பிரளயமெனப் பெருக்கெடுத்த அரசியல் கொல்வதெழுதுதல் 90--
கிண்ணியா
சபருள்ளாஹ் 000
கட்டிலில் சரிந்து கிடந்த்து சப்பு சல்தானின் உடல்…..கால்கள் அலங்கோலமாய்க் கிடந்தன…….கை முதுகின் கீழே மடிந்திருந்தது. பனியன் சட்டையில் பச்சை இரத்தம் ஊறிப்பரவிக் கொண்டிருந்த்து. சாரம் உரியப்பட்டு இடுப்பின் கீழ் இரத்த வெள்ளம்….தலை நிமிர்ந்து கண்கள் முண்டையாகத் தள்ளி, வாயில்……..ஈ……..இ…தென்ன…..வ ாயினுள்…எ….ன்ட …..அல்லோவ்….வாயினுள் திணிக்கப்பட்டிருந்தது அவனது ஆண் குறி…..என்டம்மோவ்…”
என்டம்மோ…என்ட யா ரப்பே என்னப் படச்ச ரஹ்மானே என்று கழுத்தில் திடீர் வேளாண்மை செய்யப்பட்டிருந்த வியர்வையை துடைக்க வழியில்லாமல் நமது ஆண் குறி கிரிஸ் கத்தி பட்டு சேதாரப்படாமல் இருக்கின்றதா என்று சந்தேகத்தோடு ஒரு தடவை தொ………..ப்பார்த்துக் கொண்டு மரக்கதிரையில் சாய்ந்து கிடந்த எனது கையில் காலச்சுவடு பதிப்பாக வந்து தீரன் நௌஷாதின் “கொல்வதெழுதல் 90” கையிலே இருந்தது.
நாவலின் 157ம் பக்க்த்தில் சதாவும் குறி விரைக்கச் செய்து வெளி நாட்டுக்கு அனுப்புகின்றேன் என்ற போர்வையில் இளம் பெண்களை வேட்டையாடிக் கொண்டிருந்த சப்பு சுல்தானின் கோல்ட் ப்ளட்டட் மேர்டரில் (COLD BLOODED MURDER) எனது இரத்தத்தை ஃப்ரீசரில் வைத்து தொடர்ந்தும் வாசித்து நாவலை முடித்த போது மண் குடத்துத் தண்ணீரை எடுத்து தொண்டைக்குள் ஒரு கனம் சரித்துக் கொண்டு திகிலுக்கு தொண்டு செய்தேன்.
இலங்கையின் தமிழிலக்கிய பரப்பில் என்றென்றும் கவனயீர்ப்புப் பட்டியலில் இருக்கின்ற மிக முக்கியமான நாவல்களுல் தீரன் நௌஷாதின் கொல்வதெழுதல் 90 ம் இருந்து வருகின்றது என்பது எண்பிக்கப்பட வேண்டியதொன்றல்ல. போர்க்காலத்தின் கிழக்கிலங்கை முஸ்லிம்களது துயரங்களின் டிஜிட்டல் ஆவணமது.
1990களில் கிழக்கிலங்கையில் கழுத்தறுத்து பீறிட்டுப்பாய்கின்ற குருதியில் நின்று கொண்டு கதகளி ஆடிக் கொண்டிருந்த ஆயுதப்போராட்டத்துக்குள், ஒரு திசையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ருத்ர தாண்டவம், இன்னோர் திசையில் இலங்கை ராணுவத்தின் அதிகாரப்பாய்ச்சலில் மின்னுற்பத்தியாகிய ஆலகாலம், இன்னோர் பக்கத்தில் இனந்தெரியாத ஆயுதக் குழுக்கள், மறு பக்கத்தில் கள நிலைமையை சரியாக பயன்படுத்திக் கொண்டு ஊரையே கபளீகரம் செய்து கொண்டிருந்த கொள்ளைக் கூட்டம் என திரும்புகின்ற எல்லாத்திசைகளிலும் அச்சத்தின் உச்சமும், திகிலின் தீம் தரிகிடதோமும், உத்தரவாதம் வழங்கப்படாத இருப்பின் கேள்விக்குறியுமென நகர்ந்து கொண்டிருந்த இருட்டின் நிழலில் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியும் கன்னி வெடிக்கு காணிக்கையாக்கப்பட்டு விடுமோ என்று வாழ்வை அஷ்ட கோணலாக்கிய அந்தக்காலப்பகுதியில் கிழக்கின் அம்பாறை மாவட்டத்தின் பள்ளி முனைக்கிராமத்தினை புலமாக்க் கொண்டு தீரன் இந்த கொல்வதெழுதல் 90 னை நம்மிடம் கொண்டு சேர்த்திருக்கின்றார்.
