மையித்து வீடு என்று பகல் முழுக்க ஜாபிருடனும் நகிபுடனும் பறந்து திரிந்தான்.

சப்புச் சுல்தானின் கொலைக்குக் கண்டனம் தெரிவிக்கவும் புலிகளுக்கெதிராகத் திரண்டெழக் கோரியும்ஹர்த்தால் அனுஷ்டிக்கவும் வீதியிலிறங்கி டயர் எரித்துப் போராடவும் தயாரான கட்சி இளைஞர் அணியைச் சந்தித்து பதற்றம் தணிவித்து பம்பரமாக ஓடித்திரிந்தான். பள்ளிமுனை முழுவதும் பயங்கரம் படர்ந்திருந்தது. அதிரடிப்படை ட்ரக்குகளும். கவச வாகனமும் வந்து பள்ளிமுனை மைதானத்தில் தரித்து நின்றன. யார்யாரோவெல்லாம் ஓடித்திரிந்தனர். பெண்களும் குழந்தைகளும் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தனர். நாள்முழுக்க நெய்னார் கண்ணிலும் படவில்லை. அவன், சர்வ நிச்சயமாக நம்மைத்தான் சந்தேகிக்கிறான் என்று புரிந்தது. அவனைக் கூட்டிவரச்சொல்லி நகீபை அனுப்பினான். வருவதாகச் சொன்னவன் வரவில்லை.

மேலும் - பள்ளிமுனையைச் சுற்றிவளைத்துச் சோதிக்கவும், சந்தேக நபர்களை கைதுசெய்யவும், அதிரடிப்படை அதிகாரி ரத்நாயக்க எடுத்த முடிவை இரத்துச் செய்ய, இராணுவ மாவட்ட கட்டளை அதிகாரியை வேண்டிக்கொள்ள அவரைத் தேடி அங்குமிங்கும் ஓடியாடி, அலைக்கழிந்து, அதை இரத்துச்செய்து, மறுபடி, இரவு 12:40க்குச் சப்புச் சுல்தானை நல்லடக்கம் செய்துவிட்டுத் தலைமண்டை விறைத்துப் போய் வீடு வந்து விழுந்தான் முத்துமுகம்மது.

திடீரென இரத்தம் விசிறியடிக்க எழுந்து நின்ற சப்புச் சல்தான் வாயில் ஆண்குறியுடன் பகபகவென்று சிரித்தான். டேய் கொறுக்கா . . . என்று கத்தியபடியே கிறிஸ்கத்தியை   ஓங்கியபடியே முத்துமுகதம்மதைத் துரத்தி வந்தான். மொட்டுக் கையைப் பிடித்து இழுத்து முத்துமுகம்மதின் வயிற்றில் குத்தினான். மைமுனா, “மச்சான் . . . மச்சான் . . .ஒண்ட சீவன் போச்சா . . . மச்சோ . . . வ் . .!” என்று கூக்குரலிட்டாள். தலைவர் வந்து சிரிக்கிறார். “அவன்தான் சேர் . . . அவன்தான் சேர் . .!” என்று இறந்து கிடந்த முத்துமுகம்மது கத்துகிறான். அதிரடிப்படை அதிகாரி “டேய் சேமன் . .! உம்ப கொட்டீன்ட சப்போட் நெத்த . .? உம்பட்ட வெடி தானவா . . . சுடுவன்டா . . . சேமன் . . . சேமன் . . .சேமன் . . .”

சேமன் . . . சேமன் . .!” தாடிமாஸ்டரின் குரல் கனவு போலக் கேட்டது . . . திடுக்கத்துடன் விழித்தான். கொடூரக் கனவின் தாக்கத்தாலும் . . . குரூரமான நிஜ எண்ணங்களாலும் . . . கண்களைத் திறக்கவே முடியவில்லை. முத்துமுகம்மதால் எழும்பவே முடியவில்லை. தட்டுத் தடுமாறிஎழுந்தான். தள்ளாடியபடியே வந்து கதவைத் திறந்தான். வெளிவிறாந்தையில் நகீபும் தாடிமாஸ்டரும் முடஉதுமானும் கதிரைகளில் அமர்ந்திருந்தனர். மழை வானம் மப்பாக இருந்தது. மழை இல்லை. ஏதோ எல்லோரும் பச்சடித்தாற் போன்றிருந்தனர்.

எ . . . எ . . . என்ன . . . மா . . . ஸ்ட . .? உதுமான் மா...மா..?

சேமன் . . . என்ன சுகமில்லையா . . . என்ன . .? தலைவர் அம்பாறைக்கு வந்திருக்கிறாங்க . . . காரைதீவுல ‘ரவுண்ட்அப்’பாம் . . . வாகனம் ஒண்டும் ஓடல்ல . . . என்ன சேமன் . .? சுகமில்லியா . .? மருந்து கிருந்து எடுக்கப் போவமா . . . குளிச்சிற்று வாங்க . . . டேய் . . . நகீபோ...வ்...டேய்..?”

“...”

டேய் நக்கீப்பு . . . சேமன் காக்காவ ஆஸ்பத்திரிக்கிக் கூட்டிட்டுப் போடா . .!”

போமா காக்கா . .?”

வேணா . . . ம் . . . சும்மா நித்திர மயக்கம் . . . ஒடம்பும் சவ்ப்பாயிரிக்கி . . . தலைவர் வந்தயாமா . .?”

ம் . . . நேத்தே வந்துட்டாக . . . அம்பாற ‘சேர்க்கிட்’ பங்களாவில தங்கியிருக்காங்க . .!”

எப்பிடிப் போற . .? வாகனம் ஓடாட்டி . .? ம் . .? செரி . . . தம்பி நகிபு . . . எங்கடா அவன் நெய்னாரு . . . நேத்துக்குடி ஞ்சாலப்பக்கமும் காணல்ல . .?”

அவிசிரமா தலைவரைச் சந்திக்கணுமாம் ண்டு அம்பாறைக்கிப் போயிரிக்கான் காக்கா . . .”

தலைவரைச் சந்திக்கயா . .? அம்பாறைக்கா . . . வாகனம் ஒடாட்டி . . . எப்பிடிடா போனான் . .?”

போஸ்ட்மாஸ்டர்ர மோட்டச்சய்க்கிள வாங்கிட்டு நேத்தே போய்ட்டான் . .! ஆரையும் பத்திக் கோள் மூட்டாட்டித் தலமண்ட வெடிச்சிரும் அவனுக்கு . . .”

சரி சேமன் . . . நான் பள்ளியடிப்பக்கம் போய் வாரன் . . .

சிலநேரம் தலைவர் நம்மக் கூப்பிடலாம் . . . எதுக்கும் அம்பாறைக்குப் போறத்துக்குத் தயாரா இரிங்க . . .” - தாடி போய்விட்டார் . . .

நகிபு . . . எனக்குச் செமிலத்துர ஊட்ட புட்டும் சம்பலும் வாங்கிவாரியா . .? ராவு ஒண்டும் திங்கல்ல . . . படுத்திட்டன் . . . ந்தா காசு . . .”

