தினக்குரல்-------- நூலகம்.
போர்க்கால இலக்கியத்தின்
ஒரு புது வரவு ~கொல்வதெழுதுதல் 90|-- நாவல்.
கலைச்சிகரம்.. எம்.வை. நஐPப்கான்.
தமிழ்நாடு காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது ஆர்.எம். நௌஸாத் எழுதியுள்ள ~கொல்வதெழுதுதல் 90|--என்னும் இந்நாவல். ~.....1990-களின் காலப் பகுதியில் இலங்கையின் போர்க்காலப் பகைப்புலத்தில் கிழக்கின் ஒரு முஸ்லிம் கிராமத்தின் தளத்தில் இயங்கும் இந்நாவல் அக்கால மக்களையும் போர்க்காலச் சூழலையும் இயல்பாக வடிவமைத்துக் காட்டுகிறது...|| என்று ~கொல்வதெழுதுதல் 90|-- என்ற இந்நாவலின் உட்கோணத்தை இரண்டாம் விசுவாமித்திரன் தன் பின்னட்டைக் குறிப்பில் பொறித்துள்ளார்.
~~.... போர்க்கால இலக்கியங்கள் பற்றிய பகிர்தல்களின் போதும் இலங்கையின் போரியல் பற்றி அறியாத தமிழக வாசகர் மத்தியிலும் இங்குள்ள எதிர்காலச் சந்ததியினர் மத்தியிலும் தனது போர்க்காலப் புதினத்தை இந்நாவல் அழுத்தமாகப் பதிவு செய்யும் என்பதில் சந்தேகமில்லை....||..என்று முஸ்லிம்குரல் பிரதி ஆசிரியர் எம்.எம்.எம். நூறுல்ஹக் ~முன்னுரை|த்துள்ளார்..
இந்நாவலை நூலாசிரியர்ää உயர்மிகு சுந்தர ராமசாமி அவர்களுக்கு சமர்ப்பணம் செய்து தனது இன நல்லுணர்வைப் பேணியுள்ளார். அட்டையின் வடிவமைப்பை பழைய கோட்டுச் சி;த்திரத்தை நவீன பாணியில் கவர்ச்சியான நிறச்சேர்க்கையுடன் றஸ்மி வடிவமைத்துள்ளார்.
காலச்சுவடு பதிப்பகத்தின் 529-வது வெளியீடாக வந்துள்ள இந்நாவலுக்கு தமிழ்நாடு அரசின் ஆயிரம் பிரதிகளுக்கான நூலக ஆணை கிடைத்துள்ளது ஒரு சிறப்பம்சமாகும்.
நாவலின் கதை சொல்லும் இலாவகமும் கவர்ச்சி நடையும் கிராமிய மொழிக் கையாள்கையும் நாவலுக்கு உரமூட்டி விறுவிறுப்பாக கொண்டு செல்கின்றது. 2011 ல் தனது ~வெள்ளிவிரல்| சிறுகதைத் தொகுதிக்கு சாகித்திய விருது பெற்றவரான இ;ந்நாவலாசிரியரின் ~நட்டுமை| என்ற பிரசித்தி பெற்ற நாவலும் சு.ரா. பவளவிழா இலக்கியப் போட்டியில் முதற்பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
இவரது இரண்டாவது நாவலான இது பள்ளிமுனை என்னும் கிழக்கு முஸ்லிம்களின் ஒரு கிராமத்து மக்களின் போர்க்காலத்து வாழ்வியலை நாவல் வடிவத்தில் கொணர்ந்த முதல் முயற்சி ஆகும்.. 1990 காலப் பகுதியின் அரசியல் வரலாற்றை நாவல் இலக்கியமாக ஆவணப்படுத்தி நிற்கிறது ~கொல்வதெழுதுதல் 90|--
(கலைச்சிகரம்.. எம்.வை. நஐPப்கான்.--0767 313135-- 12 பிரதான வீதி-- சாய்ந்தமருது. 03)

நாவல்
ஆர்.எம். நௌஸாத்.
காலச்சுவடு வெளியீடு
பக்- 181.
டிசம்பர் 2013.
தொடர்புகள்-
0714457593
பிரதான வீதி
சாய்ந்தமருது
No comments:
Post a Comment