இயல் – 01
ஆய்வின் பிரதான நோக்கங்கள்.
இயல் - 01
1.0
ஆய்வுத்தலைப்பு
1.1
ஆய்வு அறிமுகம்
1.2
ஆய்வு நோக்கம்
1.2.1
பிரதான நோக்கம்
1.2.2
துணை நோக்கம்
1.3
ஆய்வுப்பிரசசினை
1.4
ஆய்வுக்கருதுகோள்
1.5
ஆய்வு முக்கியத்துவம்
1.6
ஆய்வு எல்லை
1.7
ஆய்வு முறையியல்
1.8
இலக்கிய மீளாய்வு
1.9
ஆய்வு இடைவெளி
00
1.0.
ஆய்வுத் தலைப்பு
ஆர். எம. நௌஸாத்தின ; ‘கொல்வதெழுதுதல்
90’ நாவல்:
ஓர் ஆய்வு
1.1.
ஆய்வு அறிமுகம்
நாம் அறிந்த கருத்துக்களையும் உணர்ச்சிகளையும்
பிறருக்கு எடுத்துக் கூறுகின்ற ஒரு கருவியாக மொழி விளங்குகின ;றது.
மொழியைப் பேசுகின ;ற
மக்களது உணர்ச்சிகளையும்ää
கொள்கைகளையும்ää குறிக்கோள்களையும்
எடுத ;துக்கூறுபவை
இலக்கியங்களாகும்.
சமுதாய மக்களின ; வாழ ;க்கை முறைää அவர்களினுடைய
இலட்சியம்ää அவர்களுடைய
இலக்கு போன்றவற்றை அவ்வாறே இலக்கியங்கள் படம் பிடித்துக் காட்டுகின ;றன. எனவே
இலக்கியங்களை காலத்தின ;
கண்ணாடி எனலாம். தமிழில ;
இலக்கியத்திற ;கு
மிக ந Pண்ட
இலக்கிய வரலாற்றுப் பாரம்பரியம் உள்ளது. ஏறத ;தாழ 2000 ஆம ; ஆண்டுகளுக்கு
முற்பட்ட சங்க இலக்கியங்கள் தொடங்கிää
இன ;றுவரை
பல்வேறு இலக்கியங்கள் தோற்றம் பெற்றுள்ளன. தமிழில் ஒவ்வொரு காலத்திலும்
இலக்கியவடிவங்கள் வேறுபட ;டுக்
கொண்டே வந ;திருக்கின
;றன.
ஆரம்பத்தில் கடின மொழிநடையான செய்யுள் இலக்கியங்கள்ää 19ஆம் நூற்றாண்டின ;
மேல்நாட்டவரின ;வருகையோடு
பாரிய மாற்றத்திற்குள்ளாகின ;றன.
விளைவுää இலகுவான
மொழிநடையில் அமைந ;த
நவீன இலக்கியங்கள் தோற்றம் பெற்றன. அதில் புனைகதை எனும் இலக்கிய வடிவம்
முக்கியமானதாகும்.புனைகதை வகைகளில் ஒன்றான நாவல் இலக்கியம் சமுதாயத்தை
பிரதிபலித்துக ; காட்டுகின
;ற
ஒரு முக்கிய இலக்கிய வடிவமாகும். இதன் மூலம் சமூக யதார்த்தங்கள் பெரிதும்
வெளிப்படுத்தப்படுகின ;றன.
மனித உணர்வுகளைää உலக
நடப்புகளை அப்படியே திரை போட்டுக் காட்டுவது நாவல்களின் மூலமே சாத்தியமாகின ;றது. அது
ஏனைய இலக்கிய கலை வடிவங்களை விட ஒரு பரந்துபட்ட கலை வடிவமாக காணப்படுகிறது.
நாவல் என்னும் இலக்கிய வகை
உலகில் தோற்றம் பெற்று இற்றைக்கு பல வருடங்கள் ஆகின ;றன. இந்நாவல்
இலக்கியம் 19ஆம்
நூற்றாண்டின ; இறுதிப்
பகுதியில் தோன ;றி
பல விமர்சனங்களை ஏற்றுக் கொண்ட போதும்ää
அது கண்ட வளர்ச ;சி
மிகவும் முக்கியமானது. ஐரோப்பிய சமூகää
அரசியல்ää பொருளாதார
மாற்றங்களினாலும் ஆங்கில மொழியின ;
ஊடுருவலினாலும் அச ;சு
இயந ;திரங்களின்
வருகையினாலும் இக்கதை வடிவமானது புதினம் என்ற பெயரில் தோன ;றி நாவல்
எனும் பெயரில் மாற்றம் பெற்றது. மேலைநாட்டு இலக்கிய வடிவமான புனைகதை
இலக்கியங்களில் முதலில் தோற்றம் பெற்றது நாவலாகும். இதனைää ‘கவிதையின ; கற்பனை
அழகுகளையும் உணர்ச ;சி
வெளிப்பாடுகளையும் உரைநடையில் கொண்டுவர முடியும் என்று உணர்த்தப்பட்ட பிறகு தமிழில
; முதலில்
தோன ;றியது
நாவல் இலக்கியமே’ என இரா தண்டாயுதம ;
குறிப்பிடுகிறார்.
பழங்கால கதை இலக்கியங்கள்
பெரும்பாலும் கவிதை வடிவிலேயே தோன ;றின.
பிற்காலத்தில் அச ;சு
இயந ;திரங்கள்
அறிமுகமாகிய சூழலில் உரைநடை வடிவில் கதைகள் எழுதும் நிலை ஏற்பட்டது. இதன ; வெளிப்பாடே
நாவல் என்ற புதிய இலக்கிய வடிவமாகும். இத்தாலியில் தொடக்கத்தில் ‘நாவல்லா’ என்று
அழைக்கப்பட்ட இவ்வடிவம் பின ;னர்
‘நவீனம்’ää ‘நவீனகம்’
என்று தமிழல ; மொழி
பெயர்த்து அழைக்கப்பட்டது. பின ;னர்
புதுமை என்ற பொருள் தருவதால் புதினம் என்று கூறும் வழக்கமும் உருவானது. ஆனால்
தற்போது நாவல் என்ற சொல் தமிழ்ச ;
சொல்லாகவே கருதப்படுவதுடன ;
அவ்வாறே வழங்கப்பெற்றும் வருகிறது. ‘எழுதப்பட்ட காலத்தின் உண்மையான வாழ ;க்கையினையும்
வாழ்வின ; பழக்க
வழக்கங்களையும் வெளியிடும் ஓவியம்தான ;
நாவல்’ என்று கிளாரா ந Pவி
கூறுகின ;றார்.
சென்ற 400 ஆண்டுகளாக
ஐரோப்பாவில் வளர்ச ;சியுற்று
வரும் நாவல் இலக்கிய முறையை தழுவிää
தமிழில ; இலக்கியங்களை
எழுதத் தொடங்கிய ஆசிரியர்களுக்குள்ளே மயுரம் வேதநாயகம் பிள்ளைää ராஜமையார்ää சூரிய நாராயண
சாஸ்திரியார் ஆகிய மூவரையும் சிறப்பாகக் குறிப்பிடலாம். ஆரம்பகால நாவல் வளர்ச ;சிக்கு சஞ ;சிகைää பருவ இதழ ;கள் போன ;றவை துணை
புரிந்தன. அந ;த
வகையில்ää தமிழில
; தோன ;றிய முதல ; நாவலாக மயுரம்
வேதநாயகம் பிள்ளை எழுதிய ‘பிரதாப முதலியார்’ சரித்திரத்தை குறிப்பிடமுடியும்.
இந்தியாவில் தமிழ் நாவல்கள் தோன ;ற சாதகமாக
இருந்த அதே காரணிகளே இலங்கை தமிழ் நாவல் வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைந்தன. தமிழகத்தை
அடுத்து ஈழத்து நாவல் இலக்கியம் தோற்றம ;
பெற்றாலும் தமிழகத்தின ;
நாவல் வரலாற்றுக ;கு
சமாந ;தரமாகää ஈழத்து நாவல்
வரலாற்றுக்கும் நூற்றாண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு காணப்படுகின ;றது. அந ;த வகையில்ää ஈழத்து நாவல்
இலக்கியத்தின் தொடக்கம ;
சித்திலப்பை எழுதிய ‘அன ;பே
சரித்திர’ த்துடன ; தோற்றம்
பெறுகிறது. அவ்வாறேää
கிழக்கிலங்கையில் ‘ஊசோன் பாலத்தை கதை’(1891)ää
‘மோகனாங்கி’ ஆகியன வெளிவரத் தொடங்கியது முதல்ää சந்தர்ப்ப சூழ ;நிலைகளுக்கும்
பிரச ;சினைகளுக்கும்
ஏற்ப கிழக்கிலங்கையிலிருந ;தும்
நாவல் வரத் தொடங்கின. இவ்வாறு முழு இலக்கியமானது வெகுவாக வளர்ச ;சி அடையத்
தொடங்கியது. இதற்கு பல்வேறு நாவல் ஆசிரியர்களும் பல்வேறு பங்களிப்புக்களைச ; செய்துள்ளனர்.
இந்த வரிசையில்ää தனக்கென ஒரு
அடையாளத்தை ஏற்படுத்தியää
கிழக்கிலங்கையின ;
சாய்ந ;தமருதையைச
; சேர்ந்த
தீரன ; ஆர்.
எம். நௌஸாத்தும் ஒருவராவார். வித்தியாசமான கற்பனை வளமுள்ளää கதை
சொல்லியான இவர் இலக்கியத்தின ;
பல்வேறு கூறுகளிலும் உதாரணமாகää
வானொலிää நாடகம்ää சிறுகதைää கவிதைää நாவல ; என பல்வேறு
துறைகளிலும் தன் இலக்கிய பிம்பத்தை அழுத்தமாகப் பதித்து வருகிறார்.
அதே சமயம் தற்காலப் போக்கில்
இவர் தன ; படைப்புகளை
சூபிச மையத்தில் செலுத்தி வரும் போக்கு காணப்படுகிறது.இவர் பன ;னிரெண்டிற்கு
மேற்பட்ட வானொலி நாடகங்களை எழுதியுள்ளதுடன ;
பதினெட்டிற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். அவரது சிறுகதைகள் ‘வல்லமை
தாராயோ’(2000)ää ‘வெள்ளி
விரல்’(2011)ää ‘த Pரதம்’(2017) ஆகிய மூன ;று
தொகுதிகளாக வெளிவந ;துள்ளன.
அவ்வாறே கவிதை துறையில் ‘தூது’ கவியேடு (2011)ää
‘புள்ளி சிற்றேடு(1993)
வெளியிடப்பட்டது. இதுதவிரää
‘ஆழித்தாயே அழித்தாயே’(2004)ää
‘அபாயா என் கருப்பு வானம’(2015)ää
‘முத்திரையிடப்பட்ட மது’(2017)
ஆகிய கவிதை தொகுதிகள் வெளிவந ;தன.
இவரது நாவல் இலக்கியங்களாக ‘வானவில்லே ஒரு கவிதை கேளு’(2005)ää ‘நட்டுமை’(2009)ää ‘கொல்வதெழுதல 90’;(2013)ää ‘வக ;காதுக் குளம’;(2021)ää ‘ஆமீன்’(2023) என்பன வெளிவந
;தன.
இவருடைய நாவல்கள் பெரும்பாலும் கிழக்கிலங்கையின்
சமுகப்பிரச ;சினைää வாழ ;வியல் அம்சம்ää பண்பாட்டுää கலாசார
அம்சங்கள் முதலானவற்றை பிரதிபலிக்கும் வகையிலே அமைந ;தன.
இந்நிலையில் இருந்து மாறிää
கிழக்கிலங்கையின ;ää
அரசியல் பிரச ;சினைää இன முரண்பாடு
போன ;றவற்றை
பிரதிபலிப்பதாக இவருடைய ‘கொல்வதெழுதல் 90’
எனும் நாவல் விளங்குகிறது. இந்நாவல் இன்னுமொரு திசையினை பதிவு செய்திருப்பது
குறிப ;பிடத்தக்க
விடயமாகும். இதனாலே இக் ‘கொல்வதெழுதல் 90’
எனும் நாவல் இவரது ஏனைய படைப்புகளில் நின்று வேறுபட்ட ஒரு போக்கினை
கொண்டமைந்ததாக காணப்படுகின ;றது.
அந ;தவகையில்ää இந ;நாவலானது
போர்க்கால இலக்கிய மரபை ஒட்டியதாக பரிணமித்துள்ளது எனலாம்.
கிழக்கில் தமிழர்களும்
முஸ்லிம்களும் சமாதானமாக வாழ ;ந்தமைக்கு
நிறையவே வரலாற்று சான ;றுகள்
உள்ளன. இரண்டு தசாப்தங்களுக்கு முன ;னர்
ஆரம்பித்த இனத்துவ பிரச ;சினைகளுக்கு
முன்ää இவர்களுடைய
வன ;முறை
சம்பவங்கள் நடக்கவே இல்லை. பரஸ்பர புரிந்துணர்வு மரியாதை சமூகத்தின ; இடையே
உறுதியான உறவினிலே இருந்து வந ;தனர்.
அரசியல் பிரச ;சினைகளையும்
கூட அவர்கள் ஒருமித்த குரலிலே வெளிப்படுத ;தியுள்ளனர்.
இன முரண்பாடு சம்பந ;தப்பட்ட
விடயங்களை வடமுனையிலிருந ;து
தென ;கிழக்கு
வரை அனைத்து தமிழர்களும் முஸ்லிம்களும் அறிந்தே. ஆனால் எதிர்பாராத விதமாக கொஞ ;சம் கொஞ்சமாக
சிங்கள - தமிழ் பிரச ;சினையாக
இருந ;த
ஈழத்தின ; பிரச
;சினை
தமிழ் - முஸ்லிம்களுகி;டையிலான
பிரச ;சினையாக
மாறத் தொடங்கியது. இந ;த
இனப் பிரச ;சினையின்
வரலாற்றினை நுட்பமாகவும் தத்ரூபமாக பதிவு செய்ததாக ‘கொல்வதெழுதல் 90’ எனும் நாவல்
காணப்படுகின ;றது.
1990 ஆம்
ஆண்டு காலப்பகுதியில்ää
இலங்கை முஸ்லிம்களின்
கிராமங்களை யுத்தத்தின ; கோரக்கரங்கள்
தட்டிய போது அக்கால மக்களின் கையறு நிலையினை இலக்கியமாக வார்த்ததே இந ;த
நாவலாகும்.அதாவதுää
90 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை மக்களின ; போரியல் வாழ ;வில்
மிக துன ;பியலான
வரலாறாக இருந ;தது.
இலங்கை ராணுவம் மற்றும் அதிரடி அடிப்படைää
இந்தியா அமைதிப ;படைää விடுதலைப்
புலிகள்ää தமிழ்
தேசிய ராணுவம்ää உதிரி
இயக்கங்கள்ää இனம்
தெரியாத ஆயுததாரிகள்ää
பாதாளஉலகக் கோஷ்டிகள் என்று பற்பல ஆயுத குழுக்கள் நாட்டை ரணகளப்டுத்திக்
கொண்டிருந ;த
காலம். இதில் அப்பாவி முஸ்லிம்கள் அநியாயமாக தாக்கப்பட்டனர். இச்சந்தர்ப்பத்தில்
முஸ்லிம்களை பாதுகாக்கவும ;
அவர்களுக்கு குரல் கொடுக்கவும் என எழுந ;த
அரசியல் கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் எழுச ;சி
பெற்று வந ;தது.
ஆளும் கட்சியில் இருந ;த
பாராளுமன ;ற
உறுப்பினர்கள் வாய் பேச முடியாத மௌனிகளாக இருந்த நிலையில்ää எம். எச்.