நகிபு போன பின் முடஉதுமான் மாமா முத்துமுகம்மதை விசித்திரமாகச் சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். அவரின் பார்வையைப் புரிந்துகொள்ளாத முத்துமுகம்மது,

மாமா . . . நான் குளிச்சிட்டு வெரட்டா . . . இருப்பியா வெருமட்டும் . .?” என்று கேட்டான் . . . முடஉதுமான், பதிலேதும் சொல்லாமல், அவனைக் கண்களை இடுக்கி உற்றுப் பார்த்து விட்டு “த . . . த . . . ம்பி . . . முத்துமும்மதோவ் . . .நீ ப்ப பெரிய பதவில இரிக்காய் . . . உனக்கிட்ட ஒரு வெசயம் செல்ல நெனைக்கன் . . . பயமா இரிக்கிராம்பி . . .” என்றார் . . .

முத்துமுகம்மது கொஞ்சம் சிரித்து - “பயப்புடத் தேவல்ல மாமா . . . நான் எப்பயும் ஒங்குட கொறுக்காட பேரன்தான் . . .என்னண்டாலும் செல்ங்க . .! டக்கெண்டு . . . நகிபு வந்துரப் போறான் . . .”

அது செரிதான்டாம்பி . . . ப்பிடிக் கிட்ட வா . . .என்ட கையப் புடி . . . என்ட தலையில சத்தியம் பண்ணு . . .”

செரி மாமா . . . ஒரமா ஒரம் குத்தாம சும்மா செல்லு . . .”

சப் . . . சப்புச் சுல்தானக் கொல செஞ்சி ஆல மரத்துல தூக்கின ரெண்டு புலிப்பொடியனுகளும் ஆர்ண்டு தெரியிமாடா . . . ம்பி . . . அன்பரும் கனேசனும்தாண்டா . . . நேத்து லாவு என்ட ஊட்டுக்கான் ஒளிச்சிட்டு இரிந்த . . .”

எ . . . எ . . . ன்ன . . . மா . . . லீ . . . லீ . . . மா . .?”

ஓம்டா மருமவனேய் . .! நீ நெனக்கிற செரிதான் . . .ரெண்டு பேருல ஒருத்தன் என்ட மகன் அம்பருதான் . . . மத்தவன் கண்ணாரப் பெரியான்ட மகன் . . . கனேசன் . . .” என்று தொடங்கிய முட உதுமான், கொஞ்சமாகத் தடுமாறி தன் திகில் சம்பவத்தை முத்துமுகம்மதிடம் ஒண்று விடாமல் ஒப்புவித்தார் . . .

நேற்றிரவு மழைக்குள் மகன் அன்வர் கணேசனுடன் திடீரென வீடு வந்து, இன்றைக்கு உம்மாவைக் கொழும்புக்குக் கூட்டிச் சென்று மானபங்கப்படுத்திய சப்புச் சுல்தானை ‘மாடுபோட’ விருப்பதாகச் சொல்லிச் சென்ற சிறிது நேரத்தில் அடைமழைக்குள் மீண்டும் வந்து சப்புச் சுல்தானின் கதை முடிந்துவிட்டது . . . அவன் உம்மாவுக்கும் இன்னும்

எத்தனையோ பெண்களை ஏமாற்றியதற்கும் தண்டனையாக அவனது ஆணுடம்பை அறுத்து அவன் குற்றுயிராகத் துடிக்கும் போதே வாயில் திணித்து, “சப்புடநாயே . . .ஒண்ட சு...யச் சப்பு... சப்புடா...” என்று கத்திக் கத்திக் கொடூரமாகப் பழி தீர்த்துவிட்டதாகவும் . . . பின் வீட்டிலிருந்தே ஒரு பெரிய மட்டைத்தாளில் இயக்கத்தால் உரிமைகோரும் அறிவித்தலை எழுதி எடுத்துக் கொண்டு மீண்டும் போய் சப்புச் சுல்தானின் உடலைக் கடத்திச் சென்று ஆலைமரத்தில் கட்டித் தொங்கவிட்டதையும் வந்து சொல்லிவிட்டு -

வாப்பா . . . எனக்கு இயக்கம் ஒரு உதவி செய்தது . . .அதற்குப் பதிலாக நான் இயக்கத்துக்கு உதவி செய்யனும் . . .இனி என்னத் தேடாதீங்க . . . நான் இனி அன்வர் இல்லை . . . என் இயக்கப் பெயர் அன்பு . . . இனி நான் இந்தப் பக்கம் வரமாட்டேன் . . .” என்று இறுதியாகச் சொல்லி கன்னங்களில் கொஞ்சி விடைபெற்று நிரந்தரமாகச் சென்றுவிட்டான் . . .என்பதையும் சொல்லி முடித்த முடஉதுமான் மிகத் தைரியமாகவே இருந்தார் . . . அழவில்லை . . . ஏதோ ஒரு பழிதீர்த்த திருப்தி கிழவனின் கண்களில் மின்னியது . . .

“‘காக்கோ . . . வ் . . . புட்டும் சம்பலும் . .!” - நகிபு வந்துவிட்டான். அதிர்ச்சி மேல் அதிர்ச்சிமிக்க கதைகளைக் கேட்டுக்கொண்டிருந்த முத்துமுகம்மது உடன் தன்னைச் சதாகரித்துக்கொண்டு முடஉதுமானிடம்,

செரி . . . எல்லாத்தக்கும் அல்லா இரிக்கான் மாமா . . .பொறகு கதைப்பம் . . . நான் பின்னரம் உட்ட வாரன் . . . ப்பநீ          போ மாமா . .! . . .டே . . . நக்கிப்போ . . . வ் . .! மாமாவ மோட்டச் சைக்கிள்ள ஊட்ட கொண்டு போய் உட்டுட்டு வாடோ . . . அப்பிடியே போய் அவன் நெய்னாரு வந்துட்டானா ண்டும் பாத்துட்டு வா . .!” என்றான் . . .

நகிபு முடஉதுமானை ஏற்றிச் சென்றபின், பாரிய எண்ண அலைகள் மனதைக் கலங்கடிக்க முதலில் விரைவாகக் கிணற்றுநீரில் தாராளமாகக் குளித்து முடித்தான். முற்றத்தில் நகீபு வந்து காத்திருந்தான். “நெய்னாரு இன்னம் வந்து சேரல்ல . . .” என்றான். முத்துமுகம்மது சாப்பிட்டு முடித்தான். நகிபு பீடியைக் கொளுத்தி நீட்ட - அதை வாங்கி ஆழமாக இழுத்துப் புகைவிட்டுக் கொஞ்சம் சாந்தியடைந்த முத்துமுகம்மதிடம், நகிபு சொன்னான்,

சேமன் காக்கோ . . . வ் . . . ந்த பொட்ட நெய்னாரு இருக்கான்ல்லோ . . . பொல்லாத பொட்டையன்க     £க்கா . .! . . . நேத்து அவன் தலைவரச் சந்திக்க அம்பாறைக்கிப் போகக்க இடையில என்னக் கண்டு . . .,டே . . . நகிபு . .! நம்மட கொறுக்காச் சேமன் . . . சப்பனக் குத்திக்கொண்டு கொட்டயயும் அறுத்துக் கறுமம் செஞ்சி . . .ஆலமரத்துல கட்டிட்டான்டோ . . . வ் . . . புலிர பேரால நோட்டிசிம் ஒட்டிட்டான் . . . சப்பன சுவரா கொறுக்காச் சேமன்தான்டா கொல செஞ்ச . . . சுவர் . .! அண்டு ராவு சேமன் ஆலடி ரோட்டால போனத்த மவ்லவி கண்டிருக்காரு . . . அவன்ட மைம்னாட ‘கெசட்டுப் பீசி’ ஒண்டும் எனக்கிட்டதான் இரிக்கி . . . அத நான் தலைவருட்டக் குடுத்து ந்தக் கொலகாரக் கொறுக்காயன சேமன் பதவில இரிந்து வெரசி உடல்ல . . . பாரு . . . பாரு . . . இப்பிடிச் செல்லிட்டுப் போனான் காக்கா . . . வ் . .!”

