Saturday, October 14, 2023

மிஹ்னாவின் ஆய்வு-இயல் -3-

இயல் - 03

நாவலின் தோற்றப் பின்னணியும் உள்ளடக்கமும்.

 

3.0. கொல்வதெழுதுதல் 90 நாவலின் தோற்றப் பின்னணியும் உள்ளடக்கமும்.

3.1. தோற்றப் பின்னணி

3.2. உள்ளடக்கம்

3.2.1. அரசியல்

3.2.1.1. அரசியல் கட்சி

3.2.1.2. தொண்டன்

3.2.1.3. கட்சித் தலைவன்

3.2.1.4. தேர்தல்

3.2.1.4.1. தேர்தல் களம்

3.2.1.4.2. தேர்தல் பிரச்சாரம்

3.2.1.4.3. தேர்தல் பிரச்சினை

3.2.2. யுத்தமும் அதன் தாக்கங்களும்

3.2.3. விடுதலை உணர்வு

3.2.4. வர்க்க முரண்நிலை

3.2.5. காதல் உணர்வு

3.2.6. கிழக்கிலங்கை மக்களின் கலாசார பண்பாட்டு அம்சங்கள்

3.2.6.1. சமய சம்பிரதாயங்கள்

3.2.6.2. நம்பிக்கைகள்

 

 

 

 

3.0. கொல்வதெழுதுதல் 90 நாவலின் தோற்றப் பின்னணியும் உள்ளடக்கப் பகுப்பாய்வும்.

3.1. தோற்றப் பின்னணி

மனித சமுதாயத்தில் இன்றியமையாத எண்ணக்கருக்களுள் ஒன்றாக வன்முறை காணப்படுகிறது. மிக மோசமான வன்முறைகளை விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் தொடங்கி பயங்கரமான முறையில் முடித்துள்ள நிலைமை காலம் காலமாக உலகத்தில் நடைபெற்று வருகிறது. இலங்கையை பொறுத்தவரையில்ää இது பல்லின மக்கள் வாழுகின்ற ஒரு நாடாகும். இங்கு இன ரீதியான வன்முறையானது ஆரம்ப காலம் தொடக்கம் இன்றுவரை இடம்பெற்று வருகின்றது. இன ரீதியான வன்முறை அல்லது இன முரண்பாடு எனும் போதுää நாட்டின் தேசிய இனங்கள் தம் அடையாளத்தை நிலை நிறுத்திக் கொள்ள இனம்ää மொழிää பண்பாடுää சாதிää பொருளாதாhம் முதலிய இன்னோரன்ன விடயங்களுக்காக பிணக்குறுவதாகும். அந்தவகையில்ää சிங்களவருக்கும் தமிழருக்கும் இடையில் மிக நீண்டகாலமாக இடம்பெற்றுவந்துள்ள இனமோதலானது  முஸ்லிம்கள் பக்கம் திரும்பி அவர்களையும் தாக்கி சென்றுள்ளது.

இதன் வரலாற்றினைப் பார்க்கின்ற போதுää பாரிய வரலாற்றினை ஈழத்துப் பிரச்சினை கொண்டுள்ளதனை அவதானிக்கலாம். போர்த்துக்கேயர் இலங்கையை ஆக்கிரமித்த பொழுது இலங்கையிலுள்ள வளங்களைப் பறிமுதல் செய்து தன்னுடைய நாடுகளுக்கு அனுப்பிவைத்தனர். இவ்வாறு இலங்கை வளங்களை சுரண்டும்பொழுது மக்கள் தமக்கு எதிராக திரும்புவதை கண்டு மக்களுக்கு மத்தியில் பிரச்சினை உருவாக்க வேண்டும் என்று எண்ணிக் காய்நகர்த்தத் தொடங்கினர். இதன் விளைவால்ää 1921ஆம் ஆண்டு சீர்திருத்தத்தின் மூலமாகவே இனப் பிரச்சினையின் ஆரம்ப அடித்தளம் உருவாக்கப்படுகின்றது. அதாவதுää மெனிங் அரசியல் திட்டத்திற்கு முந்திய அரசியல் சீர்திருத்தத்தில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் சம உரிமையான அரசியல் பங்கு வழங்கப்பட்டது. ஆனால் மெனிங் சீர்திருத்தம் சிங்களவர்களுக்கு அதிகமான முன்னுரிமையும் தமிழர்களுக்கு குறைவான முன்னுரிமையுமான அரசியல் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தது. இதுவே இனப் பிரச்சினையின் அடிப்படையாக காணப்படுகிறது. தமிழ் சிங்களம் இரு தலைவர்களிடையே பிரச்சினை உருவாக்குவதில் மெனிங் மிகவும் அக்கறையாக இருந்தார். தமிழ்த் தலைவர் அருணாச்சலம் அவர்கள் தமிழர்களுக்கு சார்பாக குரல் கொடுத்தார். எனினும்ää அவருக்கு சரியான அரசியல் தந்திரம் தெரிந்திருக்கவில்லை. அதனால் அவருடைய கருத்துகளுக்கு மதிப்பு இருக்கவில்லை. ஒருபக்கம் போர்த்யதுக்கேயர் தமிழர்களுக்கு ஆதரவு வழங்குவது போன்று செயற்பட்டுää மறுபுறம் சிங்கள தலைவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் அரசியல் அமைப்புத் திட்டத்தை உருவாக்கினர். இவ்வாறு உருவாக்கப்பட்ட 1921ஆம் ஆண்டு அரசியல் அமைப்புத் திட்டம் சிங்களவர்களுக்கு திருப்தி அளிக்கவேää தமிழர்களுக்கு அதிருப்தி அளித்தது.

இதனைத் தொடர்ந்துவந்த டொனமூர் குழுவினரின் வருகையும் இனப் பிhச்சினைக்கு காரணமாக அமைந்தது. அதாவதுää மகாத்மா காந்தி இலங்கைக்கு வந்த பொழுது தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து அவரை வரவேற்றுää அவர் தங்கியிருந்த நாட்கள் எல்லாம் அனைவரும் இணைந்தே செயல்பட்டனர். இதனை கண்ட போர்த்துக்கேயர் இரு இனங்களும் இணைந்து விடும் என்ற காரணத்தினாலும் தன்னுடைய குறிக்கோளை நிலை நாட்ட முடியாது என்ற சந்தர்ப்பத்திலும் டொடனமூர் மூலமாக இனப்பிரச்சினையைத் தூண்டிவிட்டனர். இதனால் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இச்சந்தர்ப்பத்தில் இந்தியா இலங்கைக்கு உதவி செய்வதன் மூலமாக இந்தியாவுடன் இலங்கை இணைவதற்குரிய அறிகுறிகள் தென்பட்டன. இச்சூழலை அவதானித்த டொனமூர்க் குழுவினர் அதனை தடுக்கும் முகமாக சிங்களவரை தம்பக்கம் வென்றெடுத்து தமிழர்களுக்கு பாதகமானதும் சிங்களவர்களுக்கு சாதகமான அரசியலமைப்பு திட்டத்தினை உருவாக்கினர். ஒருபுறம் தமிழர்களின் உரிமைகளை முற்றுமுழுதாக பறித்த பிரித்தானியர்கள் மறுபுறம் தமிழர்கள் மீது நல்ல அபிப்பிராயம் வைத்திருக்கக் கூடியவாறும் நடந்து கொண்டனர். இவ்வாறு அவர்கள் நல்ல முறையில் நடக்கää சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்குமான இனப்பூசல்கள் ஆரம்பமாகின.

இவ்வாறு போர்த்துக்கேயர் விதைத்த இனப்பகை மக்கள் மத்தியில் கனன்று கொண்டிருக்கும் பொழுதே 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்தது. சுதந்திரத்திற்குப் பின்னர் ஒற்றை ஆட்சி தொடர்ந்தமையினால் பெரும்பான்மையான சிங்களவர்களின் மேலாதிக்கம்  ஏற்பட்டது. இதனால் இனமுரண்பாடு மேலும் வளரத் தொடங்கியது. 1956க்குப் பின்னரான காலப்பகுதியில் தொடர்ந்தும் நாடு முழுவதும் தமிழினத்தின் மீது சிங்கள இனவாதம் கண் மூக்கு பாராமல் கட்டவிழ்த்து விடப்பட்டது. இதற்கு அரசாங்கத்தலைவர்களும் பௌத்த மத தலைவர்களும் ஆதரவும் அனுசரணை வழங்கி ஒரு பெரும் இன அழிப்பை நோக்கி அழைத்து வந்தனர். ஆட்சியாளர்களின் சிங்கள குடியேற்றங்கள்ää மொழி உரிமைப் பறிப்புää உயர்கல்வியில் தரப்படுத்தப்படல் போன்ற பல்வேறு ஒடுக்கு முறைகளால் தமிழர்கள் பாதிக்கப்பட்டனர். முரண்பாடு ஆயுதப் போராட்டமாக மாறியது. இதனைத் தூண்டிவிடும் விதமாக யாழ்ப்பாணத்தில் சிங்கள போலீசார் ஒருவரின் கொலை சம்பவம் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து போராட்டங்களும் யுத்தங்களும் ஆக்ரோஷமடையத் தொடங்கின. யாழ்ப்பாணத்தில் தமிழ் விடுதலைப் புலிகள் இனக்குழு தோற்றம் பெற்றது. தமிழ் இனம் தன் உரிமை மீட்க அரசியல் ரீதியாக வென்றுவிடலாம் என நினைத்த போது சில அரசியல் வாதிகளின் இனவாத அரசியல் தமிழ் இனத்தை தமிழ் ஈழ தனி நாட்டுக் கோரிக்கைக்கு இட்டுச் சென்றது. இதனை ஒட்டி 1976இல் தமிழ்ப் புலிகள் அமைப்பின் பெயர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமாக மாறிää விடுதலை புலிகளுக்கு அரசாங்கத்திற்குமிடையில் பிரச்சினை ஏற்பட்டது. இதில் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டனர். இவ்வாறே சிங்கள தமிழர் இனப்பிரச்சினை முஸ்லிம்களின் பக்கம் திரும்பிää  பின்னர் தமிழர் - முஸ்லிம் இனப்பிhச்சினையாக வளர்ச்சியடைந்தது. இவ்வாறு தோன்றிய தமிழர் - முஸ்லிம் இனமுரண்பாட்டின் அகவெளிப்பாட்டை நோக்குமாயின்ää

வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில்ää தமிழ்க் கிராமங்களும் முஸ்லிம் கிராமங்களும் ஒரு தொடராக இல்லாது ஒன்றுடன் ஒன்று கலந்து காணப்பட்டன. முஸ்லிம்கள் உரிமை கொண்டுள்ள விவசாய நிலங்களில் பெரும்பாலானவை தமிழர்களின் கிராமங்களை அடுத்தே காணப்படுகின்றன. குடிசனப்பெருக்கம் காரணமாக குடியிருப்புக்காணி நிலம் போதாதிருப்பதும்; விஸ்தரிப்புக்கான இடம் இல்லாதிருப்பதும்ää கிழக்கு மாகாண முஸ்லிம்கள் எதிர்நோக்கும் ஒரு பாரிய பிரச்சனையாகும். நிலப்பற்றாக்குறைப் பிரச்சனை தீவிரமடைந்தமையால் தங்களது பகுதிகளும் வியாபிப்புக்கு உட்படுத்தப்படலாம் அல்லது ஆக்கரமிக்கப்படலாம் என்ற அச்சம் இரு சமூகங்களுக்கிடையேயும் சந்தேகத்தையும் நெருக்கடியையும் அதிகரிக்கச் செய்திருந்தது. இதுகுறித்து சமூகப்ää பொருளாதார நிலைமை காரணமாக இரு சமூகங்களுக்குமிடையே புதிய விதிமுறைகள் தோன்றலாயின. இவ்விதிகளும் கட்டுப்பாடுகளும் பல நூற்றாண்டுகாலமாக ஒற்றுமையாக வாழ்ந்து வந்த இரு சமூகங்களும்  தமது தனித்துவத்தையும் இனத்துவ உரிமைகளையும் பிரத்தியேகமாகப் பேணி பாதுகாக்க முனைந்து நிற்பதைத் தெட்டத் தெளிவாக எடுத்துக்காட்டின.

வடக்கு கிழக்கு மாகாண முஸ்லிம்களது முந்திய தலைமுறைகளின் தொழில் பெரும்பாலும் விவசாயமாக இருந்ததுடன்ää சிறிதளவு மீன்பிடியுடனும் வியாபாரத்துடனும் தொடர்புடையதாகவே இருந்தது. இலவச கல்விமுறையினதும் நெல்லுக்கான உத்தரவாத விலைத்திட்டதினதும் அறிமுகங்களின் பின்னர் கிழக்கு மாகாண முஸ்லிம்களது கல்வி நிலைமையும் பொருளாதார நிலையும் கணிசமான அளவு முன்னேற்றம் கண்டன. முஸ்லிம்களுக்களிடையே பல்கலைக்கழகப் பட்டதாரிகள்ää நடுத்தர அரச உத்தியோகத்தர்கள்; டாக்டர்கள்ää பொறியியலாளர்கள்ää கணக்காளர்கள்ää சட்டவல்லுனர்கள்ää தொழில் நுட்பவியலாளர்கள் என்போரின் எண்ணிக்கை அதிகரித்தது. குறிப்பாக ஆசிரியர்கள் தொகை இலங்கையின் ஏனைய முஸ்லிம் பகுதிகளை விட கிழக்கு மாகாணத்தில் அதிகரித்தமையினை புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. சுருக்கமாகச் சொல்லப்போனால்ää முஸ்லிம்களுக்கான புத்திஜீவித்துவம் கிழக்கு மாகாணத்திற்கு இடம் பெயர்ந்து மாற்றம் பெற்றுள்ளதாகக் கூறலாம்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில்ää வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களும் முஸ்லிம்களும் அமைதியுடனும்; சமாதானத்துடனும் ஒத்திணங்கி வாழ்கின்றனர் என்று பரவலாகக் கூறப்படும் கருத்துக்கு முரணான வகையில்ää குறிப்பாக 1948இல் இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் தமிழர்களிடையே முஸ்லிம்கள் பற்றிய எதிர்ப்புணர்வும் பகைமையும் கூடுதலாக வளர்ந்து வந்துள்ளது. தங்களை விட முஸ்லிம்கள் பொருளாதார ரீதியில் வசதியுடனும் கல்வியில் முன்னேறிக்கொண்டும் இருக்கிறார்கள் என எண்ணினர். மேலும்ää முஸ்லிம் தலைவர்கள் நாட்டுப்பிரிவினைக் கோரிக்கைகள் என்வற்றிற்கு அனுசரணையாக இல்லாதிருந்த காரணத்தின் பலனாகää முஸ்லிம்கள் ஆட்சியிலிருக்கும் அரசாங்கங்களின் நல்லெண்ணத்தைப் பெற்றிருந்த வேளையில்ää தமிழர்கள் தமக்கென தனியான தமிழ் ஈழம் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையிலான போராட்ட நடவடிக்கைளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்தமையினால் அப்போது ஆட்சி செய்த அரசாங்கங்களிலிருந்து தம்மை அன்னியப்படுத்திக் கொண்டனர். தமிழர்களது தனிநாட்டுக் கோரிக்கைகளுக்கு அனுதாபம் காட்டாத காரணத்தினால் தமக்கிடையே தோன்றியுள்ள ஒரு ஆபத்து என தமிழர்கள் கருதினர்.

வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழர்களும் முஸ்லிம்களும் புவியியல் ரீதியாக அருகருகே வாழ்வதாலும்ää பொருளாதார அடிப்படையில் ஒருவரில் ஒருவர் தங்கியிருப்பதாலும் பல சந்தர்ப்பங்களில் மிகவும் அற்பமான விடயங்களில் கூட பிணக்குகள் ஏற்பட்டு வந்திருக்கின்றன. உதாரணமாக தமிழ் பகுதிகளை கடந்து தங்கள் வயல்களுக்கு செல்லும் முஸ்லிம்கள் துன்புறுத்தப்படுதல்ää வாகனங்கள் கடத்தப்படுதல்ää முஸ்லிம்களுக்குரிய நெல்ää கால்நடைகளைக் கொள்ளையிடுதல் போன்ற சம்பவங்கள் இடம்பெற்றன. இதுவே காலப்போக்கில் தமிழ்ää முஸ்லிம் இனப்; பிரச்சினையை மேலும் மோசமடையச்செய்தது.

இலங்கையில் 1983ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரத்தின் பின்னர் வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள் முஸ்லிம்கள் மீது கொண்டுள்ள எதிர்ப்புணர்வுகளையும் வெறுப்பையும் வெளிப்படையாகன் காட்ட முற்பட்டனர். முஸ்லிம்கள்ää தமிழர்களுடைய நிலங்களை அபகரிப்பவர்கள்ää தமிழ் தொழிலாளர்களைச் சுரண்டுபவர்கள்ää பல்கலைக்கழகங்கள்ää தொழில் நுட்பகல்லூரிகளில் தங்கள் வாய்ப்புக்களை இல்லாமலாக்குபவர்கள் எனப் பகிரங்கமாகத் தூசிக்கப்பட்டனர். நிர்வாக ரீதியில் தமிழர்களது உள்ளுராட்சி எல்லைக்குள் அமைந்த முஸ்லிம் கிராமங்களுக்குப் பொது வசதிகள் மறுக்கப்பட்டன. முஸ்லிம் பகுதிகளிலிருந்து தமிழ்போராளிகளால் துப்பாக்கி முனையில் கப்பம் அறவிடப்பட்டுää நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. வாகனங்கள்ää விவசாய உபகரணங்கள் என்பன அபகரிக்கப்பட்டன.

இத்தகைய சம்பவங்கள் நிம்மதியற்ற நிலைமையை முஸ்லிம்களிடையே தோற்றுவித்ததுடன் தமிழர்களது தனிநாட்டுக் கோரிக்கையை சாத்தியமாக்கும் பட்சத்தில் அவர்களுடன் அரசியல் பொருளாதார அதிகாரங்களில்; நீதி நியாயப்படி பகிர்ந்து கொள்ளக் கூடிய சாத்தியம் ஏற்படப் போவதில்லை என்ற உணர்வும் முஸ்லிம்களிடையே வலுப்பெறத் தொடங்கின.

1985ஆம் ஆண்டின் ஆரம்ப காலப்பகுதியில் போராளிகளின் அதிகரித்த நடவடிக்கைகளுடன் தமிழர்கள் முஸ்லிம்கள் மீது கொண்டிருந்த எதிர்ப்புணர்வும் மேலும் உக்கிரமான மாற்றங்களைப் பெற்றது. இதன்விளைவாகää தமிழ் இயக்கத்தவர்கள் அச்சுறுத்திப் பணம் பறித்தல்ää துப்பாக்கி முனையிலான ஆட்கடத்தல்ää பலாத்காரம் போன்ற செயல்கள் ஆங்காங்கே பரவாலாக இடம்பெறலாயின. இவ்வாறான நிலைமைகளை தணிப்பதற்கும் ஆயுதம் ஏந்தி முஸ்லிகள்ää தமிழர்களுக்கு எதிராக போராட முற்படாத சாத்வீக வழிகளில் பலதரப்பட்ட தற்காப்பு முயற்சிகளில் ஈடுபட்டனர். இதில் தமிழ் ஆயுதவாதிகள் ஒரு முஸ்லிம் வியாபாரியிடம் கொள்ளையடிக்கும் வேளையில் அவரது குடும்பத்தினரை பணயக்கைதியாக எடுத்துச் செல்ல முற்பட்டனர். இந்த அடாவடித்தனத்தால் ஆத்திரமடைந்த முஸ்லிம்கள் தமது எதிர்ப்பினை ஒரு அமைதியான ஹர்த்தால் மூலம் எடுத்துக்காட்டினார்கள். 1985 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ஆம் திகதியிலிருந்து 12ஆம் திகதி வரை இந்த ஹர்த்தால் இடம்பெற்றது. அதன் பின் மீண்டும் எல்லா வியாபார நிலையங்களும் 13 ஆம் திகதி திறக்கப்பட்டது.

1985 இல் ஏப்ரல் மாதம் 14 ஆம்திகதி மாலை 9 மணிக்கு அக்கரைப்பற்றிலிருந்து 10 மைல் தொலையிலுள்ள காரைதீவு என்னும் தமிழ் கிராமத்திலிருந்து 13 தமிழ் ஆயுதவாதிகளைக் கொண்ட ஒரு கோஷ்டிää ஜீப் வண்டி ஒன்றில் அக்கரைப்பற்றுக்குள் வேகமாக நுழைந்தது. ஆயுதபாணிகளாக வந்த இவர்கள் சரமாரியாக துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்தனர். அக்கரைப்பற்று நகரப்பள்ளிவாசலுக்குள் முதல் வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. பிரதான சந்தை சந்தியை நோக்கி விரைந்த ஜீப் வண்டி வெகு வேகமாக ஓட்டப்பட்டதன் காரணமாக சந்தி வளைவில் தடம் புரண்டது. பிரயாணம் செய்த பலர் விபத்தில் மரணமடைய எஞ்சியோர் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்திலிருந்து ஆரம்பித்த தமிழ் முஸ்லீம் இனக்கலவரம்ää கல்முனைää காத்தான்குடிää ஏறாவ10ர்ää ஓட்டமாவடிää வாழைச்சேனைää மூதூர்ää கிண்ணியா ஆகிய இடங்களுக்கும் வேகமாகப் பரவியது. ஆயுதம் தாங்கியவர்களால் பல நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டனர். முஸ்லிம்களினதும் தமிழர்களினதும் பல கோடி ரூபாய்கள் பெறுமதியான சொத்துக்கள் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. இந்த 1985 ஏப்ரல் கலவரங்களின்; போதுதான் கிழக்கு மாகாணத்தில் முதல் தடவையாக தமிழர்களும் முஸ்லிம்களும் இன ரீதியாக ஒருவரோடு ஒருவர் மிக மோசமாக மோதிக் கொண்டனர்.

