Thursday, November 24, 2022

பிஸ்தாமி அஹமட்

 பிஸ்தாமி அஹமட்..

முகநூலில்


நூலின் அரசியல் தளம் குறித்த விசேட பார்வை


முகப்பு அட்டைப்படமே


அரசியல் மேடையில் அதிரடி உரை நிகழ்த்தும் இஸ்லாமிய கோலத்திலான

ஒரு மகத்தான தலைவர் குறித்த பார்வையை தருவதாக உள்ளது என்பதை நினைவில் கொள்க.... 


மேற்படி


நூல்

போறாளிகளே புறப்படுங்கள்....

ஓரத்தில் நின்று கொண்டு ஓய்வெடுக்க நேரமில்லை


என்று உசுப்பேத்தி

உஷ்ண வார்த்தைகளால் உசாராக்கி

கட்சி பக்தர்களை கிண்டி கிளறி விட்டவாறு ஆரம்பித்து..... அடுத்து

கொழும்பில் என்ன என்ன நடக்கும்

எங்கு வெடிக்கும்

என்ற தகவலை எதிர்பார்க்க வைப்பது போல

அடுத்தடுத்த பக்கங்களை

புரட்ட வைக்கும்


இலங்கை பெரும்பான்மை

ஆளும் மற்றும் எதிர்தரப்பு பேரின வாத அரசியலுக்குள்


மாட்டின் மீது ஒட்டுண்ணி அமர்ந்து மாட்டையே உறிஞ்சிக்குடித்து வாழ்வது போல....  அரசியல் சாயம் பூசிக்கொண்டவர்களும்

தலைவர்களை

ஒட்டி முதுகு சொரிந்து

காரியம் சாதிக்க முற்படுவதை காணலாம் 


கிழக்கிலே மையமிட்டு முகாமிட்டு

வாக்கும் பெற்று

அரசையே தீர்மானிக்குமளவு

தகைமை பெற்ற

King maker ஆக இருந்த இஸ்லாமிய கட்சி

குறித்தான ஒரு புரிதலை இது தருவதாக உள்ளது... 


அதன் தலைவர்

பக்தர்கள்

வால்பிடிகள்

முதுகு சொரிபவர்கள்

வக்காளத்து வாங்குவோர்

அண்டிப்பிழைப்போர்

நக்கிப்பிழைப்போர்


என

பலரையும் கொண்டு வருகிறது


கிழக்கரசியல்

கொழும்பரசியல்

கட்சி அரசியல் என அத்தனையும்

ட்ரான்ஸ்பெரன்ஸியாக

நகர்கிறது


முத்துமொம்மதுவின்

காதலும்

கட்சி அரசியல் மீதான தாவலும்

தவிப்பும்

அமேஸிங் தான்


அரசியல் எவ்வளவு ஆழமாக ஊடுருவி மக்களை வழிநாடாத்துகிறது


அல்லது வாழவிடாமல் வதைக்கிறது...


அடிமைச்சேவகம்

புரிய சிலர்


ஆவேசம் பொங்க சிலர்


குழி வெட்ட சிலர்


கொதிக்க சிலர்....


அடிமாடுகளாகவே

அடுத்த தலைமுறையை

பாவிக்க சிலர்.....


இப்படி... அரசியல் குறித்தான ஊதிப்பெருப்பிக்கப்பட்ட...

தகரக்கப்பட்ட


சூம்பிப்போன பிம்பங்கள்.....


முத்துமொம்மதையும்

யாசீனையும்

கொழும்பில் ஆட்டோ சாரதியிடம் சிக்க வைத்து மைமூனாவையும்

உம்மா வையும் எயா போட் அழைதுதுச்செல்ல

ஓடும் சப்பு.......


கும்பிட போன தெய்வம் 

குறுக்கே வந்ததா கதையாக மாறிய

சம்பவம்....


இறுதியில்

பிரதேச சபை தேர்தல் வரை முத்து மொம்மதுவை

ஒசத்தி வைக்கிறது...