மகா அதிர்ச்சியுடன் துள்ளி எழுந்தான் முத்துமுகம்மது... “எ...என்னடா... கெ...கெசற்றா... மைமமுனாவின் கெசட்டா . . . நெய்னாரிடமா . . .தலைவரிடம் கொடுக்கவா . . . முத்துமுகம்மது பாய்ந்தோடினான் உள்ளறைக்கு . . . நகிபும் கூட ஓடி வந்தான். தேடினான் . . . “தேடுடா நகிபு . . . ஒரு வெள்ளக் கெசட் பீஸ் . . .” அல்மாரி . . . இழுப்பறை . . . புத்தகம் . . . லாச்சிகள் . . . உடுப்பு அலுமாரி . . . எங்குமில்லை . .! அல்லாவே . .! எ . . .என்ன ஒரு கவலையீனம் . . . “ . . . என்ட உசிருக்குசிரான முத்தும்மது மச்சானைத் தவிர வேற ஆரும் ந்த கெஸற்ற கேக்கக் கூடா . . .” ஒரு வருசத்துக்கு முந்திய கெஸற் . . .

முத்துமுகம்மது மட்டும் கேட்க வந்த கெஸற் . . . வந்தும் உம்மாக் கிழவி தர மறந்த கஸற் . . . தந்தும் மறந்துவிட்டு வந்த கெஸற் . . . சரிதான்! டெலிபோன் இலக்கமும் அதில்தான் இருக்கிறது . . . நெய்னாரின் துரோகம் . .!

ஒருஇடமும் தேடத் தேவல்ல காக்கா . .! கெசட்டு அவன் நெய்னாருட்ட இரிக்கி . . .”

“...”

என்ன கெசற்று காக்கா அது . .? மைமுனா லாத்தாட ண்டான் . . . அப்பிடி என்ன ராணுவ ரகசியம் . .? பொட்ட நெய்னாரு அம்பாறையில இரிந்து திரும்பி வெரக்க அவன்ட கதையக் கந்தலாக்கி உடயா காக்கா . .? எடையில மல்வத்தையில வெச்சி ரெண்டு சாத்துச்சாத்தினா கெசட்டு ஒடன கய்யில வெரும் . . .”

நெய்னார்ர கதயி ல்லடா நகிபு . .! மைமுனாவின் கதை கந்தலாகப் போகுது . . . அந்தப் பொட்டயன் . . .நான்தான் சப்புச்சுல்தானக் கொலைசெஞ்ச எண்டு மடத்தனமா நெனச்சிற்றான்டா . . . நகிபோவ் . . .”

புலிப்படயே நோட்டிஸ் அடிச்சி உரும கோரிருக்கான் . . . ந்தப் பொட்டயனுக்குத் தெரியாதா . .? காக்கோவ் . .! ஒண்டுமில்ல . . . ஒடன அம்பாறைக்கிப் போவம் . . .நெய்னாரப் புடிப்பம் . . . தலவரயும் சந்திப்பம் . . . அந்தப் பொட்ட நாய நான் தனிய சந்திச்சா . . . மத்தக்கண்ணுல.இடிப்பன் காக்கோவ் . .! நான் போய் ஜாபிரயும் கூட்டிட்டு வெரட்டா . .?”

முத்துமுகம்துக்கு வேறு ஒரு வழியும் இருக்கவில்லை . . .

சரி” என்றான்.

“. . . நீங்க டெலிவனுல வாமைம்னா . .! ண்டு கூப்பிட்டா என்ட தங்க மச்சான் ஒங்களக் காண பறந்தோடி வருவன் . . .மச்சான் . . . என்ட நம்பரு, மூணு ரண்டு . .? . . .?  நம்பர் . .?நம்பர் . . . கெசற்றில் . .! கெசற் . .? கால்களை ஓங்கித் தரையிலடித்தான் முத்துமுகம்மது. ஆத்திரத்தில் உடல் நடுங்கியது. “ப்பபீப் பொட்டயா . . . சப்பன ல்லைடா ஒன்னக் கொல செய்ய வாறண்டா . . . நாயே . .! கத்துதுரா சாக்குருவி . . .”

20

அம்பாறை விருந்தினர் விடுதியில் உள்ளறையில் தலைவர், சாய்மனையில் சாய்ந்துட்கார்ந்திருந்தார். கைபெனியனும், ‘பெற்றிக்’ சாரமும் அணிந்திருந்தார். அருகிலிருந்த கதிரையில், இணைப்பதிகாரி ஹ¨ஸைன்பாறுக் உட்கார்ந்து ஆழ்ந்த யோசனையுடன் பொறாமைக் கண்களைப் பாதி மூடியிருந்தார். பக்கத்தில் ஓரமாக நெய்னார் . .! முத்துமுகம்மதைக் கண்டதும், விரோத உணர்ச்சியுடன் குள்ளத் தனமாகச் சிரித்து விரோதக்குரலுடன் சொன்னான்.

சேர் . . . ந்தா வந்திரிக்காரு சேர் . . . எங்கட பள்ளிமொனச் சேமன் . .! சப்புச் சுல்தானக் கொலசெஞ்சவன் . .!”

நானில்ல சேர் . . . அல்லாறிய நானில்ல சேர் . .!” முத்துமுகம்மது பயத்துடன் நடுநடுங்கியபடி ஓடிச் சென்று தலைவரின் காலடியில் விழுந்தான்.

தலைவரின் விழிகள் முத்துமுகம்மதை ஆழமாக ஊடுருவின. நெஞ்சு துணுக்குற்று முத்துமுகம்மது திடீரெனப் பெருங்குரலில் அழுதான்.

சே...ர்... சே...ர்...” ஒரு வார்த்தையும் பேசமுடியவில்லை. அவனது அழுகை குறையும் மட்டும் காத்திருந்த தலைவர்,

எழும்பி நில் . .! முத்துமுஹம்மத் . .!!” என்றார். அவரின்குரல் மகா நிதானமாய் ஒலித்தது. முத்துமுகம்மது எழுந்தான். தடுமாறினான். நின்றான். தலைவரின் விழிகளைப் பார்க்க அஞ்சி . . கீழே பார்த்தான்.

என்னை நேராகப் பார் முத்துமுஹம்மத் . .! தலைவர் இந்த உலகத்தில் மனிதர்கள் யாரையும் நம்பியது கிடையாது. நான் நம்புவதெல்லாம் . . . இதோ பார் . .! இந்த புனிதமான முப்பது ‘ஜுஸ்ஊக் குர்ஆனை’ மட்டும்தான் . . . இது ஒன்றுதான் உண்மை . . . அல்லாஹ்வின் ‘கலாம்’ . .! அதற்கு நிகர் ஒன்றுமில்லை . . .”