1985 ஆம் ஆண்டு அக்டோபர் 28 ஆம் திகதி மூதூரில் கலீபா கலீல் என்னும் முஸ்லிம் இளைஞர் தனது வீட்டிலிருந்து தமிழ் ஆயுதவாதிகளினால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு மின்கம்பத்தில் கட்டப்பட்டார். இதன் காரணமாக 34 தமிழ் வீடுகள் உடைக்கப்பட்டன. தமிழ்தரப்பு ஆத்திரம் கொண்டு மூன்று முஸ்லிம்களையும் கொன்று 324 வீடுகளையும் உடைத்தனர்ää 25 கடைகளும் எரிக்கப்பட்டன.

1988 மார்ச் 6 ஆம் திகதி காத்தான்குடி நகரசபை முன்னாள் தலைவர் அல்ஹாஜ் அஹமட்லெப்பே கொல்லப்பட்டார். 1990ஆம் ஆண்டு பள்ளியில் தொழுது கொண்டிருக்கையில் 106 முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டனர். அதே வாரத்தில் மக்கா ஹஜ் யாத்திரை முடித்துவிட்டு வீடு திரும்பிய ஹாஜிகள் உட்பட 86 முஸ்லிம்களும் களுவாஞ்சிகுடியில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

இரண்டு வாரங்களுக்குப் பின்னர் ஏறாவ10ரில் சத்தாம் ஹ_சைன் கிராமம் தமிழ் ஆயுதவாதிகளினால் தாக்கப்படடு 1000க்கும் கூடுதலான முஸ்லிம் ஆண்ää பெண்ää குழந்தைகள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.

1989 நவம்பர் தேசிய இராணுவத்தினரால் காரைதீவில் 24 முஸ்லிம் பொலிஸ் ரிசேவ் உத்தியோகத்தர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1985 ஆண்டு மேமாதம் தமிழ் முஸ்லிம் கலவரம் ஏற்பட்டு ஏறக்குறைய ஒரு மாதத்தின் பின் மூதூரில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட பாரிய தாக்குதலின் விளைவாக தமிழர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டனர். இந்த சிக்கலான காலகட்டத்தில் தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டியவர்கள் முஸ்லிம்களே. ஆயினும்ää முஸ்லிம்களினால் காட்டப்பட்ட இந்த பரிவு தமிழர் ஆயுத அமைப்புக்களின் போக்கில் முஸலிம்களைப் பொறுத்தமட்டில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

தமிழ் ஆயுதவாதிகள் மூதூர் முஸ்லிம் உதவி அரசாங்க அதிபர் ஜனாப் ஹபீப் முஹம்மதை 1997 செப்ரெம்பர் 3ஆம் திகதி படுகொலை செய்தனர். இச் சம்பவத்திற்கான தமது எதிர்ப்பை கிழக்கு மாகாணத்தில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் பகிரங்கமாகவே வெளிப்படுத்தினர். இந்த அநுதாப வெளிப்படுத்தலினால் ஆத்திரமுற்ற தமிழ் ஆயுதவாதிகள் 1987 செப்ரெம்பர் 10 ஆம் திகதி கல்முனையில் முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகள்ää வீடுகள் என்பவற்றைக் கொள்ளையடித்து எரித்தனர். இந்தத் தாக்குதல்கள் நடைபெறும் போது இந்திய அமைதிகாக்கும் படையும் அங்கிருந்தது. தமிழ் ஆயுதவாதிகளினால் அழிக்கப்பட்ட முஸ்லிம்களின் சொத்துக்கள் சுமார் 6 கோடியே 70 இலட்சம்.

1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 12 ஆம் திகதி மூதூரில் ஆயுதமேந்திய பிரிவினைவாதிகளினால் முஸ்லிம்கள் மீது பாரிய தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இத் தாக்குதலின்போது இந்திய அமைதி காக்கும் படையினரும் அங்கிருந்தனர். இத்தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மூதூரிலிருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான முஸ்லிம் அகதிகளின் பராமரிப்பு வேலைகளில் துரிதமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையிலேயே முன்னாள் மூதூர் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான ஜனாப். அப்துல் மஜீத் 1987 நவம்பர் 17 ஆம் திகதி கொலை செய்யப்பட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு பிரதான முஸ்லிம் பட்டணமாகிய ஓட்டமாவடியில் 1987 டிசம்பரில் இரண்டாம் திதகி இந்திய அமைதிகாக்கும் படையினருக்கும் தமிழ் ஆயுததாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் போது 26 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுடன் 200 முஸ்லிம்கள் காயப்படுத்தப்பட்டனர். முஸ்லிம்களுக்கு சொந்தமான ஏராளமான வீடுகளும் கடைகளும் எரிக்கப்பட்டனää அழிக்கப்பட்டன. முஸ்லிம் பெண்கள் பலர் இந்திய அமைதிப்படை வீரர்களால் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டன. 14ää000 முஸ்லிம்கள் அகதிகளாக கிழக்கு மாகாணத்திலிருந்து தப்பி ஓடிää வட மத்திய நகரமான பொலன்னறுவையில் தஞ்சம் புகுந்தனர்.

1987ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி 30ää000 முஸ்லிம்களைக் கொண்ட மட்டக்களப்பில் மிகப் பிரதான முஸ்லிம் நகரமான காத்தான்குடி ஆயுதமேந்தியவர்களினால் தாக்கப்பட்டது. இந்த கொடூர தாக்குதலின் போது 60 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 200க்கு மேற்பட்டோர் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுக்குள்ளாகினர். 20 கோடி பெறுமதிக்கும் கூடுதலான சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டும் எரிக்கப்படும் நாசம் செய்யப்பட்டன. இவ்வனர்த்தங்கள் யாவும் இந்திய அமைதி காக்கும் படையினர் இங்கு நிலை கொண்டிருந்த போதே நடைபெற்றன. இரண்டே இரண்டு நாட்கள் தாக்குதல் நடைபெற்ற போதிலும் காத்தான்குடி மீது முற்றுகையிடப்பட்டுää 1988 ஜனவரியிலிருந்து சகல போக்குவாத்துக்களும் தமிழ் ஆயுதவாதிகளினால் தடைசெய்யப்பட்டன.

1992 ஒக்டோபர் மாதம் தமிழ்புலிகள் பொலன்நறுவை மாவட்டத்தில் அக்பர்புரம்ää அஹமட்புரம்ää பள்ளியகொடல்ல ஆகிய கிராமங்களைத் தாக்கி 200க்கும் கூடுதலான முஸ்லிம்களை படுகொலை செய்தனர்.

1990ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் யாருமே எதிர்பாராத வகையில் சடுதியாக வடமாகாணம முஸ்லிம் கிராமங்களில் தமிழ் புலிகள் ஒலி பெருக்கி மூலம் முஸ்லிம்கள் தமது வீடுகளையும் உடைமைகளையும் விட்டுவிட்டு 48 மணித்தியாலங்களுக்குள் வெளியேற வேண்டும் அப்படி வெளியேறாவிட்டால் கொல்லப்படுவார்கள் என்று அறிவித்தனர். இவ்வறிவித்தல் எருக்கலம்பிட்டியில் ஒக்ரோபர் 24 ஆம் திகதியும் விடத்தல் தீவு முசலிப் பகுதிகளில் ஒக்ரோபர் 25 ஆம் திகதியும் யாழ்ப்பாண நகரில் 29ஆம் திகதியும் அறிவிக்கப்படடது.

இதனைத் தொடர்நது முஸ்லிம்களின் நகைகளையும் பெறுமதியான பொருட்களையும் தமிழ் புலிகள் அபகரித்தனர். எதிர்த்த முஸலிம்களை தமிழ் ஆயுதவாதிகள் மிக மோசமாகத் தாக்கி தண்டித்தனர். வடமாகாண முஸ்லிம்கள் நிர்க்கதியான நிலையில் குடும்பம் குடும்பமாக சொல்லொணாத் துயராத்தோடு 100க்கு மேற்பட்ட முஸ்லிம் கிராமங்களிலிருந்து தமிழர்களால் விரட்டியடிக்கப்பட்டனர். இவ்வாறு இனப்பிரச்சினை மூர்க்கம் பெற்றுக்கொண்டிருக்கும் போதுää 1990 மார்ச் மாதம் 1200 இராணுவ வீரர்களை இழந்த நிலையில் இந்திய அமைதி காக்கும் படையும் இலங்கையிலிருந்து வெளியேறியது.

இதன்படிää 1990ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி தமிழ் ஆயுதவாதிகளினால் நடாத்தப்பட்ட இன சுத்திகரிப்பு நடவடிக்கையினால் வடமாகாணம் முழுவதும் முஸ்லிம்களற்ற பிரதேசமாக்கப்பட்டது. இப்பெரும் துயரத்தையும் இழப்பையும் தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டம் முஸ்லிம்கள் மீது சுமத்தியுள்ளது. இவற்றிலிருந்து வடக்கு கிழக்கு முஸ்லிம் மக்கள் தங்களை பாதுகாத்துகொள்ள வேண்டிய அhசியல் தேவையையும் உணர்ந்து விட்டார்கள்.

இதற்கிடையில்ää முஸ்லிம்களுக்கான அரசியல் கட்சியாக ‘முஸ்லிம் காங்கிரஸ்;’ எழுச்சி பெற்று வந்தது. அதாவதுää ஆளுங்கட்சியிலிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய்பேச முடியாதிருந்தந்த நிலையில்ää எம். எச். எம். அஷ்ரப் அவர்களின் தலைமையில் முஸ்லிம் காங்கிரஸ் எனும் அரசியல்க்கட்சி தோற்றம்பெற்றது. தொடர்ந்து இடம்பெற்று வந்த இனமோதலினால் முஸ்லிம்களின் அரசியல்ää எதிர்காலம் மழுங்கடிக்கப்பட்டுவிடும் என்பதனை தெளிவாக உணர்ந்த அஷ்ரப் தமிழ் பேசும் மக்களுக்காக அதிலும் குறிப்பாக முஸ்லிம்களுக்காக அவர்களின் அரசியல் தனித்துவத்தை நிலைநிறுத்துவதற்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தினை பல புத்திஜீவிகளுடன் ஒன்றிணைந்து 1981இல் உருவாக்கினார்.

இதன் மூலம் அவர் முஸ்லிம் மக்களின் அரசியல் உணர்வினை தட்டி எழுப்பினார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு விருட்சமாக வளர ஆரம்பித்தது. இதற்கிடையில்ää கல்முனையில் ஏற்பட்ட தமிழ் முஸ்லிம் இன முhண்பாடு அஷ்ரபைக் கொழும்பு நோக்கி குடிபெயரச் செய்தது. காலங்கள் கடந்தனää கொழும்பிலிருந்து கொண்டு முஸ்லிம்களின் அரசியல் தொடர்பில் பல்வேறு விதமாக சிந்தித்தார். சவ10தியிலிருந்து வந்த எம். ரி. ஹசன் அலி மற்றும் எம். ஐ. எம். இஸ்மாயில் ஆகியோர் அஷ்ரபை சந்தித்து முஸ்லிம்களின் அரசியல் தொடர்பில் கலந்துரையாடினர். பின்னர் அதில் மருதூர்கனியும் இணைந்து கொண்டார்.

முடிவாகää 1986. 11. 29ஆம் திகதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு இயக்கமாக உருவாக்கப்பட்டு 1988. 02. 11ஆம் திகதி மரச்சின்னத்துடன் தேர்தல் ஆணையாளரால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக பிரகடனப்படுத்தப்பட்டது. இக்கட்சிக்கு முழு ஆதரவையும் வழங்கிய கிராமம் ஒலுவில். இது பெருமளவு பாமர மக்களைக் கொண்டது. இவர்கள் அஷ்ரபை ஒரு ஆதர்ஷ புருஷராகää ஒரு பெரிய ஹீரோவாக ஏற்றுக் கொண்டனர். இவர்களது ஆதர்வுடன்ää 1989ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 202ää016 வாக்குகளை இலங்கை முழுவதிலும் பெற்ற இக்கட்சி நான்கு ஆசனங்களுடன் பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்தது.

அதன் பின்னர்ää 1994. 03. 01 இல் கிழக்கில் பிரதேச சபைத் தேர்தல் இடம்பெற்றது. திகாமடுல்லை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஏதேனும் ஒரு பிரதேச சபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கரங்கிhஸ் தோல்வியை தழுவுமானால் தான் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தலைவர் அஷ்ரப் சபதம் கொண்டார். முடிவோ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சில பிரதேச சபைகளில் தோற்றது. அதனை அடுத்து அஷ்ரப் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

இவ்வாறானதொரு காலப்பகுதியைப் பின்புலமாகக் கொண்டு எழுந்ததே கொல்வதெழுதல் 90 எனும் நாவலாகும். இது தொடர்பாக இந்நூலாசிரியரான ஆர. எம். நௌஸாத் குறிப்பிடும் போதுää

மேற்படி ஒரு காலப்பகுதியை முஸ்லிம் எழுத்தாளர்கள் அடுத்த சந்தததியினருக்குக் கடத்தும் விதமாக அக் கொடுமைகளைக் கவிதைää சிறுகதைää நாடகம்ää நாவல் ஆகிய புனைவுகளாக வெளிப்படுத்திய வீதம் மிகக்குறைவு. போர்க்கால வெளியீடுகள் வருவதில் எத்தனையோ இடர்பாடுகள் இருந்தன. சரியான வெளியீட்டுத் தளம் கிடைக்கவில்லை. இந்நாவல் கூட 1990 காலப்பகுதியில் ‘வளவு நிறைஞ்ச நிலா’ எனும் தலைபபில் எழுதப்பட்டுள்ளபோதிலும் அது எந்த ஊடகத்திலும் வெளியிடப்பபடாமல் கையெழுத்துப் பிரதியாகவே இருந்தது. பின்னர் அக்கரைப்பற்று எம். பௌசர் என்பவரால் நடத்தப்பட்டு வந்த முஸ்லிம் குரல் பத்திரிகையில் சில சில மாற்றங்களுடன் ‘பள்ளிமுனைக் கிராமத்தின் கதை’ என்ற பெயரில் தொடர் கதையாக வெளிவந்தது. மேலும் சில மாற்றங்களுடன் 2013இல் தமிழ் நாடு காலச்சுவடு பத்திரிகை நிறுவனத்தினால் ‘கொல்வதெழுதுதல் 90’ என்ற பெயரில் பூரண நாவலாக வெளியிடப்பட்டது.”ஜ1

என்கிறார்.

 

3.2. உள்ளடக்கம்

3.2.1. அரசியல்

இலங்கை வரலாற்றில் ஆட்சியும் அதிகாரமும் அரசியலும் வரலாற்றின் தொடக்கத்திலிருந்து போராட்டத்தின் மூலமே பெறப்பட்டு வந்திருக்கிறது. விஜயனுக்கு பிறகான மன்னர்களின் இராச்சிய காலப் போராட்டங்கள்ää அதனைத் தொடர்ந்து போர்த்துக்கீசரின் ஆக்கிரமிப்புää அவர்களுடன் போராடி ஆட்சியைப் பிடித்த ஒல்லாந்தரின் ஆட்சிää அவர்களை விரட்டி பின் ஆட்சிக்கு வந்த பிரித்தானியர் என்று ஜனநாயகத்திற்கு முன்னரான ஆட்சிää அதிகாரம்ää அரசியல் என்பன போராட்டமாகவே அமைந்தது. ஜனநாயகமும் சுதந்திhமும் பெறப்பட்ட பின்னரான இலங்கையின் ஆட்சியிலும் அரசியலிலும் போராட்டத்தின் குணம் மாறாமலும் கொள்கை மாறாமலும் வரலாறு நெடுகிலும் அது தொடர்வதாகவே இருக்கிறது. இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஆட்சியாளர்கள் தான் மாறிக் கொண்டிருக்கின்றார்கள். போராட்டம் மாறவில்லை போராட்டத்தை தவிர்த்து இலங்கையின் அரசியல் வரலாற்றை யாரும் எழுதி விட முடியாது.

அதன்படி இலங்கை அரசியல் வரலாற்றின் 90 காலப்பகுதியை நோக்கும்போதுää இது இலங்கை மக்களின் போரியல் வாழ்வில் மிக துன்பியலான வரலாறாக இருந்தது. இலங்கை ராணுவம் மற்றும் அதிரடிப்படைää இந்திய அமைதிப்படைää விடுதலைப் புலிகள்ää தமிழ் தேசிய ராணுவம்ää உதிரி இயக்கங்கள்ää ஊர்காவல் படைகள்ää இனம் தெரியாத ஆயுததாரிகள்ää பாதாள உலகக் கோஷ்டிகள்ää என்று பற்பல ஆயுத குழுக்கள் ரணகளப்படுத்திக் கொண்டிருந்த காலம். இச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களை பாதுகாக்கவும் அவர்களுக்கு குரல் கொடுக்கவும் என எழுந்த அரசியல் கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் எழுச்சி பெற்று வந்தது. ஆளும் கட்சியிலிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய் பேச முடியாது மௌனிகளாக இருந்த நிலையில்ää எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களின் தலைமையில் முஸ்லிம் காங்கிரஸ் எனும் அரசியல் கட்சி தோற்றம் பெற்றது. தொடர்ந்து இடம்பெற்று வந்த இன மோதலினால் முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலம் மழுங்கடிக்கப்க்கப்பட்டு விடும் என்பதை தெளிவாக உணர்ந்த அஷ்ரப் தமிழ் பேசும் மக்களுக்காக அதிலும் குறிப்பாக முஸ்லிம்களுக்காக அவர்களின் அரசியல் தனித்துவத்தை நிலை நிறுத்துவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தினை பல புத்திஜீவிகளுடன் ஒன்றிணைந்து 1981 ஆம் ஆண்டு உருவாக்கினார். இதன் மூலம் அவர் முஸ்லிம் மக்களின் அரசியல் உணர்வினை தட்டி எழுப்பினார். 1986. 11. 29ஆம் திகதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு இயக்கமாக உருவாக்கப்பட்டுää 1988. 2. 11ஆம் திகதி மரச்சின்னத்துடன் தேர்தல் ஆணையாளரால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக பிரகடனப்படுத்தப்பட்டது. இவ்வாறு ஆரம்பித்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு மூலை முடுக்கெல்லாம் ஆதரவு திரளத் தொடங்கிய காலம் எனலாம்.

இதன் அடிப்படையில் 1990 ஆம் ஆண்டு போர்ச்சூழலும் அப் போர்க்காலத்துக்குள் பிரளயம் என பெருக்கெடுத்த அரசியலும்ää கிழக்கிலங்கையின் குக்கிராமமான பள்ளிமுனை என்னும் கிராமத்தில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்டதே ‘கொல்வதெழுதுதல் 90’ எனும் நாவலாகும்.

இலக்கிய உலகினுள் எழுகின்ற படைப்புக்களுள் அரசியல் கூறுகளை வடிவமைப்பாக கொண்டு இயங்குபவை நாவல்கள் தான். அதிலும் ஈழத்து சூழலினை பொறுத்தவரை மண் பற்றிய கதைகளும் மண் இழந்த மனிதர்களும் ஆயுதங்கள் பறித்த அடையாளங்களும் முன்னிலை வகிப்பதனை அவதானிக்க முடியும். இது ஒரு காலத்தில் அழிக்க முடியாத சாத்தியங்களாக பிரஸ்தாபிக்கப்படுவது வாசிப்பினதும் எழுத்தினதும் அரசியலாகும். மண் பற்றி பேசப்படுகின்ற சூழலில் அங்கு நிகழ்ந்திருக்கின்ற அரசியலினை மறுதலிக்க முடியாது. இலக்கியம் காலத்தின் காட்சிகளை பிரதிபலிக்கின்ற பெரும் பங்கினை கொண்டிருக்கின்றது என்பதெல்லாம் அக்காலத்தில் நிகழ்த்திய அரசியல் விளையாட்டுதான் என்பதை புரிந்து கொள்வது இக்கால நாவல்களின் சீரான வாசிப்பாகும். இவ்வகையில் மண்ணோடு கலந்த ஒரு பெரும் கட்சியினதும் அதனோடு இணைந்து முழங்கிய மக்களின் உணர்வுகளையும் மிக நுணுக்கமாக ‘கொல்வதெழுதல் 90’ எனும் இந்நாவலில் குறிப்பிட்டுள்ளது.

அதன்படிää இந்நாவலில் மக்கள் எழுச்சிக் குரலாக எழுந்த இஸ்லாமியக் கட்சிää அரசியல் தலைவன்ää தொண்டன்ää கட்சிப் பிரமுகர்கள்ää ஊர் மக்கள்ää எதிர்க்கட்சிää அரசியலில் இடம்பெறும் தில்லுமுல்லுகள்ää தேர்தல் காலச்சூடுகள் என அரசியல் மயப்பட்ட விடயங்கள்ää அக்கால மக்களின் வாழ்வியலில் பல்வேறு தாக்கத்தினை ஏற்படுத்தியதாக காணப்படுகிறது. இவற்றை நோக்குவோமாயின்ää

3.2.1.1. அரசியல் கட்சி

இந்நாவலின் ஆரம்பமே ஒரு நுட்பமான அரசியல் வாசகத்துடனே ஆரம்பமாகின்றது. இதனை சொல்லும் போதே இலங்கையினுடைய முஸ்லிம்கள்ää இதன் அரசியலை புரிந்து கொள்வார்கள்.