1990களில் சுவாசம் செய்து கொண்டிருந்த ரெத்ரங்களை பின்னணியாக்க் கொண்டு இந்த நாவல் எழுதப்பட்டாலும் பள்ளி முனைக்கிராமத்தின் கதை என்ற பெயரில் 2003ம் ஆண்டு முஸ்லிம் குரல் பத்திரிகையில் தொடராக வெளிவந்து கொண்டிருந்தது. எனினும் காலச்சுவடுப்பதிப்பாக 2013ம் ஆண்டு வெளி வந்த்து. போர்க்கால முஸ்லிம் தேசத்து இலக்கியத்தினைனப் பொறுத்த வரை குருதியின் வெண் குருதி சிறு துணிக்கை மாதிரித்தான் இந்த கொல்வதெழுதல் 90. போர்க்கால முஸ்லிம்களின் இரத்தத்தால் எழுதப்பட்ட துயர் காட்டாறாய் பிரவகிக்கின்ற வலராற்றை கவிதைகளாக கதைகளாக பலர் பதிவு செய்திருந்தாலும் நாவல் என்ற வகையில் முழுக்க முழுக்க என்று இல்லா விட்டாலும் ஒரு பெரும் பகுதியை பதிவு செய்வதில் ஓரளவு வெற்றி கண்டிருக்கின்றார் இந்த நாவலூடாக தீரன்.
தீரனின் இந்த நாவல் போர்க்காலத்தில் கிழக்கு முஸ்லிம்கள் அனுபவித்த கொடுமைகள் பற்றி பேசுகின்றது என்பதனை விட ஆவேசத்தை ஊடறுத்துக் கொண்டு அந்தரத்தில் ஆடிய போர்க்காலத்துக்குள் பிரளயமெனப் பெருக்கெடுத்த அரசியல் பற்றியே பிரதானமாகப் பேசுகின்றது.
யுத்த்த்துக்கு எந்த வித சம்பந்தமுமில்லாத ஆயதங்களின் அகர வரிசை கூடத் தெரியாத முஸ்லிம்கள் மீது கட்டற்ற வன்முறையினை எல்லாத்தரப்பும் கட்டவிழ்த்து விட்ட காலப்பகுதியில் முஸ்லிம்களுக்கென்று மரக்கட்சியை தாபித்து அதனூடாக அபாயங்கள் நிறைந்த பாதையில் வழிந்தோடிய கட்சிப்போராளிகளின் குருதியைம் வியர்வையையும் மரத்தின் ஆணி வேருக்கு காணிக்கையாக்கி “நாளே தக்பீர்” கோஷத்தோடு முஸ்லிம்களின் உணர்ச்சிப்பிழம்பில் தீ வள்ர்த்த மறைந்த தலைவர் அஷரபினை அழைத்து வந்து அவருக்குப் பின்னால் அதோ தெரிகின்றான்…அவன்தான் முத்து முகம்மது. சாதாரண கிராமத்தான்.
தனது கிரமத்தையும், தனக்கு வருங்காலத் துணையாக வர இருக்கின்ற கிளிக்குஞ்சு மைனாவையும் தவிர வேறெதுவும் தெரியாத வெகுளிப்பய புள்ள. அந்த முத்து முகம்மது இளைஞனை ஆதாரமாக வைத்து ஒரு போர்க்கால அரசியல் நாவலை தீரன் கொல்வதெழுதல் 90ல் தந்திருக்கின்றார்.
