Sunday, April 8, 2018

அஷ்ரப் சிஹாப்தீன்

 · 
பொதுவாகவே இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் வாழ்வியல் நெருக்கடிகள், ஒரு சிறுபான்மைச் சமூகமாக அதன் இருப்பியல் வரலாறு குறித்த இலக்கியப் பதிவுகள் எழுதப்படவில்லை என்றகவலை முஸ்லிம் சமூக ஆர்வலர்களுக்கும் கல்வியியலாளருக்கும் ஓர் உறுத்தலான அம்சமாகவே இருந்து வருகிறது. அந்தக் கவலையை ஒரு சிறு அளவிலேனும் குறைக்கும் பணியை தீரன் ஆர்.எம். நௌஷாத்தின் “கொல்வதெழுதல்“ நாவல் தீர்த்து வைத்திருக்கிறது என்பேன்.
“கொல்வதெழுதல் - 90” நாவலின் ஒரு மேலதிகப் பிரதி என்னிடம் உண்டு. ஒரு பிரதியை எல்லோருக்கும் கொடுக்க முடியாது. கேட்பவர்களில் நான் தீர்மானிக்கும் ஒருவருக்குக் கொடுக்கலாம் என்றிருக்கிறேன்.

மானா மக்கீன்



 நவீனத்தில் உண்மை அதிகம்.கற்பனை கொஞ்சம்!




'90களில் கிழக்கிலங்கைக் காரைத்தீவுப் பகுதியில் முஸ்லிம் கிராமங்களில் தம்பிமார் ஊடாட்டம்,இந்தியப்படை நடமாட்டம், இடையே ஒரு பிரதேச சபைத் தேர்தல். பள்ளிமுனைப் பகுதியில் மலேசிய வாசுதேவன் பாட்டுகளைப் பாடி துடிதுடிப்போடு திரிந்த முத்து முகம்மது இளைஞனை பள்ளிமுனைக்குத் தலைவனாக்குகிறார் ஒரு கட்சித்தலைவர்.அவர் தனித்வமான தலைவராகப் போற்றப்படுபவர்.
 பின் அவரே அவனை திகாமடுள்ள நாடாளுமன்றப் பிரதிநிதியாக்கி அருந்தொண்டாற்ற வைக்கிறார்!


****தீரன் ஆர்.எம்.நெளஷாத் நவீனத்தில் உண்மை அதிகம்.கற்பனை கொஞ்சம்!


***'முஸ்லிம் குரல்' தொடர் நவீனம் (2003).தமிழகக் 'காலச்சுவடு' 2013-17 இருதடவை நூலுருவம்.


*** நூல் மட்டுமல்ல, தனித்வத் தலைவரும் முத்து முகம்மது பெயரும் என் நினைவலைக ளில் சதா



00 

                                                                                                         Maana Mackeen

லைட் ரீடிங்### கிழக்கிலங்கையிலும் ஒரு 'தோப்பில் முகம்மது மீரான்'!
**************
சமீப காலத்தில் படு படு வேகமாக ஒரு நாவலைப் படித்தேன் என்றால் 'கொல்வதெழுதல்-90' ஒன்று மட்டுமே! (தமிழகக் காலச்சுவடு பதிப்பு 2013.மீள் பிரசுரம் 2017. ஆரம்பத்தில் 2003-ல் பெளஸர்-நூறுல் ஹக் ஆசிரியர்களாக வெளியிட்ட "முஸ்லிம் குர"லில்).
தன் ஆரம்பகால எழுத்துகளுக்கு ஏணிப்படி' -என என்னை வர்ணிக்கும், கிழக்கிலங்கை, சாய்ந்தமருது தீரன் R.M. Nowsaathத்திற்குள் 'ஒரு தோப்பில் முகம்மது மீரான் உள்ளார் என்பதை இந்நாவலை 15 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் நேற்று வாசித்த பிறகே உணர்ந்தேன்.
தமிழக எழுத்தாளர்கள் - குறிப்பாக முஸ்லிம் படைப்பாளிகள்- இதைப் பார்வையிடல் "காலத்தின் கட்டாயம்".(சில சமயங்களில் தோப்பிலுடன் கீரனூர் ஜாகீர் ராஜாவும் எட்டிப்பார்க்கிறார்!).

Saturday, January 20, 2018

ஜிப்ரி ஹாசன்


ஆழ்ந்த புனைவுத் தன்மையுடன் வெளிப்படுத்தும் ஈழத்தின் ஒரே கதைசொல்லி 




தமிழ் இலக்கியவெளியில் தமிழ் முஸ்லிம்களின் வாழ்வியலை ஆழ்ந்த புனைவுத் தன்மையுடன் வெளிப்படுத்தும் ஈழத்தின் ஒரே கதைசொல்லி தீரன். ஆர்.எம். நௌஷாத். தோப்பில் முகம்மது மீரான், கீரனூர் ராகிர்ராஜா போன்ற படைப்பாளிகளின் வரிசையில் இடம்பெறக்கூடியவர். 
தமிழின் பல விருதுகளும், பரிசுகளும் இவருக்கு கிடைத்துள்ளன.
அவரது படைப்புகள் குறித்து ஒரு விரிவான ஆய்வுத் தன்மையான கட்டுரை தேவை என்று நினைக்கிறேன். அவரது படைப்புலகம் சார்ந்த விரிவான மதிப்பீடுகள், விமர்சனங்கள் நமது இலக்கிய வெளியில் முன்வைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.
கொல்வதெழுதல் 90 எனும் அவரது இந்நாவல்அதிகம் பேசப்பட்டதும், தமிழக அரசின் 1000 பிரதிகளுக்கான அரச ஆணை பெற்றதுமாகும்.
0