எம். அஷ்ரபின ; தலைமையில்
முஸ்லிம் காங்கிரஸ் எனும் அரசியல் கட்சி தோற்றம் பெற்றது. இது ஆரம்பித்து மிக
குறுகிய காலத்தினுள் தேர ;தல்
அரசியலில் செல்வாக்கு செலுத்த தொடங்கியதுடன ;
தேசிய அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக மாறியது. இதனால்ääஅரசாங்கத்தின
; மீது
நம்பிக்கை இழந்திருந ;த
மக்கள் மீண்டும் அரசியலை நம்ப ஆரம்பித்ததுடன ; இக்கட்சிக்கு மூலை முடுக்கெல ;லாம் ஆதரவு
திரளத் தொடங்கியது. இக்கட்சிக்கு முதலாவது ஆதரவு வழங்கிய கிராமமாக பள்ளிமுனைக்
கிராமம் காணப்படுகின ;றது.
இக்ககராமத்தை அடிப்படையாகக் கொண்டே இக்கதை நகர்கிறது.
அந ;தவகையில்ää ஆர். எம்.
நௌஸாத்தின ; ‘கொல்வதெழுதல்
90’ எனும்
நாவலில்ää 1990 காலப்பகுதியின
; போர்ச
;சூழலும்
அக்காலத்து அரசியலும் அதில் தோன ;றிய
அரசியல் கட்சிää அரசியல்
தலைவன ; என்பன
கிழக்கிலங்கையின ; குக்கிராமமானம்
பள்ளிமுனை கிராமத்தில் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தியது என்பதை மையமாகக் கொண்டுää அவற்றை
வெளிப்படுத்தும் வகையில் இவ்வாய்வு இடம்பெறவுள்ளது.
1.2.
ஆய்வு நோக்கம்
பின ;வரும்
நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.
1.2.1.
பிரதான நோக்கம்
கொல்வதெழுதல் 90 நாவல்ää 90களில்
கிழக்கிலங்கையில் இடம்பெற்ற அரசியல் சமூகப்ääபொருளாதாரää பண்பாட ;டம்சங்களை
விளக்குவதாக அமைகிறது. மேலும் இது இன முரண்பாடுää முஸ்லிம் கட்சிகளின ;
தோற்றம்ää முஸ்லிம்
கிராமத்து மக்களின ; வாழ்க்கை
முறை என்பவற்றை திறம்பட எடுத்துரைக்கிறது. இந ;தவகையில் இந்நாவல் கலைத்துவம்மிக்கதாக எழுதப்பட்டிருப்பதனை
ஆராய்வதே இவ்வாய்வின ;
நோக்கமாகும்.
1.2.2.
துணை நோக்கம்
கொல்வதெழுதல் 90 எனும் நாவலை
ஆய்வு செய்து ஆவண படுத்துவதன ;
மூலம் இலங்கையின ;
இனத்துவ அரசியல் பற்றி அறியாத தமிழ் வாசகர் வாசகர் மத்தியிலும் எதிர்கால சந ;ததியினர்
மத்தியிலும் அறியச ; செய்தல்.ஆர்.
எம் நவ்ஸாத்தின ; மொழி
நடையின ; தனித்துவத்தினை
இனம் காட்டுதல்.
1.3.
ஆய்வுப ; பிரச்சினை
‘கொல்வதெழுதுதல்
90’ எனும்
நாவலின் கருத்துநிலை மூலம் 1990
யுத்த சூழலும் அதற்குள் தோன ;றிய
அரசியலும் அவை அக்கால மக்களின ;
வாழ ;வியலில்
ஏற்படுத ;திய
தாக்கங்களும் வெளிக்கொணரப்பட்டு நௌஸாத்தின ;
படைப்பாளுமை வெளிப்படுத்தப்படுகின ;றதா? என்பது
இவ்வாய்வின ; ஆய்வு
பிரச ;சினையாகும்.
1.4.
ஆய்வு கருதுகோள்
கிழக்கிலங்கையில் எழுந ;த நாவல்
இலக்கியங்களில்ää ஆர்.
எம் நௌசாத்தின ‘கொல்வதெழுதுதல்
90;’ எனும்
நாவல் தனித்தன ;மை
வாய்ந ;தது
எனும் கருதுகோளிலும்ää
இவரது மொழ நடை தனித்தன ;மை
வாய்ந ;தது
என்ற கருதுகோளின ; அடிப்படையிலும
; இவ்வாய்வு
மேற்கொள்ளப்படவுள்ளது.
1.5.
ஆய்வு முக்கியத்துவம்
நாவல் தொடர்பான ஆராய்ச ;சிகள் இன்று
வரை இடம்பெற்ற வண்ணமே உள்ளன. எனினும்ää
போர்க்கால இலக்கியங்கள் மிகக் குறைந்த அளவிலே வெளிவந ;துள ;ளன. அந ;த வகையில்ää ‘கொல்வதெழுதுதல்
90’ நாவல்
போர்க்கால இலக்கிய மரபை தழுவிய புதிய கருப்பொருள் கொண்டு அமையப்பெற்றுள்ளது.
மேலும்ää இந்நாவல
; எதிர்கால
சந ;ததியினர்
பயன ;பெறும்
வகையில் இறந்தகால நிகழ ;வினை
கண்முன ;னே
கொண்டு வருவது போல அமையப் பெற்றுள்ளமையினாலும்ää இவ் ஆய்வு முக்கியமானதாகும்.
கிழக்கிலங்கை முஸ்லிம்களின ; வாழ ;வியல்
அம்சங்களை அம்மக்களின ;
தனித்துவமான மொழிநடையில் சித்தரிக்கப்பட ;டுள்ளது. இதனை ஆய்வு செய்வது இவ்வாய்வின ; முக்கியத்துவம்
ஆகும்.
1.6.
ஆய்வின ; எல்லை
இவ் ஆய்வானதுää ஆர். எம்.
நௌஸாத்தின ; கொல்வதெழுதுதல்
90
எனும் நாவலை எல்லையாகக் கொண்டு ஆராயப்படவுள்ளது.
1.7.
ஆய்வு முறையியல்
இது பண்புசார் ஆய்வாகும். இதில்
முதலாம்ää இரண்டாம்
நிலை தரவுகள் பயன ;படுத்தப்படவுள்ளன.முதலாம்
நிலை தரவுகளாக: நேர்காணல்ää
கலந ;துரையாடல்
என ;பனவும்இரண்டாம்
நிலை தரவுகளாக: ஆய்வு தலைப ;பு
தொடர்பில் வெளியிடப்பட்ட நூல்கள்ää
ஆய்வு கட்டுரைகள ;ää
சஞ ;சிகைகள்
போன ;றன
பயன ;படுத்தப்படவுள
;ளன.
1.8.
இலக்கிய ம Pளாய்வு
ஒரு ஆய்வில் முக்கியமான அம்சமாக
இலக்கிய மீளாய்வு காணப்படுகிறது. இதன்மூலம் ஏற்கனவே செய்யப்பட்ட ஆய்வின ; அடிப்படையில்
புதிய ஆய்வினை சிறப்பாக மேற்கொள்ள முடிவதுடன ;ää முந ;தைய
ஆய்வுகளின ; இடைவெளியைப்
பூரணப்படுத்தும் வகையில் புதிய ஆய்வினை அமைத்துக் கொள்ளலாம்.குறித்த ஆய்வினை
தெளிவுபடுத்தும் வகையிலும் அதனுடன ;
தொடர்புபட்ட அறிவினை
பெற்றுக்கொள்ளும் நோக்குடனும்
ஆய்வுத் தலைப்புகளுக்கு பொருத்தமான நூல்கள்ää
கட்டுரைகள்ää சஞ ;சிகைகள்
மீளாய்வு செய்யப்பட்டுள்ளன. ஏ. எம். ஜாஃபிர் டீயு. அவர்கள்ää ‘தினகரன ;’ (2014. 07. 11) பத்திரிகையில்ää ‘கிழக்கிலங்கையின
; மொழி
வாண்மையை உலகிற்கு எடுத்தியம்பும் கொல்வதெழுதல்90 - நௌசாத்தின ;
நாவல் மீதான ஒரு பார்வை’ எனும் தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். இதில்
நௌஸாத்தின ; மொழி
நடை பற்றி குறிப்பிடப ;பட்டுள்ளது.
‘பேச ;சு
மொழிக்கு உச்சவரம்பு இருப்பதில்லை அதனுள் உறையும் உணர்வலைகளின் பிரதிபலிப்பு
நாவலின ; நெடுகிலும்
தொடர்கிறது. இத்தன ;மை
வாசகனை லாவகமாக கதையில் வசப்படுத ;துகின
;றது.
இது நௌஸாத்தின ; எழுத்தாளமைக்கான
சான்றாகும்’.எனக் குறிப்பிட்டுள்ளார்.
எம். ஏ. சாஜித் என்பவர் ‘தினகரன ;’(2016. 11. 15) பத்திரிகையில்ää ‘கதை
சொல்லியின் அரசியல்ää
தீரனின ; கொல்வதெழுதுதல்
90;’ எனும்
தலைப்பிலான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். இதில் இந்நாவலில் இடம்பெறும் அரசியலையும்
அது பற்றிய நௌசாத்தின ;
எழுத்துக்களையும் குறிப்பிட்டுள்ளார். ‘மண்ணோடு கலந ;த ஒரு பெரும்
கட்சியினதும் அதனோடு இணைந்து முழங்கிய மக்களின ; உணர்வுகளையும் மிக நுணுக்கமாக கதையாடி இருக்கும் தீரன ; ஆர். எம்.
நவ்ஸாத்தின ; ‘கொல்வதெழுதுதல்
90’ எனும்
நாவல் ஈழத்தின ; நாவல்களின்
வருகையில் மிக அற்புதமான படைப்பாகும்.
வரலாற்று அடையாளங்களை பிரதிபலிக ;கின ;ற காத்திரமான
நாவல்களின ; வரிசையில்
தீரனின ; இந்நாவலை
யாராலும் இரட்டிப்புச் செய்து விட முடியாது’. என்று குறிப்பிட்டுள்ளார்.
மு. புஷ்பராஜன ;.ää ‘காலம்’ இதழ் 52ல்ää ‘இனப்பிரச ;சினை:
வரலாறும் படைப்பிலக்கியமும்’என்ற தொடர் கட்டுரையில் ‘கொல்வதெழுதல் 90’ எனும்
நௌஸாத்தின ; நாவல்
பற்றிய கட்டுரை ஒன ;றை
எழுதியுள்ளார். இதில் இந்த நாவலில் இடம்பெறும் இனப்பிரச ;சினை
தொடர்பான விடயங ;களை
குறிப்பிட்டுள்ளார்.எம். பி. பிர்தவுஸ்ää
இஸ்லாமிய இலக்கிய மாநாடு ஆய்வு மலரில்ää
‘கிழக்கிலங்கை
முஸ்லிம் படைப்பாளரின ; தமிழ் நாவல்
புனைவுகள்’ எனும் தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்ள்ளார். இதில்ää ‘கொல்வதெழுதுதல்
90’ எனும்
நாவல் புனைவு என்றாலும் அனைத்தும் புனைவு அல்லää என்ற அடிப்படையில்ää
‘ஆர். எம். நௌஸாதின் கொல்வதெழுதுதல் 90
நாவல் 1990
காலப்பகுதியில் கிழக்கிங்கை முஸ்லிம் கிராமங்கள் யுத்தத்தின ; கெடுபிடிக்குள்
அகப்பட்டு நசுங்குண்ட நிலையை எடுத்துக்காட்டுகிறது. யுத்த சூழ ;நிலையில்
முஸ்லிம் அரசியல் தலைமைகள் மௌனிகளாக இருந்த தன்மையைää அவர்களது கையாறு நிலையை எடுத்துக்காட்டி இருக்கிறார்
ஆசிரியர்." என்று குறிப்பிட்டுள்ளார்.
வெலிகம ரிம்சா முஹம்மத்ää ‘சுடர் ஒளி’(2014.7.27) பத்திரிகை
மற்றும் ‘தேன P’இணையத்தளத்தில்(2014.7.18)ää ‘ஆர்.
எம் நௌசாத்தின ; கொல்வதெழுதுதல்
90
நாவல் பற்றிய கண்ணோட ;டம்’
எனும் தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். இதில் ஆர். எம். நௌசாத்தின ; மொழிநடை
பற்றி குறிப்பிடப்பட ;டுள்ளதுடன
; அவருடைய
நாவல் பற்றிய சில தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அதாவதுää “மண்வாசனை
மணக்கும் விதமான படைப்புக்களை எழுதுவது எல்லோராலும் முடிந்த விடயமல்ல. அதை இயல்பான
மொழி நடையாக எழுதி தன ;
நிலையை நிரூபித்துள்ளார் ஆர். எம்.நௌஸாத்” என்கிறார்.
எம். வை. நஜீப்கான ;.ää ‘தினக்குரல்’(2014.7.6) பத்திரிகையில்ää ‘ஆர். எம்.
நௌஸாத்தின் கொல்வதெழுதல் 90’
எனும் தலைப்பில் ஒரு கட்டுரையினை எழுதியுள்ளார். இதில் கொல்வதெழுதல் 90 நூலின ; அட்டை
வடிவமைப்புகளையும் அந ;நூலில்
குறிப்பு எழுதியவர்ää
யாருக்காக சமர்ப்பிக்கப்பட ;டது
என்பதை குறிப்பிட்டுää
கொல்வதெழுதுதல் 90
நாவலின ; கதை
கருவை சுருக்கமாக குறிப்பிட்டுள்ளார். “நாவலின ; கதை சொல்லும் இலாவகமும் கவர்ச ;சி நடையும்
கிராமிய மொழிக் கையாள்கையும் நாவலுக்கு உரமூட்டி விறுவிறுப்பாக கொண்டு செல்கிறது"
என்கிறார்.
அனோஜன் பாலகிருஷ்ணன ;.ää ‘நடு’ மின ;இதழில்ää ‘கொல்வதெழுதல்
90 -அலைக்கழிப்பின
; நாட்கள்’
என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்ள்ளார். இதில் இவர் தனது விமர்சன
ரீதியான பார்வையை வெளியிட்டுள்ளார். குறிப்பாக அவரது மொழி நடை பற்றி பேசியுள்ளார்.
இவர் குறிப்பிடுகையில்ää
“நாவலை ஒரே மூச ;சில்
வாசிக்க முடிந்தது. வாசித்து முடித்த போது அப்படி என்ன கவர்ந ;தது என்று
யோசித்தால் நாவலின் வட்டார வழக்கு என்றே தோன்றியது”. என்கிறார்.
வச Pம் அக்ரம்
என்பவரினால்ää ‘படிகள்’(2019) எனும் இதழில்‘கொல்வதெழுதுதல்
90’பற்றிய
நேர்காணல் இடம் பெற்றுள்ளது. இதில் இந்நாவல் போர்க்கால பதிவு என்பதன ; யதார்த்தம்
பற்றி கலந ;துரையாடப்பட்டுள்ளது.
பா. மனோகரதாஸ் என்பவரினால்ää ‘தினக்குரல்
வார மலரில்(2018.12.23)
‘தீரன ; ஆர.
எம். நௌஸாத்துடனான நேர்காணல்’ எனும் தலைப்பில் நேர்காணல் இடம்பெற்றுள்ளது. இதில்
இந ;நாவல்
உருவாக்க வேண்டியதன ;
பின ;னணி
பற்றி கலந்துரையாடப்பட ;டுள்ளது.
1.9.
ஆய்வு இடைவெளி
ஈழத்து இலக்கிய வரலாற்றில்
தனக்கென தனியான ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியுள்ள ஆர் எம் நௌஸாத்தின ;ää ‘கொல்வதெழுதுதல்
90’ எனும்
நாவல் தனியான ஒரு ஆய்வாக மேற்கொள்ளப்படவில்லை. இவ்விடைவெளியை நிவர்த்தி செய்யும்
வகையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.