போரின் கூரிய பற்களால் வேட்டையாடப்பட்டுக் கொண்டிருக்கும் தனது அழகிய கிராமத்தையும், தனது கனவுக்காதலி மைமுனாவையும் அவ்வப்போது உதடுகளில் செருகிக் கொள்ளுகின்ற பீடிகளையும் தவிர வெளியுலகே தெரியாத ஒரு அப்பாவி இளைஞன், பாடசாலைக்காலத்தில் சுற்றுலா சென்று கூட கொழும்பை பாத்திராத ஒரு பட்டிக்காட்டான், “நம மொகக்த” என்று கேட்டால் கூட பயந்து போய் எல்லா எலும்புகளிலும் அல்ப்ஸ் மலைக்காற்று வந்து கூடாரம் அடித்துக் கொள்ளுகின்ற கிலிக்காரன், என்று எல்லாவிதமான அப்பாவித்தனமான கரக்டர்களையும் தனக்குள்ளே தக்க வைத்துக் கொண்டிருக்கின்ற முத்து முகம்மது என்ற இளைஞன் மக்களின் பிரதிநிதியாக பாராளுமன்றம் செல்லுகின்ற வரலாற்றினை தீரன் சொல்லி முடிக்கின்ற போது அடி மட்ட அரசியலையும் அதன் பின்னரான உயர்மட்ட எழுச்சினையும் பார்த்து பரவசம் பெற்றுக் கொண்தனை விட நான் கற்றுக் கொண்டது கனக்க.
இந்த நாவலை முழுக்க முழுக்க தீரன் அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் கிராமங்களுக்கென்று பிரத்தியேகமாக உள்ள ஸ்லேங் (SLANG) என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் ஊர்ப் பாஷையிலேயே எழுதியிருக்கின்றார். ஒவ்வொரு பாத்திரமும் உரையாடுகின்ற போது அந்த ஸ்லேங்கை அதி அற்புதமாக தீரன் பயன்படுத்தி இருக்கின்றார். நாவலின் ஒரு இடத்தில் கூட அந்த ஸ்லேங் மிஸ்ஸாகி விடக்க கூடாதென்ற அதி பதுகாப்புக் கவன வலயத்துக்குள் தீரன் அகப்பட்டுத் துடிப்பதனை பாத்திரங்கள் உரையாடுகின்ற போது அவதானித்தேன்.
மண்வாசனை மூக்கின் துவாரங்களில் பன்னீர்ப்பூ வாசனையை பதிவிறக்கம் செய்து விடுகின்றது.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு இந்த ஊர்பாஷை அல்லது ஸ்லேங் லேசில் புரிந்து விடும் என்றாலும் கிழக்கு மாகாணத்தைத் தாண்டி வெளியில் வாழ்கின்ற வாசகர்கள் இந்த நாவலை வாசிக்கின்ற போது அவ்வப்போது சில பல சிரமங்களுக்க ஆளாவார்கள் என்பது மட்டும் நிச்ச்யம். எனினும் தான் சார்ந்த மண்ணையும் அதன் மாந்தர்களையும் ஆவணப்படுத்த எத்தனிக்கின்ற எந்த ஒரு எழுத்தாளனும் அந்த மண்ணின் மரபையும் அந்த மக்களது பிரத்தியேக பாஷையையும்; ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு எதனை எழுதிக் கிழித்தாலும் அது தோல்வியின் மூத்திரச் சந்திலே முட்டிக் கொண்டு நிற்கும் என்பது மகா உலக யதார்த்தம்..
தீரன் இந்த நாவலில் எந்த மண்ணை தனது எழுத்துக்குள் கொண்டு வர வேண்டுமென்று நினைத்தாரோ அதனை மிகச் சரியாக நிறைவேற்றியிருக்கின்றார். இந்த நாவலை வாசிக்கின்ற எவருக்கம் எளிதில் புரிந்து விடக் கூடிய சூத்திரம்…இது அம்பாறை மாவட்டத்தின் ஒரு முஸ்லிம் கிராமத்தின் கதை என்பது.