Saturday, January 13, 2018

Saturday, December 9, 2017

டி.எம். சப்ரி


உயிரோட்டமான நாவல்



"கொல்வதெழுதுதல் 90"
1990 களின் போர்க்கால இலக்கிய மரபை ஒட்டியதாகவும் கிழக்கிலங்கையின் முஸ்லிம் கிராமங்களின் கையறு நிலையையும், விடுதலைப் போராட்டத்தின் பக்க விளைவுகளையும் மிகவும் எளிமையான முறையில் கண் முன்னே கற்பனை ரீதியாக உணர வைக்கும் சாய்ந்தமருதுவைச் சேர்ந்த ஆர்.எம்.நௌஸாத் என்ற எழுத்தாளரின் ஓர் படைப்பு.


அன்றைய காலப் பகுதியில் ஏராளமான ஆயுதக் குழுக்கள், காரணமில்லாத கொலைகள், கண்ணிவெடி, மிதிவெடி, ஹர்த்தால், கடையடைப்பு, ஆள்கடத்தல்,பணிமுடக்கம், காட்டிடக்கொடுப்பு போன்ற
 பக்க விளைவுகள் மக்களை வாட்டிக் கொண்டிருந்தது.

கிழக்கிலங்கையின் பள்ளிமுனைக் கிராமத்தைச் சேர்ந்த முத்துமுகம்மது
 இலங்கை இஸ்லாமிய கட்சியின் தீவிர ஆதரவாளன்.
பள்ளிமுனைக் கிராமத்தின் அரசியல் மேடைகளில் முழங்கும் "போராளிகளே புறப்படுங்கள்" என்ற கோஷங்கள் பூவரச மரங்களில் தொங்கவிடப்பட்டிருக்கும் தலைவரின் படங்கள், மஞ்சள் பச்சை வர்ண கொடிகள், சோடனைகள், மின்விளக்குகள் என்று 90களின் அரசியல் மேடை அமைப்பு அற்புதமானவை.
இதற்கும் மேலாக தலைவர் வருகையை ஐம்பத்து நான்காவது தடவையாக ஸ்பீக்கரில் அறிவிப்பு செய்யும் முத்துமுகம்மது.
முத்துமுகம்மதின் முறைப்பெண்ணான "மைம்னா"வை வறுமை காரணமாக வெளிநாடு செல்ல அவளின் தாயார் கட்டாயப்படுத்துகிறாள்.

தங்கை மார்களுக்கு வீடு கட்டுவதற்கு வெளிநாடு செல்ல கொழும்பு சென்ற மைம்னா சப்பு ஏஜன்சியால் கொழும்பு லொஜ்ஜில் வைத்து கற்பழிக்கப்படும் காட்சிகள் எதார்தமாக அமைந்துள்ளது.
அதன் பின்னர் கல்வியறிவோ சிங்களமோ தெரியாத முத்துமுகம்மது 
ஒரு சந்தர்ப்பத்தில் கொழும்பில் தலைவரின் உயிர் காக்கிறார்.

இதனால் பள்ளிமுனை பிரதேச சபைத் தேர்தலில் பல்வேறு தர்ப்பினர்களின் எதிர்ப்பையும் மீறி 
தலைவரால் முத்து முகம்மது வேட்பாளராக களமிறக்கப்படுகிறார்.
தேர்தல் கால மரபுகள் பழிவாங்கல்கள் ஏமாற்றங்கள் காதலியின் பிரிவு
 என்று உயிரோட்டமாக நாவலின் கதை நகர்கிறது.

00 

Tuesday, November 7, 2017

Saturday, June 10, 2017

மிஹாத்


Mihad Mihad

தோழர் தீரன். ஆர்.எம் நௌஷாத், அனுப்பி வைத்த அவரது நாவலான
" கொல்வதெழுதுதல் 90 " கிடைக்கப் பெற்றேன்.
இனவாத அரசியலும் இனவெறி ஆயுதக் குழுக்களின் அட்டூளியங்களும் மலிந்திருந்த தொண்ணூறுகளில் நிலவிய ஒரு கிராமத்தின் கதை......
பல கொடிய நினைவுகளை வாசக மனவெளியில் மீண்டும் தரிசிக்கச் செய்யும் புனைவுச் செயல்.
வாசித்து முடித்த பிறகு இந்தப் பிரதி மீதான எனது பார்வையை எழுத வேண்டும் எனும் ஆவல் இருக்கிறது.

தீரன். ஆர்.எம் நௌஷாத்

Mihad Mihad--Lafees Shaheed--Annogen Balakrishnan-- இது ஒரு ஹீரோயிஸ நாவல் என்றும்...சினிமாவுக்குத்தான் லாயக்கு என்றும் விமர்சித்தனர்....பார்வைகள் வேறுபடல் இயல்பே.... என் நோக்கம் 1990 களில் முஸ்லிம்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளையும் அச்சமயம் அவர்கள் செய்த அரசியலையும் ஒரு புனைவாக வெளிப்படுத்த வேண்டும் என்பதே...புனைவுத் தயாரிப்பில் ஹீரோயிசத்தை கொஞ்சம் கூடுதலாகவே கலந்து விட்டேனோ தெரியாது..அநோஜனின் பார்வை எனக்கு உற்சாகம் தந்தது....மிஹாத்தின் சொற்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றிகள் நண்பர்கள் மூவருக்கும்...