00
ஆய்வு- இயல் - 02
ஆர்.
எம். நௌஸாத்தும் அவருடைய இலக்கியப் படைப்புக்களும்
இயல் - 02
2.0. இயல் - 02
ஆர். எம்.
நௌஸாத்தும் அவருடைய இலக்கியப் படைப்புக்களும்.
2.1.
ஆர். எம்.
நௌஸாத்தின் வாழ்க்கைப் பின்னணியும் இலக்கிய உட்பிரவேசமும்.
2.2.
இலக்கியப்
படைப்புகள்
2.2.1.
வானொலி
நாடகங்கள்.
2.2.2.
சிறுகதைகள்
2.2.3.
கவிதைகள்
2.2.4.
நாவல்கள்
2.3.
ஆர். எம். நௌஸாத்
தனது இலக்கியப் படைப்புகளினூடாக பெற்ற விருதுகள்ää பரிசில்கள்ää
பராட்டுக்கள்.
2.4.
நாவல் தோற்றப்
பின்னணி.
Ooooooooooooooooooooooooooooooooooooooooo
2.0. ஆர். எம். நௌஸாத்தும் அவருடைய இலக்கியப் படைப்புக்களும்.
2.1. ஆர். எம். நௌஸாத்தின் வாழ்க்கைப் பின்னணியும் இலக்கிய உட்பிரவேசமும்.
ஈழத்து இலக்கிய
வரலாற்றினை எடுத்து நோக்கும்போதுää அதன் வளர்ச்சிக்குப் பல்வேறு
இலக்கியவாதிகளும் பல்வேறு பங்களிப்பினை வழங்கியுள்ளனர். அதில் நம்மவரும் பலராவர்.
அந்த வரிசையில்ää தனக்கென ஒரு அடையாளத்தினை ஏற்படுத்திய
ஒருவராக தீரன் ஆர். எம். நௌஸாத் காணப்படுகிறார். இவர் கிழக்கிலங்கையின் முஸ்லிம்
கிராமமான சாய்ந்தமருதில்ää எம். எஸ். ஹாஜரா மற்றும் இஷட்.
கே. ராசிக்காரியப்பர் தம்பதியினருக்கு மூத்த புதல்வனாக 1959. 09. 05 பிறந்தார். இவரின் உடன் பிறந்த சகோதார்கள் மூவர். தீரன் என்பது இவரது
புனைப்பெயர். இது இவருடைய இயற்பெயரான நௌஸாத் என்பதன் பாரசீக
மொழிப்பெயச்ர்ச்சொல்லின் தமிழாக்கம் ஆகும் .
தனது ஆரம்பக்
கல்வியை கல்முனை ஸாஹிரா கல்லூரியில் ஆரம்பித்த இவர் உயர்தரத்தில் விஞ்ஞான
பீடத்தினை தெரிவு செய்து அப்பாடசாலையிலேயே கற்றுவந்தார். இவர் கல்வி கற்றுக்
கொண்டிருக்கும் போது 1975இல் பாடசாலை வெளியீடான ‘அம்பு’ சஞ்சிகைக்கு ஒரு வாசகர் கடிதம் எழுதினார். இதன் மூலமே எழுத்துலகுக்கு
உட்பிரவேசித்தார். எனினும்ää இவர் சிறுவயதிலேயே எழுத்தில்
ஆர்வம் கொண்டவராக காணப்பட்டார். இதற்கு இவரது குடும்பப் பின்னணி முக்கியமான
காரணமாக அமைந்தது. இவரது பெற்றோர்ää உடன்பிறப்புக்கள்
அனைவரும் வாசிப்பதில் தீவிர நாட்டம் கொண்டவர்களாக இருந்தார்கள். அந்தக்
காலத்திலிருந்தே இவரது தாயார் ஆனந்த விகடன்ää குமுதம்ää
கல்கி ஆகிய பத்திரிகைகளின் வாசகியாக இருந்தார். இவருடைய தந்தை ஆங்கில
நாவல்கள் படிப்பவராக இருந்ததுடன் அதன் கதைகளை குடும்பத்தில் உள்ளவர்களுடன் பகிர்ந்து
கொள்வார். அவரது தாயாரும் தான் வாசித்த
கதைகளை சொல்வார். இவ்வாறு மாலை வேளைகளில் அவரது குடும்பத்தினர் தாங்கள்
வாசித்தவற்றை பகிர்ந்து கொள்வதில் தங்களது பொழுதினைக் கழித்தனர். இவரது தந்தை
எல்லா தினசரி பத்திரைகளுக்கும் தவறாத சந்தா கட்டி விடுவதனால் விடியக் காலையிலேயே
பத்திரிகைகள் அவரது வீட்டுக்கு வந்துவிடும். இவரது தாய்வீடு ஒரு நூலகமாகவே
இருந்தது.
,இவர் எட்டாம்,
ஒன்பதாம் வகுப்புகளில் படிக்கும் போது, வீட்டில்,’பூங்குயில்” என்ற
பெயரில், ஒரு கையெழுத்து சஞ்சிகை கூட
தயாரித்து நடத்தி வந்தார்.அதில், தொடர்கதை,சிறுகதை என்பவற்றை தானே
எழுதினார்..குறுக்கெழுத்துப் போட்டி தயாரிப்பவரும், கேள்வி,பதில் பக்கம்
தயாரிப்பதுவும் இவரே.. அதில், வாசகர்
கடிதங்களைக் கூட இவரே எழுதுவார்... இவருடைய தந்தை இவரை ‘எழுத்தாளரே’
என்று அழைக்கää இவரது தாய் இவரின் முதல்
வாசகியாகவும் இருந்தார்.
தவிரவும், இவரது
தாய்மாமன் ஒருவர் சேகரித்து அலுமாரியில் பூட்டி வைத்திருந்த பலவகையான மர்ம, கிரைம்
நாவல்களை திருடிச் சென்று கோழிகளை அடைக்கும் கூட்டுக்குள் குந்தியிருந்து
வரிவிடாமல் வாசித்து முடிக்கும் பழக்கமும்
இவரிடம் இருந்தது என்கிறார் ....
குடும்பத்தில்
அனைவரும் வாசிப்பின் மையலில் இருந்ததால், இப் பின்னணியிலேயே இவருக்கு எழுத்துக்கள்
மீதான ஆர்வம் வந்தது எனலாம். இதுபற்றி இவரிடம் கேட்ட போதுää
“எழுத்துலகிற்கு
யாரும் டிக்கெட் பெற்றுக் கொண்டு நுழைவதில்லை தானே... என்னை பொறுத்த வரைக்கும் என்
குடும்ப பின்னணி தான் ஒரு பெரிய தூண்டுகோலாக இருந்தது.” என்று
குறிப்பிட்டார் .
மேலும், இவரது
தாயார் சாய்ந்தமருது போது நூலகத்தின்
அங்கத்தினராக இருந்து பல நூல்கள் பெற்று வாசிப்பவராக இருந்த படியால், வீட்டுக்கு
வரும் நூல்களை தாயார் வாசிக்கும் முன்னமே, இவர், தன் பாடப் புத்தகங்களுக்குள்
ஒளித்து வைத்துப் படித்து விடுபவராகவும் இருதார். இந்தக் காலங்களில்தான், மேதாவி,சிரஞ்சீவி, பி.டி. சாமி போன்ற திகில் மன்னர்களின் கதைகளை விடுத்து
சாண்டில்யன், கல்கி, டாக்டர்.மு.வ.,
லக்ஷ்மி போன்றோரின் சரித்திர, சமூகக் கதைகளின் பால் தன் கவனம் திரும்பிற்று
எனக் குறிப்பிட்டார். இதன் பின்னர் வீரகேசரியின் நாவல் வெளியீடுகள் இவருக்கு
அறிமுகமானதன் பின்னர்தான் ஈழத்து இலக்கிய வாசிப்பின் சந்தர்ப்பங்கள் உருவாகின
என்று குறிப்பிடுகிறார்...இக்காலத்தில், கே .டானியல், வ.அ.இராசரத்தினம்,
தி.ஞானசேகரன் போன்றோரின் நூல்கள்
அறிமுகமாயின..
இவர் உயர்தரக்
கல்வியை முடித்த பின்னர் பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைத் துறையில் ஒரு வருடம்
வெளிவாரியாக கற்றுக் கொண்டிருக்கும்போதுää கொழும்பில் அஞ்சல்
அதிபர் தொழில் கிடைக்கவே, உயர் கல்வி வாய்ப்பு கைகூடாமல் போயிற்று
தொழினிமித்தமாக கொழும்புää அம்பாறைää மட்டக்களப்புää காத்தான்குடிää
ஒலுவில்ää கல்முனை என பல பகுதிகளிலும் அஞ்சல்
அதிபராக 30 வருட காலம் கடமையாற்றினார். 1989இல்ää தனது 29 ஆவது வயதில்
பாத்திமா றிபாயா என்பவரை திருமணம் செய்தார். இவருக்கு ரப்சன் ஜானிää பிரின்ஸ்ää பாத்திமா தீப்ஷிகா ஆகிய மூன்று பிள்ளைகள்
உள்ளனர்.
இவருடைய தொழிலும்
இவருக்கு படைப்புலகில் சஞ்சரிப்பதற்கு முக்கிய காhணமாக இருந்தது. இது
பற்றி இவர் கூறும்போதுää
“இருக்காதா
பின்னே… பெற்ற மக்களால் கைவிடப்பட்டு பிச்சைச் சம்பளம் பெற
வரும் தாய்மார்கள்… கவனிப்பாரின்றி வார்ட்டுகளில் கிடந்து
நோய் நிவாரணப் பணம் பெறவரும் நோயாளிகள்… தள்ளாத வயதில்
உதவுவாரின்றி தன்னந்தனியே வீதிகளில் அல்லாடி வரும் பென்சன்காரர்கள்… தான் சாப்பிடாவிட்டாலும் மகனுக்கு பசிக்கும் என்று சொல்லி தான் பிச்சை
எடுத்த காசை அனுப்ப வரும் பரம ஏழைகள்… யார் எக்கேடு கேட்டுப்
போனாலும் தன் சிபார்சை ஆணையை ஏற்றுக் கொள்ள வற்புறுத்தும் அரசியல்காரர்கள்…
நேற்றைய நேர்முகப் பரீட்சைக்கு இன்று கடிதம் கேட்டு வரும் இளைஞர்கள்…
தன் காதலியின் கடிதத்தை பெற்றோருக்கு தெரியாமல் காதலனிடம் கொடுக்கச்
சொல்லி அசட்டுச் சிரிப்புடன் வரும் விடலைகள்…
எந்தக் கஷ்டம்
நமக்கு இருந்தாலும் தன் வேலையை முடித்துக் கொண்டு செல்லும் அவசரத்தில் வரும்
வர்த்தக பிரமுகர்கள்…
எத்தனை வேலைகள் இருந்தாலும் தன் ‘வருடாந்த
சோதனையை’ செய்து ஆயிரம் பிழை சொல்லி எச்சரிக்கைப்
பத்திரிக்கை அனுப்பும் பரிசோதகர்கள்… ஹர்த்தால்… கடத்தல்… போக்குவாத்தின்மை… நோய்…
என்ன காரணம் இருந்தாலும் தபாலகம் மட்டும் திறந்திருக்க வேண்டும்
என்று அடம்பிடிக்கும் உயர் அதிகாரிகள்… நெருக்கும்
பொதுமக்கள்… அப்பப்பா… யாரிடம் கதை
இல்லை… யாரிடம் கவிதை இல்லை…?" என்று
கூறினார்.
கடமை நிமித்தம்,
ஊருக்கு,ஊர் மாறுதல் பெற்றுச் செல்லும் காலங்களில் வாசிப்பதையும் எழுதுவதையும்
இவர் விட்டு விடவில்லை..இலங்கையின் சகல பொது தினசரிகள், இலக்கிய சஞ்சிகைகள்
என்பவற்றில் கவிதை, கதைகளை எழுதிக்
கொண்டிருந்தார்... சிறுகதைகளுக்கு சில பரிசுகளும் பெற்றிருந்தார்...இதே
காலப்பகுதியில் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையிலும் இவரது பல நாடகங்கள்
ஒளிபரப்பாயின...
ஆனால், இவரது
எழுத்துலக வாழ்வில், 1990 காலப் பகுதிகளில், திடீரென ஒன்றும் எழுதாமல், காரணமின்றியே, ‘இலக்கிய நெடுந்தூக்கம்’
கொண்டிருந்ததாகவும் . இருப்பினும், தோன்றும் போதெல்லாம், அதனை எழுதி, பிரசுரத்துக்கு அனுப்பாமல், வைத்துக் கொண்டும் , அதனை அடிக்கடி செவ்வை பார்த்துக்
கொண்டும் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் .. இக்காலத்தில், அதிகமான புத்தகங்களை
வாசிக்கின்ற பழக்கத்தையும் கொண்டிருந்தார். முக்கியமாக, தன் இலக்கியக் குருநாதராக,
சொல்லிக் கொள்ளும், பாவலர் பஸில்
காரியப்பருடனான நெருக்கமான தொடர்பு இக்காலப்பகுதியில் ஏற்பட்டது .
.இலக்கிய
நெடுந்தூக்கத்திலிருந்து மீண்டெழுந்து 2000ஆம் ஆண்டில் ‘வல்லமை தாராயோ’ என்ற தொகுதியைக் கொண்டு வந்தார். அதிலிருந்து தொடர்ச்சியாக எழுதி வருகிறார் ‘தீராவெளி’ என்ற தன்னுடைய வலைப்பக்கத்திலும்,R.M.Nowsaath என்ற
தன் முகநூல் பக்கத்திலும், இணைய சஞ்சிகைகளிலும் தன் படைப்புக்களை அவ்வப்போது பதிவேற்றி வருகிறார்.
2.2. இலக்கியப் படைப்புகள்
ஒரு இலக்கியப்
படைப்பாளி பரந்த அடிப்படையில் தனது இலக்கியங்களை படைக்க வேண்டும். அப்படைப்புக்கள்
சமூகத்தின் அடிப்படை பிhச்சினைகளை வெளிக்கொணர்வதாக இருக்க வேண்டும். அந்தவகையில்ää இவரின் இலக்கியப் படைப்புகள் சமூகத்தின் அடிப்படை பிரச்சினைகளைத்
துல்லியமாகக் காட்டுவதாக அமைந்துள்ளன. வித்தியாசமான கற்பனை வளமுள்ள, கதைசொல்லியான
, இவர் இலக்கியத்தின் பல்வேறு கூறுகளிலும் , உதாரணமாக வானொலி நாடகம் சிறுகதை, கவிதை, நாவல் எனப் பல்வேறு துறைகளிலும் தன் இலக்கியப்
பிம்பத்தை அழுத்தமாகப் பதித்து வருகிறார். அதேசமயம், தற்காலப் போக்கில், இவர் தன் படைப்புக்களை சூபிஸ இலக்கியங்களின்
மையச் சரட்டில்,செலுத்தி வரும் போக்கு காணப்படுகிறது... சுய ஆத்மவிசாரங்களின் தளத்தில் நின்று கொண்டு
தன் தற்போதைய கவிதைகளை கட்டமைத்து
வருகிறார்..2001 இல் வெளியான ‘’முத்திரையிடப்பட்ட
மது’’ என்ற இவரது கவிதை நூல் இதற்கு மிகப்பெரிய ஒரு சான்றாக காணப்படுகிறது
ஆர். எம்.