பின்ன என்ன

ஸெய்லான் ஹாஜியார்


யாரு...... 

பள்ளித்தலைவருக்கு

வர்ர கோவம்.... ப்பா....

கொறுக்கப்புளியன்..... என கடிந்து சாடி உமிழும்.... காட்சிகள்.... அரசியலில்

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி... வரம் கொடுக்காத.... நிலை தான்.....


அந்த செய்லான் ஹாஜியாருக்கு கன்னத்துல பளார் என ஓங்கி அறைந்து....


வயற்சேனை ஆஸ்பத்திரி விஸ்தரிப்புல

37 ஏக்கர் வேப்பமரத்தோப்ப விழுங்கியது....

பள்ளி புனரமைப்பில்

30 லச்சம் விழுங்கியது என


ஒவ்வொன்றாக

தலைவர் கக்கிவிடுவது


எல்லா கட்சியிலும் இருக்கும் அப்பட்ட அடிமட்ட அரசியல்....


ஆனால் தலைவர் நீதி நேர்மை நியாயம்

தகைமை க்கு முதலிடம் என தூய அரசியல் செய்வது சபாஷ் தான்


போராளிகளே புறப்படுங்கள் என ஆரம்பித்து....


ஆளடையாளமற்ற

முத்து முகமது


இலங்கை இஸ்லாமிய கட்சியின் பிரதித்தேசிய அமைப்பாளராகி....


பள்ளி முனை இளைஞர் அணி தலைவராகி.... முன்னாள் வயற்சேனை பிரதேச சபை தலைவராகி...


தற்பொழுது திகாமடுல்ல மாவட்ட பாராள மன்ற உறுப்பினராகி உயர்ந்துள்ள முத்துமொகமது தனது ஆசை நாயகி மைமூனாவுடன்

வருவதை காட்சிப்படுத்தும் இறுதி பந்தி

வரிகள்


நௌஸாத் ஸேரின் தூக்கலான அரசியல் எழுத்தின் ஆழத்தை தான் உணர்த்துகிறது


நூலின் அரசியல் பற்றிய

நீளமான மனப்பதிவை எழுத இருந்தாலும்


வாய்ப்பு அமையவில்லை.... நூலை வாசித்தவர்கள்.... நட்புகள் உரையாடலை நீட்டவும் என எதிர் பார்க்கப்படுகிறீர்கள்


Monday, November 21, 2022

Bisthami Ahamed

கொல்வதெழுதுதல்.90.

ஒரு வாசிப்பு அனுபவம்

பிஸ்தாமி அஹமட்



மேற்படி நூல்

பள்ளி முனை கிராமத்தை மையப்படுத்தியது


1990 ன் போரின் கோரத்தாண்டவமாடிய

வெறித்தனத்தை

விபரிக்கிறது . வஞ்சிக்கப்பட்ட

முத்துமொம்மது எனும் இளைஞனின்


காதலுணர்வு

அரசியல்

மற்றும்

சூழந்திருந்த

பயங்கரவாதம்

குறித்தே கதை கருத்தாடுகிறது


சிறந்த கதாபாத்திரங்கள்


இயல்பான

எளிமையான

சொற்கள்

கையாளப்பட்டுள்ளன. 


இலங்கை வரலாற்றின்

யுத்த கால அல்லோல கல்லோலம் காட்சிகள், 


மாற்று இலக்கியம், 


விடுதலை இலக்கியம், 


புலம்பெயர் இலக்கியம்


கிழக்கிலங்கைக்கே

உரித்தான மொழிப்பாரம்பரியம்

என்ற நோக்கிலும் நூலை அனுகலாம். 


அன்பு 


காதல் 


தவிப்பு 


ஏக்கம் 


வாழ்வியல் 


வரலாறு


திகில்


திடுக்கம்


அரசியல்


ஏமாற்று


சுயநலம்


மடமை


மதம்


மகத்துவம்


என அனைத்தையும் தழுவியதாக கதை நகர்கிறது. 


