மிக்க அன்பு தீரன். எல்லாம் இணைந்ததே வாழ்க்கை என்பது நீங்கள் அறியாததா என்ன. இப்படித்தான் நட்பு வட்டத்திலுள்ள பலரும் சொல்கிறார்கள். ஆனால், வாழும் காலத்தில் நம்மை மக்கள் எவ்வளவு தூரம் புரிந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை. காலம் மிகப் பெரிய ஆசான். அதனிடம் அதை விட்டு வைப்போம்.
நீங்கள் எழுதிய 'கொல்வதெழுதுதல்' அழகான ஒரு அரசியல் நாவல். நமது சீரழிந்த அரசியல் கலாச்சாரத்தின் இடுக்குகளை, அவலங்களை கலா நேர்த்தியோடு பதிவு செய்துள்ளது. அது பற்றியும் எழுத வேண்டும். நமது எழுத்தாளர்களின் படைப்பிலக்கியங்களை நாமும் எழுதாவிட்டால் இங்கு யாரும் கண்டு கொள்ளப் போவதுமில்லை. இது தொடர்பில் ஒரு தனியான திட்டம் உள்ளது. உங்களுடன் பேசுகிறேன்.