“…போராளிகளே புறப்படுங்கள்! ஓரத்தில் நின்று கொண்டு ஓய்வெடுக்க நேரமில்லை… ஆலமரமாய் நம் சமூகம் வாழ வேண்டும்… அதை வாழ்விக்க புறப்படுங்கள்…”ஜ2

இது நிஜத்திலேயே முஸ்லிம் காங்கிரஸின் ஒளிவாசமாக இருந்தது. இவ் வாசகத்துடனும் இஸ்லாமிய மக்களின் தனித்துவத்தை முதன்மைப்படுத்தும் கட்சியான இஸ்லாமிய கட்சியின் கூட்டத்துடனும் நாவல் ஆரம்பமாகிறது.

அரசியற் கட்சி எனும் போதுää ஓர் இணைந்த அரசியல் சமூகமாக செயற்படுவதும்ää ஓரளவிற்கு நெறிப்படுத்தப்பட்டதுமான ஓர் அமைப்பு என்று குறிப்பிடலாம். இவ்வாறான ஒரு அமைப்பாகவே இந்நாவலில் இடம்பெறும் இஸ்லாமிய கட்சி காணப்படுகின்றது. முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் தங்களுக்கான தனியான அரசியல் கட்சியினூடாக அரசியலை முன்னெடுத்துச் செல்வதைத் தவிர்த்து பெரும்பாண்மை இனத்தவர்களுடன் இனைந்த வகையிலேயே காலங் காலமாக முஸ்லிம்கள் அரசியலில் ஈடுபட்டிருந்த போதிலும் வன்முறைசார் இனமுரண்பாட்டினதும் உள்நாட்டுப் போரினது தாக்கங்களும் சிங்கள மற்றும் தமிழ் அரசியல் தலைமைத்துவங்களால் முஸ்லிம்கள் கைவிடப்பட்ட நிலையில்ää முஸ்லிம்களுக்கான முதலாவது தனித்துவக் கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டது. அது ஆரம்பித்து மிகக் குறுகிய காலத்தினுள் தேர்தல் அரசியலில் செல்வாக்கு செலுத்த தொடங்கியதுடன் தேசிய அரசியலை தீர்மானிக்கும் சக்தியாகவும் எழுச்சி பெறலானது. இதனால் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்திருந்த மக்கள் மீண்டும் அரசியலை நம்ப ஆரம்பித்தனர்.

இஸ்லாமிய கட்சி பற்றி குறிப்பிடும் போதுää தியாக நிலத்தில் இரத்த வித்து வளர்ந்த விருட்சம் நமது கட்சி! இதில் சுயலாப அறுவடைக்கு வழியில்லை. வியாபாரிகளுக்கு இதில் இடமில்லை. தரகர்களுக்கு இது தளமில்லை. இது புதிய போராளிகளின் புகலிடம். ஆளுமை மிக்க அடுத்த சந்ததியின் அமைவிடம். மொத்தமாக இது முஸ்லிம்களின் பலம் அசைக்க முடியாத பலம்! என்பதன் மூலம் அன்றைய இஸ்லாமிய கட்சியின் நிலை புலப்படுத்தப்படுகிறது.  

இக் கட்சியின் மூலம் தமது தனித்துவம் பாதுகாக்கப்படும் சிறந்த ஆட்சி மாற்றம் இடம்பெறும் என அக்கால மக்கள் ஆணித்தரமாக நம்பினர். தமது முழு ஆதரவையும் வழங்கி அக்கட்சியின் வெற்றிக்கு பக்கபலமாய் நின்றனர். அன்றைய காலத்தில் அரசியல் கட்சிக்கூட்டங்கள் இடம்பெறும் சூழல் அழகுற வெளிக்காட்டப்பட்டுதுடன் அம்மக்களின் மனநிலையும் அதனூடே வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை பார்க்கின்ற போதுää

பூமரச் சந்தையின் தொடக்கத்திலேயே எங்கு பார்த்தாலும் ‘இலங்கை இஸ்லாமியக் கட்சி எழுச்சிப் பெருவிழா 1. 2. 1990’ என்று மாபெரிய தோரணம் தன் உறுதியான ஆதரவை தெரிவித்தாடியது… எங்கும் பரபரப்பு பூசியிருந்தது. முச்சக்கர வண்டி மூன்றிலும் சந்தியிலிருந்து டீக்கடை நெய்நாரின் ‘சதாம் ஹோட்ட’லிலும் சுவர்களிலும் பூமரத்திலும் இஸ்லாமிய கட்சி தலைவர் ஒட்டப்பட்டும் வசீகரமாக புன்முறுவலுடன் மக்களைப் பார்த்து கொண்டிருந்தார்.

ஒரே அமைப்பின் கீழ் ஒன்றுபடுவோம்’

ஓர் அணி திரள்வோம்! பேரணி ஆவோம்’

பூமாத்தின் பாரிய கிளைகளில்ää ‘தேசிய தலைவரே வருக!’ என்று தங்க நிற பதாகைகள் மினுமினுத்தது. பள்ளிமுனைக்கு நுழையும் பாதை முகப்பில் பிரம்மாண்ட பள்ளிவாயில் உப தோரணம்ää மினாரா வடிவில் உயரே குவிந்திருந்தது. உச்சியில் தலைவர் பத்தடி உயரத்தில் கைகாட்டினார். கீழே ‘ஒரே மதம்! ஒரே கட்சி!! ஒரே தலைமை!!’ அடுத்த வரியில் ‘தனித்துவ தலைவரே வருக!’.”ஜ3

மூன்று இழுவைப் பெட்டிகள் நிறுத்தப்பட்டு அலங்கார மேடைää மேலே மஞ்சள்ää பச்சை வர்ணக்கூரைää உள்ளே ஜகினா பளபளப்புகள்ää சோடனைகள்… மின்விளக்குகள்ää தலைவரின் பெரிய படம்ää ‘அஞ்சியும் வாழோம் கெஞ்சியும் வாழோம்’ää ‘தேசிய தலைவரே வருக! பா. நோ. கூ சங்கம் பள்ளிமுனை…’ மேடையில் பல நாற்காலிகள் தலைவருக்கு மட்டும் பள்ளித் தலைவர் செய்லான் ஹாஜியார் வீட்டு சோபா… ஒலிபெருக்கிகள் தென்னை மரங்களில் இருந்து கட்சி கீதம் (ஆயிரம் ஆயிரம் கைகள் கோர்ப்போம்… அகிலத்தை அதனால் வெல்வோம்… அல்லாஹ{ அக்பர்…!)”ஜ4

என அக்கால அரசியல் கட்சி கூட்டங்கள் நடைபெறும் விதம் அவ்வாறே சித்தரிக்கப்பட்டுள்ளது. இதன் வாசகம் ஒவ்வொன்றும்ää கிழக்கிலே மையமிட்டுää முகாமிட்டுää வாக்குப் பெற்றுää அரசையே தீர்மானிக்கும் அளவு தகமை பெற்ற இஸ்லாமி கட்சி பற்றிய புரிதலை ஏற்படுத்துகிறது.

3.2.1.2. தொண்டன்

இவ்வாறு அரசியலின் அடிப்படையில் ஆரம்பிக்கின்ற இந்நாவலானதுää ஒரு சாதாரணமான தொண்டன்ää அன்று நிலவிய அரசியல் சூழ்நிலையால் அசாதாரணமான ஒருவனாகும் படிநிலைகளை குறிப்பிடுவதாக அமைந்துள்ளது. அதாவதுää அன்று முஸ்லிம்களின் குரலாகää ‘இஸ்லாமிய கட்சி’ என்ற நாமத்துடன் களமிறங்கிய கட்சியின் பால் ஈர்க்கப்பட்டää ஆயிரம் ஆயிரம் இளைஞர்களுள் ‘முத்துமுஹம்மது’ என்ற கிராமத்து இளைஞனும் ஒருவன். அவனைச்  சுட்டியே இக்கதை நகருகிறது. அதிகம் கல்வி அறிவோää வசதியோ அற்றுää ஊரில் மற்றவர்களால் ஏளனப்படுத்தப்படும் சாதாரணமான கிழக்கு மாகாணத்தில் உள்ள பள்ளி முனைவாசிää அரசியலில் ஈடுபட்டு பாராளுமன்ற அங்கத்தவனாகின்றான். இவனைப் பற்றி இந்நாவலில் குறிப்பிடும் போதுää

மேடையில் ஒரே ஒரு ஆளாக முத்துமுஹம்மது நின்று கொண்டிருந்தான். தலையில் கட்சித் தொப்பி…ää மஞ்சள் பச்சை சேட்டுடன் கட்சிச்சாரன்ää கையில் புதிதாக கடிகாரம்… மார்பில் தலைவரின் சிறிய படம்…

முத்து முஹம்மது பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறான்… ஒரு தேர்ந்த பாடகனுக்குரிய கம்பீரமான குரல் வளம் அவனுக்கு இயற்கையாகவே இருந்தது… அரசியல் மேடைகளிலும் வைபவங்களிலும் மலேசியா வாசுதேவனின் குரல் இசையில் பாடுவதும் அறிவிப்பதும் அவனது சிறப்பம்சம்… பொழுதுபோக்கு… தொழில் எல்லாமே…”ஜ5

இவ்வாறு சாதாரண ஒரு அடிமட்ட தொண்டனாக அறிமுகமாகும் முத்துமுஹம்மது பற்றி மேலும் குறிப்பிடும்போதுää

மேடையில் ஏறிய தலைவர்ää முத்து முஹம்மதை கூர்மையாக பார்த்தார். அவனது உணர்வையும் அவனது மார்பில் இருந்த தன்னையும் பார்த்து புன்னகைத்தார். அவனது தோளில் தட்டி ‘ஙா… தம்பி! எப்படி?’ என்றார். முத்து முகம்மதுகுள் ஆயிரம் மின்னல்கள் வெடிக்கää ஆனந்த பரவசமாகி உடன் தலைவரின் கைகளைப் பிடித்து கொஞ்சி முத்தமிட்டான். மேலும் மார்புறத் தழுவுவதற்கிடையில் ஒரு அதிரடிப்படை வீரன் இடையில் புகுந்து முத்துமுஹம்மதுவை பிரித்து தள்ளிவிட்டான். முத்துமுஹம்மது மேடையில் இருந்து மல்லாக்க கீழே விழுந்தான். மேடையில் நிறைந்த ஊர் பிரமுகர்கள் மத்தியில்ää முத்துமுகம்மது செல்லாக்காசாகி மேடையில் இருந்து தள்ளி விடப்பட்டாலும் சட்டென எழுந்து மேடையை ஒட்டியபடியே நின்றுகொண்டு தலைவரையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.”ஜ6

இதன் மூலம் அன்றைய காலப்பகுதியில் சாதாரண மக்கள் மத்தியில் அரசியல் பற்றிய எண்ணமும் அவர்களது மனநிலையும் உணர்வும் வெளிப்படுத்தப்படுவதுடன் கட்சிää கட்சித் தலைவன் போன்றவற்றினதான ஈர்ப்பும் மதிப்பும் வெளிப்படுத்தப்படுகின்றது.

கதையின் நாயகனான உலகம் அறியாத முத்துமுஹம்மதுää இஸ்லாமியக் கட்சியின் உண்மையான தொண்டனாகவும் போராளியாகவும் செயற்பட்டு வருகின்றான். இவனது உண்மையான செயற்பாட்டினால் ஈர்க்கப்பட்ட தலைமைத்துவம் இவனை இஸ்லாமியக் கட்சியின் இளைஞர் அணித்தலைவராக நியமிக்கிறது. இதற்கிடையில் முத்துமுஹம்மது தனது மாமியின் மகளான மைமுனா மீது தீராத காதல் கொண்டவனாக காணப்படுகின்றான். அவள் தொழில் நிமித்த வெளிநாடு செல்லவேää பள்ளிமுனைக் கிராமத்தின் பக்கம் போகவே பிடிக்காமல் கொழும்பில் உள்ள தலைவர் எம். எச். எம். இஸ்ஹாக்கின் இல்லத்தில் தஞ்சமடைகின்றான். தலைவரே கதி என்று தன்னை தலைவருக்காகவே அர்ப்பணித்துக் கொள்கின்றான். இதனால் பள்ளிமுனையின் கிணற்று தவளையாக இருந்த முத்துமுஹம்மது நகரமயப்படுத்தப்படுகின்றான். இதனை நாவலில் குறிப்பிடும்போதும்ää

இப்போதெல்லாம் சிங்களம் இயல்பாகவே விளங்கியது. ஆங்கிலம் கூட கொஞ்சம் கொஞ்சமாய் பேசவும் முடிந்தது. தலைநகரின் வீதிகளும் சந்து பொந்துகளும் கூட பரீட்சயமாகின. கட்சி அலுவலகம்ää பாராளுமன்றம்ää வங்கிää போலீஸ் நிலையம்ää தொலைபேசிää தொலை மடல்ää அரசு அதிகாரிகள்ää ரூபவாஹினிää ஊனக்கைகளால் பஜரோ வாகனம் ஓட்ட எல்லாம் பழக்கமாகின.  முத்துமுஹம்மதின் பள்ளிமுனை கிராமத்தனம் பூரணமாக தொலைந்து விட்டிருந்தது. அவனுக்குள் ஒரு நகர இளைஞன் உருவாகியிருந்தான்.”ஜ7

இவ்வாறு நகர இளைஞனான முத்துமுஹம்மது தலைவரிடம் இருந்து எத்தனையோ விடயங்களை அவதானித்துää கிரகித்துக் கொண்டு ஒரு நம்பிக்கையும் விசுவாசமும் கொண்டவனாகவே மாறினான். தலைவருடன் செல்லும்போதுää அவரைக் கொல்ல வந்த முயற்சியில் தன் உயிரைத் துச்சமென மதித்து தலைவரை காப்பாற்றுகின்றான். இதனால் தனது மூன்று விரல்களையும் இழக்கின்றான். தலைவருக்கு உயிரைக் கொடுக்க முயன்ற அவனைää பலரும் பாராட்டுகின்றனர். இதன் காரணமாகக் கொஞ்சம் கொஞ்சமாக அவன் பிரபலமாகிக் கொண்டிருந்தான். பள்ளிமுனை கிராமத்தில் இளைஞர்கள் மத்தியில் ஆதர்ச கதாநாயகனாகவே ஆகிவிட்டான்.

மேற்குறிப்பிட்ட சம்பவத்தின் மூலம் அன்றைய தொண்டர்களின் நிலை அப்பட்டமாக வெளிகாட்டப்பட்டுள்ளது. அதாவது இலங்கை அரசாங்கம் மற்றும் சமாதானத்தை ஏற்படுத்த வந்த இந்தியப்படை மேலும் பல இயக்கங்கள் அனைத்துமே முஸ்லிம்களை கைவிட்ட நிலையில் எம். எச். எம். இஸ்ஹாக் எனும் தனி மனித ஆளுமைää முஸ்லிம்களின் நலனில் தீவிர அக்கறை கொண்டு செயற்பட்டார். இதனால் அம்மக்கள் அவரை தங்களை காக்க வந்த காவலனாகவே கருதினர். தமது உயிரை விடவும் மேலாக மதித்தனர். இதனை முத்துமுஹம்மத்: ‘தலைவருக்காக உயிரையும் கொடுப்பேன்’ என கூறுவதும் மேலும் தலைவரின் கட்டளைக்கு எவ்வித மறுப்பும் இன்றி ஏற்றுக்கொள்வதும்ää அவ்வாறே அக்கால பெண்கள் தலைவரைப் பார்த்துää ‘நீ என்ட புள்ள இருக்கும் மட்டும் எங்களுக்கு ஒரு குறையும் வெரா…’ என்பதன் மூலம் விளங்கிக் கொள்ளக்கூடியதாக உள்ளது.

இந்த நிலையில் பிரதேச சபைத்தேர்தலில் வயற்சேனை பிரதேச தவிசாளராக தலைமைத்துவத்தால் முத்துமுகம்மது நியமிக்கப்பட்டான். தவிசாளராக இருந்து பள்ளிமுனைக் கிராமத்தின் அரசியல் நடவடிக்கைகளில் திறம்பட செயல்பட்டதால்ää அதில் திருப்தி கண்ட தலைமைத்துவம்ää வெற்றிடமாக இருந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கும் அவனை நியமித்தது. இவ்வாறு அடிமட்ட தொண்டனாக இருந்துää இளைஞர் அணித் தலைவனாக பரிணமித்துää பின்னர் பள்ளிமுனை கிராமத்தின் தவிசாளராக நியமனமாகிää அதிலிருந்து முன்னேறிää திகாமடுல்ல மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராக பதவி உயர்கிறான். இதனை இறுதி அத்தியாயத்தில்ää

வாகனத்தின் கதவுகளை ஒரு பொலிஸ்காரன் பவ்வியமாக திறந்து விடää நெருக்கியடித்த சனங்களை அதிரடிப்படை வீரர்கள் தள்ளி வழிசமைக்க… வாகனத்திலிருந்து தனது இளம் மனைவி மைமுனா சாகிதமாக இறங்கி வந்து கொண்டிருந்தார்… இலங்கை பள்ளிமுனை கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும் பள்ளி முனை இளைஞர் அணி தலைவரும் முன்னாள் வயற்சேனை பிரதேச சபை தவிசாளரும் தற்போதைய திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவää ஜனாப் எம். முத்துமுஹம்மது அவர்கள். ‘நாரே தக்பீர்…!’.

அல்லாஹ{ அக்பர்......!!’.”ஜ8

இதன் மூலம் ஒரு உண்மையானதும் நேர்மையானதுமான விசுவாசமும் தலைமைத்துவத்தின் மீதான காதலும் ஒரு போராளியை கொண்டு செல்கின்ற தூரத்தை அளவிட முடிகின்றது. அதுமட்டுமன்றிää முஸ்லிம் அரசியலின் இயலுமை பாமரத்தின் அல்லது படிப்பறியாத மக்களின் கைகளில் தொண்ணூறுகளில் இருந்துள்ளது என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இதனை மேலும் கட்டியம் கூறுவதாகää அன்று நடந்த பிரதேச சபைத் தேர்தலில் மாவட்டத்தின் ஆறு பிரதேச சபைகளில் ஐந்து பிரதேச சபைகளை இஸ்லாமிய கட்சி கைப்பற்றியமையும் ஒரே ஒரு சபை 73 வாக்கு வித்தியாசத்தில் இழந்ததையும் அதில் முத்து முஹம்மது சுமார் பதினோராயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளை பெற்று வெற்றி பெற்றமையும் குறிப்பிடலாம். இவ்வெற்றிக்கு பள்ளி முனைவாசிகளின் முழு ஆதரவே காரணமாகும்.

3.2.1.3. கட்சித் தலைவர்

அடுத்துää ஒரு நாட்டின் அரசியல் எனும் போது அங்கு அரசியல் கட்சிää கட்சித் தலைவர் என்பவற்றை தவிர்த்து நோக்க முடியாது. அரசியல் பின்னணியில் உருவாக்கப்பட்ட இந்நாவலில்ää அரசியல் கட்சியாக இஸ்லாமிய கட்சியும் அதன் தலைவராக எம். எச். எம். இஸ்ஹாக்கும் காணப்படுகின்றார்.

ஒரு அரசியற் கட்சியின் வெற்றிக்கு பல காரணிகள் செல்வாக்கு செலுத்தினாலும்ää அக்கட்சியின் தலைமைத்துவத்திலேயே அவற்றை ஒழுங்குபடுத்தி செயற்படுத்தக் கூடிய பலம் காணப்படுகின்றது. ஆகவே கட்சியானது நிலைத்துää ஆட்சிப்பீடத்தை கைப்பற்றுவதும் அதன் வெற்றி தோல்வி என்பன தலைமைத்துவத்தினாலேயே தீர்மானிக்கப்படுகின்றது. எந்தவொரு கட்சியானாலும் ஒரு தலைமைபீடத்தைக் கொண்டே காணப்படும். அதில் ஒரு தலைவர் காணப்படவே செய்கின்றார். இதன்படிää ஒரு சிறந்த தலைமையாகவே எம். எச். எம். இஸ்ஹாக் அவர்கள் இந்நாவலில் மிழிர்கிறார்.