பள்ளிமுனைக்கிராம்ம், முத்து முகம்மது, மைமுனா, அவளது தாய், மைமுனாவின் தம்பி யாஸின் பள்ளித்தலைவர், சப்பு சுல்தான், இஸ்லாமியக்கட்சித் தலைவர் எம் எச் எம். இஸ்ஹாக், உதுமான், தேநீர்க்கடை நெய்னார், செய்லான் ஹாஜி, உதுமான் மகன் அன்வர் என்று ஒவ்வொரு பாத்திரப்டைப்புளுக்கும் உரிய அழுத்தங்களை வழங்குகின்ற அதே நேரம் அந்தந்த பாத்திரங்களின் தராதரங்களையும் குவாலிட்டிகளையும் அவர்கள் பேசுகின்ற போது பாவிக்கின்ற சொற்களுக்குள்ளாக விளங்கப்படுத்துகின்ற வித்தைக்குள் தீரன் கம்பு சுத்துகின்றார்.
பொதுவாகவே நாவல்களில் நடமாடுகின்ற பாத்திரங்கள் பற்றி நேரடியாக கிரிக்கெட் வர்ணனை புரியாமல் அவர்களது போக்கிலேயே விட்டு விட்டு அவர்கள் பேசுவதனூடாகவும், அவர்களைச் சுற்றி நிகழ்கின்ற சம்பவங்களூடாகவும் அவர்கள் பற்றிய கரக்டர் நிலைகளை கதையாடுவது ஒரு நல்ல உத்தி. அவ்வாறு இல்லா விட்டால் கட்டுரை வடிவுக்குள் நாவல் சிக்குண்டு நாலின் தன்மையை அழித்து வாசகனுக்குள் ஒரு விதமான சலிப்பையும் அலுப்பையும் கொடுத்து விடும். தீரனின் இந்த கொல்வதெழுதல் அந்த அபாய வளைவுகளிலிருந்து தப்பிச் சென்று தன்னை பாதுகாத்துக் கொள்ளுகின்றது.
குறிப்பாக முத்து முகம்மதுவின் பாத்திரப்படைப்பு…ஒற்றை சொல்லில் அபாரம். இலட்சியங்களில்லாத வாழ்க்கை, மைமுனா மட்டும் தனக்குப் போதும் எனும் மனோநிலை, காதலின் கன்னத்துச் சிவப்பு நாணங்களும் மோனங்களும், துரத்தித் துரத்தி அடிக்கின்ற துரோகங்களும், அடி மட்ட இளைஞன் சூழ்நிலைகளாலும் அவனது தலைமைத்துவ விசுவாசத்தாலும் பாராளுமன்றம் வரை செல்லுகின்ற மெஜிக்கல் முரண்கள், பள்ளி முனை தொடக்கம் கொழும்பு வரையான முத்து முகம்மதுவின் அப்பாவித்தனங்களும், பழி வாங்க வேண்டுமென்று அறுபட்ட சேவலாய் துடிக்கின்ற அவனது கொதித்த ரத்த்தமும், நாலா பக்கமும் குண்டுகளை கென்யோ மாரக்கில் வைத்துக் கொண்டு குதறி எறியக்காத்திருக்கின்ற புலிகளுக்கும் ராணுவத்துக்குமிடையே முஸ்லிம்களுக்கான கட்சியை அனு அனுவாய் வளர்த்தெடுக்கின்ற நெருப்பு நிமிஷங்களுமென கொல்வதெழுதல் கொளுந்து விட்டெறிகின்றது.
பதவிகள் பற்றியே கனவுகள் காணாத ஒருத்தனை “நான் கொடுக்க நினைப்பதனை எவர் தடுத்து விட முடியும்” என்று சொல்லுகின்ற அல்லாஹுத்தஆலா தெரிவு செய்து பாராளுமன்றம் வரை போய் வா மகனே என்று அனுப்புகின்ற போது இந்த நாவலை நான் ஒரு ஃபென்டஸியாகவோ அல்லது மெஜிக்கல் ரியலிசமாகவோ பார்க்கவில்லை. மாற்றமாக இது ஒரு ரியலிசம். சத்தியத்தின் முன்னே எழுந்து நடமாடுகின்ற சாத்தியஙகள். தலைமைத்துவங்களை வழங்கவது அல்லாஹுத்தஆலா என்பதனை ஹை லைட் பண்ணுகின்றார் தீரன். உண்மைதானே.