நௌஸாத்தை பொறுத்தவரை பேச்சுத் தமிழ் மிக முக்கியம் எனக் கருதினார். கிழக்கிலங்கை
முஸ்லிம் மக்களின் வாழ்வியல் தனித்தன்மை கொண்டதாகும். இங்குள்ள மக்களின்
வாழ்வியலில் நெய்தலும் மருதமும் முல்லையும் இரண்டறக் கலந்தவையாகும். இப்படிப்பட்ட
பன்முகப் பூமியிலிருந்து அதன் மண்வாசனையினையும் வட்டார வழக்கினையும் மிக இலாவகமாக
கையாண்டு அவற்றைத் தன் படைப்புக்களில் திறமையாகப் பயன் படுத்திய ஒருவராக இவர் காணப்படுகிறார். வாசகரை பிரதியோடு
ஒன்றிணைக்கும் சுவாரஸ்யமான எழுத்து நடை இவருக்கு இயல்பிலேயே வாய்த்துள்ளது எனலாம்.
அவரின் கதைகள் அதன் வெற்றி பற்றி ஓரிடத்தில் இவ்வாறு பதிகிறார். ' அறியப்படாத தளங்களில்
இருந்தும் அறியப்பட்ட. தளங்களில் உள்ள.தெரியப்படாத பக்கங்கள் பற்றியும் கூடுதலாகச்
சிந்திக்கிறேன்.முதலில் நுகர்பவரை கதைக்குள்ளே வரவைக்கிறேன்அப்புறம் அவர் என்னை
வாங்காமல் போக முடியாதபடி செய்து விடுவது என் கதைத்தந்திரம்.இதில் மறைப்பதற்கு
ஒன்றுமில்லை. எல்லோரும் ஒரே விதமாக 'கதை'த்துக்கொண்டிருப்பதில் எனக்கு சம்மதமில்லை.' என்கிறார்.இங்கிருந்தே
மாற்றமும் படைப்பும் திறன் கொள்கிறது.
ஞானம் சஞ்சிகை ஆசிரியர் திரு, தி. ஞானசேகரன் அவர்கள்
குறிப்பிடுகையில், “........நௌஸாத்தின் சிறுகதைகளின் உயிரோட்டமான அம்சம் அவரது உரைநடை.
அனுபவத்தைத் தொற்றவைப்பதற்கு ஏற்ற வகையில் தேர்ந்தெடுத்த – உணர்ச்சிக் கூறுகள்
நிறைந்த - அதேவேளை சமூக யதார்த்தத்திலிருந்து விட்டகலாத நடைச்சிறப்பு அவருடையது....
நௌஸாத் கதைசொல்லும் முறையில் ஒரு புதுமை இருக்கிறது. புதுப்புனல் ஊற்றின்
குளிர்மைப் பிரவாகம் கொள்கிறது. அவருடைய சிறுகதைகளைப் படித்து முடித்ததும்
அவைதரும் உணர்வுகள் படிப்பவர் மனதில் தொற்றி நிற்கின்றன...” என்கிறார் (தீரதம்
..முன்னுரை )
இவர் தனது
படைப்புக்களில் சிறந்த கருää
வடிவம்ää பேச்சுவழக்குச் சொற்கள்ää பழமொழிகள்ää இடையிடையே நகைச்சுவை என்பவற்றை திறம்பட
கையாண்டுள்ளார். ஈழத்து இலக்கியவாதிகளின் பட்டியலில் தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை
ஏற்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2.2.1. வானொலி நாடகங்கள்.
இன்று நாம்
தமிழகத் தொலைக்காட்சி நாடகங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைப் போன்றுää அன்று வானொலி நாடகங்களும் முக்கியத்துவம் பெற்றுக் காணப்பட்டன. இதைப்பற்றி
ஆர். எம். நௌஸாத் கூறும்போதுää
“ஆ…
அது ஒரு பொற்காலம் இப்போது தமிழகத் தொலைக்காட்சி நாடகங்களுக்கு
நேயர்களிடம் இருக்கும் வரவேற்பு அப்போது வானொலி நாடகங்களுக்கு இருந்தன. வானொலி
நாடகங்களுக்காக நேயர்கள் காத்துக் கிடந்தனர். வானொலி நாடகங்களின் குறியீட்டு
ஒலிகேட்டே தம்கைக்கடிகாரங்களை திருப்பி வைக்கின்ற காலம் அது”4
என்று
குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில்ää இவரது முதல் வானொலி நாடகம் ‘வாக்கு’. இது முஸ்லிம் சேவையில் 1985இல் ஒளிபரப்பானது.
தொடர்ந்து இவர் 1990 வரை சுமார் 12 வானொலி
நாடகங்களை கலைமாமணி எம். அஸ்ரப்கான் அவர்களின் நெறியாள்கையில் எழுதினார். அவை ‘ஆராத்திக் கல்யாணம்’ää ‘காகித உறவுகள்’ää ‘களவட்டி’ää ‘ஒரு கிராமத்தின் கவிதை’ää ‘நினைப்பது ஒன்று’ää ‘ஏற்றம்’ää ‘நம்பிக்கை’ முதலான பெயர்களில் வெளிவந்தது.
இவரது வானொலி
நாடகங்களில் ‘விண்மீன் வீடு’ எனும் நாடகம் தத்துவஞானி
உமர்கையாமின் வாழ்வியலின் ஒரு துளியாக ஒளிபரப்பானது. இந்நாடகத்திற்கு
நேயர்களிடமிருந்து பெரும் பாராட்டும் வரவேற்பும் கிடைத்தது. மேலும் ‘ஒரு கிராமத்தின் கவிதை’ எனும் வானொலி நாடகம் சுமார் 25
தடவைகள் ஒலிபரப்பானது.
இவரது, காகித
உறவுகள் என்ற நாடகம், பிரான்ஸ் தமிழ் ஒலி மன்றமும் தினக்குரல் பத்திரிகையும்
இணைந்து நடத்திய உலகளாவிய வானொலி நாடகப் போட்டியில் 3ஆம் பரிசு பெற்றது ...
ஒலிபரப்பாகிய
இவாது நாடகங்களில் 10
நாடகங்களின் தொகுப்பு ‘காகித உறவுகள்’ என்ற பெயரில் இறுவட்டுத்தொகுதியாகவும் வெளிவந்துள்ளது.
2.2.2. சிறுகதைகள்
சமூகத்தை
பிரதிபலித்துக் காட்டும் இலக்கியங்களில் சிறுகதைகள் முக்கிய இடம் வகிக்கின்றன.
அந்தவகையில்ää
சிறுகதை எழுத்தாளர்களுள் ஒருவரான ஆர். எம். நௌஸாத் அவர்கள் 18க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். இவருடைய முதலாவது சிறுகதை
தொகுதி ‘வல்லமை தாராயோ’ என்பதாகும்.
இதனை 2000ஆம் ஆண்டு வெளியிட்டார். இத்தொகுதியில் எட்டுச்
சிறுகதைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவைää ‘மலர்வு 74 உதிர்வு 98’ää ‘சாந்தி’ää ‘கனவுப்
பூமி’ää ‘ஓம்’ää ‘ஸீனத்’ää ‘இலகிமா’ää ‘அணிலே அணிலே! ஓடிவா’ää ‘நல்லதொரு துரோகம்’ என்பனவாகும். இச்சிறுகதை தொகுதியில்
, வித்தியாசமான வார்ப்பிலான பல கதைகள் இருந்த போதிலும் கூட, இது இவரது முதல் நூல்
என்றபடியால் விமர்சனம் மற்றும் ரசனைக்
குறிப்பு எழுதுகின்ற அறிஞர்களால் அவ்வளவாக கண்டுகொள்ளப்படாமல் முடங்கிவிட்டது.
இதனை அடுத்துää 2011 இல் 12 சிறுகதைகளை உள்ளடக்கிய ‘வெள்ளி விரல்’ எனும் சிறுகதைத்தொகுதி,தமிழ்நாடு
காலச்சுவடு வெளியீடாக வந்தது. இதில், பல்வேறு இலக்கியப் போட்டிகளில் பல
பரிசுகளையும் பெற்றுள்ள , ‘தாய்மொழி’ää ‘வதனமார்’ää ‘வெள்ளிவிரல்’ää ‘விட்டு
விடுதலையாகி’ää ‘வேக்காடு’ää ‘கல்லடிப்பாலம்’ää
‘மீள்தகவு’ää ‘காலவட்டம்’ää ‘தலைவர் வந்திருந்தார்’ää ‘நல்லதொரு துரோகம்’ää
‘ஸீனத்தும்மா’ää ‘சாகுந்தலம்’ ஆகிய சிறுகதைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இச்சிறுகதைத்
தொகுதி 2001இல் இலங்கை அரச சாகித்திய விருதையும், கிழக்கு மாகாண சாகித்திய விருதையும் ஒருங்கே பெற்றது.
என்பதும் குறிப்பிடத்தக்கது. ‘வல்லமை தாராயோ’ என்னும் தொகுதியில் வந்துள்ள சில சிறுகதைகள் ‘வெள்ளி
விரல்’ என்னும் தொகுதியிலும் இடம் பெற்றுள்ளன.
‘வெள்ளிவிரல்’
சிறுகதைத் தொகுதியின் முன்னுரையில் தன் படைப்புக்களின் வெளிப்பாட்டுணர்வு பற்றி, ஆர்.
எம். நௌஸாத் கூறும் போதுää
“யுத்தமே
என்னை எழுதத் தூண்டிற்று. 30 வருட யுத்தத்தில் 30 வருட அரசு ஊழியனாகவே இருந்தேன். இந்த காலகட்டத்தில் யுத்த அரசியல் செய்து
கொண்டிருந்தவர்களினதும் அரசியல் யுத்தம் செய்து கொண்டிருந்தவர்களினும் யுத்தமும்
செய்யாமல் அரசியலும் செய்யாமல் அலைந்து கொண்டிருந்தவர்களினதும் நடத்தை கோலங்களைக்
கண்டு மனம் பேதலித்த நிலையில்ää உளநோயின் விளிம்பில் நிற்கும்
ஒருவன் என்ன செய்யலாம்… ஒன்றில் தற்கொலை செய்யலாம் அல்லது
எழுதலாம்.. நான் இரண்டாவதை தெரிவு
செய்தேன்”5என்று கூறுகிறார்...
மேலும் இவரிடம்ää சிறுகதையின் வார்ப்புநிலை பற்றி கேட்டபோதுää
“இது
விரிவான விடயம் ஒரு சிறுகதையின் வெற்றிக்கு பல காரணங்கள் இருந்த போதிலும் என்னைப்
பொறுத்தவரையில் இதுவரை அறியப்படாத தளங்களிலிருந்தும் அறியப்பட்ட தளங்களில் உள்ள
தெரியப்படாத பக்கங்கள் பற்றியும் கூடுதலாக சிந்திக்கிறேன். முதலில் நுகர்பவரை
கதைக்குள்ளே வரவைக்கிறேன். அப்புறம் அவர் என்னை வாங்காமல் போக முடியாதபடி செய்து
விடுவது எனது கதைத்தந்திரம்." என்று குறிப்பிட்டார். இதன் மூலம் இவருடைய
கதைப்படைப்பாற்றலின் ஆழத்தையும், கதை சொல்லும் திறனையும், இவரது கதை சொல்லும்
உத்தியையும் அறியலாம்.
இதனைத்
தொடர்ந்து, 2017 இல், இலங்கையின் இலக்கிய சஞ்சிகையான ஜீவநதி வெளியீடாக இவரது,
தீரதம் சிறுகதை தொகுதி வெளியானது. இத்தொகுதியை இவர் தன் இலக்கியக் குருநாதராக
குறிப்பிடும் பாவலர் பசில் காரியப்பருக்கு சமர்ப்பணம் செய்துள்ளார்...இதில்,
ஒய்த்தாமாமா
கள்ளக் கோழி
மறிக்கிடா
பொன்னெழுத்துப்
பீங்கான்
அணில்
தீரதம்
காக்காமாரும்,
தேரர்களும்
மும்மான்
கபடப் பறவைகள்
ஆத்துமீன் ஆசை
ஆகிய 10 கதைகள்
உள்ளடக்கப்பட்டுள்ளன ...இது பற்றி, பேராசிரியர் கலாநிதி, றமீஸ் அப்துல்லாஹ்
குறிப்பிடுகையில், ‘’ இந்த தீரதம் என்ற தொகுதி ஆர்.எம் . நௌஷாத் ஒரு நல்ல சிறுகதை ஆசிரியர் என்பதற்கு
மிகப் பெரும் சான்றாகும். ஒட்டுமொத்தமாக கிழக்கு முஸ்லிம் சமூகத்தின்
அனுபவங்கள் இந்தக்கதைகளில் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது ....;;’’
என்கிறார்,
2.2.3. கவிதைகள்
ஆர். எம். நௌஸாத்
தன் இலக்கியப் பயணத்தின் ஆரம்ப காலத்தில் கவிதை துறையிலேயே தன் கவனத்தை
பெருமட்டுக்கு குவித்துள்ளதை அவதானிக்க முடிகிறது ..
1982களில், நௌசாத்தும் அவரது
நண்பர்களும் சேர்ந்தியங்கிய கல்முனை புகவம்
என்னும் அமைப்பின் சார்பாக அதன் வெளியீடாக தூது என்னும் ஒரு புதுக்கவிதைச்
சிற்றேடு வெளியிடப்பட்டது ,.. இதற்கு பிரதம ஆசிரியராக நௌஷாத் இருந்தார்,
புற்றீசல்கள் போல றோணியோ அச்சுப்
பத்திரிகைகள் சஞ்சிகைகள் பறந்து கொண்டிருந்த இக்காலத்தில் கையடக்க ஏடாக இருந்த
போதிலும் தூது ஓர் அச்சுப் பத்திரிகையாக 16 இதழ்கள்வரை
வெளிவந்தன,,,,அக்காலப்பகுதியில் பல மூத்த இலக்கியவாதிகளின் கவனத்தை ஈர்த்த ஒரு
சிற்றிதழ் என்ற பெருமை இதற்குண்டு.
இதன் பின்னர் 1993
களில், புள்ளி என்ற ஓர் கவிதை சிற்றேட்டை வெளியீடு செய்தார்...இது ஈழத்தின் முதல் ஹைக்கூ கவிதை சிற்றேடு ஆகும்..
இது ஒரே ஒரு இதழுடன் நின்று போயிற்று ... பின், 2002 ல்,
சாய்ந்தமருதில்,அபாபீல்கள் என்ற கவிதா வட்டத்தை ஆரம்பித்து, நண்பர்களான
ஜாபீர்,நகீபு ஆகியோருடன் இணைந்து,
வெளியிட்ட இரண்டாவது பக்கம் என்ற
கவிதை இதழின் ஆலோசகராகவும் பதிப்பாளராகவும் இருந்தார்..
இது
பற்றி இவரிடம் வினவியபோது “1985களில் போர்க்கால சூழலில் உற்பவித்த ரோணியோக் கவியேடுகளில் ‘அன்புடன்’ää ‘இன்னாலில்லாஹி’ääஇல்
‘தீவை’ என்ற பெயர்களுடன் நினைத்த போதெல்லாம் றோணியோ சஞ்சிகைகளை வெளியிட்டுக்
கொண்டிருந்தாலும், 1983 இல்
‘தூது’
என்ற பெயரில் 16 இதழ்களை அச்சில் கொணர்ந்தேன்.
இது ஒரு கவிதைச் சிற்றிதழ். தூதில்
ஆசிரியர் தலையாங்கங்களை குறும்பாää வெண்பா வடிவங்களில் எழுதி,
பரிசோதித்தேன். பின்னர் ஹைக்கூ
கவிதைகளுக்காகவே ‘புள்ளி’ என்ற
சிறிலங்காவின் முதல் ஹைக்கூ கவியேட்டை நண்பர் றபீக்குடன் இணைந்து கொணர்ந்தோம்.” என்றார்.
1989 இல், பல்வேறு காரணங்களால் தூது கவிஏடு வெளியாவது நின்று போன பின, 2004 இன் இயற்கை அனர்த்தமான சுனாமி
கடற்கோள் பற்றி, ‘’ ஆழித்தாயே அழித்தாயே ..’’ என்ற ஒரு காவிய பிரசுரம் ஒன்றை
அபாபீல்கள் வெளியீடாக வெளியிட்டார்.