பெரும்பான்மை கட்சிகளில் முஸ்லிம் தலைமைகள் அதிகாரத்தில் இருந்த போதிலும் முஸ்லிம்கள் அரசியல் அனாதையாகப்பட்டு அவர்களது பிரச்சினைகளை எவருமே பேசாத சூழலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் மாபெரும் இயக்கத்தினை ஆரம்பித்து அக்குறையை நீக்கி வைத்தார். இந்நாவலின்ää முதல் அத்தியாயம் தேர்தல் பிரச்சாhக் கூட்டத்தோடு ஆரம்பிப்பதோடு அதில் எம். எச். எம். இஸ்ஹாக்கின் வருகை குறிப்பிடப்படுகின்றது. அக்கூட்டத்தில் இவர் உரை நிகழ்த்தும் போதுää

“…வேகக் காற்றின் திசையில் அசைகின்ற வெண்முகில் கூட்டங்களே… உயரத்தில் உலவுவதால் நீங்கள் உயர்ந்து விடுவதில்லை… நாங்களோ மரங்கள்… மண்ணின் சுவாச வேர்கள்… பேய்க்காற்று வீசும் வேளையிலும் புயல் இரைகின்ற போதிலும் மின்னல் இடி முழக்கம் அச்சுறுத்தும் சமயங்களிலும் போராடி மடிவதற்கும் அப்புனித பாதையிலே புன்முறுவல் பூத்த முகத்தோடு சிந்தும் சிவப்பு இரத்தத்தில் தோய்ந்து வீழ்வதற்கும்… எழுவதற்கும் ஆயிரம் ஆயிரம் போராளிகளை தந்த பள்ளிமுனைத் தாயகத்தின் போராளிகளே… புறப்படுங்கள்… நம் கட்சியைக் காப்பாற்ற… இது நமது உரிமை… இது நமது கடமை… இது நமது ஒற்றுமை… ஒன்றை மட்டும் உறுதியாகத் தெரிந்து கொள்ளுங்கள் சிங்கள கட்சிகளின் கால் தூசியாக ஒட்டிக் கிடக்கும் முதுகெலும்பற்ற முக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களே… இந்தப் பள்ளிமுனைக் கார்பலா களத்திலிருந்து உங்களுக்கு இந்த இஸ்லாமியக் கட்சி தலைமைத்துவம் பகிரங்க சவால் விடுக்கிறது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிரதேச சபை தேர்தலில் இம்மாவட்டத்தில் ஆளும் ஐ. என். பி கட்சியால் ஒரு சபையை கூட வெல்ல முடியாது.”ஜ9

இதன் மூலம் முஸ்லிம் சமூகம் அரசியலில் விழித்தெழ வேண்டும் என்பதற்காகவும் முஸ்லிம் சமூகத்தின் எழுச்சிக்காகவும் இரவு பகல் பாராது பல்வேறு அர்ப்பணிப்புகளுடன் அரசியல் களத்தில் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை பெறக் குரல் கொடுப்பதனையும் காணமுடிகின்றது.

சிறந்த அரசியல் தலைமையான இவர் முஸ்லிம்களின் அரசியல் உரிமை தொடர்பிலும் அவற்றை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது தொடர்பிலுமே கவனம் செலுத்தியவராக காணப்படுகின்றார். இதற்காக தந்திரோபாயமான முடிவுகளையும் எடுக்கிறார். எடுத்துக்காட்டாகää

முத்துமுஹம்மது என்னும் அடிமட்ட போராளியை பிரதேச சபைத் தேர்தலுக்கான தவிசாளராக நிறுத்துகின்றார். இது பற்றி அவர் குறிப்பிடும்போதுää

பசறிச்சேனையின் ஐ. என். பி தலைமை வேட்பாளரும் பெரும் பணபலம்ää பேரினப் படைபலம்ää அரச மேல்மட்ட அரசியற்பலம் மிக்கவருமான பெரிய மனிதரான எம். எல். எச் தோற்கடிக்க பள்ளிமுனையின் ஒரு சாதாரண ஏழை விவசாயியான இளைஞன் ஒருவனை நமது கட்சி சார்பாக நிறுத்தி அந்த வெற்றியை ஒரு சரித்திhமாக செய்ய நம்மால் முடியாதா…? சொல்லுங்கள்!” என குறிப்பிட்டுää நமது இஸ்லாமிய கட்சியின் தலைமை வேட்பாளராக இதோ நிற்கின்ற முத்துமுஹம்மது நிறுத்துவதற்கும் அவரை வெற்றி பெறச் செய்வதற்கும் ஏன் முடியாது?”10

எனப் பள்ளிமுனை மக்களை நோக்கி கேட்டு முத்துமுஹம்மதுவை தவிசாளராக நிறுத்துகிறார்.

ஒரு முஸ்லிம் கட்சியின் தலைவராகää அமைச்சராக இருந்து பல்வேறு பணிகளை மேற்கொண்ட அவர் பிரதேச வாதää இனவாத திரைகளை கடந்து நாட்டுக்கு சேவை செய்த சிறந்த அhசியல்வாதியாக காணப்படுகிறார். எடுத்துக்காட்டாகää

பள்ளிமுனைக் கிராமத்தின் பள்ளித் தலைவரும் செல்வாக்கு பெற்றவருமான செய்லான்   ஹாஜியார் தானே பிரதேச சபை தவிசாளராக நியமிக்கப்படுவேன் என நினைத்து வரும் போதுää  அடிமட்ட தொண்டனான முத்துமுஹம்மது நியமிக்கப்படுகின்றான். இதற்கு தலைவர் காரணம் கூறும்போதுää

இதற்கு பிரதானமாக மூன்று காரணங்கள் உள்ளன. முதற்காரணம் பள்ளிமுனை பள்ளி தலைவரும் பசறிச்சேனை பள்ளி தலைவருமாகää இரு பள்ளி தலைவர்கள் பதவிக்காக ஊர் பிரிந்து முட்டி மோதிக்கொள்வதை இஸ்லாமிய கட்சி தலைமைத்துவம் அனுமதிக்காது. …பிரதேச ரீதியான துவேச பிரிவினையை ஊட்டி நம்மை பிரிக்க எத்தனிக்கும் பெரும்பான்மை இன சக்திக்கு என் அருமை பள்ளி மக்கள் உடன்படுவார்களா…”ஜ11ஸ என்பதன் மூலம் பிhதேச ரீதியான பிரிவினையை எதிர்த்து ஒற்றுமையை நிலைநாட்ட செயற்பட்டவராகவே காணப்படுகின்றார்.

மேலும் முஸ்லிம் சமூகத்தில் பிரச்சினைகள் வரும்போது கூட அதனை லாவகமாகக் கையாண்ட ஒருவராகவும் தலைவர் இஸ்ஹாக் காணப்படுகின்றார். அதாவது பிரதேச தேர்தலில் பள்ளிமுனைக் கிராமத்தின் தவிசாளராக நியமிக்கப்படுவதற்கு செய்லான் ஹாஜியார் முன்னிற்கும் வேளையில் முத்துமுஹம்மது நியமிக்கப்படுவதனால் இவர்களுக்கிடையே பிணக்கு ஏற்படுகின்றது. அதனை சிறந்த முறையில் தீர்த்து வைத்த ஒருவராக காணப்படுகின்றார்.

“…ம்மாட ஊடு! எனக்கி சொந்த மச்சான் நீங்க…நம்மட குடும்பத்துக்க ஊட்ட வேலவாட செஞ்சி நக்குத் திண்டவன் அவன்ட வாப்பா! அவனே கொறுக்காக்கு பொறந்த ஒரு அறாமி! அஞ்சி சதத்துக்கும் வக்கில்லாத ‘எக்கடாவுஸ்’ஸை நீங்க சேமனாக்கிற…? நான் ஒங்குட மாமட மகன் மச்சான் அவனுக்கு கீழ இருக்கிற…?

‘…ஷட்…ஆப்! ராஸ்கல்! திடீரென கதிரையை தள்ளிவிட்டு எழுந்த தலைவர் சற்றும் எதிர்பாராத விதமாக செய்லான் ஹாஜியாரை பளாரென அறைந்தார். ஷட் அப் யுவர் டேடி மவுத்!’

மிஸ்டர் செய்னுல் ஆப்தின் நீ எனக்கு சொந்த மாமியின் மகன்தான் ஆனா அதற்காக நீ அதை பிழையாக உபயோகிக்க முடியாது. வெளியில நீ அவன் முத்துமுஹம்மதை அறஞ்சத நான் கண்டேன். உனக்குத் தெரியாது. அவன் என்னுடைய உயிர்க்கவசம்! அவன் ஒரு அனாதை இல்லை அதைக் கேட்கவும் பார்க்கவும் ஆள் உண்டு.

தவிர நீங்க வயற்சேனை மாவட்ட ஆஸ்பத்திரி விஸ்தரிப்பு என்று 37 ஏக்கர் வேப்பமர தோப்பை விழுங்கிய விஷயமும் பள்ளிவாசல் புனரமைப்பு என்று 30 லட்சம் முழுங்கியதும் வழக்கு வந்திருக்கு’ இந்தப் பாரு செய்னுல்லாப்தின் இனி உனக்கு கட்சியில மட்டுமல்ல என் வீட்டிலும் இடம் இல்லை போ வெளியே!”ஜ12

இதன் மூலம் தலைவர் இஸ்ஹாக் நீதிää நியாயம்ää தலைமைக்கு முதலிடம் என தூய அரசியல் செய்வதனை காண முடிகின்றது. மேலும்ää தன்னுடைய அமைச்சுப் பதவியை விட அதிகமாக யோசித்த அவர் ஆட்சியாளர்களுக்கு சவால் விடுத்துää முஸ்லிம் சமூகத்திற்கு விடுதலை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார்.

“…ஒன்றை மட்டும் உறுதியாக கூற வேண்டும்… இந்த ஆறு பிரதேச சபையிலும் நமது கட்சி ஒன்றிலாவது தோற்றால் கட்சித் தலைமைத்துவம் தனது எம். பி பதவியை ராஜினாமா செய்து தூக்கி எறிந்துவிட்டுää மக்களோடு மக்களாக களத்தில் நின்று இஸ்லாமிய வழியில் போராடத் தயாராக இருக்கிறது.”ஜ13

இவ்வாறு சிறந்த ஒரு அரசியல் தலைவராக விளங்கும் மக்கள் பிரதிநிதியான எம். எச். எம். இஸ்ஹாக் அவர்களை பள்ளிமுனை மக்கள் ஒரு ஆதர்ச புருஷனாகவும் ஒரு கதாநாயகனாகவும் தங்கள் வீட்டுப் பிள்ளையாகவுமே கருதினர். அவர் மீது சிறந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தனர். இதனை நாவலில்ää அவர் பிரச்சார கூட்டத்திற்கு வரும் போதெல்லாம் மக்கள் அவரை கொண்டாடுவதும் அவரை காண்பதற்காகவே பல மணி நேரம் காத்திருப்பதும் அதுமட்டுமன்றி உதுமான் என்பவரின் மனைவி மௌத்திற்கு அவர் வரும்போதுää மையத்து வீடு என்பதை தாண்டி அவர்கள் குரல் எழுப்புவதும் முடஉதுமான் அவரது மனைவி மௌத்தை மறந்து தலைவரின் தரிசனத்தால் மகிழ்ச்சியுறுவதும் மேலும்ää அவருக்கு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என தெரிந்து அம்மக்கள் ஊண் உறக்கம் இன்றி  இருப்பதும் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். இதன் மூலம் அன்றைய 90 காலப்பகுதிகளில் ஒரு அhசியல் தலைமைத்துவம் மக்கள் மனதில் எவ்வாறு குடி கொண்டிருந்தது என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளக் கூடியதாகவுள்ளது.

அடுத்துää அரசியலின் முக்கிய அம்சமாக தேர்தல்ää தேர்தல் பிரச்சாரம்ää தேர்தல் பிரச்சினைகள்ää தேர்தல் களம் என்பன மிக முக்கியமானதாக காணப்படுகின்றது.

3.2.1.4. தேர்தல்

தேர்தல் எனும் போதுää ஜனநாயக முறையில் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான ஒரு முறையாக காணப்படுகின்றது ஒரு நாட்டினைப் பொறுத்தவரையில்ää பல்வேறு வகையான தேர்தல் இடம்பெறுகின்றன. இங்குää தொண்ணூறாம் ஆண்டுகளில் இடம்பெற்றää பிரதேச சபை தேர்தலும் அதனோடு தொடர்பான விடயங்களும் பள்ளிமுனைக்கிராமத்தில் எவ்வாறு அமைந்திருந்தன என்பதை இக் கொல்வதெழுதல் 90 எனும் நாவல் அழகுற வெளிக்காட்டி உள்ளது. அவற்றை நோக்குவோமாயின்ää

3.2.1.4.1. தேர்தல் களம்

பிரதேச சபை தேர்தலுக்காக இஸ்லாமிய கட்சியின் தலைமைப் பொறுப்பாளராக முத்து முஹம்மதை தலைமைத்துவம் தெரிவு செய்தது. இதனைத் தொடர்ந்து தேர்தலுக்கான ஆயத்தங்கள் இடம்பெற்றன. இதனை நாவலில்ää

பள்ளிமுனை எங்கும் கட்சி போராளிகளால் ஒட்டப்பட்ட இஸ்லாமியக் கட்சி வர்ணச் சுவரொட்டிகள் நிறைந்தன. தலைவரின் அழகிய பெரிய படம் அவரது இதயத்தில் முத்து முஹம்மதின் முகம். இருவரையும் சுற்றி பெரிய பிறை வடிவம் கீழே –

வழிகாட்டும் தலைவரின் வழியில்

ஒளிபாய்ச்சும் இளம்பிறை முத்துமுஹம்மது

அவர்களை

வயற்ச்சேனை தவிசாளர் ஆக்குவோம்!

என சூழுரைத்தன.”ஜ14ஸ எனக் கூறப்பட்டுள்ளது.

3.2.1.4.2. தேர்தல் பிரச்சாரம்

இதனைத் தொடர்ந்து கட்சிப் பிரச்சாரங்களும் இடம்பெற்றன. பிரச்சாரம் எனும் போது தேர்தல்களை அறிவிக்கையில்ää அரசியல்வாதிகளும் அவரது ஆதரவாளர்களும் ஒருவருக்கொருவரான போட்டியில் வாக்காளரிடம் நோடியாகச் சென்று அவர்களது வாக்குகளை கோருதலாகும். இதன்படி பள்ளிமுனை கிராமத்தின் அரசியல் பிரச்சார நடவடிக்கைகளை நோக்குவோமாயின்ää தலைவர் எம். எஸ். எம். இஸ்ஹாக் பிரச்சாரத்திற்காக பள்ளிமுனை கிராமத்திற்கு வருகை தருகிறார். அதனை தொடர்ந்துää

முதலில் முச்சக்கர வண்டி ஒலிபெருக்கி கொண்டை கட்டிää தலைவர் புகழ்பாடிச் சென்றது. தொடர்ந்து 50 துவிச்சக்கர வண்டிகள் மஞ்சட்பச்சை கொடிகளுடனும் தலைவர் மற்றும் முத்து முகமது ஆகியோரின் படங்களுடனும் இளைஞர்களுடனும் மணி ஒலித்துச் சென்றது. ‘…ääதோ உங்கள் மத்தியில் பிரதேச சபை தேர்தல் களம் குதித்திருக்கும் கட்சியின் இளம்பிறையும் இளைஞர் அணி தலைவருமாகிய முத்து முகம்மது மற்றும் ஏனைய வேட்பாளர்களும் உங்கள் மத்தியில் இப்போது ஊர்வலமாக வந்து கொண்டிருக்கின்றார்கள். தலைவரின் இன்னுயிரைக் காத்த போராளி… நம்மிளைஞர்களின் நாளைய நம்பிக்கை நட்சத்திரம்… முத்துமுகம்மது…’ அதன் பின்னர் 32 இரட்டை மாட்டு வண்டிகளில் பொல்லடி மல்லர்கள் சீரான அடிகளுடன் சென்றனர். அதைத்தொடர்ந்து வாடகைக்கு அமர்த்தப்பட்ட 10 முச்சக்கரங்கள் ரெஜிபோம் பிறைவடிவங்களை முன்னும் பின்னும் ‘பிறைசூடடி’ச் சென்றன. 14 இளைஞர்கள் தொப்பி அணிந்து கொண்டு ஆடை முழுக்கு மஞ்சள் பச்சை வர்ணம் குளித்து பூசிக்கொண்டு சீனப் பாவனையில் ‘தப்பு… டப்பு… சப்பக்…’ என்று கற்பனை எதிரியுடன் போரிட்டு சென்றனர்.

அதன் பின்னர் போலீஸ் வாகனம் ஊர்ந்தது. அதனை தொடர்ந்து வாகனத்தில் எழுந்து நின்று கையாசைத்தபடி தலைவர்! பக்கத்தில் தலைமை வேட்பாளர் முத்துமுகம்மது....!! பக்கத்தில் ஏழாம் இலக்க வேட்பாளர் ஜாபிர் 12ஆம் வேட்பாளர் ஆசுகவி அன்புடீன் பின்னால் மேலும் ஒன்பது வேட்பாளர்கள் அதன் பின்னால் அதிரடிப்படையினர் அதன் பின்னர் நடைபவனியில்ää கட்சி உயர்பீடங்கள்ää பிரமுகர்கள்ää பொதுமக்கள்… பொதுமக்கள்ää பொதுமக்கள்.”ஜ15

இதனைத் தொடர்ந்து பிரச்சாரப் பொதுக்கூட்டம் கிராத் ஓதி ஆரம்பமானது. அதன்பின் வரவேற்புரையும் அடுத்துää கட்சி கீதமும் இசைக்கப்பட்டது. அதனை தொடர்ந்துää முதன்மை  வேட்பாளர் முத்துமுஹம்மது தனது பிரச்சாhத்தை ஆரம்பித்தார். இறுதியாகää தலைவர் அவரது  பிரச்சாரத்தினை ஆரம்பித்தார். அவாது உரையில்ää

“…வேகக் காற்றின் விசையில் அசைகின்ற வெண்முகில் கூட்டங்களே… உயரத்தில் உலவுவதால் நீங்கள் உயர்ந்து விடுவதில்லை… நாங்களோ மரங்கள்… மண்ணின் சுவாச வேர்கள்… எங்களின் போராட்டத்தில் ஒவ்வொரு உயிராக உதிர்ந்தாலும் ஒரு நூறுபுதிய மரங்கள் ஓங்கியுயர்ந்து ஒருமையுடன் வளர்வதை உங்களால் ஒருபோதும் ஒதுக்கிட முடியாது. இந்த மண்ணும் இதன் மணமும் எங்கள் பறிக்க முடியாத பாரம்பரியம்… இதனுள்ளிருந்து வெளிவரும் எமது வேர்களை வெட்டிவிட யாரால் முடியும்…? நாமோ தலை நிமிர்ந்து நின்றவர்கள்… தூசுக்காற்றை சுவாசிக்கச் செய்யும் தரகர்களை தவிடுபொடியாக்கி… அதிலிருந்து ஆக்கம் பெறுபவர்கள் நாங்கள். கேவலம் இந்த சில்லறை மேகங்களுக்கா அஞ்சி அடி பணிவோம்…?

சதிகளை சத்திய சோதனைகளால் சந்தித்த சந்ததிகள் நாங்கள்… எங்களை ஆக்கிரமித்து ஆள நினைத்தால்… அதனால் உங்கள் மூக்கறுந்து முள்ளம்தண்டுடைந்து போவீர்கள்… எங்களின் இந்த போராட்டத்தில் ஆயிரம் இழப்புக்கள் வந்தாலும் ஒவ்வொரு உயிராக இழந்தாலும் ஒருநூறு புதிய மரங்கள் ஒர்மையுடன் ஓங்கி எழுவதை ஒருவராலும் தடுக்க முடியாது…”ஜ16

என சிங்கள பேரினவாதத்தால் மேற்கொள்ளப்படும் இன ஒதுக்கல்கள்ää விடுதலைப் புலிகளால் புரியப்படும் இனப்படுகொலைää இந்தியா அமைதிப்படை அட்டகாசம்ää இனச் சுத்திகரிப்புää சிறுபான்மையினர் மீதான அடக்குமுறைää தேர்தல் விளக்கங்கள் இப்படி வரிசையாக அன்றைய தொண்ணூறுகளின் சூழ்நிலைக்கேற்ப அவரது உரை அமைந்திருந்தனை அவதானிக்க முடிகிறது. மறு பக்கமாக ஏனைய கட்சிகளின் பிச்சாரங்களும் இடம்பெற்றன.