தலைவர் அஷ்ரபின் தோளில் மிகப் பெரும் பாரமாக குந்திக் கொண்டிருந்த முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியில் தலைமைத்துவ விசுவாசம் என்பது ஒரு சாதாரண போராளியை அரியனை வரை கொண்டு செல்லுகின்ற அற்புதத்தை நிகழத்தியிருக்கின்றார். அரசயிலில் தலைமைத்துவ விசுவாசம் பற்றி பாடம் எடுக்கின்றார் நௌசாத்.
தலைவருக்காக உசிரையே கொடுக்கத் தீர்மானித்து விட்ட முத்து முகம்மதுவுக்கு தனது பதவியையே பரிசாககக் கொடுக்கின்ற தலைவரின் ஒவ்வொரு வார்த்தையும், அவரது உரையாடலும், அவரது தீர்மானங்களும் அமைச்சர் அஷ்ரபை மனசுக்குள் வழிய விட்டுக் கொண்டிருந்தது. அதிரடி முடிவுகளின் ராஜகுமாரனாயிற்றே அஷ்ரப்.
தனியே தலைமைத்துவ விசுவாசமும் அவருக்காக உசிரையே கொடுக்கின்ற அவர் மீதான அதியுச்சக்காதலும் மாத்திரமே பாராளுமனற்ம் வரை செல்லுவதற்கு ஒரு தனி நபருக்க தகுதியாக மாறி விடுமா என்ற கேள்வி எனக்குள் எழும்பிக் கொண்டேயிருக்கின்றது. எனினும் பதவிக்காக ஜால்ரா போட்டுக் கொண்டு அதனையே குறி வைத்துக் கொண்டு தலைமைத்துவ விசுவாசம் என்ற பெயரில் செவாலீயே சிவாஜியாக மாறி நடிப்பின் உச்சங்களைத் தொட்டுக் கொண்டு வளைய வருகின்ற முதுகு சொறிகின்ற மொக்குகளுக்கு மத்தியில் முத்து முகம்மது போன்றவர்கள் மக்கள் பிரதிநிதியாக பொறுத்தமானவர்கள்தான். .
ஆனாலும் இந்த நாவலில் தலைவரின் கால்களில் படீர் படீரென்று விழுவது, எடுத்த்தற்கெல்லாம் அவ்லியாக்களையும் முகைதீன் ஆண்டகையையும் அழைப்பது என்று மார்க்கத்துக்கு முரணானதும் முற்றிலும் ஷிர்க்கானதுமான விடயங்களை பல இடங்களில் தீரன் பரவ விட்டிருக்கின்றார். எனினும், முழுப்பள்ளி முனைக் கிராமமுமே ஹுப்புல் அவ்லியாக் கொள்கைகளை வரித்துக் கொண்டு முகைதீன் ஆண்டகைகளை என்ட ரப்பே என்று கையேந்தி பிரார்த்தனை புரிந்தார்களா என்ற சந்தேகம் வருகின்ற போது ஊரில் மார்க்கத்துக்கு முரணான மரபுகளை உடைத்தெறிந்து தௌஹீதை நிலை நாட்டுகின்ற ஒரு சிறு கூட்ட்மெனும் இல்லையா என்பதனை தீரன் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. அல்லாஹ் ஒருத்தனே அனைத்துக்கும் போதுமானவன் எனற கொள்கையோடு ஒரு முஸலிம் என்ற நிலையிலிருந்து இந்த நாவலை வாசிக்கின்ற போது மனசுக்குள் இந்த ஹுப்புல் அவ்லியா கொன்சப்ட் கொலை மிரட்டல் விடுக்கின்றது.
தனது உம்மாவை வெளி நாடு அனுப்புகின்றேன் என்று கொழும்புக்கு அழைத்துச் சென்று அவளை நாசமாக்கியதன் விளைவாக அந்த அப்பாவிப் பெண் தற்கொலை செய்கின்ற போது, அவளது கன்னி வெடியில் காலிழந்த கணவன் உதுமானையும், தனது தாயை இந்த நிலைக்கு ஆளாக்கிய சப்பு சுல்தானை பழி வாங்கும் ஒரே நோக்க்த்துக்காக இயக்கத்தில் போய்ச் சேருகின்ற அன்வர் எனும் அன்பையும் விவரிக்கின்ற போது போரின் ரௌத்ரத்தினை பயன்படுத்திக் கொண்டு பற்றி எரியும் வீட்டில் சிகரெட் பற்ற வைத்துக் கொண்ட கொடுங்கோலர்களையும், போரின் எச்சங்களான முஸ்லிம் சமூகத்தின் அவலத்தையும் தீரன் சொல்லும் போது மனசுக்குள் தீ.
