Saturday, July 18, 2015

Friday, July 17, 2015

noolakam.com -- நூலகம் - அறிமுகம்

14695.JPG
கொல்வதெழுதுதல் 90
நூலக எண்14695
ஆசிரியர்நௌஸாத், ஆர். எம்.
நூல் வகைதமிழ் நாவல்கள்
மொழிதமிழ்
வெளியீட்டாளர்காலச்சுவடு
வெளியீட்டாண்டு2013
பக்கங்கள்184





அந்திமழை,


கொல்வதெழுதுதல் 90

கொல்வதெழுதுதல் 90, ஆர்.எம். நௌஸாத், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை 150ரூ.
பரபரப்பான கிராமத்தின் கதை


இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் ஆர்.எம்.நௌஸாத் எழுதிய கொல்வதெழுதுதல் 90 என்ற நாவல் கிழக்கிலங்கையின் ஒரு முஸ்லிம் கிராமத்தளத்தில் இயங்குகிறது.


அக்காலகட்ட மக்கள் மனநிலை மற்றும் அரசியல் சூழ்நிலை தெளிவாகக் காண்பிக்கிறது. 1990ஆம் ஆண்டு இலங்கை மக்கள் இலங்கை இராணுவம், அதிரடிப்படை, இந்திய அமைதிப்படை, விடுதலைப்புலிகள், உதிரி இயக்கங்கள், ஊர்க்காவல்படை என்று பல வேறு அம்சங்களால் போரியல் அவதிக்குள்ளானார்கள்.


இந்நாவலில் இடம்பெற்றிருக்கும் சம்பவங்கள் யாவுமே கற்பனையேயல்ல என்றாலும் யாவுமே நிஜமுமே அல்ல என்கிறார் முன்னுரையில் நாவலாசிரியர்.கிழக்கிலங்கையின் பள்ளிமுனை என்ற குக்கிராமத்தில் வசிக்கும் முத்து முகமது, அவனது காதலி மைமூனா, வெளிநாட்டு வேலை வாய்ப்பு வாங்கித் தருபவனான சப்பு சுல்தான் உள்ளிட்ட பல பாத்திரங்கள். காதலியை அவளது அம்மா வெளிநாட்டுக்கு அனுப்ப முயலுகையில் மைமூனா என்ற அப்பாவிப்பெண் பாலியல் மீறலுக்கு உள்ளாக்கப்பட்டு வெளிநாடு சென்று முத்துமுகமதுவுடனான தொடர்புகளை அறுத்துக் கொள்கிறாள்.


இதற்கிடையில் கிராமத்து எளிய இளைஞனான முத்து முகமது இஸ்லாமிய அரசியல் தலைவரால் கண்டெடுக்கப்பட்டு அவர் உயிரையும் காப்பாற்றி, அவரலால் அரசியலில் உயர்த்தப்படுகிறான்.


தமிழகத்தில் இக்கதை எழுதப்பட்டிருக்குமானால் அந்த அரசியல் வாதியும் கெட்டவராகக் காட்டப்பட்டிருப்பார். ஆனால் இக்கதையில் அவர் கடைசிவரை முத்துமுகமதுவைக் கைவிடாதவராக, அவனுடைய வாழ்க்கையில் போருதவி செய்பவராகக் காட்டப்படுகிறார்.


கொழும்பு நகருக்கு முதல்முதலாகச் செல்லும் முத்துமுகமது சிங்களம் தெரியாமல் வழி தவறி அவஸ்தைப் படும் காட்சிகள், அரசியலில் வளர்ந்து ஊருக்குத் திரும்பி பெரும்பதவிகளை ஏற்கையில் ஏற்படும் சூழல் மாற்றங்கள் என நாவலில் சிறப்பான பகுதிகள் உள்ளன.

நாவலைப் படித்து முடித்தபின்னரும் தாரே நக்பீர் என்ற முழக்கம் காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

நன்றி: அந்திமழை, 1/4/2014.


பரபரப்பான கிராமத்தின் கதை 



Add caption

போர்க்கால இலக்கியத்தின் ஒரு புது வரவு ~ எம்.வை. நஐPப்கான்.

தினக்குரல்-------- நூலகம்.


போர்க்கால இலக்கியத்தின் 
ஒரு புது வரவு ~கொல்வதெழுதுதல் 90|-- நாவல்.

கலைச்சிகரம்.. எம்.வை. நஐPப்கான்.


தமிழ்நாடு காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது ஆர்.எம். நௌஸாத் எழுதியுள்ள ~கொல்வதெழுதுதல் 90|--என்னும் இந்நாவல். ~.....1990-களின் காலப் பகுதியில்  இலங்கையின் போர்க்காலப் பகைப்புலத்தில் கிழக்கின் ஒரு முஸ்லிம் கிராமத்தின் தளத்தில் இயங்கும் இந்நாவல் அக்கால மக்களையும்  போர்க்காலச் சூழலையும் இயல்பாக வடிவமைத்துக் காட்டுகிறது...|| என்று ~கொல்வதெழுதுதல் 90|-- என்ற இந்நாவலின்  உட்கோணத்தை இரண்டாம் விசுவாமித்திரன் தன் பின்னட்டைக் குறிப்பில் பொறித்துள்ளார்.