நூலாசிரியர் சொல்வது போல


முழுவதும் நிஜமுமல்ல. 


முழுவதும் புனைவு மல்ல. 


ஆனாலும் 90 களின் பிற்பாடு

புடை சூழ்ந்திருந்த யுத்த மேகம் எப்படி

இருண்ட  பரபரப்பும் பயமும் துவைத்த வாழ்வை மக்களுக்கு

தந்தன என்பதை காணமுடியும்


ப. சிங்காரத்தின்


புயலிலே ஒரு தோணி யின் சாயலை நூலிலே உணர்கிறேன். 


அன்றைய

பர்மா தேச மொழியிலே

அது இருக்க


இன்றும் உயிர் வாழும் கிலக்கிழங்கை முஸ்லிம்கள் பேசும் சுவை மிகு மொழியிலே இது உள்ளது. 


கிழக்கு மொழியின் தன்மை இயல்பு ரசனை ராகம் சங்கேதம் உச்சாடணம் புரியாத விடுத்து நூலின் சுவையை

உயிர்ப்பை

உயிரோட்டத்தை


வாசகன் நிச்சயம் இழப்பான்


கிழக்கிலங்கையின்

தீரன் R. M நௌஸாத் 

ஸேருக்கு

வரலாற்றை

சுவையாக சொல்லும்

சிறந்த கதைசொல்லிக்கான

விருது நிச்சயம் வழங்கப்பட வேண்டும்


இலங்கையில் மூன்று தசாப்தமாக வேர்கொண்டு உயிரையும் உடமைகளையும் விழுங்கிய யுத்தத்துக்கு மொழி குறித்த இழுபறியும் புறக்கணிப்பும் தான் காரணம். மொழி ஒரு கலாசாரம். மொழி ஒரு பண்பாடு. மொழி இலக்கியத்தின் உந்து விசை.

மொழி ஓர் ஆயுதம்

மொழி ஒரு தீர்வு. 


இப்படி இருக்கையில் பன்மைத்துவ சூழலில் ஒரு இனம் இன்னொரு இனத்தை துவம்சம் செய்து இனசுத்திகரிப்புக்கு ஆளாக்க எத்தனிக்கும் அம்சம் எந்த மனசாட்சியுள்ளவர்களாலும் அங்கீகரிக்க முடியாத ஒன்று. மொழி ஆதிக்கம் பயங்கரமானது. ஆதிக்க மொழி அதை விட ஆபத்தானது


மொழியால் நடந்த இத்தகைய கொடூர யுத்தத்தின் ஆறாத வடுக்களை போர்ச்சூழலிலும் அதன் பிற்பாடும் இஸ்லாமிய அல்லது முஸ்லிம் இலக்கியத்தின் பிரதிகள் எவ்வாறு கையாண்டன என்பது குறித்த கலந்துரையாடல்கள் அவசியம் 


.


உலகின் வரலாறு முற்றுப்பெறவில்லை. அது புதிய உலக ஒழுங்கின் பெயரில் நீடித்து நாகரீகங்களுக்கு இடையிலான பெரு மோதலாக முரண்பாடாக

வெடிக்கலாம் இந்நிலையில் மொழியை வரலாறும் வரலாற்றை மொழியும் பரஸ்பரம் ஆவணப்படுத்தி வருகின்றன.


தீரன் ஒருபடி மேலுயர்ந்து நிகழ்வின் இருப்பிடத்தின் வட்டார வழக்கை லாவகமாக கையாண்டு கதை சொல்லியுள்ளார். 


 இலங்கை சூழலில் யுத்தத்தின் ரணகளத்தை சுவைத்து அதன் வலிகளை சுமந்து வாழும் நிலையில் 

கதை சொல்லியான நௌஸாத்  இலங்கையின் கிளை மொழிகளின் இலக்கியங்களுக்கூடாக  உண்மையான வரலாற்றை சமாதானத்தை, இணக்கப்பாட்டை, இன நல்லிணக்கத்தை, அன்பை, நன்மதிப்பை விதைக்க முனைகிறார்.