தனது தாயை இந்த நிலைக்கு ஆளாக்கியவனை பழி வாங்கும் ஒரே நோக்கத்துக்காக இயக்த்தில் சேருகின்ற அன்வர் மாதிரி எத்தனை முஸ்லிம் இளைஞர்கள் புலிகளின் இயக்கத்தில் வெவ்வேறு காரணங்களுக்காக இணைந்து கொண்டு ஆயதம் தூக்கினார்களோ என்று யோசிக்க வைக்கின்றார்.
ஒரு காதல் கலந்த அரசியல் கதையை நகர்த்திச் செல்லும் போக்கில் உதிரிகளகவே புலிகள் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விட்ட படுகொலைகள், ஆட் கடத்தல்கள், சொத்து சூறையாடல்கள் போன்றவற்றை போகின்ற போக்கில் தீரன் பதிவு செய்கின்றார்.
அது போல ஆங்காங்கு டயர் எரிப்பகள், ஹர்த்தால்கள் மற்றும் கடையடைப்புகள் ஆகியவும் உதிரிகளாகவே தெரிகின்றன. யாருக்கோ யாருக்காகவோ நடந்த போரில் யாருக்கம் சம்பந்தமற்ற முஸ்லிம்கள் மீது ஏவி விடப்பட்ட போரின் பயங்கரத்தினை முற்றிலுமாக தீரன் இந்த நாவலில் பதிவு செய்யவில்லை என்பதனை நாவலை நுணுக்கமாக வாசித்துப்பார்த்த்தால் புரியும். எனினும் தொண்ணூறுகளில் கிழக்கில் எப்பேர்ப்பட்ட அபாயகரமானதும், அதி பயங்கரமானதுமான விஷச் சூழல் முஸ்லிம் சமூகத்தின் கழுத்தினை ஒரு அனகொன்டாவாக சுற்றிக் கொண்டிருந்த்த்து என்பதனை அச்சத்தோடு சொல்லுகின்றார். அச்சத்தோடு யாரும் வர மாட்டார்களா என்று அமேசன் காடுகளில் சுற்ற்த்திரிகின்ற அனுபவத்தினை தருகின்றார்.
எதுவுமே தெரியாத ஒரு அப்பாவி இளைஞன் தலை நகரின் தெருக்களில், தலை நகரின் அச்சமிகு சூழலில் மெல்ல மெல்ல உலகத்தை கற்றுத் தேருகையல் அனுபவத்தினூடாக அவன் அடக்கியாளுகின்ற அனுபவத்தினை கற்றுக் கொள்ளுகின்றான் என்பதனை முத்து முகம்மது ஊடாக புரிய வைக்கின்றார் நௌஷாத். அனுபவங்களும் போராட்டங்களும் எப்போதுமே பேப்பர் கொலிஃபிக்கேஷன்களை விட கனதியானது. அனுபவத்தினை விட வாழ்க்கையை ஆழமாக்க் கற்றுத் தருகின்ற வேறு இருக்கின்றதா இந்த பிரபஞ்சத்தில்.
ஒரு கட்சியில் ஏலவே நான் சொன்னது போல உண்மையானதும், நேர்மையானதுமான விசுவாசமும், தலைமைத்துவத்தின் மீதான காதலும் ஒரு போராளியை கொண்டு செல்லுகின்ற தூரத்தை அளவீட செய்கின்றது இந்த நாவல்.