“. . .” முத்துமுகம்மது பதிலளிக்கவில்லை.

சரி . .! முத்துமுஹம்மத் . .! குளித்திருக்கிறாய் அல்லவா . . . இந்தக் குர்ஆனைக் கையிலெடு!”

நடுங்கும் கரங்களுடன் புனித குர்ஆனைக் கையிலேந்தினான். கண்களில் ஒற்றிக்கொண்டான். உடன் தலைவர் ஆணையிட்டார்.

சரி . . . சேமன் . .! அல்லாஹ் அருளிய இந்தப் புனிதத் திருக்குர்ஆன் மீது சத்தியமாக . . . சொல் . .! சப்புச் சுல்தானைக் கொலை செய்தது நீயா . .?”

முத்துமுகம்மது விதிர்விதிர்த்துப் போய், புனிதக் குர்ஆனை இறுகப் பிடித்தான்.

சொல் . . . நீயா . .?”

தலைவரின் குரலில் கடும் சினம் வெளிப்பட்டது. எழுந்து அவனை நோக்கி வந்தார். சிங்கம் ஒன்றுசிலிர்த்தெழுந்து            வருவதைப்  போலிருந்தது.முத்துமுகம்மதுக்குப் பேச்சு வரவில்லை. தடுமாறி உளறினான்.

நா...னில்ல... சேர்... அ... அல்லாறிய... ச...சத்தி...யமா நானில்ல சேர்... ந... நான் அங்க போகக்கயே . . .”

சரி . . . அப்படியானால் நீ அன்றிரவு போயிருக்கிறாய் . . .”

ஓ...வ்... சேர்...”

எதுக்கு . .?”

அ...அவன...க் கொ... கொ...லக்ம்மக்கக...”

அப்படி இரு . . . ஒழுங்காகச் சொல் . .!”

தலைவர் மறுபடி சாய்மனையில் சாய்ந்தார். முத்துமுகம்மது விசுவாசமான நாய்க்குட்டிபோலத் தலைவரின் காலடியில் அமர்ந்தான். சொல்ல ஆரம்பித்தான். நெய்னார் வாய்பிளக்க . . . இணைப்பதிகாரி பொறாமைக் கண்களைத் திறக்க . . . கூட நின்ற நகிபும், ஜாபிரும் வியக்க - முத்துமுகம்மது கோர்வையற்றுத் தடுமாறி ஆரம்பித்தான்.

இங்கொன்றும், அங்கொன்றுமாகச் சொன்னான். மைமுனாவின் காதலைச் சொன்னான். சுல்தானின் வஞ்சகத்தைச் சொன்னான். தனது கொலைத் திட்டத்தைச் சொன்னான். அன்றிரவு கொலைமுயற்சிக்குப் போனது . . .இரண்டு புலிப் போராளிகளைக் கண்டது . . . உள்ளே போய் . . .

 கொலையைக் கண்டு அச்சமுற்று ஓடியது . . . காலையில் முடஉதுமான் மாமா சொன்னது . . . ஒன்றையும் மறைக்கவில்லை. நெய்னாரும், இணைப்பதிகாரியும், நகிபும்,£பிரும் முத்துமுகம்மதின் கதையில் நெஞ்சம் துணுக்குற்றிருந்தனர். ஆளுக்காள் கண்களால் வியப்புத் தந்திப் பரிபாஷை அடித்தனர். தலைவர் குறுக்கே பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தார். கண்களைப் பாதி மூடியிருந்தார்.

முத்துமுகம்மது நிறுத்தியதும், தலைவர் கண்களைத் திறந்தார். அவரது விழிகளில் ஒரு புத்தொளி பிறந்திருந்ததைக் கண்டனர். ஒரு அதிரடியான முடிவுக்குத் தலைவர் வந்துவிட்டார் என்பதை ஹ¨ஸைன்பாறுக் சட்டெனப் புரிந்துகொண்டார். அந்த முடிவு முத்துமுகம்மதின் பிரச்சினையில்லை. தலைவர் தன் பிரச்சினையில் ஒரு முடிவைக் கண்டுவிட்டார் என்பதை இவ்வளவு காலமும் தலைவரோடு பழகியிருந்த வழக்கத்தில் புரிந்துகொண்டார். தலைவர் அர்த்தபுஷ்டியாக இணைப்பதிகாரியைப் பார்த்தபடி, முத்துமுகம்மதை நோக்கித் திரும்பினார்.

சரி . . . முத்துமுஹம்மத் . .! தலைமைத்துவம் உன்னை நம்புகிறது. எழுந்திரு . .!”

முத்துமுகம்மது மகமகா நிம்மதியுடன் தலைவரின்க£லடியைத் தொட்டுக் கொஞ்சிக் கொண்டே எழுந்திருந்தான். தலைவர் அவனது ஊனக்கையைத் தன் கரங்களால் பற்றினார். ஒரு விநாடி அமைதிப்பட்டுத் திடீரெனக் கூறினார்.

ஓக்கே . . . முத்துமுஹம்மத் . .! தி சப்ட்டர் இஸ் க்ளோஸ்ட் . .! சரி . . . ஆனால், நாளையிலிருந்து நீ பள்ளிமுனை பிரதேச சபைக்குச் சேர்மனில்லை. இப்போதே அந்தப் பதவியை ரிஸைன் பண்ணிவிடு . .!”

முத்துமுகம்மதும், நெய்னாரும், ஜாபிரும், நகிபும் அடைந்த துன்பஅதிர்ச்சியை விடவும், இணைப்பதிகாரி ஹ¨ஸைன்பாறுக் மகா இன்ப அதிர்ச்சியடைந்தார்.

£ல்வரும் தலைவரை வியப்பு மீக்குற்றுப் பார்த்தனர். தலைவர், தனக்கேயுரிய வசீகரப் புன்னகையோடு,

யெஸ் . . . மிஸ்டர் . . . ஹ¨ஸைன் பாறுக் . .! நவ் யு பிரிபெயா எ ரிஸைன் நோட்டீஸ் . . . அன்ட் கெற் த சிக்நேச்சர் ப்ரம் ஹிம் . .!”

யெஸ் ஸேர் . . . பட் வன் திங்க் . . . ஹி மே த . . .”

நோ . . . மோர் கொமண்ட்ஸ் . .! ப்ளீஸ் டூ இற் . .! முத்துமுஹம்மத் . .! இவர் அடித்துத் தரும் ராஜினாமாக் கடிதத்தில் கையெழுத்துப் போட்டு விடு . . . சரியா . .?”

செ . . . செரி சேர் . .!”

முத்துமுகம்மதுக்கு ஒன்றும் விளங்கவில்லை. இனி தான் சேர்மனில்லை என்று மட்டும் பரிந்தது. தலைவர் நம்பவில்லையா . . . தலைவருக்குப் பிடிக்கவில்லையா . . .அவரே போட்ட பிச்சை. அவரே எடுத்துக்கொண்டார். மீற முடியாது. மீறிப் பழக்கமில்லை. ஆனால், நெய்னாரால் அடக்க முடியவில்லை. தடுமாறிக் கேட்டான்.

சே . . . சேர் . . . அப்ப இனி ஆரு சேர் எங்களுக்கு சேமன் ஆகிற . .? அப்ப முத்தும்மது . .?”