3.2.1.4.3. தேர்தல் பிரச்சினைகள்

தேர்தலில் பிணக்குகள்ää கட்சிகளுக்கிடையிலான பிணக்குகள்ää கட்சி பிரமுகர்களுக்கிடையிலான பிணக்குகள்ää கட்சி ஆதரவாளர்களுக்கிடையிலான பிணக்குகள்ää சூழ்ச்சிகள்ää கட்சித்தாவல் என்பன அரசியலில் தவிர்க்க முடியாத ஒன்றாக காணப்படுகின்றது. போர்முகம் சூழ்ந்த அக்கால பகுதியில் இப்பிணக்குகள் மிக அதிகளவாகவே காணப்பட்டது. அன்றைய காலப்பகுதியில் இந்தியாவின் அழுத்தம் காரணமாக மாகாண சபைகளை தாபித்து மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட போதுää விடுதலைப் புலிகள் தவிர்ந்த ஏனைய சகல இயக்கங்களும் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டன. முஸ்லிம்கள் இந்தத் தேர்தலில் ஈடுபட ஆயத்தங்களை மேற்கொண்ட போதுää ஆயுதம் தரித்த தமிழ் குழுக்கள் அவர்களை தேர்தலில் போட்டியிடாமல் செய்வதற்காக காடைத்தனங்களை அவிழ்த்துவிட்டு பயமுறுத்தல்களை மேற்கொண்டனர். தேர்தல் காலத்தின் போது முஸ்லிம் வேட்பாளர்கள் கடத்தப்பட்டு தாக்கப்பட்டனர். இது பற்றி இந்நாவலில் குறிப்பிடும் போதுää இஸ்லாமிய கட்சியின் உறுப்பினர் சம்மாந்துறைக் கிளைத் தலைவருமானää மாகாண சபை உறுப்பினரும் இளைய போராளியுமான பரகத்துல்லாஹ் என்பவர் இனம் தெரியாத நபர்களால் கொல்லப்படுகின்ற சம்பவமும் ‘இந்நேரம் எங்கடா கெடந்து வாராய்? கொறுக்காப்புளியா.....! எலெக்சன் டைம்ல ராவயில வெளிய திரியாதடா கொளப்பம்ää இஸ்லாம் கட்சிக்காரனுகள புலி சுர்ரானாம்… டேய் நீயும் இசிலாங் கட்சியடா… செல்லண்டா!’ஜ17ஸ என்பதும்

தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருந்தன. திகாமடுல்ல மாவட்டம் எங்கும் வேட்பாளர்களை எல்லாம் விடுதலைப் புலிகள் தேடித்தேடி சுட்டுக் கொல்வதாக கதைகள் வந்தன. தேர்தலை குழப்ப பெரும் திட்டங்கள் இருப்பதாகவும் வாக்களிக்கச் செல்லும் மக்களுக்கு ஆபத்து காத்திருப்பதாகவும் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு மிரட்டல் கடிதங்கள் அனுப்பப்படுவதாகவும் சாய்ந்தமருதில் வேட்பாளர் ஒருவரைக் கடத்திச் சென்றுவிட்டதாகவும் தினசரி பயங்கரச் செய்திகள் வந்துகொண்டிருந்தன…’ஜ18ஸ என்பதன் மூலமும் அன்றைய பயங்கரவாதத் தன்மை எடுத்துக்காட்டப்படுகிறது.

இவ்வாறு புலிப்படை ஒரு பக்கம் முஸ்லிம்களைத் தேர்தலில் ஈடுபடக்கூடாது என்பதற்காக சதிகளைச் செய்து கொண்டிருக்கää மறுபக்கம் முஸ்லிம்களுக்கிடையே பதவி வெறியால் பிணக்குகள் ஏற்படுவதைக் காணலாம். இது பள்ளிமுனை கிராமத்தின் தேர்தலை மையமாகக் கொண்டு வெளிப்படுத்தப்படுகிறது.

பிரதேச சபைத்தேர்தலில் முத்துமுகம்மது தலைமை வேட்பாளராக நிறுத்தப்படும் போது பள்ளி முனையின் பள்ளி தலைவர் செய்லான் ஹாஜியார் அதனை மறுத்து முரண்படுகிறார். இதனைää

“…ஹி…ங்க்…க.க.க.கரவலையி…கரவலயில மீன் பொறக்கின கொறுக்காப்புளியண்ட  நக்கு தின்னி எலக்சன் கேட்கிறையாம்… நீ ஆட்டுத்தாடி மாய்ட்டன் ஆமோதிக்கிற… மாளிர மக்காள்! உங்கள காசு செலவழிச்சுää வஸ்ஸில கொழும்பு காட்ட கூட்டி வந்த என்னத்துக்கு…? கொறுக்காவ சேமன் ஆக்குவதற்கா…?’

ஓ…! ப்ப்போடா… கொறுக்காட அறாங்குட்டி…’ என்று கறகறத்து திடீரென முத்துமுஹம்மது நெஞ்சில் பளாரென அறைந்தார். விழுந்த அறையின் வலியிலும் அதிர்ச்சியிலும் தாடிமாஸ்டரின் மீது சரிந்து விழுந்தான் முத்துமுஹம்மது.

கொழும்பு வெயில்ல தலைவருக்கும் சரியா தல வேலய்றல்ல! ஊர்ல கட்சி வளர்க்கிற நானா… கொறுக்காவா…? அப்பக்காரி மகளை வெளிநாட்டுக்கனுப்பி நக்குற நாய் மொட்டுக்கையன் பள்ளிமொனக்கி சேமனாம் டோவ்…வ்…?”19

இவ்வாறான வசைச் சொற்களைக் கேட்ட முத்துமுகம்மது செய்லான் ஹாஜியாரை தாக்கினான். இவ்வாறு பதவிக்கான பிணக்கு ஏற்பட்டதை நோக்கலாம்.

மேலும்ää கட்சி உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் மாறி மாறி பிரசுரம் வெளியிட்டனர். ஐ. என். பி சுவரொட்டிகள் இரவில் ஒட்டப்பட்டு காலையில் காணப்படவில்லை. ‘இஸ்லாத்தை விற்கும் டீலரும் மொட்டுக்கை வாலரும்’ என்ற ரோணியோப் பிரசுரம் பழைய தமிழில் வெளியாகி கட்சிப் போராளிகளை கொதிக்க வைத்தது. இதற்கு பதிலடியாக ‘வேப்பந்தோப்பை விழுங்கிய தொப்பை ஆசி’ என்ற அதன் நவீன பிரசுரம் வெளியானது.

அவ்வாறே கட்சித்தாவல்களும் இடம்பெற்றன. ஐ. என். பி கட்சியின் ஏழாம் இலக்க வேட்பாளரான மொட். முகம்மத்கனி இஸ்லாமிய கட்சிக்கு தாவும் சம்பவம் இடம்பெற்றது.

அன்றைய காலத்தின் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவரான சப்புச்சுல்தான் என்பவன் பணபலம் அதிகாரபலம் ஒருங்கே பெற்றவனாக இருந்தான். இவன் ஐ. என். பி கட்சியைச் சேர்ந்தவன். சந்தர்ப்பத்திற்கு ஏற்ப இஸ்லாமிய கட்சியென கூறுவது போன்ற சம்பவங்கள் இடம்பெற்றன.

இது ஒங்கட தலைவர்ர படம். சும்மா ஒட்டியிருக்கன். கொழும்பில நான் இஸிலாங்கட்சிதான்! படத்த கௌப்பி மத்த பக்கம் பாரு.... பெரமதாஸாட படம்.... ஒனக்கு அரசியல் விளங்காடி லூலி...”ஜ20

என முத்துமுகம்மதை நோக்கி சப்பு சுல்தான் கூறுவதாக அமைந்துள்ளது.

ஐ.என்.பி  வேட்பாளரான பசறிச்சேனை அல்ஹாஜ் எம். எல். எச் அகமதுலப்பை பள்ளிமுனை வந்துää எட்டாம் இலக்க வேட்பாளரான சப்புசுல்தானின் மெய்ப்பாதுகாவல் உதவியுடன் ஊரெங்கும் சூறாவளி சுற்றுப்பயணித்து பிரசுரங்களும் இடகசியமாய் N;பாத்தல்களும் வழங்கி வாக்குகளுக்கு விலை நிர்ணயித்து வாக்கு வங்கியிலிருந்து வாக்குறுதி வாங்கிச் சென்றார்.

அமைதியாய் இருந்த பள்ளிமுனை கிராமத்தில் வன்முறை மையங்கொள்ள ஆரம்பித்தது. ஒருநாள் இரவில் திடீரெனப் படுவான்கரையில் இஸ்லாமியக் கட்சிகளை இனம் தெரியாதவரால் தாக்கி உடைக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக பட்டப்பகலில் பள்ளி வீதியில் யாரோ செய்லான் ஹாஜியாரின் கார் கண்ணாடிகளை கற்கண்டாக்கினர். சர்பத்புலவரும் கருத்த தண்டையலும் பச்சைத் தொப்பி காரர்களால் இருட்டடிபட்டு இரத்தம் தோய்ந்தனர். செயிலான் ஹாஜியாரின் புதுசுவரொட்டிகளில் கருப்பு கோயில் அபிஷேகமும் சாணித்திரிநீருமாக ஏகத் திருவிழாவாக இருந்தது கருப்பு வீதிகளில் கட்சி சின்னங்களும் வேட்பாளர் இலக்கங்களும் வாகனச் சக்கரங்களில் அரைக்கப்பட்டன. ஊர் பொதுமக்கள் வீடு வந்த வேட்பாளர்கள் அனைவருக்கும் வாக்களிக்க வாக்குறுதி அளித்து சிரித்தனர். நடுநிசியில் முத்துமுஹம்மது தங்கி இருந்த வீட்டின் மீது திடீரென நவீன ரக துப்பாக்கிகள் வெடித்தன. புயல் என எழுந்த கட்சி போராளிகளால் ஓடி ஒழிய முயன்ற போலீஸ் வாகனம் உடைக்கப்பட்டுது. தொடர்ந்த கலவாம் முத்துமுஹம்மதின் தலையீட்டினால் சற்று தணிந்தது. ஊரில் நடமாடவே அச்சமாக இருந்தது.”ஜ21ஸ இதன் மூலம் அன்றைய சூழலில் அரசியல் பிளவுகள் பிரச்சினைகள் போன்றவைகளை விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

இதைத் தவிர அன்றைய அரசியல் சூழலினை பார்க்கின்ற போதுää முஸ்லிம் பெண்கள் அரசியலில் முதன் முறையாக ஈடுபட்ட காலமாகவும் தொண்ணூறு காலப் பகுதிளே காணப்படுகின்றது. இதற்கு அரசியல் கூட்டங்களுக்கு பெண்கள் கலந்து கொள்ளுதல் போன்ற விடயங்களை எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம். இது தவிரää அரசியல் கூட்டங்களில்  பள்ளிவாசல் தலைவர் போன்ற செல்வாக்கு பெற்றவர்கள் ‘வீற்றிருந்த 15 பேரையும் அவர்களே அவர்களே என்று பதினாறு தடவை விழித்து முடிந்ததும்’ என்பதும் முத்துமுஹம்மது போன்ற சாதாரண தொண்டன் ‘பொங்கிய பெருமையுடன் பேரினவாத விலங்கை ஐம்பத்திநாலாவது தடவையாகவும் உடைக்க ஆரம்பிக்க’ என்பதும் வெறும் எண்ணிக்கையாக மட்டுமல்லää சமூக அந்தஸ்தில் உள்ளவர்களின் வழிதல்ளையும் சாதாரண மக்கள் மனதில் அரசியல் ஏற்படுத்தும் மாயையின் நம்பிக்கையும் வெளிக்காட்டுவதாகவே உள்ளது.

இவ்வாறான அடிப்படையிலேயே அன்றைய யுத்த கெடுபிடிக்குள் சிக்குண்ட பள்ளிமுனைக்கிராம அப்பாவி மக்களின் வாழ்வியலில் இனத்துவ அரசியலானது ஏற்படுத்திய தாக்கத்தை அவ்வாறே படம்பிடித்து காட்டுவதாக நாவலாசிரியர் அன்றைய அரசியல் பின்னணியில் நின்று கதையை நகர்த்தியுள்ளார். அந்தவகையில்ää இந்நாவலை முஸ்லிம் அரசியல் வரலாற்றின் ஒரு ஆவணம் என்றே குறிப்பிடலாம்.

 

3.2.2. யுத்தமும் அதன் தாக்கங்களும்

மனித சமுதாயத்தில் இன்றியமையாத எண்ணங்களுள் ஒன்றாக வன்முறை காணப்படுகிறது. மிக மோசமான வன்முறைகளை விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் தொடங்கி பயங்கரமான முறையில் முடித்துள்ள நிலைமை காலம் காலமாக உலகத்தில் நடைபெற்று வருகிறது. இலங்கையைப் பொறுத்தவரையில்ää இது பல்லின மக்கள் வாழுகின்ற ஒரு நாடாகும். இங்கு இன ரீதியான வன்முறையானது ஆரம்பகாலம் தொடக்கம் இன்றுவரை இடம்பெற்று வருகின்றது. இன ரீதியான வன்முறை அல்லது இன முரண்பாடு எனும் போதுää நாட்டின் தேசிய இனங்கள் தம் அடையாளத்தை நிலை நிறுத்திக் கொள்ள இனம்ää மொழிää பண்பாடுää சாதிää பொருளாதாரம் முதலிய இன்னோரன்ன விடயங்களுக்காக பிணக்குறுவதாகும். அந்தவகையில்ää சிங்களவருக்கும் தமிழருக்கும் இடையில்  மிக நீண்ட காலமாக இடம்பெற்று வந்துள்ள இனமோதலானது முஸ்லிம்கள் பக்கம் திரும்பி அவர்களையும் தாக்கி சென்றுள்ளது. இதுபற்றி விரிவாக இந்நாவலின் தோற்றப் பின்னணியில் நோக்கியுள்ளோம். இந்நாவல்ää 1990 காலப்பகுதிகளில் முஸ்லிம் கிராமங்கள் யுத்தத்தக்கெடுபிடிக்குள் அகப்பட்ட நிலையை எடுத்துக்காட்டுகின்றது. இது பற்றி நாவலாசிரியர்;ää

“1990 ஆம் ஆண்டு காலப்பகுதி இலங்கை மக்களின் போரியல் வாழ்வில் மிக துன்பியலான வரலாறாக இருந்தது. யார் யாரை ஏன் கொல்லுகிறார்கள் என்று யாருக்குமே புரியாத நிலையில் தினமும் கொலைச் செய்திகளே தலைப்புச் செய்திகளாக வாசிக்கப்பட்டு கொண்டிருந்தன. நகரங்களில் பாரிய வெடிகுண்டுகள் வெடித்துக்கொண்டிருந்த போது கிராமங்களில் மிதிவெடிää கண்ணிவெடிää ஜொனிவெடி என்று வெடிவிதைகள் விதிக்கப்பட்டிருந்தன. தவிரவும் ஹர்த்தால்ää கடையடைப்புää வேலை நிறுத்தம்ää டயர் கலாச்சாரம்ää தீவைப்பூää கொள்ளைää பணி முடக்கம்ää வரிஅறவீடுää பாலியல் பலாத்காரம்ää காட்டிக்கொடுப்புää கரிநாள் அனுஷ்டிப்பு என்று வேறுபல பக்க விளைவுகள் பொதுமக்களை கலங்கடித்துக் கொண்டிருந்தன. மேலும் வடபுல முஸ்லிம் மக்கள் வாழ்விடங்களை விட்டு விரட்டி அடிக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். இப்படியான படுபயங்கரமான இக்காலப்பகுதியில் பசுமையான பர்தாவுக்குள் அமைதியாக அடங்கியிருந்த கிழக்கிலங்கையின் ஒரு குக்கிராமத்தில்ää இந்த 90களின் போர்முகம் புகுந்த போது அங்கு ஏற்பட்ட அமளிதுமளிகள்தாம் இந்நாவலின் அத்திவாரம்”ஜ22

இதன்படி இந்நாவலின்ää போர்ச்சூழலின் வெளிப்பாட்டினை நோக்குவமாயின்ää முதல் அத்தியாயத்திலேயே போர் முகத்தினை எம்மால் அவதானிக்க முடிகின்றது. பள்ளிமுனை கிராமத்திற்கு செல்லும் பாதை பற்றி குறிப்பிடும் போதுää

அங்கு கண்ணிவெடி மற்றும் ஜொனிவெடிகளுக்கு தப்பிää விஷேட அதிரடிப்படையினரின் மினி காவலரணையும் வெற்றிகரமாகக் கடந்து எச்சரிக்கையுடன் சென்றால் பள்ளி முனை கிராமம் வந்துவிடும்”ஜ23ஸ என குறிப்பிடப்படுகின்றது.

இவ்வாறு யுத்த சூழலோடு ஆரம்பிக்கும் இந்நாவலின் அடுத்தடுத்த அத்தியாயங்கள் பயங்கரவாதத்தின் விளிம்பில் நின்ற 90 காலப்பகுதியையும் அதன் அகோரத்தையும் படம் பிடித்துக்காட்டுகின்றது. ஏன்? எதற்கு? என்ற காரணம் இல்லாத தொடர் கொலைகள் இடம்பெற்றன. எடுத்துக்காட்டாக இஸ்லாமியக் கட்சி உறுப்பினரும் இளைய போராளியுமான பரக்கத்துல்லா என்வவரின் கொலைச்சம்பவம் இடம்பெற்றது. இதுபற்றி பள்ளிமுனை மக்கள் பேசும் போதுää

சுடுபட்ட சம்மாந்துறை பரக்கத்துல்லாஹ் அங்க கடும் செல்வாக்கம்… புலிப்படை சுட்ட எண்ட  சாட்டுல ஐ. பி. கே தான் சுட்டயாம்…’

ல்லயில்ல… ந்தியப் படல்ல… கூடத் திரியுற தமிழ் ராணுவமாம்…ண்டு பேப்பர்ல கெடக்க…”ஜ24

இவ்வுரையாடல் மூலம் அக்கொலை யார் எதற்காகச் செய்தார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளநிலை புலப்படுகிறது. தொடர் துப்பாக்கி சூடுகளும் இடம்பெற்றன. ‘கொழும்பு புஞ்சி பொரல்லை சந்தியில் நிகழ்ந்த புலி பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் கொலன்னாவ பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி வெளிவிவகார அமைச்சருமான கௌரவ தினேரா எக்கநாயக கொல்லப்பட்டார். இவருடன் பாதுகாப்பு அதிகாரிகள் இருவரும்… மற்றும்…’ என செய்திகள் தொடர்வதைக் காணலாம். இதனைத் தொடர்ந்து இஸ்லாமியக் கட்சித் தலைவரின் சென்ற வாகனத்தின் மீது கிரனைட் வீச்சுத் தாக்குதல் இடம்பெறுகின்றது. அதன்போது வாகனத்தில் சென்ற சாரதிää பாதுகாப்பு உத்தியோகத்தர் பலியானதுடன் தலைவர் மயிரிழையில் தப்பினார். முத்துமுஹம்மதின் மூன்று விரல்கள் இழக்கப்பட்டது. இது பற்றிய செய்தி ஊடகங்கள் பலதரப்பட்ட கருத்துக்கள் தெரிவித்த வண்ணம் இருந்தது. இச்சம்பவம் அக்கால முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்துவதாகக் காணப்படுகின்றது. ‘ண்டைக்கி காலத்தால சவளக்கடைக்கி மாடு கட்டப் போன முஸ்லிமாக்கள் ரெண்டு பேரை வெட்டி நாணப்பத்தக்க போட்டிருக்காம்…’ ‘அக்கரபத்துல ஒழவு மிசினக் கடத்தினயாம்…ää காரைதீவில ண்டக்கி கர்த்தாலம்…’ இவ்வாறு சொத்துச் சூறையாடப்படல்ää தொடர்ந்த ஆட்டகடத்தல்ää அதற்கான பழிவாங்கல்கல்கள் ‘சம்பமாந்தொறைல்ல முஸ்லிமாக்கள் ரெண்டு பேரை கடத்தினையாம்…ää அவன்ட வீரமனைக் கிராமத்துக்க பூந்து நம்மடாக்கள் சுட்டையாம்… நாலு தமிழன் செத்தயாம்… ஊத்தப்பட சம்மந்தொறையே ரவுண்டப் பண்ணப் போகுதம்…’ இவ்வாறாக அக் காலப்பகுதி யுத்தத்திற்கு எந்தவித சம்பந்தமும் இல்லாத ஆயுதங்களை அறியாத முஸ்லிம்கள் மீது கட்டற்ற வன்முறையை எல்லாத்தரப்பும் கட்டவிழ்த்துவிட்ட காலப்பகுதியாக காணப்படுவதனை நோக்கலாம். அன்றைய முஸ்லிம்கள் ஒன்றும் அறியாத அப்பாவிகளாக இருந்தனர் என்பதைää ‘நம்மளத் தவிர எல்லார்டயிம் ஆயுதம் இரிக்கி…’ ‘நாம முஸிலிம் ஆக்கள் அரசியல் அநாதைகள்…’ என்பதன் மூலம் பதிவு செய்கிறார் நாவலாசிரியர்.

அன்றைய நிலை குறித்து நாவலாசிரியர் முத்துமுகம்மதினை நிறுத்தி பின்வருமாறு குறிப்பிடுகின்றார். கொழும்பில் இடம்பெற்ற புறக்கோட்டை தலைவர் பஸ் குண்டுவெடிப்புää முக்கிய கட்சித்தலைவர் ஒருவர் தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்ட போது ஏற்பட்ட கலவர நிலைகள்ää யுத்த நிறுத்த உடன்படிக்கையை அடிக்கடி மீறும் சிறு சிறு தாக்குதல்கள்ää வெள்ளை வேனில் கொழும்பின் கோடீஸ்வரப் பிரமுகர் கடத்தல்ää கப்பம்ää வெள்ளவத்தைச் சுற்றி வளைப்புக்கள்ää விடுவிக்க போராட்டம்ää பள்ளி சிறுவர்களின் பாடசாலை வாகனத்தில் குண்டுää சிதறி மரணித்த பிஞ்சுகள்ää தொடர்ந்த கலவரங்கள்ää இராணுவத் தலைமையகம் மீதான அதிரடித் தாக்குதல்கள்… அப்பப்பா… முத்துமுஹம்மது இப்படி எத்தனையோ அசம்பாவிதங்களுக்கும் முகம் கொடுத்தும் கண்டுணர்ந்தும் விட்டான்.