~~.... போர்க்கால இலக்கியங்கள் பற்றிய பகிர்தல்களின் போதும்  இலங்கையின் போரியல் பற்றி அறியாத தமிழக வாசகர் மத்தியிலும்  இங்குள்ள எதிர்காலச் சந்ததியினர் மத்தியிலும்  தனது போர்க்காலப் புதினத்தை  இந்நாவல் அழுத்தமாகப் பதிவு செய்யும்  என்பதில் சந்தேகமில்லை....||..என்று முஸ்லிம்குரல்  பிரதி ஆசிரியர் எம்.எம்.எம். நூறுல்ஹக் ~முன்னுரை|த்துள்ளார்..

இந்நாவலை நூலாசிரியர்ää  உயர்மிகு சுந்தர ராமசாமி  அவர்களுக்கு சமர்ப்பணம் செய்து தனது இன நல்லுணர்வைப் பேணியுள்ளார். அட்டையின் வடிவமைப்பை பழைய கோட்டுச் சி;த்திரத்தை நவீன பாணியில் கவர்ச்சியான நிறச்சேர்க்கையுடன் றஸ்மி வடிவமைத்துள்ளார்.

காலச்சுவடு பதிப்பகத்தின் 529-வது வெளியீடாக வந்துள்ள இந்நாவலுக்கு தமிழ்நாடு அரசின் ஆயிரம் பிரதிகளுக்கான நூலக ஆணை கிடைத்துள்ளது ஒரு சிறப்பம்சமாகும்.

நாவலின் கதை சொல்லும் இலாவகமும்  கவர்ச்சி நடையும் கிராமிய மொழிக் கையாள்கையும் நாவலுக்கு உரமூட்டி  விறுவிறுப்பாக கொண்டு செல்கின்றது. 2011 ல் தனது ~வெள்ளிவிரல்| சிறுகதைத் தொகுதிக்கு  சாகித்திய விருது பெற்றவரான இ;ந்நாவலாசிரியரின் ~நட்டுமை| என்ற பிரசித்தி பெற்ற நாவலும்  சு.ரா. பவளவிழா இலக்கியப் போட்டியில் முதற்பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

இவரது இரண்டாவது நாவலான இது பள்ளிமுனை என்னும் கிழக்கு முஸ்லிம்களின் ஒரு கிராமத்து மக்களின் போர்க்காலத்து வாழ்வியலை  நாவல் வடிவத்தில் கொணர்ந்த முதல் முயற்சி ஆகும்.. 1990 காலப் பகுதியின் அரசியல் வரலாற்றை நாவல் இலக்கியமாக ஆவணப்படுத்தி நிற்கிறது  ~கொல்வதெழுதுதல் 90|--

    (கலைச்சிகரம்.. எம்.வை. நஐPப்கான்.--0767 313135--  12 பிரதான வீதி-- சாய்ந்தமருது. 03)


கொல்வதெழுதுதல். 90
நாவல்
ஆர்.எம். நௌஸாத்.
காலச்சுவடு வெளியீடு
பக்- 181.
டிசம்பர் 2013.
தொடர்புகள்-
0714457593
பிரதான வீதி
சாய்ந்தமருது

கொல்வதெழுதுதல் 90 - தகவல்கள்

கொல்வதெழுதுதல் 90 - 


தகவல்கள் 


2013இன் தேசிய சாஹித்திய போட்டியில் இரண்டாம் சுற்றுக்குத் தெரிவாகி இனப்பாகுபாடு காரணமாக முதற் பரிசை இழந்தது.


Kalachuvadu Publications - Facebook

mbasic.facebook.com/Kalachuvadu?... - Translate this page
நெளஸாத்தின் 'கொல்வதெழுதுதல் 90' நாவல் மிக முக்கியமான வரவு. 1990களில் தமிழ் - முஸ்லீம் முரண்கள் கூர்மைப்பட்ட சூழலில் விரிகிறது .


2014.07.27- சுடர் ஒளி

ஆர் எம் . நவ்சாத்தின்  கொல்வதெழுதுதல் 90 ஒரு பார்வை -
வெலிகம ரிம்ஸா முகமத்
2014.07.27- தேனீ - இணையத் தளம்
ஆர் எம் . நவ்சாத்தின்  கொல்வதெழுதுதல் 90 ஒரு பார்வை -
வெலிகம ரிம்ஸா முகமத்

2014.07.11 -  தினகரன் -
 கிழக்கிலங்கையின் மொழிவான்மையை  உலகிற்கு எடுத்துக் காட்டும் கொல்வதெழுதுதல் 90
ஏ எம்.எம். ஜாபீர்

2014.07.06- தினக்குரல்
ஆர் எம் . நவ்சாத்தின்  கொல்வதெழுதுதல் 90 - நூலறிமுகம்
எம் .வை . நஜீப்கான்