ஏன் உனக்கு விருப்பமா சேர்மன் ஆக . .?” - தலைவர் புன்னகையுடன் நெய்னாரை ஊடுருவிப் பார்க்க . . . நெய்னார், பயந்து போய் . . . “எண்டல்லோ . . .எனக்கொண்ணா சேர் . . . அது பொல்லாத பதவி சேர் . . . எங்கட கொறுக்காட பேரன்தான் அதுக்குப் பொருத்தம் சேர் . . . நானும் அவனக் கொஞ்சம் பொளயா நெனச்சிட்டன் . . . அவன் நெல்லவன் சே . . . ர் . . . அவன் களிச்சு உட்ராதங்க சேர் . . .” என்று தலைவரின் காலடியில் வீழ்ந்தான் . . . தலைவர் வாய்விட்டுச் சிரித்துவிட்டார். பின்னர் அதி நிதானமாக,

மிஸ்டர் ஹ¨ஸைன் பாறுக் . .! நெய்னார் . .!! தம்பி நகீப். ஜாபிர் . .!!! பள்ளிமுனைப் பிரச்சினையில் முத்துமுஹம்மத் அதனை எதிர்கொண்ட விதமும் பல பிரச்சினைகளைத் தைரியமா முகம் கொடுத்து ஊண் உறக்கம் பாராமல் ஓடித்திரிந்து பாடுபட்டதையும் தலைமைத்துவம் நன்கறியும். அதற்காக மனதாரப் பாராட்டுகிறது . . .’ முத்துமுகம்மதுக்குக் கூச்சமாக இருந்தது. நகிபும் ஜாபிரும் நெய்னாரும் ஆமோதித்துத் தலையாட்டினர். தலைவர் மீண்டும் சொன்னார்.

“. . . ம் . .? தவிரவும் எனக்காகத் தம்பி முத்துமுகம்மது மூன்று விரல்களை இழந்தவன் . . . யெஸ் . .! முத்துமுஹம்மத் இழந்த அந்த மூன்று விரல்களுக்காகவும் மூன்று பரிசுகள் தருவதாகத் தலைமைத்துவம் அவனுக்கு ஏற்கனவே வாக்களித்திருந்தது. அவன் இழந்த முதல் சுட்டு விரலுக்கு, விலாசமேயில்லாத முத்துமுஹம்மதைத் தென்கிழக்கே சுட்டுவிரல் நீட்டிச் சுட்டிக் காட்டுகிற மாதிரி ஒருபரிசளித்தேன். அது . . . சேர்மன் பதவி . . . முதற்பரிசு, சேர்மன் ஒப் த வயற்சேனை பிராதேஸிய சபா . . .”

இற் இஸ் டு மச் போர் ஹிம் . .!”

மொதப் பரிசே கடும் பரிசி சேர் . .”

முத்துமுஹம்மத் இழந்த இரண்டாவது விரல் நடுவிரல் . .! அதற்காகக் கற்றவர் நடுவே இருக்குமாப் போல் இரண்டாவது பரிசை அளிக்க தலைமைத்துவம் இப்போது தயாராகவிருக்கிறது . . .”

இணைப்பதிகாரி, தலைவரின் கதையின் போக்கைப் புரிந்துகொண்டு அதிர்ச்சியுடன் பார்த்து அவசரமாக,

சேர் . . . ஐ திங்க் இற்ஸ் ஓவர் கோல்ட் ஒன் ஹிஸ் ஹெட் . . .” என்றார். நெய்னாரும், நகிபும் முத்துமுகம்மதுக்குக் கிடைக்கப்போகும் இரண்டாவது பரிசை வெகு ஆவலோடு எதிர்பார்த்துப் “பரிச இப்பயே குடுங்க சேர் . . .” என்றனர். தலைவர் புன்னகை மாறாத முகத்துடன் சொன்னார்.

யெஸ் . . . முத்துமுஹம்மத் . .! நீ நாளையிலிருந்து பள்ளிமுனைக்குச் சேர்மன் இல்லை. பட், நாளை தொடக்கம் நீதான் திகாமடுல்ல மாவட்டத்தின் இலங்கை இஸ்லாமியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் . . . யெஸ், முத்துமுஹம்மத் . . . இஸ் அப்பொயின்ற்டட் அஸ் எ மெம்பர் ஒப் த பார்ளியமென்ற் . . .”

தலைவரின் குரலிலிருந்த உறுதியில், கேட்டிருந்த நால்வரும் உறைந்துபோயினர். நெய்னார் தன் காதுகளை நம்பமுடியாமல் வாய் பிளந்து காற்றைச் சாப்பிட்டுத் தரையில் உட்கார்ந்துகொண்டு மூச்சிரைக்க . . . நகிபு அப்படியே தலைவரின் காலடியில் சரிந்து விழுந்து வியந்தான்.

£பிர் முத்துமுகம்மதின் மொட்டுக்கையைப் பிடித்துக் குலுக்கினான். இணைப்பதிகாரி தன்னிலை மறந்து தடுமாறி எழுந்த வேகத்தில் கதிரைத் தடுக்கி விழப்பார்க்க முத்துமுகம்மதோ மிக அதிசயமாக மிகத் தெம்புடன் தலைவரை வியப்புடன் பார்த்தான். தலைவரின் கனவு விழிகள் முத்துமுகம்மதைக் கருணையுடன் பார்த்தன. திடீரெனத் தலைவரின் கால்களில் விழுந்தான் முத்துமுகம்மது.

சே...ர்... ந... நா...ன்..?”

மிஸ்டர் ஹ¨ஸைன் பாறுக் . . . வேர் ஆர் யூ . .? ப்ளீஸ் மேக் அரேஞ்ச் எ ப்ரஸ் மீற்றிங் டுமோர்ரோவ் . .! என்ட்,பிரிப்பெயா த நெஸஸரி எக்ஸன் டு தட் . . . ஏய் . . . நெய்னார் . .! நகிப் . .! ஜாபிர் . . . பள்ளிமுனை மத்திய குழுவுக்கும், தாடி மாஸ்டருக்கும் விசயத்தச் சொல்லிவிடுங்க! முத்துமுஹம்மத் . .! பத்திரிகையாளர் மாநாட்டைக் கூட்டச் சொல்லியிரிக்கிறன் . . . அதில கலந்துகொள்ள ஆயத்தமாகு . .!”

“...”

இதுதான் தலைவரின் இரண்டாம் பரிசு . . . இவைதவிர, முத்துமுகம்மது இழந்த மூன்றாவது விரல் மோதிர விரல் . . .திருமண மோதிர விரல் . . . அதற்கும் விரைவில் தலைமைத்துவம் ஒரு பரிசளிக்க இருக்கிறது . . .”

சேர் . . . இப் யூ டோண்ட் மைன்ட், ஐ ஸ்ட்ரோங்க்லி ஒப்ஜக்ட் தி மெற்றர் . . . வட் த ரீஸனப . . .”