இதில், தீவு முழுவதும் ஆழிச் சீற்றம், சுனாமிக் கும்மி, சாய்ந்தமருது
அழிந்த காதை.. ஆகிய மூன்று நெடும் பாக்கள் மூன்று வகையான பா வடிவங்களில்
இயற்றியுள்ளார்... இப்பிரசுரம் மீண்டும் 2017 மீள் பிரசுரம் பெற்றது...
தொடர்ந்து வந்த
காலங்களில், இலங்கையின் பல்வேறு
சஞ்சிகைகள் தினசரிகளில் பரவலாக கவிதைகளை எழுதிக் கொண்டிருந்தார்... இவற்றில்,
சில கவிதைகளைத் தேர்ந்தெடுத்து, தமிழ்நாடு பிரதிலிபி நிறுவனம், 2015 இல், ‘’ அபாயா என் கறுப்பு வானம்’ என்னும் தலைப்பில் ஒரு மின் நூலாக
வெளியிட்டது..
இம்,
மின்நூலுக்கு முன்னுரை தந்த அருட்கவிஞர் அக்கரைமாணிக்கம் அவர்கள், நௌசாத்தின்
கவிதைகள் பற்றி பின்வருமாறு கூறியுள்ளார்...
‘’’…………தீரன்; என்னோடு சிலகாலம் ஒன்றாக ஒரே திணைக்களத்தில்
கடமை செய்தவர். அவரை எனக்கு மிக நன்றாகத் தெரியும்.. இடது கையால் எழுதும் பழக்கம்
கொண்டவர். மனமுவந்து பழகுவதில் சிறந்தவர். நகைச்சுவை அவருக்கு ஒரு இயல்பான விடயம்.
இலகுதமிழ் அவருக்கு கைவந்த கலை.
தான் படைத்த நூற்றுக்கணக்கான கவிதைகளில் மிகச் சிலவற்றையே
இந்நூல்வாயிலாகத் தந்துள்ளார். அதிலும் குறும்பா- வெண்பா- ஹைக்கூ-விருத்தம-புதுக்கவிதைகள்;-
காவியம் என்று பல்சுவைக் கதம்பமாக இதை ஆக்கியுள்ளார்.
அவரது மரபுசார் கவிதைகளில் பல இலக்கண வழுக்கள் இருந்த போதிலும் அது
வாசிப்புக்கு ஒரு தடையாக இருக்கவில்லை.. அவர் மரபு புது வடிவங்களில் இந்நூலில் சில
இடங்களில் புயலாக வீசியிருக்கிறார். சில இடங்களில் ஒரு தென்றலாக
வருடியிருக்கிறார்.’’’’
2017 இல், இதுவரைக்கும் தான் எழுதி வந்துள்ள குறும்பாக்களை தொகுத்து, ‘’குறுநெல்
‘’ என்ற பெயரில், ஒரு சிறு கைநூலாக வெளியிட்டார்...இதில், 61 குறும்பாக்கள் உள்ளன.. இது பற்றி நௌசாத் தன்
குறும்பால் எறிந்த குறும்பாக்கள், என்ற உரையில்,
குறிப்பிடுகையில்,
‘’’..........1977 களில் கவிஞர் அல்.அசூமத்தின்,
பூபாளம் சஞ்சிகை ‘’தமிழகத்தின் பத்திரிகைச்
சந்தை’’ என்ற ஈரடியைத் தந்து,
ஒருகுரும்பாப் போட்டியை நடத்தியது
குரும்பாவின் இலக்கண விதிமுறைகள் பற்றிய எவ்வித இலக்கண அறிவுமின்றி, அதன் வடிவமைப்பை மட்டும் வைத்து நானும் இப்போட்டிக்கு, ஒரு குறும்பாவை அனுப்பி
வைத்தேன். இதன் இலக்கண வழுக்களைத் திருத்தி இதனை பிரசுரம் செய்திருந்தார்
ஆசிரியர்.. இது எனக்கு பெரிய உற்சாகமாக இருந்தது.... ‘’
இந்நூலை தனக்கு
முறைப்படி குறும்பா கற்பித்த தமிழறிஞர் கொக்கூர்கிழான் கா.வை. இரத்தினசிங்கம்
அவர்களுக்கு சமர்ப்பணம் செய்துள்ளார்... இந்நூலில் இடம்பெற்றுள்ள கடைசிக் குறும்பா
இது..
இக்குறும்பாக் களினரசன் தீரன்
இருக்கிறேன்
சாய்ந்தமரு தூரன்
இத்தொப்பி
யார்க்கெல்லாம்
இணக்கமானால்
அணிந்திடுக
இதற்குமேல்
பேச்சில்லை வாரன்.
ஆர்.எம். நௌஷாத்
அவர்கள், 2015 களின் பின்னர், தன் சிந்தனை
மாற்றங்கள் காரணமாக தன் கவிதைப் போக்கை மாற்றிக்கொண்டு ஆன்மிக ரீதியிலான சில
பாடல்களை தன் முகநூலில் எழுதி வந்ததாகக் குறிப்பிடுகிறார்.. இதன் பின்னணியில், 2022
இல், அவ்வாறு தான் எழுதிய கவிதைகளைத்தொகுத்து அபாபீல்கள் வட்டம் வெளியீடாக ‘’முத்திரையிடப்பட்ட
மது’’ என்ற பெயரிலான கவிதைத் தொகுதியை வெளியிட்டார்.. இதனைத் தன் நண்பரான,
பன்னூலாசிரியர் எம்.எம்.எம். நூருல் ஹக் அவர்களுக்கு சமர்ப்பணம்
செய்த்ருந்தார்.. இந்நூலில் இடம்பெற்ற
அகப்படம் என்னும் தன் உரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்..
.......’’ ஒரு
புள்ளிக்குள் ஓர் உலகத்தைப் பார்ப்பதுவும், ஓர் உலகத்தை ஒரு புள்ளியாகக் காண்பதுவுமான வேள்விக்குள் என்னை நானே ஈடுபடுத்திய பின்னரான காலங்களில், சில கவிதைகளை எழுத நேர்ந்த போது, என் வெளிப்பாடுகள் தாமாகவே வேறுவடிவம் கொள்ளத் தொடங்கின என்று
உணர்ந்தேன்........’’’
இந் நூலில் அவரது
நூற்றுக்கும்மேற்பட்ட கவிதைகள் உள்ளன...
2.2.4. நாவல்கள்
வசனம் தழுவிய
புனைவின் நீண்ட வடிவமாக ‘நாவல்’ அமைகின்றது. ஆவலைத் தூண்டுவதாகவும்
எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாகவும் காலம் தோறும் மக்கள் எதிர்கொண்ட சிக்கல்களை
எதிரொலிப்பனவாகவும் நாவல்கள் திகழ்கின்றன.
ஆர். எம். நௌஸாத், கிழக்கின்
நாவல் இலக்கிய வரலாற்றில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பிரபல்யமான சில நாவல்களை
எழுதியுள்ளார். அவற்றில் சில குறுநாவல்களும், நெடுங்கதைகளும் அடங்கும். அவர்
எழுதிய ஆண்டின் அடிப்படையிலல்லாது, பிரசுரிக்கப்பட்ட
வரிசைப்படி,
1. வானவில்லே
ஒரு கவிதை கேளு.. (2005)
2. நட்டுமை...(2009)
3. கொல்வதெழுதுதல்90.(2013).
4. வக்காத்துக்குளம். (2021)
5. ஆமீன் (2023)
இவர் தனது நாவல்
முயற்சிகள் பற்றி கூறும் போதும்ää
“நாவல்
எழுதுவது தனி ஒரு நுட்பம். மிக நீண்ட சிறுகதையை ஒரு முழு நாவலாக்கி விடுபவரும் ஒரு
நாவலையே ஒரு சிறுகதையாக்கி விடுபவரும் இந்த நுட்பம் தெரியாதோரே… இந்த நாவல் தொழில்நுட்பத்தை நான் கற்றுக்கொண்டு கையாள ஆரம்பித்த போது
வாசகர்கள் பொதுவாக நாவல்கள் வாசிப்பதையே பெரும்பாலும் நிறுத்தியிருந்தனர்… இந்த தேக்க நிலையிலும் இப்போது நாவல்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.
வாசிக்கப்பட்டுக்கொண்டும் இருக்கின்றன… ஒரு சிறுகதைக்குள்
அடக்கிவிட முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் கரு எச்சங்கள் வியாபித்து வெடிப்பது
நாவலில் தானே… அந்தப் பிரசவம் தரும் வலி இனிது. அதன்
வடிவமைப்புகள் பெரிது… அதனுடான சஞ்சாரம் ஒரு ஆபத்தான அழகு…
ஒரு நாவலைப் படித்ததன் பின் அக்கதை மாந்தருடன் வாசகர் வாழும்
காலமெல்லாம் அந்நாவலும் அதன் தயாரிப்பாளியும் நித்திய ஜீவிதமடைகின்றார்கள் என்பதே
உண்மை.” என்கிறார்.
அந்தவகையில்
இவருடைய முதல் குறுநாவல் ‘வானவில்லிலே ஒரு கவிதை கேளு’ என்பதாகும். இந்நாவலின்
கரு, மட்டக்களப்பின் பிரசித்திபெற்ற கல்லடிப்பாலத்தில்
உருவானது. ஈழநாதம் பத்திரிகையில் 2005ஆம் ஆண்டு தொடக்கம் ஏழு
தொடர்கள் ஏழு வர்ணங்களாக வெளியானது. இக்குறுநாவலில் ஏழு வர்ணங்களின் சிறப்பினை
நாவல் ஆசிரியர் முதலில் கூறிவிடுவது தனிச்சிறப்பாகும்.தமிழ், முஸ்லிம் சமுகம்
சார்ந்த இரண்டு பல்கலைக்கழகத் தோழிகள்
தொழில் தேடும் முயற்சியில் ஈடுபட்டு, கிடைத்த ஒரு தனியார் வாங்கி வேலையில் சேர்ந்த
அன்று மாலையே ஒரு கண்ணிவெடித்தாக்குதலில் உயிரிழக்கும் சம்பவம் ஒன்றை குறுநாவலாக
எழுதியுள்ளார்.. இது ‘’தொடர் நவீனமாக வரும் ஒரு நவீன தொடர் ‘’ என்ற உப மகுடத்துடன்
ஈழ நாதத்தில் பிரசுரமானது. முற்றிலும் ஒரு வித்தியாசமான எழுத்து நடையில் இதனை
எழுதியுள்ளார்.
இவருடைய
இரண்டாவது, பிரசுரிக்கப்பட்ட நாவல் ‘நட்டுமை’ ஆகும். இது 2009இல் தமிழ்நாடு காலச்சுவடு வெளியீடாக
வந்தது. இந்நாவல் கடல் கடந்து தமிழ்நாட்டில் காலச்சுவடு ஸ்தாபகர், சுந்தர ராமசாமி
75 நினைவு தின நாவல் போட்டியில் முதல்
பரிசினை பெற்றது கிழக்கு மண்ணில் 1930களில் வாழ்ந்த விவசாய மக்களின் வாழ்வியலை திறம்பட பேசுகிறது. கிழக்கு
முஸ்லிம்களின் வட்டார வழக்கு பேச்சோசை நாவல் முழுக்க மண்வாசனையோடு பேசுகிறது..
இந்நாவலின்
பின்னட்டைக் குறிப்பில், ......’’ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு
மாவட்டத்திலுள்ள முஸ்லிம் கிராமத்தில்
விவசாய நிலங்களுக்கு நீர்
பாய்ச்சுவதில் ஏற்பட்ட பிரச்சினையை
பின்புலமாகக் கொண்டு, முஸ்லிம் மக்களின் பண்பாடு, வாழ்முறை, சமய நம்பிக்கைகள்,
பள்ளிவாசல் கொடியேற்ற விழா, திருமணச் சடங்கு
முதலானவற்றை அந்த மண்ணின்
வாசத்துடன் நட்டுமை யதார்த்தமாக சித்தரிக்கின்றது ....என்று ராஜமார்த்தாண்டன்
கூறுகிறார்...
இதனை
அடுத்து வெளிவந்த நாவல் ‘கொல்வதெழுதல் 90’ என்பதாகும். இது ‘பள்ளி முனை கிராமத்தின் கதை’ என்ற பெயரில் 2003ஆம் ஆண்டு தொடக்கம் முஸ்லிம் குரல் பத்திரிகையில் தொடர்ச்சியாக 40 அங்கங்களாக பிரசுரமானது. பின்னர் 2013இல்
கொல்வதெழுதல் 90 என்ற பெயரில் தனி ஒரு முழு நாவலாகää கால சுவடு வெளியீடாக வந்தது. இது தமிழ்நாடு எழுத்தாளர் சு.ரா அவர்களுக்கு
சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
இந்நாவல்ää 1990களில் யுத்த காலத்தை பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. அக்காலத்து
அரசியல் போக்கினால் பாதிக்கப்பட்ட ஒரு அப்பாவி கிராம மக்களின் வாழ்வியல் பற்றி
கூறுகிறது. இந்நாவலுக்கு தமிழ்நாடு அரசின் தெரிவில் 1000 பிரதிகளுக்கான
நூலக ஆணை கிடைத்தது. மேலும் 2014இல் இலங்கை சாகித்திய
விருதுக்கான போட்டியில் இறுதிச்சுற்று தெரிவானது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்
நாவல் பற்றி ‘தமிழ்நாட்டில்ää பேராசிரியர்
எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் 2000த்தின் பின் வெளியான
முக்கியமான தமிழ் நாவல்களுள் இதுவும் ஒன்று என சிலாகித்து பேசியிருக்கிறார்’
மேலும்
பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இந்நூலுக்கு அளித்த முன்னுரையில், ‘’...........’’’’ஒரு
கிராமத்தின் தேர்தல் கள் நிலவரங்கள், கொலைக்கள விபரங்கள், வர்க்க முரண் நிலைகள்,
காதலுணர்வுகள் ஆகியன வெகு யதார்த்தமாக இதில் சித்தரிக்கப்பட்டுள்ளன.. அதே
வேளை அப்பாவிக் கிராமத்து
மனிதர்களின்
மனவியல்புகள்,வர்ணனைகள்,பெச்சொசைகள், என்பன கதையோட்டத்தின் ஊடே அற்புதமாகக்
கையாளப்பட்டுமுள்ளன.நாவலாசிரியர் ஒரு
திறமையான கதை சொல்லி என்பதை அவரது எழுத்துக்கள் நிறுவியிருக்கின்றன........’’
என்று விதந்துரைத்துள்ளார்..
இந்நாவல்
பற்றி நாவலாசிரியர்’’’’.....படுபயங்கரமான இக்காலப்பகுதியில் பசுமையான
பர்தாவுக்குள் அமைதியாக அடங்கியிருந்த கிழக்கிலங்கையின் ஒரு குக்கிராமத்தில் இந்த
90 களின் போர்முகம் புகுந்த போது அங்கு ஏற்பட்ட அமளிதுமளிகள்தாம் இந்நாவலின்
அத்திவாரம்....’’ என்று கூறியுள்ளார்
இதனைத்
தொடர்ந்து 2021இல்ää ‘வக்காத்துக் குளம்’ எனும்
குறுநாவல் இவரால் வெளியிடப்பட்டது. ஏறாவூர் கஸல் பதிப்பக வெளியீடாக வந்த
இக்குறுநாவல் எழுத்துலக பிரம்மாவான எஸ்.பொ. அவர்களுக்கு சமர்ப்பணம்
செய்யப்பட்டுள்ளது. இது 2006 இல் அவுஸ்திரேலியாவில் அக்கினிக்குஞ்சு இணையம்
நடத்திய எஸ்.பொ ஞாபகார்த்த அனைத்துலக குறுநாவல் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றது...