நௌஸாத் ஸேர் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். நாவலாசிரியராக

கதைசொல்லியாக

கவிஞனாக

ஸூபித்துவ கவிஞனாக

பன்முக ஆளுமையாக நின்று பல்வேறு பாத்திரங்களை வகித்து சமூகத்தில் முனைப்புடன் ஊடாடி வருகிறார்.

எழுத்து அவரது ஊடகம். மொழி அவரது மந்திரம். 

வரலாறு அவரது கருப்பொருள்களை. 

சகவாழ்வு அவரது அவா. 


கொல்வதெழுதல் 90 எனும் தலைப்பு அவரது இலக்கிய ஈடுபாட்டை மட்டுமன்றி மொழியின் ஆகர்ஷணம் அதன் ஊடாட்டத்தினூடாக  இலங்கையின் யுத்த கால வரலாறு பரபரப்பு பேசப்படுவதோடு சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் மீளவும் உருவாக்க இலக்கியத்தை எவ்வாறு கையாளலாம்? அதன் சாதக, பாதக தன்மைகள் குறித்தான பார்வையாகவே இதனை நான் காண்கிறேன்


இலங்கை பன்மைத்துவம் நிலவும் ஓர் அழகான தேசம். மூன்று தசாப்தம் கடந்த யுத்தம் அதன் அழகை குரூரமாக சிதைத்து ள்ளது. இனங்களுக்கிடையில் முருகலையும் உட்பூசலையும் உடைவுகளையும் முறிவுகளையும்  ஏற்படுத்தி இடைவெளியை இன்னுமின்னும் அதிகரித்து முரண்பாட்டுக்கு வழியமைத்துள்ளது. இந்த பகை புலனில் நின்று தான் தீரன் தனது நூலின் எல்லையை காலத்தால் வரையறுத்துள்ளார்.


இனம், மொழி, பண்பாடு, கலாசாரம் என்று  வித்தியாசமான சூழலில் வாழும் ஒரு நாட்டில் நிலையான சமாதானத்தை வேண்டி நிற்கின்றோம். குரூரமாக எம்மை காவுகொண்ட யுத்தம் நிறைவுற்றாலும் இனங்களுக்கிடையிலான முழுமையான சமாதானமும் நல்லிணக்கமும் இன்னும் மன நிறைவான விதத்தில் எழுகோலம் பெறவில்லை. நிலைக்கவில்லை.


முஸ்லிம் சமூகத்தின் புத்தி ஜீவிகளும் எழுத்தாளர்களும் பேச்சாளர்களும் குறிப்பாக சிங்கள இனத்தவருடன் மட்டும் சகவாழ்வை சுருக்கி பேசியும் எழுதியும் வருகின்றனர். சகவாழ்வின் ஊடாக மட்டும் நிலையான சமாதனம் மலராது, கறை படிந்த பக்கங்கள் நீங்காது.


இனங்களுக்கிடையிலான் உரையாடல் inter faith dialogue  மட்டும் எதையும் போதுமாக சாதிக்காது. இந்த முரண்பாடுகள் முழுமையாக நீங்க மாற்றுவழியில் சிந்தித்து அதற்கான பொறிமுறை ஒன்றை கண்டறிய வேண்டும்.


இந்த நிலையை இலக்கியத்தின் ஊடாக அடைவதற்கான் ஓர் எத்தனிப்பு தான் இங்கு மேற்கொள்ளப்படுகிறது.நூல் வெளிவந்தது 2013 ல் என்றாலும்

இன்னும் அது அகாலமாகாத வரலாற்றுப்பதிவாக

ஆவணமாக

உள்ளது. 