மிஸ்டர் ஹ¨ஸைன்பாறுக் . . . ப்ளீஸ் கொய்ற் . .! நெய்னார் . . . தம்பி நகீப் . .! முத்துமுகம்மதுக்கு மூன்றாவது பரிசையும் உங்கள் முன்னிலையில் இப்போதே அளிக்கிறேன். இன்ஷா அல்லாஹ் . .! முத்துமுகம்மது முதற்தடவையாக என் வாசலுக்கு வந்தது தான் இழந்த தனது காதலியைக் கேட்டுத்தான் . . . ல்லையா . .? அவன் கேட்டதைக் கொடுக்காமல் வெறுங்கையடன் அனுப்பவதுதலைமைத்துவத்திற்கு அழகல்ல . . . மிஸ்டர் ஹ¨ஸைன்பாறுக் . .! கண்ணன் என் சேவகன் என்ற பாரதி பாடலைக் கேட்டிருக்கிறீர்களா . .?”

நோ ப்ளீஸ் ஸே . . .”

தந்தையையும் தாயையையும் இழந்த முத்துமுஹம்மத் . . . என்னையே அவனது பெற்றோராக வரித்துக் கொண்டவன் . . . அவனுக்குத் திருமணம் செய்து வைப்பது எனது கடமையல்லவா . . . என்ன நெய்னார் . . . ஜாபிர் . .? நகீப்...ம்..?”

ஓம் சேர் . . . ஒங்களுக்காக உசிரத் தெருவாரு சேமன் காக்கா . . . சேர் . . . அவன் உங்கட மகன்தான் சேர் . . .”

பெண்ணையும் தீர்மானித்து விட்டேன் . . .” என்றார் தலைவர் அதிரடியாக . .! பளீரென நிமிர்ந்தான் முத்துமுகம்மது . . . அதிர்ச்சி உயிர்வரை உலுக்கியது. தலைவர் அவனை மர்மப் புன்னகையுடன் பார்த்து,

மணப்பெண் யார் தெரியுமா . .?” என்று கேட்டார் . . .

“...”

மைமுனா!”

“...”

மைமுனா . .!” என்றார் தலைவர் மீண்டும்.

சே . . . ர் . . .” முத்துமுகம்மது ஆயிரம் தேள் கொட்டிய அதிர்ச்சியில் இருந்தான்.

இணைப்பதிகாரி ஹ¨ஸைன்பாறுக் முழுப் பொறாமையுடனும், ஏனையோர் மகா வியப்புடனும் பார்த்துக்கொண்டிருக்க, தலைவர், தொலைபேசியை எடுத்து, யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். நன்றாக உற்றுக் கேட்ட போதுதான் விளங்கியது தலைவர் அரபி மொழியில் உரையாடிக் கொண்டிருக்கிறார் என்பது. தலைவர் ஒரு மர்மப் புன்னகையுடன், சில விநாடிகள் மௌனமாயிருந்தார். பின், சட்டென்று,

முத்துமுஹம்மத் . .! என்னுடைய மூன்றாவது பரிசையும் ஏற்றுக் கொள் . . . இந்தா . . . உன் மைமுனா . .!” என்று கூறி, ஒலிவாங்கியை முத்துமுகம்மதை நோக்கி நீட்டினார். விதிர்விதிர்த்துப் போன முத்துமுகம்மது ஓடிச் சென்று தலைவரின் காலடியில் வீழ்ந்தான். அவரது கால்களைக் கட்டிப் பிடித்தான். தலைவர் ஒரு கையால் அவனைத் தூக்கி நிறுத்தினார். நடுநடுங்கும் கரங்களால் ஒலிவாங்கியைப் பற்றிக் காதில் வைத்தான் முத்துமுகம்மது. ஒன்றும் பேசாதிருந்தான்.

அலோ! எண்டு சொல்லண்டா கொறுக்காப் பேயா . . .” என்று நெய்னார் பொறுக்கமாட்டமற் கத்தியதும், நிதானித்த

முத்துமுகம்மது காதுகளில் ஒலிவாங்கியை அழுத்திக்கொண்டு, “ஹலோ . .!” என்றான்.

உடனே, மறுமுனையிலிருந்து, எத்தனையெத்தனையோ யுகயுகாந்திரங்களுக்குப் பிறகு, மைமுனாவின் தேன்குரல் வந்து பாய்ந்தது காதினிலே . . .

அலோ . . . மு . . . முத்துமச்சானா . .? முத்துமச்ச்சான் . . .மச்சான் . . . மமமச்சான் . . .”

மைம்னா . . . மைம்னா . . . நாந்தான்டி மைமுனாக் கிளீய் . . . யாரேய். .!”

21

அடுத்தநாள் இலங்கை முழுவதும், வெகுஜன ஊடகங்கள் புதிய செய்திச் சட்டை அணிந்து காட்சியளித்தன . . . அரசியல் வட்டாரங்கள் அதிர்ந்தன . . .

திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் விவகாரம் . . .

கட்சியின் ‘இளம்பிறை’ . . . முத்துமுஹம்மத் நியமனம் . .!

தலைவரின் முடிவை உயர்பீடம் ஏகமனதாக ஏற்றது.

இதுபற்றித் தெரியவருவதாவது . . . பள்ளிமுனைப் பிரதேச சபைத் தவிசாளரான ஜனாப். எம். முத்துமுகம்மது திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினராக இலங்கை இஸ்லாமியக் கட்சியின் சார்பில் அதன் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் இம்முடிவை நேற்றுப் பத்திரிகையாளர் மாநாட்டில் கட்சித் தலைவர். அல்ஹாஜ். எம். எச். எம். இஸ்ஹாக் சட்டத்தரணி அவர்கள் தெரிவித்தார்.

கடந்த பிரதேச சபைத் தேர்தலின்போது, தனது கட்சி ஆறுசபைகளிலும் வெற்றிபெறும் என்றும் அவற்றில் ஒன்றிலேனும் தனது கட்சி தோற்றால் தான் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்துவிடுவதாகவும் சவால் விட்டிருந்ததும் அதன்படி ஐந்து சபைகளைக் கைப்பற்றிய அவரது கட்சி, பத்துவில் பிரதேச சபைக்கான போட்டியில் மட்டும் மிகச் சொற்பமான வாக்கு வித்தியாசத்தில் (93) மு.தே. க.விடம் தோல்வியைத் தழுவியதும், இதனைத் தொடர்ந்து தான் கூறியபடி பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அவர் இராஜினாமாச் செய்திருந்ததும் தெரிந்ததே.

அப்போது ஏற்பட்ட வெற்றிடத்திற்குக் கடந்த பொதுத்தேர்தலில் இ.இ.க.வில் போட்டியிட்டு இரண்டாவது பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றிருந்த (தற்போது கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள) மா. ஹ¨. ஹம்ஸதீன் அவர்களைக் கொண்டு நிரப்ப முடியாதவாறும், வெற்றிடத்திற்கு யாரையும் நியமிக்கும் அதிகாரம் தலைவருக்கு உரியது என்றும் கட்சியின் யாப்பின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