‘’’’..........
ஒரு பசுமைக் கிராமத்தில் வாழ்ந்து பின்னர்புலம் பெயர்ந்து மீண்டும் அந்தப் பசுமைக்
கிராமத்தை தேடி வந்து அதைக் காணாமையால் ஏமாற்றத்தால் வெதும்புகிற மனநிலை மிகக்
கொடிது...1960 களில், வக்காத்துக்குளம் என்கிற பசுமைக் கிராமத்தில் வாழ்ந்த பால்ய சிநேகிதர்கள் சம்பந்தப்பட்ட
பச்சை வீழ்படிவுகள் இங்கே புதினம் ஆகியுள்ளது......’’’ என்று நாவலாசிரியர் இதில் விபரித்துள்ளார்...
இவரது
அடுத்த நாவல் ‘ஆமீன்’ என்பதாகும்.. இதனை அவர் நாவல் என்று குறிப்பிடாமல் நெடுங்கதை
என்றே குறிப்பிட்டுள்ளார். அளவிலும்
உள்ளடக்கத்திலும் மிகச்சிறியதான இந்நூல் அபாபீல்கள் வெளியீடாகும்... 1992 ஆம்
ஆண்டு சாய்ந்தமருது ஊரின் பொதுச் சந்தையில்
நிகழ்ந்த ஒரு குண்டுவெடிப்பை கதைக்களமாக கொண்டது இந்நூல், இதனை –தமிழ்-முஸ்லிம் நல்லுறவுக்காக அன்று
தொடக்கம் இன்று வரை பணியாற்றி வரும் சில
நல்ல இதயங்களுக்கு சமர்ப்பணம் செய்துள்ளேன் என்று நூலாசிரியர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் நிகழ்ந்த காலமான 1992 இல் இது எழுதப்பட்டிருந்தாலும் 2023 இலேயே
நூலாக்கம் பெற்றுள்ளது.
00
தான் வெளியிட்ட
நாவல்கள் பற்றி நௌஸாதிடம் கேட்ட போதுää
“முஸ்லிம்
குரலில் வெளியான ‘பள்ளி முனைக் கிராமத்தின் கதை’ நாவலின் தளம் ஒலுவில் கிராமத்தில் போடப்பட்டது. பரிசு பெற்ற நட்டுமை
நாவலின் கரு சம்மந்துறையின் வயல் வெளிகளிலிருந்து கிடைத்தது. ஈழநாதம் இதழில்
வெளியான ‘வானவில்லிலே ஒரு கவிதை கேளு’ குறுநாவலின்
வார்ப்பு கல்லடிப்பாலத்தில் உருவானது. வக்காத்துக்குளம்
குறுநாவல் தீகவாவி விகாரையில் கருக்கொண்டது.ஆமீன் என்ற நெடுங்கதை சாய்ந்தமருது
சந்தை குண்டு வெடிப்பில் வெளிப்பட்டது... இப்படி பல தளங்கள்ää பல கருக்கள் எனினும் இவை வடிவத்தாலும் செதுக்கல்களாலும் ஒருபோதும்
முழுமையுறுவதாயில்லை. ஒன்றுமே எனக்கு நிறைவு தருவதாயுமில்லை.”9என்று குறிப்பிட்டார்.
2.3. ஆர். எம். நௌஸாத் தனது இலக்கியப் படைப்புகளினூடாக பெற்ற விருதுகள்ää
பரிசில்கள்ää பராட்டுக்கள்.
இலக்கியத்
துறையில் தனக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்திய தீரன் ஆர். எம். நௌஸாத் தனது இலக்கிய
படைப்புகளுக்காக பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். அவை வருமாறுää
1982இல் மித்திரன் வார இதழ் பாரதி நூற்றாண்டையும் ஒட்டி நடாத்திய பாhதி பாடலுக்கான சிறுகதை போட்டியில் ‘தீண்டத்தகாத
கரங்கள்’ சிறுகதைக்கு பிரசுரத்தகுதிச் சான்றிதழ் பெற்றது.
1990இல் யாழ் மருதாணி கலை இலக்கிய வட்டம் தன் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு
அகில இலங்கை ரீதியாக நடத்திய சிறுகதைப் போட்டியில் ‘ஸீனத்தும்மா’
என்ற சிறுகதை இரண்டாம் பரிசினை பெற்றது.
1994இல் இலங்கை சுற்றாடல் வெகுஜன பேரவைää சனத்தொகை
பெருக்கமும் குடும்பங்களும் என்ற தொனிப்பொருளில் நடத்திய சிறுகதை போட்டியில் ‘கனவுப் பூமி’ என்னும் சிறுகதை சிறப்பு சான்றிதழ்
பெற்றது.
1998இல் பேராதனை பல்கலைக்கழகத்தின் சங்கீத நாட்டிய சங்கம் 97ஃ98 கல்வி ஆண்டில் நடத்திய கீதம் இலக்கியப்
போட்டியில் ‘ஈ சமன் ஓம்’ என்ற சிறுகதை
மூன்றாம் பரிசு பெற்றது
1998இல் பேராதனை பல்கலைக்கழகத்தின் சங்கீத நாட்டிய சங்கம் 97ஃ98 கல்வியாண்டில் நடத்திய கீதம் இலக்கியப்
போட்டியில் ‘மலர்வு 74 உதிர்வு 96’
சிறுகதை முதலாம் பரிசு பெற்றது.
1998ல் தினக்குரல் நாளிதழும் பிரான்ஸ் தமிழ் வானொலியும் இணைந்து நடத்திய
சில்லையூர் செல்வராசன் ஞாபகார்த்த உலக வானொலி நாடகப் போட்டியில்ää ‘காகித உறவுகள்’ என்னும் வானொலி நாடகத்திற்கு
மூன்றாம் பரிசு வழங்கப்பட்டது.
1998இல் ‘நல்லதொரு துரோகம்’ என்ற
சிறுகதைக்கு பேராதனை பல்கலைக்கழக தமிழச்சங்கம் முதல் பரிசாக தங்கப்பதக்கம்
அளித்தது.
2002இல் துறைமுகங்கள் அபிவிருத்தி கப்பற்துறை அமைச்சு மற்றும் இலங்கை இஸ்லாமிய
இலக்கிய ஆய்வகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் 2002. 10. 24 இல்
நடத்திய உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய
படைப்புக்காக பாராட்டு பத்திரம் வழங்கப்பட்டது.
2004 ஜூன் 6ää தினச்சுடர் பத்திரிகையின் மாபெரும் அறிமுக
விழாவும் தேசிய விருது வழங்கும் வைபவமும் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில்
இடம்பெற்றது. இதில் சிறந்த கவிஞருக்கான விருது இவருக்கு வழங்கப்பட்டது.
2006இல் ஞானம் கலை இலக்கிய சஞ்சிகை நடத்திய கலாபூஷணம். டாக்டர். கா. சதாசிவம்
ஞாபகார்த்த சிறுகதைப் போட்டியில் ‘மீள்தகவு’ சிறுகதை மூன்றாம் பரிசினை பெற்றது.
2007இல் சாய்ந்தமருது பிளைங்ஹோர்ஸ் விளையாட்டு கழகம் அதன் வெள்ளி விழாவை ஒட்டி
நடாத்திய 25 ஆவது ஆண்டு விழாவில் சிறந்த எழுத்தாளருக்கான
விருது வழங்கப்பட்டது.
2007இல் கலாசார அலுவலர்கள் திணைக்களம் அரசு சாகித்திய விழாவுடன் சமாந்தரமாக
நடத்திய திறந்த கையெழுத்து பிரதிகள் போட்டியில் ‘நட்டுமை’
நாவலுக்கு சிறப்புப் பரிசு கிடைத்தது.
2007இல் ஞானம் கலை இலக்கிய சஞ்சிகை நடத்திய கா. சதாசிவம் ஞாபகார்த்த சிறுகதைப்
போட்டியில் ‘கல்லடிப்பாலம்’ என்ற
சிறுகதை ஆறுதல் பரிசினை பெற்றது.
2008இல் ஞானம் கலை இலக்கிய சஞ்சிகை நடத்திய கா. சதாசிவம் ஞாபகார்த்த
போட்டியில் ‘தாய்மொழி’ சிறுகதை முதற்
பரிசைப் பெற்றது.
2009இல் ‘ஞானம்’ சஞ்சிகை நடாத்திய
ஆ. இராஜகோபாலனின் ஞாபகார்த்த சிறுகதைப் போட்டியில் ‘வதனமார்’
என்ற சிறுகதை ஆறுதல் பரிசை பெற்றது.
2008இல் கனடா ஓட்டோவா தமிழ்வழி இணைய இதழ் நடத்திய (புலம்பெயராதோருக்கான)
சிறுகதைப் போட்டியில் ‘விட்டு விடுதலையாகி…’ எனும் சிறுகதை மூன்றாவது பரிசினை பெற்றது.
2008இல் அக்கரைப்பற்று தலைவர் அஷ்ரப் மன்றம் நடத்திய இலக்கியப் போட்டியில் ‘வேக்காடு’ என்ற சிறுகதை முதற் பரிசினை பெற்றது.
2008இல் ஞானம் கலை இலக்கிய சஞ்சிகை நடத்திய க. சதாசிவம் ஞாபகார்த்த போட்டியில்
‘மீள்தகவு’ என்ற சிறுகதை மூன்றாம்
பரிசினை பெற்றது.
2008இல் ஈழநாதம் நடத்திய சிறுகதைப் போட்டியில் ‘காலவட்டம்’
என்ற சிறுகதை முதல் பரிசினைப் பெற்றது.
2009இல் இவருடைய ‘நட்டுமை’ எனும்
நாவல் தமிழ்நாடு ‘காலச்சுவடு’ இதழ்
சுந்தர ராமசாமியின் 75 ஆவது நினைவு தின இலக்கியப் போட்டியில்
முதற்பரிசினை பெற்றது.
2011ல் வெள்ளி விரல் என்ற சிறுகதைத் தொகுதி அரச சாகித்திய விருதும் கிழக்கு
மாகாண சாகித்திய விருதும் ஒருங்கே பெற்றுக் கொண்டது.
2012இல் திறமைக்கு மரியாதை நிகழ்வில் கலைச் சிற்பி பட்டமளிப்பு கல்முனை
மஹ்மூத் மகளிர் கல்லூரியில் வழங்கப்பட்டது.
2014இல் அக்கினிக் குஞ்சு இணையம் நடத்திய எஸ். பொ. நினைவு அனைத்து உலக
குறுநாவல் போட்டியில் வக்காத்துக் குளம் என்ற நாவல் மூன்றாம் பரிசு பெற்றது.
2.4. நாவல் தோற்றப் பின்னணி
மனித
சமுதாயத்தில் இன்றியமையாத எண்ணக்கருக்களுள் ஒன்றாக வன்முறை காணப்படுகிறது. மிக
மோசமான வன்முறைகளை விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் தொடங்கி பயங்கரமான முறையில்
முடித்துள்ள நிலைமை காலம் காலமாக உலகத்தில் நடைபெற்று வருகிறது. இலங்கையை
பொறுத்தவரையில்ää
இது பல்லின மக்கள் வாழுகின்ற ஒரு நாடாகும். இங்கு இன ரீதியான
வன்முறையானது ஆரம்ப காலம் தொடக்கம் இன்றுவரை இடம்பெற்று வருகின்றது. இன ரீதியான
வன்முறை அல்லது இன முரண்பாடு எனும் போதுää நாட்டின் தேசிய
இனங்கள் தம் அடையாளத்தை நிலை நிறுத்திக் கொள்ள இனம்ää மொழிää
பண்பாடுää சாதிää பொருளாதாhம் முதலிய இன்னோரன்ன விடயங்களுக்காக பிணக்குறுவதாகும். அந்தவகையில்ää
சிங்களவருக்கும் தமிழருக்கும் இடையில் மிக நீண்டகாலமாக
இடம்பெற்றுவந்துள்ள இனமோதலானது முஸ்லிம்கள் பக்கம் திரும்பி அவர்களையும் தாக்கி
சென்றுள்ளது.
இதன்
வரலாற்றினைப் பார்க்கின்ற போதுää பாரிய வரலாற்றினை ஈழத்துப் பிரச்சினை
கொண்டுள்ளதனை அவதானிக்கலாம். போர்த்துக்கேயர் இலங்கையை ஆக்கிரமித்த பொழுது
இலங்கையிலுள்ள வளங்களைப் பறிமுதல் செய்து தன்னுடைய நாடுகளுக்கு அனுப்பிவைத்தனர். இவ்வாறு
இலங்கை வளங்களை சுரண்டும்பொழுது மக்கள் தமக்கு எதிராக திரும்புவதை கண்டு
மக்களுக்கு மத்தியில் பிரச்சினை உருவாக்க வேண்டும் என்று எண்ணிக் காய்நகர்த்தத்
தொடங்கினர். இதன் விளைவால்ää 1921ஆம் ஆண்டு
சீர்திருத்தத்தின் மூலமாகவே இனப் பிரச்சினையின் ஆரம்ப அடித்தளம்
உருவாக்கப்படுகின்றது. அதாவதுää மெனிங் அரசியல்
திட்டத்திற்கு முந்திய அரசியல் சீர்திருத்தத்தில் தமிழர்களுக்கும்
சிங்களவர்களுக்கும் சம உரிமையான அரசியல் பங்கு வழங்கப்பட்டது. ஆனால் மெனிங்
சீர்திருத்தம் சிங்களவர்களுக்கு அதிகமான முன்னுரிமையும் தமிழர்களுக்கு குறைவான
முன்னுரிமையுமான அரசியல் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தது. இதுவே இனப்
பிரச்சினையின் அடிப்படையாக காணப்படுகிறது. தமிழ் சிங்களம் இரு தலைவர்களிடையே
பிரச்சினை உருவாக்குவதில் மெனிங் மிகவும் அக்கறையாக இருந்தார். தமிழ்த் தலைவர்
அருணாச்சலம் அவர்கள் தமிழர்களுக்கு சார்பாக குரல் கொடுத்தார். எனினும்ää அவருக்கு சரியான அரசியல் தந்திரம் தெரிந்திருக்கவில்லை. அதனால் அவருடைய
கருத்துகளுக்கு மதிப்பு இருக்கவில்லை. ஒருபக்கம் போர்த்யதுக்கேயர் தமிழர்களுக்கு
ஆதரவு வழங்குவது போன்று செயற்பட்டுää மறுபுறம் சிங்கள
தலைவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் அரசியல் அமைப்புத் திட்டத்தை
உருவாக்கினர். இவ்வாறு உருவாக்கப்பட்ட 1921ஆம் ஆண்டு அரசியல்
அமைப்புத் திட்டம் சிங்களவர்களுக்கு திருப்தி அளிக்கவேää தமிழர்களுக்கு
அதிருப்தி அளித்தது.
இதனைத்
தொடர்ந்துவந்த டொனமூர் குழுவினரின் வருகையும் இனப் பிhச்சினைக்கு
காரணமாக அமைந்தது. அதாவதுää மகாத்மா காந்தி இலங்கைக்கு வந்த
பொழுது தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து அவரை வரவேற்றுää அவர்
தங்கியிருந்த நாட்கள் எல்லாம் அனைவரும் இணைந்தே செயல்பட்டனர். இதனை கண்ட
போர்த்துக்கேயர் இரு இனங்களும் இணைந்து விடும் என்ற காரணத்தினாலும் தன்னுடைய
குறிக்கோளை நிலை நாட்ட முடியாது என்ற சந்தர்ப்பத்திலும் டொடனமூர் மூலமாக
இனப்பிரச்சினையைத் தூண்டிவிட்டனர். இதனால் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.