இவ்வாறான ஒரு பயங்கரவாதத்தினால் அன்றைய மக்கள் பல்வேறு எதிர்மறையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிட்டதுடன் அவர்களது இயல்புவாழ்க்கை என்பது சிக்கல் நிறைந்ததாகவே காணப்பட்டது. எடுத்துக்காட்டாகää மரண வீட்டில் பெரும் ஓலம் எழும்போது கூட ‘புலிப்படை புகுந்துட்டோ…’ எனக் கேட்டல். புதிய மனிதர்கள் ஊருக்குள் நுழையும் போது புலியாக இருக்குமோ என சந்தேகித்தல். அவசர தேவை நிமித்தமாகக் கூட வெளியில் செல்லமுடியாத நிலை. எப்போது எங்கு குண்டு வெடிக்குமோ என்ற அச்சம். தவிரää போக்குவரத்து என்பதும் மிகவும் சிரமமான ஒன்றாகவே காணப்பட்டது. இன்று நாம் 6 மணித்தியாலத்திற்குள் செல்லும் கொழும்புக்கு அன்று 12 மணித்தியாலங்கள் தேவைப்பட்டன. இந்நிலையினைää

ஒரு நாளும் இல்லாத 18 மணி நேர வாகனப் பயணம்! வழியெங்கும் பயத்துடன் தொல்லை தரும் இராணுவ பொலிஸ் காவலரன்கள்… முகாம்கள்… ஏறி இறங்கல்கள்… எவ்விடத்தில் குண்டு வெடிக்குமோ…? கன்னி வெடியில் பஸ் உயர கிளம்பி வெடிக்குமோ…?”25

என்பதன் மூலம் அறியலாம். இவ்வாறான அடிப்படையில் 90 களில் படை சூழ்ந்த யுத்த மோகம் எப்படி இருண்ட பரபரப்பும் பயமும் நிறைந்த வாழ்வை மக்களுக்கு தந்தன என்பதை அப்படியே வெளிக்காட்டியள்ளார் நாவலாசிரியர்.

3.2.3 விடுதலை உணர்வு

மேற்கூறப்பட்ட போர்ச் சூழலினாலும் எதுவும் அறியாத மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை போன்றவற்றாலும் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகம் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் மத்தியில் விடுதலை பெறவேண்டும் என்ற உணர்வு ஆழப்பதிந்திருப்பதை காணலாம். சிறுபான்மையினரான முஸ்லிம்கள் அரசியல் அனாதைகளாகவே இருந்தனர். இதனால் பெரும்பான்மையினரால் பலதரப்பாலும் காரணமின்றி தாக்கப்பட்டனர். தங்களது உயிர் உடைமை என்பவற்றை நாளுக்குநாள் பறிகொடுத்ததுடன் நிம்மதியற்ற வாழ்க்கையை வாழ்ந்தனர். எனவேதான்ää பெரும்பான்மையின் இவ்அடக்குமுறையிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வு அவர்களிடத்தில் மேலோங்குகிறது. அவ்வாறு விடுதலை பெற வேண்டும் எனின் தமக்கென தனியான அரசியல் தளம் வேண்டும் என்ற தேவையையும் அம்மக்கள் உணர்ந்தனர். இதனாலே  முஸ்லிம்களின் பிரதிநிதியான இஸ்ஹாக் அவர்கள்ää முஸ்லிம்களின் எழுச்சிக் குரலாகää தனித்துவத்தை நிலைநாட்டுவதற்காக அவர்களது அடையாள அரசியலாகப் பல்வேறு புத்திஜீவிகளுடன் இணைந்து இஸ்லாமியக் கட்சி என்னும் கட்சியைத் தாபித்தார். இது மரச் சின்னத்துடன் பெரும் விருட்சமாக வளர்ந்தது. இதன் மூலம் மக்களின் அரசியல் உணர்வைத் தட்டிஎழுப்பினார். விடுதலை பெறவேண்டும் என்ற தாகத்தோடு முஸ்லிம் சமுதாயம் இருந்ததனால் அக்கட்சியின்பால் பலரும் ஈர்க்கப்பட்டதுடன் பல இடங்களிலும் ஆதரவு திரளத் தொடங்கியது. இதற்கு முழு ஆதரவு வழங்கிய ஒரு கிராமமாக பள்ளிமுனைக் கிராமமும் அதில் ஒருவன் முத்துமுஹம்மதும் ஆவான். இதனைக் கொண்டே இந்நாவல் செல்கின்றது. அந்த வகையில் பள்ளிமுனைக் கிராமங்களின் விடுதலை உணர்வும் அதற்கு இக்கட்சியும் அதன் தலைமையும் எவ்வாறு தூண்டுகோலாக இருந்தது என்பதை நோக்கும்போதுää தொடக்கத்தில்ää

‘…போராளிகளே புறப்படுங்கள்! ஓரத்தில் நின்று கொண்டு ஓய்வெடுக்க நேரமில்லை… ஆலமரமாய் நாம் சமூகம் வாழ வேண்டும்…அதை வாழ்விக்க புறப்படுங்கள்…’ஜ26ஸ என்று உணர்ச்சி பூர்வமான வாசகத்தின் மூலம் விடுதலை உணர்வைத் தட்டி எழுப்புவதாகக் காணப்படுகிறது.

விடுதலை உணர்வை தூண்டுவதில் தீவிரமாக செயற்பட்டவராக தலைவர் இஸ்ஹாக் காணப்படுகின்றார். அவர் உரை நிகழ்த்தும் போதுää

“…அது மட்டுமல்ல நமது மாவட்டத்தின் ஆறு சபைகளையும் வென்றெடுத்து சிங்களவரின் இன துவேசத்திற்கும் புலிகளின் இனச் சுத்திகரிப்பிற்கும் இந்திய அமைதிப்படையின் அட்டகாசத்திற்கும் அவர்களின் ஒட்டுண்ணிகளான தமிழ் தேசிய இராணுவத்தினருக்கும் நமது ஒன்று திரண்ட பலத்தை காட்டுவதற்கும்ää ஏன் ஒரு சிறந்த ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் எமது தனித்துவ கட்சிப் போராளிகள் புறப்பட்டுவிட்டனர்…’

‘…இந்த வயற்ச்சேனைப் பிரதேச சபையை நமது கட்சி கைப்பற்றும் பட்சத்தில்… இன்ஸா அல்லாஹ்… இன்னும் சில மாதங்களில் எனது இரண்டாவது தாயகமான இந்த பள்ளிமுனை மக்களுக்குää ஒரு பள்ளிமுனை மகனேää தவிசாளராக அமர்ந்திருப்பார். தலைமைத்துவம் உறுதியாக இருக்கிறது…”ஜ27

இவ்வாறுää தலைவர் விடுதலை ஏற்படுத்த வேண்டும் என உணர்ச்சிப்பிளம்பாக தனது உரையை நிகழ்த்தää அதில் உந்தப்பட்ட மக்கள் விடுதலை வெறி கொண்டுää மைதானம் அதிர கோசமும் விண்ணதிர தக்பீர் முழக்கமும் பிளந்து கட்டினர்.

தியாக நிலத்தில் இரத்த வித்து விதைத்து வளர்த்த விருட்சம் நமது கட்சி! இதில் சுயலாப அறுவடைக்கு வழியில்லை. வியாபாரிகளுக்கு இது தாளவில்லை. இது புதிய போராளிகளின் புகலிடம். ஆளுமை மிக்க அடுத்த சந்ததியின் அமைவிடம். மொத்தமாக இது முஸ்லிம்களின் பலம்! அசைக்க முடியாத பலம்!! அந்த பலத்தை பள்ளிமுனை மக்கள் தேர்தலில் காட்ட வேண்டும். தலைமைத்துவம் வாக்குறுதி அளித்தபடி முதன்மை வேட்பாளரை பள்ளிமுனைக்கு தந்திருக்கிறது. அவரைத் தவிசாளராக்குவது இனி உங்களின் கைகளில்!!! நீங்கள் தம்பி முத்துமுகம்மதிற்கு பாடுபடுவது தலைவருக்கு பாடுபடுவது போலச் செய்வீர்களா?????” எனக் கேட்க நாரே தக்பீர் அல்லாஹ{ அக்பர் என கூட்டம் தெளிவாக பதிலளித்தது. இதன் மூலமும் விடுதலை உணர்வு வெளிப்பட்டு நிற்பதைக் காணலாம்.

தவிர பள்ளிமுனை மக்கள் அப்பயங்கரமானமான சூழலிலும் கட்சிக் கூட்டங்களில் கலந்து கொள்வதும் தேர்தல்களுக்கான ஏற்பாடுகளைச் செய்வதும் என்பன எப்படியாவது ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தி இனக்குழுக்களின் அட்டூளியங்களிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதற்கே ஆகும்.

நாம முசிலிம் ஆக்கள் அரசியல் அநாதைகள்…அதான் நம்மட தலைவரு…ந்தக் கச்சிய…’

ஓ…ஓ…நீ வேணும்டாப் பாரு…வெத்தி சுவர்! ஆறு எடமும் நம்மட கச்சி தான் வெல்லும்”ஜ28

என்பதன் மூலம் அம்மக்களிடமிருந்த விடுதலை பெற வேண்டும் என்ற தாகமும் எப்படியாவது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிடும் என்ற தலைவர் மீதும் கட்சி மீதும் கொண்ட நம்பிக்கையும் புலப்படுவதைக் காணலாம்.

3.2.4. வர்க்க முரண்நிலை

இரு நபர்கள் அல்லது இரு குழுக்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக தங்களுக்குள் முரண்பட்டு கொள்ளும்நிலை முரண்பாடு எனலாம். ஒரு சமூகத்தில் முரண்பாடு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும். அதாவதுää வர்க்கம் எங்கு இருக்குமோ அங்கு முரண்பாடு இருக்கும். இலங்கையைப் பொறுத்தவரை இது பல்லின மக்கள் வாழுகின்ற நாடாகும். இங்கு இன ரீதியான முரண்பாடுää வர்க்க ரீதியான முரண்பாடு என்பன அன்றுதொட்டே இடம்பெற்று வந்துள்ளன. கொல்வதெழுதல் 90 எனும் இந்நாவலில் வர்க்க முரண்பாடு எவ்வாறு இடம்பெற்றுள்ளது அல்லது வெளிக்காட்டப்பட்டுள்ளது என்பதை நோக்குகின்ற போதுää இங்கு இரு நிலைகளில் எம்மால் நோக்க முடியும். ஒன்றுää முழு நாட்டிற்குள்ளும் பெரும்பான்மை இனங்கள் சிறுபான்மை இனங்களை அடக்கி ஆழ்தல்ää அடுத்துää பள்ளிமுனைக் கிராமம் எனும் முஸ்லிம் கிராமத்தில் அம்மகளிடையே இடம்பெறும் வர்க்கமுரண்பாடு என்பனவாகும்.

பள்ளிமுனைக் கிராமத்தில் வர்க்கமுரண்நிலை எனும் போதுää தொழிலாளி - முதலாளிää படித்தவன் - பாமரன்ää ஏழை - பணக்காரன்ää அதிகாரத்தில் உள்ளவன் - அதிகாரமற்றவன் என்ற அடிப்படையில் இடம்பெறுவதைக் காணலாம்.

இந்நாவலின் கதாநாயகனான முத்துமுகம்மது வசதியோ படிப்பறிவோ அற்ற சாதாரண கிராமத்து இளைஞன். அன்றைய சூழலில் இஸ்லாமிய கட்சியின்பால் இவன்ää தனக்கே உரிய மலேசியா வாசுதேவன் குரலால் பாடுபவன். அதுவே அவனது தொழிலும் பொழுதுபோக்குமாக காணப்படுகிறது.

இந்நிலையில் கட்சிக் கூட்டமேடையில் அறிவிப்பதற்காகவும் பாடல் பாடுவதற்காகவும் தலைவரின் வரவை எதிர்பார்த்து காத்து நிற்கிறான். தலைவர் வரும்போதுää

இதோ…எங்கள் அடிமை விலங்கொடித்த தானத்தளபதி… எங்கள் இதய கனி…பாராள வந்த போராளிகளின் தலைவர்…இலங்கை இஸ்லாமிய கட்சியின் தலைவர்… வந்துவிட்டார்கள்”

என பெருமிதத்தோடு அறிவித்து விட்டு தலைவரை நெருங்கிச் சென்று அவரைச் சந்திக்க முற்படும் போதுää அதிரடிப்படை வீரன் ஒருவன் இடையில் புகுந்து முத்துமுகம்மதைத் தள்ளி விட்டான். மேடையிலிருந்து முத்துமுகம்மது மல்லாக்க விழுந்தான். மேடையில் இருந்த ஊர் பிரமுகர்கள் மத்தியில் ஒரு செல்லாகாசாகிப் போனான். இதன்மூலம் அன்றைய சமூகத்தில் காணப்பட்ட சமுதாய ஏற்றத்தாழ்வினை புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. இவ்வாறு அடிமட்ட தொண்டன் தள்ளிவிடப்படும் சம்பவத்துடன் தொடங்கும் இந்நாவல் முழுவதும் இவ்வர்க்க முரண்நிலை வியாபித்து இருப்பதைக் காணலாம்.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவரான சுல்தான் என்பவன் பணபலம்ää அதிகார பலம்ää கல்விஅறிவு என்பவற்றை ஒருங்கே பெற்றவனாக காணப்படுகின்றான். இவ்வாறான அந்தஸ்துமிக்க இவன் சாதாரண ஏழையான முத்துமுஹம்மதை தாழ்த்திக் கிண்டல் செய்பனாக காணப்படுகிறான். இது இந்நாவலின் பல இடங்களில் இடம்பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாகää

போடா கொறுக்காப்பளி! கொழும்பு தெரியாத பேயா! ஒனக்கு பாட்டு படிக்கத்தான் தெரியும்…”

வேறென்னய்ற எளஞரணித் தலைவரு? ஊடுவளவு இல்லாம நீயா பாரமடுக்கிற?... மச்சான் மொற எண்டத்துக்காக நாலை பண்ணலாமாஹா? என்று நக்கலாக கேட்டு சிரித்தான்.’

ஏ…நீ…ரெண்டு சதத்துக்கு வழியில்லாமல் கொறுக்காப்புளிய களவெடுத்த வங்கிசம் ல்லா…?”29

இவ்வாறாக சுல்தான்ää முத்துமுஹம்மதை தாழ்த்தி பேசுவதும்ää

கொறுக்காப் பேயா! என்ட பேசனல் வெஷயங்கள்ள தலையிடாதää சொல்லிட்டேன்! வெளங்குதா? கொழும்பு காடையன் முழுக்க என்ட பொக்கட்டுக்குள்ள… எனக்கு தெரியாம வாலாட்டினா பள்ளிமனைக்கி ஒண்ட மையத்து தான் போகும்… ஒழுக்கமாகப் படு’ என்று மிரட்டுவதும்ää இடைக்கிடையே ஆயுதத்தை காட்டி மிரட்டுவதும் மேலும்ää பள்ளிமுனைக் கிராமத்தை மட்டுமே அறிந்திருந்த முத்துமுஹம்மதை கொழும்பில் தனியாக தவிக்க விட்டு செல்வது போன்ற விடயங்கள் அதிகாரம் மிக்கவர்களால் சாதாரண மக்களுக்கு இழைக்கப்படுகின்ற அடக்குமுறைகளைக் காட்டுகின்றது. அது மட்டுமன்றி சப்பு சுல்தான் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவராக இருப்பதன் காரணமாக வறிய குடும்பத்து பெண்களை வெளிநாட்டிற்கு அனுப்பும் பெயரில் அவர்களை பலாத்காரம் செய்தும் அவர்களை இது குறித்து வெளியில் செல்லாதவாறு மிரட்டியும் வந்தான். அப்பாவி ஏழைப் பெண்கள் இதனை வெழியிலும் சொல்ல முடியாமல் தமது உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்களும் இடம்பெற்றன. மொட உதுமானின் மனைவி நஞ்சு குடித்து இறக்கிறாள். இதுபற்றி ‘கணவனான முடவுதுமான்: நெக்கி ஒரு மகன் தான் சேர்… அந்த சப்பு நாய் தான் சேர் என்ட கிளிய சாஹவெச்ச… அவன்… தான்சேர்… கொழும்புக்கு… கூட்டி போ…ய்…ண்டல்லோ… அல்லா…’ என்று தலைவரை நோக்கி கூறுகிறார். இதன்மூலம் சுல்தான் பலாத்காரம் செய்தது புலப்படுகின்றது. இது பற்றி சுல்தானிடம் முத்துமுகம்மது கேட்கும் போதுää

கதயை நிப்பாட்டு! நொக்கு தல பழுதுää கொழும்புல என்னய்ற? பிளைட்டுல ஏத்தி உட்ட. மொடவெனும் கூடத்தான் இரிந்தான். பொஸ்ஸிர மகள்ள முப்பது பவ்ண் தங்கமாலையை களவெடுத்த ண்டு சொல்லி… பொஸ்ஸி சூட்டுக்கோல் வெச்சி அடிச்சுத் தொத்தி உட்டுட்டான்.  அதுக்கு நானா ஆள்? நானா களவெடுக்க சென்ன?”30

இதன் மூலம் ஏழைப் பெண்களை தமது காம இச்சைக்கு இரையாக்கிவிட்டு அவர்களின் மேல் பழி சுமத்துகின்ற உயர்வர்க்கத்தின் போக்கினை அன்றைய கால பகுதிகளில் எம்மால் காண முடிகிறது.

பள்ளிமுனைக் கிராமத்தின் பள்ளித் தலைவர் ஜெயிலான் ஹாஜியார் இவர் அக்கிராமத்தில் அந்தஸ்தும் அதிகாரமும் மிக்கவர்ää தலைவரின் உறவினரும் கூட இவற்றைப் பயன்படுத்தி இவர் மோசடிகளில் ஈடுபட்டுள்ளார். இதனைää ‘மிஸ்டர் செய்னுல் ஆப்டீன்! நீங்க வயற்சேனை மாவட்ட ஆஸ்பத்திரி விஸ்தரிப்பு என்று முப்பத்தேழு ஏக்கர் வேப்பமரத் தோப்பை விழுங்கிய விஷயமும் பள்ளிவாசல் புனரமைப்பு என்று முப்பது லட்சம் முழுங்கினதும் வழக்கு வந்திருக்கு’ என்பதன் மூலம் அந்தஸ்த்து மிக்கவர்களை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று ஏழை மக்களையும் அவர்களது பணத்தையும் சுறண்டுகின்ற உயர்வர்க்கத்தின் போக்கைக் காணமுடிகிறது.

முத்துமுஹம்மதுடன் தலைவர் பேசுவதற்கு அழைத்த போதுää செயலான் ஹாஜியார் தொலைபேசியை முத்துமுஹம்மதிடம் கொடுத்தார். அவன் பேசி முடித்பின் தொலைபேசியை ஹாஜியாரிடம் கொடுத்த போதுää அவர் தனது சால்வையினால் அதனை துடைத்து விட்டு மீண்டும் பேசினார். இதன் மூலம் முத்துமுஹம்மது தீண்ட தகாதவன் எனும் செயற்பாடு வெளிப்பட்டு நிற்பதை காணமுடிகின்றது. இதன் பின்னரான உரையாடலில்ää

ம் செரிää தலைவருக்கு செல நேரம்…தல வேல செய்றல்ல. எங்கேயோ கெடக்குற கொடுக்காப்புளியண்ட பேயனையெல்லாம் டெலிபோனில் கூப்பிர்றதும்… இளைஞருக்கு தலைவராக்குறதும்… வேன்லாம் பெரியாளா? வேனுக்கு என்ன தெரியும்? என்னையும் தெரியுமாடா? எலக்கிசன் நடத்த தெரியுமாடா…? நொம்ஜீநேசன்ää பெலப்பாளிää அறுத்தால்ää தெல்லாம் என்னெண்டு தெரியுமாடா? அவள் அப்பக்காரி மகளை லைன் அடிக்க மட்டும் தான் தெரியும் என சிரித்தார். ‘இன்னமும் ன்னா காலுக்க இரிக்கிற கல்முனைக்கிப் போக தெரியா பேக்கையன் கொழும்புக்கு பொதுக்கூட்டத்துக்கு எப்படி போற… டேய்ää எப்பிர்றா கொழும்பு போற… கொழும்பு ஞ்சாலையா? ல்ல அங்காலயா?’ ‘கொழும்பு என்ன கலர் ண்டு செல்றா பாப்பம் முத்துமுகம்மது?’ என செய்லான் ஹாஜியாரும் தாடி மாஸ்டரும் சிரித்தனர்.”ஜ31

இதன் மூலம் சாதாரணமான ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஒருவன் ஊரில் அந்தஸ்துமிக்கவர்களால் தூற்றப்பட்டு அவமானப்படுத்தப்படுகின்றான். மேலும் இவர் தனது அந்தஸ்து அதிகாரத்தின் மூலம் வயற்சேனை பிரதேச தவிசாளர் பதவியைப் பெற வேண்டும் என்பதில் தீவிரமாகமாக செயல்படுகிறார். இதனால் ஏழை மக்களை தனக்கு ஆதரவு வழங்குவதற்காக மினி பஸ்ஸில் கொழும்புக்கு கூட்டி செல்கிறார். ஆனால் தலைவர் முத்துமுஹம்மதை தவிசாளராக நியமிக்கின்றார். இதனால் ஆத்திரமடைந்த இவர்ää ‘கரவலையில மீன் பொறக்கின கொறுக்காப்புளியண்ட நக்குத்தின்னி எலக்கிசன் கேக்கிறயாம்’. என ஒரு ஏழை எப்படி தவிசாளராகுவது என்று சண்டை இடுகிறார். அதன்போது முத்துமுகம்மத்திற்கு அறைந்து வசைச் சொற்களால் அவனை தாக்குகிறார். இதன் மூலம் ஏழைகளுக்கு அதிகாரத்தில் பங்கில்லை. அவர் அடிமைப்பட்டவர்கள். தீண்டத்தகாதவர்கள் எனும் தொனி மேலெழுவதைக் காணலாம். இதற்கிடையில் வந்த தலைவரின் இணைப்பதிகாரி ஹ{சைன் பாறுக் ‘உங்கட நாட்டு புத்திகளை உங்களோட வச்சுக் கொள்ளுங்க…இங்க வேணா… இது கொழும்பு…’ எனக் கூறுகிறார். இதன் மூலம் ஒரு வர்க்கபேதத்தினை காணமுடிகின்றது.