அதனையடுத்து, அந்த வெற்றிடத்திற்குக் யாரை நியமிப்பது என்று கடந்த பல வாரங்களாக இழுபறி நிலை ஏற்பட்டிருந்தது. கட்சியின் உயர்பீட முக்கியஸ்தர்களான, சட்டத்தரணி பறூக் காரியப்பர் (தேசிய கொள்கைபரப்புச் செயலாளர்), திரு. மஸித பெரரோ (பெடரல் கட்சித் தலைவர்), சம்மாந்துறை விடிவெள்ளி வஹாப், பாவலர் பஸீல் காரியப்பர் ஆகியோரின் பெயர்கள் இதற்காகச் சிபார்சு செய்யப்பட்டிருந்தன. எனினும், இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் தலைவருக்கே வழங்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில், கட்சி வட்டாரத்தில் யாரும் எதிர்பாராதவிதமாக ஜனாப். எம். முத்துமுஹம்மத் அவர்களின் பெயர் தலைவரால் அறிவிக்கப்பட்டுத் தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாப். எம். முத்துமுஹம்மத் பள்ளிமுனை இஸ்லாமியக் கட்சியின் இளைஞர் அணி உறுப்பினராக இருந்தவர். வயற்சேனை பிரதேசச் சபைத் தேர்தலில் அதிகூடிய 11822£க்குகள் பெற்று, சபையின் தவிசாளராகக் கடமை புரிந்தவர். இ.இ. கட்சியின் ஆரம்ப கால அடிமட்டப் போராளியாகத் தனது அரசியல் வாழ்வை ஆரம்பித்த ஜனாப். எம். முத்துமுஹம்மத் கட்சித் தலைவரால் ‘இளம்பிறை’ பட்டம் அளிக்கப்பட்டவர். நாளை மறுநாள் கூடவுள்ளபாராளுமன்றத்தில் ஜனாப். எம். முத்துமுஹம்மத் பதவிப்பிரமானம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. (ம.ச.12)

சில    ஊடகங்களில்,       திகாமடுல்ல £வட்டப்பாராளுமன்ற உறுப்பினராக முத்துமுகம்மது . . . (?) . . . சட்டப் பிரச்சினை தீர்ந்தது . .!” என்றும், “முத்துமுகம்மதுவின் நியமனம் . . . பள்ளிமுனை மக்கள் பட்டாசு கொளுத்தி, கொண்டாட்டம் . .! பெரு வரவேற்புக்கு ஏற்பாடுகள் . . . மாஹ¨ ஹம்ஸதீனின் கொடும்பாவியும் எரிப்பு . .!!” என்றும், முற்பக்கச் செய்திகள்வெளியிட்டு அரசியல் வட்டாரங்களையும் பொதுமக்களையும் அதிர வைத்தன.

வாரகேசரி தனது, பாணியில், “ . . . புதிய பாராளுமன்ற உறுப்பினராகச் சட்டப் பிரச்சினைகளுக்கு மத்தியில் நியமிக்கப்பட்ட திரு முத்துமுகம்மது, இஸ்லாமியக் கட்சியின் அடிப்படைப் போராளியாவார். கடந்த வருடம் கொழும்பில், நிகழ்ந்த எல். ரீ. ரீ. உறுப்பினர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நபர்கள் நடத்திய, இஸ்லாமியக்கட்சித் தலைவர் திரு.இஸ்ஹாக் மீதான சூட்டுச் சம்பவத்தின்போது, குறுக்கிட்டுத் தடுத்து, அதனால், தனது மூன்று விரல்களை இழந்தவராவார். தன் மதம்மீது தீவிர பற்றாளரான அவர் . . .” என்று விஷமத்துடன் செய்தி திரித்தது.

இத்தனை களேபரங்களுக்கு மத்தியில், செய்திப் பத்திரிகைகளின் உட்பக்க மூலையில் ஒரு சிறிய கொலைச் செய்தி பத்தோடுபதினொன்றாகப் பிரசுரிக்கப்பட்டிருந்தது. “பள்ளிமுனையில் பதற்றம் . . . வாலிபருக்கு மரண தண்டனை . .! சப்புச் சுல்தான் என அழைக்கப்படும், சாஹ¨ல்ஹமீது முஹம்மது இஸ்மாயில் (வயது 43) என்பவர் நேற்று குத்தியும் வெட்டியும் கோரமாகக் கொல்லப்பட்டுள்ளார். அவரது உடல் ஊரின்ஒதுக்குப்புறமாகவுள்ள ஒரு ஆலைமரத்தில் தொங்கவிடப்பட்டிருந்தது . . . இக்கொடூரச் செயலைப் புலிப்பயங்கரவாதிகளே செய்திருப்பதாகக் காரைதீவு அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி திரு. ஹீனகெதற ரத்நாயக்க தெரிவித்தார் . . . இதனையடுத்துப் பள்ளிமுனைக்கும் தமிழர்கள் வாழும் பக்கத்துக் கிராமமான மீனோடைக்கட்டுக் கிராமத்துக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன . . .

ஆரம்ப விசாரணைகளிலிருந்து, வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு உப முகவராகத் தொழில்புரிந்து வந்த மேற்படி கொலையுண்ட இளைஞர், பற்பல மோசடிக்குற்றங்களிலும், போதைவஸ்து வியாபாரத்திலும், ஈடுபட்டு வந்துள்ளதாகவும், கடந்த பிரதேச சபைத் தேர்தலில் முக்கிய தேசியக்கட்சியில் போட்டியிட்டிருந்தார் . . . என்றும், தெரிய வருகிறது. மேலதிக விசாரணைகளைக் கல்முனை குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (ம.நி.87)

எனினும், அன்று இரவு ஒலிபரப்பான வானொலிச் செய்தியால், இக்கொலைச்செய்தி ஒதுக்குப்புறமாய்ப் போய்விட்டது.

“ . . . நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது இலங்கை வானொலியின் செய்திகள் . . . டிங் . . . டிங்ங்றி . . . ஙிஙிஙிங . . .

மக்கள்மனதறிந்த வங்கி . . .மக்கள்வங்கி . . .

ஙீ . . . ஙீறிஙஙீறி . . . ங் . . . வயற்சேனை தொகுதிக்கு மட்டுமல்லாது முழு மாவட்டத்திற்கும் தலைவரின் வழியில் சேவை செய்வதே தனது பணியாகும் என திகாமடுல்ல ம£வட்டப் பாராளுமன்ற உறுப்பினரான ஜனாப். எம். முத்துமுகம்மத் அவர்கள் பாராளுமன்றத்தில் தனது பதவியேற்பின் பின்னர் நிகழ்த்திய கன்னியுரையில் தெரிவித்தார். மேலும், முஸ்லிம் மக்கள் இன்று பலவகையான, பயங்கரவாதப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர் என்றும், முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டத்திலேயே முஸ்லிம்களால் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணம் பிள்ளையார் கோயில் வீதியில் சுற்றி வளைப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த படையினரைக் குறி வைத்து, நிகழ்ந்த ஒரு தற்கொலைத் தாக்குதலைக் . . .” கேட்கவிடாமல் திகாமடுல்ல மாவட்டமெங்கும் பட்டாசுகள் வெடித்துக் காதுகளைக் காயப்படுத்தின . . .

மேலும், “இது லண்டன் பி. பி. ஸீ . . . இலங்கைக் கண்ணோட்டம் . . . பள்ளிமுனை மக்களுக்கு மட்டுமல்லாது முழு திகாமடுல்ல மாவட்டத்திற்கும், தலைவர் வழியைப் பின்பற்றிச் சேவை செய்வதே தனது இலட்சியமாகும் என்று கூறிய சட்டசபைக்கு நியமிக்கப்பட்ட புதிய பாராளுமன்ற உறுப்பினரான முத்துமுகம்மத் அவர்களின் பேட்டி, மற்றும், இலங்கைக்கான இந்தியத் தூதுவரின் வருகை, யாழ்நகரில் நிகழ்ந்த தற்கொலைத் தாக்குதல் போன்ற பல்வேறு செய்திக்குறிப்புகளும் . . .”