இச்சந்தர்ப்பத்தில் இந்தியா இலங்கைக்கு உதவி செய்வதன் மூலமாக இந்தியாவுடன் இலங்கை
இணைவதற்குரிய அறிகுறிகள் தென்பட்டன. இச்சூழலை அவதானித்த டொனமூர்க் குழுவினர் அதனை
தடுக்கும் முகமாக சிங்களவரை தம்பக்கம் வென்றெடுத்து தமிழர்களுக்கு பாதகமானதும்
சிங்களவர்களுக்கு சாதகமான அரசியலமைப்பு திட்டத்தினை உருவாக்கினர். ஒருபுறம்
தமிழர்களின் உரிமைகளை முற்றுமுழுதாக பறித்த பிரித்தானியர்கள் மறுபுறம் தமிழர்கள்
மீது நல்ல அபிப்பிராயம் வைத்திருக்கக் கூடியவாறும் நடந்து கொண்டனர். இவ்வாறு
அவர்கள் நல்ல முறையில் நடக்கää சிங்களவர்களுக்கும்
தமிழர்களுக்குமான இனப்பூசல்கள் ஆரம்பமாகின.
இவ்வாறு
போர்த்துக்கேயர் விதைத்த இனப்பகை மக்கள் மத்தியில் கனன்று கொண்டிருக்கும் பொழுதே 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்தது. சுதந்திரத்திற்குப் பின்னர் ஒற்றை
ஆட்சி தொடர்ந்தமையினால் பெரும்பான்மையான சிங்களவர்களின் மேலாதிக்கம் ஏற்பட்டது.
இதனால் இனமுரண்பாடு மேலும் வளரத் தொடங்கியது. 1956க்குப்
பின்னரான காலப்பகுதியில் தொடர்ந்தும் நாடு முழுவதும் தமிழினத்தின் மீது சிங்கள
இனவாதம் கண் மூக்கு பாராமல் கட்டவிழ்த்து விடப்பட்டது. இதற்கு
அரசாங்கத்தலைவர்களும் பௌத்த மத தலைவர்களும் ஆதரவும் அனுசரணை வழங்கி ஒரு பெரும் இன
அழிப்பை நோக்கி அழைத்து வந்தனர். ஆட்சியாளர்களின் சிங்கள குடியேற்றங்கள்ää மொழி உரிமைப் பறிப்புää உயர்கல்வியில்
தரப்படுத்தப்படல் போன்ற பல்வேறு ஒடுக்கு முறைகளால் தமிழர்கள் பாதிக்கப்பட்டனர்.
முரண்பாடு ஆயுதப் போராட்டமாக மாறியது. இதனைத் தூண்டிவிடும் விதமாக யாழ்ப்பாணத்தில்
சிங்கள போலீசார் ஒருவரின் கொலை சம்பவம் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து
போராட்டங்களும் யுத்தங்களும் ஆக்ரோஷமடையத் தொடங்கின. யாழ்ப்பாணத்தில் தமிழ்
விடுதலைப் புலிகள் இனக்குழு தோற்றம் பெற்றது. தமிழ் இனம் தன் உரிமை மீட்க அரசியல்
ரீதியாக வென்றுவிடலாம் என நினைத்த போது சில அரசியல் வாதிகளின் இனவாத அரசியல் தமிழ்
இனத்தை தமிழ் ஈழ தனி நாட்டுக் கோரிக்கைக்கு இட்டுச் சென்றது. இதனை ஒட்டி 1976இல் தமிழ்ப் புலிகள் அமைப்பின் பெயர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமாக
மாறிää விடுதலை புலிகளுக்கு அரசாங்கத்திற்குமிடையில்
பிரச்சினை ஏற்பட்டது. இதில் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டனர். இவ்வாறே சிங்கள
தமிழர் இனப்பிரச்சினை முஸ்லிம்களின் பக்கம் திரும்பிää பின்னர்
தமிழர் - முஸ்லிம் இனப்பிhச்சினையாக வளர்ச்சியடைந்தது.
இவ்வாறு தோன்றிய
தமிழர் -
முஸ்லிம் இனமுரண்பாட்டின் அகவெளிப்பாட்டை நோக்குமாயின்ää
வடக்கு கிழக்கு
மாகாகணங்களைப் பொறுத்தவரையில்ää தமிழ்க் கிராமங்களும் முஸ்லிம்
கிராமங்களும் ஒரு தொடராக இல்லாது ஒன்றுடன் ஒன்று கலந்து காணப்பட்டன. முஸ்லிம்கள்
உரிமை கொண்டுள்ள விவசாய நிலங்களில் பெரும்பாலானவை தமிழர்களின் கிராமங்களை அடுத்தே
காணப்படுகின்றன. குடிசனப்பெருக்கம் காரணமாக குடியிருப்புக்காணி நிலம் போதாதிருப்பதும்;
விஸ்தரிப்புக்கான இடம் இல்லாதிருப்பதும்ää கிழக்கு
மாகாண முஸ்லிம்கள் எதிர்நோக்கும் ஒரு பாரிய பிரச்சனையாகும். நிலப்பற்றாக்குறைப்
பிரச்சனை தீவிரமடைந்தமையால் தங்களது பகுதிகளும் வியாபிப்புக்கு உட்படுத்தப்படலாம்
அல்லது ஆக்கரமிக்கப்படலாம் என்ற அச்சம் இரு சமூகங்களுக்கிடையேயும் சந்தேகத்தையும்
நெருக்கடியையும் அதிகரிக்கச் செய்திருந்தது. இதுகுறித்து சமூகப்ää பொருளாதார நிலைமை காரணமாக இரு சமூகங்களுக்குமிடையே புதிய விதிமுறைகள்
தோன்றலாயின. இவ்விதிகளும் கட்டுப்பாடுகளும் பல நூற்றாண்டுகாலமாக ஒற்றுமையாக
வாழ்ந்து வந்த இரு சமூகங்களும் தமது தனித்துவத்தையும் இனத்துவ உரிமைகளையும்
பிரத்தியேகமாகப் பேணி பாதுகாக்க முனைந்து நிற்பதைத் தெட்டத் தெளிவாக
எடுத்துக்காட்டின.
வடக்கு கிழக்கு
மாகாண முஸ்லிம்களது முந்திய தலைமுறைகளின் தொழில் பெரும்பாலும் விவசாயமாக
இருந்ததுடன்ää
சிறிதளவு மீன்பிடியுடனும் வியாபாரத்துடனும் தொடர்புடையதாகவே
இருந்தது. இலவச கல்விமுறையினதும் நெல்லுக்கான உத்தரவாத விலைத்திட்டதினதும்
அறிமுகங்களின் பின்னர் கிழக்கு மாகாண முஸ்லிம்களது கல்வி நிலைமையும் பொருளாதார
நிலையும் கணிசமான அளவு முன்னேற்றம் கண்டன. முஸ்லிம்களுக்களிடையே பல்கலைக்கழகப்
பட்டதாரிகள்ää நடுத்தர அரச உத்தியோகத்தர்கள்; டாக்டர்கள்ää பொறியியலாளர்கள்ää கணக்காளர்கள்ää சட்டவல்லுனர்கள்ää தொழில் நுட்பவியலாளர்கள் என்போரின் எண்ணிக்கை அதிகரித்தது. குறிப்பாக
ஆசிரியர்கள் தொகை இலங்கையின் ஏனைய முஸ்லிம் பகுதிகளை விட கிழக்கு மாகாணத்தில்
அதிகரித்தமையினை புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. சுருக்கமாகச் சொல்லப்போனால்ää
முஸ்லிம்களுக்கான புத்திஜீவித்துவம் கிழக்கு மாகாணத்திற்கு இடம்
பெயர்ந்து மாற்றம் பெற்றுள்ளதாகக் கூறலாம்.
இவ்வாறானதொரு
சூழ்நிலையில்ää
வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களும் முஸ்லிம்களும் அமைதியுடனும்;
சமாதானத்துடனும் ஒத்திணங்கி வாழ்கின்றனர் என்று பரவலாகக் கூறப்படும்
கருத்துக்கு முரணான வகையில்ää குறிப்பாக 1948இல் இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் தமிழர்களிடையே முஸ்லிம்கள் பற்றிய
எதிர்ப்புணர்வும் பகைமையும் கூடுதலாக வளர்ந்து வந்துள்ளது. தங்களை விட முஸ்லிம்கள்
பொருளாதார ரீதியில் வசதியுடனும் கல்வியில் முன்னேறிக்கொண்டும் இருக்கிறார்கள் என
எண்ணினர். மேலும்ää முஸ்லிம் தலைவர்கள் நாட்டுப்பிரிவினைக்
கோரிக்கைகள் என்வற்றிற்கு அனுசரணையாக இல்லாதிருந்த காரணத்தின் பலனாகää முஸ்லிம்கள் ஆட்சியிலிருக்கும் அரசாங்கங்களின் நல்லெண்ணத்தைப் பெற்றிருந்த
வேளையில்ää தமிழர்கள் தமக்கென தனியான தமிழ் ஈழம் ஒன்றை
அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையிலான போராட்ட நடவடிக்கைளில் தம்மை
ஈடுபடுத்திக் கொண்டிருந்தமையினால் அப்போது ஆட்சி செய்த அரசாங்கங்களிலிருந்து தம்மை
அன்னியப்படுத்திக் கொண்டனர். தமிழர்களது தனிநாட்டுக் கோரிக்கைகளுக்கு அனுதாபம்
காட்டாத காரணத்தினால் தமக்கிடையே தோன்றியுள்ள ஒரு ஆபத்து என தமிழர்கள் கருதினர்.
வடக்கிலும்
கிழக்கிலும் வாழும் தமிழர்களும் முஸ்லிம்களும் புவியியல் ரீதியாக அருகருகே
வாழ்வதாலும்ää
பொருளாதார அடிப்படையில் ஒருவரில் ஒருவர் தங்கியிருப்பதாலும் பல
சந்தர்ப்பங்களில் மிகவும் அற்பமான விடயங்களில் கூட பிணக்குகள் ஏற்பட்டு
வந்திருக்கின்றன. உதாரணமாக தமிழ் பகுதிகளை கடந்து தங்கள் வயல்களுக்கு செல்லும்
முஸ்லிம்கள் துன்புறுத்தப்படுதல்ää வாகனங்கள் கடத்தப்படுதல்ää
முஸ்லிம்களுக்குரிய நெல்ää கால்நடைகளைக்
கொள்ளையிடுதல் போன்ற சம்பவங்கள் இடம்பெற்றன. இதுவே காலப்போக்கில் தமிழ்ää முஸ்லிம் இனப்; பிரச்சினையை மேலும்
மோசமடையச்செய்தது.
இலங்கையில் 1983ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரத்தின் பின்னர் வடக்கிலும் கிழக்கிலும்
தமிழர்கள் முஸ்லிம்கள் மீது கொண்டுள்ள எதிர்ப்புணர்வுகளையும் வெறுப்பையும்
வெளிப்படையாகன் காட்ட முற்பட்டனர். முஸ்லிம்கள்ää தமிழர்களுடைய
நிலங்களை அபகரிப்பவர்கள்ää தமிழ் தொழிலாளர்களைச்
சுரண்டுபவர்கள்ää பல்கலைக்கழகங்கள்ää தொழில்
நுட்பகல்லூரிகளில் தங்கள் வாய்ப்புக்களை இல்லாமலாக்குபவர்கள் எனப் பகிரங்கமாகத்
தூசிக்கப்பட்டனர். நிர்வாக ரீதியில் தமிழர்களது உள்ளுராட்சி எல்லைக்குள் அமைந்த
முஸ்லிம் கிராமங்களுக்குப் பொது வசதிகள் மறுக்கப்பட்டன. முஸ்லிம் பகுதிகளிலிருந்து
தமிழ்போராளிகளால் துப்பாக்கி முனையில் கப்பம் அறவிடப்பட்டுää நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. வாகனங்கள்ää விவசாய
உபகரணங்கள் என்பன அபகரிக்கப்பட்டன.
இத்தகைய
சம்பவங்கள் நிம்மதியற்ற நிலைமையை முஸ்லிம்களிடையே தோற்றுவித்ததுடன் தமிழர்களது
தனிநாட்டுக் கோரிக்கையை சாத்தியமாக்கும் பட்சத்தில் அவர்களுடன் அரசியல் பொருளாதார
அதிகாரங்களில்;
நீதி நியாயப்படி பகிர்ந்து கொள்ளக் கூடிய சாத்தியம் ஏற்படப்
போவதில்லை என்ற உணர்வும் முஸ்லிம்களிடையே வலுப்பெறத் தொடங்கின.
1985ஆம் ஆண்டின் ஆரம்ப காலப்பகுதியில் போராளிகளின் அதிகரித்த நடவடிக்கைகளுடன்
தமிழர்கள் முஸ்லிம்கள் மீது கொண்டிருந்த எதிர்ப்புணர்வும் மேலும் உக்கிரமான
மாற்றங்களைப் பெற்றது. இதன்விளைவாகää தமிழ் இயக்கத்தவர்கள்
அச்சுறுத்திப் பணம் பறித்தல்ää துப்பாக்கி முனையிலான
ஆட்கடத்தல்ää பலாத்காரம் போன்ற செயல்கள் ஆங்காங்கே பரவாலாக
இடம்பெறலாயின. இவ்வாறான நிலைமைகளை தணிப்பதற்கும் ஆயுதம் ஏந்தி முஸ்லிகள்ää தமிழர்களுக்கு எதிராக போராட முற்படாத சாத்வீக வழிகளில் பலதரப்பட்ட
தற்காப்பு முயற்சிகளில் ஈடுபட்டனர். இதில் தமிழ் ஆயுதவாதிகள் ஒரு முஸ்லிம்
வியாபாரியிடம் கொள்ளையடிக்கும் வேளையில் அவரது குடும்பத்தினரை பணயக்கைதியாக
எடுத்துச் செல்ல முற்பட்டனர். இந்த அடாவடித்தனத்தால் ஆத்திரமடைந்த முஸ்லிம்கள்
தமது எதிர்ப்பினை ஒரு அமைதியான ஹர்த்தால் மூலம் எடுத்துக்காட்டினார்கள். 1985
ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ஆம் திகதியிலிருந்து 12ஆம் திகதி வரை இந்த ஹர்த்தால் இடம்பெற்றது. அதன் பின் மீண்டும் எல்லா
வியாபார நிலையங்களும் 13 ஆம் திகதி திறக்கப்பட்டது.
1985 இல் ஏப்ரல் மாதம் 14 ஆம்திகதி மாலை 9 மணிக்கு அக்கரைப்பற்றிலிருந்து 10 மைல் தொலையிலுள்ள
காரைதீவு என்னும் தமிழ் கிராமத்திலிருந்து 13 தமிழ்
ஆயுதவாதிகளைக் கொண்ட ஒரு கோஷ்டிää ஜீப் வண்டி ஒன்றில்
அக்கரைப்பற்றுக்குள் வேகமாக நுழைந்தது. ஆயுதபாணிகளாக வந்த இவர்கள் சரமாரியாக
துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்தனர். அக்கரைப்பற்று நகரப்பள்ளிவாசலுக்குள் முதல்
வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. பிரதான சந்தை சந்தியை நோக்கி விரைந்த ஜீப் வண்டி வெகு
வேகமாக ஓட்டப்பட்டதன் காரணமாக சந்தி வளைவில் தடம் புரண்டது. பிரயாணம் செய்த பலர்
விபத்தில் மரணமடைய எஞ்சியோர் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த
சம்பவத்திலிருந்து ஆரம்பித்த தமிழ் முஸ்லீம் இனக்கலவரம்ää கல்முனைää காத்தான்குடிää ஏறாவ10ர்ää ஓட்டமாவடிää வாழைச்சேனைää
மூதூர்ää கிண்ணியா ஆகிய இடங்களுக்கும்
வேகமாகப் பரவியது. ஆயுதம் தாங்கியவர்களால் பல நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொலை
செய்யப்பட்டனர். முஸ்லிம்களினதும் தமிழர்களினதும் பல கோடி ரூபாய்கள் பெறுமதியான
சொத்துக்கள் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. இந்த 1985 ஏப்ரல்
கலவரங்களின்; போதுதான் கிழக்கு மாகாணத்தில் முதல் தடவையாக
தமிழர்களும் முஸ்லிம்களும் இன ரீதியாக ஒருவரோடு ஒருவர் மிக மோசமாக மோதிக்
கொண்டனர்.