இவ்வாறு அன்றைய சமூகத்தில் ஏழைகள் அடக்கி ஒடுக்கப்படுதல்ää அதிகாரத்தில் அவர்களுக்கு பங்கு வழங்கப்படக் கூடாது எனும் மனநிலைää அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்படுதல்ää ஏழைப் பெண்கள் பலாத்காரத்திற்கு உட்படுதல் போன்ற வர்க்க முhண்பாடுகள்ää சமுதாய ஏற்றத்தாழ்வுகள் என்பன நாவலாசிரியரால் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

3.2.5. காதல் உணர்வு

மனிதனாகப் பிறந்த அனைவரிடத்திலும் காதல் என்ற அம்சம் காணப்படுகிறது. உலகின் எந்த மூலை முடுக்குகளுக்குள்ளுமே காதல் பரவிக் கிடக்கின்றது. இவ்வாறிருக்க பள்ளிமுனைக் கிராமத்திலும் அக்கிராமிய மணம் கமளும் அழகிய காதல் கதை ஒன்றைத் தந்துள்ளார் நாவலாசிரியர். தொண்ணூறுகளில் இடம்பெற்ற பயங்கரவாதம் அதற்குள் எழுந்த அரசியல் என்பன குக்கிராமமான பள்ளிமுனைக் கிராமத்தில் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தியது என்பதை வெளிப்படுத்த விளைந்த ஆசிரியர் அதனோடு இணைந்த வகையிலே காதலையும் வெளிப்படுத்தி உள்ளார். அரசியலை வெளிப்படுத்த விளைந்த ஆசிரியர் அதனோடு இணைந்த வகையில் காதலை வெளிப்படுத்தினாரா? அல்லது ஒரு காதல் கலந்த அரசியல் கதையை நகர்த்திச் சென்றுள்ளாரா? என சந்தேகிக்கும் அளவிற்கு இங்கு காதல் என்பது முக்கியத்துவம் பெற்று காணப்படுகின்றது. கதையின் நாயகனான முத்துமுஹம்மதினதும் அவனுடைய மாமியின் மகளான மைமுனாவினதும் காதலே இந்நாவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்றய சமூக சூழலில்ற்கேற்ப அவர்கள் இருவருக்குமான காதலை வெளிப்படுத்தியுள்ளார் ஆசிரியர். இதனைப் போர்க்கால காதல்கதைää அரசியல் கலந்த காதல்கதை என எம்மால் குறிப்பிட முடியும்.

நாவலின் ஆரம்பத்தில் எவ்வாறு நாவலாசிரியர்ää தொண்ணூறுகளின் அரசியலையும் யுத்தகோரத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளாரோ அவ்வாறே காதலையும் முதல் அத்தியாயத்திலேயே அறிமுகப்படுத்தியுள்ளார். ஆரம்பத்திலிருந்து இறுதி வரை அக்காதலை வேரூன்றச் செய்துள்ளார்.

முத்து முஹம்மது மேற்படி வசனத்தை ஐம்பத்து மூன்றாவது தடவையாகவும் அறிவித்துவிட்டு பெண்கள் பகுதியை நோட்டமிட்டான். திட்டுத்திட்டாக முக்காட்டு பெண்கள் கூட்டம்… பிள்ளைகள்… மைமுனாவும் வந்திருப்பாள். எங்கே மைமுனா…? சட்டென பீடா வியாபாரிக்கு இடப்புறமாக மைமுனா தென்பட்டாள். அட மைமுனா சொன்னாற் போலவே வந்திருக்கிறாள்… மைக்கில் பேசியதை கண்டிருப்பாள்… முத்துமுஹம்மது பொங்கிய பெருமையுடன் மறுபடி ஒலிவாங்கி பிடித்துää மறுபடியும் பேரினவாத விலங்கை ஐம்பத்து நாலாவது தடவையும் உடைக்க ஆரம்பிக்க மைமுனாவும் அவளது தம்பி யாசீனும் மேடைக்கு அருகிலேயே வந்து நின்று முத்துமுகம்மதை அதிசயமும் ஆர்வமாக பார்த்தனர்.”ஜ32

இவ்வாறு ஆரம்பிக்கும்ää உலகம் அறியாத அடிமட்ட தொண்டனின் காதல் கதை பாராளுமன்ற உறுப்பினரான முத்துமுஹம்மதின் திருமணத்தோடு முடிவடைகின்றது. இதற்கிடையில்ää ஆயிரம் ஆயிரம் வலிää வேதனைää ஏக்கம்ää தவிப்புää கண்ணீர்ää பிரிவு என கதை நகர்கிறது. மைமுனாவை பொறுத்தவரையில்ää அவள் ஏழைக் குடும்பத்தில் நான்கு சகோதார்களுக்கு அக்காவாகவும் மூத்த புதல்வியாக பிறந்தவள். குடும்பத்தின் சுமை அவள் தலையிலேயே குமிக்கப்பட்டிருந்தது. இதனால் அவளது தாயார் அவளை தொழில் நிமித்தம் வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு ஆயத்தமாகிறாள். ஆனால்ää முத்துமுஹம்மது இதற்கு உடன்படாமல் முரண்படுகிறான். எவ்வாறு உடன்படுவான்? மைமுனா அவனது உயிர்மூச்சு… அவளது பிரிவை எப்படித் தாங்குவான்?... முத்துமுஹம்மதை நோக்கி மைமுனாவின் தாயார்ää மைமுனாவையும் அவளது தங்கைகளையும் பாரமெடுத்து வீடுவளவு வாங்குவதற்கு உன்னால் முடியுமா? என்று கேட்கும்கேள்வியால் பதில்கூற முடியாமல் சர்வங்கமும் ஒடுங்கிப் போகிறான்…

முத்துமுகம்மது மைனாவிடம் சென்று ‘என்ன உட்டுட்டு போய்ருவியா…? மைமுனா நான் சாகுவேன் நீ போனா… அதுவும் ந்தச் சப்பு சுல்தான் நாயோட நீ போனா நான் வெஷம் குடிப்பன். ல்லாட்டி புலிப்படையிலான் சேர்வேன்… ஓம்!’ எனக் கூறுவதன் மூலம் அவனது அப்பாவித்தனமான காதல் வெளிப்பட்டு நிற்பதைக் காணலாம்.

நாவலாசிரியர் இவர்களுக்கிடையிலான காதலை ஒரு நேர்த்தியாக முறையில் அழகுற வெளிப்படுத்தி உள்ளார். இருவரும் சிறுவிடயங்களிலும் ஒருவருக்கொருவர் காதல் கொள்வதாக காணப்படுகிறது. ‘முத்துமுஹம்மது மைமுனாவை நேராகப் பார்த்தான். அந்தி கருக்கலில் முகம் செவ்வரி படர்ந்திருந்தது. சாயம் போட்ட பன் குருத்துப் போல் இருந்தாள். வட்டமாகப் படபடக்கும் விழிகளும் கூர்மூக்கும் நம்மையே நம்பி நமக்காகவே வாழ்கிற பதினேழு வயது கிராமத்து இரகசியம்! இவளா… வெளிநாட்டுக்கா… முத்துமுஹம்மது நெஞ்சு வெம்பி கீழே உட்கார்ந்தான். கண்களில் நீர் முட்டியது.’ என்பதும்ää ‘மைமுனா எதிர்பாராத விதமாக முத்துமுகம்மதை நெருங்கி அவனை ஒரு செக்கன் இறுக்கமாக கட்டிப்பிடித்தாள். அவனது மற மற கன்னத்தில் பற்கள் பதியும் வண்ணம் இறுக்கமாக ஒரு சத்த முத்தம் கொடுத்து சட்டென்று விலகிää அவனது கையில் ஒரு மார்பளவு புகைப்படத்தை திணித்தாள். நான் ‘கொவைத்’ துலயிரிந்து இருந்து வெரு மட்டும் என்ட நெனப்பாத்தான் மச்சான் இரிக்கணும் நீங்க! அதுக்குத்தான் இது!’ என கூறுவதும் அவர்களுக்கு இடையிலான அன்பின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது.

மைமுனா வெளிநாடு செல்ல ஆயத்தமாகிறாள். முத்து முஹம்மதும் கூடவே செல்கின்றான்.  அவர்கள் செல்லும் 18 நேர மணிநேரää கொழும்பு நோக்கிய பஸ் பயணத்தில் இரு காதல் ஜோடிகளின் கண்களிலும் காதலும் பரிதபிப்பும் பிரிவுத்துயரமும் ஏக்கமும் பொங்கிவழிவதனை காணலாம். இதற்கிடையில் சப்பு சுல்தான் எனும் வெளிநாட்டு முகவரின் ஊடாகத்தான் மைமுனா வெளிநாட்டுக்கு செல்லவிருக்கிறாள். சப்பு சுல்தான் பல பெண்களை பலாத்காரவன் செய்தவன் என முத்துமுஹம்மது அறிந்திருந்தமையால்ää அவனை நினைக்கும் போதெல்லாம் முத்து முஹம்மதுவிற்கு நரகம் கொதித்தது. இதனால் மைமுனாவிடம் அடிக்கடி அவனிடமிருந்து தள்ளி இருக்குமாறு கூறுகிறான். முத்துமுஹம்மதையும் தம்பி யாசீனையும் ஏமாத்தி கூட்டிச்சென்று இனம் புரியாத இடத்தில் விட்டுவிடுகிறான் சுல்தான். அப்போது முத்துமுஹம்மது மைமுனாவுக்கு ஏதாவது நடந்து விடுமோ எனக் கலங்குவதும் அவளுக்கு ஏதும் நடந்து விடக்கூடாது என்ற அவலப்படுவதும் அவள் மீதான காதலையும் தவிப்பையும் வெளிப்படுத்துகிறது.

மைமூனா வெளிநாடு சென்றபின்ää பள்ளிமுனைக் கிராமத்துக்கு போகவே பிடிக்கவில்லை முத்துமுஹம்மதுக்குää அவளில்லாத அக்கிராமத்தை அவனால் நினைத்தும் பார்க்க முடியவில்லை. இந்த சூழ்நிலையில் ‘பொன்மானை தேடி நான் பூவோடு வந்தேன் நான் வந்த நேரம் அந்தப் பூவாங்கு இல்லை’ என்ற பாடலை முணுமுணுக்கிறான். இதன் மூலம் அவன் மைமுனாவின் மீது வைத்திருந்த காதலின் வலி வாசகர் மனதில் ஆழமாக பதிகிறது.

சாதாரணமான முத்துமுஹம்மது அதிகாரத்தோடு மீண்டும் பள்ளிமுனைக்கு திரும்பும் போதும்ää சவ10தி சென்ற தன் பிரியத்திற்குரிய மைமுனாவை மறக்கவில்லை. அவளது நினைவு அவனை வாட்டுகிறது.

வெளிநாட்டுக்குப் பறந்து விட்ட மைமுனாவிடம் இருந்து ஒரு தகவலும் வரவில்லை. அறியவும் விருப்பமில்லாதிருந்தது. ஆனால் மைமூனாவின் கூரான மூக்கும் அப்பாவி உருண்டை வழிகளும் நெஞ்சில் அடிக்கடி சுரீர்…சுரீரென்று தைத்தது. வலித்தது. ‘கோயில் மணி ஓசை… தன்னை கேட்ட தாரோ… இங்கு வந்ததாரோ…’ என்பதும்ää மைமுனாவின் தம்பி யாசீனைப் பார்க்கும் போதுää ‘அப்படியே… மைமூனாவின் கண்ணீர் கண்கள்… மைமுனாவின் கூர்மூக்கு… காஆஆதல் தீபம் ஒன்று… நெஞ்சிலே… ஏஏற்றி வைத்தேன்ஏஏன்… போய்விட்டாள்… போயே விட்டாள்… எங்கே…?”33ஸ என்பதும் என்னதான் பதவிகள் வந்து சேர்ந்தாலும் ஒரு பெண்ணின் மீதான அடங்காத காதலும் தீராத அன்பு மட்டுமே மனதுக்குள் எஞ்சிப்போய் இருக்கும். இதனால் அதிகமாக காதலிக்கப்படுகின்ற மைமுனாவின் நினைவுகளில் சதாவும் அலையின் துரும்பென அல்லாடுகின்றான் முத்துமுகம்மது. இதன் மூலம் அவனது புனிதமான காதல் வெளிப்படுத்தப்படுகிறது.

இதற்கிடையில் மைமுனா சப்பு சுல்தானினால் பலாத்காரத்திற்கு உட்படுகின்றாள். இது முத்து முஹம்மதுக்கு தெரியவரவேää அவனது நிலை பற்றி நாவலில் குறிப்பபிடும் போதுää ‘விக்கித்து போயிருந்தான் முத்துமுஹம்மதுää வியர்த்து நனைந்திருந்தான்ää கண்கள் சிவப்பாயிருந்தனää கைகள் நடுங்கினää நெஞ்சு வறண்டு காய்ந்து விட்டதுää அசைய இயலவில்லைää தொண்டைக்குள் எதுவோ உருண்டு பொறுத்தது. மைமுனாவின் குரல்…! எத்தனையோ காலங்களுக்கப்பால் எத்தனையோ மைல்களுக்கப்பால் இருந்து …இதை கேட்கவா இத்தனை நாட்கள் காத்திருந்து…’ இதன் மூலம் உண்மையான நேசம் கொண்ட முத்துமுஹம்மதின் நிலையை வாசகர்களால் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.

சப்பு சுல்தானின் கதையை முடிக்க எண்ணுகிறான் முத்துமுகம்மது. ஆவேசம் அவன் உடல் முழுக்க ரத்தசூடு மாதிரி பரவுகிறது. அவன் தனது பதவியை கூட இராஜினாமா செய்ய எண்ணுகிறான். தனது உயிரை நாசமாக்கிய சுல்தானைக் கொன்று தீர்க்க வெறியோடு கிளம்புகிறான். தனது காதலிக்கு துன்பம் ஏற்படுகின்ற போது அதை எந்தக்காதலனும் தாங்கிக் கொள்ள மாட்டான். அவ்வாறானதொரு நிலையிலேயே முத்துமுஹம்மது காணப்படுகிறான். அதுவும் தான் சொர்க்கமாக கருதுகின்றää தனது உயிராக நேசிக்கின்றää அவளுக்காகவே வாழ்கின்றää முத்து முஹம்மது எப்படி இதனை தாங்கிக் கொள்வான்?.  ஒரு யதார்த்தமான  காதலையே அன்றைய சூழ்நிலைக்கக்கேற்ப நாவலாசிரியர் இங்கு வெளிப்படுத்தியுள்ளார்.

3.2.6. கிழக்கிலங்கை மக்களின் கலாச்சாரää பண்பாட்டு அம்சம்

ஒரு சமூகத்தின் பண்பாடுää கலாச்சாரம் என்பதுää காலம் காலமாக கடைபிடித்து வரும் செயற்பாடுகள் ஆகும். ஒரு நிலையில் பண்பாடு என்பதுää ஒரு குழுவின் வரலாறுää போக்குகள்ää பண்புகள்ää புரிந்துணர்வுகள்ää அறிவுப்பரம்பல்கள்ää வாழ்வியல் வழிமுறைகள்ää சமூக கட்டமைப்பு என்பவற்றை சுட்டி நிற்கிறது. மேலும்ää மொழிää உணவுää இசைää சமய நம்பிக்கைகள்ää தொழில் சார்புகள்ää கருவிகள் போன்றவையும் இவற்றுள் அடங்கும். இவ்வாறான பண்பாட்டு கலாசார அம்சங்கள்ää சமூகத்திற்கு சமூகம் நாட்டிற்கு நாடு வேறுபட்டதாக காணப்படுகின்றது. கொல்வதெழுதல் 90 என்னும் இந்நாவல்ää கிழக்கிலங்கையின் முஸ்லிம் கிராமத்தை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றது. அதனால் இந்நாவல் முழுவதும் முஸ்லிம் சமூகத்தின்ää கலாச்சாரம் பண்பாட்டு அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக அவர்களுக்கே உரிய சமய சம்பிரதாயங்கள் மற்றும் நம்பிக்கைகள் என்பன வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை பின்வருமாறு நோக்கலாம்ää

3.2.6.1 சமய சம்பிரதாயம்

இஸ்லாமிய சமயத்தை பொறுத்தவரையில்ää முஸ்லிம்கள் ஓரிறைக் கொள்கை கொண்டுள்ளதுடன் குர்ஆன் மற்றும் நபி அவர்களின் வழிமுறையான சுன்னா என்பவற்றை பின்பற்றக் கூடியவர்கள். இதன்படிää இந்நாவலில் எவ்வாறான சமய சம்பிரதாய விடயங்கள் இடம்பெற்றுள்ளன என்பதை நோக்குவோம்.

ஸலாம் கூறல்:

ஒவ்வொரு சமயத்தினரும் ஒரு சபையை ஆரம்பிக்கும் போது அல்லது ஒருவரை சந்திக்கும் போதுää ஒவ்வொரு விதமா வாழ்த்துக்களை சொல்லி ஆரம்பிப்பர். முஸ்லிம் சமுதாயத்தை பொறுத்தவரையில் ஸலாம் கூறுவது வழக்கமாகும். இந்நாவலில் கட்சிக் கூட்டங்கள் இடம்பெறும் போது சலாம் கூறி ஆரம்பமாவதை அவதானிக்கலாம்.

அஸ்ஸலாமு அலைக்கும். பொதுமக்களேää வாக்காளப் பெருமக்களே கூட்டம் தொடர்ந்து நடைபெறும் நமது கட்சியின் பள்ளிமுனைக்கிளையின் கொள்கை பரப்புச் செயலாளரான நான்… என்று ஆரம்பித்ததும்…”

இவ்வாறே ஒரு சபையினை ஆரம்பிக்கும் போதுää தமது கடவுளைப் புகழ்ந்து ‘பிஸ்மில்’ கூறும் வழக்கமும் முஸ்லிம்களிடத்தில் காணப்பட்டன. இவையும் இந்நாவலில் இடம்பெற்றுள்ளன.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்hஹீம்! அன்பார்ந்த பொதுமக்களே… இலங்கை இஸ்லாமியக் கட்சியின் தேசிய தலைவரும் நமது கண்ணின் மணியும் ஆகிய ஆலி ஜனாப் எம். எச். எம். இஸ்ஹாக் எம். பி அவர்களே மற்றும் இங்கு வீற்றிருக்கும்…”ஜ34

என ஆரம்பிப்பதாக உள்ளது.

கிராஅத் ஓதி ஆரம்பித்தல்:

ஒரு சபை அல்லது நிகழ்வினை ஆரம்பிக்கும் போது ஒவ்வொரு சமூகமும் அதற்குரிய சம்பிரதாய முறைப்படி அவரவரது கடவுளை புகழ்ந்து நிகழ்வினை ஆரம்பிப்பது வழக்கமாகும். அவ்வாறு முஸ்லிம் சமூகத்தில் ஸலாம் கூறியதன் பிற்பாடுää தமது கடவுளான அல்லாஹ்வைப் புகழும் வகையில் ‘கிராத்’ ஓதி ஆரம்பிப்பது வழக்கமாகக் காணப்படுகிறது. எடுத்துக்காட்டாகää

ஊர் எல்லையிலிருந்த கடற்கரை மைதானத்தில் இறுதிப் பொதுக்கூட்டம் ஆரம்பமானது புரட்சி மௌலவி புழைல் தலைவரின் கவனயீர்ப்புக் கருதி நீண்ட ‘கிராஅத்’ நீட்டி முளைக்கி நிறுத்த மனமின்றி நிறுத்திய பின்னும் ‘ஸதக்ல்லாஹ{…’ எனத் தொடங்கி குட்டி உபவசனத்துடன் ஓய்வானார்.”ஜ35

 என கட்சிக் கூட்டத்தின் போது கிராத் ஓதி ஆரம்பிப்பது இந்நாவலில் இடம்பெற்றுள்ளது.

முஸாபஹா செய்தல்;:

முஸ்லிம் சமூகத்தின் வழக்கங்களில் முஸாஹபா செய்வதும் ஒன்றாகும். அதாவது தங்களுக்கு இடையில் பரஸ்பரம் ஒற்றுமை ஏற்படுத்துவதற்காக இது மேற்கொள்ளப்படுகின்றது. நாவலில் தலைவர் கட்சிக் கூட்டம் முடிந்து விடைபெறும் போது முஸாகபா செய்து விடைபெறுகிறார். இதனைää

தலைவர் முதலில் முத்துமுஹம்மதிற்கு ஸலாம் கொடுத்து தோளோடு தழுவி முஸாகபா செய்தார்."ஜ36

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைலாகு செய்தல்:

முஸாகபா செய்வதினைப் போன்று கைலாக செய்தலும் முஸ்லிம் சமூகத்தின் ஒரு வழக்கமாகும். கைலாகு என்பது கைகுலுக்குதல். ஒருவரை காணும் போது அவருடன் கையிலாக செய்து பேச்சை ஆரம்பித்தல். இதன் மூலம் ஒற்றுமை பரஸ்பரம் என்பன வளரும் என்பது அவர்களது நம்பிக்கை ஆகும்.