  


இந்நூல் இனியாவது இலங்கை அரசியலில் பன்மைத்துவ சூழலை அங்கீகரித்து ஏற்று அவற்றுக்கிடையிலான இலக்கிய வழியிலான உரையாடல் தொடர்வதன் மூலம்   எதிர்காலத்திலும் அதனை ஒரளவு முனைப்புடன் இயங்கவைக்கும் எனும் நம்பிக்கை உள்ளது.


உரியவர்கள் இதனை சிங்களத்தில் பெயர்த்தால் பயனுள்ளதாக அமையும்


காரணம் இலக்கியம் அந்த வலிமையையும் ஆற்றலையும் பெற்றுள்ளது. பன்மைத்துவ விழுமியங்களை இலங்கைச்சூழலில் இலக்கியம் வாயிலாக கட்டமைத்து இனங்களின் மீளிணக்கம், ஒருமைப்பாடு, தனித்துவம், போன்ற  உயர் பெறுமானங்களை அங்கீகரிக்கும் மனோ நிலையை உருவாக்கலாம்.


குறிப்பாக இலங்கையின் பன்மைத்துவ சூழலில்  இலக்கியம் அத்தகைய கூரான கருவியும் தான்.


இலக்கிய வகையறாக்களில் பெண்ணியல்வாத இலக்கியம், எதிர்ப்பிலக்கியம், முற்போக்கு இலக்கியம், நவீன இலக்கியம், பின்நவீன இலக்கியம், மொழிபெயர்ப்பு இலக்கியம் என்பன குறிப்பிடத்தக்கன.

இதனை பிந்திய போர்க்கால இலக்கியமாக புலம்பெயர் இலக்கியமாக

வரலாற்றிலக்கியமாகவும்

கருத முடியும்


இந்த நோக்கில் கொல்வதெழுதல் 90 ஐ பன்மைத்துவ இலக்கியம், போர்க்கால இலக்கியம் என இரண்டாகவும் நோக்க வேண்டும். இலக்கியம் சமூகத்தை மட்டுமன்றி காலத்தையும் பிரதிபலிக்கும் ஊடகம். இலக்கிய படைப்புகளின் அடியாக அல்லது ஊடாக சமூகத்தில் அதிர்வுகளையும் மாற்றங்களையும் நிச்சயம் உருவாக்கலாம். இலக்கியங்கள் மூலமாக சிந்தனைகளை மக்கள் மயப்படுத்தலாம். எல்லா எல்லைகளையும் கடந்து சென்று எல்லா உலகங்களையும் உள்ளங்களையும் வென்றுவிடும் மர்ம, ஆகர்ஷண சக்தி இலக்கியத்துக்கு உண்டு.


அந்த வகையில் இலங்கையின் யுத்த கால சூழலில் வெளியான இருவேறு இலக்கியங்களில் இழையோடியுள்ள இருத்தலுக்கான போராட்ட உணர்வு, யுத்தத்தின் பாதிப்பு, விடுதலை உணர்வு, சுதந்திர தாகம், எதிர்ப்புணர்வு என்பன வெளிப்பட்டுள்ள பாங்குகளை ஒப்பிடும் வகையில் நௌஸாத் தனித்துவமான இடத்துக்கு நகர்கிறார்


யுத்தத்தை, அதன் தாக்கத்தை, செல்வாக்கை சிங்கள மற்றும் தமிழ் இலக்கியங்கள்  எழுத்தாளர்கள் எவ்வாறு உள்வாங்கியுள்ளன? அவற்றின் மீது யுத்த சூழல் எவ்வாறு தாக்கம் செலுத்தியுள்ளது? அதன் போக்கை செல்நெறியை திசை திருப்பியுள்ளன? என்பன இங்கு ஆழமாக நோக்கப்படுகிறது.


கல்வித்துறைக்கூடாக, கலைத்திட்டம் வாயிலாக, பன்மைத்துவ நோக்கில் இலக்கியங்களை பாடத்திட்டமாக அமைத்து கற்பித்தாலும் அது பரீட்சையை மையமாக கொண்ட உணர்விழந்த வரண்ட நிலையில் பிரக்ஞை அற்றதாகவே காணப்படுகின்றன.