பள்ளிமுனையில் மட்டுமல்லாது முழு இலங்கையிலும் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தது.

0

பள்ளிமுனைக்கு நுழையும் பாதை முகப்பில் பாரிய தோரணம் ஒன்று பள்ளி மினாரா வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. பூமரச்சந்தி மஞ்சட்பச்சை பொலித்தீன் சீலைகளால் ஏறக்குறைய மூடப்பட்டுப் பளபளத்தன. பூமரத்தில், முத்துமுகம்மது பதினெட்டு அடி உயரத்தில், அச்சிடப்பட்டுத் தலைவருடன் நின்று கைகாட்டினான் . . . கீழே - “பள்ளிமுனை பெற்றெடுத்த £ராளுமன்ற உறுப்பினரே வருக . .!”, மினாராவின் இருபுறமும், “பெருந்தலைவர் வழியில் இளம்பிறை முத்துமுகம்மது . . .”

சந்தி முழுக்கச் சனங்கள் . . . மகாவித்தியாலய மாணவிகள் ‘பேண்ட்’ வாத்தியத்துடன் வரிசையிட்டிருந்தனர். பொல்லடி மல்லர்கள் கோலாடத் தயாராகவிருந்தனர். கோல்களில் வெண்டயங்கள் கிணிங்கிணிங்கென்றன . . .

ஒஸ்தாது மாமா விற்சுருள் வாள் சுழற்றி ஒத்திகை பார்க்க, வாள், “உஸ்உஸ்ஸஸ்ஸ்ஸ்ஸக்”கென்று சுருண்டது. உப ஒஸ்தாது மாமா நீள்வாளால் காற்றை வெட்டி வெட்டி வீர ஒத்திகை புரிந்தார்.

பெரிய கிளிசரியா மரம், பட்டாசுகளாலான தற்கொலை அங்கி அணிந்து வெடித்துச் சிதறக் காத்திருந்தது. பிரதான வீதியில் ஊர்ப்பிரமுகர்கள், பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினர், பலநோக்கக் கூட்டுறவுச் சங்கப் பட்டாளத்தினர், மீனவர் சங்கப் பிரதிநிதிகள் , சேனைக்கண்டம் கமநல சேவை சபையினர் மற்றும் கட்சிஇளைஞர் அணியினர், பொலிசார், மாதர் சங்கத்தினர், துள்ளாட்டச் சிறுமிகள் என்று திமுதிமுத்தனர். பெண்கள் கூட்டம் ஆரத்தி, மாலை, குரவை என்று ஏக தடல்புடலாகவிருந்தனர். வயற்சேனை முஸ்லிம் மகா வித்தியாலய மைதானத்தில், இருபதடி பொலித்தீன் சீலையில்,

பிறைக்கட்சியின் இளம்பிறை . .!

பள்ளிமுனையின் தலைப்பிறை . .!!

வருக . .! வருக . .! எங்கள் வளர்பிறை

ஆலிஜனாப் . . . முத்துமுகம்மது பா.உ.’

என்று ஆடிஅசைந்தது. உயரத் தென்னை மரத்தில் கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கியில், கட்சிக்கீதங்களும் இடையிடையே நாகூர்ஹனிபாவும் பிளந்து கட்டின.

மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த பொது மேடை ஏகமாக அலங்கரிக்கப்பட்டுப் பளபளத்தது. ஆசுகவி அன்புடீன் தலைமை தாங்கக் காத்திருந்தார். மேடையினருகே, சர்பத் கிழவர் தனது நடமாடும் தள்ளுவண்டியைத் தள்ளிக்கொண்டே, தள்ளுபடி விலையில் சர்பத்தும், அரசியலும் விற்றுக்கொண்டிருந்தார். அஸ்ரப் தண்டயல், தூக்கியடிக்கும் மலிவு அத்தர் வாசனையுடன் மீனவர் சங்கம் சார்பில், பொன்மீன் மாலை அணிவிக்கத் தயாராக நின்றிருந்தார். புரட்சி மௌலவி புழைல் புது பைஜாமா ஜிப்பாவுடன். புதிய சூறா ஓதக் காத்திருந்தார். போஸ்டுமாஸ்டர் நேரம் முந்தி மூடிவிட்டு, மேடையில் ஏறி வருகையறிப்புகள் செய்தார். பள்ளிக்குயில் பளீல்,

‘. . . அத்துவித முத்தி பெற்றுச் சித்தி பெற்ற எங்கள் முத்துமுகம்ம தெங்கள் சொத்து சுகமிதே . . .” என்று ஏகப்பட்ட சந்தங்கள் அமைந்த கவிதையைத் தன் சொந்தப் பையில் ரகசியமாக வைத்திருந்தார். வாய்க்குள் முணுமுணுத்து ஒத்திகை செய்தார். அனைவரும் காத்திருந்தனர்.

மாலை ஐந்து மணியாகிக்கொண்டிருந்தது. திடீரென

ஏகதடல்படலாகப் பட்டாசுகள் வெடித்து அமளிப்பட,மத்தாப்பு வர்ணங்கள் பூச்சொரிந்து வர்ணமயமாகச் சொரிய,ஒலிபெருக்கி உச்சஸ்தாயியில் கத்தி வருகையறிவிப்புச் செய்ய,விரைந்து வந்துகொண்டிருந்தது ஒரு அதிரடிப்படை ஜீப்.

தொடர்ந்து, கறுப்புக் கண்ணாடி போர்த்திய ‘டபிள்கப்லேண்ட் ஸோலர்’ வந்து புழுதி கிளப்பி நின்றது. ஒலிபெருக்கி,

இதோ எங்கள் இளம்பிறை . . . இளைஞர்களின் தானைத்தலைவன் . . . திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் ஆலிஜனாப். எம். முத்துமுகம்மது அவர்கள் வந்து விட்டார்கள் . . .”

என்று குரல்கிழியக் கத்த, அத்தனை சனங்களும் உணர்ச்சிமீக்குற்று  “அல்லாஹ¨அக்பர் . . .”  என்று  முழங்க . . .

வாகனத்தின் கதவுகளை ஒரு பொலிஸ்காரன் பவ்வியமாகத்திறந்துவிட, நெருக்கியடித்த சனங்களை அதிரடிப்படைவீரர்கள் தள்ளி வழிசமைக்க . . . வாகனத்திலிருந்து,

\தனது இளம் மனைவி    மைமுனா    சகிதமாக,    இறங்கிவந்துகொண்டிருந்தார். இலங்கை இஸ்லாமியக் கட்சியின்பிரதித் தேசிய அமைப்பாளரும், பள்ளிமுனை இளைஞர்அணித் தலைவரும், முன்னாள் வயற்சேனைப் பிரதேசசபைத் தவிசாளரும், தற்போதைய திகாமடுல்ல மாவட்டப்ப       £ராளுமன்ற உறுப்பினருமான கௌரவ, ஜனாப். எம். முத்துமுகம்மது அவர்கள்.

நாரே தக்பீர் . .!”

அல்லாஹ¨ அக்பர் . .!!”

000

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

180      நௌஷாத்