பொறுமையா இருங்க… சரி நான் மறுபடியும் வரேன்… இருந்தபடியே உதுமானுக்கு ‘கைலாகு’ கொடுத்து ஸலாம் கூறிய தலைவரின் தழுவலில் உதுமான் தன்னை மறந்தார்.”ஜ37

என இந்நாவலில் இவ்வழக்காறு இடம்பெறுவதைக் காணலாம்

ஸலவாத்து கூறுதல்:

முஸ்லிம் சமூகத்தை பொறுத்தவரை ஒரு நிகழ்வு ஆரம்பிக்கும் போதுää அல்லது சபை கூடும் போதுää ஸலாம் கூறி கிராத் ஓதி ஆரம்பிப்பதைப் போன்று சபை கலையும்போது ஸலவாத்து கூறி முடிவடைவது ஒரு வழக்கமாகும். இது முறைப்படி சபை கலைய வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்படுகின்றது.

“…சரி… கூட்டம் இத்துடன் முடிவடைகிறது. அனைவரும் எழுந்து ஸலவாத்து சொல்லுங்கள்…” என்றார். தலைவர் எழுந்துவிட்டார். சபை எழுந்தது. செயலாளர் தாமதமாக எழுந்தார். பற்பல குரலில் ஸலவாத் ஆரம்பிக்க - புரட்சி மௌலவி புழைலின் உரத்த குரல் எல்லா குரல்களையும் கட்டுப்படுத்தி பீறிட்டு முழங்கியது.”ஜ38

இவ்வாறு கட்சிகூட்டம் முடியும் போதும்ää ஸலவாத்துக் கூறி கலையும் காட்சி இந்நாவலில் இடம்பெற்றுள்ளது.

தக்பீர் கூறுதல்;

இந்நாவலில் பெரும்பாலான இடங்களில் ‘நாரே தக்பீர்’ ‘அல்லாஹ{ அக்பர்’ என்ற தக்பீர் இடம் பெறுவதனைக் காணலாம். அல்லாஹ{ அக்பர் என்பதற்கு அல்லாஹ் மிகப் பெரியவன் என்பது பொருளாகும். ஒவ்வொரு கூட்டத்திலும் இனத்துவ அரசியலுக்கு எதிராக போராடி நமது இனத்தை காப்போம் என கட்சிக் கூட்டங்களில் பேசும் போதுää இத்தக்பீர் இடம்பெறுகிறது. அதாவதுää வெற்றியும் தோல்வியும் நம்மை படைத்த இறைவன் கையிலே உள்ளது. அவன் நாடினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். எவர் எவ்வித சூழ்ச்சி செய்தாலும் வெற்றி நிச்சயம் என்பதாகும். இந்த நம்பிக்கையை அடிப்படையாக கொண்டே ஒவ்வொரு கட்சிக் கூட்டம் மற்றும் ஆட்தெரிவிலும் இக்கோஷம் எழுவதைக் காணலாம்.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிரதேச சபைத்தேர்தலில் இம்மாவட்டத்தில் ஆளும் ஐ. என். பி கட்சியால் ஒரு சபையை கூட வெல்ல முடியாது.

நாரே தக்பீர்…’ செய்லான் ஹாஜியார் எடுத்துக் கொடுக்க -

அல்லாஹ{ அக்பர்!’ஜ39ஸ கூட்டம் அதிர்ந்தது. இவ்வாறு பல இடங்களில் இத்தக்பீர் முழக்கம் இடம்பெறுவதனைக் காணலாம்.

நரகம்:

இஸ்லாத்தில் நன்மை செய்தவர்கள் சொர்க்கம் செல்வதும் தீமை செய்தவர்கள் நரகம் செல்வதும் இறை கட்டளை ஆகும். அந்தவகையில்ää முஸ்லிம் சமூகத்தில் யாரும் ஏதாவது ஒரு தவறு செய்யும் பட்சத்தில் அல்லது தம்முடன் முரண்படும் பட்சத்தில் அவரை ஏசுவதற்காக நீ ‘நரகத்’ திற்குச் செல்வாய் என்றும் அங்கு நரகவாசிகளுக்கு இடம்பெறும் தண்டனைகளை குறித்து ஏசுவதும் வழக்கமாகும்.

மைமுனா தன்னை பலாத்காரம் செய்த விடயத்தை கூறும்போதுää ‘தங்க மச்சான்…அவன் எனக்கி செஞ்ச கொடும… என்ட மானத்துக்கு அவன் செஞ்ச ஹர்மத்துக்கு அல்லாஹ{த்தஆலா அவனுடைய கண்ணிலே பாம்பு கொத்தி சாவான்… புழுத்து சாவான்… வெடித்துச் சிதறுவான்… ஏழாம் நரகத்தில் கெடந்து எரிவார்…’ஜ40ஸ என ஏசுகிறாள்.

இன்னாலில்லாஹ்’ää ‘இன்ஷா அல்லாஹ்’ போன்ற வார்த்தை பிரியோகங்களை பயன்படுத்தல்:

அதாவது ஒருவருடைய இறப்புச் செய்திகள் கேட்கும் போது முஸ்லிம்கள் ‘இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்’ என்று கூறுவது அவர்களுக்கு கடமையாகும். அதாவது இதன் பொருள் நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கு உரியவர்கள் நிச்சயமாக நாம் அவனிடமே மீள வேண்டும் என்பதாகும். அதேபோல எதிர்காலத்தில் ஒரு விடயம் நடக்க இருக்கின்ற போது அல்லது ஒருவிடயத்தை செய்வதாக கூறும்போதுää அதற்கு ‘இன்ஷா அல்லாஹ்’ என்று கூறுவது வழக்கமாகும். அதாவது அல்லாஹ் நாடினால் நடக்கும் என்பது இதற்குப் பொருளாகும். இவ்வாறான வார்த்தை பிரயோகங்கள் இந்நாவலில் இடம்பெற்றுள்ளதனை காணலாம்.

இஸ்ராயீல்:

இஸ்ராயில் என்பது ஒரு மலக்காகும். இஸ்லாத்தில் ஒவ்வொரு மலக்குகளிடமும் ஒவ்வொரு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில்ää இஸ்ராயில் என்ற மலக்கு உயிரை கைப்பற்றுபவர் ஆவார். முஸ்லிம் சமூகத்தில் யாரும் மரணிக்கும் பொழுது இஸ்ராயில் உயிரெடுத்திட்டார்.  என்று சொல்லுகின்ற வழக்காறு காணப்படுகின்றது.

முத்தும்மதுää… எண்ட மருமகனே… உங்க சாச்சிய இஸ்ராயிலுட்ட குடுத்துட்டன் பாத்தியா டா…’ஜ41ஸ என மனைவியை இழந்த மொட உதுமான் கூறுகிறார்.

முக்காடுää தொப்பி அணிதல்:

முஸ்லிம் பெண்களை பொறுத்தவரை கை மற்றும் முகம் தவிர்ந்த ஏனைய உறுப்புகள் இஸ்லாத்தில் மறைக்கப்பட வேண்டும். அதற்கு ஏற்றவாறு அம்மக்கள் தமது ஆடைகளை அணிவர். அன்றைய சமூகத்தில் முஸ்லிம்கள் ‘முக்காடு’ போடுகின்ற வழக்கம் காணப்பட்டது. தமக்கு உரிமையில்லாத ஆண்களைக் காணுகின்ற போதுää முக்காடு தூக்கி போடுகின்ற வழக்கம் காணப்பட்டது. அதேபோல ஆண்களை பொறுத்தவரையில்ää பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் தொழுகைக்காக பள்ளிக்குச் செல்லும் ஆண் மக்கள் தொப்பிகளை அணிந்து செல்வர். அதிலும் முதியவர்கள் எல்லாநேரமும் தொப்பிகளை அணிபவர்களாகக் காணப்பட்டனர்.

தலைவர் அதிரடி அடிப்படையை புறக்கணித்து சடுதியாக பெண்கள் பகுதியை நோக்கி நடந்தார். உடனே அத்தனை பெண்களும் சிரிப்பும் மகிழ்வுமாக வெட்கப்பட்டு முக்காட்டையும் முந்தானைகளையும் சரி செய்து கும்பலாக எழுந்தனர்.”ஜ42

3.2.6.2. நம்பிக்கைகள்:

கிழக்கிலங்கையைப் பொறுத்தவரையில் இங்கு முஸ்லிம்கள்ää தமிழர் இரு இனமும் கலந்து வாழ்கின்றனர். எனவே இருவரது கலாச்சாரமும் அவர்களுக்குள் தாக்கம் செலுத்துவதை காணலாம். அந்தவகையில் இஸ்லாத்திற்கு முரணான சில விடயங்களை நம்பிக்கை என்ற பெயரில் பின்பற்றி வருகின்ற போக்கு முஸ்லிம் சமூகத்திடையே காணப்படுகின்றது. அவ்வாறு அக்காலத்தில் காணப்பட்ட போக்குகள் இந்நாவலில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை நோக்குவோமாயின்ää

சியாறம் வழிபாடு:

சியாறங்கள் என்பதுää ஒரு சமூகத்தின் வரலாற்று அடையாளங்களின் ஒரு பகுதிää அவை மனிதர்களின் கப்றுகளாகவோää நினைவு இடங்களாகவோää அடையாளப் பொருட்களாகவோ இருக்க முடியும்ää சியாறங்கள் என்றால் அவை கல்லறைகள் மட்டுமே என்பது ஒரு சிலரது கருத்து. ஒலியுல்லாக்கள்ää வலியுல்லாக்கள் எனப்படுகின்ற இறைநேசர்கள் இறந்ததன் பின் அவர்களுக்கு சியாறம் அமைக்கப்படும். அச்சியாறங்களை வணங்குகின்ற போக்கு முஸ்லிம் சமூகத்தில் சிலரிடையே காணப்படுகிறது. இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் அல்லாஹ்வை மட்டும் வணங்கவேண்டும். எனினும் சிலபகுதிகளில்ää சியாரங்களை வணங்குகின்ற போக்கும் காணப்படுகிறது. அதாவது வலிமார்கள் இறந்ததன் பின்னரும் அவர்கள் அற்புதங்களை நிகழ்த்தி மக்களின் குறைகளைத் தீர்ப்பார்கள் என்ற நம்பிக்கை முஸ்லிம் சமூகத்தில் சில பகுதிகளில் காணப்படுகிறது. இதனால் அச்சியாறங்களை அவர்கள் வணங்கி வந்தனர். இதுபற்றி இந்நாவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு ‘காட்டவுலியா அப்பா’ என்பவரின் சியாறத்தை வணங்குகின்ற போக்கு காணப்படுகின்றது.

தலைவரின் கட்டளைப்படி முத்துமுஹம்மது பள்ளிமுனைக்கு வந்திருந்தான். முதலில் காட்டல்லியா அப்பா சியாறம் சென்று நேர்த்தி செய்து மீண்டான்.”ஜ43

என அன்றைய சமூகத்தின் சியாற வழிபாட்டு நம்பிக்கை பற்றி குறிப்பிடப்படுகிறது.

சத்தியம் செய்தல்:

இஸ்லாம் ஓரிறைக் கொள்கை கொண்ட மார்க்கம். இதில் அல்லாஹ்விற்கு மட்டுமே சத்தியம் செய்ய வேண்டும். ஆனால் குர்ஆன் மீது சத்தியம் செய்தல்ää சியாரம் மீது சத்தியம் செய்தல்ää தலையில் சத்தியம் செய்தல் போன்ற நம்மபிக்கைகள் முஸ்லிம்கள் மத்தியில் காணப்படுகின்றன. இவை அந்நிய கலாச்சார தாக்கம் முஸ்லிம் சமூகத்தில் ஏற்பட்டதன் விளைவு என்றும் குறிப்பிடலாம். இவ்வாறு சத்தியம் செய்கின்றபோக்கு முஸ்லிம் சமூகத்தில் இருக்கிறது என்பதனை இந்நாவலில் நாவலாசிரியர் குறிப்பிட்ள்ளார். எடுத்துக்காட்டாகää

முத்து மச்சான தவிர வேற யாரும் இந்த கெசட்ட கேட்க கூடா. அப்படி கேட்டா அல்லாறியää அந்த மைதின் ஆண்டவரு அறிய சத்தியம் பண்ணி சொல்றேன். கியாமத்து நாளையில் கேட்ட ஆக்கள்ள செவிகள்ல அல்லாஹ{த்தஆலா ஈயத்தக் காச்சி ஊத்துவான்…”

சரி…சேமன்…! அல்லாஹ் அருளிய இந்த புனித திருக்குர்ஆன் மீது சத்தியமாக… சொல்…! சப்புச் சுல்தானைக் கொலை செய்தது நீயா…?”44

என்பவற்றைக் குறிப்பிடலாம்.

சாக்குருவி கத்துதல்:

அன்றைய சமுதாயத்தில் சாக்குருவி கத்துதல் எனும் நம்பிக்கை காணப்பட்டது. இக்குருவி கத்தும் போது ஊரில் இறப்புகள் ஏற்படும் என்ற நம்பிக்கை அவர்களிடமிருந்தது. இதனை முஸ்லிம்கள் ‘இஸ்ராயீல்குருவி’ என்ற அழைத்தனர். இந்நாவலில் இச்சாக்குருவி கத்துதல் என்பது இரண்டு இடங்களில் பேசப்பட்டுள்ளது.

இதென்ன குருவிரா… பார்ரா நெய்நாரு!

இதான்… டேய்ää முத்தும்மது… இது இசிராயில் குருவிடோ…. வ்…

அதில்லடா  பொட்டையா… செந்தலை மைனாடா இது

இல்லடா பேயாää அது வேறடா… இது சாக்குருவி!

இதுவந்த ஊருல அடுக்கடுக்கா ‘மௌத்’து உழும் சுவர்! சுவர்!! இது இஸ்ராயில் குருவியான்… ம்மா… ஆராரு மௌதோ இனி…?”45

என்ற உரையாடல் மூலம் இந்நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கிழக்கிலங்கையின் போர்முகம் இனத்துவ அரசியலை வெளிப்படுத்த விளைந்த ஆசிரியர் அச்சமூக நம்பிக்கை  சம்பிரதாயங்கள் என்பவற்றினூடே கூறியிருப்பது சிறப்புக்குரியது.

ஒட்டுமொத்தமாக பார்க்கின்ற போதுää இந்நாவலில் பயங்கரவாதம் சூழ்ந்த வேளையில்ää அம்மக்களின் கையறு நிலையை மையமாகக் கொண்டுää கிராமத்தின் தேர்தல்கள நிலவரம்ää கொலைக் களவிபரங்கள்ää வர்க்க முரண்நிலைகள்ää காதல் உணர்வுää விடுதலை உணர்வு என்பவற்றை வெகு யதார்த்தமாக சித்தரித்த அதேவேளை அக்கிராமத்து மனிதர்களின் மனவியல்புகள்ää வர்ணணைகள்ää பேச்சோசைகள்ää கலாசார பண்பாட்டு அம்சங்கள் என்பவற்றையும்  கதையோட்டத்தின் ஊடே அற்புதமாக கையாண்டுள்ளார்.

 

 

 

 

 

 

________________________________________

1ஸ நேர்காணல்ää நௌஸாத்ää ஆர். எம். (ஆசிரியர்)

2ஸ நௌஸாத்ääஆர்.எம்.ää (2013)ää கொல்லதெழுதுதல் 90ää பக்.15.

3ஸ நௌஸாத்ääஆர்.எம்.ää (2013)ää கொல்லதெழுதுதல் 90ää பக்.16.

4ஸ நௌஸாத்ääஆர்.எம்.ää (2013)ää கொல்லதெழுதுதல் 90ää பக்.17.

5ஸ நௌஸாத்ääஆர்.எம்.ää (2013)ää கொல்லதெழுதுதல் 90ää பக்.17.

6ஸ நௌஸாத்ääஆர்.எம்.ää (2013)ää கொல்லதெழுதுதல் 90ää பக்.20.

7ஸ நௌஸாத்ääஆர்.எம்.ää (2013)ää கொல்லதெழுதுதல் 90ää பக்.100.

8ஸ நௌஸாத்ääஆர்.எம்.ää (2013)ää கொல்லதெழுதுதல் 90ää பக்.181.

9ஸ நௌஸாத்ääஆர்.எம்.ää (2013)ää கொல்லதெழுதுதல் 90ää பக்.21.

10ஸ நௌஸாத்ääஆர்.எம்.ää (2013)ää கொல்லதெழுதுதல் 90ää பக்.

11ஸ நௌஸாத்ääஆர்.எம்.ää (2013)ää கொல்லதெழுதுதல் 90ää பக்.15.

12ஸ நௌஸாத்ääஆர்.எம்.ää (2013)ää கொல்லதெழுதுதல் 90ää பக்.112.

13ஸ நௌஸாத்ääஆர்.எம்.ää (2013)ää கொல்லதெழுதுதல் 90ää பக்.15.

14ஸ நௌஸாத்ääஆர்.எம்.ää (2013)ää கொல்லதெழுதுதல் 90ää பக்.115.

15ஸ நௌஸாத்ääஆர்.எம்.ää (2013)ää கொல்லதெழுதுதல் 90ää பக்.120.

16ஸ நௌஸாத்ääஆர்.எம்.ää (2013)ää கொல்லதெழுதுதல் 90ää பக்.123

17ஸ நௌஸாத்ääஆர்.எம்.ää (2013)ää கொல்லதெழுதுதல் 90ää பக்.35

18ஸ நௌஸாத்ääஆர்.எம்.ää (2013)ää கொல்லதெழுதுதல் 90ää பக்.115

19ஸ நௌஸாத்ääஆர்.எம்.ää (2013)ää கொல்லதெழுதுதல் 90ää பக்.107.

20ஸ நௌஸாத்ääஆர்.எம்.ää (2013)ää கொல்லதெழுதுதல் 90ää பக்.58

21ஸ நௌஸாத்ääஆர்.எம்.ää (2013)ää கொல்லதெழுதுதல் 90ää பக்.117-118.

22ஸ நௌஸாத்ääஆர்.எம்.ää (2013)ää கொல்லதெழுதுதல் 90ää பக்.14

23ஸ நௌஸாத்ääஆர்.எம்.ää (2013)ää கொல்லதெழுதுதல் 90ää பக்.15

24ஸ நௌஸாத்ääஆர்.எம்.ää (2013)ää கொல்லதெழுதுதல் 90ää பக்.32

25ஸ நௌஸாத்ääஆர்.எம்.ää (2013)ää கொல்லதெழுதுதல் 90ää பக்.54

26ஸ நௌஸாத்ääஆர்.எம்.ää (2013)ää கொல்லதெழுதுதல் 90ää பக்.15

27ஸ நௌஸாத்ääஆர்.எம்.ää (2013)ää கொல்லதெழுதுதல் 90ää பக்.22

28ஸ நௌஸாத்ääஆர்.எம்.ää (2013)ää கொல்லதெழுதுதல் 90ää பக்.32

29ஸ நௌஸாத்ääஆர்.எம்.ää (2013)ää கொல்லதெழுதுதல் 90ää பக்.29

30ஸ நௌஸாத்ääஆர்.எம்.ää (2013)ää கொல்லதெழுதுதல் 90ää பக்.46

31ஸ நௌஸாத்ääஆர்.எம்.ää (2013)ää கொல்லதெழுதுதல் 90ää பக்.53

32ஸ நௌஸாத்ääஆர்.எம்.ää (2013)ää கொல்லதெழுதுதல் 90ää பக்.18

33ஸ நௌஸாத்ääஆர்.எம்.ää (2013)ää கொல்லதெழுதுதல் 90ää பக்.94

34ஸ நௌஸாத்ääஆர்.எம்.ää (2013)ää கொல்லதெழுதுதல் 90ää பக்.20

35ஸ நௌஸாத்ääஆர்.எம்.ää (2013)ää கொல்லதெழுதுதல் 90ää பக்.120

36ஸ நௌஸாத்ääஆர்.எம்.ää (2013)ää கொல்லதெழுதுதல் 90ää பக்.106

37ஸ நௌஸாத்ääஆர்.எம்.ää (2013)ää கொல்லதெழுதுதல் 90ää பக்.43

38ஸ நௌஸாத்ääஆர்.எம்.ää (2013)ää கொல்லதெழுதுதல் 90ää பக்.106

39ஸ நௌஸாத்ääஆர்.எம்.ää (2013)ää கொல்லதெழுதுதல் 90ää பக்.21

40ஸ நௌஸாத்ääஆர்.எம்.ää (2013)ää கொல்லதெழுதுதல் 90ää பக்.138

41ஸ நௌஸாத்ääஆர்.எம்.ää (2013)ää கொல்லதெழுதுதல் 90ää பக்.39

42ஸ நௌஸாத்ääஆர்.எம்.ää (2013)ää கொல்லதெழுதுதல் 90ää பக்.25

43ஸ நௌஸாத்ääஆர்.எம்.ää (2013)ää கொல்லதெழுதுதல் 90ää பக்.116

44ஸநௌஸாத்ääஆர்.எம்.ää (2013)ää கொல்லதெழுதுதல் 90ää பக்.138

45ஸ நௌஸாத்ääஆர்.எம்.ää (2013)ää கொல்லதெழுதுதல் 90ää பக்.136

 

No comments:

Post a Comment