பிரதிகளில் படிந்துள்ள பிம்பங்களும் பாத்திரங்களும் நிஜ வாழ்வில் பிரதிபலிக்கவில்லை. தெறிப்படையவில்லை. சமூக மாற்றத்தில் தாக்கம் செலுத்தவில்லை. என்ற வாதத்தை தீரன் நௌஸாத் தகர்த்து விடுகிறார்.


ஆளும் மற்றும் எதிர்த்தரப்பு அரசியலுக்கு சாதகாமான இலக்கிய பிரதிகள் படைப்புகள் வெளிவந்தது போலவே இனவாதத்தை கக்கும் விசமத்தனமான படைப்புகளும் பிரதிகளும் மக்கள் மயப்பட்டன.


இந்த சூழலில் இலங்கை வாழ் சிறுபான்மை பெரும்பான்மை மற்றும் மும்மொழி பேசும் சகலரிடமும் இலக்கியம் வாயிலாக ஒரு சமாதானத்தை மாற்றத்தை உருவாக முனைந்திருக்கும் தீரனின் முயற்சிகள் பாராட்டப்பட வேண்டும்.


இந்த வகையில் இலக்கியத்தினூடாக இலங்கை சூழலை மையப்படுத்தி பன்மைத்துவ சிந்திப்பையும் புரிதலையும் பார்வையையும் ஏற்படுத்தும் நோக்கில் இந்த நூல் அமைந்துள்ளது எனலாம்.


இலக்கியம் வாயிலாக இந்த பன்மைத்துவ அங்கீகரிப்பை எவ்வாறு சாத்தியமாக்கலாம்? என்று நாம் சிந்திக்க கலந்துரையாட வேண்டும் 


இலக்கியங்களில் அயலவரின் வாழ்க்கை முறை, மொழி, பண்பாடு , கலாசார கூறுகள், சமூக உறவு, நம்பிக்கைகள், என்பவற்றை பரஸ்பரம் உள்வாங்கி அவற்றுக்கான மதிப்பினையும் ஏற்புடைமையையும் ஊக்குவிக்க எழுத்தாளர்கள் முனைய வேண்டும் 


யுத்தம் முடிவுற்றாலும் இனமுரண்பாடு இன்னும் முழுமையாக தீரவில்லை. இன நல்லுறவை ஏற்படுத்துவதற்கான சமூக, அரசியல் சூழல் இன்னும் உருவாகவில்லை. அரசியலுக்காக இனவாதம் மூலதனமாக்கப்படுவதை

தேர்தலில் காணமுடியும். இந்த முரண்பாட்டு சூழலில் இலக்கியத்தின் பங்கு என்ன? அது இன முரண்பாட்டை ஊதிப்பெருப்பித்து அதற்கு தீனி போட்டு மெருகேற்றி விடுகிறதா? மோதலுக்கும் முருகலுக்கும் காரணமாகி விடுகிறதா? அல்லது சுமூகமான முறையில் சமாதன சூழலை உருவாக்கி இன நல்லுறவை கட்டி எழுப்பி வளர்க்க முனைகிறதா? 


யுத்தத்தில் மிக நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் என்றவகையில் தமிழ் –இஸ்லாமிய இலக்கிய பகைபுலனில் எண்ணற்ற படைப்புகள் எதிரும் புதிருமாக வெளிவந்துள்ளன. இன நல்லுறவை வளர்த்தும் மேலும் சிதைத்தும் உள்ளன.


நௌஸாத் அவர்களது படைப்பு வரலாற்றை எம்முன் அகலத்திறந்து கொட்டி விடுகிறது

மொழிக்கூடாக


வாழ்த்துக்கள் தீரன் நௌஸாத் ஸேர்


M.M.A.BISTHAMY

21/11/202