முஸ்லிம் காங்கிரஸில் அரசியல் செய்ய ஆசைப்படுகின்ற ஒவ்வொருவருக்கும் இது ஒரு கைட் லைன். ஆனாலும் சிதைவுகளின் அரண்மனையாகிப் போன இன்றைய முஸ்லிம் காங்கிரஸ், ரத்தமும் வியர்வையும் ஊற்றி வர்த்தெடுத்த அந்த விருட்சம் இன்று பாம்புகளின் புற்றுகளுக்காகவும், பல்லிகளின் வாசஸ்தலங்களுக்காகவும், ஓணான்களின் வேலிகளுக்காகவும், பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. தலைவர் அஷ்ரப் வளர்த்த மரத்தின் வேர்களில் எப்போதோ மண்ணெண்ணெய் ஊற்றியாச்சு. இன்று அஷ்ரபும் இல்லை….முத்து முகம்மதுவுமில்லை. பொராளிகளுமில்லை.
என்னதான் பதவிகள் வந்து சேர்ந்தாலும் ஒரு பெண்ணின் மீதான அடங்காக்காதலும் தீராத அன்பும் மட்டுமே மனசுக்குள் எஞ்சிப் போயிருக்கும். தன்னால் அதீதமாக காதலிக்க்ப்படுகின்ற மைமுனாவின் நினைவுகளில் சதாவும் அலையின் துரும்பென அல்லாடும் முத்து முகம்மது தனது உசிரை நாசமாக்கிய சப்பு சுல்தானை கொன்று தீர்க்க வெறியோடு கிளம்புகையில் நேர்மையான காதல் கத்தியும் தூக்க வைக்கும் என்று கதை சொல்லுகின்றார் நௌஷாத்.
ஆயுதங்கள், படுகொலைகள், எரியும் டயர்கள், நெருப்புக்கு நடுவே நாட்டப்படும் முஸ்லிம்களுக்கான கட்சி மரம், தலை மரத்துப் போகச் செய்யும் ஹர்த்தால்கள், குண்டு வெடிப்புகள், அரசியல் படுகொலைகள், ஆட் கடத்தல்கள், தலைமைத்துவப் போட்டிகள், வன்மங்கள், சுயநலங்கள், துரோகங்கள், வறுமையின் சிவந்த நிறங்கள், கற்பு சூறையாடல்கள், எரியும் வீட்டில் லாபம் பிடுங்கும் பிணந்தின்னிகள்………இத்தனைக்க ும் நடுவே ஒற்றையாக பூத்து நிற்கின்ற வெள்ளை ரோஜாவென அழகான காதல் என்று கதையை கெரில்லாக்கள் நடமாடுகின்ற கொட்ஸில்லாக் களத்தில் ஆரம்பித்து சின்ட்ரெல்லாக் காதலை கூட்டி வந்து த்ரில் பண்ணும் தீரன் போகப் போக திகில் தருகின்றார்.
“கொல்வதெழுதல் 90” தொண்ணூறுகளின் கிழக்கு முஸ்லிம்களையும் அவர்களது துயரங்களையும் அரசியலையும் பதிவு செய்துள்ள சுவடிக் கூடம்.
கொடூரமாகக் கொல்லப்பட்டு வீட்டின் விட்டத்தை வெறித்தவாறு பார்த்துக்கிடக்கின்ற சப்பு சுல்தானும், அவனது வாயினுள் திணிக்க்பட்டிருக்கின்ற அவனது அறுக்கப்பட்ட ஆண் குறியும் கொஞ்ச நாளைக்கு இனி கனவில் வந்து என்னை கொல்வதெழுதல் செய்யப் போகின்றது.
கிண்ணியா சபருள்ளா
2016-05-14

ஆயுதங்கள், படுகொலைகள், எரியும் டயர்கள், நெருப்புக்கு நடுவே நாட்டப்படும் முஸ்லிம்களுக்கான கட்சி மரம், தலை மரத்துப் போகச் செய்யும் ஹர்த்தால்கள், குண்டு வெடிப்புகள், அரசியல் படுகொலைகள், ஆட் கடத்தல்கள், தலைமைத்துவப் போட்டிகள், வன்மங்கள், சுயநலங்கள், துரோகங்கள், வறுமையின் சிவந்த நிறங்கள், கற்பு சூறையாடல்கள், எரியும் வீட்டில் லாபம் பிடுங்கும் பிணந்தின்னிகள்………இத்தனைக்க