1985 ஆம் ஆண்டு அக்டோபர் 28 ஆம் திகதி மூதூரில் கலீபா
கலீல் என்னும் முஸ்லிம் இளைஞர் தனது வீட்டிலிருந்து தமிழ் ஆயுதவாதிகளினால்
கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு மின்கம்பத்தில் கட்டப்பட்டார். இதன் காரணமாக 34
தமிழ் வீடுகள் உடைக்கப்பட்டன. தமிழ்தரப்பு ஆத்திரம் கொண்டு மூன்று
முஸ்லிம்களையும் கொன்று 324 வீடுகளையும் உடைத்தனர்ää
25 கடைகளும் எரிக்கப்பட்டன.
1988 மார்ச் 6 ஆம் திகதி காத்தான்குடி நகரசபை முன்னாள்
தலைவர் அல்ஹாஜ் அஹமட்லெப்பே கொல்லப்பட்டார். 1990ஆம் ஆண்டு
பள்ளியில் தொழுது கொண்டிருக்கையில் 106 முஸ்லிம்கள் கொலை
செய்யப்பட்டனர். அதே வாரத்தில் மக்கா ஹஜ் யாத்திரை முடித்துவிட்டு வீடு திரும்பிய
ஹாஜிகள் உட்பட 86 முஸ்லிம்களும் களுவாஞ்சிகுடியில்
கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
இரண்டு
வாரங்களுக்குப் பின்னர் ஏறாவ10ரில் சத்தாம் ஹ_சைன்
கிராமம் தமிழ் ஆயுதவாதிகளினால் தாக்கப்படடு 1000க்கும்
கூடுதலான முஸ்லிம் ஆண்ää பெண்ää குழந்தைகள்
கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.
1989 நவம்பர் தேசிய இராணுவத்தினரால் காரைதீவில் 24 முஸ்லிம்
பொலிஸ் ரிசேவ் உத்தியோகத்தர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1985 ஆண்டு மேமாதம் தமிழ் முஸ்லிம் கலவரம் ஏற்பட்டு ஏறக்குறைய ஒரு மாதத்தின்
பின் மூதூரில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட பாரிய
தாக்குதலின் விளைவாக தமிழர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டனர். இந்த சிக்கலான
காலகட்டத்தில் தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டியவர்கள் முஸ்லிம்களே. ஆயினும்ää
முஸ்லிம்களினால் காட்டப்பட்ட இந்த பரிவு தமிழர் ஆயுத அமைப்புக்களின்
போக்கில் முஸலிம்களைப் பொறுத்தமட்டில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
தமிழ்
ஆயுதவாதிகள் மூதூர் முஸ்லிம் உதவி அரசாங்க அதிபர் ஜனாப் ஹபீப் முஹம்மதை 1997 செப்ரெம்பர் 3ஆம் திகதி படுகொலை செய்தனர். இச்
சம்பவத்திற்கான தமது எதிர்ப்பை கிழக்கு மாகாணத்தில் வாழும் அனைத்து முஸ்லிம்களும்
பகிரங்கமாகவே வெளிப்படுத்தினர். இந்த அநுதாப வெளிப்படுத்தலினால் ஆத்திரமுற்ற தமிழ்
ஆயுதவாதிகள் 1987 செப்ரெம்பர் 10 ஆம்
திகதி கல்முனையில் முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகள்ää வீடுகள்
என்பவற்றைக் கொள்ளையடித்து எரித்தனர். இந்தத் தாக்குதல்கள் நடைபெறும் போது இந்திய
அமைதிகாக்கும் படையும் அங்கிருந்தது. தமிழ் ஆயுதவாதிகளினால் அழிக்கப்பட்ட
முஸ்லிம்களின் சொத்துக்கள் சுமார் 6 கோடியே 70 இலட்சம்.
1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 12 ஆம் திகதி மூதூரில்
ஆயுதமேந்திய பிரிவினைவாதிகளினால் முஸ்லிம்கள் மீது பாரிய தாக்குதல் ஒன்று
மேற்கொள்ளப்பட்டது. இத் தாக்குதலின்போது இந்திய அமைதி காக்கும் படையினரும்
அங்கிருந்தனர். இத்தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மூதூரிலிருந்து வெளியேறிய
ஆயிரக்கணக்கான முஸ்லிம் அகதிகளின் பராமரிப்பு வேலைகளில் துரிதமாக ஈடுபட்டுக்
கொண்டிருந்த வேளையிலேயே முன்னாள் மூதூர் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான
ஜனாப். அப்துல் மஜீத் 1987 நவம்பர் 17 ஆம்
திகதி கொலை செய்யப்பட்டார்.
மட்டக்களப்பு
மாவட்டத்தில் ஒரு பிரதான முஸ்லிம் பட்டணமாகிய ஓட்டமாவடியில் 1987 டிசம்பரில் இரண்டாம் திதகி இந்திய அமைதிகாக்கும் படையினருக்கும் தமிழ்
ஆயுததாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் போது 26 முஸ்லிம்கள்
கொல்லப்பட்டதுடன் 200 முஸ்லிம்கள் காயப்படுத்தப்பட்டனர்.
முஸ்லிம்களுக்கு சொந்தமான ஏராளமான வீடுகளும் கடைகளும் எரிக்கப்பட்டனää அழிக்கப்பட்டன. முஸ்லிம் பெண்கள் பலர் இந்திய அமைதிப்படை வீரர்களால்
பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டன. 14ää000
முஸ்லிம்கள் அகதிகளாக கிழக்கு மாகாணத்திலிருந்து தப்பி ஓடிää
வட மத்திய நகரமான பொலன்னறுவையில் தஞ்சம் புகுந்தனர்.
1987ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி 30ää000
முஸ்லிம்களைக் கொண்ட மட்டக்களப்பில் மிகப் பிரதான முஸ்லிம் நகரமான
காத்தான்குடி ஆயுதமேந்தியவர்களினால் தாக்கப்பட்டது. இந்த கொடூர தாக்குதலின் போது 60
முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 200க்கு
மேற்பட்டோர் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுக்குள்ளாகினர். 20 கோடி பெறுமதிக்கும் கூடுதலான சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டும்
எரிக்கப்படும் நாசம் செய்யப்பட்டன. இவ்வனர்த்தங்கள் யாவும் இந்திய அமைதி காக்கும்
படையினர் இங்கு நிலை கொண்டிருந்த போதே நடைபெற்றன. இரண்டே இரண்டு நாட்கள் தாக்குதல்
நடைபெற்ற போதிலும் காத்தான்குடி மீது முற்றுகையிடப்பட்டுää 1988 ஜனவரியிலிருந்து சகல போக்குவாத்துக்களும் தமிழ் ஆயுதவாதிகளினால்
தடைசெய்யப்பட்டன.
1992 ஒக்டோபர் மாதம் தமிழ்புலிகள் பொலன்நறுவை மாவட்டத்தில் அக்பர்புரம்ää
அஹமட்புரம்ää பள்ளியகொடல்ல ஆகிய கிராமங்களைத்
தாக்கி 200க்கும் கூடுதலான முஸ்லிம்களை படுகொலை செய்தனர்.
1990ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் யாருமே எதிர்பாராத வகையில் சடுதியாக வடமாகாணம
முஸ்லிம் கிராமங்களில் தமிழ் புலிகள் ஒலி பெருக்கி மூலம் முஸ்லிம்கள் தமது
வீடுகளையும் உடைமைகளையும் விட்டுவிட்டு 48 மணித்தியாலங்களுக்குள்
வெளியேற வேண்டும் அப்படி வெளியேறாவிட்டால் கொல்லப்படுவார்கள் என்று அறிவித்தனர்.
இவ்வறிவித்தல் எருக்கலம்பிட்டியில் ஒக்ரோபர் 24 ஆம்
திகதியும் விடத்தல் தீவு முசலிப் பகுதிகளில் ஒக்ரோபர் 25 ஆம்
திகதியும் யாழ்ப்பாண நகரில் 29ஆம் திகதியும்
அறிவிக்கப்படடது.
இதனைத் தொடர்நது
முஸ்லிம்களின் நகைகளையும் பெறுமதியான பொருட்களையும் தமிழ் புலிகள் அபகரித்தனர்.
எதிர்த்த முஸலிம்களை தமிழ் ஆயுதவாதிகள் மிக மோசமாகத் தாக்கி தண்டித்தனர். வடமாகாண
முஸ்லிம்கள் நிர்க்கதியான நிலையில் குடும்பம் குடும்பமாக சொல்லொணாத் துயராத்தோடு 100க்கு மேற்பட்ட முஸ்லிம் கிராமங்களிலிருந்து தமிழர்களால்
விரட்டியடிக்கப்பட்டனர். இவ்வாறு இனப்பிரச்சினை மூர்க்கம் பெற்றுக்கொண்டிருக்கும்
போதுää 1990 மார்ச் மாதம் 1200 இராணுவ
வீரர்களை இழந்த நிலையில் இந்திய அமைதி காக்கும் படையும் இலங்கையிலிருந்து
வெளியேறியது.
இதன்படிää 1990ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி தமிழ் ஆயுதவாதிகளினால்
நடாத்தப்பட்ட இன சுத்திகரிப்பு நடவடிக்கையினால் வடமாகாணம் முழுவதும் முஸ்லிம்களற்ற
பிரதேசமாக்கப்பட்டது. இப்பெரும் துயரத்தையும் இழப்பையும் தமிழ் மக்களுடைய
விடுதலைப் போராட்டம் முஸ்லிம்கள் மீது சுமத்தியுள்ளது. இவற்றிலிருந்து வடக்கு
கிழக்கு முஸ்லிம் மக்கள் தங்களை பாதுகாத்துகொள்ள வேண்டிய அhசியல்
தேவையையும் உணர்ந்து விட்டார்கள்.
இதற்கிடையில்ää முஸ்லிம்களுக்கான அரசியல் கட்சியாக ‘முஸ்லிம்
காங்கிரஸ்;’ எழுச்சி பெற்று வந்தது. அதாவதுää ஆளுங்கட்சியிலிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய்பேச முடியாதிருந்தந்த
நிலையில்ää எம். எச். எம். அஷ்ரப் அவர்களின் தலைமையில்
முஸ்லிம் காங்கிரஸ் எனும் அரசியல்க்கட்சி தோற்றம்பெற்றது. தொடர்ந்து இடம்பெற்று வந்த
இனமோதலினால் முஸ்லிம்களின் அரசியல்ää எதிர்காலம்
மழுங்கடிக்கப்பட்டுவிடும் என்பதனை தெளிவாக உணர்ந்த அஷ்ரப் தமிழ் பேசும்
மக்களுக்காக அதிலும் குறிப்பாக முஸ்லிம்களுக்காக அவர்களின் அரசியல் தனித்துவத்தை
நிலைநிறுத்துவதற்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தினை பல
புத்திஜீவிகளுடன் ஒன்றிணைந்து 1981இல் உருவாக்கினார்.
இதன் மூலம் அவர்
முஸ்லிம் மக்களின் அரசியல் உணர்வினை தட்டி எழுப்பினார். ஸ்ரீ லங்கா முஸ்லிம்
காங்கிரஸ் ஒரு விருட்சமாக வளர ஆரம்பித்தது. இதற்கிடையில்ää கல்முனையில் ஏற்பட்ட தமிழ் முஸ்லிம் இன முhண்பாடு
அஷ்ரபைக் கொழும்பு நோக்கி குடிபெயரச் செய்தது. காலங்கள் கடந்தனää கொழும்பிலிருந்து கொண்டு முஸ்லிம்களின் அரசியல் தொடர்பில் பல்வேறு விதமாக
சிந்தித்தார். சவ10தியிலிருந்து வந்த எம். ரி. ஹசன் அலி
மற்றும் எம். ஐ. எம். இஸ்மாயில் ஆகியோர் அஷ்ரபை சந்தித்து முஸ்லிம்களின் அரசியல்
தொடர்பில் கலந்துரையாடினர். பின்னர் அதில் மருதூர்கனியும் இணைந்து கொண்டார்.
முடிவாகää 1986. 11. 29ஆம் திகதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு இயக்கமாக உருவாக்கப்பட்டு 1988.
02. 11ஆம் திகதி மரச்சின்னத்துடன் தேர்தல் ஆணையாளரால்
அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக பிரகடனப்படுத்தப்பட்டது. இக்கட்சிக்கு முழு ஆதரவையும்
வழங்கிய கிராமம் ஒலுவில். இது பெருமளவு பாமர மக்களைக் கொண்டது. இவர்கள் அஷ்ரபை ஒரு
ஆதர்ஷ புருஷராகää ஒரு பெரிய ஹீரோவாக ஏற்றுக் கொண்டனர்.
இவர்களது ஆதர்வுடன்ää 1989ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற
தேர்தலில் 202ää016 வாக்குகளை இலங்கை முழுவதிலும் பெற்ற
இக்கட்சி நான்கு ஆசனங்களுடன் பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்தது.
அதன் பின்னர்ää 1994. 03. 01 இல் கிழக்கில் பிரதேச சபைத் தேர்தல் இடம்பெற்றது. திகாமடுல்லை
மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஏதேனும் ஒரு பிரதேச சபையில் ஸ்ரீ
லங்கா முஸ்லிம் கரங்கிhஸ் தோல்வியை தழுவுமானால் தான் தனது
பதவியை ராஜினாமா செய்வதாக தலைவர் அஷ்ரப் சபதம் கொண்டார். முடிவோ ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் சில பிரதேச சபைகளில் தோற்றது. அதனை அடுத்து அஷ்ரப் தனது
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
இவ்வாறானதொரு
காலப்பகுதியைப் பின்புலமாகக் கொண்டு எழுந்ததே கொல்வதெழுதல் 90 எனும் நாவலாகும். இது தொடர்பாக இந்நூலாசிரியரான ஆர. எம். நௌஸாத்
குறிப்பிடும் போதுää
“மேற்படி ஒரு காலப்பகுதியை முஸ்லிம் எழுத்தாளர்கள் அடுத்த சந்தததியினருக்குக் கடத்தும் விதமாக அக் கொடுமைகளைக் கவிதைää சிறுகதைää நாடகம்ää நாவல் ஆகிய புனைவுகளாக வெளிப்படுத்திய வீதம் மிகக்குறைவு. போர்க்கால வெளியீடுகள் வருவதில் எத்தனையோ இடர்பாடுகள் இருந்தன. சரியான வெளியீட்டுத் தளம் கிடைக்கவில்லை. இந்நாவல் கூட 1990 காலப்பகுதியில் ‘வளவு நிறைஞ்ச நிலா’ எனும் தலைபபில் எழுதப்பட்டுள்ளபோதிலும் அது எந்த ஊடகத்திலும் வெளியிடப்பபடாமல் கையெழுத்துப் பிரதியாகவே இருந்தது. பின்னர் அக்கரைப்பற்று எம். பௌசர் என்பவரால் நடத்தப்பட்டு வந்த முஸ்லிம் குரல் பத்திரிகையில் சில சில மாற்றங்களுடன் ‘பள்ளிமுனைக் கிராமத்தின் கதை’ என்ற பெயரில் தொடர் கதையாக வெளிவந்தது. மேலும் சில மாற்றங்களுடன் 2013இல் தமிழ் நாடு காலச்சுவடு பத்திரிகை நிறுவனத்தினால் ‘கொல்வதெழுதுதல் 90’ என்ற பெயரில் பூரண நாவலாக வெளியிடப்பட்டது.” என்கிறார்
00